சங்கமம்

கவிதை உள்ளிருந்து வர வேண்டும். மனதின் ஆழத்திலிருந்து. தரிசனம் ஆனபிறகு வார்த்தை விழ வேண்டும். அப்போது கவிதை மானுடத்திற்குப் பொதுவாகப் பேசும். இன்று பெயர் கூட அறியமுடியாத சங்கப்புலவன் தமிழ் மண்ணின் எந்த மூலையிலிருந்தோ எழுதிய ஒரு கவிதை பலகாலம் லண்டன் குகையிரதத்தில் பல்வேறு இனங்கள், பல்மொழிக்காரர்கள் பயணிக்கும் பயணத்தில் நின்றது என்றால் அது கவிதையின் தரிசனத்தைக் காட்டுகிறது. அக்கவிதை இதோ:

யாயும் யாயும் யாராகியரோ
வெந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெய்ந்நீர் போல
வன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே


அக்கவிதையின் லண்டன் வடிவம் இதோ!தமிழ்க் கவிதை இதுபோல் உலகெலாம் தவழ்ந்து வரவேண்டும்!

நன்றி: ஏ.கே.ஸ்ரீநிவாசன், சென்னை (இக்கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்த பேரா.ஏ.கே.ராமானுஜத்தின் சகோதரர்)

0 பின்னூட்டங்கள்: