அன்றொரு நாள் தோங்க்யோங் புத்தர் கோயிலுக்குப் போயிருந்தேன். அந்தக் கோயில் எனக்கொரு இன்ப அதிர்ச்சி தந்தது. அங்கு கிறிஸ்து பிறப்பதற்கு முன் உருவாக்கிய அசோக ஸ்தூபியின் இன்னொரு ஆக்கம் இருந்தது. கம்பீரமாக நான்கு சிங்கங்கள் மேலே! தூணின் அடிதில் அசோக சக்கரம்! ஏதோவொரு இந்தியன் உருவாக்கிய கலைப்பொருள் பல்லாயிரம் மைல்கள் கடந்து கொரியன் கோயிலில் வந்திருக்கிறது. அதாவது அதை மாடலாக வைத்து கொரியன் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் நிச்சயமாக ஒன்று, இந்தியக் கலைஞர்கள் இங்கு வந்திருக்க வேண்டும், இல்லையெனில் கொரியக் கலைஞர்கள் அங்கு போயிருக்க வேண்டும். இப்போது மாதிரி கணினி மாடலிங் வசதி அப்போது கிடையாதே!

காஞ்சிபுரம் போயிருந்தபோது தோங்க்யோங் கோயில் வாசலில் இருந்த சிங்க வடிவம் அங்கிருந்தது. அது இந்தியச் சிங்க வடிவமல்ல. ரொம்ப ஸ்டைலான (highly stylized) சீனச் சிங்க வடிவம். அப்போதெல்லாம் கொரியா சீனாவின் முக்கிய கடல்வழி முகப்பாக இருந்திருக்கிறது.கொரியர்கள் தாயை 'அம்மா' என்பதும். தந்தையை 'அப்பா' என்பதும். இங்கே வா! என்பதை 'இடு வா!' என்றும் சொல்வதிலும் வெறும் coincidence என்பதற்கும் மேல் ஏதோவொன்று இருப்பது போல் தெரிகிறது!!

0 பின்னூட்டங்கள்: