Tamil Heritage Foundation joins Digital Library of India

கடல் சேரும் நதி

இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் கனவுத்திட்டமாக "இந்திய இலக்க நூலகம்" (Digital Library of India) உருவாகியுள்ளது. இதன் முகவரி http://www.dli.ernet.in/ என்பது.

இதை இந்தியாவின் பிரதான அறிவியல் நிறுவனமான இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) தனது Super Computer Facility-யின் மூலமாக கவனித்து வருகிறது.

இங்கு, அதாவது அவர்களின் சேவியில் (server) தமிழ் மரபு அறக்கடளைக்கு இடம் கிடைத்துள்ளது. இனிமேல் நாம் இடம் (server space) குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. முதற்படியாக 15 கிகாபைட் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. நமது சேர்ப்பிற்கு ஏற்றவாறு இந்த இட ஒதுக்கீடு விரியும்!

நதிகள் இறுதியில் கடல் சேர வேண்டும். கன்று பசுவிடம் வந்து சேர வேண்டும். தாயிடம் வந்த சேயின் உணர்வு வருகிறது. இப்போது.

இனிமேல் நமது பெரிய சேகரங்கள் கீழ்க்காணும் முகவரியில் காணக்கிடைக்கும்

http://bharani.dli.ernet.in/thf/index.html

பல அரிய சுவடிகள் இடநெருக்கடியால் பொதுமக்கள் பார்வைக்கு இதுவரை வைக்கப்படாமல் இருந்தன. அவை இனி வெளிப்படும்.

இன்று காலையில் ஜெர்மனியிலிருந்துகொண்டு இப்பக்கத்தை சோதித்த போது 98% சதவிகிதம் சரியாக வந்தது. சில இணைப்புகள் வேலை செய்யவில்லை. அவை சரிசெய்யப்படும்.

இத்தளத்தை யுனிகொட் தமிழில் அமைத்துள்ளேன். வார்ப்பு இறக்கமின்றி தெரியவேண்டும். முரசு அஞ்சல் பின்னால் ஓடினாலும் நன்றாக வரும். விண்டோ ஸ் எக்ஸ்பியில் சரியாக வரும். பிற கணினித்தளங்களில் எப்படி வருகிறது என்று சொல்லுங்கள்.

சான்றோர் வாழ்த்துங்கள். இது தமிழ் மரபுக் கட்டளைக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய மரியாதை.

3 பின்னூட்டங்கள்:

ராஜா 8/02/2004 01:23:00 AM

மிகவும் மகிழ்ச்சியான செய்தி :-)

முகப்பு பக்கத்துக்கான URL ஐ மட்டும் கொஞ்சம் சிறிதாக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. இப்போது .tk டொமைன்கள் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை பெற்று அறிவித்தால் (உம்: tamil-heritage.tk) அனைவருக்கும் நினைவில் வைத்துக் கொள்ளவும், அணுகவும் எளிதாக இருக்கும். இது எனக்கு தோன்றிய சிறு குறிப்பு மட்டுமே. பெரியவர்கள் பார்த்து என்ன முடிவு செய்தாலும் சரி :)

Badri 8/02/2004 11:25:00 AM

ராஜா: இதற்கென தனி 'சின்ன' சுட்டியெல்லாம் தேவையில்லை. டிஜிட்டல் லைப்ரரி ஆஃப் இந்தியா தரும் சுட்டி ஒன்றே போதும். பொதுமக்கள் இந்தச் சுட்டியை புக்மார்க்கில் வைத்துக் கொள்ளலாம்.

இந்த சின்ன சுட்டி சமாச்சாரம், முக்கியமாக .tk என்னைப் பொருத்தவரை உபயோகமற்றது என்றுதான் சொல்வேன். மேலும் http://www.tamil-heritage.org/ என்னும் URL தமிழ் முதுசொம் காப்பகத்திடம் உள்ளதுதான். டிஜிட்டல் லைப்ரரிக்குப் போகவேண்டியதன் காரணம் அங்கு கிடைக்கும் இலவச இடம், பேண்ட்வித், அங்கீகாரம் ஆகியவையே.

ஈழநாதன்(Eelanathan) 8/09/2004 02:19:00 PM

உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்