காலம்: வசந்த ருது.
நேரம்: வசந்த பௌணர்மி இரவு


கோடையின் கானல் போன காலம். பனியின் குளுமை இன்னும் எட்டாத காலம். தெள்ளிய வானம். தெளிந்த காற்று. துணை இருந்தால் தேவலை என்று எல்லா ஜீவன்களையும் கிறங்க வைக்கும் இரவு. காட்டுக்குள் விலங்குகள் கூடிப்புணர்ந்து கொண்டிருக்கலாம். கரை புரண்டு நிற்கிறது கடல். காரணம் தூர வானத்தின் மேல் வரும் நிலவு என்று யாருக்குத் தெரியும்? மண்ணைத்தூக்கி மண்ணில் வைத்து, வின்னைத்தூக்கி வின்னில் வைத்து ஒன்றை ஒன்று இணைத்துப் பிணைத்து, உறவாடவிட்டவன் யார்? ஒன்றுக்கு ஒன்று காரணமாகி, அந்த ஒன்றைக் காரியமாய் ஒளித்து வைத்தவன் யார்?ராச பௌர்ணமி. கோகுலத்தில் கோலாட்டம். இங்கு கேட்கிறது! கோபியரைச் சுற்ற வைக்கும் குழலோசை கேட்கிறது! வசந்த ருது வாழ்க. ராச பௌர்ணமி வாழ்க.

வைகைக்கரை காற்று இங்கு வீசும் காலம் வந்து விட்டது!

0 பின்னூட்டங்கள்: