something to munch...

பேட்டி காண்க...

நீங்கள் வைகைறையில் எழுபவரா? ஜெயா டிவி பார்ப்பவரா? அப்படியெனில் வருகின்ற திங்கள் (ஆகஸ்டு 02) காலையில் காலைமலர் பாருங்கள்! பார்த்து எழுதுங்கள். நான் பார்க்கமுடியாது!

வருகின்ற வாரம் குமுதம் வாசியுங்கள். நான் வரலாம்!

இந்த வாரக்கடைசி தினமணிக்கதிர் 'நோட்டம்' வாசியுங்கள். சுகதேவ் பேட்டி எடுத்திருக்கிறார்.

3 பின்னூட்டங்கள்:

Chandravathanaa 8/12/2004 03:17:00 PM

நேற்று வெக்ரோன் தொலைக்காட்சியில் வந்தீர்கள்.
நான் தொலைக்காட்சிப் பிரியையாக இல்லாததால் அது பாட்டுக்கு இருந்து விட்டது.
எதேச்சையாகத் தட்டிய போது நா.கண்ணன் சிரிப்பு மாறாத குழந்தைத் தனத்தோடு
பேச்சு என்ற இறுக்கம் இல்லாது மிகச் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
ஆச்சரியம்தான். தாமதமாய்தான் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்ததால் மற்றவர்கள்
பேசியதையோ மற்றவர்கள் யாரென்ற அறிமுகத்தையோ அறிய வாய்ப்பில்லாது போய் விட்டது.
கூட இருந்தவர்களில் திசைகள் மாலனும் ஒருவரா?
இப்படியான ஒரு சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதுதான்
தமிழ் தொலைக்காட்சி என்ற ஒன்று இருப்பதையிட்டு நியமாக மகிழ்கிறேன்.

நட்புடன்
சந்திரவதனா

நா.கண்ணன் 8/14/2004 07:36:00 PM

அப்படியா! என்ன காண்பித்தார்கள் என்று எனக்கும் தெரியாது. எடுத்தது தெரியும். அது வரும் போது நான் இந்தியாவிலும் இல்லை, ஐரோப்பாவிலும் இல்லை.

விழா நிறைவாக நடந்தது. யாரும் எனக்கு எந்த வகையிலும் கடமைப்பட்டவர்கள் இல்லை என்பதனால் தங்கள் மனதிற்கு பட்டதை சொன்னார்கள். நான் ஒரு குழைந்தை போல் ரசித்துக்கொண்டிருந்தேன். அவர்களால் எனக்கு மீண்டுமொருமுறை சுய தரிசனம் கிடைத்தது. மேடையில் இருந்தவர்கள் (இடமிருந்து வலம்) வெங்கடேஷ், நா.க, இ.பா, மாலன், வைதீஸ்வரன், நரசய்யா.

கண்ணன்

Chandravathanaa 8/15/2004 05:54:00 AM

நன்றி கண்ணன்.

மறு ஒலிபரப்புச் செய்வார்கள் என்ற நம்பிக்கை.
அந்த அரிய சந்தர்ப்பம் கிடைத்தால் சரியாகப் பார்த்து விட்டு
எனது கருத்தையும் எழுதுகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா