Organic Book called 'Our Legacy'

ஒவ்வொருமுறை நான் லண்டன் போகும்போது, பத்மநாப ஐயர் ஆங்கிலச் சூழலில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் பண்பாடு பற்றிப் பேசச் சொல்லுவார். சின்னச் சின்ன கலந்துரையாடல்கள். பெரும்பாலும் ஆங்கிலத்தில். குழந்தைகள் என்றால் 8 வயதிலிருந்து 18 வயதுவரை! ஆர்வமாகக் கேட்பார்கள். ஒருமுறை தோன்றியது ஏன் இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் இதைச் செய்யக் கூடாது என்று. தமிழ் தகவல் மன்றம் அப்பொறுப்பை ஏற்று ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தது. இந்த பிப்ரவரியில் நடந்தது! 7 வயதிலிருந்து, பெரிய குழந்தைகள் வரை. இக்கூட்டத்தை ஆங்கிலத்தில் குழந்தைகளே நடத்தினர். ஏறக்குறைய 120 பேராவது வந்திருப்போம் (பெற்றொரையும் சேர்த்து). இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சியைத் தொகுத்தன. அதில் சிறப்பு விருந்தினராக நான். தமிழ் பண்பாட்டின் தொடக்கம் முதல் அதன் மிகச்சிறந்த தன்மைகள் என்று நான் கருதுவதைச் சொன்னேன். நான் பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சொல்லித்தருபவன். குழந்தைகள் எப்படி இதை எதிர்கொள்வர் என்று சந்தேகம். கேள்வி நேரம் வரும்போது மிக்க ஆர்வமுடன் குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்கள் மொழி பற்றி, இனம் பற்றி, பண்பாடு பற்றி அறிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் காட்டினர். கூட்டம் முடிந்ததும் பல பெற்றோர் என்னிடன் தனியாக வந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். வீட்டில் தாங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் ஏறாத பல விஷயங்கள் எனது உரையின் மூலம் அவர்களைச் சென்றடந்ததாகச் சொன்னார்கள். ஆக, இது சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது. இல்லையெனில் பாரதக் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் மில்லியன் குழந்தைகளை சந்திக்கும் திட்டத்தை தானாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.


K is addressing

இதனுடைய இன்னொரு செயல் வடிவம்தான் "உயிர்ப்பூ". நீங்கள் தரப்போகும் பங்களிப்பு நீங்கள் நினைப்பதையும் விட மதிப்பு வாய்ந்தது. முதலி அவர்களுக்கு இப்பண்பாட்டின் ஆழத்தைக் காட்ட வேண்டும். ஆர்வம் வரும் போது அவர்களே முன்வந்து தமிழ் கற்று, இப்பண்பாட்டை வளர்ப்பர். ஜெர்மனியில் தமிழ் மேலோட்டமாகத் தெரிந்த தமிழ் யுவதி/இளைஞர்களுடன் சந்தித்துப் பேசுவேன். அவர்களுக்குள் தனது அடையாளம் பற்றிய கேள்விகள் அதிகமுண்டு. அதற்கு விடை சொல்ல இந்த 'உயிர்ப்பூ' மலரலாம்!


Listeners

ஆங்கிலத்தின் வழியாகத் தமிழை அறிவது என்பதொன்றும் தமிழனுக்குப் புதிதல்ல. ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கையில் வந்தால்தான் தமிழுக்கு அங்கே மதிப்பு! மலேசியாவில், சிங்கப்பூரில் படித்து வளரும் இளைஞர்கள் அரைவாசி ஆங்கிலேயர்களாவே உள்ளனர். எனவே நாம் நினைத்துப் பார்ப்பதை விட தமிழ் பற்றிய அறிவு ஆங்கிலம் மூலம் செல்லும் வாய்ப்பு அதிகம். அதற்கொரு தளமாக 'உயிர்ப்பூ' மலரலாம்.


Discussing Child-to-child Project

உங்கள் பங்களிப்பு என்ன என்று உங்களுக்குத்தான் தெரியும். தமிழ்ப் பண்பாடு இல்லாத சூழலில் இம்மரபு பற்றிய எந்தச் சேதியும் மதிப்புள்ளதே! தமிழினம் சாராத பிறநாட்டு மாணவர்களுக்கு இச்சேதிகள் நிறையப் பயன்படும். அதற்கும் 'உயிர்ப்பூ' தளம் அமைக்கும்.


A quiz at the end on Tamil cultureBe a part of an Organic Book called 'Our Legacy'


0 பின்னூட்டங்கள்: