நான் அனுப்புவது கடிதம் அல்ல!

முதுசொம் அறக்கட்டளை தமிழ் வட்டார வழக்கு வங்கி ஒன்று உருவாக்கிவருகிறது. உங்களது பங்களிப்பை அங்களிக்க இங்கே தட்டுக!

இந்த எனது உலகில் உங்களது பதில் உங்கள் குரலில் ஒலிக்க ஆசையா? மிக எளிது!

இங்கு சுட்டி அங்கு போய் உங்கள் குரலைப் பதிவு செய்து, உங்களுக்கே மின்னஞ்சல் செய்து கொள்ளுங்கள். அந்த மின்னஞ்சலில் உங்கள் பதிவு எங்கே நிற்கிறது என்ற மின்முகவரி (உரல்) கிடைக்கும். அதைப் பின்னூட்டமாக இங்கு பதிவு செய்து விடுங்கள்! வ்வாலா! நீங்களும் இவ்வுலகில் பேச ஆரம்பித்து விட்டீர்கள்! (எனது பின்னூட்டம் ஒன்றை இப்படிப் பதிவு செய்துள்ளேன். சென்ற பதிவிற்கு - கேட்கிறதா பாருங்கள்!)

இது எல்லாக் கணியிலும் வேலை செய்யுமா என்று தெரியவில்லை! Java-Plugin version 1.4.2 or above வேண்டுமாம். இல்லையெனில் கீழிறக்கம் செய்து கொள்க!


this is an audio post - click to play


5 பின்னூட்டங்கள்:

Moorthi 1/24/2005 12:30:00 PM

வட்டார வழக்கு மொழிகளைப்பற்றிய ஆராய்ச்சி பயனுள்ளது. ஆதரிக்கிறேன். ஆனால் அதே சமயத்தில் ஜாதி ரீதியான பேச்சு என்ற ஒன்று தேவையில்லை. வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஜாதி வேண்டாம்..தேவையில்லை என எல்லோரும் நினைக்கத் தொடங்கும் இந்த புதிய நூற்றாண்டில் ஜாதீய ரீதியில் இந்த ஆராய்ச்சி தேவையற்றது. கண்டிக்கிறேன்.

நா.கண்ணன் 1/24/2005 02:49:00 PM

கருத்திற்கு நன்றி. நாம் ஜாதியை ஆதரிக்கவில்லை. ஆனால், தமிழின் இயற்கையான பரிணாம வளர்ச்சியில் மொழி ஜாதீயக் கூறுகளை நிரம்பக் கொண்டுள்ளது. நாம் வேண்டுவதெல்லாம் மொழியின் அனைத்துக் கூறுகளையும். கணினி ஜாதி பார்க்கப் போவதில்லை. அது மொழி வழக்கை மட்டுமே கண்டு கொள்ளும். எவ்வளவு அதிகமாக 'சாம்பிள்' நாம் தருகிறோமோ அவ்வளவிற்கு நல்லது. ஜாதி பேரைச் சொல்லாமல் அதை வட்டார வழக்கென்றும் கொள்ளலாம். இதை வெறும் மொழியியல் அடிப்படையில் மட்டுமே காண்க. இதில் கண்டிக்க ஏதுமில்லை. கண்டிப்பது இருக்கட்டும். உங்கள் வட்டார வழக்கை பதிவு செய்து விட்டீர்களா? நாலு சாம்பிள்தான் உள்ளது :-(

Moorthi 1/24/2005 03:28:00 PM

//மொழி ஜாதீயக் கூறுகளை நிரம்பக் கொண்டுள்ளது//

இல்லை..இல்லை..இல்லவே இல்லை.

இடத்திற்கு இடம் வாழும் மக்களின் உச்சரிக்கும் முறைதான் வேறுபடும். ஜாதிக்கென ஒரு தமிழ் உச்சரிப்பு இல்லை. வேண்டுமானால் தமது ஜாதியினர் மட்டுமே தெரிந்து கொள்ளும் வண்ணமாக (குழூஉக்குறி?) பேசுவார்கள். உதாரணமாக மாட்டுத் தரகர்கள், நகை வியாபாரிகள். மற்றபடி ஜாதிக்கென தனித்தமிழ் ஏதுமில்லை. (நீங்கள் குறவர் மற்றும் பிராமணர்களின் உச்சரிப்பைக் கொண்டே இதனை வலியுறுத்துகிறீர்கள் என நினைக்கிறேன்) இதுபோல ஜாதி அடிப்படையிலான மொழி உச்சரிப்பினை சேகரிப்பதன் மூலம் ஜாதி இன்னும் வளரவே செய்யும். மறந்து இருப்பவர்களை தட்டி எழுப்பி ஜாதீயில் குளிர்காயச் செய்யும் முயற்சியே இது.

எங்கள் வட்டார வழக்கினை விரைவில் அனுப்பி வைக்கிறேன்.

மிக்க நன்றி.

நா.கண்ணன் 1/24/2005 05:00:00 PM

எதற்கு வம்பு. நாம் இப்படி வைத்துக்கொள்வோம். அவரவர் வீட்டில் வழங்கும் மொழி நடையைப் பதிவு செய்து வைத்துக் கொள்வோம். அது கணித்தமிழ் வளர்ச்சிக்கு உதவும். சரிதானே :-)

nettrikkan 1/24/2005 11:43:00 PM

Thangal sol attralum,sol thiranum miga nandru. Thoduruga ungal pathivugal...
Neril amarndhu uraiaduvadupol oru unarchi erpattathu..


siva kumar