உங்கள் குரல் கேட்க ஆசை!

முதலில் எனக்காகத்தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் போகப்போக உங்களுக்காக எழுத ஆரம்பித்துவிட்டேன். காரணம் தினம் குறைந்தது 25 பேராவது வந்து என் வலைபூவில் தேன் குடித்துவிட்டுப் போகிறீர்கள். என் மடல் ஆரம்பித்து னொரு மாதம்தான் ஆகிறது. சென்ற வாரம் ஷொட்டு ரேட் (அதாவது ஹிட் ரேட்..ஹி..ஹி) 335. இதிலே 50 தட்டு நான் வேலை செய்வதற்கென்று ஒதுக்கினாலும் 285 பேர் என் வலையகம் வந்திருக்கின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். தினம் எழுத முயன்றாலும் சில நாள் முடிவதில்லை. ஆகஸ்டு 19 தேதி 114 ஹிட் என்று கணிப்பன் காட்டியவுடன் வந்த தூக்கத்தை விரட்டிவிட்டு எழுதினேன். இது ஒருவகையில் ஒரு சமூகக் கடமையாக மாறுவதை உணர்கிறேன். மகிழ்வாகத்தான் இருக்கிறது.

தினம் வரும் சிலர் சுவடு விட்டுச் செல்கின்றனர். சிலர் வந்த சுவடில்லாமல் போய் விடுகின்றனர். நீங்கள் எப்படி இருப்பீர்கள்? உங்கள் முகமென்ன? உங்கள் குரல் எப்படியிருக்கும்? ஏதோ தோணுகிறது, உங்களது, எனது குரலை இதில் பதித்து வைத்தால் என்ன? சின்னதாக 40 லிருந்து 60 நிமிடப் பேச்சு. எதைப்பற்றியுமிருக்கலாம். உங்களுக்குப் பிடித்த கவிதையை வாசித்து அனுப்பலாம். இல்லை காதல் கடிதம் வாசிக்கலாம் (அது எனக்காக இருக்க வேண்டுமென்ற அல்ப ஆசை இல்லை :-)!! செய்து பார்ப்போமா? எனக்கு எழுதுங்களேன். முகவரி மேலே இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: