அக்டோ பர் 2 காந்தி பிறந்த தினம். அது ஒரு விடுமுறை தினம். கொரியாவிலும் இன்று விடுமுறை. பண்டைக் காலத்து வழக்கப்படி இது கொரிய தேசிய தினமாம். அக்டோ பர் 2 கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் கூடிய தினம். ஜெர்மனியிலும் விடுமுறை. இது பற்றி சுவடியர் சுபா இன்று எழுதியுள்ளார்.. இரண்டு உலகப் போர்களுக்குக் காரணமாக ஜெர்மனி இருந்திருக்கிறது. ஹிட்லர் எல்லா அக்கிரமும் செய்து விட்டாலும் இன்று இரண்டு ஜெர்மனியும் கூடிவிட்டன. ஆனால் வட கொரியாவும் தென் கொரியாவும் உலக அளவில் பெரும் பாதகச் செயல் ஏதும் செய்யாவிடினும் இன்று பிரிந்துள்ளன. இது எனக்கு வருத்தளமளிக்கிறது. இரண்டும் சேர வேண்டும் என்பதே என் ஆசை. பல கொரியர்களுக்கு அதுவே ஆசையாக இருந்தாலும் வெளியே சொல்வதில்லை. அமெரிக்கா அரசியல் காரணங்களுக்காக இந்நாட்டைக் குத்து மதிப்பாகப் பிரித்து வைத்திருக்கிறது. அமெரிக்கா நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற நிலைதான் உலகில் இன்று. இது கட்டாயம் மாற வேண்டும்.

அமைதியாக வாழும் தென்கொரிய நகரமான தெங்யோங் பற்றிய புதிய படங்களை எனது Album Town தொகுப்பில் சேர்த்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.

0 பின்னூட்டங்கள்: