குந்து

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது, குந்தவெச்சு அப்படியே கால்கள், பாதம் இவைகளை நாற்காலி போல் பாவிப்பது இதெல்லாம் ஆசியர்களால் மட்டுமே முடிகிறது. லியோ என்றொரு வியட்நாமியப் பெண். வேதியியல் பயிற்சிக்காக வந்திருக்கிறாள். நோஞ்சையான உடம்பு. ஒடிக்கும் குச்சி போல். பஸ்ஸிற்கு காத்திருக்கும் வேளையில் நான் நின்று கொண்டிருக்க, 'பச்சென்று' ரோட்டோ ரத்தில் குந்திவிடுவாள். பலவிதமாக அவள் உட்காரும் பாவனைகளில் இதுவுமொன்று. இது சாத்தியப்பட கழைக்கூத்தாடிக் குழந்தைகளுக்கு தரப்பட்டிருக்கும் பயிற்சி வேண்டும்!! கொரியர்களும், ஜப்பானியர் போல் தரையில் அமர்ந்துதான் உண்கின்றனர். Low lyeing tables-ல்தான் சாப்படு பரிமாறப்படுகிறது. ஆசிய-பசிபிக் பயிற்சிப்பட்டறை ஒன்றில் கலந்து கொள்ள வந்த அமெரிக்கருக்கு தரையில் உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை. எப்படித் தனது காலை ஒரு அளவிற்கு மேல் மடக்கமுடிவதில்லை என்று காண்பித்தார். காலைத் தொங்கப்போட்டு உட்கார்ந்து பழகிவிட்டால் பின் மடக்குவது கடினம்! மேலைத்தேசத்து குளிருக்கு தரையில் உட்கார வேண்டிய அவசியமே இல்லை. நமக்கு குளிர்ந்த தரையில் அமர்வது சுகம். நேற்று மீண்டும்...வரும் வழியில் அந்த மரத்தடியைப் பார்த்தேன். அழகாக அமைத்திருக்கிறார்கள். தொங்கும் காலில் நெல் கிச்சுக் கிச்சு மூட்டும் வண்ணம் மேடை. நெல்லின் பசுமை கண்ணிற்குக் குளிர்ச்சி. அடடா! என்ன சுகம்.

0 பின்னூட்டங்கள்: