சென்றவாரக்கவிதைகள்

இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்றொரு முறைப்பாடு நண்பர்களிடமிருந்து வருகிறது. உண்மைதான் பழைய மும்முரம் குறைந்திருக்கிறது. வலைப்பூ என்றவள் அப்போது கன்னியாக இருந்தாள். ஒரு ஆர்வம் இருந்தது (இந்தக் குசும்புக்கு குறைச்சலில்லை:-)

ஆனால் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். பல்வேறு தளங்களில். புதிய பொறுப்புக்கள் வந்திருக்கின்றன.

எனது வலைப்பூ இப்போது இன்னும் கூடிய வாசகர்களுக்காக சமாச்சார் தளத்திற்கு இடம்பெயர்ந்திருக்கிறது. ஏழு கட்டுரைகள் வந்து விட்டன.

இ-சங்கமம் இதழில் என் படைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன

உயிரெழுத்தில் என் கவிதைகள் வந்து கொண்டிருக்கின்றன:

குஞ்சு வாயால்
எல்லைகள்

திண்ணையில் இனிமேல் எழுதலாமென்றிருக்கிறேன்...

பரிட்சயம்

உங்கள் பின்னூட்டங்களை அவ்வப்போது இடுங்கள். பூ தேடி வரும் தேனீ, கடையில் கிடைக்கும் தேனை விட ஒரு படி மேல்.

0 பின்னூட்டங்கள்: