நாள், திதியறியா முனி கணங்கள்!

திருப்பூவணம் கிராமத்தில் வாழ்ந்த காலத்தில் பொங்கல், தீபாவளி என்றால் தெரியும், பெரிய எதிர்பார்ப்பு கூட இருக்கும். மதுரைப் பல்கலைக் கழகத்தின் உயிர்ம வேதியியல் ஆய்வகம் சென்ற பிறகு நாள், திதி என்பது மறந்து விட்டது. யாராவது சொன்னால் உண்டு. வெளிநாடு வந்த பிறகு அது சுத்தமாக இல்லாமலே போய்விட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நாட்டின் வளர்ச்சியில் பேரார்வம் கொண்ட நேரு சொன்னார், "புதிய இந்தியாவின் கோயில்கள் இனி ஆய்வகங்கள்தான்' என்று. நான் சொல்கிறேன் இந்தப் புதிய இந்தியாவில் ஆய்வக விஞ்ஞானிகளெல்லாம் நவீன முனி கணங்கள் என்று :-) இது ஒரு தவ வாழ்க்கை. நேற்று வானத்தைப் பார்த்த போதுதான் தெரிந்தது பௌர்ணமி வருகிறது என்று. ஓணம், தீபாவளி இவையெல்லாம் இனி யாராவது சொன்னால் உண்டு. வாழ்த்தும் மனது என்றும் உண்டு.

இத்தவ வாழ்வை மேலும் மெருகூட்டும் வண்ணம் அமைந்துள்ளது இக்கொரிய ஆய்வகம்!ஆய்வகத்தின் பின்புறம்
மாகடல் ஆய்வகத்தின் முகப்புவிருந்தினர் மாளிகை (என் வசந்த மாளிகை!)

ஆசிய, பசிபிக் ஆய்வுப் பட்டறைக் குழு

0 பின்னூட்டங்கள்: