தனது கொரியப் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக சுபா இன்று ஜெர்மனி திரும்புகிறார். கொரியாவே கண்ணீர் விடுவது போல் பனி நீர் தூவி வழியனுப்பியிருக்கிறது (பிளேன் கிளம்புறதைக் காட்டி விட்டு அப்பிடியே கேமிரா வானத்தைப் பாக்குது. ஓ! ன்னு அழறமாதிரி மழை 'ஜோ; ன்னு பேயுது! - நன்றி "காதலிக்க நேரமில்லை நாகேஷ் :-)

அவங்களை அனுப்பிச்சுட்டு நான் வீடு திரும்பும் போது இரவு 8 மணி. இன்னிக்கு இரவு எட்டு மணிக்கு அவங்களும் ஜெர்மனியில் வீட்டில் இருப்பார்கள். சுற்றும் பூமி வாழ்க. துரத்தும் விமானங்கள் வாழ்க.

நெஞ்சை அழுத்தும் வேலைகளிலிருந்து கொஞ்சம் மூச்சு வாங்க இங்கே வந்தார். கொரியா அவரை புதுப்பித்து அனுப்பியிருக்கிறது. ஓடற கால் சும்மா நிக்காது. இங்கே வந்து தமிழ் மரபு அறக்கட்டளைக்காக கொரியாவில் வித்திட்டுச் சென்றுள்ளார். நான் அறிந்து கொள்ளவிருந்த சில அரிய தமிழர்களை முன்னமே இனம் காண அவர் உதவியிருக்கிறார். இந்த வருடம் தமிழ் மரபு அறக்கட்டளை சில உச்சங்களை எட்டும் என்று பக்ஷி சொல்கிறது :-)இங்கிருந்த காலத்தில் முன்னமே மலேசியப் பயணத்தில் இலக்கப்பதிவாக்கியிருந்த சில நூற்களை புத்தாண்டுப் பரிசாக தமிழர்களுக்கு அளித்துவிட்டுப் போகிறார். தமிழர்கள் எமது வலையகம் சென்று இ-புக் எனும் சுட்டியில் தட்டினால் இதுவரை நாங்கள் வெளியிட்டுள்ள 20 புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் இவ்வருடம் இன்னும் பல புத்தகங்கள் வெளிவரும்.

0 பின்னூட்டங்கள்: