Chandrothayam

சந்த்ரோதயம்

மூன்று நாட்களாக சந்திரோதயத்தைப் படமெடுத்து வருகிறேன். முந்தாநாள் கடற்கரையில் வெகுநேரம் காத்திருந்துவிட்டு அறையில் வந்து உடை களைந்து தூங்கப்போகும் முன் ஜன்னலுக்கு வெளியே சந்திரோதயம் ஆகியிருந்தது. அடுத்தநாள் எப்படியும் பிடித்துவிட வேண்டுமென கடற்கரைக்குப் போனபோது. இன்னும் தாமதமாகவே சந்திரோதயம் ஆனது. கண்ணன் படமெடுக்கப்போகிறான் என்பதற்காக சந்திரன் சீக்கிரம் வரவில்லை. கண்ணன் படுத்துக்கொண்டுவிட்டான் என்பதற்காக சந்திரோதயம் ஆகாமலில்லை!

வலைப்பதிவு என்பதும் அப்படியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. வாசகனுக்காக ஏங்கி எழுதி, பின்னூட்டம் இல்லையெனத் தளர்ந்துவிடக்கூடாது. எழுத்து, சந்திரோதயம் போல் ஒரு தியானம். நோக்கமற்ற ஒரு இயக்கம். உள்ளே வேர்விடும் மலர்கள் செடியாகி, மரமாகி, காய், கனியாகும் இயக்கம். மேலும், நமக்குள்ளே ஒரு வாசகன் ஏங்கிக்கொண்டு இருக்கிறான். அவனுக்காகவும் எழுதிப்பழகவேண்டும். சந்திரோதயம் அழகானது.

3 பின்னூட்டங்கள்:

ராஜா 6/07/2004 02:49:00 AM

சந்திரோதயத்தையும், பின்னூட்டங்களையும் இணைத்து நீங்கள் கூறியிருக்கும் இந்த கருத்து அருமையானது. பின்னூட்டமிடாமல் மௌனம் காக்கும் போக்கைப் பற்றி நான் இந்த வார வலைப்பூவில் எழுதியிருந்தேன். அதில் உங்களின் ஆதங்கங்களையும் குறிப்பிட்டிருந்தேன். அதை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

//நமக்குள்ளே ஒரு வாசகன் ஏங்கிக்கொண்டு இருக்கிறான். அவனுக்காகவும் எழுதிப்பழகவேண்டும். சந்திரோதயம் அழகானது//
என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது உங்கள் வார்த்தை. நன்றி!

- ராஜா
http://raja.yarl.net

Balaji-Paari 6/11/2004 05:59:00 PM

neengal sonna antha kadaisi vari niraivaaga ullathu.
nandrigal.

நா.கண்ணன் 6/11/2004 07:50:00 PM

அது எனக்காக எழுதிக் கொண்டது என்று நினைத்தேன். இல்லை அது தனக்கும் என்று ராஜா அவர்கள் 'வலைப்பூவில்' முன் வைத்தார். இப்போது நீங்களும் வழி மொழிகிறீர்கள். தொலைநோக்கில் இந்த வகையான மனோபாவமே வலைப்பதிவை காலூன்ற வைக்கும் என்று தோன்றுகிறது!