சங்கீத நினைவுகள் 02

நான் கீல் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். சுதா ரகுநாதன் அடுத்த நாள் எங்களூரில் கச்சேரி செய்ய ஒத்துக் கொண்டிருந்தார்கள். இளமைத் துள்ளலுடன் சல்வார் கமீசில் வந்து இறங்கினார்கள் சுதா. இனிமையான புன்னகை. அவர்களை வழக்கமான புடவை சகீதம் படங்களில் மட்டும் பார்த்திருந்த எனக்கு இது மாறுதலான சின்ன அதிர்ச்சியாக இருந்தது. கல, கலவென்று பேசினார்கள். "சரி, வாருங்கள் வீட்டுக்குப்போய் சாப்பிட்டு விட்டுப் பேசலாம்" என அழைத்துச் சென்றேன்.

காலையில் எழுந்து பார்த்த போது சுதா எனது நூலகத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். "திருவாய்மொழியென்றால் பிடிக்குமோ?" என்றார். "ஆமாம்! என்பதற்கும் மேல் பிடிக்கும்" என்றேன். சிரித்துக் கொண்டார்.மாலையில் கச்சேரி ஆரம்பமானது. வசந்தா ராகத்தில் பார்த்தசாரதி பெருமாள் மேல் ஒரு பாடலுடன் ஆரம்பித்தார். இரண்டு காரணங்களுக்காக கண் தளும்பி நின்றேன். பெரும்பாலும் கச்சேரிகள் ஹிந்தோளத்தில் கணபதி ஸ்துதியுடன் ஆரம்பிக்கும். ஆனால் திருவாய்மொழியைக் கண்ட பின் அவர்களால் கண்ணனை நிராகரிக்க முடியவில்லை. இரண்டாவது, எனக்கு மிகவும் பிடித்த ராகம் வசந்தா! நான் மெய்மறப்பதற்கு இந்த இரண்டு காரணங்கள் போதும்.

ஆனால் சுதா ஒரு தேர்ந்த இசைக்கலைஞர்! கல்கி எழுதி, மீரா படத்தில் எம்.எஸ் பாடி மிகப்பிரபலமான "காற்றினிலே வரும் கீதம்" கடைசியாகப் பாடியபோது கண்ணன் குழலோசைக்கு கன்றுகள் கட்டுப்பட்டுக் கிடந்தது போல் அந்த அரங்கே ஸ்தம்பித்து இருந்தது. இவ்வளவிற்கும் அங்கிருந்தே ஒரே தமிழ் தெரிந்த ஆசாமி நான்தான். இரண்டு பெங்காலிகள். மிச்சமெல்லாம் ஜெர்மானியர்! அன்றுதான் தமிழ் இசையின் மேன்மை கண்டேன். 'நினைவழிக்கும் கீதம்' என்று ஆழ்வார்களை வழி மொழிந்து கல்கி எழுதியது எவ்வளவு உண்மை. அன்றோடு நினைவழிந்து போயிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் (என்ன செய்ய? இல்லையென்பதால்தானே இப்படி சங்கீத நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்:-).

கச்சேரியெல்லாம் முடிந்து எல்லோரும் போன பிறகு நானும் சுதாவும் தனியாக ஒரு அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்திருந்திருப்போம். ஹாலை காலி செய்து எனது ஜெர்மன் நண்பன் வந்த பிறகு நாங்கள் இரவு உணவருந்தப் போவதாக ஏற்பாடு. கீல் இசை நிகழ்ச்சிகளுக்குப் பேர் போன ஊர். அங்குள்ள பெரிய மியூசிக் ஹாலில் கச்சேரி நடந்தது. ஹால் வாசலில், வாசல் படியில் உட்கார்ந்து கொண்டு (அவர் மேலே, நான் கீழே) பேசிக்கொண்டிருந்தோம். சுதா எனக்கு அவர்களது சங்கீத ஆரம்பங்களைச் சொன்னார். எம்.எல்.வியுடன் கழித்த நாட்களை நினைவு கூர்ந்தார். அவர் வெளியிட்டுள்ள பல சிடி ஆல்பம் பற்றிச் சொன்னார். ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். மிகத்தேர்ந்த கலைஞராக இருந்தாலும் மிகவும் எளிமையாகப் பழகிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்தமுறை சென்னை வரும் போது குடும்பத்துடன் வந்து காணுமாறு அழைப்பு விடுத்தார். அந்த நாள் இன்னும் வரவில்லை.

சங்கீத நினைவுகள்!

என் அக்கா பெண்ணிற்கு காதுகுத்தல் என்றும், அதற்கு உப்பிலியப்பன் கோயில் போகவேண்டுமென்றும் அழைப்பு வந்திருந்தது (அந்தப்பெண்ணிற்கு அடுத்த மாதம் கல்யாணம் என்னும் போது கால ஓட்டத்தை நினைத்து பிரம்மிக்க வேண்டியுள்ளது!)

நான் பாண்டிநாட்டுக்காரன். சோழ மண்டலம் அதிகமாய் போனதில்லை. உப்பிலியப்பன் கோயில் அரிசிலாற்றுக்கரையில் இருந்தது. "ஒப்பில்லா அப்பன்' அவன். உப்புச்சப்பில்லாத ரசனையுடன் அவனை உப்பில்லா அப்பனாக்கி அவன் சோற்றில் உப்பையும் எடுத்துவிட்டார்கள் படுபாவிகள். அது போகட்டும்.

அன்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி கச்சேரி. ஊரெல்லாம் ஒரே கூட்டம். அத்தானுடன் ஒரு ஓரமாக நின்று கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தோம். இது காதுகுத்தல் முடிந்த மாலை நேரம். லேசாகத் தூறல். அன்றிரவு 10 மணியளவில் போட் மெயிலில் சென்னை பயணிக்க வேண்டும். கச்சேரி கொஞ்ச நேரம் கேட்டுவிட்டு (உட்கார இடமில்லை, வெளியே தூறல்) வேறு காரியத்தில் இறங்கி விட்டோ ம். இரயில் நிலையத்தில் எங்களுக்கு ஒரு அறை ஏற்பாடாகியிருந்தது, தங்கி ஓய்வெடுக்க. இரவு திரும்பி வந்தால் சதாசிவ அய்யர் நின்று கொண்டிருக்கிறார். அத்தானுக்கு ஆச்சர்யம்! அப்படியென்றால் எம்.எஸ் இங்கு இருக்கிறார்கள்!!

ஆனால் பாவம் அவருக்கு வேறொரு சங்கடம். அரியக்குடியின் ஒன்று விட்ட பேரன் அவர். இளமையில் தாத்தாவுடன் இருந்த பசுமையான நினைவுகள் இன்றுமுண்டு. ஆனால் தத்தா தன் சொத்து முழுவதையும் வீணை தனத்திடம் இழந்து விட்டார். அவரோடு அவர் புகழும், பரிசுகளும் எங்கெங்கோ போய் சேர்ந்தன. அப்படியிருக்க சங்கீதக்காரர்களைப் பார்க்கும் போது அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பற்றிய பேச்சு வரும். என்ன செய்வது? என்ற சங்கடம்.

என்ன செய்வது? வந்தாச்சு. சதாசிவம் கேள்விக்குறியுடன் எங்களைப் பார்த்தார். 'அம்மாவை' த் தொந்தரவு செய்ய இந்த நேரத்த்஢லும் ஆட்களா? என்னும் கேள்வியுடன். நாங்கள் அந்த வகையில்லை, இங்கு எங்களுக்கும் தங்குமிடம் இருக்கிறது என்றவுடன் அவர் கொஞ்சம் சமாதானமானார். அப்புறம் பேச்சு, அங்கு இங்கு என்று சுற்றி அரியக்குடிக்கு வந்தது. அத்தானைப் பார்த்து, "நான் அரியக்குடிக்குப் போட்ட வைரச் செயின் வீட்டில் இருக்கிறதோ?" என்று அகஸ்த்துமாஸ்தாகக் கேட்டுவிட்டார். அத்தான் முகத்தில் ஈயாடவில்லை!

எப்படியோ சமாளித்து ரூமிற்கு வந்து ஒரே கச, கசா பேச்சு. பக்கத்து அறையில் எம்.எஸ். அவர் பெண் ராதா. ஒரே ஆசை. ஆனால் வெட்கம். குழந்தைகள் ஒரே கும்மாளம்.

கொஞ்ச நேரத்தில் ராதா அவர்கள் வந்து கதவைத் தட்டினார்கள். "அம்மா, உங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்! வருகிறீர்களா?" என்று அழைப்பு!

எங்கள் காதுகளை எங்களால் நம்பமுடியவில்லை. இந்தியாவின் இசைராணி என்று பண்டித ஜவகர்லால் நேருவால் பாராட்டப்பெற்ற ஒப்பற்ற கலைஞர் எங்களைக் காண வேண்டுமென்று அழைப்பு விடுகிறார் என்றால் சும்மாவா!

அடுத்த நொடியில் வீட்டுக் கூட்டம் எம்.எஸ்ஸைச் சுற்றி. எம்.எஸ் எப்பவும் போல் லக்ஷணமாக, மூக்கும், முழியுமாக இருந்தார்கள். அக்காவிற்கு இசை வரும், கச்சேரி செய்திருக்கிறாள். எனவே எம்.எஸ்ஸிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள். குழந்தைகள் நமஸ்கரித்தன. குழந்தைகளை மடியில் வைத்துக் கொஞ்சினார். "குழந்தைகள் பக்கத்து அறையில் கும்மாளமடிக்கையில் தனியாக நாங்கள் மட்டும் இங்கு உட்கார்ந்து இருப்பானேன்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வண்டி வரும் வரை பேசிக் கொண்டிருந்தோம்.

எம்.எஸ். இசை ராணியாக இருந்தாலும் எங்கள் மதுரைவாசிகள் போல் உள்ளத்தில் மிக எளிமையான நபராக இருந்தது இன்றும் மகிழ்வளிக்கிறது.

அம்மா மடியில் மொட்டைத்தலையுடன் தவழ்ந்த குழந்தை ஜனவரியில் கல்யாணம் செய்து கொள்கிறது. இந்த நினைவே அவளுக்கொரு கல்யாணப்பரிசு என்பதை கல்யாண அமர்க்களத்தில் நினைப்பாளோ எங்கள் அனு?

வைகைக்கரை காற்றே!......026

மார்கழி பிறந்து விட்டது என்பதை நந்துவிற்கு அறிவிப்பது கோயில் லவுட் ஸ்பீக்கர்தான். அதற்காக நந்துவிற்கு தமிழ் மாதக்கணக்குத் தெரியாது என்றில்லை. அவனுக்கு 12 மாதமும் மனப்பாடம்! தலைகீழாகச் சொல்லத் தெரியும். ஆனாலும் மார்கழி பிறக்கும் சிற்றஞ்சிறுகாலையை அறிவிப்பது சிவன் கோயில் லவுட் ஸ்பீக்கர்தான். "மார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள்" என்று எம்.எல்.வி மதியிருந்தாலும், மதியில்லாவிட்டாலும் ஆண்டாளுக்குப் பாதகமில்லாமல் கோயில் கோபுரத்தின் உச்சியில் குளிர், பனி பாராமல் பாடுவார்கள். அடுத்து திருவெம்பாவை முதல் பாடல் வரும். அது சிவன் கோயிலாக இருந்தாலும், மாணிக்கவாசகப் பெருமானுக்கு பின் (இளைய என்ற பொருளில்) பிறந்த பெண் பிள்ளையாக இருந்தாலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறுமியின் நோன்பு முன் நிற்கும் அவ்வூரில் எப்போதும். அது பெண்ணின் மாண்பை உரக்கப் பறைசாற்றுவது போலிருக்கும். ஆண்டாளுக்கு ஒன்று, அவ்வூருக்கு 10 மைலுக்கு அப்பால் பிறந்த மாணிக்க வாசகருக்கு ஒன்று என்று பாடிய பின்பும் சிற்றஞ்சிறுகாலை மலர்ந்தும் மலராமல் இருக்கும்.

இந்த இடைப்பட்ட நேரத்தை நிருவகிக்க நாராயணயங்கார் வீட்டிற்கு அழைப்பு வரும். அவரின் சீமந்த புத்ரிகளில் இருவருக்கு ஆண்டாள், மாணிக்கவாசகர் என்றில்லை பாரதி பாடத்தெரியும், அருணகிரி பாடத்தெரியும், வள்ளலார் பாடத்தெரியும். கோகிலத்தின் குரலினிமை அப்படி ஒட்டிக் கொண்டு விட்டது என்று வீட்டிற்குள் மட்டும் பாடும் சித்தி அடிக்கடி சொல்லுவாள். இந்தப் பெண்கள் எங்கும் சென்றும் சங்கீதம் படிக்கவில்லை. "குலத்தொழில் கல்லாமற்பாகம்படும்" என்ற வழக்கின்படி அவர்களுக்கு இயல்பாகவே பாட வந்தது. அவர்கள் மூதாதையர் பாடிய கீர்த்தனங்கள் சொல்லித்தராமல் உரிமையுடன் ஒட்டிக்கொண்டன. ஒருமுறை கேட்டால் போதும் அடுத்தமுறை பாடியவர் ஆச்சர்யப்பட வேண்டும்! அப்படியிருக்கும் பாடல்கள். எனவே செல்லம்மாவும், சௌந்திரமும் மார்கழி வந்து விட்டால் தினமும் காலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்திருந்து குளித்து, சீருடுத்தி கோயிலுக்குப் போய்விடுவர். நாராயணங்காரின் புகழ் பெற்ற குழந்தைகள் மூலம் இன்னும் அதிகமாகப் பரவியது.

அதற்காக மற்ற அக்கிரஹாரத்துக் குழந்தைகளுக்குப் பாட வராது என்றில்லை. கோபால மாமாத்து முத்து பாடுவா. ரொம்ப நேரம் பாட முடியாது ஆனால் பாடுவாள். பட்டராத்துக் குழந்தைகள் சில சமயம் பாடும். அது என்னமோ அந்த ஊர் பட்டர்களுக்குப் பிறந்தது பெரும்பாலும் பையன்களாகவே இருந்தது. அந்த அக்கிரஹாரத்தில் இரண்டு பேர்களுக்கு மட்டும் ஒன்று விட்டு ஒன்று பெண் பிள்ளைதான். இதில் நாராயணங்கார் சீனியர். கிருஷ்ணய்யர் ஜூனியர். அய்யங்காருக்கு அருமையாய் ஒரு பிள்ளை பொறந்த போது அது நந்தகுமாரானது. கிருஷ்ணய்யர் பிள்ளைக்கு கோகுலக்கண்ணன் என்று பெயர். பலராமய்யர் பெண் சகுந்தலா கூடப்பாடுவாள்தான். ஆனால் அவள் அம்மா படுத்தற படுத்தலில் குழந்தைக்கு வருகின்ற பாட்டும் அழுகையில் போய் விடும்.

மார்கழிக் காலையில் பஜனை கோஷ்டி பெருமாள் கோயிலில் ஆரம்பித்து - அதாவது கோயில் மதிற்சுவரிலிருந்து ஆரம்பித்து...பெருமாளை எழுப்பத்தான் கிச்சய்யர் (அதாவது சித்தியா) பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறாரே! - ஆத்தங்கரைப் பிள்ளையார் சந்நிதியில் முடியும். அக்கிரஹாரத்து ஆண் வர்க்கத்து பாடகர்களின் திறமையெல்லாம் யாரும் விழித்திராத மார்கழி பனிக்காலையில் வெளிப்படும். ஆத்துக்காரிகள் பார்க்க மாட்டார்கள் என்ற தைர்யத்தில் மாமாக்கள் தைர்யமாகவே பாடுவார்கள். பிராமண கோஷ்டி பாடி முன்னால் போன கொஞ்ச நேரத்தில் பழையூரிலிருந்து ஆர்மோனியப்பொட்டி சகிதம் பிற சமூகத்தவர் கொண்ட ஒரு கோஷ்டி பாடிக்கொண்டு வரும்.

இத்தனை அமர்களம் வெளியே நடக்கும் போது நந்து போர்வைக்குள் சுருண்டு கனாக்கண்டு கொண்டிருப்பான். தினமும் சித்தி பெண் பட்டம்மாள் எழுப்பிப்பார்ப்பாள். "டேய் நந்து! எந்திரிடா! கோயிலுக்குப் போகலாம்" என்று! அந்தப் புண்ணியமெல்லாம் அக்காமார்களுக்கே போகட்டும் என்று நந்து பெருந்தன்மையுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பான். ஆனால், சித்தியா வந்து சில நேரம் எழுப்பி கிளப்பிக் கொண்டு போய் விடுவார். நந்துவை யாரும் அடிப்பதில்லை. ஆனால் அவனுக்கு விழ வேண்டிய அறை சேது முதுகில் விழும் போது சத்தம் காட்டாமல் நந்து எழுந்து கோயிலுக்குப் போவான்.

திருப்பள்ளியெழுச்சி என்பது அதுதான் என்று அவனுக்கு பல காலம் தெரியாமல் இருந்தது!

அன்பென்ற மழையிலே அகிலமே நனைந்திட இப்புவியில் வந்துதித்த பாலகன் ஏசுவின் பிறந்த நாளான டிசம்பர் 25-ல் உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

வைகைக்கரை காற்றே!......025

சித்தியா பத்ம நிலையம் வந்த பிறகு செய்த முதல் வேலை, விளக்கு வைக்கக்கூட ஆளில்லாமல் ஒரு குடிசையில் கிடந்த ரெங்கநாதப்பெருமாளுக்கு கோயில் கட்ட முனந்ததுதான். இது சாதாரண காரியமில்லை என்று அவருக்குத்தெரியும். ஆனாலும் அவருக்கு கட்டளை எங்கிருந்து வந்தது என்று அவருக்கு மட்டுமே தெரியும். கோயிலில் பூஜை செய்ய ஒரு பட்டாச்சாரியர் கூட இல்லை. ஒரு நல்ல ஆளைப் பிடித்து வர வைணவர்கள் அதிகமிருக்கும் ஊர்களுக்குப் படையெடுத்தார். நந்து வாழ்ந்த ஊர் சிவ ஸ்தலம். அங்கு பெரிய கோயில் என்றால் அது சிவன் கோயில்தான். நந்து குடும்பப் பேச்சிலும் நிறைய சைவச் சொற்கள் கலந்து விட்டன. "ஸ்வாமி புறப்பாடு" "ஸ்வாமி உள்" "ஸ்வாமி தரிசனம்" இப்படி. ஏன் கோகிலம் பெரிய மீனாட்சி பக்தையாகிவிட்டாள். பத்மா முத்துராமலிங்கத்தேவர் போல் முருக பக்தை ஆகிவிட்டாள். ஆனால் சித்தி பொழைக்கத்தெரிந்த ஆசாமி! ஆத்துக்காரர் பெருமாள் கோயில் கட்டுகிறார் என்றவுடன் வைணவப் பழக்க வழங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். சிவன் கோயில் அருகிலிருந்தாலும் போவதில்லை. "மறந்தும் புறம் தொழா மாந்தர்" என்ற சொற்படி அவள் தன்னை ஆக்கிக்கொண்டாள். சித்தியாவிற்கு அது பிடிக்கும் என்று கணக்குப் போட்டாள்.

ஆனால் கோயில் கட்ட வேண்டுமெனில் அய்யங்கார்களிடம் மட்டும் காசு கேட்க முடியாதே! அதுவும் பஞ்சாங்கய்யங்காரிடம் கால் காசு பேறாதே. அவரோடு மார்கழி பஜனை வீட்டுக்குள்ளயே நடக்கும். கிருஷ்ணப்பிரசாதம் கிடைப்பதற்குள் போதும், போதுமென்றாகிவிடும். அவரை சமாளிக்கக்கூடியவன் சேது பிரண்டு கிருஷ்ணமூர்த்திதான். அந்தக் கதைக்கு பின்னொரு சமயம் வருவோம். சித்தியா பெருமாள் கைங்கர்யத்தில் ஓடி அலுத்து விட்டு சிவன் கோயில் வாசலில் இருக்கும் நடராஜ பட்டராத்துத் திண்ணையிலே படுத்துக் கொண்டு விடுவார். அவரோட சகவாசமெல்லாம் பட்டர்களோடதான். நடராஜ பட்டர் மாமி செதுக்கி வைத்த சிலை போல கட்டை குட்டையாய் பார்க்க லக்ஷ்ணமாய் இருப்பாள்.

இப்படி சித்தியா வைஷ்ணவ தலங்களுக்குப் போய் வரும் போது ஏதாவது வாங்கி வருவார். ராத்திரி குழந்தைகள் தூங்கிய பிறகு வந்தால் தூங்குற குழந்தைகளை எழுப்பி அல்வா தருவார். இவர் இப்படி வேளாத வேளையிலே இனிப்புக் கொடுத்தே நந்துவின் பல்லைக் கெடுத்து விட்டார்.

கோகிலம், குஞ்சரத்திற்கு ஸ்ரீ ஆண்டாள் ஸ்னானப்பவுடர் வாங்கி வந்திருந்தார். சனிக்கிழமை எண்ணைக் குளியல் போது வீடே கம, கமவென்று இருந்தது. கோகிலத்திற்கு பெரிய முடியென்று இல்லை. ஒவ்வொரு பிரவத்திலும் கொட்டி, கொட்டி கொஞ்சமாய் போய் விட்டது. குஞ்சரம்தான் அக்காவிற்கு எண்ணெய் வைத்து சீகக்காய் தேய்த்து குளித்து விடுவாள்.

"டீ குஞ்சரம்! அப்பா வரேங்கராரே என்ன செய்யட்டும்?"

"என்னக்கா, என்னையப் போய் கேட்டுண்டு எனக்கென்ன தெரியும். உனக்குதான் ஆத்து நிலவரம் புரியும். நீதானே பெரியவ"

"ஆமடி, உனக்கு அண்ணனில்ல அதுக்காக என்னைய அண்ணாவாக்கிட்டே. எனக்கு ஒரு அண்ணன் வேணுமே! நான் யாரைப் போய் பாப்பேன்?"

இந்தப் பேச்சு போன வருடம் நடந்தது. மஞ்சள் தத்தா பத்ம நிலையம் வந்து செட்டிலாகிட்டார். அவருக்கு ஏற்கெனவே பிரிட்டிஷ்காரன்னு நினைப்பு, பத்ம நிலையம் வந்தவுடன் தனக்குத் தனியாக ஒரு அறை வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொண்டுமிட்டார். எல்லோரும் தரையில் படுத்துக் கொண்டு புரளும் போது, அவருக்கு மட்டும் கட்டில் இருந்தது. மிக, மிக அழகான ஒரு ஈசி சேரும் அவரிடம் இருந்தது. சேதுபதியிடம் பேஷ்காரராக வேலை பார்த்த போது கிடைத்தவை.

தாத்தா ரூமில் பார்த்து அதிசயிக்க இப்படி எத்தனையோ உண்டு. தாத்தா வாக்கிங் போவதற்கென ஒரு வாக்கிங்ஸ்டிக் வைத்திருப்பார். வெளியே பாக்க வாக்கிங் ஸ்டிக். உள்ளே கூர்மையான வாள் இருக்கும். தாத்தாவிற்கு கத்திச்சண்டை தெரியுமாவென்று தெரியாது. ஆனால் இவர்கள் வாழ்ந்தது முழுவதும் கள்ளர், மறவர் வாழ்ந்த பூமி. ஒரு தற்காப்பிற்கு இது அவசியமாக இருந்தது. அதைவிட மிக அழகான ஒரு சுருள் கத்தி வைத்திருப்பார். வைத்து இழுத்தால் குடம் அப்படியே சரிந்துவிடும் என்பார். இளமையிலே பெரிய சண்டியராய்தான் மஞ்சள் தாத்தா இருந்திருக்க வேண்டும். ஆனால் வயதான பின்பும் அதே கார்வார்தான். கோகிலத்திற்கு எரிச்சலாக வரும். ரெண்டு பேருக்கும் எப்போது வாக்குவாதம்தான்.

அவருக்கென்ன, வீட்டில் எல்லோருக்குமே அரிசிச் சாதம் வேண்டும். சாம்பார், காய்கறி என்று நன்றாகச் சாப்பிட வேண்டும். தாத்தாவோட பந்தாவைச் சொல்ல வேண்டாம். சாப்பாடு அவர் ரூமிற்குப் போக வேண்டும். அம்மா என்னிக்காவது கேப்பை ரொட்டி பண்ணுவா. நெய் விட்டு, விட்டுப் பண்ணினாலும் தூக்கி மண்ணுலே போட்டுடுவார்.

இப்படிப்பட்ட வாழ்க்கையிலே ஒரு பெரிய பஞ்சம் இந்தியாவில் வந்தது. அரிசி கிடைப்பது ததிகிணத்தோமாகிவிட்டது. ரேஷனில் புளுத்த கோதுமை கிடைத்தது. அதை நன்றாகக் காயப்போட்டு, சலித்து பின் அரிசி போல் உடைத்து அம்மா கோதுமைச் சாதம் பண்ணினாள். அரிசிச் சாதமென்றால் போட்டி போட்டுண்டு சாப்பிடற குடும்பம், கோதுமைச் சாதம் என்றவுடன் ஒரு வாய் வைக்கவில்லை. அம்மாவிற்கு பெரிய பாடாகிவிட்டது. எப்படியெல்லாமோ செய்து பார்த்தாள். ஒருவருக்கும் கோதுமையே இறங்கல. சப்பாத்தி, பூரி என்பதெல்லாம் அவர்கள் கேள்விப்பட்டிராத பெயர்கள். கிருஷ்ணய்யர் ஹோட்டலில் பூரி சக்கைப் போடு போட்டது. ஆனாலும் அவர்களுக்கு சப்பாத்தி பண்ணும் கலை கடைசிவரையில் வரவே இல்லை.

அம்மா, புதிதாக கோதுமை உப்புமா பண்ணினாள். அது கொஞ்சம் சாப்பிடும்படி இருந்தது. காரா, சாரமாக அதைப்பண்ணி கோதுமையின் சுவை தெரியாத வண்ணம் கோகிலம் செய்து விட்டாள். குழந்தைகள் ஜீனி வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டிய சூழல்.

இந்தக் காலக்கட்டத்தில் இந்த மஞ்சள் தாத்தாவை சரிக்கட்டுவதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது, கோகிலத்திற்கு.

வைகைக்கரை காற்றே!......024

அந்தக் கிராமத்தில் குழந்தைகள் சட்டையில்லாமல் அம்மணமாய் ஓடியாடுவது ஒன்றும் பெரிய சேதியில்லை. சூடானா நாட்டில் இப்படித் திரிவதே குழந்தைகளுக்கு இயல்பானது என்று தோன்றுகிறது. ஒரு வகையில் கிராமத்தில் எல்லாமே வெட்ட வெளிச்சமாக நடப்பது போலும் தோன்றுகிறது. பெரியவர்கள் கொஞ்சம் வெட்கம் கருதி ஆத்தோரத்திற்கு, வயக்காட்டிற்கு வெளியே போகிறார்கள். அங்கு சுருட்டுப் பிடித்துக் கொண்டும், பீடி பிடித்துக் கொண்டும் காட்சியளித்தவாரே காரியங்கள் செய்கின்றனர். அதைக் குழந்தைகள் பீடி குடிக்காமல், சுருட்டுப் புகைக்காமல் வீட்டின் முன்னால் செய்கின்றன. புரட்டாசி மாதம் பிறந்து விட்டால் இந்த நாய்கள் படுத்தும் பாடு, அதன் நாடகங்கள் தெரு வீதியிலே பெரியோர், சிறியோர், விடலைகள் காண நடக்கின்றன. பாலியல் இச்சை என்பது கிராமத்துப் பேச்சில் ஒளித்து வைக்க வேண்டிய ஒரு பொருளாக இருந்ததில்லை. அதற்கெல்லாம் பின்னால் வருவோம்.

நந்து அந்த நாகரிகத்தை சற்றும் விடாமல் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த முதல் வேலையாக டவுசரக் கழட்டி எங்கேயாவது போட்டு விட்டு தெருவிற்கு வந்து விடுவான். ஆனால் அந்த விளையாட்டெல்லாம் ஆரம்பப்பள்ளியுடன் முடிந்து விட்டது. டவுசர் போடாமல் வெளியே போனால் கோகிலம் முதுகை உரித்து விடுவாள். எனவே நந்து டிராயர் போட்டுக் கொண்டே ஆத்தங்கரைக்கு விளையாடப் போவான். ஆனால் இவர்கள் விளையாடுகிற விளையாட்டில் இவன் டவுசர் எப்படியும் பின்பகுதியில் கிழிந்துவிடும். ஒவ்வொருமுறை துணி தோய்க்கும் போதும் பங்கஜம் சொல்லுவாள். "அது என்னடா அங்க மட்டும் கிழியறது?" என்று. அவள் இங்கிலாண்டில் ஸ்காட்லண்ட் யார்டில் இருக்க வேண்டிய ஆள். துப்பு துலக்குவதில் வல்லவள். "டேய் நந்து! இங்க வா! அக்கா இன்னிக்கு உனக்கு குளிச்சு விடறேன்" என்றாள். நந்துவை மயக்க வேண்டுமென்றால், 'குளிக்கலாம்' என்ற ஒரு சொல் போதும். "இப்பவேவா?" என்றான் நந்து. "ஆமாம், இப்பதானே ஆத்துலேந்து வந்தே? ஓடி வா!" என்றாள். நந்து எல்லாவற்றையும் கழட்டி விட்டு பங்கஜத்திடம் வந்தான்.

பங்கஜம் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தோரணையில் அவனைக் குளிப்பாட்டாமல் அங்கம், அங்கமாக ஆராய்ந்தாள்.

"என்ன பாக்கறே? பின்னாலே?"

"ஒண்ணுல்லே ஒரே மண்ணா இருக்கேன்னு பாத்தேன். ஆமா! அதென்ன அங்கெல்லாம் ஒரே காக்காப் பொண்ணு? எடுக்கவே வரலையே"

"நாகன் என்னையே மண்ணிலே போட்டு இழுத்தான். அதான்"

"சண்டையா?"

"இல்லையே! சும்மா, ஜாலியா விளையாடுவோம்"

"சரிதான் இப்பப் புரியறது. ஏன் உன் டிராயிரலே அங்க மட்டும் கிழியறதுன்னு. நந்துக்குட்டி அக்கா சொல்றதைக் கேளு!"

"சரி, முதல்ல நீ தண்ணியைத் தலையிலே ஊத்து" என்றான் ஆண் சிங்கம் நந்து.

"விடறேண்டா! அதுகுள்ள ஒண்ணு கேளு. ஓந் தொடையிலே என்ன இவ்வளவு பெரிய தழும்புன்னு தெரியுமோ?" என்றாள்.

நந்து தன் இடது தொடையைத் தடவினான். பெரிய அறுவை சிகிச்சை நடந்து முடிந்த தழும்பு இருந்தது. "தெரியாதே பங்கஜம்! ஏன்?" என்றான்.

"நீ கொழந்தையா இருக்கறச்சே உனக்கு தொடைவாழை வந்தது. ஆஸ்பத்திரியிலே ஆபரேசன் செஞ்சு அதை எடுக்க வேண்டியதாப் போச்சு. நீ இப்படி மண்ணுலே விளையாடினா, போகாத இடத்திலே மண்ணு போய் உக்காந்தா அப்புறம் 'அங்கே' கிழிச்சு தையல் போடணும்" என்று ஒரு அணுகுண்டைப் போட்டாள்.

நந்து பயந்து விட்டான். "நிஜமாவா? அப்படின்னா இனிமே நான் தரையிலே இழுத்து விளையாடறதை நிறுத்துடிறேன்"

"சமத்துக்குட்டி, என் சக்கரைக்கட்டி!" என்று கொஞ்சியவாறு கிணற்றிலிருந்து நீர் இறைத்து இவன் மேல் கொட்டினாள்.

"என்னடிது, இத்தரவாயிலே இவனுக்குக் குளியல். ஜலதோஷம் பிடிக்கப்போறது" என்று வந்தாள் கோகிலம்.

"நீ சும்ம இரும்மா. இப்பதான் இவனை வழிக்குக் கொண்டு வந்திருக்கேன். இவனுக்கு புதுசு, புதுசாய் டவுசர் எடுத்து மாளல. அண்ணா எங்கே போவா பணத்துக்கு?" என்றால் பங்கஜம் பொறுப்புடன். அம்மா சிரித்துக்கொண்டே கொல்லைக்குள் புகுந்தாள்.

ஆனால் பங்கஜம் வெற்றி கொஞ்ச நாளுக்குத்தான் இருந்தது. ஆறாம் வகுப்பு போன பிறகு, நந்துவின் டிராயர் பாக்கெட் பிளேடு கொண்டு சரியாக வெட்டப்பட்டு இருந்தது. இடது பாக்கெட் ஒழுங்கா இருக்க வலது பாக்கெட் மட்டும் கிழிந்திருந்தது. பங்கஜம் ஒவ்வொரு முறையும் கிழிசலை தைத்து அனுப்புவாள். ஆனால் அடுத்தமுறை தோய்க்கும் போது வலது பாக்கெட் மட்டும் கிழிந்திருக்கும். பங்கஜத்திற்கு இதுவொரு புது சவாலாகப் போய்விட்டது. முன்பு போல் நந்துவிடமிருந்து இதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அவன் ஒன்றுமறியாப் பாலகன் போல் முகத்தை வைத்துக் கொண்டு 'ஊமக்கொட்டானாக' இருந்து விட்டான்.

பாலுவின் தோழமை நந்துவைக் கொஞ்சம் மாற்றியிருந்தது. லதா விஷயத்தில் பாலு ஒரு குரு போலிருந்து இவனுக்கு பல விஷயங்களைச் சொல்லித்தந்தான். பலமுறை இவனை ரயில்வே ஸ்டேஷன் வரை அழைத்துச்சென்று லதா வீட்டுத்தோட்டத்தில் இருவரையும் இணைத்திருக்கிறான். இந்தப் பரிட்சயம் சில புதிய சோதனைகளுக்கு அவர்களை இட்டுச் சென்றது. அதன் விளைவுதான் இந்த பாக்கெட் கிழிதல். அது பாலுவுக்கும், நந்துவிற்கும் மட்டும் தெரிந்த இரகசியம்!

இளையராஜாவின் பால்நிலாப்பாதை

இன்று எனக்கு காய்ச்சல், ஜலதோஷம். காய்ச்சலாகக் கிடக்கும் போதுதான் இப்போதெல்லாம் புத்தகம் வாசிக்க நேரம் கிடைக்கிறது. இளையராஜாயின் எண்ணக் குறிப்புகளான பால்நிலாப்பாதை எனக்கு நத்தார் பரிசாகக் கிடைத்தது. யார் கொடுத்திருப்பார்களென்று ஒரு சொடிக்கில் நீங்கள் அறியலாம்!

அவர் "புதிய பார்வை"யில் முன்பு எழுதிய குறிப்புகளையும் வாசித்து இரசித்திருக்கிறேன். ஒரு பக்கம் இவர் தனது அத்வைத ஆன்மீகப் புரிதல் பற்றி எழுதுவார். அடுத்த பக்கத்தில் பெரியாரின் வாழ்வு பற்றி வீரமணி எழுதிக்கொண்டிருப்பார். இந்த சுவைக்கத் தகுந்த முரண்பாடுதான் - தமிழ்நாடு!

முகப்பில் இசைஞானி இளையராஜா என்று போட்டிருக்கிறது. தான் சினிமாக்காரனில்லை என்று அழுத்தமாக இப்புத்தகத்தில் சொல்லும் ராஜா இந்த அர்த்தமற்ற பட்டத்தை ஏன் ஏற்றுக்கொண்டு அதை இந்தப்புத்தகத்தில் போட்டார் என்று தெரியவில்லை. தன் முகவுரையில் 'இறைவனடி' இளையராஜா என்று கைழுத்திடுகிறார். அது பொருத்தம் என்று தோன்றுகிறது. அவர் தனது ஆன்மீகத்தேடலில் ஒரு ஞானியின் நிலையை அடைந்திருக்கலாம். அது தனி மனிதத்தேடல். இசையில் அவர் மேதை. அது புரிகிறது. இசையில் ஞானி என்றால் புரியவே இல்லை! தியாகப்பிரம்மம் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள் போல! ஆனால் தான் 'அது' இல்லை என்று உணர்ந்து சொல்கிறார் இளையராஜா. ஆனால் அவர் 'அது' தான் என்று நாத்திகர் கமல் சொல்கிறார். சினிமாக்காரர்கள் பேசுவது புரிவதே இல்லை!

இந்தப் புத்தகத்தில் காணக்கிடைக்காத சில அரிய படங்கள் கிடைக்கின்றன. அவர் சொல்லாவிட்டால் நமக்குத்தெரியவே தெரியாது என்று போகக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. பாரதி பாடுவான், 'இறைவனில் அருள் பாயும் பள்ளமாக நம் உள்ளம்' இருக்க வேண்டுமென்று. அது போல் கல்வியறிவில்லாத இளையராஜா தன் விடா முயற்சியினாலும், இறை அருளாலும் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்திருப்பதை இப்புத்தகம் நன்றாகவே உணர்த்துகிறது. இவரது வாழ்க்கை லா.ச.ரா பேசும் அவரது பாட்டியை ஞாபகப்படுத்துகிறது. அந்தப்பாட்டிக்கு திடீரென்று ஒரு நாள் அருள் கிடைத்துவிட உபனிடதங்களுக்கு விளக்கம் சொல்லும் அளவு சமிஸ்கிருத ஞானம் வந்து விடுகிறது. பண்டிதர்களெல்லாம் வந்து பாட்டியிடம் விளக்கம் கேட்டுப் போகிறார்கள். அப்படித்தான் இவர் வாழ்க்கையும் என்று தோன்றுகிறது.

இவர் திருப்பாணாழ்வார் போல் தலித்தாகப் பிறந்து செய்கையால் பிராமணராக உயர்ந்தவர். ஆனால் இவர் இப்படி சாமியார்த்தனமாகப் பேசி ஐயராக மாறிவிட்டது பெரிய குறையாக தலித் இயக்கத்திற்குப் படுகிறது. இங்குதான் பாரதி சொன்னது, எம்.எஸ் செய்தது ஞாபகத்திற்கு வருகிறது. குலம் ஒருவனது குணத்தை தீர்மானிப்பதில்லை. சத்திரியனான கௌசிகன் விசுவாமித்திர பிராமணனாக மாறுகிறான். பாரதி எல்லோருக்கும் பூணலைப் போட்டு பிராமணர்களாக மாற்ற வேண்டுமென்று சொன்னான். "எல்லோரும் சமம் என்ற பேச்சு" பின் தானாக வரும் என்பது அவன் கட்சி. ஆனால், தலித் இயக்கம் இதை ஒத்துக்கொள்வதில்லை. அவர்கள் கடைசிவரை தலித் என்ற அடையாளத்துடன் இருக்கவேண்டுமென்கிறார்கள். அதனால் இந்த மனுஷன் தன் பெயருக்கேற்றவாறு அந்தக் காலத்து ராஜாக்கள் செய்தது போல் ஸ்ரீரங்க கோபுரம் கட்டியது பிழையாகக் கூட இயக்கத்திற்குப் படலாம். ஆனால், இந்த காரியத்தைச் செய்ய உந்துதலாக இருந்தது அந்தப் பிறப்பென்னும் இந்திய வம்சாவழி விழுமியமே. எத்தனை பணக்காரர்கள் இருக்கிறார்கள். யாருக்குமே தோன்றவில்லையே? இளையராஜா ஏன் செய்தார்? கிருஷ்ணப்பறையர் என்று போட்டுக்கொள்வது பற்றி தலித் இயக்கம் என்ற சொல்கிறது என்று தெரியவில்லை. இளையராஜா இதையெல்லாம் கடந்து போய்விட்டார். அம்மாவை "மம்மி" என்று சொல்லும் கலாச்சாரதிற்குப் போய்விட்டார். இனிமேல் அவரை கீழே இழுக்கமுடியுமென்று தோன்றவில்லை. இசைஞானி என்ற பட்டம் ஒரு கவசம் போல் இச்சூழலுக்கு உதவுகிறது.

எல்.சுப்பிரமணியம் இசையமைக்க ஆரம்பித்து பின் ராஜா அமைத்த ஹே! ராம்! படம் பற்றிய பேச்சு வருகிறது. தமிழகம் இவர் லண்டன் பில்ஹார்மோனிக்காவிற்கு இசையமைத்ததை இதைச் செய்த ஒரே தமிழன் இவர்தான் என்று பறை சாற்றிவிட்டது. எல்.சுப்பிரமணியத்தை நான் ஜெர்மனியில் சந்தித்த போது இதுபற்றிக் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே அது பிழை என்றார். எல்.சுப்பிரமணியம் இதை இளையராஜாவிற்கு முன்பே செய்திருக்கிறார். ஆனால், எல்.சுப்பிரமணியத்திற்கு இருப்பது போன்ற ஒரு தீக்ஷதர் பரம்பரை இளையராஜாவுக்கு கிடையாது என்பதென்னவோ உண்மை.

வலைப்பூவில் நவன் சொன்னார். நாமெல்லோரும் நம்மைப்பற்றி சொல்லிக்கொள்ள வேண்டுமென்று. உண்மைதான். இளையராஜா சொல்லவில்லையென்றால் பின் நமக்கு இந்த விஷயங்களெல்லாம் எப்படித் தெரியவரும்? இளையராஜாவிற்கு தனியாக வலையகம் இல்லை. அது தேவையில்லை என்றும் பிரசாத் கோபால் நடத்தும் வலையகமே போதுமென்று ராஜா சொல்கிறார். அவரை வைத்தே இளையராஜாவின் நினைவுகளை வலைப்பதிவாக்க வேண்டும். புத்தகம் வித்துதான் அவருக்கு இனிமேல் சம்பாத்தியமென்றில்லை. அவர் சிவாஜி பற்றி பெரிய கட்டுரையே எழுதியிருக்கிறார். இனிமேல் ராஜாவின் வாழ்வும் மக்களின் மனதிலேயே. அப்படியெனில், நானும், நீங்களும் செய்வது போல் அவரும் வலைப்பதிவு செய்ய வேண்டும். இலவசமாக.

இளையராஜாவின் பால்நிலாப்பாதை

இன்று எனக்கு காய்ச்சல், ஜலதோஷம். காய்ச்சலாகக் கிடக்கும் போதுதான் இப்போதெல்லாம் புத்தகம் வாசிக்க நேரம் கிடைக்கிறது. இளையராஜாயின் எண்ணக் குறிப்புகளான பால்நிலாப்பாதை எனக்கு நத்தார் பரிசாகக் கிடைத்தது. யார் கொடுத்திருப்பார்களென்று ஒரு சொடிக்கில் நீங்கள் அறியலாம்!

அவர் புதிய பார்வையில் முன்பு எழுதிய குறிப்புகளையும் வாசித்து இரசித்திருக்கிறேன். முகப்பில் இசைஞானி இளையராஜா என்று போட்டிருக்கிறது. தான் சினிமாக்காரனில்லை என்று அழுத்தமாக இப்புத்தகத்தில் சொல்லும் ராஜா இந்த அர்த்தமற்ற பட்டத்தை ஏன் ஏற்றுக்கொண்டு அதை இந்தப்புத்தகத்தில் போட்டார் என்று தெரியவில்லை. தன் முகவுரையில் 'இறைவனடி' இளையராஜா என்று கைழுத்திடுகிறார். அது பொருத்தம் என்று தோன்றுகிறது. அவர் தனது ஆன்மீகத்தேடலில் ஒரு ஞானியின் நிலையை அடந்திருக்கலாம். அது தனி மனிதத்தேடல். இசையில் அவர் மேதை. அது புரிகிறது. இசையில் ஞானி என்றால் புரியவே இல்லை! தியாகப்பிரம்மம் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள் போல! ஆனால் தான் 'அது' இல்லை என்று உணர்ந்து சொல்கிறார் இளையராஜா. ஆனால் அவர் 'அது' தான் என்று நாத்திகர் கமல் சொல்கிறார். சினிமாக்காரர்கள் பேசுவது புரிவதே இல்லை!

இந்தப் புத்தகத்தில் காணக்கிடைக்காத சில அரிய படங்கள் கிடைக்கின்றன. அவர் சொல்லவிட்டால் நமக்குத்தெரியவே தெரியாது என்று போகக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. பாரதி பாடுவான், 'இறைவனில் அருள் பாயும் பள்ளமாக நம் உள்ளம்' இருக்க வேண்டுமென்று. அது போல் கல்வியறிவில்லாத இளையராஜா தன் விடா முயற்சியினாலும், இறை அருளாலும் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்திருப்பதை இப்புத்தகம் நன்றாகவே உணர்த்துகிறது. இவரது வாழ்க்கை லா.ச.ரா பேசும் அவரது பாட்டியை ஞாபகப்படுத்துகிறது. அந்தப்பாட்டிக்கு திடீரென்று ஒரு நாள் அருள் கிடைத்துவிட உபனிடதங்களுக்கு விளக்கம் சொல்லும் அளவு சமிஸ்கிருத ஞானம் வந்து விடுகிறது. பண்டிதர்களெல்லாம் வந்து பாட்டியிடம் விளக்கம் கேட்டுப் போகிறார்கள். அப்படித்தான் இவர் வாழ்க்கையும் என்று தோன்றுகிறது.

இவர் திருப்பாணாழ்வார் போல் தலித்தாகப் பிறந்து செய்கையால் பிராமணராக உயர்ந்தவர். ஆனால் இவர் இப்படி சாமியார்த்தனமாகப் பேசி ஐயராக மாறிவிட்டது பெரிய குறையாக தலித் இயக்கத்திற்குப் படுகிறது. இங்குதான் பாரதி சொன்னது, எம்.எஸ் செய்தது ஞாபகத்திற்கு வருகிறது. குலம் ஒருவனது குணத்தை தீர்மானிப்பதில்லை. சத்திரியனான கௌசிகன் விசுவாமித்திர பிராமணனாக மாறுகிறான். பாரதி எல்லோருக்கும் பூணலைப் போட்டு பிராமணர்களாக மாற்ற வேண்டுமென்று சொன்னான். "எல்லோரும் சமம் என்ற பேச்சு" பின் தானாக வரும் என்பது அவன் கட்சி. ஆனால், தலித் இயக்கம் இதை ஒத்துக்கொள்வதில்லை. அவர்கள் கடைசிவரை தலித் என்ற அடையாளத்துடன் இருக்கவேண்டுமென்கிறார்கள். ஆதனால் இந்த மனுஷன் தன் பெயருக்கேற்றவாறு அந்தக் காலத்து ராஜாக்கள் செய்தது போல் ஸ்ரீரங்க கோபுரம் கட்டியது பிழையாகக் கூட இயக்கத்திற்குப் படலாம். ஆனால், இந்த காரியத்தைச் செய்ய உந்துதலாக இருந்தது அந்த பிறப்பென்னும் இந்திய வம்சாவழி விழுமியமே. எத்தனை பணக்காரர்கள் இருக்கிறார்கள். யாருக்குமே தோன்றவில்லையே. இளையராஜா ஏன் செய்தார்? கிருஷ்ணப்பறையர் என்று போட்டுக்கொள்வது பற்றி தலித் இயக்கம் என்ற சொல்கிறது என்று தெரியவில்லை. இளையராஜா இதையெல்லாம் கடந்து போய்விட்டார். அம்மாவை "மம்மி" என்று சொல்லும் கலாச்சாரதிற்குப் போய்விட்டார். இனிமேல் அவரை கீழே இழுக்கமுடியுமென்று தோன்றவில்லை. இசைஞானி என்ற பட்டம் ஒரு கவசம் போல் இச்சூழலுக்கு உதவுகிறது.

எல்.சுப்பிரமணியம் இசையமைக்க ஆரம்பித்து பின் ராஜா அமைத்த ஹே! ராம்! படம் பற்றிய பேச்சு வருகிறது. தமிழகம் இவர் லண்டன் பில்ஹார்மோனிக்காவிற்கு இசையமைத்ததை இதைச் செய்த ஒரே தமிழன் இவர்தான் என்று பறை சாற்றிவிட்டது. எல்.சுப்பிரமணியத்தை நான் ஜெர்மனியில் சந்தித்த போது இதுபற்றிக் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே அது பிழை என்றார். எல்.சுப்பிரமணியம் இதை இளையராஜாவிற்கு முன்பே செய்திருக்கிறார். ஆனால், எல்.சுப்பிரமணியத்திற்கு இருப்பது போன்ற ஒரு தீக்ஷதர் பரம்பரை இளையராஜாவுக்கு கிடையாது என்பதென்னவோ உண்மை.

வலைப்பூவில் நவன் சொன்னார். நாமெல்லோரும் நம்மைப்பற்றி சொல்லிக்கொள்ள வேண்டுமென்று. உண்மைதான். இளையராஜா சொல்லவில்லையென்றால் பின் நமக்கு இந்த விஷயங்களெல்லாம் எப்படித் தெரியவரும்? இளையராஜாவிற்கு தனியாக வலையகம் இல்லை. அது தேவையில்லை என்றும் பிரசாத் கோபால் நடத்தும் வலையகமே போதுமென்று ராஜா சொல்கிறார். அவரை வைத்தே இளையராஜாவின் நினைவுகளை வலைப்பதிவாக்க வேண்டும். புத்தகம் வித்துதான் அவருக்கு இனிமேல் சம்பாத்தியமென்றில்லை. அவர் சிவாஜி பற்றி பெரிய கட்டுரையே எழுதியிருக்கிறார். இனிமேல் ராஜாவின் வாழ்வும் மக்களின் மனதிலேயே. அப்படியெனில், நானும், நீங்களும் செய்வது போல் அவரும் வலைப்பதிவு செய்ய வேண்டும். இலவசமாக.

வைகைக்கரை காற்றே!......023

"டேய் நந்தூ! எங்கேடா போய்ட்டே? நாலைஞ்சு நாளாக்காணோம்?" என்று நந்துவை மீண்டும் பார்த்த மகிழ்வில் கேட்டான் நாகன்.

"உனக்குத் தெரியாதா? பெரிய பள்ளிக்கூடத்திலே உல்லாசப்பயணம் போனோம்" என்றான் நந்து.

நந்து ஆரம்பப்பள்ளி முடித்து பெரிய பள்ளியில் சேர்ந்து விட்டான் இப்போது. நாகன் இன்னும் ஆரம்பப்பள்ளி தாண்டவில்லை. நந்துவின் ஒட்டப்பள்ளி வாழ்வு முடிந்து விட்டது. பன்றிகளின் தொடர்பும் அறுந்து விட்டது. பெரிய பள்ளியின் நாகரிகம் வந்து விட்டது. அது தட்டி போட்ட, தனித்தனி வகுப்புகள் கொண்ட பள்ளி. தரையில் யாரும் கட்டப்பலகாய் போட்டு உட்கார்வதில்லை. எல்லோருக்கும் அழகான டெஸ்க் இருந்தது. இரண்டு, இரண்டு பேர் அமரும் வண்ணம். நோட்டு புத்தகங்களை வைக்க தனியிடம் அதில் இருந்தது. இது அவனின் முதல் உல்லாசப்பயணமில்லை. ஆரம்பப்பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மதுரைக்கு அருகிலுள்ள அழகர்கோயிலுக்கு உல்லாசப்பயணம் போயிருக்கிறான்.

"டேய், சும்மா டூப் விடறாண்டா இவன்" என்றான் பாண்டி.

"ஏண்டா? அப்படிச்சொல்றே?"

"திருப்பதிபோனா மொட்டையடிச்சிருக்கணும். இதோ பாரு, குட்டமணி தலைய!" என்று குட்டமணியின் மொட்டைத் தலையைத் தடவினான் பாண்டி. குட்ட மணி தலையை விலக்கிக்கொண்டான் கூச்சத்துடனும், எரிச்சலுடனும்.

இதே காரணங்களுக்காகவே நந்து மொட்டையடிப்பதை வெறுத்தான். அங்கு பலருக்கு திருப்பதி வெங்கிடாசலபதி குலதெய்வமாக இருந்தது. காது குத்தி மொட்டையடிப்பது வழக்கமாக இருந்தது. நந்துவிற்கு காது குத்தியிருந்தது. மொட்டையடித்த ஞாபகமில்லை.

"அப்படில்லாம் ஒண்ணும் கிடையாதுடீ! பள்ளிக்கூட உல்லாசப்பயணம் போகும் போது யாரும் மொட்டையடிக்கமாட்டாங்க. இதுகூட இவனுக்குத்தெரியலே" என்று எதிர்க்கேலி செய்தான் நந்து.

"மொட்டையடிக்கிறது நல்லது" என்றான் குட்டமணி ஒரு தற்காப்புப் பேச்சாக.

"அப்படில்லாம் ஒண்ணுமில்லே" என்றான் நந்து.

"மொட்டையடிச்சா சாமி காப்பாத்தும்"

"மொட்டையடிக்காட்டிலும் காப்பாத்தும்"

"சரி, விடுங்கடா, அங்கே என்னே பாத்தே?" என்றான் நாகன்.

"பெரிய வரிசைடா! இவ்வளவு பெரிய வரிசையை நாங்க பாத்ததே இல்லை. மொதநா ராத்திரியே போய் வரிசைலே உக்காத்துட்டோ ம். அடுத்தநாதான் சாமி தரிசனம் கிடைச்சது"

"என்னது? அவ்வளவு பெரிய வரிசையா?" என்று வாயைப்பிளந்தான் நாகன்.

"ஆமாண்டீ! ராத்திரில்லாம் வரிசையேலேயே தூங்கணும். குளிரடிச்சுது. அதெல்லாம் பொறுத்துக்கணும். அப்போதான் சாமிக்கு நம்மைப் புடிக்கும்". மொட்டையடிக்காவிட்டாலும் பிற வழிகளில் சாமியை 'காக்கா' பிடிக்கமுடியுமென்று நந்து அவர்களுக்குக் காண்பித்தான்.

"கோயில்லே ஆளுக்கொரு லட்டு கொடுத்தாங்க. நம்ம உச்சிக்குடுமி ஐயர் லட்டு மாதிரி இல்லே. ரொம்பப்பெரிசு. கைக்கு அடங்காது" என்று ஒரு கால்பந்து அளவிற்கு கையைக் காட்டினான் நந்து. எல்லோரும் அசந்து போனார்கள்.

"ஆனா பாவம் ஜெபமணியோட லட்டு கரைஞ்சு போச்சு!" என்றான் நந்து.

"டேய், லட்டு எப்படிக்கரையும்டா?"

"கரையும்! இவன் என்ன பண்ணினான்னா லட்டையும், தண்ணி பாட்டிலையும் ஒண்ணாப்பைக்குள்ளெ போட்டுக் கொண்டு வந்தான். ராத்திரி டிரெயின் குலுக்கின குலுக்கல்ல பாட்டில் உடைஞ்சு போய் தண்ணி கொட்டி, காலையே பாத்தா, லட்டுக்கூழ் ஆகிவிட்டது" என்று நந்து சொல்ல எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.

"ரொம்ப தூரம் ரயில்லே போனுமா?" என்றான் பாண்டி.

"ஆமா! இன்னிக்கி கிளம்பினா நாளைக்குத்தான் போகமுடியும். ராத்திரி வண்டியிலேயே தூங்கிக்கிலாம்"

"நம்ம டேசன் மாஸ்டர்தான் எல்லா ஏற்பாடையும் செஞ்சு கொடுத்தாரு" என்று நந்து ஸ்டேஷன் மாஸ்டருக்கு தனியா சிறப்புச் சொல்வதற்குக் காரணமிருந்தது.

ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரண்டு பெண்கள். பெரியவள் மாலா. இவள் சௌந்திரம் கிளாஸ்மேட். இரண்டாவது பெண் லதா. இவள் ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள். நந்துவை விட ஒரு கிளாஸ் கூட. நந்து வகுப்பில் உட்கார்ந்திருக்கும் போது அவள் தண்ணீர் குடிக்க அடிக்கடி அந்தப்பக்கம் வருவாள். வரும் போதெல்லாம் நந்துவைப்பார்த்துக் கொண்டேயிருப்பாள். இவனருகில் இருக்கும் பாலசுப்பிரமணியன்தான் இவனுக்குக் குத்திக்காட்டுவான். "டேய் அங்க பாரு! அந்தப்பொண்ணு உன்னயே பாத்துக்கிட்டு இருக்கு".

மாலா, லதா இரண்டு பேரில் லதா மிக அழகு. வைஜயந்திமாலாவின் அழகு அவளிடம் தெரிக்கும். அவள் சிரிப்பு மலர் கொட்டுவது போலிருக்கும். அவளது ஒவ்வொரு பார்வையும் நந்துவை அவன் இடத்திலிருந்து சுண்டியிழுக்கும். அவள் யார்? எங்கிருக்கிறாள் என்ற விவரம் கேட்குமளவிற்கு நந்துவிற்கு தைர்யம் கிடையாது. இந்தக் கட்டத்தில்தான் பாலு அவனுக்கு பெரிய உதவியாக இருந்தான். பாலு திருப்புவனம் ஸ்டேஷன் மாஸ்டர் பிள்ளை. லதாவின் அப்பா சப்-ஸ்டேஷன் மாஸ்டர். இவர்களுக்கு ஸ்டேஷனுக்கு அருகிலேயே தனி வீடுகளுண்டு. ஸ்டேஷன் ரொம்ப தூரத்தில் இருந்தது. பாலுதான் லதா பற்றிய மேல் விவரங்களை இவனுக்குத் தந்தான்.

மாலாவைப் பற்றிய பேச்சு வீட்டில் அடிக்கடி வரும். சௌந்திரம் சொல்லுவாள். ஒருமுறை லதாவிற்கும், நந்துவிற்குமிடையே ஏதோ நடப்பதை இவள் யூகித்து விட்டாள்! சும்மா இருப்பது அவள் வழக்கமில்லையே! அம்மாவின் காதில் போட்டு விட்டாள் பேச்சுவாக்கில்.

"ஏழாம் வகுப்புப் படிக்கிற லதாவிற்கு சின்ன கிளாஸ்லிலே படிக்கிற நந்து மேல என்ன அக்கறை?" என்று மூட்டிவிட்டாள்.

அம்மா வீட்டை விட்டு வெளியே போவதில்லை. ஆனால் உலக நடப்பு முழுவதும் வீட்டிற்கு வந்துவிடும். புதிதாக வந்திருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்ரீநிவாசன் பற்றியும் சேதி வந்துவிட்டது. அவர்கள் ஐயங்கார் என்பது மட்டுமில்லை, அதில் எந்தப்பிரிவு என்பதும் அம்மாவ்விற்கு தெரிந்திருந்தது. நந்துவின் துரதிர்ஷ்ட்டம், அம்மாவிற்கு வடகலையென்றால் ஆகாது!

"டீ சௌந்திரம் நீ கொஞ்சம் இத நன்னா பாத்துக்கோ. அவா நெத்தியிலேயே கொக்கி உண்டு. என் பிள்ளையைக் கொத்திண்டு போயிடப்போறா" என்று ஒரு போடுபோட்டாள் கோகிலம்.

கோகிலத்திற்குப் பிடிக்காத எந்த விஷயமும் அந்த வீட்டில் நடந்ததில்லை.

ஜென் அநுபவம்!நகல் நிஜம் (விர்ச்சுவல்) என்பதும் நிஜத்தின் ஒரு தோற்றமே. நிஜமென்றால் என்னவென்று புத்த பிட்சுக்கள்மாதிரி அடுத்த கேள்வி கேட்காதீர்கள் :-) ஜென் மதம் வளர்ந்தது இந்த பூமியில்! முதன்முறையாக ஒரு புத்த பிக்குணி கோயிலில் பேசுவதைக் கேட்டேன். சித்தார்த்தனின் தேடுதல் தீ போல் பற்றிக்கொள்ளக்கூடியது என்பது இந்தியாவை விட்டு ஆயிரம் மைல்கள் கடந்து வந்தும் கண்டுகொள்வதாய் இருந்தது. அது மனதிற்கு மகிழ்ச்சியைத்தந்தது.

பனிக்காலத்தில் மலையேறுவது ஒரு புதிய அனுபவம். குழந்தையிலிருந்து திருமாலிருஞ்சோலை மலையில் ஏறிக்கொண்டிருக்கிறேன். அது வேறு அனுபவம்! குளிர்காற்றில் சலசலக்கும் அருவி கூட அமைதியாகிவிடுகிறது! இல்லை பனி அதன் வாயை அடைத்துவிடுகிறது! அருவிகூட குளிரில் விரைத்து விடுவது பார்க்க வித்தியாசமாக இருக்கிறது! சோல் நகருக்கு மிக அருகில் புல்குக்சான் என்றொரு மலைத்தொடர் உள்ளது. நகர வாழ்வின் நகல் சலிக்கும் போது இயற்கையில் அமைதி தேட பலர் இங்கு வருகின்றனர். தென்கொரியாவின் 75% நிலப்பரப்பு மலைகளால் சூழ்ந்திருப்பதும் ஒரு வசதி!

ஆற்றின் ஊற்று. இதை மணற்கேணி என்கிறான் வள்ளுவன். இதன் சுவை தனி. பின் ஏரி, ஊரணித்தண்ணீர். அதன் சுவை வேறு. மலையில் உருவாகும் நதியின் நீர். குற்றாலத்தண்ணீர் பல மூலிகைகளின் சாறு கொண்டு வருவதால் அதற்கொரு சிறப்புண்டு. பாட்டிலில் ஊற்றிக்கொண்டு வந்த அனுபவம் உண்டு. அழகர்கோயில் போனால் நூபுரகங்கை போய் அந்த தீர்த்தத்தொட்டி நீரை பருகி வாருங்கள். அதன் சுவை தனி. அருவி நீரில் ஆக்சிஜன் அதிகம். எனவே அது சோடா வாட்டர் போல் சுவையாக இருக்கும். இப்படி காற்றை அள்ளிக்கொண்டுவரும் அருவி உறையும் போது அற்புதமான ஒரு சிற்ப வேலைப்பாட்டுடன் உறைந்து விடுகிறது!

பனியில் பல வகைகளுண்டு. இதை விவரித்து ஒரு சிறுகதை 'புதிய பார்வையில்' எழுதியிருக்கிறேன், முன்பு (அது 'உதிர் இலை காலம்' தொகுதியில் வந்துள்ளது). பஞ்சு பறப்பது போல் பனி உண்டு. மூஞ்சியில் பட்டு அப்படியே பஞ்சாய் உருகிவிடும். பிறகு, சின்னச் சின்ன கிரிஸ்டல் போன்ற ஸ்படிகப்பனியுண்டு. கல்லுளிமங்கன் பனிதான் ரொம்ப ஆபத்தானது. அது உருகி இறுகிவிடும் போது. தரை அப்படியே பனிக்கம்பளமாகிவிடும். அப்புறமென்ன கனபாடிகள் வழுக்கி விழுந்து காலை உடைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

நீர் படி நிலைகளில் உறையும் போது சுயமாக சில ஓவியங்களை வரைகிறது. இயற்கையின் முன் போட்டி போடுவது மிகவும் கடினம். அதே நேரத்தில் இயற்கையின் சில டிசைன்கள் ஒன்றுபோலவே இருக்கும். கடலும் கடல் சார்ந்த நெய்தல் கோலம் வானத்தில் பறக்கும் போது மேகங்களிலும் இருப்பது ஆச்சர்யமாக இருக்கும்! இதோ பாருங்கள்! ஏதோ சாடிலைட் படம் போல் தோன்றும் இக்காட்சி தரையில் நீர் உறையும் போது வருகிறது. இதுதான் எங்கள் வளைகுடா. ஸ்பேஸ் சட்டிலில் எடுத்தது என்றால் நீங்கள் நம்பத்தான் போகிறீர்கள்!அதே போல் கியோத்தோ (ஜப்பான்) போனால் அங்கொரு மிக அழகான ஜப்பானிஸ் கார்டன் இருக்கிறது. அங்குள்ள ஒரு மாளிகையில் மணல் கொண்டு கடல் வரைந்திருப்பார்கள். சின்னச் சின்ன மலைகள் கூட அங்குண்டு. அது போன்ற ஒரு காட்சி என் கேமிராவிற்குக் கிடைத்தது. இதைப்பார்ப்பது, இதைப்படமெடுப்பது இரண்டுமே ஜென் அனுபவங்கள். நீங்களும் அனுபவியுங்கள்!

போத்திக்கிட்டும் படுத்துக்கலாம், படுத்துக்கிட்டும் போத்திக்கலாம்!

தென்கொரியத் தலைநகரான 'சோல்' (Seoul) பல அதிசயங்களை உள்ளிருத்தி வைத்துள்ளது.

ஐரோப்பாவில் வாழ்ந்துவிட்டு தூரக்கிழக்கு நாடுகளுக்கு வந்தவுடன் முதலில் மகிழ்ச்சியளிப்பது சாப்பிடப்போனால் குடிக்கத்தண்ணீர் கொடுப்பது! என்னடா அல்பமான விஷயம் என்று சொல்கிறீர்களா? நீங்கள் ஐரோப்பிய சாப்பாட்டுக்கடைகளுக்குப் போனதில்லை என்று பொருள். தண்ணிக்குக் காசு கொடுத்தே போண்டியான ஆட்களெல்லாம் அங்குண்டு. அங்கு இக்கடைகள் காசு பண்ணுவதே இப்படித் தண்ணிக்கு காசுவாங்கியே என்றால் ஆச்சர்யப்படாதீர்கள்! சொட்டுச்சொட்டாய் தண்ணீர் குடித்து சாப்பாட்டை முடிக்கும் ஆயிரம் ஜெர்மானியரை என்னால் காட்டமுடியும். பாவம், அவர்கள் சாப்பாடு அவ்வளவு உரப்பாய் இருக்காது. இந்தியச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு அவர்கள் வேர்த்துத் தவிப்பது வேடிக்கை (அண்ணே! நாம சாப்பிட்டாலும் இதே கதிதான். வீட்டுத்தண்ணியை உள்ளே விட மாட்டார்கள் :-)

சோல் நகரில் 'கிம்சி' சாப்பிட்டு தவிக்கும் ஆசாமிகளுக்கு ஆறுதல் இந்தப்பச்சைத் தண்ணீர்தான்! அதுவுமில்லையென்றால் பொறையேறியே செத்துப்போவான்! எங்கே போனாலும், எதைச்சாப்பிட்டாலும் கிம்சி இல்லாத சாப்பாடுகிடையாது. கொல்டிகளெல்லாம் இவன்கிட்ட பிச்சை வாங்கணும். அப்பாடி! என்ன உரப்பு!

சோல் நகரில் அடுத்து இலவசமாகக்கிடைப்பது 'இண்டர்நெட்' என்றால் நம்புவீர்களா? நம்புங்கள். Coex Complex என்னும் பெரிய மால் (இது திருமால் இல்லை :-) அங்கே சுத்திக் கொண்டிருக்கும் போது தொலைபேசி, இண்டர்னெட் இரண்டும் கலந்த ஒரு ஒட்டுப்பொறி இருந்தது. சும்மா போய் நம்ம நந்து அதிலே வரானான்னு பாத்தேன்! வந்துட்டான்! உலகின் ஏதோ மூலையில், ஏதோவொரு கொரியப்பொறியில் தமிழ் தெரிவது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது!இந்தக்கொரியர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் விளையாட்டெல்லாம் வெறும் விளையாட்டில்லை! அட, ஆமாங்க! இரண்டு பயலுக கணினி முன்னால பிளே ஸ்டேஷன் விளையாடறத ஒரு கூட்டமே ஒக்காந்து பாத்துக்கிட்டு இருக்கு. அது மட்டுமில்ல, இந்த மாலில் எங்கு பாத்தாலும் இந்த விளையாட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது! இந்த மனோநிலை எனது ஆய்வகத்திலும் பிரதிபலிப்பது அதிசயமில்லைதானே! மத்தியானம் நாலு பேர் சேர்ந்து கொண்டு இப்படி கணினி விளையாட்டு ஒரு மணி நேரமாவது விளையாடுகிறார்கள். எந்த நேரத்தில் எது கேட்டாலும் அவர்கள் காதில் விழாது :-)எதிர்காலத்தை கோடிகாட்டிக் கொண்டு அங்கு பல விஷயங்கள் நடக்கின்றன. ஒரு மூலையில் எந்தவிதமான விசிடியும் வாங்கிக் கொண்டு படம் பார்த்துக்கொண்டிருக்கலாம். மேலே மெகா சினி காம்ப்ளக்ஸ். "மோதிரமாமா" படம் வந்தாச்சு. மூணாவது எபிசோடு. அதாங்க Return of the King - Lord of the Rings! ஒரு மூலையில் ஒரு இளம் ஜோடி கையடக்க கணினியில் தனியாக படம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு மூலையில் அடைபட்ட அறைக்குள் ஒரு பெண் டிரம்ஸை போடு போடென்று போட்டுக்கொண்டிருக்கிறது. கணினியில் படத்துடன் பாடம் நடந்து கொண்டிருக்கிறது!நான் கேனடாவிலுள்ள எட்மண்டன் போன போது உலகின் மிகப்பெரிய குகை நகரம் அங்குதான் இருக்கிறது என்றார்கள். சூரிய வெளிச்சமே பட வேண்டாமாம்! எல்லாமே பூமிக்கடியில் கிடைக்கிறது. இந்த மாலிலும் எல்லாம் கிடைக்கிறது. நகர கலாச்சாரம் நிஜத்தைவிட நகல்நிஜத்தை நோக்கி மெல்ல, மெல்ல நடந்து கொண்டிருக்கிறது. நீங்களெல்லாம் எனக்கு நகல் நிஜம்தாங்க :-)நான் இத்தனை காலம் வாழ்ந்த கீல் நகரில் (ஜெர்மனி) ஐஸ்கிரீம் வாங்க கியூ வரிசையிலே (இரட்டைக்கிளவி:-) நிற்பது கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். (அதுக்கு மேல ஒசத்தியா நீங்க ஐஸ்கிரீம் காமிச்சுட்டா, மீசையை எடுத்துக்கிறேன்!) இங்க என்னடான்னா ஜெர்மன் ஹாம்பர்க் கடைக்கு முன்னால மணிக்கணக்கா காத்துக்கிடக்குற பசங்களை இப்பதான் பாத்தேன்!

உலகம் ரொம்ப மாறிக்கிட்டே வருதுங்க! அந்தக்காலத்துலே மதுரை வீதிகளில் "என்னாங்க இருக்கு?" அப்படின்னு ஒரு கேள்வி போட்டு, அதுக்குக் கீழே "இட்லிங்க" அப்படின்னு அறிவிப்பு இருக்கும். இரண்டு இட்லிக்குக்கூட பத்துவகை சட்னி உண்டு. அங்கே கூட இப்படிக் குயூ வரிசை கிடையாதுங்க!

வைகைக்கரை காற்றே!......022


பத்ம நிலையத்திற்கு பாட்டு வாத்தியார் வந்து கர்நாடக சங்கீதம் கற்றுத்தருவதற்குள் நந்து செய்த சேட்டையால் டியூஷன் வாத்தியார் வந்ததில் கோகிலத்திற்கு ரொம்ப வருத்தம். அவள் கவலையெல்லாம் இவன் மூதாதையர் போல் இவனும் தர்பப்புல்லைத்தூக்கிக்கொண்டு மற்றவர்க்கு கர்மம் பண்ணப் போய்விடுவானோ என்பதுதான். இவனது பெரியப்பா ஜோஸ்யர், இவன் சித்தப்பா ஜோஸ்யர். உறவெல்லாம் ஒண்ணு சங்கீதக்காராள இருப்பா இல்லாட்டி ஜோஸ்யரா இருப்பா. போறும், போறும் என்று ஆகியிருந்தது கோகிலத்திற்கு. அவள் பாரதியின் வாக்கிற்கு கட்டுப்பட்டிருந்தாள். ஆயிரம் புண்ணியம் செய்வதை விட தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தந்துவிட வேண்டுமென்பதில் அவள் கவனமாக இருந்தாள். தனது தாத்தா மதுரையில் மிகப்பெரிய வக்கீல். அது மாதிரி இவன் வர வேண்டாமோ? இவன் பன்னிக்குட்டியின் அழகைப் பார்பதிலும், கன்னுக்குட்டியின் கழுத்தைத் தடவிக்கொண்டு இருப்பதிலும் காலத்தைக் கழித்து விடுவான் போலருக்கிறதே என்பதே கோகிலத்தின் கவலை. அவள் கவலைப் படுவதற்குக் காரணமிருந்தது.

பத்மாவை பள்ளிக்கு அனுப்பினாள். அது கொஞ்சம் பயந்த ஸ்வாபம். ஐந்தாவது தாண்டுவதற்குள் ஏதோ காவலிப்பய கையைப் புடிச்சு இழுத்தானுட்டு பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று விட்டது. பங்கஜத்தை படிக்க வைக்க முடியாமல் போய் விட்டது. இந்தக் கமலாவிற்கு எவ்வளவு சொல்லியாகிவிட்டது? இன்னும் எஸ்.எஸ்.எல்.சி தேறமாட்டேன் என்கிறாளே! எவ்வளவு செலவு, ஒவ்வொருமுறையும் பரிட்சைக்கு பணம் கட்ட வேண்டியது. சாதத்தைக் கட்டி மானாமதுரைக்கு பரிட்சை எழுத அனுப்ப வேண்டியது. பரிட்சை முடிவு வந்தா இவ பேரு மட்டும் இருக்காது. இவளுக்கு போட்டி போட்டுண்டு அம்மாஞ்சி பிள்ளை கிச்சாம்பி வேறு!

அந்த ஊர் கல்விக்குப் பேர் பெற்ற ஊர் என்றெல்லாம் பொய் சொல்லக்கூடாது. ஆகா, ஓகோ என்றால் வீச்சருவாளை எடுக்கிற ஊரு. தேவமாரு நிரம்பிய ஊரு. திருப்பாச்சேத்தி அருவான்னா வட்டாரமே அலறும். வாரத்திற்கு ஒரு குத்து, வெட்டு நிகழும். முரட்டுப் பசங்க ஊரு. இந்த ஊரில் இருந்து கொண்டு குழந்தைகளை படிக்க வைப்பது கடினம். பிராமணனா பிறந்து வெட்டி, குத்துன்னு தேவராப் போன பசங்கள் அந்த அக்கிரஹாரத்தில் உண்டு. அந்தப் பசங்க சங்காத்தமெல்லாம் புதூரில்தான் இருக்கும். நல்லவேளை அக்கிரஹாரத்திற்கு அவர்கள் அதிகமாக வருவதில்லை. பெரிய கவியரசர்கள் அந்த மண்ணில் பிறந்ததில்லை. கம்பன் கூட ஊரெல்லாம் பட்டி, தொட்டி என்று பாடிவிட்டுப் போயிருப்பதாக தமிழ் வாத்தியார்கள் சொல்லுவார்கள். அந்த ஊரில் எஸ்.எஸ்.எல்.சி தாண்டுவது இமயமலையில் ஏறுவதற்குச் சமம்!

நந்து எஸ்.எஸ்.எல்.சி வரை தேறுவானோ?

அண்ணா கிணத்தில் போடப்போன பிறகு நந்து "கஷ்டபட்டு" படித்தான். நாலாவது வரை பாசாகிவிட்டான். ஐந்தாவது! அந்த ஊரில் அதுவரை பெரிய பள்ளி கிடையாது. பெரிய பரிட்சை (எஸ்.எஸ்.எல்.சி) எழுத மானாமதுரைக்குப் போக வேண்டும். ஆனால் நந்துவின் துரதிர்ஷ்டம் இவன் ஐந்தாவது வரும் போது அந்த ஊருக்கு ஒரு பெரிய பள்ளி வந்து விட்டது. ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை உள்ளூரிலேயே படிக்கலாம். ஆனால், ஆறாம் வகுப்பு போகு முன் ஆங்கிலப்பாடம் உண்டு. எனவே அதற்கு தயார் பண்ணும் வகையில் ஐந்தாவது படிக்கும் பசங்களுக்கு இலவச ஆங்கில வகுப்புகளை ஆரம்பித்தனர்.

ஒரு மாதமாகியும் ஒரு பய பெயரைப்பதிவு செய்யவில்லை. இந்தத்திட்டம் தோல்வியுறும் என்று தோன்றியதுபோது நிர்வாகம் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டது! அதுதான் படிக்க வரும் பசங்களுக்கு பாடத்தோட ஒரு லட்டும், காராப்பூந்தியும் தரப்படும் என்னும் திட்டம். இது மாணவர்களிடம் கொஞ்சம் அசைவைக் காண்பித்தது. நந்துவிற்கு ஆங்கிலப் பாடத்தை விட உச்சிக்குடுமி ஐயர் கடை லட்டும், காராப்பூந்தியும் அதிகம் கவர்ந்தது. நந்து வாழ்வில் முதல் முறையாக ஆங்கிலம் கற்றுக் கொள்ளத்தொடங்கினான்!

நேற்றைய தகவல் பலகையில் தமிழ் வார்ப்பிற்கான குறியீடுகளை இட மறந்துவிட்டேன். முதல்ல யாராவது வந்து பாக்கட்டும்ன்னு இருந்தேன். காசி வந்தார். கண்டு பிடித்தார். இப்போ தாராளமா நீங்க தமிழில் அறிவிப்பு கொடுக்கலாம். எது சுவாரசியமாக இருந்தாலும் கொடுங்கள், சங்கோஜப்படாமல் :-) ( கையிலே சாட்டையிருக்கிற தைர்யம் :-)

அப்புறம் ஒரு விஷயம். நாளையிலிருந்து என் மடலுக்கு ஒரு வார விடுமுறை. நான் ஊரில் இருக்க மாட்டேன். நீங்க நான் இல்லாமல் கொட்டமடிக்கமுடியும் என் மடலில். அது தெரிந்ததுதானே என்கிறீர்களா?

காலையில் ராகா டாட் கம் போய் சித்ரா பாடிய 'கண்ணன் பாட்டு' போட்டுக் கேட்டேன். தேர்ந்தெடுத்த பாடல்கள். ஆனா, சித்ரா குரல் மாதிரியே இல்லை. மறுபடியும் கேட்கணும். 'ஜெகதோதாரண' என்று எல்லோரும் பாடுகிறார்கள். அது "ஜெகத் உத்தாரண" என்று ஸ்பஷ்ட்டமாக இருக்க வேண்டும். உலகை வராக அவதாரத்தில் உத்தாரணம் செய்தவன் பரந்தாமன். அதுவுமில்லாமல் காக்கும் கடவுள் கண்ணன், அதையும் இது குறிக்கும். மேலும் பூமா தேவியின் மணாளன், இதற்கு அப்படியும் ஒரு பொருள் தரலாம். நல்ல பாடல்கள். சும்மா இந்த ஐயோ அப்பா! ஐயப்பா! என்று கத்துவதைக் கேட்காமல் இப்படிக் கீர்த்தனங்களைக் கேளுங்கள். காது நன்றி சொல்லும்.

டிசம்பர் சீசன் ஆரம்பிச்சுடும். நம்ம வலைப்பூவிலே அடுத்த ஆசாமியை கொஞ்சம் சங்கீதம் தெரிந்தவராப் போட்டா நன்றாக இருக்கும். பத்ரி கவர் பண்ணுவாரா?

சில நாட்கள் ஒன்றுமே தோன்றமாட்டேன் என்கிறது. சில நாள் கொட்டோ கொட்டு என்று கொட்டி தூக்கத்தைக் கெடுக்கிறது. இதற்கு ஏதாவது ஒரு வழி பண்ணனும். இனிமே பாலாஜி மாதிரி நானும் சின்னச் சின்னதாய் நடை பழகப் போகிறேன். சண்டியர் பாட்டுக் கேட்டேன். சூப்பராக வந்திருக்கிறது. கமல் ஹாலிவுட் கதைகளை காப்பியடித்தாலும் அவர்களையும் விடக் கூடுதல் திறமை இந்தத் தமிழனிடம் இருக்கிறது. வயது ஆக, ஆக குரல் வளம் ஏறுகிறது. இளையராஜாவுக்கும் கமலுக்கும் அப்படியொரு பொருத்தம் (இரண்டும் அபஸ்வரம்வர கிட்டப் போய்ட்டு தப்பிச்சு ஓடி வந்துடற குரல் என்பது மட்டும் காரணமல்ல:-)

Kamban Vizha in Switzerland

காலம் : மார்கழி 25, 26, 27, 28 ம் திகதிகளில்

நேரம் பிற்பகல் 15.30

இடம் "SONNEN SAAL" Adliswil, Switzerland (Adliswil Migros க்கு அருகாமையில்)

நிகழ்ச்சிகள்:

பட்டிமன்றம், வழக்காடுமன்றம்,கருத்தரங்கம்
சுழலும் சொற்போhடி, கவியரங்கம்
பரதநாட்டியம், சிறுவாடி நிகழ்ச்சிகள்
இன்னும் பல

பங்கேற்கும் அறிஞர்கள்

"நாவுக்கரசர்" பேராசிரியர் சோ.சத்தியசீலன், (இந்தியா)
"கம்பவாரிதி"இ.ஜெயராஜ், (இலங்கை)
"இலக்கியச்சுடாடி" த.இராமலிங்கம், (இந்தியா)
திரு.ஸ்ரீபிரசாந்தன் (இலங்கை),
செஞ்சொற்செல்வர் .இரா.செல்வவடிவேல் (இலங்கை)
"கம்பகாவலர்" வழக்கறிஞர் தி.முருகேசன், (இந்தியா)
திரு.கி.கலியாணசுந்தரம் (இந்தியா),
சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக்குருக்கள் (இலங்கை)
திரு.முத்துக்கருப்பன் முதலியார் (இந்தியா)

இவார்களுடன் சுவிஸ்,ஜேர்மனி,பிரான்ஸ்,அவுஸ்ரேலியா,இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களும், திருக்கோணஸ்வர நடனாலய மாணவிகளும், முருகானந்தா தமிழ்ப்பாடசாலை மாணவார்களும் இணைந்து வழங்கும் தமிழ்விழா

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்
சுவிஸ் கம்பன் கழகம்

மேலதிக தொடார்புகளுக்கு: 079 4094215 அல்லது 076 5403277

பிரவேசம் இலவசம்

Unicode Tamil Blogs - Problems and Solution

ரொம்ப நாளாகவே Tamil Bloggers List-லுள்ள அனைத்துப் பதிவுத்தடங்களுக்கும் போய் வர வேண்டுமென்று ஆசை. அது இப்போதுதான் நிறைவேறியது. போனால்தான் தெரிகிறது 33 விழுக்காடு பதிவுகள்தான் காணக் கிடைக்கிறது என்று. எல்லோரும் உபயோகிக்கும் விண்டோஸ் இயங்கு தளத்திலேயே இந்தப் பிரச்சனை. மெக்கிண்டாஷ், யுனிக்ஸ், லைனக்ஸ் பற்றிச் சொல்லவே வேண்டாம்!

விண்டோஸில் இயங்கும் 98, எம்.இ, நெட், மற்றும் எக்ஸ்பி இவைகளில் யுனிகோட் ரெண்டரிங் வித்தியாசமாக உள்ளதே இதற்குக்காரணம். எனக்குத்தோன்றும் இரண்டு யோசனைகளைக் கீழே தருகிறேன், அது பிரச்சனைகளைத் தீர்த்துவிடும்.

1. எல்லோரும் யுனிகோட் இயங்கு வார்ப்பிற்குப் போய் விடுங்கள். உமர் என்னும் தமிழ்த்தொண்டன் இலவசமாக இதை உருவாக்கித் தந்துள்ளார். இதை எப்படி உள்ளிடுவது என்று கே.வி.ராஜா மிகத்தெளிவாக விளக்கியுள்ளார். படித்துப் பயன் பெருங்கள்.

2. முரசு அஞ்சல் என்னும் செயலியை இறக்கிக் கொண்டால் பின் வரும் குறிகளை இடுவதன் மூலம் யுனிகோட் தமிழை எழுதி, மற்றவரை வாசிக்கச் செய்ய முடியும். எங்கெல்லாம் தமிழ் தெரிய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அங்கெல்லாம் இந்த வார்ப்புக் குறியீடை இடவும். அவ்வளவுதான்.

<font face="TSCu_InaiMathi,Latha,TheneeUniTx">
</font>

இந்த உள்ளூட்டம் Template - ல் செய்ய வேண்டியது.
<a name="<$BlogItemNumber$>
<$BlogItemBody$>

பின்னூட்டத்தில் தமிழ் எப்படி வரவழைக்கலாமென்பதை சந்திரமதியிடம் தெரிந்து கொள்ளுங்கள்.

உமர் தேனீ, முத்துவின் முரசு அஞ்சல் இரண்டுமே தஸ்கி 1.7, யுனிகோட் இரண்டையும் இணைத்து வாசிக்கும் திறன் உள்ளதால் இதுவே நமக்குத் தீர்வு!

வலைப்பூ வாசம் டிசம்பர் 6ம் தேதியுடன் முடிகிறது. மொத்தம் 12 உள்ளிடுகை, 107 பின்னூட்டம் (எங்கள் நேரம் மாலை டிசம்பர் 7, 16:46 வரை) என்றளவில் அது பூர்த்தியாகியிருக்கிறது. ஒரு வாரத்திற்கு கொஞ்சம் கூடுதல்தான். ஆனாலும் நண்பர்கள் தந்த உற்சாகம் என்னைக் கண் விழித்து எழுத வைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி.

முடிக்கும் முன், எந்தெந்த வலைப்பூ என் கணினியில் தெரியவில்லை என்பதைப் பட்டியலிடச் சொல்லியுள்ளார்கள். இதோ..அடியேன்...

I need to tell you guys something. Don't ask about Macintosh. Nothing, obsolutely nothing is visible in Mac under MAC OS X. Tamil with TSCII 1.7 and Unicode is total failure in new Mac operating system. I've been pleading for ages to consider Mac if Tamil development needs to grow. No body pays a heed. 60% of all the best websites in the world are created using Mac. If Apple closes its production tomorrow the Hollywood will be the worst sufferer. Mac will stay and we need to consider this fact.

My system configuration: Windows XP - Home edition (updated regularly) in Fujitsu C series Laptop). User Defined to TSCu_InaiMathi. But Unicode selection occurs automatically with most of the Tamil Blogs ( I need not set the view for UTF-8)

Result: YES=28/84 (33%)

A
Abedheen - Letters - Yes, with manipulation
Abedheen - Kadhai - Yes, with manipulation
Amala Singh - eNNa alaihaL - No
Amala Singh - Ms.Shirin Ebadi - No
Aruna Srinivasan - Alaigal - No

B
Badri Seshadri - Thoughts in Tamil - Yes, no problem
Bala Subra - Tamil Scribblings - No
Balaji - Balaji's Weblog- No
Balaji -urumi mElam - Yes, no problem

C
Chandra Ravindhran - Nizhalkal - NO
Chandralekha - Uyirppu -YES, no problem.
Chandravathanaa - Mahalir - NO
Chandravathanaa - Manaosai - NO
Chandravathanaa - Maaveerarkal- NO
Chandravathanaa - Padiththavai- NO
Chandravathanaa - Pennkal- NO
Chandravathanaa - Rehabilitation- NO
Chandravathanaa - Sammlung - NO

E
Elango - Literature - NO

H

Haran Prasanna - Nizhalkal: en mara nizhalil - NO
Hari - eNNangal - NO

I

Idlyvadai - Idlyvadai Tamil Blog - YES, no problem
Ilaignan - Kolam - Blog Templates in Tamil - NO
Inhbg - Parichchai - NO
Iraama.Ki. - vaLavu - iraamakiyin valaiulakku - NO

J
Jyothiramalingam - Kavithaigal -NO
Jyothiramalingam - Tamil Poems - NO

K

Kannan (Naa Kannan, Germany) - E(n)-Madal - YES, no problem
Kannan (Naa Kannan, Germany) - K's world - YES, no problem
Kannan (Naa Kannan, Germany) - Pasuramadal - YES, no problem
Kannan (Naa Kannan, Germany) - Poems in Focus - YES, no problem
Kannan Parthasarathy - Valai Mottuhal - NO
Karavaiparanee - Poo Manasu - NO
Karthik - South Indian History/Historical Novels- NO
Karthikeyan - Karthik's Nothing but Blogs - NO
Karunaharamoorthy - Thamizhkudil - NO
Kasi Arumugam - Chitthoorkkaaranin Chinthanaich chitharalhal - YES, no problem
Kumar M.K. - nenjin alaikaL - NO
Kuruvikal - Science News - NO

M

Maalan - Tamil blog - NO (horrible, visible in hexa decimal)
Mani Manivannan - kuRaL vazhi - - Yes, No problem
Mathy Kandasamy - M o v i e T a l k - - Yes, No problem
Mathy Kandasamy - M u s i n g s - - Yes, No problem
Meenakshisankar - Kahlil Gibran kavithai inbam - NO
Meenakshisankar - Meenaks' Musings - NO
Meenakshisankar - Thirai Vimarsanam - NO
Meyyappan - Enathu Paarvai.. - - Yes, No problem
Mullai - Kurinchi - NO
Muthu - Muthu Valaippoo - NO

N

Nalayini - Nanguram - NO
Navan - Navan's Weblog - NO

P

Parimelazhagar - Valaikirukkal - - Yes, No problem
Pavithra Srinivasan - Shangri-La - - Yes, No problem
Perinpam - Perinpamweb - NO

R

Raghavan - manathukkaNN - - NO
Raja K.V. - KVR Padaippukal - Yes, No problem
Rajhan - Thodar Kathai- NO
Rajmu - Rajmu Pakkam - NO
Rajni Ramki - Rajni Ramki - NO
Ramani - Silandhi Valai - - Yes, No problem
Ramanitharan - Aging Wanderer's Raging Rambles - NO
Ramanitharan - Eelam Literature & Arts Archives -NO
Ramanitharan - Eezhaththu Wandering Acrobat's Rambling Scribbles - NO
Ravi Srinivas - Rhizomes & Nodes - NO

S

Sabanayagam V - Ninaivuththadangal - Yes, No problem
Shankar - Suvadu - Yes, No problem
Saravanan M.K. - MKS Diary - NO
Selvaraj - en eNNak kirukkalhal - Yes, No problem
Siddhu - Tamil Blog - NO
Suba - Subaillam: Malaysia in Focus - - Yes, No problem
Suba - Subaonline - Suba's Musings - - Yes, No problem
Suba - Subaonline:Germany in Focus - Yes, No problem
Sundaravadivel - Sundaravadivel - NO
Suratha - Aayutham - Tamil seiyalihalin aayutha aNivahuppu - - Yes, No problem

T

Tamilhaiku - Tamil Haiku - NO
Tamil-Lit - Tamil ilakkiya Virunthu - Yes, No problem
Thangamani - E(n)-Murasu - Yes, No problem
Theedchanyan - Kavithaihal - NO

U

Udhayachelvi - En KavithaigaL - - Yes, with manipulation
Umar - Thendral - - Yes, No problem

V

Vassan Pillai - KoLLidam - NO
Venkataramanan - oru naadodiyin vadathuruva valaikkurippuhal - NO
Vinobha Karthik - Parisal - Yes, No problem

Y

Yarl Suthakar - Pathil - Yes, No problem

Patch Adams (1998)நேற்று வலைப்பூவில் எழுதும் போது "பக்குவப்பட்டவனுக்கு பட்டுப்பூச்சியும் ஞானஸ்னானமளிக்கும்" என்று ஒரு வசனம் வந்து விழுந்தது. அதன் பொருள் மாலையில் தொலைக்காட்சியில் ராபின் வில்லியம்ஸ் நடித்த "பேட்ஜ் ஆடம்ஸ்" படம் பார்த்தபோது புரிந்தது. கதாநாயகி மோனிக்கா போட்டர் அழகான பெண். கதையில் அவள் ஆண்களால் சிறுவயது முதல் கவரப்படுகிறாள். ஏதோ அசம்பாவிதம் நிகழ அவள் ஆண்களையே வெறுக்கிறாள் அல்லது சந்தேகத்துடன் பார்க்கிறாள். அவள் சொல்லுவாள் எனக்கு கம்பளிப்புழுக்களைப் பிடிக்காது, அவை அருவருப்பானவை ஆனால் அவையே பட்டுப்பூச்சியாக உருமாறும் போது விடுதலையின் படிமமாகிறது என்று. இதுதான் நான் சொல்லவந்த ஞானஸ்னானம் போலும்!இது ஒரு உண்மைக்கதை. ஹண்டர் ஆடம்ஸ் என்ற மருத்துவரின் உண்மைக்கதை. வைத்தியம் என்பது நோய்க்கு மட்டும் மருத்துவம் பார்ப்பதல்ல. ஆனால் நோயாளிக்கும் சேர்த்து என்பது இவர் கருத்து. எனவே கல, கலவெனப்பேசி, சில நேரங்களில் கோமாளித்தனமான சேஷ்டைகள் செய்தும் நோயாளிகளை மகிழ்ச்சியூட்டுவார். மேலைத்தைய மருத்துமனையில் நோயாளி ஒரு சோதனைப் பொருள். பெரிய டாக்டர்கள் ரவுண்ட் வரும் போது நோயாளி முக்கியமல்ல. அவன்/அவள் நோயே முக்கியம். எனவே நோயாளிகளை ஒரு ஜடம் போல் பார்ப்பர். இதை மாற்றி அவர்களுடன் பேசி அவர்களுக்கு உதவவேண்டும் என்பது ஆடம்ஸ்ஸின் நோக்கு. இவர் 60 களில் அமெரிக்க விர்ஜினியாப்பகுதியில் படித்திருக்கிறார். இப்போது மருத்துவம் சொல்கிறது நோய்க்கு காரணி கிருமி மட்டுமல்ல நமது மனநிலையுமென்று (psychosomatic). இவர் நோயாளியை முழுமையாய் குணமாக்க வேண்டுமென்கிறார்.மனித இனம் ஒன்றில்தான் தன் இனத்தையே கொன்று குவிக்கும் போக்கு உள்ளது என்று இறைவனிடம் முறையிடுகிறார். எல்லோரும் எல்லோருக்கும் அனுசரணையாக இருந்து, ஒருவர் குறையை மற்றவர் செவிமடுத்தாலே பாதி நோய் போய்விடும் என்பது இவர் கருத்து. எனவே அடிப்படையாக மனிதர்கள் ஒருவரையொருவர் நம்ப வேண்டும், அன்பு செய்ய வேண்டும் என்கிறார். மோனிகா போட்டரிடம் இருந்த சந்தேகத்தன்மையை மாற்றி அவளை மானுடத்தின் மீது நம்பிக்கை வைக்கச் செய்த காலக்கட்டத்தில் அங்கு வரும் ஒரு நோயாளியால் அவள் கொல்லப்படுகிறாள். அப்போதுதான் அவர் இறைவனிடம் மன்றாடுகிறார். ஏன் இப்படி மனிதனைப் படைத்தாயென்று. ஜேகே, புத்தர் இவர்களது வாழ்வு, உபதேசங்களைப் பார்த்தால் ஒன்று புரியும். அன்பு தனது வெகுளியினால் பாதுகாப்பற்ற ஒரு நிலையில்தான் உள்ளது. ஆனால், சாவைக்கண்டு பயந்தால் அன்பு செய்யவே முடியாது என்பதும் இப்படத்தின் உட்பொருள். இறப்பிலிருந்து மனிதனை மீட்பதைவிட அவன் வாழும்போது அவன் வாழ்வு நிலையை மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பது முக்கியம் என்பதும் கருத்து. சாவு என்பது நிரந்தரமானது, ஆனால் இடையில் வரும் வாழ்வு மகிழ்வானது, அல்லது அதை அப்படி மாற்ற வேண்டும் என்பது படம் தரும் பாடம்.

ராபின் வில்லியம்ஸ் படம். எனவே நிறைய காமெடி வருகிறது. சில இடங்களில் அபத்த நிலைக்குப் போகிறது. ஆனால் அபத்தம் பல நேரங்களில் மனிதனை அவனது இருப்புக்கவலைகளிலிருந்து விலக்கிவிடுகிறது என்பதும் உண்மை. அதிகமான முகமூடிகள், போலி வாழ்வு இல்லாமல் இருக்கும் போது அபத்தத்திற்கும் வாழ்வில் ஒரு இடமுண்டு!


Patch Adams raises two schools of thought: There are those who are inspired by the true story of a troubled man who finds happiness in helping others--a man set on changing the world and who may well accomplish the task. And then there are those who feel manipulated by this feel-good story, who want to smack the young medical student every time he begins his silly antics.

Staving off suicidal thoughts, Hunter Adams commits himself into a psychiatric ward, where he not only garners the nickname "Patch," but learns the joy in helping others. To this end, he decides to go to medical school, where he clashes with the staid conventions of the establishment as he attempts to inject humor and humanity into his treatment of the patients ("We need to start treating the patient as well as the disease," he declares throughout the film). Robin Williams, in the title role, is as charming as ever, although someone should tell him to broaden his range--the ever-cheerful do-gooder தூ la Good Will Hunting and Dead Poets Society is getting a little old.

வலைப்பூ வாசம்!

மதுரைக்காரர்களுக்கு கள்ளழகர் தனது யதாஸ்தானத்தைவிட்டு மதுரைவரை வந்து ஆற்றில் இறங்கித்திரும்பும் நிகழ்வு முக்கிதமானவொன்று. பெருமாள் சாவகாசமாக புறப்பட்டு வழியெங்குமுள்ள மண்டகப்படிகளில் தங்கி உபசாரங்களை ஏற்றுக் கொண்டு மதுரைக்கு வருவார். இப்படி பெருமாள் புறப்பட்டுப் போய்விட்டால் உள்ளூர்காரர்கள் என்ன செய்வார்கள் பெருமாள் இல்லாமல். ஒரு நெடியும் உனைப்பிரியேன் என்று இருப்பதுதானெ பக்தன் நிலை! இதற்காகத்தான் அந்தக்காலத்தில் மூலவர், உற்சவர் என்று இரண்டு வைத்தார்கள். உற்சவர் கிளம்பிப்போய்விட்டாலும் மூலவரை எப்போதும் போய் நாம் சேவிக்கமுடியும். இந்தத்தலைப்பில் சொல்ல நிறையக்கதைகள் உள்ளன. அது பின்.

என் மடலை விட்டு நான் வலைப்பூ வாசம் பார்க்கப்போனவுடன் என் மடல் வாசகர்கள் என்ன இடுகையே இல்லை என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்? உற்சவர் இல்லையெனினும் மூலவர் நித்ய பாராயணம் நிற்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.நியாயம்தானே!

நண்பர், கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு சன்ஸ்கிருதி பிரதிஷ்டான் விருது கிடைத்திருக்கிறது. சன்ஸ்கிருதி என்றால் 'the process of cultivating' என்று பொருள். பிரதிஷ்டானம் என்றால் அறக்கட்டளை/நிறுவனம் என்று பொருள். இது இளம் கலைஞர்களை இனம் கண்டு ஊக்குவிக்கும் விருது. முன்பு ஜெயமோகனுக்குக் கிடைத்திருக்கிறது. இவ்வருடம் மனுஷ்யபுத்திரனுக்குக் கிடைத்துள்ளது.மனுஷ்யபுத்திரன் மென்மேலும் சிறப்புற்று வளர எம் வாழ்த்துக்கள்.

வைகைக்கரை காற்றே!......021

நந்துவிற்கு பள்ளிக்கூடத்தில் நடப்பதைவிட வெளியே நடப்பதே சுவாரசியமாக இருந்தது. டீச்சர் பாட்டுக்கு ஏதோ சொல்லச் சொல்வார் வாய் சொல்லிக்கொண்டிருக்கும் கண்கள் வெளியே இருக்கும்.இந்தப் பன்றிகள் சுவாரசியமானவை. கருத்த முலைக்கூட்டுள்ள பன்றிகள். எப்போதும் அஞ்சாறு பன்றிகள் கூட்டமாகவே அலையும். மனிதர்களைக் கண்டு அவை பயம் கொள்வதில்லை. அவைகளைக் கண்டுதான் சனங்கள் பயப்பட்டனர். முக்கிய காரணம் பன்றிகளின் பழக்க வழக்கங்கள் அவ்வளவு நாகரீகமானவை அல்ல. காட்டில் இருந்தவரை கிழங்குகளை மட்டும் உண்டு வந்த ஒரு இனத்தை கிராமத்திற்குக் கொண்டு வந்து மனிதன் கெடுத்து விட்டான். அவை ஏதேதோ தின்ன ஆரம்பித்தன. குழந்தைகள் நிம்மதியாக வெளிக்குப் போகமுடியவில்லை. பின்னால் வந்து முட்டுவதுதான் தெரியும். குழந்தை மல்லாக்கக் கிடக்கும். பன்றி வேண்டியதை எடுத்துக் கொண்டிருக்கும். இதனால் குழந்தைகளை வெளியே கொண்டு வந்து உட்கார வைத்து விட்டு, பன்றியை விரட்டத் தாயாராகக் கம்புடன் தாய்மார்கள் நிற்பது கூட உண்டு. சின்னப் பன்றி சின்னப்பன்றியின் மீது ஏறும். அது ஓடும். வாண்டு என்பவையிலிருந்து, பருவ மங்கை, முதிர்ந்த மாது என்று பன்றிகளில் பலவகையுண்டு. முகத்தைப் பார்த்தாலே தெரியும். மனிதர்கள் போலவேதான் அவையும், ஆண் பன்றிகள் பெண் பன்றிகளை கணக்குப் பண்ணிக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் பன்றிகளின் முகத்தில் கூட நாணம் தெரிக்கும்.

பள்ளிக்குப் பெரிய சுவர் என்று கிடையாது. கதவு கிடையாது. நீண்ட கட்டப்பலகை போட்டிருக்கும். அதில் உட்கார்ந்து கொண்டு சிலேட்டுப் பலகையில் குச்சி வச்சு எழுத வேண்டும். குச்சியை தரையில் தேய்த்து கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். எனவே தரை முழுக்க குச்சித்தடம் பதிந்து இருக்கும். கடல் முள்ளம் பன்றியின் முட்களைக்கூட நந்து சிலேட்டுக் குச்சியாக பயன் படுத்தியிருக்கிறான். கொஞ்சம் எழுதிய பின் அது சிலெட்டில் கீறிவிடும். அதைப்பின் எடுக்கவே முடியாது. சண்டை வரும் போது பசங்கள் இந்தக் குச்சி கொண்டு சிலேட்டில் கண்ட மேனிக்கு கிறிக்கி வைத்து விடுவார்கள். அப்புறம் சிலேட்டில் எழுதுவது என்னவென்று புரியாததால் டீச்சர் அடிப்பார். டீச்சர் அடித்தால் பின் பள்ளிக்குச் செல்லப்பிடிக்காது. வயித்து வலின்னு சொல்லிட்டு டிமிக்கி கொடுக்கத்தோன்றும். கொல்லையில் உட்கார்ந்து கொண்டு ஓணான் என்ன செய்கிறது என்று பார்க்கலாம். ஆனால் இந்த ஓணான் சுவாரசியமே இல்லாத பிராணி. உக்காந்த மாதிரிக்கு கண்ணைக் கூடச் சிமிட்டாம ஒரு மணி நேரம் இருக்கும். அப்புறம் திடீருன்னு ஓடிப் போயிடும். பள்ளிக்குப் போனால் பன்றி பார்க்கலாம்.

நந்து நிறைய டிகிக்கி கொடுக்க ஆரம்பித்தான். டீச்சரே வந்து கூட்டிக்கொண்டு போன காலமுண்டு. 'நாளைக்கு நீதான் கடவுள் வாழ்த்துப் பாடணும்ன்னு சொல்லி 'பித்தாபிறை சூடிப் பெருமானே' என்று சொல்லிக்கொடுத்து பாடவைத்தாள். நந்து முதல் முறையாக பலருக்கு முன்னாலே பாடினான். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. டிராயர் கொஞ்சம் நனைந்திருந்தது. பாதிப்பாட்டு வந்திருப்பான், யார் வீட்டிலோ சேட்டை செய்த பன்றியை ஆவேசத்துடன் ஒரு அம்மா துரத்த பயந்து போன பன்றி அசெம்பிளிக்குள் வந்து விட்டது. காம்பவுண்டெல்லாம் அந்தக் கொரப்பள்ளிக்கு கிடையாதே. ஆளுக்காளு துரத்த அங்குமிங்கும் ஓடிய பன்றி கடைசியாக நந்துவை விழுத்தாட்டிவிட்டு ஓடி விட்டது. நந்துவின் டிராயரெல்லாம் சேர். காலில் சிராய்ப்பு. ஓ வென்று அழ ஆரம்பித்தான். பிறை சூடிய பெருமான் இவன் பாட்டை முடிப்பான் என்று காத்துக்கொண்டிருக்கும் போது (பின்னால் கோயில், மறக்க வேண்டாம்) பார்த்தால் நந்து பாட்டை 'அம்போ' என்று விட்டு விட்டு அழுது கொண்டிருந்தான். டீச்சர் கிட்டக்க வர, வர நந்துவிற்கு இந்த பள்ளி வாழ்வை விட்டு ஓடிவிட வேண்டுமென்று தோன்றியது. ஒரே ஓட்டம். நின்ற போது வீடு எதிரில் இருந்தது.

பங்கஜம்தான் இருந்தாள். "என்னடா ஆச்சு? கீழே விழுந்துட்டியா?" என்றாள். பன்றி மோதி விட்டது என்று சொல்ல வெட்கம். ஒரே ஓட்டமாக கிணத்துப்பக்கம் ஓடிவிட்டான். அம்மா குளித்துக் கொண்டிருந்தாள். இவனும் கூடப் போய் ஒட்டிக் கொண்டான். "சீ! என்னடா? சாக்கடை நாத்தம்? எங்கே விழுந்தே?" என்று இன்னும் ரெண்டு வைத்துவிட்டு அம்மா குளிப்பாட்டிவிட்டாள். "அம்மா! இனிமே நா பள்ளிக்கூடம் போமாட்டேன்" என்று முடிவாகச் சொல்லிவிட்டான் நந்து.

குளித்து முடித்து முத்ததிற்கு வரும் போது டீச்சர் இவனோட பையைத்தூக்கிகிட்டு வீட்டிற்கு வந்திருந்தாள். 'அம்மா, நந்துவை ஸ்கூலுக்கு வரச்சொல்லுங்க!" என்றாள். இவன் மீண்டும் ஓ வென்று அழ ஆரம்பித்தான். ஒண்ணும் புரியாத அம்மா, போனாப் போறது நாளைக்கு அனுப்பி வைக்கிறேன் என்றாள்.

டீச்சர் நந்துவைப் பார்த்து 'இப்படித்தினம் பண்ணினே! கால்லே கட்டை போட்டுத்தான் ஸ்கூலுக்கு வரணும்' என்று சொன்னாள். அந்த ஊரு ரொம்ப மோசம். சண்டி மாட்டுக்கும் கட்டை கட்டிவிடறாங்க. ஸ்கூலுப் பையன்களுக்கும் கட்டை கட்டிவிடறாங்க.

இதையெல்லாம் நினைத்து நந்துவிற்கு ஜுரம் வந்துவிட்டது. இதைச் சாக்கா வச்சு இன்னும் ரெண்டு நாளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டான்!

அண்ணா வரைக்கும் விஷயம் போய் விட்டது. "பேசாம இவனைப் பன்னி மேய்க்கவே அனுப்பியிருக்கலாம்" என்று அலுத்துக் கொண்டார். "குரப்பயலுகளோட போய் இருக்கயாடா?" என்றார். நந்துவிற்கு அவமானமாக இருந்தது.

ஒரு டியூஷன் வாத்தியார் வைத்து இவனைத் தேற்றலாமென முடிவானது. வாத்தியார் சாயந்தரமாக வீட்டிற்கு வருவார். வந்தவுடன் முதலில் அம்மாவிடம் குசலம் விசாரிப்பார். அதற்கு அர்த்தம் ஒரு காபி கிடைக்குமா என்பது. வாத்தியார் காபிக்கு அடிப்போடும் போதே நந்து கொல்லைப்புறம் நழுவி விடுவான். அவர் மெதுவாக காபி குடித்துவிட்டு வீட்டுப்பாடத்தை எடுக்கும் போது நந்து எங்கே என்று யாருக்கும் தெரியாது. தேடு, தேடு என்று தேடுவார்கள். யாரும் எதிர்பார்க்காத கக்கூஸில் போய் இவன் ஒளிந்து கொண்டிருப்பான். இப்படியே இவன் டியூஷனுக்கும் டிமிக்கி கொடுக்க ஆரம்பித்தவுடன் வீட்டில் சூடு ஏற ஆரம்பித்தது.

அம்மாவிற்கு தன் குழந்தைகள் படித்து முன்னேறவேண்டுமென்பதில் ரொம்ப கவனம். முதல் ரெண்டு பொண்ணுகளையும் படிக்கவில்லையே என்று இப்போது வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறாள். இதில் ஆம்பிளப்பையனா இருந்துட்டு இவன் படிக்கலைனா என்ன அர்த்தம்? 'நீங்களே இவனைத்தட்டிக் கேளுங்கோ! இவன் அப்பா செல்லம்தானே!' என்று பொறுப்பை அப்பாவிடம் தள்ளிவிட்டாள் கோகிலம்.

அண்ணா அலுத்துபோய் வந்திருந்தார் ஒரு மதியம். போன காரியம் சுபமில்லை. கடுப்பிலிருந்தார். அந்த நேரம் பாத்து நந்து பிரச்சனை வீட்டில் வந்தது. நாராயணன் கோபப்பட்டு யாரும் பார்த்ததில்லை. அலுத்துக் கோள்வார். சோர்வாக இருப்பார். ஆனால் கோபப்படமாட்டார். அன்று கோபப்பட்டார். நந்துவிற்கு அடி விழுந்தது மட்டுமல்ல. பன்றி மேய்க்கப்போற பயல் இந்த வீட்டில் இருக்கத்தேவையில்லை என்று குட்டி நந்துவைத்தூக்கிக் கொண்டு, கிணத்துப் பக்கம் போக ஆரம்பித்தார். அம்மாவிற்கே தூக்கி வாரிப்போட்டது. இது என்ன, விளையாட்டு விபரீதமாப் போயிடும் போலருக்கே என்று யோசிக்கும் முன்பு, சித்தி அண்ணா பின்னாலே ஓடிக் கொண்டிருந்தாள். "அத்திம்பேர், அத்திம்பேர் என்ன காரியம் செய்யப்போறேள். கண்ணே கண்ணு ஒண்ணே ஒண்ணுன்னு இத்தனை வருஷத்துக்கு அப்புறம் பையன் பொறந்திருக்கான். அவனைப் போய் கிணத்தில போடப்போறளே?".
அண்ணா கிணத்து மேட்டு மட்டும் போய்விட்டார். நந்து அவர் கைகளில் இருந்தான். கிணற்று நீர் தளும்பிக் கொண்டிருந்தது. அம்மா இரு பக்கம், பக்கத்து வீட்டு ராக்கு ஒரு பக்கம். ஒரே அமர்க்களம். "டேய் வாண்டு! இனிமே ஸ்கூலுக்கு டிமிக்கி கொடுத்தே, நிஜமாவே தூக்கிப் போட்டுவேன். இவா சொல்லறாளேன்னு விடறேன்" என்று கூறி இறக்கிவிட்டார்.

நந்து ஒரே ஓட்டமாக வெளியே ஓடி விட்டான். அவனுக்கென்னமோ அண்ணா நிஜமாக கிணத்தில் போடுவார் என்று தோன்றவில்லை.