வைகையின் ஸ்பரிசம் இன்னும் உடலில்....(2)

பாகவதத்தில் ஒரு காட்சி!

மகாபாரதம் எழுதிய வியாசரை விஷ்ணுவின் அவதாரம் என்றே சொல்லும் ஒரு வழக்கு உண்டு. அவருக்கு ஒரு மைந்தன் உண்டு. (பெயர் மறந்து விட்டது). அவரும் ஒரு ஞானி.

இருவரும் பிருந்தாவனத்திற்கு வரும் காட்சி.

முதலில் வியாசர். கோபியர்கள் குளத்தில் ஆடையின்றி குளித்துக் கொண்டிருக்கின்றனர். வியாசர் குளத்தைக் கடக்கும் போது கோபியர் வெட்கத்துடன் மார்பை மறைத்துக் கொள்கின்றனர்.

கொஞ்ச நேரத்தில் அவரது மைந்தன் அதே வழியில் கடந்து செல்கிறான். பெண்கள் எந்தக் கூச்சமுமின்றி நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருக்கின்றனர்.


இது என்ன அதிசயம்? வியாசர் முதுமை அடைந்தவர். அவரைக் கண்டு பெண்கள் வெட்கமடையக் கூடாது! ஆனால் அவரது மைந்தரோ இளமையானவர். அவரைக் கண்டல்லவோ இவர்கள் வெட்கமடைய வேண்டும்? எதிர் மறையாக கோபியர் நடந்து கொள்கின்றனரே?

வியாக்கியானம்: வியாசருக்கு வயசாகி விட்டாலும் 'தான்' ஒரு ஆண் என்ற நினைப்பு இருக்கிறதாம். அதை கோபியர் உள்ளுணர்வால் புரிந்து கொள்கின்றனர். எனவே கூச்சமடைகின்றனர். ஆனால், அவரது மைந்தரோ ஒரு ஜீவன் முக்தராக இருக்கிறார். 'தான்' என்ற உணர்வே இல்லாமல் நடமாடுகிறார். கோபியர்களுக்கு இது புரிகிறது. எனவே காற்று போல் போகும் அவரைக் கண்டு நாண வேண்டிய அவசியமில்லாமல் போகிறது!

நேற்றையக் கனவில் இந்தப் படிமம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

2 பின்னூட்டங்கள்:

Anonymous 5/05/2008 07:23:00 PM

Vyasa's Son Name is Shri Sukha

நா.கண்ணன் 5/05/2008 08:19:00 PM

ஆகா! இத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒரு பின்னூட்டமா? வியாசரின் பிள்ளை சுகமுனி என்பது எப்படி அன்று மறந்தது என்று இன்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. கிளி கடித்த கனி இனிப்பு என்பது பிரபலம். அதுபோல் சுகமுனி என்ற கிளி கடித்த பாகவதம் சுவை என்றொரு அழகான பாடலொன்று. பாருங்கள்! அப்பாடலின் முதல் வரி மறந்துவிட்டது ! :-)