கணிப்பேச்சுணர்தலும் கலவைத்தமிழ் நடையும்!

this is an audio post - click to play

6 பின்னூட்டங்கள்:

maalan 1/21/2005 03:02:00 PM

அன்புள்ள கண்ணன்,

என் புதிய வலைப்பதிவிற்கு உங்கள் வலைப்பூவில் இடமளித்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களுக்கும்.

வலைப்பதிவை பேச்சாக வெளியிடும் முயற்சி வரவேற்கத்தக்கது. அதை சேமித்து வைக்கமுடியுமானால் பேச்சுணரிக்கு சொற்களஞ்சியம் அமைக்கப் பயன்படும் (speech corpus)
வலைப்பதிவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த முயற்சி பற்றி திசைகளுக்கு எழுதுங்கள்.

உங்கள் உரையின் உரைநடை வடிவத்தையும் வெளியிட்டால்தான் அது பல்லூடகமாக அமையும்.

அன்புடன்
மாலன்

நா.கண்ணன் 1/21/2005 04:59:00 PM

அன்பு மாலன்:

நன்றிகள்.
வேலைப்பளுவிற்கிடையில் கணித்திரை முன் எழுதுவதைவிட பேசி அனுப்புவது சுலபமாகப் படுகிறது. ஆனாலும், 'நகாசு வேலைகள்' காட்டவேனண்டுமென்று ஆசை வந்துவிட்டால் இதுவும் நேரமெடுக்கக்கூடியதே :-) ஆயினும், ஒரு மாறுதலுக்கு சுவாரசியமாக இருக்கிறது!
எழுத்து எப்போதும் இருக்கிறது. பேச்சு வந்து விட்டது. நான் புகைப்படக்கலைக்கென்று ஒரு தளம் வைத்திருக்கிறேன். எனவே ஒட்டுமொத்தமாக ஒரு பல்லூடகப்பரிமாறல் நடந்து கொண்டு இருக்கிறது. அதைச் சொல்லவந்தேன் :-) சின்னத்திரை ஒன்று எளிதாக உருவாக்கமுடியும் என்னால். முடியும் போது எனது பழைய ஆவணங்களை பதிப்பிக்கிறேன்.
பின்னூட்டமும் பதிலாக வந்தால் சுவை கூடும் :-) !

கண்ணன்

அன்பு 1/21/2005 05:27:00 PM

அன்று திரு. மாலனின் புத்தகவிழாவிற்கு நீங்களும், திரு. மணிவண்ணன் அவர்களும் இறுதியில் வந்தமர்ந்ததை பார்த்தேன். திரு. மணி கூட சுபாவிடம் கடிந்துகொண்டது காதில் விழுந்தது: "எல்லாம் உங்க ஊர்க்காரங்களால்தான்... இங்கு வந்துசேர இவ்வளவு நேரம்..."

என்ன செய்ய அவர்கள் இங்கு காலை 8 அல்லது 8.30க்கு தொழில்சாலை வேலைக்கு வர கிட்டத்தட்ட 5 மணிக்கெல்லாம் மலேசியாவைலிருந்து கிளம்பி தயாராகவேண்டுமாம். மீண்டும் சிங்கையிலிருந்து வீடு திரும்ப இருவ 11, 12க்கு மேலாகும். அதனால், பெரும்பாலும் சிங்கையின் விரைவுசாலைகளில் மலேசியாவின் இருசக்கரவாகனங்கள் ஆபத்தான முறையில் பறக்கும் - வயிற்றுப்பிழைபுக்காக. அதிலும் வெள்ளியிரவு மற்றும் விடுமுறைநாளைக்கு முன்னிரவுகளில் மிக அதிகம்.

எழில் 1/21/2005 09:00:00 PM

மதிப்பிற்குரிய கண்ணன்,
தங்களது முயற்சி புதுமையானது. சிறப்பாக அமைந்திருக்கின்றது. தொடருங்கள். ஒரே ஒரு சுட்டிக்காட்டு: பேச்சினிடையே அடிக்கடி "வந்து" எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. குறைத்துக்கொள்ளுங்களேன்! நன்றி!

நா.கண்ணன் 1/21/2005 09:48:00 PM

வந்து அப்படியே செஞ்சுட்டா பே(போ)ச்சு :-)
(முரசு அஞ்சலில் துணை எழுத்தை எப்படித் தனியாகப் போடுவது!)

சுபமூகா 1/21/2005 11:00:00 PM

அது வந்து.. தமிழில் மிக முக்கியமான வார்த்தைன்னு சொல்லணும்னா.. அது வந்து.. வந்து தாங்க. அது பாட்டுக்கு வந்துட்டு போகட்டுங்க! :-))