புதுமனை புகு(ந்த) விழா!

இந்த புளோகரோட மாரடிச்சு அலுத்துப்போச்சு. ஒவ்வொருமுறையும் ஒரு வலைப்பூ அனுப்புவதற்குள் 'டங்குவாரு' அந்துபோது! (இந்த டங்குவாருன்னு என்னனென்ன இதுவரைக்கும் தெரிஞ்சுக்காமலே உபயோகிக்கிறேன்!). இதற்கு ஒரே முற்றுப்புள்ளி நம்ம வலையகத்திலேயே ஒரு புளோக் உருவாக்கிவிடுவதுதான். காசி எனக்கு முன்னமே ஒரு வரம் கொடுத்திருந்தார். கேட்டேன்! அவர் மதியிடம் அனுப்பினார். மதியிடம் ஒரு பட்டாளமே இமமாதிரி கோரிக்கையோடு இருப்பதை பின்னால்தான் அறிந்தேன். என்னமோ பண்ணினார். இங்க தட்டு, அங்க தட்டுன்னார். இப்போ நம்ம புளோக் வந்தாச்சு!


எனது அடுத்த வலைப்பூ .இந்தப் புதுவீட்டில் மலர்ந்திருக்கிறது! வந்து பார்த்து வாழ்த்திவிட்டுப் போங்கள்! அத்தோடு இது எல்லார் கணினியிலும் ஒழுங்காகத்தெரிகிறதா? என்றும் சொல்லுங்கள். அங்கு பின்னூட்டம் இடமுடியாவிடில் இங்கே இடவும்!

ரா,ரா! சரசுக்கு ரா,ரா!மாமா! சந்திரமுகி பார்த்துட்டீங்களா? என்று வேலை மெனெக்கெட்டு ஷார்ஜாவிலிருந்து பேசும் அனு கேட்டாள். மெரினா ரேடியோவைத் திறந்தால் அமெரிக்காவில் எங்கெங்கு சந்திரமுகி ஓடுகிறது என்றொரு பட்டியல்! ஜெர்மனித் தமிழர்கள் தவம் கிடந்து சந்திரமுகி பார்ப்பதாகத் தகவல். ரொம்பத்தான் கிளப்பி விட்டு விட்டார்கள்! கொரியாவில் நான் எங்கு போவேன் சந்திரமுகி பார்க்க? படம் பார்ப்பதென்றால் போகும் ஒரே தமிழ் நண்பர் கணினியும் படுத்துவிட்டதாம்! வேறு வழியில்லாமல் ஒரு அழுதுவழியும் படத்தை தமிழ்டொரண்டில் கீழிறக்கம் செய்து பார்த்தேன்.

படம் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். சிற்சில காட்சிகளுக்காக இரண்டுமுறை கூடப்பார்த்தேன். கொஞ்சம் விட்டலாசார்யா (அட! ராமச்சந்திர ஆச்சார்யா படத்தில் வருவது சூசகமோ!) கொஞ்சம் ஓமன், எக்ஸ்சாரிர்ஸ்ட், கொஞ்சம் உளவியல் என்றொரு கலவை. புருடா என்றால் படு புருடா! சூப்பர் ஸ்டார் படத்தில் அதெல்லாம் கண்டுக்கக்கூடாதுதான். தமிழ்கூறும் நல்லுலகமே அந்தவழி என்னும் போது எனெக்கேன் தனிவழி? :-)

இந்தப்புதுக் கதாநாயகி யாரோ போல சாயல். அட, பழைய நடிகை ரேவதி சாயல்! பாட்டெல்லாம் படையப்பா சாயல் :-) பார்முலா மாறாத படம்! ஜோதிகாவிற்கும் நர்த்தனத்திற்கும் என்ன சம்மந்தம்? அந்த முண்டக்கண்ணுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போல! மும்பாய் எக்ஸ்பிரஸ் பாட்டுக்களைக் கேட்கும் போது விதயாசாகர் ஏமாற்றவே இல்லை. "அட என்னடி ராக்கம்மா!' பாட்டு, சங்கராபரணம், சலங்கை ஒலி நர்த்தனகீதங்கள் என்று அப்பட்டமான காப்பி என்றாலும், ஒரிஜினல் டூப் என்பதால் ஏற்றுக்கொள்ளலாம்! எந்த டாப் 10 லிஸ்டிலேயும் வராமல் என் இதயத்தைக் கொள்ளைக் கொண்ட பாட்டு, 'கொஞ்ச நேரம், கொஞ்சம் நேரம்' எனும் பாட்டு. இதுவும் பழைய பாட்டு காப்பிதான். அதுதான் பிடிச்சிருக்கு போல :-) ஹிந்திக்காரர்களுக்கு நாக்கில் சரஸ்வதியே வந்து எழுதினாலும் தமிழ் உச்சரிப்பு வராது என்பது பொது விதி! சினி பீல்டிலே கிழவியாறவரைக்கும் குப்பை கொட்டிய ஆஷாபோன்ஸ்லே இத்தனை நாளில் தமிழ் கத்திருக்கலாம்! காந்தி கூட கத்துக்கிட்டாரு! போனா போறது. அவங்க சாதாரணமாப் பாடறது நமக்கு கொஞ்சிக் கொஞ்சிப் பாடற மாதிரி இருக்கு. அவங்க தமிழ் உச்சரிப்பிற்காகவே அந்தப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

சந்திரமுகி கேளிக்கை எனும் ஒரே தகுதியை வைத்துப் பார்த்தால் பாஸாகி விட்டது. அடுத்து 'மும்பாய் எக்ஸ்பிரஸ்'!

தமிழ் படிக்க ஆசை வந்துச்சே!

பல நாட்களாக எழுத வேண்டுமென்று தள்ளிப்போட்டு வந்த ஒரு விஷயம் சமீபத்திய தினமணியில் வந்த ஒரு சேதியால் இன்று எழுத வேண்டியதாயிற்று.
லீ ஹூ ஜின் எனும் கொரியப்பெண் சரளமாகத் தமிழ் பேசுவதாக ஒரு சேதி வந்துள்ளது. புடவை கட்டி குழந்தைகளுடன் அவர் எடுத்துக்கொண்டுள்ள போட்டோ பார்க்க சந்தோஷமாக இருந்தது. ஆனால் இந்தச் சிறப்புச் சேதியில் விட்டுப்போயுள்ள ஒரு முக்கிய விஷயம் கொரிய மொழிக்கும் (ஹன்குல்) தமிழுக்குமுள்ள தொடர்பு பற்றியது. கொரியாவில் வாழும் பல தமிழர்கள் சரளமாக ஹன்குல் பேசுகின்றனர். ஒரு தமிழ் மாணவர் எனக்கு ஒரு மணி நேரத்தில் கொரிய மொழியை எப்படி வாசிப்பது என்று சொல்லிக்கொடுத்தார்.

கொரியாவிற்கும் இந்தியாவிற்குமுள்ள தொடர்பு ரொம்ப ஆதியானது. புத்தம் தோன்றிய சில நூற்றாண்டுகளூக்குள் அது கொரியா வந்துவிட்டது. அப்படியெனில் சங்ககாலத்தில் எப்படி பௌத்தம் தமிழ் மண்ணில் கோலோட்சியதோ அதே போல் கொரியாவிலும் கோலோட்சியிருக்கிறது. பௌத்தப் பல்கலைக்கழகங்கள் இரண்டு நகரங்களில் பிரபலமாக இருந்திருக்கின்றன. வடக்கே நாளந்தா. தெற்கே காஞ்சிபுரம். தமிழ் அங்கு போனதற்கான முதல் ஆதி காரணமிது.

கொரிய மொழி ஆசிய மொழி. பெரும்பாலான ஆசிய மொழிகளில் சமிஸ்கிருத, தமிழ் ஆளுமை தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. பர்மா, தாய், கம்போடியா, இந்தோனிஷியா போன்ற நாடுகளில் பாமரனுக்குக் கூட புரியும் வகையில் அத்தொடர்பு வெளிப்படையாகவே உள்ளது. ஆனால், கொரிய, ஜப்பானிய மொழியில் அது பூடகமாக உள்ளது. காரணம் கொரியா ஒரு காலத்தில் சீனாவின் துறைமுக நாடாக இருந்திருக்கிறது. சேரநாடு தமிழ்நாட்டிற்கு இருந்தது போன்று. இவர்கள் அடிப்படையில் சீன, மங்கோலிய இனத்தவர். ஆனால், முன்பு சொன்ன அத்தனை நாட்டு மக்களும் இந்தியக் கலப்பு உள்ளவர்கள். கொரியாவிலும் இந்திய ஜீன் உள்ளது. ஆனால் குறைந்த சதவிகிதத்தில். [நம்ம ஊர் அய்யங்கார் அம்பிகள் கொரியர்கள் போல இருப்பது எதேச்சையானதல்ல]

எழுத்தச்சன் மலையாளத்திற்கு செய்தது போல இங்கு ஒரு அரசன் 15ம் நூற்றாண்டில் ஹன்குலுக்கு தனி வரிவடிவம் கொடுத்து அதைச் சீன ஆளுமையிலிருந்து பிரித்துவிடுகிறார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மாடல் மொழி தமிழ் என்று தோன்றுகிறது. ஹன்குலும் உயிரெழுத்து, மெய்யின்மீது மேவ பிறப்பதே. க்+அ=க என்று பலுப்புகிறோம். அங்கும் அதே! என்ன, அவர் புத்திசாலித்தனமாக ஒன்று செய்துவிட்டார். க்+அ என்று உள்ளுக்குள் அமைப்பு இருந்தாலும் தமிழில் இவ்வொலிக்கென 'க' என்ற வரிவடிவம் கொடுத்திருக்கிறோம். ஹங்குலில் அப்படியே எழுதிப் படித்து விடுகிறார்கள். இது பல சிக்கலைத் தவிர்கிறது. 12+18=30 எழுத்தோடு தமிழ் முடிந்திருக்க வேண்டியது. ஹங்குலில் இதைவிட எழுத்துக் குறைவு. சீன அடுக்கு முறையைக் கையாண்டு இவர்கள் இந்த விகிதங்கள (அதாவது, க் அ என்று எழுதிவிடுவர். க என்று உச்சரித்துப்பழக வேண்டும்).

அடுத்து தமிழுக்கு உள்ள 'க' (நான்கு வித பலுப்பல்), ச, ஸ, ஷ, ஜ வித்தியாசம் ஹன்குலில் கிடையாது. 'ச' என்று எழுதிவிட்டு 'ஜ' என்று உச்சரிப்பர். அது இடத்திற்கு ஏற்றவாறு மாறும். முருக, முருஹ என்று நாம் பலுப்பதுபோல்.

அடுத்தமுறை சென்னை வந்தால் லீ ஹூஜின்னைப் பார்த்துப் பேச வேண்டும். அதைவிடச் சரளமாகத் தமிழ் பேசும் அவர் பெண்களிடம் பேச வேண்டும்.

Garage Cinema in Tamil

சினிமாத் தொழில்நுட்பம் மெல்ல, மெல்ல குட்டி ஆர்வலர்கள் கைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கணினி சார்ந்த இணையம் தன் பல்லூடகத்தன்மையால் இதைச் சாத்தியப் படுத்தியிருக்கிறது.

முன்னேப்போதுமில்லாத அளவு டிஜிட்டல் வீடியோ கேமிரா சொல்ப சம்பாத்யம் உள்ளவர்கள் கூட வாங்கும் அளவிற்கு உள்ளது. என் பெண் பிறந்த போது ஜப்பானில் இருந்தேன். அப்போது டிஜிட்டல் கேமிரா கிடையாது. அனலாக் கேமிரா மட்டும்தான். அதுகூட விலை. அவள் ஆரம்பப்பள்ளி போகும் போதுதான் என்னால் ஒரு அனலாக் கேமிரா வாங்க முடிந்தது. அவள் பிஞ்சு நடையை மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணும் போது காசைப் பார்க்காமல் அப்போதே கேமிரா வாங்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இந்த செண்டிமெண்ட் ஒரு புறமிருக்க, இம்மாதிரிக் கேமிராக்கள் சில அசர்ந்தப்பங்களில் பெரிய பலனைக் கொடுத்துவிடுகின்றன. செப்டம்பர் 11 நிகழ்ச்சியைப் பல கேமிராக்கள் பிடித்ததனால்தான் நமக்கு தத்ரூபமாக அந்த நிகழ்ச்சியைக் காணமுடிந்தது. இப்போதெல்லாம் டூரிஸ்ட்கள் கைகளில் சின்ன டிஜிட்டல் கேமிரா இல்லாமல் இருப்பதில்லை. பார்ப்பதையெல்லாம் எடுத்துக் கொண்டு இருப்பார்கள். இதன் விபரீத பலன் பற்றி 'சதி லீலாவதியில்' கமல் அருமையாகக் காட்டியிருப்பார் :-)

இம்மாதிரிக் குறு, குறும்படங்கள் எடுப்பதை Garage Cinema என்கிறார்கள். இந்தப் பெயர் அறிமுகமாவதற்கு முன்பே நான் சின்னச் சின்னப் படங்கள் எடுத்து குறு, குறும்படங்கள் தயாரித்து இருக்கிறேன். இவைகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வீடியோ செக்ஷனில் வைத்துள்ளேன். அதில் டைட்டில், இசை என்று விளையாடியிருப்பேன். அது சுயதம்பட்டம் அடிப்பதற்காகச் செய்ததல்ல. அதைப் பார்த்துவிட்டு மற்றவரும் கலாச்சாரப் படங்களை எடுத்து அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்தேன். ஆனால், கூச்ச சுபாவமுள்ள தமிழர்கள் இதை வேடிக்கை பார்த்துவிட்டு, இன்னும் புரபஷனலாகச் செய்திருக்கலாமென்று எழுதிவிட்டனர். Garage Cinema என்பதே கற்றுக்குட்டிகளுக்கான மீடியம். இப்போது Microsoft Movie Maker தரும் சௌகர்யங்களை வைத்துக் கொண்டு நம்மால் முடிந்த அளவு சினிமா தயாரிப்பதே இதன் நோக்கம்.

கேமிரா உள்ள தமிழர்கள் தமிழகத்தில் சுற்றிய வண்ணமே உள்ளனர். படமும் எடுக்கிறார்கள். அவைகளைப் படமாக்க அதிக சிரமமில்லை இப்போது. இப்படி நீங்கள் தயாரிக்கும் படங்களை நாம் முதுசொம் சேகரித்திலடலாம். என்னென்ன படங்களை நாம் சேகரிக்கலாம்?

1. கிரகப்பிரவேசம்
2. பூப்புனித நீராட்டுவிழா
3. கல்யாணம்
4. கோயில் திருவிழா
5. கிராமிய விழாக்கள்
6. சுற்றுலாத்தலங்கள் (கோயில், இயற்கை, கல்வெட்டு, குகை ஓவியங்கள்)
7. நாட்டுப் பாடல்கள் (கிராமியக் கலைஞர்கள் அல்லது நண்பர்கள், சுற்றத்தார்)

இப்படிப்பல...

சமீபத்தில் நான் அங்கோர் கோயிலில் எடுத்த சில காட்சிகளை திசைகள் சுற்றுலா இதழில் இட்டிருந்தேன். இக்காட்சிகளை உங்களுக்காக மீண்டும் இங்கு இடுகின்றேன்.

1. படுகு சவாரி
2. அங்கோர் கோயிலில் காலை உதயம்

வலைப்பதிவில் இது பற்றிய ஒரு புதிய பிரக்ஞையை காசி உருவாக்கி வருகிறார். இப்படங்களை எப்படி எடுப்பது, எப்படி எடிட் செய்வது என்பது பற்றி அவர் கட்டுரை எழுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அது பயனுள்ள முயற்சி.

எங்கே உங்கள் படங்களை தமிழுலகிற்குத் தாருங்களேன்!

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே!திடீரென்று பழைய படங்களின் வீடியோ பார்க்க வேண்டும் போல் ஆசை வந்து விட்டது. "இனியவை நாற்பது, இன்னா நாற்பது" என்பது போல் இப்போதெல்லாம் பழயவை இனியவை என்று எத்தனையோ வீடியோக்கள் வந்துவிட்டன. எல்லாம் கருப்பு, வெளுப்புப் படங்கள். தியேட்டரில் பார்க்கும் போதே சரியாகத்தெரியாது, வீடியோவிற்கு வரும் போது உள்ளதும் மங்கிப்போய் விடுகிறது. ஆனாலும் தமிழ் சினிமாவின் வசீகரமே தெரிந்தும் தெரியாமலும் காட்டுவதுதானே! அதுவும் நமது அந்தக்காலத்து நடிகைகள் இக்கலையில் தேர்ந்தவர்கள். கண்ணால் கூப்பிடுவர், கை தொட்டால் விலகிடுவர். முகபாவத்தை வைத்துக்கொண்டு மட்டுமே தமிழ் சினிமா பல தசாம்சங்கள் ஓட்டியிருக்கிறது. இப்போது பார்க்கும் போதுதான் தெரிகிறது எல்லா நடிகர்களும், நடிகைகளும் உச்சத்தை எட்டும் போது பாதிக்கிழடு ஆகியிருக்கின்றனர். யௌவனம் என்பது மட்டுமில்லை, நடிகைகளெல்லாம் தளுக்கு மினுக்கு என்று தள, தள என்று இருக்கிறார்கள். பெரிய வயிறை வைத்துக் கொண்டு அரைப்பாவடையில் நடிகைகள் நடனம் ஆடுகின்றனர். ஏற்றிக்கட்டிய கச்சை, பள, பளவெனும் சாட்டின் ரவிக்கை....வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ் சினிமா இப்போது எவ்வளவு மாறிவிட்டது! உண்மையிலேயே இளைஞர்கள் நடிக்கிறார்கள் (ஆனால், சார்லி, விவேக் என்ற சகபாடிகள் மட்டும் 30-40 எட்டிவிட்டார்கள்!) சிலுக்கு, ஜோதி போன்ற போர்னோ நடிகளைகளை ஓரம் தள்ளிவிட்டு சிம்ரன், ரம்யா என்று செக்ஸைப் பிழிந்து காட்டும் கட்டழகுகள் வந்து விட்டன. ஐஸ்வர்யராய் நடிகைகளின் ஆதர்சமாக இருக்கிறார். சிவாஜி ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சைஸில் இருப்பார். அவர் குரல், முகம் இதை மட்டும் வைத்தே அவர் காலத்தின் பெரும்பகுதி ஓடிவிட்டது (எவ்வளவு சௌந்தர்யமான நடிகர் அவர். உடலைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அவர் காலத்தை ஓட்டிவிட்டார்). எம்ஜியார் மட்டும் எப்போதும் ஒரே மாதிரி பூசிய உடம்பை வைத்திருந்தார்.

இன்றையப் படங்களைக் காணும் போது இல்லாத ஒரு அன்னியோன்யம் பழைய படங்களில் வருகிறது. காரணம் சம வயது போன்ற ஒரு பாவனையால் கூட இருக்கலாம் :-) யார் கண்டது?

லலிதா, பத்மினி, ராகினி, சாவித்திரி, சரோஜாதேவி, கமலா லட்சுமணன்......ம்ம்ம்ம்ம்

குட்நைட்!

கொரியாவில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு

சமீபத்திய தினமணியில் இதுபற்றிய எழுதிய என் கட்டுரை வந்துள்ளது. வாசித்துப் பயன்பெறுங்கள்.

கொசுறு: தமிழர்களின் பெரிய லொள்ளு இவர்கள் தங்களை ஆங்கிலேயர்கள் போல் பாவித்துக்கொண்டு ஆசிய மொழியின் மென்மையான உச்சரிப்புகளை தடா,புடாவென்று ஆங்கிலேயன் போல் உச்சரிப்பது. திருவனந்தபுரம் என்று நம்மவர் சொல்லமாட்டார் 'றிவாண்றம்' என்று சொல்லுவர். அதுதான் இந்த கட்டுரைக்கு நடந்துள்ளது. நான் சரியான உச்சரிப்பை தமிழில் எழுதினால் இவர்கள் ஆங்கில உச்சரிப்பில் திருத்தி எழுதியுள்ளார்கள் (என்னை மடையனாக்கி விட்டார்கள்!).

சரியான உச்சரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Hyundai = ஹேஉந்தே (ஹுண்டாய் அல்ல!!)
Toyota = தொயோத்தா (டொயோட்டா அல்ல)
Honda = ஹோந்தா (ஹோண்டா அல்ல)
Samsung = சாம்சொங் (சாம்சங் அல்ல)
Nazi = நாட்சி (நாஜி அல்ல) [இது கட்டுரைக்கு சம்மந்தமில்லாதது]

அதே போல் அதீத கற்பனையை தமிழனுக்குள் உருவாக்குவது. நான் கொடுத்த உண்மையான படங்களை விட்டு, விட்டு ஏதோ கற்பனைப் படங்களைப் போட்டுள்ளார்கள்! தமிழ் பதிப்புத்துறை என்று திருந்தும்?

You've Got Mail

இணையம் புத்தம் புதிதாய் வந்தபோது தொழில்வல்லுநர்களை உற்சாகப்படுத்தியது போல் எழுத்தாளர்களையும் ஆர்வப்படுத்தியது. இணையத்தைக் களமாய் வைத்து புதிய இலக்கியம் பிறந்தது. 1998-ல் வெளியான ஒரு படம்தான் You've Got Mail. எனது அபிமான நடிகர் டாம் ஹாங்ன்ஸ்் நடித்தது. மின்னஞ்சல் கிளப்பும் மந்திர உலகில் பிரவேசித்து காதலர்களாகும் கதை. வெறும் மின்னஞ்சல் மட்டுமே தூள் கிளப்பிக்கொண்டிருந்த காலம். இப்போதுபோல் வெப்காம், வாய்ஸ் சாட் இல்லாத காலம். அடுத்த முனையில் உள்ள இலத்திரன் யார் என்று தெரியாத காலம (அங்குதான் கற்பனைக்கு இடமுள்ளது!)்.

7ம் வருடம் கழித்து இந்தப்படத்தைப் பார்க்கும் போது நனவிடை தோய்கிறது. இணையம் பற்றிய எனது முதல் காதல் கதையும் இக்காலத்தில்தான் வெளியாகியது. "காதலெனும் சோலையிலே" எனும் அக்கதை புதிய பார்வையில் வெளியாகியது. பின்னால் காதலர் தினம் எனும் படத்திற்கு உந்துதலும் ஆகியது. இந்தக் கதை எனது முதல் சிறுகதைத்தொகுதியான "உதிர் இலை காலம்" -இல் இடம் பெற்றது. காதலி என்று நம்பி ஒரு செயலியிடம் ஏமாந்து போவதாய் கதை போகும். அதன் பின்னாலும் இணையம் பற்றிய காதல் எழுதினேன். அது எதிரச்்சாதியம் பற்றியது. அதுவே எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதியின் தலைப்பும் ஆனது "நிழல்வெளி மாந்தர்". இக்கதை பற்றிய அருமையான ஒரு கணிப்பை மாலன் வழங்கியுள்ளார். இப்புத்தகங்கள் (கடைசி இரண்டு தொகுதிகள்) மதி நிலையம் தளத்தில் இணைய் விற்பனையில் உள்ளது. (கிழக்கு பதிப்பகம் இவைகளை அதிரடி மின்விற்பனை செய்யும் என்று பத்ரி சொன்னார் (மதி நிலையம் ரொம்ப சாவதானம்). இன்னும் அது நடக்கவில்லை)

பழைய படங்களை பார்க்கும் போதுதான் நாம் எத்தனை நல்ல படங்களைக் காணத ்தவறியிருக்கிறோம் என்று தெரிகிறது. டாம் ஹான்ங்ஸ் பின்னால் அகாதமி விருது பெற்றார்.

ஹிந்தோளம்

ஹிந்தோளம் அப்படின்னு சொன்னவுடனே பலருக்கு சங்கராபரணம் படம்தான் ஞாபகம் வரும். அதிலே நம்ம கதாநாயகி சாமஜ வர கமனேன்னு ஆரம்பிச்சுட்டு அப்படியே எட்டுக்கட்டி சினிமாப் பாட்டுக்குள்ளே போயி, காதல் வசத்திலே ஸ்வரம் தப்பிப் போய் சங்கர சாஸ்திரிகள் "சாரதா!" அப்படீன்னு ஒரு சத்தம் போடுவதை யாரால் மறக்கமுடியும். பாவம்! சோமயாஜுலுவின் கம்பீரமும் இப்ப் திரைக்கு இல்லாம போச்சு.

நம்ம சௌம்யா ஹிந்தோள ராகத்திலே ராகம், தானம், பல்லவி ஒண்ணு கொடுத்திருக்காங்க. சாமகான லோலனே! எனும் பல்லவி. கொஞ்சம் வித்தியாசமா செஞ்சிருக்காங்க. ராகம் பாடறதை ரெண்டு பிரிவா பிரிச்சிக்கிட்டு முதல் பிரிவிலே வயலினை வாசிக்க வச்சு, சரி தானம் ஆரம்பிக்கும் அப்படின்னு நினைக்க வச்சு, ராகத்தை மீண்டும் தொடர்கிறாங்க. அது மட்டுமில்லே, வயலின் போய்க்கிட்டே இருக்கும் போது பின்னால 'ஹம்' வேற! கொஞ்சம் துணிச்சலான சினிமா டெக்னிக்தான்.

ஆனா! இதைக்கேட்டவுடன் எனக்கு பெங்களூர் காலேஜ் ஆப் தோல் வாத்தியம் (!) ஞாபகத்திற்கு வந்தது. ஏன்னா, இந்த புயூஷன் டெக்னிக்கை டி.வி.எஸ்.மணி, இரமாமணி முன்னமே செஞ்சிட்டாங்க. அதுலே ராக ஆலாபனை கொஞ்சம் வரும், அப்புறம் ஒரே தாவலா ஸ்வரப்பிரயோகம் செய்து கீர்த்தனை என்னென்னு தெரிவிக்காமலே பாட்டை முடிச்சுடுவாங்க. இதுக்கு பல இந்திய பக்க வாத்தியங்களோட சார்லி மரியானோவோட சாக்ஸபோன் வேற. அவரோட சக்ஸபோன் கொஞ்சம் 'கமறல் டைப்' அதிலே அவர் ராகத்தை follow up பண்ணறது கிச்சு, கிச்சு மூட்டும். சாக்ஸபோன் ரொம்ப சில்மிஷமான வாத்தியம். அதுலே ரொம்ப வித்தை காட்டமுடியும். ஏ.ரஆர்.ரகுமான் புகுந்து விளையாடுவாரு இதிலே (தாய் மண்ணே வணக்கம் -வந்தே மாதரம்- ஆல்பம் மறக்கக்கூடியதா?)! சார்லி மரியானோ blue style-ல சுயமா வாசிப்பார். சுகமா இருக்கும். நம்ம கோயம்புத்தூர்காரரு சாக்ஸபோனை நாதஸ்வரமா மாத்திட்டாரு. அது சரியில்லை! சாக்ஸபோன்னா ஒரு கமறல் இருக்கணும். நம்ம 'கமகம்' சட்டுனு வரக்கூடாது. மெனக்கிடனும். பாவி! அபஸ்வரம் வாசிக்கப்போறான்னு பரிதவிக்கும் போது கீழ விழுந்துடாத கழக்கூத்தாடி போல கம்பி மேல நடந்து காட்டணும். சார்லி செய்யறாரு அதை. அவர் கச்சேரியை ஜெர்மனியிலே ஏற்பாடு செய்திருக்கோம்.

ஒரு காலத்திலே ஒரு ராகத்தை எடுத்துக்கிட்டு மூணு மணி நேரம் பாடுவாங்க. அப்புறம் அதை அரியக்குடி மாத்தி 'கச்சேரி பந்தா' ஒண்ணு கொடுத்தாரு. அதைத்தான் இதுவரை எல்லோரும் பின்பற்றுகிறார்கள். அப்புறம் இந்த 1 மணி/2 மணி நேரக்கச்சேரியையும் 3 நிமிஷத்திலே சுருக்கி 'மெல்லிசை'ன்னு கொண்டு வந்தாங்க. ஆனா, அதிலே ஒரே ராகத்தை வச்சுக்கிட்டு பாடறதில்லே. லேசா, ராகத்தோட சாயல் காட்டினா போதும். ஹிந்தோளம் சாயல்லே ஆயிரம் பாட்டுச் சொல்ல முடியும். ரொம்ப பாபுலர் ராகம். எளிதாய் இனம் காணக்கூடியது.

ஆனா! இந்த் வித்யாகலை நடத்துற நிகழ்ச்சியிலே வண்டு, சுண்டெல்லாம் ஆயிரம் ராகம் சொல்லுது. வாசிக்கிறவனுக்கு நிச்சயம் ராகத்தோட முழு ஸ்வரூபம் தெரியாது. ஏதோ தனக்குத்தெரிஞ்சதைக் காட்டுவாறு. இதுகள் சட்டுனு புடிச்சுட்டு தேவ காந்தாரிங்கும். இன்னும் என்னென்னமோ சொல்லும்.

புதிய ராகங்கள் உருவாக்க முடியுமா? முடியாதான்னு..ஒரு பாட்டம் பாலசந்தரும், பாலமுரளியும் விகடன்லே சண்டை போட்டுக்கிட்டாங்க...

ஹிந்தோளம்ன்னா என்னென்னமோ ஞாபகம் வருது. கேட்டு ரசியுங்கள்!

சாயரட்சை (சிறுகதை)

ஏரிக்கரையில் உட்கார்ந்து கொண்டு அந்த அழகிய வனப்பை ரசித்துக் கொண்டிருந்தான். பனி உருகிக் கசிந்த நீர் ஸ்படிகம் போல் ஜொலித்து, ஜிலு, ஜிலுவென்று அசைந்து கொடுத்தது. நீர் உணர்வதை உடலும் உணர்ந்தது மெல்லிய காற்றின் ஸ்பரிசத்தில். மலை அருகில்தான் இருந்தது. 'வா' என்றது மலை. ஆற்றின் கரையிலிருந்து மலையைப் பார்ப்பது போல் மலை முகட்டிலிருந்து ஆற்றைப் பார்த்தால் எப்படியிருக்கும் என்றொரு எண்ணம் பிறந்து, வளர்ந்து, உந்தித் தள்ளியது. பின்பையைச் சரிசெய்து கொண்டு நடக்க ஆரம்பித்தான். மலை எட்ட இருந்து பார்க்கும் போது கிட்டும் தூரத்தில் இருந்தாலும் நடக்கும் போது நீண்டது. குட்டையாய் எட்ட நின்ற மரங்கள் கெட்டியாய் ஓங்கி இருந்தன அருகில். கோடு போட்ட பாதையில் பழகியவன் அவன். வரைபடமற்று பரந்து கிடந்தது வனம். மேலே, மேலே ஏற, ஏற நதி அருவியாய் கொட்டுவதைக் காண முடிந்தது. மலையின் கசிவு நதியாய் மாறுவதைக் காண முடிந்தது. இலையின் நுனித்துளி கூட ஆறாய், அருவியாய், ஏரியாய் மாறமுடியும் என்று மின்னிச் சொல்லி வடிந்துக் கரைந்தது. இப்போது அவன் ஒரு முகட்டிலிருந்தான். பரந்து பெரிதாயிருந்த ஏரி கண் பரப்பிற்குள் விழுந்து குவிந்தது. வானுக்கும், நீருக்கும் வித்தியாமில்லாமல் நீலம் கரைந்து வரைந்திருந்தது. அப்படியே தவ்விப் பறந்த புள்ளுடன் துணை சேர கால்கள் பரத்தன. உள்ளுள் ஜன்மப்பயம் தரையிலிலேயே நிறுத்தியது. காலம் கசிந்து மணியாய் ஓடியதை அவன் உணரவில்லை. இருட்டத் தொடங்கியது.

இறங்கத் தொடங்கினான். இருட்டுத் தொடர்ந்தது. கானகத்தின் உள்ளே இருட்டு மிக விரைவாகவே புகுந்து விடுகிறது. பாதை சரியாகத் தெரியவில்லை. குத்து மதிப்பாக இறங்கிக் கொண்டிருந்தான். எங்கு போகுமோ? ஒரு நிலையில் அவனுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. தன்னைக் கடிந்து கொண்டான். இயற்கை இவனை இழுக்கும். அது தெரிந்ததுதான். ஹைவேயில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போதுதான் சந்திரோதயம் ஆகும். அந்த வட்டச் சொளகு! மஞ்சள் முகம்! நிற்காமல் எப்படி ஓட்ட முடியும்? கூட வரும் மனைவிதான் காவல். இல்லையெனில் என்றோ பரலோகம் போயிருப்பான். ஒரு பார்டியில் ஒரு நடுவயது மாது இவனிடம் வந்து 'உங்களுக்கு சந்திர, சூரியோதயங்கள், நட்சத்திரங்கள் பிடிக்குமோ?' என்றாள். 'உண்மைதான், உங்களுக்கு அது எப்படித் தெரியும்? நாம் முன்ன பின்ன பார்த்ததில்லையே?' 'இப்போது பார்க்கிறோமே! முகம் சொல்கிறது!' என்று போய்விட்டாள். எழுதி வைத்திருக்கிறது போலிருக்கிறது. வீட்டு ஞாபகம் வேறு வந்து விட்டது. கடவுளே! எப்படிப் போய் சேருவேன்? உதவிக்கு ஒரு ஆளைக் காணோமே? அரமணி நேரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறான். ஆள் அரவமில்லை. நரிகள் கூட்டமாய் சேர்ந்தால் ஆளைக் கொன்று விடுமாமே?

ஏதோ பாதை பிரிவது போல் கலங்கலாத் தெரிந்தது. எந்தப் பாதையை எடுப்பது? எது எங்கு போகும்? ம்ம்ம்...?

வலது பாதையை எடுத்தீங்கன்னா அருவிக்கரைக்குப் போகும், இடது பாதையை எடுத்தீங்கன்னா ஊருக்குள்ள போகும்.

அப்போதுதான் கவனித்தான், குரல் வந்த திசை நோக்கி. இருட்டிலே ஏதோ பாறாங்கல் என்று நினைத்து விட்டான். யாரோ குனிந்து ஷூ லேஸ் மாட்டிக்கொண்டு இருந்தார்கள்.

தொண்டையக் கனைத்துக் கொண்டான். இதுவரை இருந்த பயத்தைக் காட்டி விடக் கூடாதே என்று கவனமாக இருந்தான்.

"நல்ல வேளை! ஆள் அரவமே இல்லையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீங்க எங்கேயிருந்து வரேங்க?"

"மலையிலிருந்து"

"ஹி..ஹி..அதுதான் தெரியுதே. உள்ளூரான்னு கேட்டேன்" பேச்சை வளர்த்தான். அது பயத்தைப் போக்கும்.

"இல்லை. நானும் பயணிதான். சொந்த ஊர் வடசென்னை"

"அப்படியா? நம்ம ஊர் தான்".

"வட சென்னையிலே எங்கே?"

"ஜவகர் தெரு"

"அட! நம்ம தெருதான். எந்தனாம் நம்பர் வீடு? சாரப் பாத்தது இல்லையே?"

"இருட்டா இருக்கில்லே"

"அட! அதைச்சொல்லலீங்க!"

"35, ஜவகர் தெரு"

"என்னது 35 ஆ!" அவன் வாயைப் பிளப்பது இருட்டில் யாருக்கும் தெரியவில்லை.

"என்ன சார்! ரொம்ப கிட்டக்க வந்துட்டீங்க!"

"இல்லையே! தள்ளித்தானே நடக்கிறேன்"

"அட நீங்க ஒண்ணு, ஜோக் அடிக்கிறதை நிறுத்தமாட்டீங்க போல! 35ம் நம்பர் அபார்ட்மெண்டிலே எந்த மாடி"?

"7ம் மாடி, 7C"

தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. ஏனெனில் அது அவன் வீடு.

"என்னையப்பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டு என்கிட்டயே பீலாவுடறீங்க இல்லே! அது என் வீடு சார்"

"உங்களைப்பத்தி நல்லா தெரிஞ்சிக்க முடியும்ன்னு நம்பறீங்களா? வண்டார்குழலிக்கு இன்னும் தெரியலையே!"

என்னது? அடப்பாவி! என் மனைவி பேரைச் சொல்லறான்.

"நீங்க யாரு பிள்ளை? சொல்லுங்க பாப்போம்?"

"நான் அம்மா பிள்ளை!...சரி..சரி..கோபிச்சுக்காதீங்க...அதுதானே நிச்சயம் அதுதான் சொன்னேன். சங்கரநாராயணன் பிள்ளை. ஏன்?"

இவன் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான். தூர விளக்குகள் தெரிந்தன. கீழிறக்கம் ஆகியிருந்தது. மேலேதான் இருட்டு. கீழே இன்னும் சாயரக்ஷை. மாலை முடிந்து, இரவு புலரும் போது. பகலுமில்லை, இரவுமில்லை. ஒன்றில் ஒன்று கலந்து, நிறம் பிரிக்கமுடியாத வர்ணக்கோர்வையில் வானம் அவனைப்பார்த்து சிரித்தது.

"சரி, இத மட்டும் சரியாச் சொல்லிடுங்க. நீங்க எந்த வருஷம் பிறந்தீங்க? வெளிச்சத்துக்கு வாங்க பார்த்துப்பேசுவோம்"

அவன் பேச்சைக் கேட்க அங்கு வேறொருவர் இல்லை.

உலக நீர் தினம் (மார்ச் 22, 2005)

உலக நீர் தினம் (மார்ச் 22, 2005)


பேரிங் ஜலசந்தியில் எடுத்தபடம் நா.கண்ணன்

வள்ளுவன் உலக அமைப்பை நோக்கி ஒரு சூத்திரம் சொல்கிறான். "நீரின்றி அமையாது உலகு" என்பதுதான் அந்தச் சூத்திரம்.

ரொம்பச் சாதரணமான உண்மை என்பது போல் தோன்றினாலும் இது ஆழமான பொருள்ள சூத்திரம். ஏன்?

1. அறிவியல் இதுவரை அறிந்தவரையில் பிரபஞ்சத்திலேயே பூமி ஒன்றுதான் நீருள்ள கிரகம். Water planet என அழைக்கப்படும் பூமியின் அழகும், ஆதாரமும் இந்த நீர்தான்.
2. நீர் இல்லையெனில் பிரபஞ்சத்தில் உயிர் தோற்றம் என்பது இல்லை.
3. கடலிலிருந்துதான், மனிதன் உட்பட இன்று பூமியில் காணும் அனைத்து ஜீவராசிகளும் உருவாயின. உயிர்களின் தோற்றம் நீர் என்பதால்தான் கருப்பை சிசு இன்றளவும் நீர்க்குடத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.
4. நம் உடல் நீரின்றி இயங்காது. நீர் இன்றி இரத்த ஓட்டம் இல்லை. நீர் இன்றி உணவு செரித்தல் இல்லை. நீர் இன்றி நம் உடலிலிருந்து கழிவு வெளியேற்றமில்லை. நீர் அளவு உடலில் குறைந்துவிட்டால் இறந்துவிடுவோம்.

எனவேதான் வள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்றான்.

உலகில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை நீர்தான் அடைத்துக் கொண்டுள்ளது. கடலைவிட்டு தாவரங்களும், பல உயிரினங்களும் கோடான கோடி வருஷங்களுக்கு முன் வந்துவிட்டாலும், கடல் நீரை தரைக்குக் கொண்டு வந்து சேர்த்து உயிர்வாழ வழி செய்கின்றன மேகங்கள். இந்த அறிவியல் உண்மையை, நீர்ச்சுழற்சியை ஆண்டாள் அழகாக திருப்பாவையில் செப்புகிறாள்:

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடார்த்து ஏறி...
சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்!

என்கிறாள். எனவே உலகின் பருவ காலங்களை நிர்ணயம் செய்வது இந்த நீர்ச்சுழற்சி. நீர் பனியாக ஆர்டிக், அண்டார்டிக் பிரதேசங்களில் உறைந்து கிடைக்கிறது. மேலே பனி மூடியிருந்தாலும் கீழே நீர் உறையாமல் இருந்து துருவ வாழ்வை சீர் செய்கிறது நீர். உலகிலேயே மிகவும் வளமான பிரதேசங்கள் இந்தப் பனிமூடிய கடல்கள். உஷ்ணப் பிரதேசமாகிய இந்தியா, சிங்பப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கார்காலம் மிகவும் முக்கியமான காலம். விவசாயத்தை முடக்கிவிடுவது கார்காலம்தான். வடக்குப் பிரதேசங்களில் தொடர்ந்து சிறு தூறல் இருந்து கொண்டே இருக்கும். குளிர் காலத்தில் பனியாக நீர் வந்து சேரும். அதனால்தான் அங்கும் உயிர்ச் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்கிறது. உதாரணமாக, நமது செய்கையினால் பூமி மண்டலங்கள் சூடேறினால் பனிப்பிரதேசம் உருகி கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், இன்றுள்ள நெதர்லாந்து, பங்களாதேசம், நியூயார்க் இவையெல்லாம் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயமுள்ளது. கடலுக்குள் நடக்கும் பூகம்பங்களால் ஆழிப்பேரலைகள் தோன்றி தேசங்களை அழிக்கும் என்ற உண்மையை உலகு சமீபத்தில் கண்டது. 'எல் நினோ' கடல் நீரோட்ட மாற்றம் பெரும் பஞ்சங்களை உலகில் தோற்றுவிக்க வல்லன. கடல் அமைதியாய் இருப்பது போல் தோற்றம் தந்தாலும் அதுவொரு பர,பரப்பான உலகம். அதனுள் நடக்கும் மாற்றங்கள் உலகின் பருவ நிலையை வெகுவாக பாதிக்க வல்லன.

உலகெங்கும் நீர் கிடந்தாலும் குடிக்கத்தக்க நீர் இல்லையெனில் மண்ணில் உயிர் மாய்ந்துவிடும். எனவே மழை நீரை உதாசீனம் செய்தல் கூடாது. நீர் வளம் என்பது மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய ஒன்று. தமிழ்நாட்டில் இதை மனதில் கொண்டே அந்தக் காலத்தில் கண்மாய்களும், ஏரிகளும் தேக்கி வைத்தனர். இன்று அவையெல்லாம் பிளாட் போட்டு விற்கப்படும் போது கிணற்று நீர் அடி பாதாளத்திற்குப் போய்விடுகிறது. பம்பு செட் போடுவதைவிட பெய்யும் மழையை ஒழுங்காக சேமிப்பதே தூர நோக்குள்ள செயல்.

மார்ச் 23, 2005, மீடியா கார்ப் ரேடியோ (ஒலி 96.8 FM), சிங்கப்பூரில் வந்த ஒரு நிமிட வானொலிப் பேச்சின் மூலம்

கடைக்குப் போகும் காந்தி

காந்தியை நான் பார்த்ததில்லை. ஆனால், கோடிக்கணக்கான இந்தியர்கள் போல் நானும் அவரால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அவர் வழியின் கடைசி சாட்சியாக சிறுவனாக இருக்கும் போது தக்ளியில் நூல் நூற்று சர்வோதயா கடையில் கொடுத்திருக்கிறேன். எனது சமீபத்திய குறுநாவல் தொகுதியாகிய "விலை போகும் நினைவுகள்" காந்தியத்தை விமர்சனம் செய்யும் நாவல்.

உங்களுக்கு நேரமிருந்தால் கீழுள்ள கட்டுரையை வாசியுங்கள். தலைப்பிலும், கட்டுரை நடுவிலும் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தைக் காணுங்கள்.

இது உங்களை பாதிக்கிறதா? பின்னூட்டத்தில் உங்கள் எண்ணத்தைப் பதிவு செய்யுங்கள்.


கடைசியில் ஒரு வாக்கெடுப்பு இருக்கிறது.


Telecom Italia's Gandhi Ad
Kanupriya Vashisht

Phoenix, Arizona (US), March 19, 2005|15:34 IST

A small, scrawny man in a dhoti unhurriedly climbs the steps of a hut. He sits down on the hard floor of a severely frugal room, and then smiles - into a web cam.

Suddenly that smile is transported from an austere ashram in Ahmedabad to a giant LCD in Times Square; a cell phone in Rome; a flat screen in
France; a laptop in London. Millions of people all over the world listen, mesmerised, as a trembling voice spreads the message of truth and love, barely audible amid the thunder of applause.

The aura is electrifying. Telecom Italia has found a compelling spokesman - Mohandas Karamchand Gandhi.

'Telecom Italia Gandhi', a 60-second advertisement that recently won the Epica Awards, Europe's premier creative awards, has just started airing in Italy. The spot closes with an interesting inquiry, "Imagine the world today if he could have communicated like this". This simple statement, however, triggers a slew of complex issues.

Click here to See this Ad

If Gandhi were born into this mind-boggling plethora of media choices would he really have communicated any better? Could he have touched the minds of edgy megalomaniacs through cell phones, palm pilots, blogs and podcasters? Would modern means of mass communication amplify his message or dilute it?

It is somehow hard to imagine Gandhism unscathed by the mockery of late night comics. It is impossible to visualize the mahatma pausing for commercial breaks, getting powdered for the camera, or sharing prime time with Brittney Spears' antics and Aishwarya Rai's giggles.

Dalai Lama, Nelson Mandela and Aung San Suu Kyi are present day inheritors of the Gandhian tradition. However, in this frenetic age of information explosion their message too is buried under debris of pluralistic ideologies and a million messages clamouring for attention. All three have access to a surfeit of multimedia and yet their sphere of influence is marginalized. Burma still bristles with violence, Tibetans live on in exile, and Africa continues to burn.


Gandhi, undoubtedly, is considered one of the most effective communicators of the 20th century, but his brand of journalism belongs to an era untouched by television or Internet. His lure lies in the mystique of austerity. His weapon is his message not his medium.


Gandhi was journalist when idealists, not advertisers, ran newspapers. In a public career that spanned nearly four decades, he edited six journals. None, including Harijan and Navajivan, made profit or boasted a circulation of more than a few thousand copies. Yet such was the power of his message that people flocked in thousands just to hear him speak. Camera did not make Gandhi look good, his rigorous brand of asceticism did.

Gandhi is up for grabs but nonviolence is not the reason. As Salman Rushdie puts it, "He has become abstract, ahistorical, postmodern, no longer a man in and of his time but a freeloading concept, a part of the available stock of cultural symbols, an image that can be borrowed, used, distorted, reinvented to fit many different purposes..."

In these sloganeering times, few people really pause to ponder the true nature of Gandhi's legacy. It was his bold vision and conviction that accelerated India's struggle for Independence. It was his charisma and leadership that inspired confidence in a country riddled with two centuries of subjugation. Seventy-five years ago this extraordinary man walked 325 kilometers from Sabarmati to Dandi just to defy the might of the British with a handful of salt. Today, he is modeling for brands like Apple Macintosh and Telecom Italia.

Such is the sway of mega bucks. Even the saintliest of the dead can be invoked from history to sell big brands. Gandhi's principles do not count any more, his maverick image does. Ironically his message has been packaged to fall in line with the corporate philosophy of consumerism. His brand image is now protected and marketed by US-based CMG Worldwide Inc, whose roster of deceased celebrities includes matinee idols like James Dean and Marilyn Monroe. Any cause or company seeking to use the image of India's prophet of abstinence now needs permission from the consumer capital of the world.

Half a century ago Gandhi was a brand unto himself, a communicator powerful enough to be his own medium. Today he is a coveted salesman for cash-flush corporations. His homespun dhoti, trademark walking stick, and round spectacles are curios from a bygone age. Satyagraha and ahimsa: These are words high school kids reluctantly mug up for a history exam. We have never needed a Gandhi more, and yet, the only Gandhi we know is a votary for consumerism.

"Out of my ashes, many more Gandhis will rise," said Mahatma Gandhi. Today, his prophetic words have acquired a paradoxical ring – many more Gandhis have risen – variously packaged as "Telecom Italia Gandhi" and "Apple Gandhi." It is time to claim our mahatma from the market and give him back to the masses. That is where he is held sacred, that is where he truly belongs.


உங்கள் தேர்வு?
அன்று வந்தது (சிறுகதை)

அன்று வசந்தம் வந்து இருந்தது. இதையறிந்தே விவசாயிகள் நிலத்தை உழத்தொடங்கியிருந்தனர். நீண்ட பகற் பொழுதுகள் மீண்டும் மீண்டன. ஒன்பதாவது மாடியிலிருந்து விளை நிலங்கள் தெரிந்தன. பனிக்காலத்தில் பர்தா போட்டிருந்த நிலங்கள் இன்று வெட்ட வெளியைக் கண்கூசப்பார்த்து நின்றன. உறைந்து போன ஆறுகள் நேற்றுப் போலுள்ளன. ஆறுகள் மீண்டும் ஓடத்துவங்கியிருந்தன. நட்டு வைத்த செர்ரி மரக்குச்சி கூட துளிர் விடுவதற்குப் பதில் பூப்பூத்து நின்றது. வசந்தம் வந்துவிட்டது.

அவன் தனியாக சமைத்துக் கொண்டிருந்தான். சமையலறையில் அவனைத்தவிர யாருமில்லை. அன்று ஞாயிறு. தனிமையைப் போக்க தமிழ்ச் சினிமாப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். இனிக்க இனிக்கப் பாடும் காதல் பாடல்களைக் கேட்டால் சாப்பாடும் ருசிக்கும் என்று நம்பினான். இந்த நம்பிக்கையில் மட்டும் அவன் என்றும் தளர்ந்ததில்லை. குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. லேசாக தலை சுற்றியது! இது என்ன புதுசாக என்று யோசித்துக் கொண்டே அருகே பார்த்த போது குழம்பு கொதிப்பது போலவே குளிர்பதனப் பெட்டியும் குதித்துக் கொண்டிருந்தது. ஒன்றும் புரியாமல் இன்னும் மேலே பார்த்தான், பிரிட்ஜ் மேல் வைத்திருந்த கரண்டி ஸ்டாண்ட் கிலு, கிலுப்பை போல் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. செவியின் அருகில் சாதானா சர்க்கம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். அவள் மென்னியைப் பிடித்துவிட்டு நன்றாகப் பார்த்தான். இவன் நிற்கும் கட்டிடம் ஆடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் புரிந்தது இது பூகம்பத்தின் அறிகுறி என்று. அவ்வளவுதான். செய்த சமையலை அப்படியே விட்டு, விட்டு, அடுப்பை அணைத்த கையோடு படிகளை நோக்கித் தாவினான். கீழே வந்து நின்ற போது இவனைப் போல் கல்யாணமாகியும் பிரம்மச்சாரிகளாக வாழும் ஒரு தமிழ் கோஷ்டி நின்றிருந்தது. தொப்பையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு சுப்பிரமணியம் வந்தார். "என்ன சார் இது? எனக்குத்தான் தலை சுற்றல் என்று பார்த்தால், கட்டடமே ஆடுதே? இடிஞ்சு விழுந்துடுமோ? நாம இங்க நிக்கறது கூட ஆபத்து சார், வாங்க போகலாம். நல்ல வேளை லிப்ட்டிலே கூட்டமில்ல, உடனே வரமுடிஞ்சது!" என்று முடித்தார் சுப்பிரமணியம். "என்னங்க நீங்க ஒண்ணு? இந்த மாதிரி சமயத்திலே படிகளைத்தானே உபயோகிக்கணும். லிப்டிலே வரபோது கரண்ட்டு போச்சுன்னா என்னாகும்? எலிப்பொறியிலே மாட்டிக்கிட்ட மாதிரி சாக வேண்டியதுதான்". "சும்ம இருங்க சுரேஷ்! பயத்திலே என்ன புரியுது? நீங்க வேற இன்னும் களேபரப்படுத்துறீங்க!

எல்லோரும் இப்படியே அரட்டை அடித்துக்கொண்டு அரை மணி நேரம் நின்றிருந்தனர். சில கொரியன்வாசிகளும் இதற்குள் சேர்ந்திருந்தனர். எல்லோரும் இனிமேல் ஒன்றும் நடக்காது என்று சமாதானம் செய்து கொண்டு மீண்டும் லிப்ட்டு இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

நந்தகுமார் யோசித்தான். வாழ்வு எவ்வளவு நிலையற்றது. இன்று ஜப்பானைத்தாக்கிய பூகம்பம் கொரியாவைத் தாக்கியிருந்தால்? இந்தக் கட்டடம் ஒடிந்து விழுந்தால், அதில் நசுக்கிச் சாவது சுகமானதா? வாழ்வு முடியும் என்றே தோன்றுவதில்லையே! இப்படித்தானே இருந்திருக்கும் செப்டம்பர் 9ம் தேதி உலக வர்த்தக மையத்தில் இருந்தவர்களுக்கும். ஒரே இடி. பொல, பொலவென்று உயிர்கள் பொய்த்துப் போகின்றன. குஞ்சும், குழவியுமாகத்தானே சுனாமி அள்ளிக் கொண்டு போனது? சுற்றுலாக் காண வந்த சிறுவன், தன் பெற்றோரை இழந்துவிட்டு கையில் ஒரு பலகையுடன் நின்றானே. அப்பையனாக நான் இருந்தால். நந்தகுமாருக்கு நெஞ்சு துடித்தது. அல்பம். மகா அல்பம் வாழ்வு! இதற்குப் போய் ஊரை விட்டு, உறவை விட்டு இங்கு தனியாக வாழ்கிறோமே! அம்மா இந்தச் சேதி கேட்டால் பதறி விடுவாள். அவளுக்குத் தாங்காது. உடனே ஊர் திரும்பிவிடு என்பாள். ஊரில் இருந்தால் மட்டும் சாவு விடுமா என்ன? வருவது என்றும் வந்தே சேரும். எவ்வளவு பேசினாலும், யோசித்தாலும் மரணத்தின் பிடிக்குள் பொழுதுகளை கற்பனை செய்ய முடிவதே இல்லை. நினைக்க, நினைக்க வாழ்வு நிலையானது என்றே சொல்கிறது. ஏனெனில் நினைத்தல்தானே வாழ்வு. நினைவற்ற பொழுதுகளை எப்படி நினைக்கமுடியும்? இவ்வளவு நிலையாமையிலும் உலகம் சௌந்தர்யமாக இருந்தது. ஏரி, குளம் போல் கடல் தென்றல் தவழ சிலிர்த்துக் கொண்டிருந்தது. நீலக்கடலுக்கு போட்டி போட்டுக் கொண்டு வானம் வெளிர்த்திருந்தது. மலர்கள் சிரித்தன. மக்கள் சிரித்தனர். மலைகள் சிலிர்த்தன. உலகமே மதுரமாக நின்றது. நந்தகுமார் மெல்ல, மெல்ல நிலையாமை எண்ணத்திலிருந்து விடுபட்டு, முடி வெட்டிக் கொள்ள வேண்டுமென்று பல வாரங்களாக ஒத்தி போட்டதை நினைத்துக் கொண்டான். கால்கள் தானாக முடிவெட்டும் நிலையத்திற்குப் போனது.

ரிச்சார்டு ஹேர் கட்டிங் சலூன் கல, கலவென்று இருந்தது. நிறையப் பெண்கள். எல்லோரும் அன்று இந்தோனிசிய உடையில் இருந்தனர். கலர் புல்லாக இருந்தது! நிறையப் புதிய முகங்கள். மாற்றிக் கொண்டே இருப்பார்கள் போல. கதவைத் திறந்து வரவேற்றவன்...அவன்தான்! அவள் இல்லை! கொரியப் பையன்கள் சுத்தமாக மீசையை வழித்து விடும்போது வித்தியாசமே தெரிவதில்லை. எல்லோருக்கும் குழந்தை முகம். எல்லோரும் கிராப் வெட்டிக் கொள்கின்றனர். எல்லோரும் முடிக்குச் சாயம் பூசிக்கொள்கின்றனர். இவனிடம் கொஞ்சம் பெண் வாடை கூடவே இருந்தது. தொள, தொள என்று அலிபாபா பேண்ட் வேற. பாவடையா? காற்சட்டையா என்று கவனித்துப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்! அவன் என்னை உள்ளே அழைத்து சோபாவில் உட்காரச் சொன்னான். அருகில் ஒரு வாண்டு தனியாக உட்கார்ந்து இருந்தது. அவளை நோக்கி நந்தகுமார், "என் சின்ன ராணியே! நான் உன் அருகில் அமரலாமா?" என்றான். அது இவனைப் பேந்தப் பேந்தப் பார்த்தது. 5 வயது இருக்கலாம். நல்லவேளை இவன் மீசையையும், கிருதாவையும், இன்னும் செதுக்கப்படாத முடியையும் பார்த்து பயந்து "அம்மா!" என்று ஓவென அலறவில்லை. அந்த மட்டுக்கு நல்லது என்று அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். உங்களுக்கு குடிக்க என்ன வேண்டும்? எதாவது ஜூஸ்? தேனீர்? காபி? என்று கேட்டாள் மேனேஜர். அப்படித்தான் இருக்க வேண்டும். இங்கு யார் மேனேஜர், யார் சிப்பந்தி என்பதே தெரிவதில்லை. எல்லொரும் பணிவாக இருக்கிறார்கள். எல்லோரும் வாடிக்கையாளர் மேலேயே கவனமாக இருக்கின்றனர். அவர்களைக் கவர்ந்து தக்க வைத்துக் கொள்வதே வியாபார தந்திரம். காபி எனச் சொல்லிவிட்டு சலூனைப் பார்த்தான். ஏறக்குறைய 20 பேர்களுக்கு மேல் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு சத்தம் இல்லை. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள சின்ன மைக்ரோபோன் வைத்திருந்தனர். என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே கேட்குமா? என்று நந்தகுமாருக்குத் தோன்றியது. எல்லோரும் முக மலர்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தனர். கீழே விழும் முடியை ஒரு பணிப்பெண் சுத்தமாக வாரிக்கொண்டே இருந்தாள். இடம் அவ்வளவு சுத்தமாக இருந்தது. சலூன் என்பது ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகிறது. நந்தகுமார் வளர்ந்த ஊரில் அரசியல் கிட்டங்கிக்குப் பெயர் சலூன் என்பது. முடி வெட்டுபவர், வெட்டப்படுபவர், உட்கார்ந்து இருப்பவர் என்று எல்லோருமே கார சாரமாகப் பேசிக் கொண்டிருப்பர். சில நேரங்களில் வாக்குவாதம் வந்துவிடும். உங்க தலைவர் என்ன செஞ்சாரு? இவரு வண்டவாளமென்ன? எனக்கேள்வி சூடாகும். முடி வெட்டிக் கொள்ளப்படுவர் தலையைத்திருப்பி பேசவிடாதவாறு திருத்துபவர் இறுக்கிப்பிடித்திருப்பார். ஆத்திரத்தில் ஒரு முறை முடி வெட்டிக் கொண்டிருக்கும் கத்தரிக்கோலைப்பிடிங்கி எதிராளி மேல் எறிந்துவிட்டார். நல்லவேளை நந்தகுமார் தப்பித்தான். இந்தக் கசமுசா, அழுக்குப்பிடித்த, சலவையே செய்யாத துணி, முடி திருத்துவரிடமிருந்து வரும் மலபார் பீடி நாற்றம் இவையெல்லாம் நந்துவை மிரட்டும். அப்பா சொல்கிறாரே என்று முடிவெட்டிக்கொள்ளப் போவான். இல்லையெனில் அடிவிழும்!

அது சலூன் என்பதால் எல்லாவகையான சேவையுமுண்டு. நலுங்காமல், குலுங்காமல் வரும் நங்கைகள் கையிலிருக்கும் நகப்பூச்சை நீக்கிவிட்டு புதிதாக போட்டுக் கொள்ள இங்கு வருவர். சும்மா, முன்னால இருக்கும் இரண்டு முடியைத் திருத்தி வாரக்கடைசியில் புதுமை செய்ய வருவாள் ஒரு பெண். இருக்கின்ற வர்ணத்தைப் போக்கிவிட்டு பச்சை, மஞ்சள் என்று கலந்து அடி என அடம்பிடிப்பாள் ஒரு மாது. நேரான முடியைச் சுருள வைப்பாள் ஒருத்தி, சுருட்ட முடியை நேராக்குவாள் இன்னொருத்தி. பள்ளிச்சிறுவர்கள் மொட்டையடித்துக்கொள்ளாத அளவிற்கு குறையாக முடிக்குறைப்பு செய்வர். சலூன் நடத்துவது சுவாரசியமான தொழில்தான் என நினைத்துக்கொண்டு பக்கத்து வாண்டுவைக் கவனித்தான் நந்தகுமார். அது தனிமையின் சோகத்தில் தூங்கி வழிந்து கொண்டு இருந்தது. அம்மா எங்காவது ஒரு மூலையில் கருப்பு முடியை பளுப்பாக்கிக் கொண்டிருப்பாள். இது தூங்கி ஒரு பக்கம் சாயும். தாங்குவதற்கு ஒன்றுமில்லை என்பதால் துடித்து தலையை நேரே வைக்கும். அடுத்த நொடியில் தலை அங்கு சாயும். மீண்டும் துடிக்கும். நந்தகுமாருக்குக் காணச் சகிக்கவில்லை. குழந்தை என்ன பாடு படுகிறது. கன்னமும், அதுவும் அப்படியே குலாப்ஜாமூன் மாதிரி. அப்படியே விழுங்கிவிடலாம் போன்ற அழகு. முடியை மிக லாவண்யமாக மேலே வைத்து கிளிப் செய்திருந்தது. அதனால் செக்கச் செவேல் என்று காதுகள் கண்ணாடி வெளிச்சத்தில் மின்னின்னின. அப்படியே அள்ளி மடியில் போட்டுக்கொள்ளத் துடித்தது நந்தகுமாருக்கு. யார் பெத்த பிள்ளையோ. இவன் பாட்டுக்கு உரிமை கொண்டாட, அது தப்பாகிவிட்டால். யார் அந்தத் தாயார் என்று ஒரு நேட்டம் விட்டான். யாரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை. குழந்தை சரியாகத்தூங்க முடியாமல் அவதிப்பட்டது. மிக நாகரீகம் தெரிந்த குழந்தையாக இருக்க வேண்டும். வாரிச் சுருட்டிக் கொண்டு சோபாவில் விழுந்து படுக்காமல் முடிந்த மட்டும் அம்மா விட்டுப் போன நிலையில், உட்கார்ந்த படியே தூங்கப் பார்த்தது. உடல் என்ன செய்யும்? தூக்கம் வந்தால் தள்ளாடத்தானே செய்யும். பெரியவர்களே தடுமாறும்போது, சிறு குழந்தை என்ன பாடு படும்?

நந்தகுமாரால் இனி ஒரு நிமிடமும் பொறுக்க முடியவில்லை. அப்படியே குழந்தையைத் தூக்கி தன்னருகில் கொண்டு வந்தான். தன் மீது சாய வைத்தான். தூக்கக் கலக்கத்திலிருந்த சிறுமி கண்டு கொள்ளவில்லை. ஆயினும் அதற்கு இன்னும் தோதாக தூங்க வரவில்லை. பக்கத்தில் சிறு, சிறு தலையாணிகள் இருந்தன. சாயும் அடித்து, உலரும் காலம் வரை மடியில் தலையாணி போட்டுக்கொண்டு புத்தகம் வாசிப்பதற்காக உள்ளவை. ஒன்றை எடுத்து தன் மடியில் வைத்தான். குழந்தையை லாவகமாக அணைத்துக் கொண்டான். அது தலையணையில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கி விட்டது. அப்பாடா! என்றிருந்தது. கொஞ்ச நேரத்தில் இவனை முடிவெட்ட அழைத்துவிட்டனர். தூக்கம் கலையாமல் குழந்தையை படுக்க வைத்தான். பணிப்பெண் உதவி செய்து குழந்தையை சோபாவிலேயே தூங்க வைத்தாள்.

நந்தகுமாருக்கு இங்கு முடி வெட்டுவது பிடிக்கும். சில நேரம் பெண்கள் வெட்டுவர். அவர்கள் மெல்லிய கைகள் படும்போது இவன் உடல் சிலிர்க்கும். தலையைக்கழுவி சுத்தம் செய்யும் போது சில பெண்கள் மஜாஜ் செய்வர். அதுதான் இவனுக்கு சொர்க்கம். சுரேஷ் கூப்பிடுவான். "வாடா! அப்படியே போய்ட்டு வருவோமென்று". கணக்குப்போட்டுப் பார்த்தான். ஒரு அரைமணி சுகத்திற்கு ஆகும் செலவிற்கு, வீட்டிற்கு அனுப்பினால் தங்கையின் படிப்புச் செலவுக்கு ஆகும் என்று கணக்கு முடியும். எனவே நந்தகுமார் இந்த முடிவெட்டிக்கொள்ளும் சுகமே தாம்பத்ய சுகமென்று பழகிக்கொண்டுவிட்டான். இப்போது அப்படியானதொரு சுகத்தில் இருந்தான். எல்லாம் முடிந்து காசு கட்டிவிட்டு கிளம்பும் போது பணிப்பெண் அச்சிறுமியை பத்திரமாகக் கொண்டு வந்து இவனிடம் ஒப்படைத்தாள். அடக்கடவுளே! இந்தக் குழந்தை பற்றி மறந்தே போனேனே! இது இன்னும் போகலையா? நந்தகுமார் விளக்கப்பார்த்தான், அது தன் குழந்தை இல்லையென்று. அப்படிச் சொல்லக்கூட மனது வரவில்லை. ஒரு கொரியக்குழந்தையின் தந்தை என்று என்னிடம் நீட்டுகிறாள். அவள் கொள்ளும் நம்பிக்கைக்காவது இந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்விட வேண்டுமென்று ஒரு மனது சொன்னது. இது என்ன விளையாட்டா என்ன? பெற்றோர் பின்னால் தேடிக்கொண்டு வந்தால் என்ன ஆவது? இவன் முழிப்பதைப் பார்த்து பணிப்பெண் ஒருவாறு ஊகித்துவிட்டாள். குழந்தையிடம் உன் அம்மா எங்கேம்மா? என்று கேட்டாள். குழந்தை இவனைப் பார்த்தது. இது என்னடா புது பந்தம். இந்தக் குழந்தைக்கு என் மேல் ஏன் வாஞ்சை வந்தது? என்று அவனுக்குத் தோன்றியது. ஏன் வரக்கூடாது? யாரோ பெற்ற பிள்ளையாக இருந்தாலும் இவன் உள்ளம் உடனே இரங்கியதே. அதை அந்தப் பிஞ்சு உள்ளம் புரிந்து கொள்ளாதா? நந்தகுமாரும் குழந்தை அம்மாவைக் கண்டுவிடும் என்று பார்த்தான். அவள் அம்மாவை அங்கு காணவில்லை. இது என்ன கிரகச்சாரம்! குழந்தையைக் கூட்டிக்கொண்டு வந்தவளுக்கு திரும்ப அழைத்துக்கொண்டு போகத் தெரியாதோ? அப்போதுதான் அவனுக்குத் தோன்றியது, கூட்டிகொண்டு வந்தது ஏன் தந்தையாக இருக்கக்கூடாது? எல்லோரும் அம்மாவைக் காட்டு என்றாள் அந்தச் சிறுமி என்ன செய்வாள்? தாய்க்கு குழந்தை என்பது வேற்றுயிர் அல்லவே. அது அவள் உடை போல் அல்லவா? நீங்காதே!

இவனால் கூட்டிக்கொண்டும் போகமுடியாது, விட்டுவிட்டு வரவும் மனசில்லை. அந்தச் சிறுமி தூங்கிய கண்களுடன் இவனையே பார்த்து நின்றது.

ஜில்லென்ற காற்று வீச அடுக்குமாடிக்கு வரும் போது அவனுக்குத் தோன்றியது, இன்று செத்திருந்தால் இந்த அன்பை அனுபவித்திருக்க முடியாது என்று. அந்தக் குழந்தை அவன் கண்களிலேயே நின்றிருந்தது.

அன்று வசந்தம் வந்திருந்தது அவனுக்கும்.

(எந்தெந்தப் பத்திரிக்கைக்கு எப்படி அனுப்பலாம் என்பது போன்ற யோசனைகள் வரவேற்கப்படுகின்றன ;-)

ஞானபீடக் காற்றே, தமிழ் பக்கம் வீசே!

கொஞ்ச நேரத்திற்கு முன்தான், 'நேசமுடன்' வெங்கடேஷ் ஜெயகாந்தனுக்கு இந்தியாவின் மதிக்கத்தக்க இலக்கிய விருது ஆன ஞான பீடப்பரிசு கிடைத்திருப்பதாகச் சொன்னார். உடனே எழுதுகிறேன்.

குதுகூலமாக இருக்கிறேன். 25 வருடங்களுக்குப் பிறகு. அகிலனுக்குப் பிறகு ஞானபீடக் காற்று தமிழ் பக்கம் வீசியிருக்கிறது. எத்தனையோ முறை இது குறித்த என் ஆற்றாமையை பல மடலாடற்குழுக்களில் தெரிவித்துள்ளேன். சாகித்ய அகாதெமி உ.ஆர்.அனந்தமூர்த்தியை லண்டனில் சந்தித்த போது இது பற்றி கலந்துரையாடி இருக்கிறேன். (அப்போது வெளி வந்த கருத்துக்களும் இம்மடலில் அடக்கம்) இது நிச்சயம் ஒதுக்கமுடியாத அவரின் (ஜெயகாந்தனின்) தங்கத்தமிழுக்குக் கிடைத்த பரிசு. ஆயினும் இவ்வளவு மெத்தனம் தமிழ் இலக்கிய வட்டத்தில் இருக்கக்கூடா!து. இப்படித்தான் ஞானபீடம் தமிழுக்கு வர வேண்டுமெனில் அடுத்த பரிசு வர இன்னும் எத்தனை மாமாங்கங்களோ! தமிழ் எழுத்தாளர் சங்கம் இருந்தென்ன பிரயோஜனம்? தமிழ் நவீன இலக்கியத்தை தமிழ்நாட்டிற்கு புறத்தே உள்ள மானிலங்களுக்கு, நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது இவர்கள் கடமை இல்லையா? மலையாள, கன்னட எழுத்தாளர்களுக்கிடையே உள்ள Lobbying தந்திரம் ஏன் நமக்கில்லை. எப்போதும் தமிழ் இலக்கிய வட்டத்தில் பொச்சுக்காப்பும் பொறாமையும்தான். ஒருவர் எழுத்தை ஒருவர் புகழுவதில்லை. ஆரோக்கியமான விமர்சனம் என்பதில்லை. அடாவடித்தமும், அழுச்சாட்டியமும்தான் அங்கு கோலோச்சுகிறது. மலேசிய எழுத்தாளர்களைப் பாருங்கள் தங்கள் படைப்புகளைக் கூட்டாக உலக அரங்கிற்கு எடுத்துச் செல்கின்றனர். இலக்கியம் பிசினஸ் அல்ல. எனவே இங்கு போட்டிக்கும், பொறாமைக்கும் ஏது இடம்? இங்கு ரசனை வேறுபாடு இருக்கலாம். ருசி வேறுபாடு இருக்கலாம். ஆனால் வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது, அடிதடியில் இறங்குவது, கொச்சையாக நோகடிப்பது, வன்முறை இதற்கு இலக்கியத்தில் இடமேது? மனிதனை மேம்படுத்துவது இலக்கியம். காலத்தால் நிற்கும் இலக்கியச் செல்வங்களைக் கண்ட தமிழின் இன்றைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இப்படி நொந்து போயிருக்கும் போழ்தில் அமுதாக இச்சேதி எம் காதுகளில் விழுகிறது. இதில் நண்பர் மாலனின் பங்கும் கணிசமானது. கொஞ்ச நாளுக்கு முன் அவர் ஒரு கணிப்பு நடத்தினார். அதில் ஜெயகாந்தனை முன் மொழிந்தவர்களுள் நானும் ஒருவன்.

ஜெயகாந்தனின் ஞானபீடப் பரிசு நம் கௌரவத்திற்குக் கிடைத்திருக்கும் பரிசு. ஜெயகாந்தனுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். 'திசைகள்' மாலனுக்கு நன்றிகள்.

பால் சமன்பாடு

மின்சாரம் கிராமங்களுக்கு வந்து கொண்டிருந்த காலம். சுவிட்சைப் போட்டா லைட்டு வருமா? லைட்டைத் தொட்டா சுவிட்சு ஆடுமாங்கற காலம் :-) எனவே, மக்களுக்கு மின்சாரத்தின் அவசியம் பற்றி, அதே நேரத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில ஒழுக்கங்கள் (never leave a 'live wire' uninsulated etc.,) பற்றி அறிந்து கொள்ள ஆவணப்படம் போடுவார்கள். நகைச்சுவை நிரம்பிய instructive films!
நேற்று அதுபோல் எங்கள் ஆய்வகத்தில் ஒரு படம் போட்டார்கள். அலுவலங்களில் ஆபீசர்கள் தங்கள் காரியதரிசினிகள் மற்றும் கீழ் நிலை அலுவலகர்களிடம் பால் நோக்கு கொண்டு நடந்து கொண்டால் என்ன செய்ய வேண்டுமென்று. 'அழகியும், திட சித்தமும்' என்பது படத்தின் தலைப்பு. வழக்கமான கதைதான். உயரதிகாரி பெண்களைத் தொட்டு, தொட்டுப் பேசுவார். இணங்காத பெண்களின் சம்பளத்தில் அல்லது புரோமோஷனில் கை வைப்பார் என்பது போன்று. இப்போது டெலிபோன் காமிரா இருப்பதால் இவள் தோழி அந்த ஆள் வழிந்து, வழிந்து தொடும் போது தெரியாமல் போட்டோ எடுத்துவிடுவாள். பெரிய அதிகாரியிடம் சொன்னால் அவரும் ஆண். எனவே அதிகமாக ஒன்றும் நடக்காது. எனவே அவள் "பால் சமன்பாடு ஒன்றியத்தில்" போய் மனுச்செய்வாள். அவர்கள் வந்து ஆபீசில் பேசியும், அவர்கள் அலுவலகத்திற்கு இவர்களை அழைத்துப் பேசியும் இந்த மனிதருக்கு புத்தி வராது. கடைசியில் அவள் இவனுக்கு வக்கீல் நோட்டீசு கொடுத்து விடுவாள். அது மானப் பிரச்சனை ஆகிவிடுவதால் அவன் தானே ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுவதாக கதை முடியும். இப்படியொரு ஒன்றியம் கொரியாவில் இருப்பது அப்போதுதான் எனக்குத் தெரியும்!

உலகம் முழுவதும், குறிப்பாக ஆசியா, மத்திய கிழக்கில் இது போன்ற படங்களை அடிக்கடி போட்டுக் காட்ட வேண்டும். 1. பெண்களுக்கு முதலில் உரிமை கேட்கும் தைர்யம் வரும், 2. ஆண்களுக்கு கொஞ்சம் பயம் வரும்.

எனது பல்கலைக் கழக அனுபவம் வேறு மாதிரி. ஆண்களுடன் போராடுவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்ட ஒரு பெண் பேராசிரியர் இயல்பாகவே மெல்லுணர்வு கொண்ட ஆண்களையும் அரட்டி மிரட்டி விடுவார். அந்த வடுக்கள் இன்னும் கூட நெஞ்சிலுண்டு. சமன்பாடு என்பது வன்முறையால்தான் வரவேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லாதவன் நான். பெண்களில் ஆயிரம் வகை இருப்பது போல் ஆண்களிலும் ஆயிரம் வகையுண்டு. அவரவர் வளர்ப்பைப் பொறுத்த விஷயம். பெரிய குடும்பங்களில், நிறைய பெண்கள் உள்ள குடும்பங்களில் வளர்ந்த ஆண்களின் 'பா'வமே வித்தியாசமா இருக்கும். திமிர் பிடித்த ஆண்கள் இருப்பது போல் திமிர் பிடித்த பெண்களும் நிறைய உண்டு. வளரும் காலங்களில் நமது பெற்றோர், உறவினர் நமக்குக் கொடுக்கும் அன்பு, தன்னம்பிக்கை போன்றவையே நாம் பின்னால் பொறுப்புள்ள பிரஜையாக (குடிமகன் என்பது 'ன்' விகுதியில் முடிகிறது!) வாழ்கிறமோ என்பதை நிர்ணயிக்கிறது. உலகின் காணும் ஆண்/பெண் வன்முறைகளுக்கு பாதிக்கு மேல் காரணம் அன்பற்ற இளமைப் பருவம்தான். அக்கா, தங்கைகளோட வளரும் சூழல் தன்னிச்சையாக குழந்தைகளிடம் ஒரு பால் சமன்பாட்டைக் கொண்டுவரும். அச்சமன்பாடு குலைந்து போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது சமூகத்தின் பொறுப்பு. இந்த peer group ஏத்தி விடுவதில்தான் பாதிக்கு மேல் கெட்டுப்போகிறார்கள்.

ஆனால் அடிப்படை உரிமை கூட இல்லாது, வாய் ஊமையாய், கொத்தடிமையாய் கிடக்கும் மூன்றாம் உலக நாட்டுப் பெண்கள் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருப்பதால் "பால் சமன்பாடு" பற்றி அழுத்திச் சொல்வதில் தவறில்லை. சில நேரங்களில் ஒரு பதட்டத்தில், exentric-ஆக நடந்து கொள்ளும் பெண் விடுதலைவாதிகளையும் அணுசரனையோடு காண்போம். ஏனெனில் நாம் வேண்டுவது பால் சமன்பாடு, அதன் உண்மையான அர்த்தத்தில்!

(வாரக் கடைசியில் எழுத வேண்டியதாய் போய்விட்டது. ஆபீசில் உட்கார்ந்து வலைப்பூ வாங்கும் வாடிக்கையாளர்கள் இதைப் பார்க்கமுடியாது :-( புதன் கிழமை எழுதினால் வலைப்பதிவு அதிகம் கவனம் பெறுகிறது!)

அனைத்துப் பாதைகளும் அவளிடமிருந்து....

மனது, உள்ளம் அரிசி உலை மாதிரி எப்போதும் கொதித்துக் கொண்டிருக்கிறது!. அது சில நேரங்களில் தானாகவே அமைதியாக இருக்கிறது. அந்த நேரங்களில் காலைப் பொழுது (வைகறை) மிக முக்கியம். நெஞ்சு அடங்கியிருக்கும் காலங்களில் சில பிரார்த்தனைகளை உள்ளே போட்டு நாளைத் தொடங்கலாம்.

ஜெயஸ்ரீ அரவிந்த் அவர்களின் இனிய குரலில் உத்பவா ஒரு
பிரார்த்தனாவளி (நித்ய பிரார்த்தனைகள்) அளித்துள்ளது. மிக இனிமையாக உள்ளது. வழக்கத்திற்கு மாறாக பிரார்த்தனை பெரிய தாயாருடன் ஆரம்பிக்கிறது.

கேட்டுப் பாருங்கள். அமைதியான சூழலில் கேளுங்கள். அதிகாலையில் கேளுங்கள். கூச்சலின் கூச்சலாக, பஜனையின் பஜனையாக (ஐயப்பா சீசன் இல்லாமல்), ஸ்லோகக் கூச்சலின் கூச்சலாக (ரங்கநாதன் தெருவிலோ, அடுத்த வீட்டுப் பெரிய மாமி உச்ச குரலில் பாடும் சமயங்களோ) இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் :-)

சிந்தனை செயல் இழக்கும் போது உள்ளம் தெளிகிறது

"எழுதுவது என தொடங்கிவிட்டாலே போலித்தனங்கள் வந்து விடுகிறது. நினைப்பதை எழுத இயலாமல், சொற்களை எழுதிக் கொண்டிருக்கிறோம். அர்த்தங்களின் அர்த்தங்களை உணராமல், வெறும் வார்த்தைகளால் நம் சார்பினை முன்வைக்கின்றோம்"

எனும் கிருஷ்ணமூர்த்தியின் மேற்கோளுடன் இந்த நட்சத்திர வாரத்தை தொடங்கியிருக்கிறார் நாராயண். சிந்தனைகளின் குணாம்சமே இன்னொரு சிந்தனையைத் தூண்டுவதுதான். அது ஒரு ரிலே ரேஸ். ஓடிக்கொண்டே இருக்கும். நேர்கோட்டில் அல்ல. சில நேரம் நேரே ஓடும். அப்புறம் ஒரு வட்டமடிக்கும். பின்குறுக்கே பாயும். சடாலென திரும்பிப்பாயும். முன்னே கிளம்பி பின்னே பாயும். சிந்தனையை ஒழுங்காக யாராலும் தொடரவே முடியாது. ஏனெனில் சிந்தனையின் அடிப்படை அமைப்பே ramdom jump-தான். கொஞ்சம் தீப்பொறி மாதிரி. பட்டு, பாட்டு என்று வெடிக்கும். பொறி எங்கு தோன்றும் எத்திசையில் விழும் என்று தெரியாது. ஆனால் பொறித்துக் கொண்டே இருக்கும்.

இப்படிச் சில்லரையாய் தோன்றும் சிந்தனைகளை எழுத்தாக வடிக்க முடியுமா என ஒரு பரிசோதனைக் கதை எழுதினேன். உதிரிப்பூக்கள் என்று பாரிசில் வெளிவரும் பத்திரிக்கையில் வெளியிட்டேன். அதில் தொடர்பு இருப்பதுபோலிருக்கும் தொடர்பு இருக்காது. ஆனால் கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல் சிந்தனையைப் பார்த்தவுடன் அது அவிந்துவிடும். அந்தப்பக்கம் திரும்பியவுடம் மீண்டும் பொறிக்கும். எனவே நம் எழுத்து என்பது செயற்கையாக ஒருமுகப்படுத்திக் கொண்டு எழுதுவதே. அப்படிச் செய்யவில்லையெனில் எழுதவே முடியாது. ஆனால், அந்த எழுத்து உண்மையின் சரியான பிரதிபலிப்பு என்று சொல்ல முடியாது. இது குவாண்டம் - கற்றை இயற்பியல் பரிசோதனை மாதிரி. சிந்தனை நாம் பார்க்கும் விதமாகவே திரும்பும். நாம் கவனிக்கிறோமென்றால் அது இருக்காது. ஆனால் அதன் உதவியால்தான் எழுத முடியும். ரொம்ப சிக்கலான விஷயம்.

போலியோ, கற்பனையோ...நட்சத்திரம் என்றவுடம் கோர்வையாக நட்சத்திரங்கள் என்ற வார்த்தை தொடர்பான சேதிகளை சேகரித்து எழுதுவது ஒன்றுதான் பிராக்டிகல் வழி. உண்மையாக ஜீவ ஒளியில் எழும் எழுத்து எப்படியிருக்குமென்று தெரியவில்லை.

இப்படி யோசித்தோமெனில் மௌனித்துவிடுவோம் என்று தோன்றுகிறது. இந்த கோயன் எனும் ஜென் கவிதை வடிவம் சிந்தனையை செயல் இழக்க வைக்கும் இடியாப்ப முடிச்சுகள் கொண்டது. சிந்தனை அசந்து போய் அடங்கிவிடும். அப்போது உள்ளம் புலம்படும்.

மாறன் மடல்

001

பார்த்தன் கண்ணனைக் காண மதுரை வருகிறான். அவனது அரண்மனையிலேயே தங்குகிறான். ஒரு நாள் இரவு வாயிலில் யாரோ ஒருவர் புலம்புவதைக் கேட்டு பார்த்தன் விழித்து என்ன விஷயமெனக் கேட்கிறான். வைதீகனொருவன் தன் மனைவி பிரசிவிக்கும் குழந்தைகள் யாவும் பிறந்த சிறு பொழுதில் காணாமல் போய்விடுவதாகவும் இதைக் கண்டறிய வேண்டியது அரசின் கடமை என்பதால் முறையிட வந்துள்ளதாகக் கூறினான். கண்ணன் இன்னும் நித்திரையில்! எனவே பார்த்தன் தானே அக்கடமையை தலையில் போட்டுக்கொண்டு அந்தணனைக் காப்பதாய் உறுதியளிக்கிறான். தான் அதில் தோற்றால் தீக்குளிப்பதாயும் சபதம் செய்கிறான். பார்த்தனின் காப்பிலும் பிறந்த மகவு மறைந்து போகிறது. பார்த்தனும் பல்வேறு லோகங்களுக்கும் பயணப்பட்டு தேடிக் களைத்து இறுதியில் உயிர் துறக்க ஆயத்தமாகிறான். அது பொழுது மாயக்கண்ணன் அவனிடம் வந்து என்ன பிரச்சனை என்றறிந்து தான் உதவுவதாகச் சொல்கிறான். பார்த்தன் போகமுடியாத உலகுகள் உண்டென்றும் அதனதன் அதிபதிகளுடன் சென்றால் அன்றி உட்புகமுடியாது என்று கூறி பார்த்தனையும், வைதீகனையும் அழைத்துக்கொண்டு பரஞ்சோதி குடிகொள்ளும் பரமபதத்திற்கு இட்டுச் செல்கிறான். அங்கிருந்த அந்தணினின் பிள்ளைகள் நால்வரை அவை எவ்வப்பொழுது மறைந்ததோ அக்கணக்கு மாறாமல் அதனதன் வயதில் திருப்பி எடுத்துத்தருகிறான் என்பது கதை.

இதை மாறன் என்ற இயற்பெயர் கொண்ட நம்மாழ்வார் இப்படிப் பாடுகிறார்...

இடரின்றி யேஒரு நாளொரு போழ்தில்எல்
லாஉல கும்ககழியப்
படர்புகழ்ப் பார்த்தனும் வைதிக னும்உடன்
ஏறத்திண் தேர்கடவிச்
சுடர்ஒளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்த வனைப்பற்றி
ஒன்றும் துயர்இலனே. (தி.மொழி 3-10-4)

பாடல் பொருள் புரியாத அளவு செற்சொற் கொண்டதல்ல. ஆனால் இதைப் புரிந்து கொள்ள வெறும் தமிழறிவு மட்டும் போதாது. புராண, இதிகாசப் பரிட்சயம் வேண்டும். எனவேதான் திருவாய்மொழிக்கு சரியான பொருள் கொள்ள பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு உரையாசிரியர் செய்வித்துத் தந்திருக்கும் உரைகள் முக்கியமாய் படுகின்றன. இக்கதையை திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும், திவ்யகவியும் மேற்கோள் காட்டுகின்றனர்.

இந்தக் கதையில் சூட்சுமமான ஒரு நேர்காணல் பற்றிப் பேசுகிறார் மாறன். அதாவது சுடர் ஒளியாய் நிற்கின்ற பரமபத நாதனை அதன் அங்கமான கண்ணன் தரிசிக்கும் காட்சி. இது எப்படி சாத்தியமாகும்? ஏதோ அறிவியல் புனைவு போல் போகிறது கதை. நம்மை நாமே நேர்காணல் செய்தால் எப்படியிருக்கும். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே. கண்ணாடி முன் நில்லாமல் நிஜமாகவே நம்மை நாம் எதிர்சேவை செய்ய வேண்டும்.

சமீபத்தில் வந்த ஹாரிபாட்டர் படத்தில் கூட இப்படியொரு காட்சி வருகிறது. அதில் காலப்பயணம் செய்து தாங்கள் செய்த ஒரு சிறுபிழையைத் திருத்துவதாக வரும். அதில் ஹாரிபாட்டர் இடரில் மாட்டிக்கொண்டு உயிர்விடும் தருவாயில் அவனது தந்தை அரூபமாக, ஒளி வடிவில் வந்து காப்பதாக வரும். இதையே ரிவர்சில் போய் பார்க்கும் போதுதான் தெரியும் தன்னைக் காத்தது தன் தந்தையல்ல தானேயென்று. மிக சுவாரசியமான twist. ஆனாலும், கால, வெளிப்பரிமாணங்களில் ஒன்று தன்னையே காணுதல் இயலாது. அப்படிக் கண்டுவிட்டால் சர்வமும் குழம்பிவிடும். எனவே இந்தப்படத்திலும் ஹாரிபாட்டர்-ஹாரிபாட்டர் எதிர்சேவை இருக்காது. ஆனால் பூடகமாக ஒன்று, ஒன்றையே கவனிக்கும், திருத்தும். இந்தப்படம் பார்த்ததும் இந்தக் கதைதான் நினைவிற்கு வருகிறது. எல்லாவகையான சர்ரியலிசமும் நம் புராணங்களில் இருக்கிறது. அள்ள, அள்ளக் குறையாத ஊற்று அது. மகாபாரத்திற்கு ஈடு, மகாபாரதமே!

இந்த நேர்காணல் ஏன் நிகழ்கிறது என்பதின் வியாக்கியானம் அழகு. பரவாசுதேவன் நிர்குணமாக, அரூபனாக, ஞானமூலமாக நிற்கிறார் (நிற்கிறது). ஆனால் அது குணம் கொள்ளும் போது வாழ்வு மிளிர்கிறது, ஆனந்தம் உதிக்கிறது. எனவே கண்ணனின் ராசக்கிரீடைகளில் ஆர்வம் கொண்ட இலக்குமித்தாயாரும் அடிக்கடி பூலோகம் போய்விட, கண்ணனிடம் அப்படி என்னதான் அழகு? என்ன வசீகரம் உள்ளது எனக்காண பரவாசுதேவனே குழந்தைகளை அபகரித்து வருகிறார். இதை சாக்காக வைத்து கண்ணன் வருவான், தான் காணலாமென்று.

மதுராபதியில் அனைத்தும் மதுரம். அவனது கண்கள் மதுரம், நாசி மதுரம், இதழ்கள் மதுரம், அவன் பேச்சு மதுரம். அவனிருப்பதால் அகிலமே மதுரமாய் தெரிகிறது என்கிறார் வல்லபர். இந்த மதுரத்தைக் காண 'பரம்' ஆசை கொள்கிறதாம். நம்மில்கூட எத்தனையோ சௌளந்தர்யங்களுண்டு. நாமே ரசிக்கும் குணங்களுண்டு. நம்மில் ஆகச்சிறந்த அந்தக் குணமுடையவனை(ளை) நாம் சந்திக்க ஆசைப்படமாட்டோமா? அது நிகழ்ந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும். நமது குறைகளைக் களைந்து, நம்மில் உள்ள ஆகச்சிறந்த குணங்களை மட்டும் வெளிக்காட்டும் நம்மை நாம் சந்தித்தால்?

அப்படி நிகழும் ஒரு நாளில், ஒரு பொழுதில் உலகம் கழிந்துவிடும்.

**********************************************************

நீங்கள் விரும்பினால் மாறன் தூரிகை மீண்டும் மலரலாம்....

மரணம் இருத்தலின் சவால்

கலைச்செல்வன் இறந்த இரண்டாம் நாள் லண்டனிலிருந்து கதைத்த கிருஷ்ணராஜா, "என்ன இப்படிப் பண்ணிட்டான்?" என்றுதான் ஆரம்பித்தார்.

இது யதார்த்தமான வசனம் என்றாலும், பொருள்ள வசனம். இறப்பு என்பது இறந்தவருக்கு வாழ்வின் முடிவு. துக்கத்தின் எல்லை கடந்துவிட்ட தருணம். ஆனால் இருப்பவருக்கு இன்னொரு துக்கம். அதனால்தான் இறப்பின் பழி இறந்தவரையே சாருகிறது! கலைச்செல்வனின் இறப்பு நண்பர்கள் வட்டத்தில் ஒரு அதிர்வு அலையை அனுப்பியுள்ளது. பொ.கருணாகரமூர்த்தி கடிதம் அனிப்பியிருந்தார். சுசி எழுதினார். பிராங்போர்ட் றஞ்சி எழுதினார். இதுதான் ஆறுதல். இறந்தவர் நண்பர்களை இல்லாத போதும் கூட வைக்கிறார். இது இறத்தலின் சிறப்பு. இருப்பு தன் இருத்தலை நெரு(க்)ங்கி இறத்தலை எதிர் கொள்கிறது! ஏனெனில் இருக்கும்வரை இருத்தலால் இறப்பை புரிந்து கொள்ளமுடியாது. எனவே இருப்பு பிற இருப்புகளை நெருங்க வைத்துக்கொண்டு இறப்பை நெருங்கிப் பார்க்கும். அப்போதும் ஒன்றும் புரியாது. ஆனாலும் ஏதோ புரிந்துவிட்ட ஆறுதல்!

இறந்தவர் மீண்டும் பிறப்பார் என்பது கேள்வியை ஒத்தி போடும் உத்தி. ஒரு ஆறுதல். ஏனெனில் இறப்பை எந்தக் காலத்திலும் 'இருப்பால்' புரிந்து கொள்ளமுடியாது. எனவே இறப்பைப் பற்றிய தெளிவான ஞானமே நம் துக்கத்தின் விடுதலையாக அமையும். இறப்பு கசப்பானதல்ல. இறப்பே வாழ்வின் விளைநிலம். அங்கிருந்து தோன்றி அங்கே மீண்டும் சங்கமிக்கிறோம். வாழ்வின் நிச்சியமில்லாத் தன்மையின் நிச்சியம் இறப்பு. எனவே இறப்போடு வாழப்பழகவேண்டும். இறப்பு பற்றிய தியானம் சதா இருக்க வேண்டும். இறப்பு பற்றிய பயமல்ல. தியானம். ஞானம். ஒன்பது ஓட்டையுள்ள உடம்பில் காற்று நிற்பதுதான் அதிசயம். நாம் இருப்பது அதிசயம். பேசுவது அதிசயம். எழுதுவது அதிசயம். வாசிப்பது அதிசயம். நீங்கள் ஒரு அதிசயம். கலைச்செல்வன் ஒரு அதிசயம். கலைச்செல்வியும் அதிசயம்.

இறப்பை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று ஜே.கேயிடம் பலர் கேட்டிருக்கின்றனர். அவரது பதில் எல்லோரையும் ஆச்சர்யத்தில் இட்டிருக்கிறது. பதில், "நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்" என்பதே. அழுது, புலம்பி, போட்டோ மாட்டி, பூஜை செய்து, ஒப்பாரி வைத்து ஊர் கூடல் எல்லாம் உங்கள் நினைவிற்கு நீங்கள் ஆற்றும் கிரிகையே. இதனால் இறந்தவனுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதே. இறந்தவரை நினைத்து அழுவது கூட நமது மனச்சாந்திக்கே தவிர வேறொன்றுமில்லை என்கிறார் ஜே.கே! "அழாதே! விடைகொடு" என்பதே அவரின் உபதேசம்.

நண்பர் கலைச்செல்வன் இருந்திருந்தால் இது போல் இன்னும் பல விடயம் கதைத்திருக்கலாம். இல்லை. எனவே உங்களுடன் கதைக்கிறேன்.

ஒழுக்கம் மேன்மை தரும்!

இப்படியொரு தலைப்பில் முனைவர் வாசுதேவன் அவர்கள் இ-சுவடி குழாமில் ஒரு கட்டுரை வடித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் படித்து இன்புருக! இது தஸ்கி 1.7 குறீயீட்டில் எழுதப்பட்டுள்ளது.

மகளிர்தின நினைவுகள்


Photo by N.Kannan

பிறந்தபோது வித்தியாசம் தெரியவில்லை. நீ பொண்ணாய் பிறந்தாயென்று உன் தந்தை மூக்கைத்தூக்கி வைத்துக்கொண்டு போனாராம். அம்மா சொல்லியிருக்கிறாள். அது அவர் பிழை என்ற அறிவியல் சொல்லும் திறம் அக்குக்கிராமத்தில் யாருக்குண்டு? நீ சிற்றாடை உடுத்தி மூக்கு வழிய இரண்டைச்சடையுடன் உலா வந்த காலத்தில் கூட நமக்குள் பேதமில்லை. பள்ளிமுடியும்வரை கூட இல்லைதான். ஆனாலும் என்றோ நீ பெண்ணாக்கப்பட்டாய். இத்தனை வருடங்களுக்குப்பின் உன்னை நான் கண்டபோது மகளிர்தினம். உன் பேத்தியுடன் வந்திருந்தாய். நான் வாழ்த்துச் சொன்னேன். உன் வெட்கம் இன்னும் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிரித்துக்கொண்டே பின் நீ சொன்னதுதான் இந்த நேரத்தில் நினைவில் கொள்ளவேண்டியது. அது இனி நமக்குள் தேவையில்லை, நீயும் நானும் ஒன்று என்றாய். அன்றுதான் மதுரைக்கு கூடல் நகர் என்ற பெயர் பொருத்தமாக இருந்தது.

நேற்று நான் கோயிலிருந்தேன்!
வேறு எங்கு? திருப்புவனம்தான்! அந்தப்பூவணநாதனும், சௌந்தர்ய நாயகியும் நான் விட்டாலும், அவர்கள் என்னை விடுவதாயில்லை. தாயார் சந்நிதியிலிருந்து (ஓ! அம்பாள் சந்நிதி என்று சொல்ல வேண்டுமோ!) ஒரு காட்சி. காலை வெளிச்சம் அப்படியே கோவில் கோபுரத்தைச் சித்திரம் வரைந்திருக்கிறது. அம்பாள் சந்நிதி உள் என்றும் வெளிச்சமாக இருந்ததாக எனக்கு நினைவில்லை. எனவே இருட்டிலிருந்து வெளியே பார்க்கும் போது கோபுரம் மின்னிக்கொண்டிருந்தது. ஓம், முருகா! என்று பெரிதாக எழுதியிருந்தது. கோயில் வாசற்கதவு வழியாகப் பார்க்கும் போது பிரேம் ரொம்பச் சரியாக வந்திருந்தது! அடடா! இப்படியொரு ஆங்கிள் கிடைக்காதே இதைப் படம் பிடிக்க வேண்டுமே! இரண்டொருவர் ஆங்கிளை மறைத்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர்களோ போவதாய் இல்லை. எரிச்சலாய் இருந்தது. போகச்சொல்லலாமென யோசித்த போதுதான் தெரிந்தது, கையில் கேமிரா இல்லை என்பது.

வெளியே வந்து கோயிலின் மேல்வெளிக்குத்தாவி ஏறினேன். கோயிலின் மேற்புறம் பரந்து விரிந்திருந்தது. ஒரு சின்னப் பயம். மேலேயெல்லாம் ஏறக்கூடாது என்பார்கள். கீழிருந்து பார்த்தால் பிரகாரத்தில் நிறைய பக்தர்கள். ஒரு சிறுவன் என்னைப் பார்த்துவிட்டான். அது சரி, எனக்கு என்ன வயதென்று கேட்கிறீர்களா? வயது தெரியவில்லை அல்லது தோன்றவில்லை. வயதும் போய்விடவில்லை. பையன் என்னைப் பார்த்துவிட்டுத் தானும் மேலே வரவேண்டுமென்றான். சரி, இனி பிரச்சனைதான் என்று எண்ணிக்கொண்டு, நழுவுவதற்குள் கோயில் காவலாளி வந்துவிட்டான்.

நல்ல வேளையாக அவன் எங்களைத்திட்டாமல், சிறுவனை மேலே ஏற்றிவிட்டு எங்களுடன் வந்தான். எப்போதும் வெளிப்பிரகாரம், சந்நிதி என்றுதான் போய் பழக்கம். இன்று வெளியே, உயரத்தில் நின்று கோயிலைப் பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது. மேற்பரப்பு, விரிந்து பரந்து இருந்தது. திடீரென்று கையில் மெல்லிய கோல் கொண்டு (பகவர்கள் வைத்திருப்பரே, அது போன்ற கோல்) ஒரு குழு மேலே ஓடிக்கொண்டு இருந்தது. காவியுடை இருந்தது. முதலில் போவோர் இந்தியர்களாக இருக்க அடுத்துப் போவோர் கறுப்பர்களாக இருந்தனர். கோயிலின் மேலே இப்படிக் கூட்டமாக ஓடுவதென்றால் யாருக்குத்தான் ஆர்வம் வராது? கோயில் அமைப்பு என்பது என்றுமே எளிதாக இருந்ததில்லை. இங்கொரு கோபுரம், அங்கொரு கோபுரமென்று முளைத்தவண்ணமிருக்கும். நாங்கள் போவதற்குள் அந்தத் திருக்கூட்டம் எங்கோ மாயமாய் மறைந்து விட்டது. இங்குதான், அங்குதான் எனப் பார்த்த போது கோயில் வெளி பரந்திருந்தது.

திரும்பி தாயார் சந்நிதிக்கு (சாரி, அம்பாள் சந்நிதிக்கு) வந்த போது நான் முன்பு பார்த்த காட்சி இருந்தது, ஆனால் கோயில் கதவு மூடியிருந்தது. யாரோ ஒருவர் நிழலாக என் பின்னால் பார்ப்பது புரிந்தது (இருட்டு வேறு). இப்போது கேமிரா இருந்தது. கிடைத்த ஆங்கிளை வைத்துப் படமெடுத்தேன். கோபுரம் வாசற் கதவின் இடுக்கு வழியாகத் தெரிந்து கொண்டு இருந்தது. அதுவும் அழகாகவே இருந்தது. ஆனால், நான் உறங்கிக்கொண்டு இருப்பதாக ஒரு நினைவு.

காமிராவில் படம் விழுந்திருக்குமா?

காலையில் என் கேமிராவையே பார்த்தேன். சோதித்துப்பார்க்க மனம் வரவில்லை.

படமெடுத்தாச்சு!

நானே நானா?இந்தப்படம் அக்காவும் அவள் பேத்தியும். என்ன செய்கிறார்கள்? கீழேயுள்ள பழைய காலண்டரைப் பாருங்கள். அதில் முருகன் அருள் செய்து கொண்டு இருக்கிறான். இதைப் பார்த்தவுடன் ஸ்ரீமதிக்கு தானும் இப்படி அருள் செய்ய வேண்டுமென்று தோன்றி விட்டது! இவள் முருகனாகிவிட்டாள். அருள் செய்ய ஒரு தொண்டன் வேண்டுமே! பாட்டி கிடைத்தாள். அக்காவின் பாவமும், குழந்தையின் பாவமும் சத்தியம்! ஆச்சர்யம்!!

இது என்னைப் பல நூற்றாண்டுகள் தள்ளி திருக்குறுங்கூரில் தள்ளிவிட்டது.

திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்
திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?
திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
திறம்பா தென்திரு மகளெய் தினவே? - திருவாய்மொழி 5.6.5

இங்கு பாராங்குசநாயகி தான் கண்ணன் என்கிறாள். அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஈதென்ன ஆவேசமோ? என்று நினைக்கிறாள். ஆனால் நம்மாழ்வாரின் இந்நிலையை விளக்க ஆச்சார்யர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது அத்வைதமில்லை, ஏனெனில் ஒட்டிக்கொண்டு தான் நாயகி என்ற பாவமிருக்கிறது. அதே நேரத்தில் தாயாக தானே நின்று கேட்கும் போது 'அது' 'அதுதான்' என்று தோன்றுகிறது! இது விசிட்டாத்துவமும் அல்ல. பதஞ்சலி சொல்லும் சமாதியுமல்ல. பின் என்னதான் இது? பிரேம சமாதி என்கிறார் கிருஷ்ணப்பிரேமி. ஆயினும் இந்நிலை விளக்க அவர்கள் ஆயர்பாடிக்குப் போக வேண்டியுள்ளது. அங்கு ஒரு கோபி தன்னைக் காளிங்கனாக உவமிக்க இன்னொருத்தி கண்ணனாக நாடகமிடுகின்றாள். இப்படி ஒவ்வொருத்தியும் பல்வேறு கண்ணன் கோகுல விளையாட்டை கண்ணனேயாகி செய்கின்றனர். அதுதான் போலும் இதுவும்.

பாட்டிக்கு வயது முத்திவிட்டது. கனி பழுத்துவிட்டது. அதனால் பக்குவம் வந்துவிட்டது. குழந்தைக்கு இன்னும் பக்குவம் வரவில்லை :-) கள்ளமற்ற உள்ளம். அது கடவுள் வாழும் உள்ளமாகவே உள்ளது. ஆக, பாராங்குச நாயகி இருந்த நிலையை இப்படம் தெளிவாகக் காட்டுகிறது.

ஒளி போன பின்பும் மின்னும் பிம்பங்கள்!

இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு ¸தை சொல்லுவார். பிரம்மம் ஒரு நாள் தானே எல்லாமாய் ஆகுமாறு சங்கல்பித்துக் கொண்டதாம். உடனே கருப்பன், சுப்பன், கண்ணகி, கோவலன், கண்ணன், தேவகி, தங்கணி, மணிமாறன் எல்லோரும் உருவாகிவிட்டனர். பாய்ஸ் கம்பெனி, ஸ்திரீ பார்ட்டு என்று எல்லாமும் போட்டுக்கொண்டு இறைவன் விளையாட ஆரம்பித்தார். அவர்தான் பெரிய நடிகராச்சே! எங்கே உருவாக்கிய பாத்திரத்திலேயே மூழ்கிவிடுவாரோ என்ற பயத்தில் »¡னம் எனும் தனது தன்மையைக் காவலாளியாக நிற்க வைத்து விட்டு போயிருக்கிறார். ஒளி வட்டம் விழுந்தவுடன் நடிக்க ஆரம்பித்தவர் அப்படியே காட்சியில் மூழ்கிவிட்டார். இன்பம், துன்பம், அவமானம், குதூகலம், புகழ்ச்சி, இகழ்ச்சி என்று மாறி, மாறி அனுபவித்து அசந்து போகும் வேளையில் 'ஞானம்' மெல்ல வந்து அவரிடம் சொன்னதாம், "அண்ணாச்சி! நாடகம் முடிஞ்சிருச்சு. லைட்டை ஆப் பண்ணப்போறாங்க. லைட் பாயெல்லாம் வந்தாச்சு. அடுத்தாளுக்கு அரிதாரம் கூட பூசியாச்சு. நீங்க மெல்ல உங்க யதாஸ்தானத்திற்கு திரும்பியருள வேண்டியது! என்று.

எனவே கண்ணன் தன் குடிலுக்கு மீண்டதாகக் கதை. பரமஹம்சர்தான் ஆரம்பித்தார் நான் முடிச்சுட்டேன். அதுதானே ஒரு கதாசாரிய லட்சணம்!

நண்பர்களே! it was a great week! மனிதன் வாழ stimulus வேண்டும். இந்த ஒளிப்பாய்ச்சல் ஒரு நல்ல டெக்னிக். நீங்களெல்லாம் என்னோட கூடவே பஜனையிலே சேர்ந்து பாடினது பரம சந்தோஷமா இருந்தது. மதுரையில் வசித்த காலத்தில் கோ.புதூரிலிருந்து அப்படியே மூணுமாவடி வரை நடப்பேன் நண்பர்களோட! அதுபோல ஞாபகம் வந்திருச்சு. என் நண்பர்கள் எப்போதும் என்னுடன் உடன் பட்டது இல்லை. உடன் படும் போது மகிழ்வாய் இÕக்கும். உடன் படாத போது கற்றல் நடக்கும். it was indeed quite educative! பெண்கள் வீனஸ் கிரஹத்து ஆசாமிகள் என்று சுத்தமாய் புரிந்து கொண்டேன். இனிமே அவங்க வம்புக்கே போகமாட்டேன் :-))

இந்த வாரத்தில் வந்த என் மடல்கள் அனைத்திற்கும் நல்ல மதிப்பெண் அளித்து என்னை ஊக்குவித்தீர்கள். எனது படங்களுக்குக் கூட நட்சத்திரம் கிடைத்தது! உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

வலைஞர்களின் வீச்சும், தளமும் விரிந்து கொண்டே போவது தெரிகிறது. நான் 'சொய்ஸ்' பதிவில் சொன்ன மாதிரி பதிவிலும் திகட்டும் வண்ணம் படிக்கக் கிடைக்கின்றன. பரிந்துரைக்கும் பதிவுகளையே படிப்பதற்குள் மூச்சு முட்டுகிறது. சிலரால் தும்பி போல் எங்கும் வட்டமடிக்கமுடிகிறது. நிறைய உள்குழுமங்கள் வந்துவிட்டது தெரிகிறது. பரிந்துரைகள் குழுமங்கள் சார்ந்து அமைவதும் தவிர்க்கவியலாது. தமிழக பத்திரிக்கை உலகம் தந்த 'கவன ஈர்ப்பு' சிலருக்கு உதவுகிறது. வலைப்பதிவு வந்து எழுத ஆரம்பித்து கலக்கல் செய்த வலைஞர்களும் கவனம் பெறுகின்றனர். ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. காத்திரமான படைப்புகளும் உள்ளன. news value மட்டும் உள்ள பதிவுகளும் உள்ளன. இது வளர்ந்து மிளிரும் என்பது திண்ணம். ஆயினும் சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன. இந்த சிண்டிகேஷன் என்ற பிணைப்பு வந்ததால், அது பெறும் கவனத்தால், தனி மனித உள்ளப்பதிவு எனும் நிலை போய் குட்டி, குட்டி பத்திரிக்கைகளாக வலைப்பதிவு மாறிப்போகுமோ என்று தோன்றுகிறது. ஏனெனில், மதிப்பெண், பரிந்துரை என்பதே majority சார்ந்த விஷயம். Majority என்பதை வணிக இதழ் என்று விகிதப்படுத்தினால், வலைப்பூ பல்வேறு வணிக இதழ்களாக மலர்ந்து சிரிக்குமோ? அதன் சிற்றிதழ் காரம் குறைந்து படுமோ? கவன ஈர்ப்பு என்பது எப்போதும் கிசு, கிசு, sensational விஷயங்களுக்கே கிடைக்கும் என்பது இங்கும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது! எனவே இந்த நட்சத்திர ஷொட்டு என்பது தனிமனிதப்பதிவின் தீர்க்கத்தை நீர்த்துப்போக வைக்குமோ? கவன ஈர்ப்பின் எழுதப்படும் பதிவுகளுக்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் அப்பதிவுகள் அழிந்துபடுமோ? இவையெல்லாம் கேள்விகள். Majority opinion-ஆல் நடத்தப்படும் எதுவுமே தனித்தன்மை கொண்டதாக இருக்கமுடியாது. எனவே இந்த சிண்டிகேஷன் என்பது வலைப்பதிவின் எதிர்காலத்தை நடத்தும் natural selection agent-ஆக இருக்குமோ? கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அவரவர் பதிவில் அவரவர் தெரிய வேண்டும். அது முக்கியம். தனித்தன்மை இருக்க வேண்டும். நாம் பத்திரிக்கை நடத்தவில்லை என்ற உணர்வு இருக்க வேண்டும். முடியுமா? காலம் பதில் சொல்லும் பார்ப்போம்.

வலைப்பூவிற்கும் மடலாடற்குழுவிற்கும் சில வித்தியாசங்கள் தெரிகின்றன. பின்னூட்டம் என்பது வலைப்பதிவின் ஓட்டத்தின் வேகத்தைப் பொறுத்திருக்கிறது. புதிய பதிவுகள் வரும் போது பழைய பதிவிற்கு யாரும் பின்னூட்டம் தருவதில்லை. அந்த நிலையில் அது உறைந்து விடுகிறது. ஆனால் மடலாடற்குழுவில் தொடர்ந்து ஊடாடமுடியும். ஆனால் அங்கு எல்லாக்கடிதத்தையும் எல்லோரும் படிக்க வேண்டும். இங்கு அது இல்லை. வலைப்பதிவின் பலமே அதன் privacy தான். அது பொதுமைப்படுத்தலால் நீர்த்துப்போகாமல் இருக்க வேண்டும்!

ஒளி வீசினாலும் வீசாவிட்டாலும் பயணம் நடக்க வேண்டும். கொஞ்சம் அதிக ஒளியால் கண்கள் கூசுகின்றன. இருட்டில் உட்கார்ந்து கொண்டு இரசிப்பதில்தான் ஆனந்தம். அவ்வப்போது தூங்கிக்கலாம். முழிச்சவுடன் பூவையோ, முட்டையையோ வீசிவிட்டு விசிலடிக்கலாம். இனிமே அ¨¾த்தான் செய்யப்போறேன். ஓரமா தூங்கிக்கிட்டு இருந்த ஆள அரிதாரம் போட்டு மேடைக்கு காசியும், மதியும் அனுப்பிச்சுட்டாங்க. மேடைக்கு வந்தபிறகு நடிச்சுத்தானே ஆகணும்! ஏதோ என்னால முடிஞ்சதைப் பண்ணினேன். தினம் கட்டாயம் ஒரு மடலாவது எழுத வேண்டும் என்பது கடமை. கொஞ்சம் மூச்சுமுட்டியது. இனிமே என் நேரத்திற்கு எழுந்து எழுதலாம். ஒளிப்பாய்ச்சல் வேறு எங்கோ இருக்கும்.

சரி அப்ப வரட்டா....

பருந்தின் பாதையில் பார்வை

இன்று ஞாயிறு தொடங்கி இரவெல்லாம் பனிகொட்ட ஆரம்பித்து, பின் மழையாக இன்னும் பெய்து கொண்டிருக்கும் காலைப்பொழுது. நல்ல வெய்யிலும் அடிக்கிறது. நமக்கெல்லாம் வெய்யில் என்றாலே சூடு என்று பழகிவிட்டது. ஆனால், ஜெர்மனி, ஆஸ்டிரியா போன்ற நாடுகளில் நல்ல வெய்யில் அடிக்க கண்களில் குளிர் கண்ணாடி போட்டுக்கொண்டு பனிச்செறுக்குச் செய்வார்கள் என்று சொன்னால் நம்மவர்க்குப் புரியாது. வெய்யில் சுடாது என்ற உண்மையை அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

இன்று என் வாரத்தின் கடைசி நாள். அது திங்கள் மதியம்வரை நீள்கிறது. நான் எதிர்காலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன் அமெரிக்க நண்பர்களைப் பொறுத்தவரை. என் எழுத்துக்கள் இறைவன் சொல் போல் எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்திற்குத் தாவி கடந்த காலத்தில் வஜ்ரப்படுகிறது. இணையத்தின் காலவேடிக்கைகளில் இதுவுமொன்று!

பலருக்கு என் எழுத்து புதிது. அது போல் பின்னூட்டம் தந்த பலர் எனக்குப் புதிதே! அவர்களை அறிந்து கொண்டதில் மகிழ்வே.

இந்த வாரத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமாகப் பட்டன. ஒன்று தமிழ் நடை பற்றியது. சுருக்கமாக உரைநடை vs கவிதை என்பது. இரண்டாவது பெண்மொழி-ஆண்மொழி பற்றியது.

இப்போதெல்லாம் குழந்தைகள் 'அரிச்சுவடி' நிலைக்கு வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையாக கவிதை எழுத ஆரம்பித்து விடுகின்றனர் என்று படுகிறது. இல்லையெனில் கவிதை மொழி இவ்வளவு மலினப்பட்டிருக்காது. இது உரைநடைக்காலம். உரைநடை எல்லோருக்கும் புரிகிறது. கவிதை மொழி புரிவதில்லை அல்லது அது மலினப்பட்டுவிட்டதால் உதாசீனப்படுத்தப்படுகிறது (apathy). இந்த முடிவிற்கு வருவதற்கு காரணம் எனது குறுங்கதை ஏற்படுத்திய சுநாமியை என் கவிதை ஏற்படுத்தவில்லை. கவிதைக்கு ஒரு பின்னூட்டம் கூட இல்லை (ஆனால் படிக்கும்படி பரிந்துரைத்துள்ளனர்). தமிழகத்தில் கவிதையால் புரட்சி செய்த கடைசிக் கவிஞன் பாரதி என்று தோன்றுகிறது. அதற்குப்பின் கவிதை தன் வலுவை இழந்து விடுகிறது. உரைநடை கோலோட்டோட்சத் தொடங்குகிறது.

அடுத்து பெண் விடுதலை பற்றியது. இது 'தலித்' எழுத்து போன்று நிறைய முரண்பாடுகள் கொண்ட ஒரு புலம். ஆண்களுக்கு இங்கு இடமில்லை என்பதிலிருந்து ஆண்கள் செய்வது அனைத்தும் செய்து அதற்கு மேலும் செய்வோம் எனும் நீட்சிவரை அது போகிறது. நாம் வாழுகின்ற சூழலைப் பொருத்தும் இக்கருத்தின் வீரியம் அமைகிறது. பருதா போடுகின்ற நாடுகளில், குண்டியில் சாட்டை வைத்து அடிக்கின்ற சிங்கப்பூர் போன்ற நாடுகளில், 'தழல்' எனும் படம் வெளியானவுடன் குண்டர்களை வைத்து சினிமாத் தியேட்டரைக் கொழுத்தும் இந்தியா போன்ற நாட்டில் இருந்து கொண்டு பெண்ணியம் பற்றி அதிகமாய் சிந்தித்து செயல்பட முடியாது. ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களில் நிறைய சுதந்திரமுண்டு.

ஒவ்வொரு கோடையிலும் கீல் கடற்கரையில் பெண்கள் திறந்த மார்புடன் சிறிய கீழ்மறைப்பு ஒன்றுடன் காற்று வாங்கப்போவது, அதைப் பார்த்து கண்டு கொள்ளாமல் இருப்பது அங்கு வாழும் ஆண்களுக்கு சகஜமாகிப் போனது. முழுநிர்வாண கடற்கரைகளும் உண்டு. பெரியார் உடல் சார்ந்த விடுதலை பெண்ணுக்கு வேண்டும் என்று பேசியவர் ஆதலால் ஜெர்மனி வந்த போது 'நிர்வாண சபையில்' அங்கத்தினராகி மொட்டைக்குண்டியாய் படமெடுத்துக்கொண்டுள்ளார், பெண்களுடன்!

விடுதலை என்பதை எப்படிக்காண வேண்டுமென்று நாம் யாருக்கும் அறிவுரை கூற முடியாது. இப்போது அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகியிருக்கும் Sex and the City எனும் சீரியலில் அப்பட்டமான பாலியல் விடுதலை பேசப்படுகிறது. இது வெறும் sensationalism அல்ல. அங்கு ஆணுக்குள்ள அனைத்து உரிமையும் பெண்ணிற்கும் கேட்கப்படுகிறது. ஆண்களுக்கான பெண்கள் காபரே போல் பெண்களுக்கான ஆண்கள் காபெரே இப்போது மேலைப் பண்பாடாகவே மாறிவிட்டது! My body, My Freedom என்பது அங்கு வேதவாக்கு. நிற்க.

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. நான் 85-ல் அந்த நாட்டைவிட்டுக் கிளம்பியவன். இதுவரை அங்கு சென்று சில வாரங்களுக்கு மேல் வாழ்ந்ததில்லை. அலெக்ஸ் பாண்டியன், அமெரிக்காவில் நடக்கும் சமாச்சாரங்கள் அங்கு நடக்கின்றன எனப் பின்னூட்டம் தந்துள்ளார். இது பேசாப்பொருள் போலும், அதனால்தான் இன்னும் கைப்புண்ணைப் பார்க்காமல் கல்லெறிகிறார்கள். அதனால்தான் எனது கதைக்கு அத்தனை பின்னூட்டம்.

அது உரைநடையின் வெற்றியும் கூட. இதையே கவிதையில் எழுதியிருந்தால் (எழுதியிருக்கிறேன், பாரிசிலிருந்து வந்த ஒரு தொகுப்பில்) இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள் வந்து உரைநடை வெகுவாக வளர்ந்துவிட்டது. சிறுகதை இலக்கிய வகை மிகவும் பரிட்சயப்பட்டிருக்கிறது.

பெண்கள் இந்த மாதிரி விஷயங்களை எப்படிக் கையாள்வார்கள் என்று பெண்கள் சொன்னால் ஒழிய ஆண்களுக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. கீல் நகரில் எனக்கொரு நர்தகியைத்தெரியும். அவர் ஓரியண்டல் நடனம் எனும் எகிப்திய நடத்தில் தேர்ச்சி பெற்றவர். நான்கு குழந்தைகள் பெற்ற பின்னும், உடலை சிக்கென வைத்துக்கொண்டு (பிள்ளை பெறாமலே பத்மா ஏன் இப்படி உப்பிப்போனார்?) நடனமாடிக்கொண்டிருக்கிறார். அவரது கடைசி மகப்பேறு எப்படி நடந்தது என்று அவர் எங்களிடம் வர்ணித்தது மறக்கவியலாது. எப்போதும் மகப்பேறு என்பது ஆஸ்பத்திரியில், டாக்டர்கள் மத்தியிலேயே நடைபெறுகிறது, எனவே கடைசி மகப்பேற்றை வீட்டில், நண்பர்கள் மத்தியில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மாணித்தார். அதை செய்தும் காட்டினார். அவரது உற்ற நண்பர்களை அழைத்து ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு வீட்டு முற்றத்தில் பெரிய நீர் தடாகம் உருவாக்கி இயற்கை முறையில், குடும்ப சூழலில், நண்பர்கள் சூழ (நண்பர்கள் என்றால் ஆணும் சேர்த்தி) அவர் குழந்தை பெற்றதை வாழ்வின் உன்னதமான பொழுதாகக் கருதுவதாகச் சொன்னார். இதை நம்மவர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று தெரியாது. நம்மாழ்வார் சொல்வது போல் 'நிறை' கொண்டவள் தமிழ்பெண். எனவே இது ஒரு பினாத்தலாகப் படலாம். ஆனால், இந்தப் போக்குகளிலிருந்து நாம் முழுவதும் நம்மைத்தனிமைப் படுத்திக்கொள்ள முடியாது. இந்துத்வா பாணியில் அவர்கள் காட்டுமிராண்டிகள் என்று பட்டம் கட்டிவிட்டு கண்ணை மூடிக்கொள்ள முடியாது. காண்டோம் கண்டுபிடித்தது அவர்கள். இன்று எய்ட்ஸ் ஆய்வில் முன்னணியில் நிற்பவர்கள் அவர்கள். பாலியல் என்பதன் இலக்கணம் வெகுவாக மாறிவரும் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம்.

இவையெல்லாம், பொதுவான அவதானங்கள். பெண்ணின் உணர்வுகள் அவளுக்கே சொந்தமானவை. அந்த சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அவளுக்கு என்ன வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். அதை அவள் வேண்டிப் பெறுவாள் என்று நம்பி என் பிதற்றலை முடித்துக் கொள்கிறேன். (இது கடைசிக் கடிதமல்ல :-))

காசி கேட்கும் நன்கொடைகள்!

What's going on in thamizmaNam.com?

காசியோட கடிதத்தலைப்பைப் பாத்துட்டு நானும் எதாவது evangelism பண்ணலாம்ன்னு படிச்சேன். நீங்களும் படிங்க. அவர் இந்த மிகக்குறைந்த காலத்தில் நிறையக் கற்றுக்கொண்டு இன்னும் நிறுவனங்கள் கூடச் செய்யத சேவையை நமக்கு அளிச்சிக்கிட்டு இருக்காரு. நிறைய படிக்கிறார்ன்னு தெரியுதா. சும்மா ஒளிவீச்சு காட்டி எழுதற எங்களுக்கே இதுக்கு எடுத்துக்கற நேரத்தைக் கவனிச்சா மலைப்பா இருக்கு. அவர் இதற்காக எத்தனை இரவுகளைக் கரைத்திருப்பாரோ! எனவே முதல்லே இந்த 'நொள்ளு' சொல்லறதைக் குறைத்துக்கொள்வோம். 'நொள்ளு' எளிது. ஆனா செய்யும் திறன் எளிதல்ல. "இருப்பதை"க் கண்டு உடனே அபிப்பிராயம் சொல்லப்பழகிவிட்டோம். "இல்லை" எனில் எப்படி இருந்திருப்போம் என்று யாரும் யோசிக்கவில்லை போலும். தமிழ்மணம் இணைய உலகில் ஒரு புதிய பாட்டை போட்டுக் கொண்டு இருக்கிறது. புதிய வலைஞர் இலக்கியம் வளர வழிகோலிக்கொண்டிருக்கிறது. இந்தச் சேவை தொடர்ந்து நடக்க வேண்டுமெனில் நாம் அவருக்கு உதவவில்லையாயினும் உபத்திரவம் செய்யாமல் இருக்கக் கற்றுக்கொள்ளுதல் ஒரு தியாகம் என்று கூடச் சொல்லலாம். பாவம் மனிதர் நொந்து போயிருக்கிறார்.

சிங்கையில் கூட இது பற்றிப் பேசினோம். கள்ளவோட்டுப்போடுவதில் கைதேர்ந்த நமக்கு தமிழ் மணத்தில் தெரியும் விளம்பரங்களுகு ஒரு சொட்டுப் போடுவதுமொன்றும் பெரிய விஷயமில்லை. இப்போ பெரும்பாலும் சுப்ரபாதம் கூட கேட்காமல் காலை எழுந்ததும் தமிழ்மணத்திற்குத்தான் வருகிறார்கள். இதை ஒரு இலக்கியச்சோலையாக ஆக்கியிருக்கிறார். எனவே காலையிலே தினத்தந்தி படிப்பது போல் தமிழ்மணத்திற்கு வந்தவுடன் விளம்பரத்தில் ஒரு தட்டு தட்டும் பழக்கதை ஏற்படுத்திக்கொள்வோம். அதன் மூலம் சேகரிக்கப்படும் சல்லிக்காசு இந்த சேவை தொடர்ந்து நடைபெற வழிகோலும். அது மட்டுமல்ல ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு சின்ன நன்கொடை வழியைக் கண்டுபிடிக்கலாம். பெரும்பாலான அமெரிக்க தளங்களில் Paypal வழியாக எளிய முறையில் நன்கொடை வழங்க முடியும். காசி கூச்சப்படாமல் donation என்றொரு சுட்டி போட்டு Paypal account ஒன்றை உருவாக்கிவிடலாம்.

காசியின் சேவை கலைஞர்க்கும் சுவைஞர்க்கும் தேவை! ததாஸ்து! (இப்போ நிம்மதியா தூங்கப்போலாம்..குட் நைட்!)

உயிர்நிழல் ஆசிரியர் பாரிசில் மறைவு

சில நிமிடங்களுக்கு முன் யாகூ அரட்டையில் வந்த தோழி சுபா, உயிர்நிழல் ஆசிரியர் திரு. கனசிங்கம் கலைச்செல்வன் நேற்று ஏற்பட்ட மாரடைப்பில் உயிர் துறந்தார் என்ற துக்க சேதியைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வயது 45.

கலைச்செல்வன் ஒரு தேர்ந்த பதிப்பாளர், ஆசிரியர், எழுத்தாளர். எக்ஸில் பதிப்பகத்தின் மூலமாக பல நல்ல நூல்களைக் கொண்டுவந்தவர். ஐரோப்பிய மண்ணில் தமிழ் வெளியீடுகளின் முன்னோடி அவர். 80 களிலேயே "பள்ளம்" என்றொரு சிறு பத்திரிக்கை தொடங்கியவர். எக்ஸில் பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும், பின் உயிர்நிழல் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தார்.

கலைச்செல்வன் பழகுவதற்கு இனிமையானவர். எளிமையும், வெகுளித்தனமும் கொண்டவர். கடின உழைப்பாளி. ஐரோப்பிய இலக்கிய சந்திப்புகளின் மூலம் அவரது தோழமை எனக்குக் கிடைத்தது. பாரிசில் நடக்கும் இலக்கிய சந்திப்புக்களின் பின்பலமாக எப்போதும் இருப்பவர். கண்ணெதிரே நிற்கிறது அவர் என்னை பாரிஸ் வட ஸ்டேஷனில் வந்து வரவேற்றது. அதன் பின்தான் எத்தனைமுறை சந்தித்திருக்கிறோம். எவ்வளவு பொழுதுகளை சேர்ந்து களித்திருக்கிறோம்.

நண்பரின் இழப்பில் துக்கமுறும் அதே வேளை அவருடன் இத்தனை நாள் துணையாய் இருந்த தோழி லக்சுமிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. அவரது பையன் கபிலன்? பாரிஸ் நண்பர்களுக்கு? அவரது இழப்பு எமக்கு மட்டுமோ? தமிழுக்கும்தானே!

ஆஸ்திக்கு ஒரு ஆலயம் ஆசைக்கு ஒரு அம்பலம்!

ஒரு புதிய திட்டத்திற்கான முன்வரைவு.

இது பற்றி முன்பு 'பொன்னியின் செல்வன்' மடலாடற்குழுவில் பேசியிருக்கிறேன். சிங்கை வலைஞர் சந்திப்பிலும் பேசியிருக்கிறேன்.

தமிழகம் தவிர்த்த பிற இடங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் பாதுகாப்பு, புணரமைப்பு, ஒழுங்கு, நிருவாகம் இவற்றில் அக்கறையுண்டு. செல்வம் கொழிக்கும் கோயில்கள் தவிர விளக்கொளி கூட இல்லாமல் அழுது வழியும் கோயில்கள் அங்கு ஆயிரமுண்டு. கோடி, கோடியாய் கொட்டினாலும் அம்மாதிரிக் கோயில்களை நம்மால் மீண்டும் எழுப்ப முடியாது. சமீபத்தில் அங்கோர்வாட் போய் வந்த பிறகு ஒன்று மிகத்தெளிவாகப் புரிந்தது. கோயில்களில் வழிபாடும், கவனிப்பும் இல்லையெனில் காலப்போக்கில் அவை அழிந்து படுகின்றன என்று. ராட்சச மரவிழுதுகள் அங்கோர் கோயிலை அப்படியே விழுங்கிச் சாப்பிட்டுவிட்டன! உண்மை. உழவாரப்படை கொண்டு அப்பர் கோயில் துப்புரவில் ஈடுபட்டது வெறும் சமய ஒழுங்கு மட்டுமல்ல. ஒரு கோயில் இடிந்துவிடாமல் காக்க வேண்டுமென்ற அக்கரையும் சேர்ந்ததே. தமிழ் நாட்டில் பக்தி இல்லை என்று பொருள்ளல்ல. அங்கு சீசனுக்கு, சீசன் கோயில் மாறுகிறது. முடிந்தால் எல்லோரும் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுவிட்டு குருவாயூரில் காணிக்கை செலுத்திவிட்டு வருகின்றனர். கொடுத்த யானையை வேண்டாமென்று திருப்பித்தருமளவு செல்வக் கொழிப்புள்ள கோயிலது. நம்ம ஊரு கோயில் கேட்பாற்று அநாதையாய் கிடக்கிறது.

நம்மால் என்ன செய்ய முடியும்? சுநாமிக்கு கை கொடுத்தது போல், i mean the help :-) அநாதைக் கோயில்களுக்கும் நம்மால் கை கொடுக்க முடியும்.

1. தமிழ்நாடு வலைஞர்கள் கூடும் போது ஒரு தன்னார்வக்குழுவை உண்டாக்கி முதலில் எத்தனை அநாதைக் கோயில்கள் இருக்கின்றன என்று ஒரு சுற்றுலா-கணக்கு எடுக்கலாம்.
2. எவை மிகவும் பாதுக்கப்பற்ற நிலையில் உள்ளன? எதற்கு உடனடி கவனிப்பு தேவையென்று அடுத்து முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கலாம்.
3. உள்ளூர் ஆதரவைத் திரட்டலாம்.
4. அரசு அறங்காவல் நமது திட்டத்தில் மண்ணைப்போடும் அபாயமுண்டா? என்று மைக்ரோ அரசியல் கணிப்பு நடத்தலாம்.
5. ஒரு பிரச்சனையும் வராது எனும் பட்சத்தில் Adopt a Temple என்றொரு வலைப்பூ அமைத்து அதன் மூலம் நம்மில் எத்தனை பேர் அக்கோயில் ஒழுங்கமைப்பில் ஈடுபட முடியும் என்று ஆர்வத்தை உருவாக்கலாம்.
6. தற்போதுள்ள இணைய வசதிகள் கொண்டு கோயில் நிருவாகத்தை கவனிக்கலாம். (பெங்களூரில் ஒரு குருக்கள் கோயில் பூஜையை online-cast செய்து அமெரிக்க அம்பிகளிடம் நன்கொடை வாங்கியது நினைவிற்கு வரலாம்).
7. ஆர்வமுள்ளவர்கள் முதலில் ஒரு வலைப்பூ அமைத்து (அல்லது இருக்கின்ற ஒன்றில் முதலில் ஆரம்பித்து) இது பற்றி யோசிக்கலாம்.

இப்படியொரு எண்ணம் கொஞ்ச காலத்திற்கு முன் எனக்குத் தோன்றியது (சாமில்லாம் வந்து கனவுல சொல்லலீங்க :-) தொழில்நுட்ப வளர்ச்சியில் என்னென்ன செய்யமுடியும் என்று யோசித்து வந்தது!)

அது சமயம் கனடாவில் ஒரு சைவ சமய மாநாடு நடந்தது. அதற்கொரு கட்டுரையாக சமர்பித்தேன். அதை இன்று வலையேற்றியுள்ளேன். அதைப் பின்புல வாசிப்பிற்கு வைத்துக் கொள்ளுங்கள்.

சிங்கப்பூர் வலைஞர்கள் ஆர்வமாய் என்னிடம் கேட்டதால் ஒளியுள்ள போதே தூற்றிக்கொள்ளுகிறேன். கவனித்துக் கொள்ளவும். முன்பு 'பொன்னியின் செல்வி' பவித்ரா இதில் ஆர்வம் காட்டினார். அவருக்கு இது குறித்த சில யோசனைகளுண்டு. அவரும் இதில் கலந்து கொண்டால் நன்று.

இளையாராஜா செயத மாதிரி ஒரு ராஜகோபுரம் நம்மால் கட்ட முடியாவிடிலும், உள்ள கோபுரத்தை நிச்சயம் காப்பாற்ற முடியும்.

ஜேகேயை அறிந்து கொள் மனமே!

நாம் ஏன் ஜேகேயை அறிந்து கொள்ள வேண்டும்?

குழந்தை ஏசு பிறந்து விட்டார் என்றறிந்து மூன்று கிழக்கத்தியர் பெத்தலகேம் போனார்களாம். அது போல் கிழக்கிலுள்ள இந்தியாவை நோக்கி காலம் காலமாக மேற்கத்தியர் பயணப்பட்டு வருகின்றனர். பொன்னும், பொருளும், திரவியங்களும் உந்துதல் என்றாலும் வந்தவர் மீண்ட போது கையில் கொண்டு போவது இந்தியத் தத்துவ தரிசனங்களையே என்பது அலெக்ஸாண்டர் காலத்திலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது. நான் 80 களின் மத்தியில்தான் ஜேகே வேட்டை ஆடிக்கொண்டிருந்தேன் ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே இவரைக் கண்டு பிடிக்கும் வேட்டை மேடம் பிளவாட்ஸ்கி போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சென்னை அடையாற்றங்கரையில் கண்டு கொள்ளப்பட்ட ஜேகேயை தமிழ்படுத்த நமக்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கிறது. நம்முடன் பல ஆண்டுகள் பழகிய ஒரு உத்தமசீலரின் போதனைகள் தமிழில் வர இவ்வளவு காலம் எடுப்பானேன்? ஜேகே எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைக் கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள். மேடம் அன்னிபெசண்ட் அவர்களின் வளர்ப்புப்பிள்ளையாக இருந்த இவருக்கு முழுக்க முழுக்க ஆங்கிலக்கல்வியே அளிக்கப்பட்்டது. இவர் பேசியது, எழுதியது எல்லாம் ஆங்கிலத்தில்தான். குப்பை நாவல்களெல்லாம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு உடனே மொழிபெயர்க்கப்படும் போது ஜேகேயை மொழிபெயர்க்க ஏன் 80 ஆண்டுகள் பிடித்தன? ஏனெனில் அவர் பேசியது குப்பை அல்ல என்பதுதான்.

ஜேகேயின் மொழி நேரடியான ஆழமான பொருளுள்ள மொழி. பேசும் போது எப்போதும் அவர் சொற்களின் வேர்களைக் காட்டும் போது மொழியின் அழகு நமக்குப் புலப்படும். நமக்குத் தெரிந்த ஆங்கிலமாக இருந்தாலும் அவர் மொழி சட்டெனப் புரியாது. காரணம், மொழி பல அடுக்களில் செயல்படுகிறது, உதாரணமாக மடலேருதல் குறித்த எனது கட்டுரையில் காணும் பாசுரங்கள் ஒரு நிலையில் மிகத்துணிவாக பாலியல் பேசும் பாடல்கள் போல் பட்டாலும் அவைப் பாலியல் பாடல்கள் அல்ல. அதை அறிந்து கொள்ள வெறும் தமிழ்ப் புலமை மட்டும் போதாது. தேடல் கொண்ட உள்ளமும், ஆன்மீகப் புரிதலும் வேண்டும். அது போல் கிருஷ்ணமூர்த்தியின் மொழி ஆங்கிலமாக இருந்தாலும் தேடலற்ற உள்ளத்தால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளமுடியாது. இதுவே, அவரது மொழிபெயர்ப்பு இத்தனை தாமதமாக தமிழில் வந்திருப்பதற்குக் காரணம். இரண்டாவது, அவரது தத்துவங்கள் ஓரளவில் பிற இந்திய தத்துவங்களுடன் ஒத்துப்போனாலும் அவை பயன்படுத்திய வார்த்தைகளை ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டு அவர் தனக்கென ஒரு மொழி நடையை உருவாக்கினார். இந்த மொழி புதிது!

ஏன் புதிய மொழியை உருவாக்க வேண்டும்? வார்த்தைகள் பேசப்பேச நீர்த்துப் போகின்றன. அவற்றின் உண்மைப் பொருள் மங்கி, அடுக்கடுக்காய் பல நூற்றாண்டுச் சிந்தனைகளின் தூசு அதன் மேல் படிந்து விடுகிறது. அதன் பின் அச்சொல்லின் தீர்க்கம் ஒழிந்து விடுகிறது. எனவே எப்போதும் புதிது, புதிதாய் நவ சொல் பிறந்து கொண்டே இருக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. எனவேதான் நாம் செக்குமாடுகள் போல் போன தடத்திலேயே போய் கொண்டு இருக்கிறோம்.

இந்த நூற்றாண்டில் புதிய தடம் போட்ட அறிஞர்களில் ஜேகே-க்கு நிரந்தர இடமுண்டு. இவர் தமிழர்களிடம் அறிமுகமாகாதற்கு இன்னொரு காரணம், அல்லது இன்று இவர் பிரபலமாகி வருவதற்கு இன்னொரு காரணம், இவர் அடிப்படையில் ஒரு புரட்சிக்காரர். தளையற்ற மானுட விடுதலையே என் தலையாய குறிக்கோள் என்று கூக்குரலிட்டவர் ஜேகே. தளையற்ற விடுதலை எனில் நமது மொழியிலிருந்து விடுபட வேண்டும், நமது சமய நம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டும், நமது பாரம்பரிய விழுமியங்களிலிருந்து விடுபட வேண்டும், நமது தேசப்பற்றிலிருந்து விடுபட வேண்டும், நமது ஜாதிப்பற்றிலிருந்து விடுபட வேண்டும், நமது பாலியல் பற்றிலிருந்து விடுபட வேண்டும் (இங்கு பாலியல் இச்சையைச் சொல்லவில்லை, ஆண்/பெண் என்ற அடையாளங்களிலிருந்து விடுபடவேண்டும்), நமது பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும், முக்கியமாக நமது அபிப்பிராயங்களிலிருந்து விடுபட வேண்டும். ஏனெனில், இவை எல்லாமே நமது விடுதலையின் தளைகள். ஜேகே பேசியது பூரண விடுதலை. பரசுகம் பற்றிப் பேசும் இந்தியர்களுள் இவர் இகநோவு பற்றிப் பேசினார். அறிவியலற்ற ஒரு சமுதாயத்தில் இவர் அறிவியல் பேசினார். ஹிம்சை கொண்ட ஒரு சமுதாயத்தில் இவர் பூரண அன்பு பற்றிப் பேசினார். குருமார்கள் நிறைந்து வழியும் ஒரு பூமியில் இவர் குருவற்ற சுய காணல் பற்றிப் பேசினார். நிறுவனங்களாக சமயம் செயல்படும் போது இவர் ஒண்டி ஆளாக நடக்கவே விரும்பினார், நம்மையும் அப்படியே நடக்கச் சொன்னார். மழித்தலும், நீட்டலும் வேண்டா மாடர்ன் மனிதராக இவர் உடை உடுத்தினார். இப்படி எந்த வகையிலும் இந்தியப் பிடிக்குள் சிக்காததினால் இவரைப் புரிந்து கொள்ள இந்தியர்களுக்கு நீண்ட நாள் பிடித்தது. இவரது சிந்தனைகள் தமிழில் வர இத்தனை நாள் பிடித்தது.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நவீன யுக சிற்பி. நவ சிந்தனை கொண்டவர். அன்பின் அடித்தளம் கண்டவர். இவர் அறிவியல் பேசும் போதே சுத்த ஆன்மீகமும் பேசினார். வார்த்தைகளைக் கழுவிக்கழுவி சொன்னால் ஒழிய கிருஷ்ணமூர்த்தி பற்றிச் சொல்லமுடியவில்லை. வார்த்தைகளின் கறை படா வண்ணம் அவரை விளக்குவது கடினமாகவே உள்ளது. நான் இன்னும் அவரது தமிழ் மொழி பெயர்ப்புகளைப் படிக்கவில்லை.

ஜேகேயுடன் எனக்குள்ள 30 ஆண்டு தொடர்பு பற்றி நான் அதிகம் பேசியதில்லை. இப்போது ஜேகேயை அறிந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதல் தமிழர் மத்தியில் உள்ளது. அது நல்லது.

ஜேகேயிடம் உங்களின் நூற்றாண்டு போதனைகளை ஒற்றை வரியில் சுருக்கிச் சொல்ல முடியுமா என்று யாரோ கேட்டாராம். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, 'நீ உள்ளமட்டும் அது இல்லை' (If you are, the other is not) என்றாராம். அட! இது நமக்குத்தெரிந்துதானே என்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் மொழியின் விளிப்பிலிருந்து உலகைக் காண்கிறீர்கள் என்று பொருள். அந்த 'அது' என்ன? என்பதே இன்றையச் சிந்தனைக்குக் கூழ்!

உறங்கிடில் அழியாது

ஒரு நாள்
ஒரு பொழுது
விழித்திருக்கும் போதே
பார்க்கக் கூடியதாய்
இருந்தது.
உனக்கும் எனக்குமுள்ள உறவு
தினம் சுரக்கும் பசுவிற்கும்
வனம் திரியும் விலங்கிற்கும்
வான் தவழும் புள்ளிற்கும்
வா வென அழைத்தால்
வாலாட்டும் நாய்க்கும்
பூனைக்கும்..
கருப்பிற்கும்
வெளிப்பிற்கும்
மேலுக்கும்
கீழுக்கும்
விளிம்பிற்கும்
நடுவிற்கும்
உள்ளுக்கும்
புறத்திற்கும்
விழித்துக்
கொண்டிருக்கும் போதே
பார்க்கக் கூடியதாய்
இருந்தது.
இனி இது
உறங்கிடில்
அழியாது.


வெளிச்சம் மங்குமுன் சொல்லிக்கொள்ளலாமென்று தோன்றுகிறது :-) இங்குள்ள பலருக்கு என் எழுத்து புதியது என்று எண்ணுகிறேன். இருக்கின்ற சில நாளில் எனது கவிதைகள் பற்றிய கவிதா அலசல் செய்தால் என்ன? உங்களுக்காக ஒரு தொகுப்பு கீழ்காணும் வலைத்தளத்தில் வைத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை சேகரித்து பின்னால் அத்தளத்தில் போடுகிறேன். இதோ சொடுக்க வேண்டிய சுட்டி:

உறங்கிடில் அழியாது கவிதைத்தொகுப்பு.

எங்கே நந்து?

நந்து என்றொரு பயல் இங்கு கொஞ்ச நாள் ஓடிக்கொண்டிருந்தான். எங்கே அவன்?

....காலமெனும் மீளாப் பயணத்தின் பின்னோக்கிய பாய்ச்சல் 'வைகைக்கரை காற்றே!'

ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு

12 மார்ச் 2005 (சனி)

"ஊசி இலை மரம்" சிறுகதைத் தொகுப்பு;
"விமர்சன முகம்" கட்டுரைகள்

இடம்: பிரிக்ஃபீல்ட்ஸ் பார்வையற்றோர் சங்கக் கட்டிட அரங்கம்.

நிகழ்ச்சி நிரல்

3.00 - 3.30: தேநீர்

அங்கம் ஒன்று:

3..30: தமிழ்வாழ்த்து செவ்விசைச் சித்தர் ரெ. சண்முகம்

வரவேற்புரை : முனைவர் ரெ.கார்த்திகேசு.

3.40: வாழ்த்துரை : திரு. பெ.இராஜேந்திரன்:தலைவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

4.00: தலைமையுரை: திரு. இரா.பாலகிருஷ்ணன் (மலேசிய வானொலி இந்தியப்பகுதி முன்னாள் தலைவர், ஆசிய பசிபிக் ஒலிபரப்புக் கழக முன்னாள் இயக்குநர்)

நூல் அறிமுகம்:

4.20: "ஊசி இலை மரம்" : இணைப் பேராசிரியர் முனைவர் முல்லை இராமையா, மலாயாப்பல்கலைக் கழகம்

4..40 "ரெ.கார்த்திகேசு: விமர்சன முகம்" : டாக்டர் மா. சண்முக சிவா.

5.00: நூல் வெளியீடு : திரு ஆதி. குமணன், ஆசிரியர் குழு ஆலோசகர், மலேசிய நண்பன் நாளிதழ்.

5.20: முதல் நூல் பெறுநர் : திரு வைரன் ராஜ், வைரன் நிறுவனக் குழுத் தலைவர்.

வாசகர்கள் நூல் பெற்றுக் கொள்ளுதல்

அங்கம் இரண்டு:: கருத்தரங்கு:

5. 40 உரை: "மலேசியாவில் தமிழ் இலக்கிய விமர்சனம்: ரெ.கா.வின் நூலை முன்வைத்து": இணைப் பேராசிரியர் வெ. சபாபதி (தலைவர், இந்திய இயல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம்)

6.00 உரை: "ஊசி இலை மரத்தில் அறிவியல் புனைகதைகள்" :திரு. சத்தியசீலன்

6..20 கலந்துரையாடல்

6.40 நன்றியுரை: முனைவர் ரெ.கார்த்திகேசு.

மடலூரத்துணிந்த மங்கை பற்றியது...

தமிழ் இணையம் எனக்குச் செய்திருக்கும் பெருமைக்கு என்று எவ்வாறு கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. தமிழ் இணையம் (தமிழ்.நெட்) என்பது தமிழின் முதல் மடலாடற்குழு. எங்கெங்கோ அலைந்து திரிந்து தமிழ் மொழியைப் பிரிந்து வாடிய எனக்கு இணையம் ஒரு தமிழ் ஊற்றைக்காட்டியது. அந்தப்பேரூற்றில் திளைத்த போது விளைந்ததுதான் பாசுரமடல்கள். பெரியவர் டாக்டர் ஜெயபாரதியின் தொடர்ந்த ஊக்கத்தினால் 108 கட்டுரைகள் எழுதினேன். எப்படி எழுதினேன் என்று எனக்கு இன்றும் ஆச்சர்யமாக இருக்கிறது! நானொன்றும் தமிழ் பண்டிதன் அல்லேன். முறையாக தமிழ் இலக்கண, இலக்கியம் படித்தவன் அல்லேன். ஆயினும் எனது வேர்களைக் காண வேண்டும் என்ற துடிப்பு. கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன் என்ற திடீர் துணிச்சல், அந்த தேடுதலுக்குக் காரணமாகியது. இருக்கின்ற தமிழ் அறிவை வைத்துக்கொண்டு சபையில் பேசத்துணிந்தேன். தொடர்ந்து நண்பர்கள் கொடுத்த ஆதரவு, ஊக்கம் அத்தனை மடல்களை எழுத வைத்தது. அதன் பின்னாலும் எழுதினேன். இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எனக்கே தெரியாது எனக்கு 'பாசுரமடல்' கண்ணன் என்ற பெயர் இருப்பது. தமிழ் உலகம் புகழ் சிங்கை பழனியப்பன் தமிழ் இணைய மாநாட்டில் சொன்னபோதுதான் எனக்குப் புலர்ந்தது! பன்னிரு ஆழ்வார்கள் எழுதிய ஈரப்பாசுரங்கள் தமிழர்தம் இதயத்தின் அடியூற்றில் கசிவை எப்போதும் தக்க வைக்கும் தன்மையது என்பதை எங்கோ கலிபோர்னிய பல்கலைக்கழகத்திற்கு சிறப்புப் பேராசிரியராய் வந்திருந்த முனைவர் மறைமலை அவர்கள் எனது கட்டுரைகளை இணையத்தில் படித்துப் பேருவகை கொண்டு நான் சென்னை சென்றபோது நம் வணக்கத்திற்குரிய தமிழ்த்தாத்தா பேரா.உ.வே.சா அவர்கள் பாடம் நடத்திய அதே அறையில் எதற்குமே லாயக்கில்லாத என்னைத் தமிழ்ப்பாசுரங்கள் பற்றிப்பேசுமாறு பணித்தது நிரூபித்தது! (ரொம்பப் பெரிய வாக்கியமாகிவிட்டது. மன்னிக்க) பூவுடன் சேர்ந்த நாறும் மணம் பெறும் என்று சொல்வார்கள். ஆழ்வார்கள் சம்பந்தத்தால் அப்பேறு எனக்குக் கிடைத்தது. எவ்வளவுதான் சினிமாவின் தாக்கம் தமிழனை உருக்குலைத்தாலும் நம் முன்னோர் செய்வித்திருக்கும் அருள் பாசுரங்கள் இருக்கும்வரை தமிழ் உணர்வு தமிழனைவிட்டு ஒழியாது என்பதை என் பேச்சு முடிந்தபிறகு மாணவ, மாணவியர் (எம்.ஏ பட்டம்) சூழ்ந்து கொண்டு நாலாயிர திவ்யப்பிரபந்தம் பற்றிக்கேள்வி மேல் கேள்வி கேட்டபோது உணர்ந்தேன். அந்த சிலிர்ப்பு இன்னும் தணியவில்லை. அதுபோது சிறப்பாக மாணவர்கள் அடுத்தமுறை வரும்போது திருமடல் பற்றிச் சொல்லுங்கள் என்றனர்!

தமிழ் இலக்கியத்திற்கு மட்டும் உரிய தனி சிறப்பாக மடலூருதல் எனும் ஒரு இலக்கியவகை. திருமங்கை ஆழ்வார் இந்த இலக்கிய உத்தியை பக்தி இலக்கியத்தில் கையாண்டு பெரும் புகழ் பெற்றவர். அவர் அருளிச் செய்தது 'சிறிய திருமடல், பெரிய திருமடல்' என்பவை.

மடலூருதல் என்றால் என்ன? கன்னிப் பெண்ணிற்கு காதல் ஊறும். அது இயற்கை. காதல் பற்றிப் பாடாத தமிழர் குறைவு. இப்படியொரு பெருமை இருப்பதாலேயே "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!' என்று காதலை வருணித்துப்பாடும் புலவர்களைக் கேலி செய்வதுண்டு. தோழி முகமாக இன்றளவும் தலைவி காதலை வெளிப்படுத்துவது கண்கூடு. தமிழ் மண்ணில் வளர்ந்த பெண்ணிற்கு அச்சம், மடம், நாணம் எனும் குணங்கள் வரப்பெற்றன. இதனால் அவள் தன் காதலை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் மற்றவர் மூலமோ, அன்னம், மேகம் என்று பேசாப்பொருள் மூலமாகவும் தூதுவிட்டுச் சொல்லி வந்ததாக தமிழ் இலக்கியம் பேசுகிறது. இந்தப் பின்புலத்தில் ஏதோவொரு தமிழச்சிக்கு துணிச்சல் வந்து விட்டது. ஆண் மட்டும் தன் காதலை தம்பட்டம் அடிக்கிறான். தன் பரத்தையர் உறவு பற்றிக்கூட வெட்கமில்லாமல் சொல்கிறான். ஏன் நான் மட்டும் இப்படி நாணிக் கோணிக்கொண்டு இருக்க வேண்டும்? வெட்கம் கெட்டுப்போய் நாமும் ஊரறிய நம் காதல் பற்றிப் பேசினால் என்ன? என்பதே அந்தத் துணிச்சல். இதன் உச்ச வெளிப்பாடே மடலூர்தல் என்பது. தலைவி தன் காதலனின் படத்தை அழகான ஓவியமாகத் தீட்டிக்கொண்டு, அதைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு தெருத்தெருவாக போய் வருவதையே மடலூர்தல் என்பர். உண்மையிலேயே மகாத் துணிச்சல் வேண்டும் இப்படிச் செய்ய. ஏனெனில், நம் பண்பாட்டு விழுமியங்கள் நமது சுயத்தை என்றோ மறைத்து விட்டன. இருப்பதெல்லாம் அச்சமும் நாணமுமே! ஆண்கள் இரசிக்கக்குடிய வகையிலேயே பெண் இருக்கவேண்டுமென்ற ஆழமான மூளைச்சலவை இன்றளவும் நம் பெண்களின் மனத்தில் தங்கிவிட்டது. எனவே ஆண் பேசும் பேச்சை பெண் பேசினால் முதலில் கண்டித்துப் பேசுபவள் இன்னொரு பெண்ணாகவே இருப்பாள்! சுயமாக துளிர்க்கும் ஆசையைக்கூட வெளிப்படுத்த முடியாமல் ஒரு வெட்கம். நாணம் கெட்டவளன்றோ இப்படிப் பேசுவாள். இப்படி செய்யத் துணிவாள். இவளுக்கு விசர் (பயித்தியம்) பிடித்துவிட்டது என்று மற்றவர் சொல்லுவரே என்ற கவலை. இந்தப் பின்னணியில் மடலூர்தல் இருபத்தோராம் நூற்றாண்டு தமிழர்களைக் கவர்கிறது! அப்படியொரு துணிச்சல். பண்பாட்டை மீறும் தைர்யம். சுயத்தைக் காட்டும் நிர்ணயம் இவை மடலூர்தலின் முக்கிய குணங்கள்.

திருமங்கை மன்னன் செய்து பார்க்காத கவிவகை கிடையாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த மடலூர்தலில் மாறன் சடகோபன் எனும் திருநெல்வேலித் தமிழர் அவருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். தன்னை நாயகியாக பாவித்துக் கொண்டு ஒரு பழைய தமிழ் மரபைப் பாடுகிறார்.

"ஏசறும் ஊரவர் கவ்வை தோழீ! என் செய்யுமே!" என்று முதல் பாசுரத்திலேயே ஆரம்பிக்கிறார். ஊர் வாய்க்கு பயப்பட்டு என்ன பயம்? அது என்ன செய்யும் என்கிறாள்.

முன்பு வெட்கட் சொன்னமாதிரி உயிரியல் காரணங்களுக்காக பெரும் தனமும், அகன்ற அல்குலுமுடைய தன் தோழியை அழைக்கிறாள், "கலைகொள் அகலல்குல் தோழீ! நம் கண்களாள் கண்டு" இரசிப்போம் என்கிறாள்.

நாணும் நிறையும் கவர்ந்தென்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான்றன்னை
ஆணையென் தோழீ! உலகு தோறலர் தூற்றி, ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே!

நாணம் இருந்து என்ன பயன்? நிறைவான குணங்கள் கொண்டு அடங்கியிருந்து என்ன பயன்? என் நெஞ்சம் அவனைக் கூவுகிறது. உன் மேல் ஆணை தோழீ! உலகத்தார் தூற்றினாலும் எனக்குக் கவலை இல்லை. எந்தக் கோணங்கித்தனம் செய்தாலும் நான் மடலூர்வேன் (அவனை அடைவேன் என்பது). இந்தக் குதிரியாய் என்பதற்குள்ள ஈடு வியாக்கியனம் இப்போது 'பெண் மொழி' பற்றிப் பேசும் போது முக்கியமாகப்படுகிறது. குத்ஸிதா ஸ்தீரி; குஸ்திரி என்கிற பதத்தை குதிரி என்கிறதாய், ஆகிறது, அடங்காத பெண்ணாய், தடை இல்லாத பெண் என்கிறபடியாய் என்று சொல்லி, மேலும், குதிரி என்பதற்கு செப்பு என்ற பொருளும் உள்ளதால், பெண்களுக்குச் செல்வவாமன: நாணும், நிறையுமே யன்றோ! அவற்றை இட்டு வைக்கும் கலமே அன்றோ சரீரம், அவை போகையாலே இனி சரீரத்தைப் பற்றி கவலை கொள்வதேன்? என்று துணிவு கொள்கிறாள் என்கிறது ஈடு. ஆக இந்த உடம்பு என்பது நாணத்தைத் தாங்கும் கலம் என்றாகிப்போனது தமிழ் பெண்களுக்கு! குதிரை போன்று கர்வமாய் மடலேர்வேன் என்றும் பொருள் சொல்வர். ஆக! ஒன்பதாம் நூற்றாண்டுத்தமிழ் பெண் இன்றையப் பெண்ணை விட தைர்யம் கொண்டவளாகவே இருந்திருக்கிறாள்.

காதல் ஆறாய் பெருகும் உள்ளத்தில் நாணத்திற்கு அவசியமில்லை என்று தமிழ் வேதம் சொல்கிறது. இதோ இன்னொரு இனிய கவிதை

ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்படுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே!

ஊர்ப் பேச்சு, அம்மாவின் திட்டு இவையெல்லாம் காதலின் முன் என்? என் நெஞ்சமெனும் நிலத்தில் காதற்பயிர் விளைந்து, கடல் புரண்டு நிற்கிறது! இனி வெட்கமாவது? நாணமாவது? இதில் தோழியையும் தன் காதல் விளையாட்டில் கூட்டாகச் சேர்த்துக்கொள்வது இன்னும் பொருள் உள்ளதாய் படுகிறது!

ஆம்மடம் இன்றி, தெருவு தோறயல் தையலார்
நாமடங் காப்பழி தூற்றி நாடும் இரைக்கவே.

அச்சம் போச்சு, நாணம் போச்சு. மடமும் போச்சு :-) தெருவில் வசிக்கும் பிற பெண்கள் ஒரு மாதிரித்தான் பேசுவர், தூற்றுவர், ஊரெல்லாம் பழி சொல்வர், இருப்பினும் நான் மடலூர்வேன்! என்கிறாள் இப்பெண். என்ன துணிச்சல்.

நம்மாழ்வார் ஆண் அதனால் இது 'ஆண் மொழி' என்று தப்பித்துக் கொள்ளமுடியாது. அவர் இங்கு பேசுவதெல்லாம் தமிழ் பெண்களின் துணிச்சலைத்தான்.

சரி, இவரை ஆண் என்று ஒதுக்கிவிட்டாலும் நாச்சியார் மொழியை ஒதுக்கமுடியாது. ஆண்டாள் விண்ணப்பம் செய்யும் அழகைப்பாருங்கள்:

செங்கண்மால் சேவடிக்கீழ்
அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து ஒருநாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்றுரையீரே!

அடடா!

குற்றமற்ற முலைதன்னைக்
குமரன் கோலப்பணைத்தோளோடு
அற்றகுற்றம் அவைதீர
அணைய அமுக்கிக்கட்டீரே!

இப்படி யாரிடம் சொல்கிறாள் என்று நினைக்கிறீர்கள்? தன் தாயிடம்தான்! கட்டக்கடேசியாய் ஒரு மேற்கோள். படாபட்!

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை ஆகூலம் செய்யும்!

சபாஷ்! இது பெண் மொழியா? ஆண் மொழியா?

நம்ம தங்கமணி சொல்ற மாதிரி நம்ம உடம்பு அப்படியென்ன தப்பு செய்தது? அது பற்றி ஏனிந்த மூடுமந்திரம்? அது பேசக்கூடாத பொருளா? பாடுபொருள் இல்லையா?

நம் உடம்பை விட்டு நம் கவனம் இன்னும் வெளியே போகவே இல்லை. என்று இந்த உணர்வு மங்குகிறதோ அன்று உயர்பொருள் கண்ணில் படும். உலகில் எல்லாப் பெண்களும் இந்த மாயையிலிருந்து விலகி எழுச்சியுற்ற பின்னும் தமிழ் பெண் மட்டும், தலைப்பை, தலைப்பை இழுத்துக்கொண்டு தன் கவனத்தை அங்கு வைத்திருப்பதுடன், எதிரே இருப்பவர் கவனத்தையும் அங்கேயே கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்கள். சிங்கப்பூரில் சீனர்கள் இந்தியர்களைவிட முன்னேறிவிட்டதற்கு இந்த உடல் மீறிய விடுதலையே காரணம் என்று எங்கோ படித்த ஞாபகம்.

(சரி எல்லோரும் அடிக்க வாருங்கள் இந்தத் தடியனை :-) எனக்கு மட்டுமென்ன? இந்த ஆச்சார்யர்களே இந்தப்பாசுரங்களை வைத்துக்கொண்டு சபையில் சொல்லமுடியாமல் கதவை இழுத்து மூடிக்கொண்டு வியாக்ஞானம் செய்து கொண்டிருந்தார்களாம். வேற வழி?)

இதை மதுரபாவம் என்கிறான் கீத கோவிந்தம் எழுதிய ஜெயதேவன். இதை ரகஸ்ய கிரந்தங்கள் என்றும் சொல்வர். இதிலென்ன ரகசியம்? இதுதான் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே என்று கேட்கலாம். தெரிஞ்சதுதான், ஆனால் இதன் சூட்சுமங்கள் எல்லோருக்கும் சரியாகப் புரிந்ததா என்பதே கேள்வி!

பேசாப்பொருள் பேசப்படுகிறது!

பேசாப்பொருள் பற்றிய கதைக்கு உதை கிடைக்கும் என்று எதிர்பார்த்துதான் எழுதினேன் :-)
யாரும் கவனீத்தீர்களாவென்று தெரியவில்லை, தலைப்பே ஒரு விவாதத்திற்கு இட்டுசெல்லும் உரலுக்கு இணைக்கப்பட்டிருந்தது! ஆம்! தீவிரமாக பெண்மொழி பற்றிய விவாதம் நடக்கும் போது என் கதை 'அபஸ்வரமாக' வந்திருக்கிறது :-)) நம்ம உஷா பிடிச்சுட்டாங்க. அவங்களுக்கு எப்போதுமே என்னோட சண்டை போடப்பிடிக்கும். நானும் 5 அக்காவுடன் பிறந்தவன். Sibling rivalry எனக்குப் புதிதல்ல :-)
நான் இந்த மாதிரி கதை எழுதினா அது எங்கேயுமே பிரசுரமாகாது, வலைஞர்கள் ரொம்ப matured-அப்படிங்கற தைர்யத்திலேதான் எழுதினேன். ஆனா, உஷா சொல்லறாங்க, நான் இலக்கிய பத்திரிக்கைக்கு அனுப்பிச்சா உடனே வெளியாகும்ன்னு. நான் நம்பலே :-)
ஆண் ருதுவாகும் கதையொன்றை முன்பு கணையாழிக்கு அனுப்பிச்சு திரும்ப வந்துடுச்சு. தமிழ்நாட்டில் நான் வாழ்ந்தவரை அச்சம், மடம், நாணம் என்பது இருபாலர்க்கும் பொதுவே. மத்திமர் ஆண்கள் பெண்களைவிடக் கூச்சமானவர்கள். இங்கு வந்து பார்த்தால் ஆசியா முழுவதும் ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். மத்திமர் உலகம் ஒரு பாசாங்குத்தனமான உலகம் என்று தெரிகிறது!
இரண்டாவது, என்னைய கே.பி யோட ஒப்பு நோக்கி என்னை ரொம்ப கேவலப்படுத்திட்டாங்க :-)) விபச்சாரம் பற்றி கே.பி படம் எடுத்திருக்கார்தான். ஆனா, அவரு ரொம்பக்கோழையான மத்திமர். பாரதிராஜாட்ட இருக்கிற தைர்யம்கூடக் கிடையாது. எல்லாத்திலேயும் கதாநாயகியைக் கொன்னுடுவாறு! சாவு ஒரு தீர்பு என்று சொல்லமுடியாது. ஒரு முடிவிற்கான சாக்கு. அவ்வளவுதான்.
நம்ம கதாநாயகி மெண்ட்டல்ன்னு சொல்லிட்டாங்க :-) நமக்கு எல்லாப் பெண்களையும் தெரியுதா என்ன? அவங்க மனசுலே என்ன ஓடறதுன்னு? பெண்களைப் பொதுமைப்படுத்தமுடியுமா? சமூக விழுமியங்கள் ஒரு பெண்ணை 'தற்காத்துக்கொள்ள' உதவுவது உண்மைதான். ஆனால், விழுமியங்களே பெண்ணல்ல. அவளுக்கு பல ஆசைகள் இருக்கலாம். அதை வெளிக்காட்டவும் முயலலாம். மத்திமர் போட்ட சட்ட திட்டங்களில் இவையெல்லாம் பேசக்கூடாத பொருள்கள். ஒரு சங்கப் பெண்ணிற்கு இருந்த சுதந்திரம் கூட செமத்திய விழுமியங்களைத் தாங்கி நிற்கும் தற்காலத்தமிழ் பெண்ணிற்கு இல்லை என்று சொல்வேன்.
கர்பமாகிவிடும் பயம் என்பது உண்மைதான். ஆனால் கர்ப்பம் இப்போது இன்பம் சுகிக்க ஒரு தடையே இல்லை. அதற்கு பயந்து கொண்டு ஒரு பெண் சுகிக்காமல் இருப்பாள் என்று நம்பமுடியவில்லை. உஷாவின் கடிதத்தில் தொக்கலாக ஆண்களே சுகிக்கிறார்கள் என்பது போன்ற ஒரு தொனி இருக்கிறது. இருவர் இயைந்ததுதானே சுகம்? அதுதானே தாம்பத்யம்.
கதாநாயகியை சுகித்துவிட்டு அவன் போய்விடுகிறான், அவள்தானே கர்பத்தை 10 மாதம் சுமக்க வேண்டும் என்பதுதான் பாலச்சந்தர் பாணி நோக்கு. கதாநாயகி அப்படி எண்ணுகிறாள். அவ்வளவுதான்! அப்படித்தான் நடக்க வேண்டுமென்றில்லை. தொட்டவுடன் கர்பமாதல் எல்லாம் சினிமாவிற்குத்தான் பொருந்தும். மழலைப் பேறு இல்லையென்று ஏங்கும் ஆயிரம் தம்பதியர் இன்றும் உள்ளனர்! மும்பாயில் ஒரு gynecology conference-ல் மாட்டிக்கொண்ட அனுபவம் உள்ளது. அதுதான் எவ்வளவு லாபகரமான தொழில். செயற்கைமுறை கருத்தரித்தல் பெரிய ஆய்வு.
நம்ம சந்திரவதனாவும் பின்னூட்டம் தந்துள்ளார்கள். மிக நாசுக்காகவே பேசவேண்டுமென்று நாமே ஒரு உரைநடை வரைமுறை வைத்துக் கொண்டுள்ளோம். அது இருபதாம் நூற்றாண்டு இலக்கணம் என்று தோன்றுகிறது. ஒரு ஆண்டாளுக்கு இருக்கும் தைர்யம் கூட ஒரு வளர்ந்த ஆணின் உரைநடையில் வரக்கூடாது என்று பார்த்துக்கொள்கிறோம். ஈடு வியாக்கியானம் திருவரங்கம் கோயிலில் நடக்கிறது. அவர்கள் பேசும் 'பெரியவர் பேச்சு' (adult talk) இன்று நோக்கும் போது ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. நம்மால் தமிழில் உண்மையிலேயே ஒரு adult literature எழுதவே முடியாது என்று தோன்றுகிறது. ஆங்கிலத்தில் இக்கதையை வாசித்தால் இப்படித் தோணுமா? தமிழ் விடலை மொழியா?
தமிழ்நாடு ஆபாசத்தில்தான் வாழ்கிறது. அந்த ஆபாசங்கள் குழந்தைகளை வெகுவாக பாதிக்கின்றன. இக்கதை நாயகியும் அதற்குப் பலியே. அறியாப்பருவத்தில் ஏற்படும் அனுபவங்களின் சுவடுகள் அழிந்திருக்கும், ஆனால் அதன் பாதிப்பு வாழ்நாள் பூரா இருந்து கொண்டிருக்கும். இக்கதை அது பற்றியும் பேசுகிறது!
மேலும் உடல் என்பதுதான் பெண்ணா? அவளுக்கு வேறு அடையாளங்கள் கிடையாதா? பெண் மொழியில் உடல் பற்றி வரக்கூடாதா? சுகிக்கப்படுபவள் பெண் என்று சொல்வதே அபத்தமாகப்படுகிறது. சுகித்தல் இருவருக்கும் பொது. அவள் என்றும் நுகர்பொருளாக முடியாது, அவள் விரும்பினால் ஒழிய!
இந்த உடல் பற்றிய எண்ணங்களை இன்னொருமுறை தரிசிக்க வருவேன். இப்போதைக்கு இது.

சில யோசனைகள்!

சில அசௌகர்யங்களுடன்தான் இந்த வலைப்பதிவை மேற்கொள்கிறேன். எங்கள் ஆய்வகம் போட்ட 'லட்சுமணன் கோட்டில்' (firewall) பதியமுடிகிறது, ஆனால் பார்க்கமுடியவில்லை. அதாவது Blogger-க்குப் போகமுடிகிறது. Blogspot போகமுடியவில்லை. ஜெயந்தி எனது வலைப்பதிவை பார்க்கமுடியவில்லை என்றார். இந்த blogspot-ல் ஏதாவது கோளாறா? தெரிந்தவர் சொல்லவும்! இதனால், ஒவ்வொருமுறையும் ஒரு proxy server போய்தான் எனது பதிவுகளை, ஏன், பிற எல்லார் பதிவுகளையும் காண வேண்டியுள்ளது. தேசிகன் எனக்கு இந்த யோசனை சொல்லவில்லையெனில் எனது அக்ஞானவாசம் இன்னும் நீடித்து இருக்கும். எங்க ஆய்வக நிறுவனத்துடன் பேச ஆரம்பித்திருக்கிறேன் (அண்ணே! இங்கெல்லாம் ஆங்கிலத்தை வச்சுக்கிட்டு ஒண்ணும் செய்யவியலாது :-)

இரண்டாவது, நாம இன்னும் யுனிகோடில் குவாண்டம் தாவல் செய்யலே! பாதிப்பக்கங்களைப் பாக்கவே முடியலே! இத பலமுறை சொல்லிட்டேன். இது மைக்ரோசாப்ட்டோட கோளாறா? இல்லை யுனிகோடு இன்னும் பிரப்ஞ்சத்தன்மையடையவில்லையா? பலர் இன்னும் 'வெட்டி, ஒட்டிதான் பல வலைப்பதிவுகளை வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்மணம் கொடுத்திருக்கும் யுனிகோடு குறியீட்டு நிரவலை எல்லோரும் ஒருமனதாக பயன்படுத்தவும். (ததாஸ்து!)

வலைப்பூ மலர்ந்த காலத்தில் நாங்கள் கையளவே இருந்தோம். ஒருவருக்கொருவர் தெரியும். இப்போது? 400வது வலைஞரை வரவேற்க என்ன செய்யலாமென 'ஜெ' காசியிடம் ஒரு பின்னூட்டத்தில் யோசனை கேட்டிருக்கிறார். காசியைப் பிடிப்பது அவ்வளவு கஷ்ட்டமாகிப்போச்சு போல :-) இந்தப் பெரிய மீனவர் சமூகத்தில் (அதாவது வலைஞன் எறால் மீனவன்தானே! 'படகோட்டிகள்' என்று கூடச் சொல்லலாம்!) இனிமேல் ஒவ்வொருவரை அறிவது கடினம். லேசு, வாசாக ஒருவர் எழுத்தை அறிந்து கொள்ளலாம். இப்போதே உள்வட்டங்கள் தோன்றிவிட்டன. இது தவிற்கவியலாதது. நமக்குப் பரிச்சியமான பதிவிற்கே நாம் போக ஆசைப்படுவோம். அந்தத் திண்ணையிலேயே உட்கார்ந்து இருப்போம். இது தப்பில்ல.

தமிழ்மணம் எனும் மையம் முடிந்த அளவு தொழில்நுட்பத்தை வைத்து நம்மையெல்லாம் syndicate செய்கிறது. ஆயினும், உண்மையான syndication மனத்தைப் பொறுத்தவிஷயம். நேத்து யாரோ 'lisa'-ங்கற பேரிலே வந்து மாத்திரை வித்திட்டுப்போனாங்க. ஆக, பின்னூட்டத்தில் இப்போது முகமூடிகள் (phantom) நுழைய ஆரம்பித்துவிட்டனர் :-)

ஏன் தமிழ்மணம் என்ற அமைப்பு blogger அமைப்பு போல் ஒரு குழுமம் என ஆகக்கூடாது? அதில் உருப்பினராகச் சேருபவர் மட்டும் பின்னூட்டம் தரலாம், வலைப்பதிவு நடவடிக்கையில் தரலாம் என வைக்கக்கூடாது? மனம் பிறழ்ந்தவர்கள் எல்லா நடவடிக்கையிலும் புகுந்து விடுகின்றனர். இப்படி only for registered members என்று வைத்துக்கொண்டால், at least, பின்னூட்டத்தில் திட்டுபவர் யாரெனத்தெரிந்து கொள்ளலாம்.

எதிர்வினை வளர்ச்சிக்கு உதவும். நாமெல்லாம் சிறுபிள்ளைகள் அல்ல. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பருவத்தினர்தானே! மேலும், எதிர்கட்சி என்ன சொல்கிறது என அறிந்து செயல்படுவதுதான் ஜனநாயகம். தெரியாம உள்ளே நுழைஞ்சு குண்டு வைக்கிறது terriorism! Anononimity என்பது பெரிய விஷயம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அதை Flight of the Eagle என்பார். அங்கு ஆணவம் கிடையாது. நம்ம ஆட்களுக்கு perverted ego இருப்பதால்தான் இது நடக்கிறது. அது கிடக்கட்டும்.

நம்ம எண்ணிக்கை கூடும் போது, வலைப்பதிவுகளை வாசிக்க முடியாமல் போய்விடும். இதுவே தெரிந்தவர் மத்தியில் இருப்பது நலமெனும் தீர்மானத்திற்கு இட்டுச்செல்கிறது. யாராவது ஒரு புண்ணியவன் "வார ஜீரணி" அதாவது weekly digest கொண்டுவரமுடியுமா? கொஞ்சம் அவ்வப்போது அக்ஞானவாசம் இருக்க விரும்புகிறவர்கள் திரும்பும் போது வசதியாக இந்த வாரசஞ்சிகை வாசித்தால் நாட்டு நடப்பு என்ன என்று தெரிந்து கொள்ளலாம். இது சிண்டிகேட்டுக்கு சிண்டிகேட் வேலை! திசைகள் இதை செய்யத்தொடங்கி விட்டது என அறிகிறேன். வாழ்க!

அப்புறம், வலைஞர்களை உற்சாகப்படுத்த விழா, பரிசு எல்லாம் ஏற்பாடாகிறது போல. இதில் எனக்கு மாற்றுக்கருத்துண்டு. தமிழ்மணம் எனும் மையம் ஒன்று போதும். செண்ரல் பஸ் ஸ்டாண்டு போல எந்த வழித்தடம் எங்கு போகுதுன்னு தெரிஞ்சிகிட்டா போதும். இப்போதுபோல் அவ்வப்போது யார் மீதாவது 'ஒளிப்பாய்ச்சல்' (focus light) செய்து கவனத்தைக் கொண்டுவரலாம். தமிழ் வலைப்பதிவில் சிறந்த பரிசு, ஆண்டின் சிறந்த பதிவிது என்றெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன? இதனால் யாருக்கு என்ன பிரயோசஜம்? ஏதோ திரும்பப் பள்ளிக்கூடத்திற்குப் போவது போலும், பரிட்சை எழுதுவது போலும் பயங்கரக்கனவுகள் (nightmare) வருகின்றன. திசைகள் என்ன செய்யப்போகிறது எனப்பார்ப்போம். ஆள் கூடும் போது 'கவன ஈர்ப்பு' முக்கியம். அதை தற்போதுள்ள செயற்பாடே இனிது செய்கிறது.

மடலாடற்குழுக்கள் இதற்கு கூடுதல் கவன ஈர்ப்பைத்தரலாம். மடலாடற்குழுவிற்கில்லாத ஒரு தனிதன்மை (privacy) வலைப்பதிவிற்குண்டு. இங்கு அனாமத்து ஆட்கள் அத்துமிறீ நுழைந்துவிட முடியாது. வாசக்கதவு நம்ம கையிலேங்கற ஒரே வசதி இங்குண்டு.

இந்தத்தேடுற விஷயத்திலே தமிழ்மணம் ஏதாவது செய்திருக்கா? நம்ம பதிவுகளைத்தேடுவது, அடுத்தவர் பதிவைத்தேடுவது? இதை சிண்டிகேஷன் வைத்துக்கொண்டு செய்யமுடியுமா? கூகுள் தந்திருக்கும் தேடுபொறி என் வலைப்பதிவில் வேலை செய்வதில்லை (search within this site). எழுதிக்குவித்துவிட்டால் இதுதான் பிரச்சனை (இது பற்றிய ஆ.முத்துலிங்கத்தின் வேடிக்கையான கதையொன்றுண்டு). யாராவது உதவ முடியுமா?

மற்றபடி என்ன சொல்றது? தமிழ்மணம் குழு ஒரு முன்னுதாரணம். ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டுமென்று நினைப்பவர்க்கு. இப்போதே ஏன் நன்றி சொல்ல வேண்டும்? அப்புறமா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கும் போது மைக்கைப்புடுங்கிட்டு போயிடுவாங்க! எனக்கும் மதி அவர்களுக்கும் பசிபிக் கடல் ஊடால இருந்தாலும் நான் அவங்க பேட்டையிலே விழறேன். அதுனாலதான் இந்த ஒளிப்பாய்ச்சல். என் இணைய வாழ்வில் நான் மதிக்கும் நல்ல மனிதர் அவர். மனுஷின்னு எதுக்கு இனம் பிரிக்கணும் (சில்மிஷம் ;-)? எப்போதும் தளராத ஆக்க சிந்தனை உள்ளவர். இந்தக் குறுகிய காலத்தில் நிறையத் தமிழுக்குச் செய்திருப்பவர். அவர் தொண்டு தொடரட்டும். பின்னூட்டம் வந்து எல்லோருக்கும் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது வந்து பதிவு செய்துவிட்டுப் போகிறேன். அது நல்ல பழக்கம்.

அருணா ஸ்ரீநிவாசன் வலைப்பதிவர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில precaution பற்றி திசைகளில் சொல்லியிருக்கிறார். வலைப்பதிவு உண்மையில் எவ்வளவு சுதந்திரமான ஊடகம் என்பது பற்றி நாம் மூளைப்பகிர்வு (brain stroming) செய்ய வேண்டும்.

சிங்கப்பூர் வலைப்பதிவர் ஒன்று கூடல் தொடர்ந்து நடக்கவேண்டும் (ததாஸ்து). அங்கு வானத்தை வளைக்கக்கூடியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நம்ம எல்லோருக்கும் பயனுள்ள காரியங்களைச் செய்யுங்கள்.

வலைஞர்களில் யாராவதொருவர், ஏன் ஒரு ஒலிக்குறி அகராதி தயார் பண்ணக்கூடாது? ஆங்கிலத்தைப் பாருங்க! அதுலே! எதை எப்படி பலுக்கனும்னு ஒலிக்குறிப்பு இருக்கு. நம்மட்ட அப்படியெல்லாம் அகராதி இல்லே! நான் ஒலிப்பதிவு செய்வது இது போன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கத்தான்.

இதேபோல், வெளிநாட்டில் வாழும் நம் குழந்தைகளுக்கான ஒரு வலைஞர் மையம் ஒன்று உருவாக்க வேண்டும். அதற்கும் நம் மையத்திற்கும் ஒரு கூட்டுறவு இருக்க வேண்டும். தமிழ் கூறும் நல்லுலகில் இருக்கும் அனைத்து தமிழ் வளங்களைச் சுட்டும் வலைப்பூவாக அது மலர வேண்டும். இது ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் இருக்கலாம். ஒரு முன்னுதாரணம் உள்ளது. வளர்த்தெடுங்கள். அது தமிழை மேம்படுத்தும்!