வலை விரித்தேன்! வருவாரில்லை!!

விரைவாக விரிந்து வரும் வலைப்பதிவாளர் உலகை எப்படிக் காண வேண்டும்?

என்ன அலைகளின் திரட்சியில் உருவாகும் திட்டுக்கள் எனலாமா? இல்லை, ஆடிக்காற்றில் அடித்து விழும் அத்திப்பழங்கள் எனலாமா? இல்லை, உலகைச் சுற்றிப் பிரிந்து செல்லும் பல்வேறு நதிகள் எனலாமா? வழித்தடம் எனலாமா? இல்லை, சூறாவளியில் வந்து சேரும், சேறும்-குப்பையும் எனலாமா? இல்லை, இதுவொரு நூலகம், அங்கு பல்வேறு வகையான புத்தகங்கள் வாசிப்புக்கு உள்ளன, அவைகளில் நமக்குப் பிடிதவைகளை வாசிக்கலாம் எனக் கருதலாமா? கொஞ்சம் ஹேரிபோட்டரில் வருவது போல் இவை பேசும் புத்தகங்கள், வளரும் புத்தகங்கள், வேண்டாமெனில் காணாமல் போகும் புத்தகங்கள். வழித்தடங்கள் அழிவதில்லையா? அது போல்தான் இதுவும் எனலாமா?

தமிழ்மணம் என்ற தளம் இப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது!

வலைப்பதிவு பற்றி எனக்கு திசைகள் வாசிப்பின் மூலதான் அறிமுகமானது. அதற்கு முன் பத்ரி அங்கு கொட்டகை போட்டுவிட்டார். மாலனும் ஒரு டேரா போட்டுவிட்டு, பின் கிளப்பிப் போய்விட்டார் (தான் அதிகம் எழுதமுடியாத காரணத்தை திசைகளில் சொல்லியிருந்தார்). வலைப்பதிவாளர்களில் பாதிக்குமேல் நரிக்குரவர்கள் :-) கொஞ்ச நாள் டேரா போட்டுவிட்டு, 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' எனப்போய்விடுபவர் (பலருக்கு பொழைப்பு இதுவல்லவே!). சிலர் சிங்கப்பூர் முஸ்தபா கடைபோல் டேரா போட்ட இடத்திலேயே வளர்ந்து மாளிகை கட்டிவிட்டனர். கொஞ்சப் பேர் சேர்ந்து co-operative society கூட கட்டிவிட்டனர். இன்னும் சில பேர் அவ்வப்போது வந்து குதித்து கலக்கல் செய்துவிட்டுப் போய்விடுகின்றனர்.

வலைப்பதிவை நாம் எவ்வெவ்வகையில் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வலையிருப்பு அமைகிறது.

1. வலைப்பதிவென்பது நாட்டில் நடக்கும் சூடான விஷயங்களைப் பற்றிப் பேசி, வம்பளப்பது எனில் இது மாளிகையாக வளர்ந்துவிடும் சாத்தியமுண்டு. ஏனெனில், வம்பு தும்புக்கா பஞ்சம்? இல்லை, நாட்டு நடப்பிற்கா பஞ்சம்? இல்லை ஒன்று பற்றி கருத்துச் சொல்வதற்கா பஞ்சம். Are we not highly opinionated beings on planet earth?
2. கவிதை எழுத இது வசதியான மீடியம். தினமொரு கவிதை எழுதி தனி வலைப்பக்கத்தில் ஏற்றுவதை விட இதில் ஏற்றுவது எளிது. ஆனால் கவிதை என்பது சுலோகம் சொல்வது போன்ற வழிபாட்டுக்குக் காரியமல்ல. சிலரால் தினம் கவிதை எழுதமுடிகிறது. ஆனால் அது கவிதைதானா எனக்காலம்தான் சொல்லவேண்டும்.
3. சினிமா விமர்சனம் எழுதினால் வண்டி ஓடும். ஏனெனில் சினிமா நிறைய வருகின்றன.
4. ரொம்ப சீரியசான விஷயம் பற்றித்தான் பேச வேண்டுமென நினைத்தால் இதிலொரு சிக்கலுண்டு. டிராபிக் இருக்காது. பின்னூட்டமில்லாத வலைப்பதிவு 'கொள்வாரில்லாத வலைப்பதிவு' என்ற எண்ணத்தை உருவாக்கும் (இது முழு உண்மை இல்லையெனினும்)
5. இந்தச் சிக்கலைத் தவிர்க்க பல நண்பர்கள் சேர்ந்து கொண்டு தனித்தனி வலைப்பதிவு நடத்தும் போது, சாதாரணமாக சாயந்திரம் நண்பர் வீட்டிற்குப் போவது போல் வலைப்பதிவிற்கு வந்துவிட்டுப் போகலாம் பாருங்கள்! எனக்கு ஞாபகமிருக்கிறது, இன்று 'கவன ஈர்ப்பின்' உச்சத்திலிருக்கும் எனதருமை காசி, முதலில் எழுதும் போது நண்பர்களை வந்து பார்க்குமாறு வம்பிழுத்துக் கொண்டே இருப்பார்.
6. காசியின் வளர்ச்சி காட்டுவது ஒன்றுதான். தொழில் நுட்பத்தைக் கற்க வேண்டும், அதைப்பொதுப் பயனிற்கு வைக்கவேண்டும், எப்போதும் சளைக்காத ஆக்கத்தில் (creative) இருக்க வேண்டும். அப்படியெனில் இங்கு குப்பை கொட்டலாம்!

ஆயினும், ஏதாவதொரு நிலையில் ஒரு அயர்ச்சி, ஒரு தளர்வு வருவது வலைப்பதிவில் காணக்கூடியதாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பின்னூட்டம்தான். அது இல்லாத போழ்து நாம் யாருக்கு எழுதுகிறோம்? ஏன் எழுதுகிறோம் என்ற கேள்வி நம்மைத் துளைக்கும். அது படுத்தும் அவஸ்தையில் ஒன்று கடையை மூடிவிட்டு கிளம்பத் தோன்றும் இல்லையெனில் கொஞ்சம் கீழிறங்கி வம்பு, தும்பில் மாட்டிக்கொண்டு 'கவனம்' பெறத் தோன்றும். வலைப்பதிவின் பலமும், பலவீனமும் இந்த கவன ஈர்ப்பே (attention trading).

எனவே நண்பர்களே காதல் செய்வீர்! ஆ! வலைப்பதிவை காதல் செய்வீர் :-) செய்வதன் அடையாளமாக ஒரு சின்னப்பூவை காட்டிவிட்டுப்போங்கள்!

பின் 'குப்பை' அன்பு சொல்வது போல் வலைப்பதிவென்பது தினம் மலரும் 'அன்பர் தினமே'!!

பிகு: வலைப்பதிவின் பிற பயன்கள் என்ன? எங்கே ஒரு பட்டியல் இடுங்கள் பார்ப்போம்!

அரவான் பலியும் அலிகளின் வாழ்வும்!

தமிழ் இணையம் 2004 மாநாடு சிங்கைத் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில்தான்
நடந்தது. அது சமயம், அங்குள்ள ஆசியத்துறையைச் சார்ந்த எனது ஜெர்மன்
நண்பர் முனைவர் உல்ரிக நிக்கொலஸ் அவர்களைச் சந்தித்துப்பேசும்
வாய்ப்புக்கிடைத்தது. அவர் தமிழ் ஈர்ப்பால் ஜெர்மனியில் தமிழ் கற்று, ஒரு
தமிழனையும் கல்யாணம் செய்து கொண்டு தமிழாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள
பெண்மணி. எப்போது பார்க்கும் போது ஏதாவது சுவாரசியமாகச் சொல்வார்.
இம்முறை அவரது கணவருக்கு எங்களூர் (திருப்புவனம்) பழையூர் கண்மாய்கரை
ஐயனார் கோயில் பூசை உரிமை என்று சொன்னார். அப்படி இப்படின்னு அவங்க எங்க
ஊர் மாட்டுப்பெண்ணாகிட்டாங்க (மருமகள்)!

இது சமயம் அவரது சமீபத்திய ஆய்வான இந்திய அலிகள் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தோம். உலகின் பிற பாகங்களில் வாழ்வதை விட இந்தியாவில்
அலிகள் கவுரவமாக வாழ்வதாக அவர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அவரது
ஆவணப்படத்தைப் போட்டுக்காட்டினார். ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல்
இருப்பது பொதுவான சமூகக் கேலிக்கு தோதானாலும், அதுவே ஒரு மாந்திரீக
குணத்தை (magical quality) அவர்களுக்கு அளிப்பதாக அவர் காட்டிய
ஆவணப்பட்ம் சொன்னது. எவ்வளவுதான் பகுத்தறிவு நாம் பேசினாலும் நமது
புராணங்களும், இதிகாசங்களும்தான் இம்மாதிரி இரண்டும் கெட்டான்களுக்கு
உறுதுணையாக வருகின்றன. இந்திய அலிகள் தங்களை பல நேரம் அர்ச்சுனனாக
பாவித்துக் கொள்கிறார்கள். மோகினியாக வரும் திருமாலே இவர்களுக்கு
தெய்வமாகவும் ஆகிறார். வைணவத்தின் வீச்சு இந்தியாவில் எவ்வளவு
அடியாழத்தில் ஊன்றியிருக்கிறது என்பதை அந்த ஆவணம் காட்டியது. மேலும்
மகாபாரத யுத்தத்தில் 'அரவானை' பலி கொடுப்பதை இவர்கள் தங்களது சொந்த மரணம்
போல் கருதி ஒப்பாரி வைப்பது தொன்மம் என்பது வாழ்விற்கு எவ்வளவு
அத்தியாவசமாக உள்ளது என்பதை எனக்கு உணர்த்தியது! இந்த திருவிழாவில்
ஆண்களும் பெண்கள் போல் தங்களை பாவித்துக்கொண்டு சேலை அணிந்து கொண்டு
வளையல் அணிந்து வந்து வளையலை உடைத்துவிட்டு ஒப்பாரி வைப்பது உலகின்
அதிசியம் என்று தோன்றியது. இது அலிகளுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்குமென்று
எண்ணிப்பாருங்கள். அவர்கள் எதிர்கொள்வதெல்லாம் கேலியும், கீழமையும்தானே!
நமது சமயம் அவர்களை எவ்வளவு ஆறுதலாக உள் வாங்கிக்கொள்கிறது என்பதை
கவனிக்க வேண்டும். இது பிற புறச் சமயங்களில் இல்லை என்பதையும் கவனிக்க
வேண்டும்.

ஒரு மத்திமர் சமூகத்தில் பிறந்துவிட்ட எனக்கு, வெளிநாட்டினர் உதவியுடன்
ஒரு புதிய இந்திய தரிசனம் கிடைப்பது எப்போதும் புத்துணர்ச்சி தருவதாகவே
உள்ளது.

பூண் இரண்டு ஒத்துப்போகில் அலியாகும்!

நாம் இங்கு பால் ஈர்ப்பு பற்றிப் பேசுகிறோம். பால் இச்சை பற்றியல்ல. மிருகத்தனமென்று நாம் அடிக்கடி சொன்னாலும் மிருகங்களில் ஓரினப்புணர்ச்சி கிடையாது. அது மனிதனிடத்தில்தான் காணக்கிடைக்கிறது. ஆண்-பெண் என்ற வேறுபாடு உள்ள உயிரினங்களில் பால் ஈர்ப்பு என்பது பெண்ணை நோக்கிய ஆணின் ஈர்ப்பே. இதற்காக உயிரைக் கொடுத்து அவை போராடுகின்றன. கொரில்லா இனத்தில் ஆல்பா ஆண் தனது நாட்டாண்மையைக் காண்பிக்க அவனுக்குக் கீழுள்ள கூட்டத்தில் இருக்கும் எவரையும் pseudo-fucking பண்ணும். இது தனது மேலாண்மையக் காண்பித்துக் கொள்ள மட்டுமே. உண்மையில் உடலுறவு கிடையாது.

மனிதர்களில் மட்டும் தெளிவாக ஆண், பெண், இவையிரண்டும் கலந்த அல்லது ஒரு பாலில் மற்ற பாலின் குணங்கள் கூடிய 'அலி' என்னும் வகை இருக்கிறது. இது பிறப்பிலேயே வருவது என்று திருமூலர் சொல்கிறார்:

ஆண் மிகில் ஆண் ஆகும்; பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாள் மிகும் ஆயின் தரணி முழுது ஆளும்
பாழ் நவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே

இதன் பொருள். ஆண்-பெண் கலவியின் போது சுக்கிலம் அதிகமானால் அது ஆண் குழந்தாகப் பிறக்கும். சுரோணியம் மிகுதியானால் பெண் குழவியாகும். இவையிரண்டும் சமமானால் அலியாகப் பிறக்கும் என்பது. திருமூலர் பேசும் சுக்கிலம், சுரோணியம் என்பது biochemically என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இவர் விந்துச்சாறில் இருக்கும் X-Y chromosome பற்றிப் பேசவில்லையென்று தோன்றுகிறது. ஆயின் அச்சாற்றிலுள்ள micro-environment பற்றிப் பேசுகிறார் என்பது போல் இருக்கிறது. விவரம் தெரிந்தவர் சொல்லவும்.

எது எப்படியிருப்பினும் 'அலி' என்பது நம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரிவு. அது கேவலமல்ல. அது பிறப்பிலேயே வருவது. இலட்சம் சுலோகங்கள் கொண்ட மகாபாரத்தில் வரும் கதாநாயகன் அர்சுனன் அலியாக சில வருடங்கள் கழித்திருக்கிறான். பாற்கடல் கடைந்த போது ஆணான திருமால் மோகினியாக உடல் மாற்றம் செய்து கொள்ள, சிவன் அவளைக் கண்டு மோகிக்க ஐயப்பன் பிறந்ததாக ஒரு கதையுண்டு. இது ஒருவகையில் ஓரினப்புணர்ச்சியே. இந்தியர்கள் வாழ்வை வாழ்வாகப் பார்த்தார்கள். அதிலுள்ள அதிசயங்களைப் பற்றி விகல்பமின்றி பேசியிருக்கின்றனர்.

இந்த ஆண்-பெண் என்ற வேறுபாடு உயிரினங்களுக்கு உயிர் தோன்றி பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்பே வருகிறது. நுண்ணுயிர்களில் இப்பாகுபாடு கிடையாது. பின் ஆண்-பெண் உறுப்புகளை ஒரே உடலில் தாங்கிய உயிரினங்கள் உருவாகின்றன. இவைகளை hermaphrodites என்பார்கள். பின் தனியான ஆண், தனியான பெண் உருவாகி இனக்கலப்பு செய்கின்ற நிலை வருகிறது. நமது ஆரம்பத் தோற்றதில் ஒரே நிலை இருந்ததால் அவ்வப்போது பால் வேறுபாடு கொண்ட உயர் உயிரினங்களில் கூட பால்வேறுபாடு குன்றிய (மங்கிய) உயிரினங்கள் தோன்றுகின்றன. உலகில் காணும் அதிசய பால் வேறுபாடுகள் பற்றிய இணையத்தளம் இருக்கிறது.

இந்த இயற்கை விதிகளை இப்போதுதான் மனித சமூகம் மீண்டும் மதிக்கக் கற்றுக் கொண்டுள்ளது. டென்மார்க்கில் ஹோமோசெக்சுவல் கல்யாணம் அரசு அங்கிகாரம் பெற்றுவிட்டது. பிரான்சிலும் உண்டு என்று நம்புகிறேன். பெரும்பாலும் ஐரோப்பாவில் ஒருவர் பாலீர்ப்பு என்பதே அது எத்திசை நோக்கியதாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் வந்தாகிவிட்டது. ஆனால் தமிழர்களுக்குள் இந்த ஞானம் இன்னும் பரவவில்லை.

எனவே பாலீர்ப்பு என நாம் பேசுவது வக்கிர பாலியல் பசி பற்றி அல்ல. எப்படி ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியுமோ அதுபோல் ஆணும், ஆணும், பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழலாம் எனும் கருத்து பற்றியதே!

பாலீர்ப்பு

எனது சொய்ஸ் என்ற முன் பதிவின் வழி ஒட்டி இரண்டு பதிவுகளைக் காண நேரிட்டது.

தோழியர் பக்கங்களில் உஷா ராமச்சந்திரன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ஹோமோசெக்சுவல், லெஸ்பியன் என்ற பதிவு.

அவரிடும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வண்ணம் வெங்கட் எழுதியுள்ள தற்பால் நாட்டம் எனும் பதிவு.

சேர்பு வாசிப்பாக நான் சமீபத்தில் சம்மச்சார்.வணி-இல் எழுதிய என் அன்னை பற்றிய எல்லாமும் என்ற தொடர் பத்தியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சில கேள்விகள் இப்போது.
1. திருமணம் என்பது புனிதமானதா? அதற்கும் சோரம் போதலுக்குமுள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன?
2. பிறப்புறுப்பு என்பதே பெண்களுக்கு கழிவிடமாக இருக்கும் போது உஷா எப்படி ஆணின் கழிவிடத்தை பாலியல் நுகர்விற்குப் பயன்படுத்தலாமென்று கேட்கலாம்?
3. வெங்கட் சொல்லுவது மாதிரி தமிழக சூழலில் ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுகின்றனர் (ஆண்/ஆண்; ஆண்/பெண், பெண்/பெண்). அது பற்றிய தெளிவான தரவு எடுக்கும் வண்ணம் நமது குமுகாயம் இன்னும் பதப்படவில்லை. எனவே மீடியாவின் மீதே முழுப்பழியையும் போடமுடியுமா?
4. உஷாவின் இன்றையப் புரிதல் அவர் வாழும் சூழலின் தாக்கத்தால் உருவாகியிருக்கச் சாத்தியமிருக்கிறதா? மத்திய கிழக்கில் சோடோமியின் தினவிற்கு ஈடு கொடுக்க இந்தியச் சிறுவர்கள் ஏற்றுமதியாவது காரணமாயிருக்கலாம். வெங்கட் போல் மேலை நாட்டில் வாழும் எங்கள் நோக்கு இதில் இவ்வளவு காரம் காட்டுவது கிடையாது. இதுவும் ஒரு சாய்ஸ் என்றே பார்க்கிறோம். உஷா அமெர்க்கா போய் வாழ்ந்தால் தனது கருத்தை பின்னால் மாற்றிக் கொள்வாரா?

உஷாவின் பதிவு மிகத்தைர்யமான பதிவு. பெரும்பாலும் பெண்கள் பேசக்கூச்சப்படும் விஷயத்தை பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறார். சுய இன்பம் என்பது பற்றியும் இந்தியர்களுக்கெ வித்தியாசமான எண்ணங்கள் உண்டு. இவர் அதை எப்படிக் காண்கிறார் என்று அறிய ஆவல்.

எனது முன்னாளைய பதிவில் மாற்றுப்பெண் எனும் தலைப்பில் எப்படிப் பால்மாறிய ஆண்கள் கௌரமாக வாழ்கின்றனர் என்று சொல்லியிருக்கிறேன். கொரியாவில் மிகப்பிரபலமான ஒரு டி.வி நடிகை ஒருகாலத்தில் 'ஆண்'.

நமது ஆன்மீகத்தில் எல்லாவற்றிற்கும் இடமிருக்கிறது. பிறப்பிலேயே இம்மாதிரி மனிதர்கள் (பொதுப்பாலில்) எப்படி பிறக்கிறார்கள் என்று திருமூலர் பேசுகிறார்.

சொய்ஸ் (Choice)

நாம் வாழும் காலம் விசித்திரமானது. முன்னெப்போதும் இல்லாத அளவு வாய்ப்புகள் அதிகமுள்ள காலம். எனது பால்ய காலத்தில் இவ்வளவு வாய்ப்புகள் கிடையாது. உள்ளூரில் ஒரே உயர்நிலைப் பள்ளி (இப்போது நிறைய வந்து விட்டது). ஒரே நூலகம். பள்ளிக்காலங்களில்தான் முதல்முறையாக கோதுமை எங்களுக்கெல்லாம் அறிமுகமானது. அதற்கு முன் பூரிக்கிழங்கு, சப்பாத்தி, ரவா தோசை என்பதெல்லாம் கேள்விப்படாத ஒன்று. சீனிக்கு ரேஷன் உண்டு. சில நேரம் மண்ணெண்ணெய்க்குகூட ரேஷன் இருந்தது. பால் விநியோகம் அவ்வளவு கிடையாது. எனவே வீட்டில் இரண்டு பசு மாடுகளுண்டு.

என் அன்னைக்கு ஒரே கணவர் :-) அப்பாவிற்கு ஒரே மனைவி :-) அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியே போனதில்லை. அம்மாவின் குறைந்த பட்சப்பயணம் 50 கி.மீ சுற்றளவிற்குள் இருக்கலாம். இன்றுதான் காலம் எவ்வளவு மாறிவிட்டது! அப்பாவின் பிள்ளையான நான் Airport hopper-ஆக வாழ்கிறேன். என் வாழ்வின் கணிசமான பொழுதுகள் வின்னில் கழிந்திருக்கின்றன. அவரது பேத்தி (என் பெண்) பள்ளி முடிப்பதற்குள் பல நாடுகள் பார்த்துவிட்டாள். நம்ம ஊரில் இன்னும் சிலர் ஏர்போர்ட்டே பார்த்திராத போது அவள் தனியாக பல நாடுகள் பயணப்பட்டிருக்கிறாள். வாய்ப்புகள் அதிகமாகிவிட்டன.

Choice என்பது வரப்பிரசாதம் என்பது போய் ஒரு பளுவாக மாறிவிட்டது இப்போது. எதற்கெடுத்தாலும் choice. அக்காலத்தில் ரேடியோ வாங்குவது expensive என்பதால் ஊருக்கு ஒரு பஞ்சாயத்து ரேடியோவுண்டு. லவுட்ஸ்பீக்கர் வைத்து ஆத்தாங்கரையில் போடுவார்கள். இன்று தனியாக யாரும் ரேடியோ வாங்குவதில்லை. எல்லாம் அவியல், கூட்டு வகைகள்தான். எனது mp3 player-ல் ரேடியோவுண்டு, ரெகார்டிங் செய்யமுடியும், கணினிப் போக்குவரத்து செய்யமுடியும், டிஜிட்டல் இசையை இங்குமங்கும் மாற்றமுடியும். இது போதாது என்று 1 கிகாபை சேமிப்புக் கிட்டங்கியுமுண்டு. இந்தமாதிரி mp3 player வாங்கப்போனால் குறைந்தது 50 மாடல்களாவது இருக்கின்றன. இப்போதெல்லாம் informative-வாக இல்லையெனில் ஒரு குண்டூசி கூட வாங்கமுடியவில்லை. தேர்வு..தேர்வு..அலுக்கவைக்கும் தேர்வுகள். எதையெடுத்தாலும்.

என் தந்தையின் வாழ்வைக்கண்டு பொறாமையாக இருக்கிறது. அம்மாவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இப்போது மணவாழ்வு என்பதில்கூட நிறைய சாய்ஸ் இருக்கு. சட்டென மாப்பிள்ளை/பெண் அமைவதில்லை, அமைந்தாலும் மணவாழ்வதென்பது முன்பு போல் நிரந்தரமில்லை. ஒன்று இல்லையெனில் மற்றொன்று! கல்யாணம் செய்து கொண்டும் வாழலாம், கல்யாணம் செய்து கொள்ளாமலும் வாழலாம். அவரவர் விருப்பம். ஒருவருடன் வாழலாம், கூடியும் வாழலாம். ஆனாக வாழலாம், ஆண்/பெண் இரண்டுமாயும் வாழலாம். ஆண் ஆணுடன் வாழலாம், பெண் பெண்ணுடன் வாழலாம்.

அம்மாவை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. 16 வயதில் கல்யாணம் செய்து கொண்டாள். கஷ்டமோ நஷ்டமோ கட்டிய கணவனை விட்டுப் பிரியவில்லை. யாரும் தர்மசீலர்கள் இல்லை, nobody is perfect வாழ்வை, வாழ்வதின் மூலம் புரிந்து கொண்டாள். கஷ்ட்டம் வந்தபோது அழுதாள். மகிழ்வான காலங்களில் குடும்பத்துடன் குதூகலித்தாள். இன்று ஆணுக்கும், பெண்ணிற்கும் சாய்ஸ் அதிகமாய் விட்டது. அதனால் பொறுமை போய்விட்டது. கடைசிவரை இருந்து பார்த்துவிடுவோம் என்ற மனோதிடமில்லை. நமது சௌகர்யங்களை விட, நமது அசௌகர்யங்கள் நம் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றன. எனவே அசௌகர்யமற்ற வாழ்வை ஒதுக்க இந்த சாய்ஸ் ஒரு சாக்காகப் போகிவிட்டது! ஒன்றில்லையெனில் மற்றொன்று.

ஒருவகையில் இந்த சாய்ஸ் நமக்கு அதிக சௌகர்யத்தைத் தருகிறதா? இல்லை பிரச்சனைகளைத் தருகிறதா எனக் கேள்வி கேட்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

அம்மா போன தடத்திலேயே சித்தி இன்னும் போய்க்கொண்டிருக்கிறாள் தனது 85 வயதில். அவருக்கு வாழ்வு அலுப்பாக இருப்பது போல் தெரிவதில்லை. நமக்கு ஏன் ஒருவருக்கொருவர் இவ்வளவு விரைவில் அலுத்துப்போகிறது?

இதுதான் இன்றைய நட்சத்திரக் கேள்வி!!

நைனா!

இப்படியொரு படம். சென்னை போகும் போதெல்லாம் அப்படத்திலிருந்து காமெடி காட்சி காட்டுவார்கள். இப்போதுதான் படத்தைத் தேடிப்பிடித்து வாங்கினேன். எனக்கு பிடித்துப் போய்விட்டது. வைகைப்புயல் வடிவேலு நம்மாளு! ஜெயராம் ரொம்ப டீசெண்ட் நடிகர்! தெனாலியிலிருந்து அவரை ரொம்பப்பிடித்துவிட்டது. கதாநாயகன், நாயகிகள் மலையாளம்! மலையாளச் சூழல் கதையில். சின்னக் கதாநாயகிக்கு ரொம்பச் சாதாரண அழகு (கவர்ச்சியான அழகில்லை என்று சொல்கிறேன்). கிராபிக்ஸ் நன்றாகச் செய்திருக்கிறார்கள். குழப்பமோ, எதிர்பார்ப்புகளோ இல்லாத கதை. ஒரு காமெடி பாக்டரியே படத்திற்குத் துணை போகிறது. பிராமணீயம் தமிழகத்தில் காலாவதியாகிவிட்டது என்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கிறது! கோவை சரளா பேசுவது பிராமணத் தமிழென்றால் பிராமணீயம் நிச்சயம் காலாவதியாகிவிட்டது. வீட்டில் யாராவது, அதுவும் பிராமண வீட்டில் பிணத்தின் படத்தை மாட்டுவார்களோ? ரொம்ப suggestive-போலருக்கு. இனிமேல் கலந்து அழிந்து பிராமணியம் இப்படித்தான் தமிழகத்தில் இருக்கும் என்று சொல்லாமல் சொல்கின்றனர்!

ஜெயராம்தான் கதாநாயகன் என்றாலும் வடிவேலுதான் படத்தின் வலு!

சிங்கை இணைய சந்திப்பு

இதுதான் அங்கோர்வாட் பயணக்குறிப்பின் கடைசிப் பதிவு. இது சிங்கை வலைப்பதிவாளர்கள் நடத்திய 'இணைய சந்திப்பு' பற்றி அமைகிறது. இது பற்றிய பிற பதிவுகளில் சில கீழே கொடுத்துள்ளேன். இது முழுப்பட்டியல் அல்ல.

http://mmoorthi.blogspot.com/2005/02/blog-post_11.html
http://kuppai.blogspot.com/2005/02/blog-post_110811021266759655.html
http://kuppai.blogspot.com/2005/02/blog-post_110812556217726637.html
http://yemkaykumar.blogspot.com/2005/02/blog-post_110813984556725037.html

பதிவாளர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டும். அறிமுகமாகிவிட்டது, எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாமென யோசிக்கவேண்டும். 'வலைப்பதிவாளர் தினம்' என்று வருடத்தில் ஒருநாள் பெரிய நிகழ்ச்சி நடத்தலாம். அது பொழுது ஒவ்வொருவரின் பங்களிப்பு பற்றி மொத்த மதிப்பீடு செய்யலாம்.

இதுவல்லாமல் அடுத்தமுறை சிங்கை வரும்போது கொஞ்சம் ஆழமாக இலக்கியம் பற்றி, சமீபத்திய இலக்கிய உத்திகள் பற்றி, அவரவர் படைப்புகள் பற்றி அலச வேண்டும். இதற்கு கொஞ்சம் முன் தயாரிப்பு வேண்டும். சந்திப்பவர் எழுத்தை மற்றவருக்கு அறியத்தரவேண்டும். பின் படைப்புகள் பற்றி ஆழமாகப் பேசலாம். இம்முறை ஜெயந்தி சங்கரின் ஒரு கதை பற்றி அதிகம் பேசப்பட்டது. சித்ரா ரமேஷ் எழுத்து பற்றி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்த போட்டோ திரு.மகாலிங்கம் காளிமுத்து குமார் எடுத்தது.

this is an audio post - click to play

முஸ்தபா செண்டர்-சிங்கை!


Mustafa center.
Photo by N.Kannan
முஸ்தபா செண்டருக்குப் போகும் போது இரவு 12 மணிக்கு மேலிருக்கும். வந்தவுடன் நம்மவூர் தோசை ஞாபகம் வந்துவிட்டது :-) இந்த நேரங்களில் அங்கு அலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது! 24 மணி நேரம் திறந்திருக்கிறது. ஒருவகையில் அது வசதி.

this is an audio post - click to play

கடலிலிருந்து மீட்ட நிலங்களில் வான்முட்டும் கட்டிடங்கள்


The ever charming Singapore.
Photo by N.Kannan
அடுத்த முறையாவது 'உலகம் சுற்றும் வாலிபனில்' எம்.ஜி.ஆர் பால் வாங்கி சாப்பிட்ட அந்த உயர் கட்டிடத்திற்கு போக வேண்டும் (ஐயாவுக்கு என்ன வேணும்? பியர், விஸ்கி? இல்லப்பா! ஒரு கப் பால் கொடு!)

வானத்தில் பறப்பதும், பூமியில் இருப்பதும் (அங்கோர்வாட் 21)

"வானத்தில் பறப்பதும், பூமியில் இருப்பதும் அவரவர் எண்ணங்களே!" என்றொரு பழைய பாடலுண்டு. காஞ்சனா என்ற அழகி பாடுவதாக வரும் (ஜெமினியுடன்). வானத்தில் பறக்கும் ஒவ்வொருமுறையும் ஆயிரம் எண்ணங்கள் உதயம். சில இங்கு பதிவு செய்யப்படுகின்றன.


(இப்படி எடுக்கமுடியும். ஆனால் இது சுட்டது. பல நல்ல வின்படங்கள் வீடியோவிலுள்ளன. எடுக்க நேரமில்லை)


Warning: Very noisy!!

this is an audio post - click to play

அங்கோர்வாட் 20


Cambodia from above (see the huge River below)
Photo by N.Kannan
வானத்திலிருந்து கம்போடியாவை படமெடுக்க ஒரே போட்டி. பக்கத்தில் ஒரு பிரெஞ்சுக்கு கிழவி என்னைப் படுத்திவிட்டாள்!

அங்கோர்வாட் 19


Siem Reap International Airport, the size of Chennai/Madurai Airports with limited flights.
Photo by N.Kannan
சீம்ரீப் விமானதளம் சிறியது ஆனால் சென்னை, மதுரையை விடச் சுத்தமானது.

அழியாத கோலமாக அங்கோர்வாட் (18)


If there is no worship everybody is a God!
Photo by N.Kannan

this is an audio post - click to play

அங்கோர்வாட் 17 - திருமாலுக்குப்பதில் சித்தார்த்தன்!


Budha instead of Tirumal - mUlavar & uRcavar
Photo by N.Kannan
இந்தியாவில் பௌத்த ஆலயங்கள் சிவ, விஷ்ணு ஆலயங்களாக மாறின. அதன் மாற்றுக்காட்சி கம்போடியாவில். விஷ்ணு அப்படியே புத்தனாக மாறிவிடுகிறார். வியட்நாமிலும் இந்த integration-ஐ பார்க்கலாம்!

அங்கோர்வாட் 16 - பாற்கடல் கடைதல்!


Churning of pARkadal
Photo by N.Kannan
"வாசுகியை நாணாக்கி கடல் வயிறு கலக்கினையே!" என சிலப்பதிகாரம் பேசும் காட்சி மிகப்பிரம்மாண்டமாக இந்தியாவில் எங்கும் காணமுடியாத வகையில் அங்கோர்வாட்டில் சித்தரிக்கப்பட்டுள்ளது!

அங்கோர்வாட் 15 - கருட சேவை!


Garuda sevai
Photo by N.Kannan
பெரியதிருவடி என அழைக்கப்படும் கருடன், சிறிய திருவடி என அழைக்கபடும் அனுமன், ஆதிசேஷன் என அழைக்கப்படும் தேவ சர்பம் இவை கம்போடியக் கோயில் அனைத்திலுமுண்டு.

12B

நான் ஐரோப்பாவில் இருந்தவரை என் தமிழைத்தக்க வைத்து வளர்த்தது ஈழத்து சமூகம்தான். அப்படியொரு தமிழ் சமூகம் இல்லையெனில் தமிழ் சினிமா என்பது என்னைவிட்டு எங்கோ போயிருக்கும். தமிழ்நாட்டில் வாழ்ந்தபோதே பார்த்து, பார்த்துதான் சினிமாவிற்குப் போவேன் (பள்ளிப்பருவம் அப்படியல்ல. விட்டலாசார்யா படம் ஒன்று விடமாட்டேன் :-)

ஆறுமுகசாமி என்ற பெரியவர் 12B என்ற படம் பார்த்ததாகவும், ஒன்றும் புரியவில்லை என்றும், நான் விஞ்ஞானி என்பதால் எனக்குப் புரியுமென்று படத்தை பதிவு செய்து வைத்திருப்பதாகச் சொன்னார். ஆனால், கடைசிச் சில நிமிடங்கள் பதிவு செய்யுமுன் நாடா காலியாகிவிட்டது என்றும் சொன்னார். படம் பார்த்தவுடன் பிடித்து விட்டது. ஷியாம் மதுரைக்காரர் என்பதற்காக மட்டுமல்ல..இளமை துள்ளும் முகம். அதிர்ஷ்டக்காரர், முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா ஜோடி.

சிம்ரன் செக்ஸி அழகு. ஆனாலும் அவராலும் நடிக்க முடியும் என்று காட்டிய படங்கள் சில. கன்னத்தில் முத்தமிட்டால் (ஐயோ! நந்திதா தாஸ்-என் அழகே!). அடுத்து, 12B. சோகம் தழுவும் முகம், அதில் மலரும் காதல். அதுவும் வளரும் போதே வாடிவிடுவது. ஜோதிகாவிற்கும் நடிப்பிற்கும் ரொம்ப தூரம். எதுவுமே அவருக்கு உதவுவதில்லை. முகம் ஒரு கோணத்தில் மாங்கோலாய்ட் பேபி போல். உடம்பிற்கு ஏற்ற முகமல்ல. சின்னது. உடம்போ அதைவிடக் கோளாறு (இவருக்கு அரை டிராயர் போட்டு பார்த்து ரசிக்க தமிழனால்தான் முடியும் :-). சுட்டியான முகம் -குளோசப்பில் மட்டும். அதுதான் ப்ளஸ் பாயிண்ட்.

பின்னால் இப்படத்தின் ஆங்கில மூலத்தையும் பார்த்தேன். ஷியாம் அடிபட்டுச் சாகும் காட்சி மட்டும் அப்படியே காப்பியடிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, இது தமிழ்ப்படம்தான். பாடல்கள் சூபர். படமாக்ககிய விதமும் சூபர். ஜோர்டானில் படமாக்கப்பட்டிருக்கும் பாட்டு டாப் கிளாஸ்.

ஆனாலும், இப்படித்தில் குற்றம் கண்டார் திரு.அரவிந்தன். கலைஞரின் மருமான். சிங்கப்பூர் ரோடு ஓர டீக்கடையில் புரோட்டா சாப்பிட்டுக்கொண்டு அலசினோம் கதையை. காப்பி அடித்தவருக்கு கதை முழுசாய் புரியவில்லை என்றார். இருக்கலாம். இது கற்றை இயற்பியல் (குவாண்டம் பிசிக்ஸ்) தத்துவம் சார்ந்த கதை. பட்டுப்பூச்சியின் சிறகை ஒடித்தால் பருவ காலங்கள் மாறும் என்பது போன்ற சித்தாந்தம். உலக சிருஷ்டியே collapse of the wave function என்பது போன்ற தத்துவம். எனக்கு எப்போதுமே இந்த probability theory பிடிக்கும் (ஐன்ஸ்டைனுக்கு பிடிக்காது என்பது வேறு விஷயம் :-) வேறொரு possibility-ல் என் வாழ்வு எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்வது சுகம். X-வுடன் வாழ்க்கைப் பட்டிருந்தால்? Y-யின் உறவை வளர்த்திருந்தால்? Z-க்கும் எனக்கும் பொருந்தாது என்றுதான் நினைத்தேன். பொறுத்து வாழ்ந்திருந்தால்? குழந்தைப் பருவத்தில் சும்மா இருந்த ஓணானை சம்பூரண ராமாயணம் பார்த்த இபெக்டில் அம்பு விட்டுக் கொல்லாமலிருந்தால் என் வாழ்வு மாறியிருக்குமோ? இப்படியெல்லாம் சிந்திக்க வைத்த படம் 12B. அரவிந்தன் சொன்னது போல் வங்கி ஷியாம்..ஆட்டோ மெக்கானிக் ஷியாம் தன் காதலைச் சொல்லும் இடத்தில் (I love you- என்று உதட்டசைவில் ஜோதிகா சொல்வதைக் காணுவது போல் ஒரு காட்சி வந்திருக்க நியாயம் இல்லைதான்.

என்னைக்கேட்டால 12B நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய படம் (எதிரொலி ஒளி வருஷத்தில் கேக்குதுன்னு கோவிச்சுக்காதீங்க :-)

நியூ

சமீபத்தில் சிங்கப்பூர் போயிருந்த போது நான் பார்க்க வேண்டுமென்று நினைத்து பார்க்காமல் விட்ட சில தமிழ்ப் படங்களை வாங்கி வந்தேன். அவற்றில் நியூ என்ற படமும் ஒன்று.

படம் பாமரத்தனமாக படமாக்கப்பட்டிருக்கிறது. முதலில் கதை கேட்ட போது புதுமையாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். சொதப்பி விட்டார்கள். பெரிய வயிற்றெரிச்சல் இந்த விஞ்ஞானிகளை சித்தரிப்பது. பெயரே 'சயின்ஸ்'! அடடா! கோக்குமாக்குத்தனமாக விஞ்ஞானிகள் சித்தரிக்கப்படுவது இதுவொன்றும் முதல் முறை இல்லைதான். பலே பாண்டியாவில் சிவாஜி சயிண்டிஸ்ட்டாக வருவார். விஞ்ஞானிகளென்றாலே 'நட்டுக்கழண்ட கேசுகள்' என்பது போல் இருக்கும் அது. அதில் வேடிக்கை குசினி அறைபோல் வீட்டிலேயே அவர் லாபரெட்டரி இருக்கும். அதுவும் தீ பத்தவச்சவுடன் ரெடியாக பத்திக்கொண்டு எரியும். இந்த நியூ படத்தில் ஏதோ கிராபிக்ஸ் காட்டறேன் என்று குப்பையான அனிமேசனைக் காட்டி ஏதோ கதை பண்ணியிருக்கிறார்கள். இதற்கு விட்டலாசார்யா படங்களே சுவாரசியமாக இருக்கும்!

இப்படத்திற்கு பாட்டு. ஏ.ஆர்.ரகுமான். எங்கு முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை. ரகுமான் போனால் மலைக்குப் போவார் இல்லையெனில் சொதப்போ, சொதப்பு என்று சொதப்பிவிடுவார். இங்கு இரண்டாவது ரகம். அவை படமாக்கப்பட்டிருப்பது கண்களுக்கு வேதனை.

கதாநாயகன் காணச்சகிக்கவில்லை. ஒரே ஆறுதல் தேவயாணி. நன்றாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவை விட்டுப்போகும் சிம்ரன் ஒரு அராத்துப் பெண் போல வந்து கலக்குகிறார். செக்ஸ் ஜோக்ஸ்ஸையெல்லாம் பவித்ரமான சிங்கை சென்சார் வெட்டிவிட்டது. அந்த ஐயராத்து மாமியை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் (ரெட்டை அர்த்தமில்லை!).

மொத்தத்தில் தமிழகம் இன்னும் விஞ்ஞான யுகத்திற்கு வர ஒரு நூற்றாண்டு ஆகும் என்று தெரிகிறது. ரசிகர்களின் அறிவியல் பிரக்ஞையை இது அளவு காட்டுகிறதோ? ஒரு காலத்தில் மேலை உலகில் கூட விஞ்ஞானிகள் கிறுக்குகளாகக் காட்டப்பட்டாலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிப் படங்களெல்லாம் வலுவான அறிவியல் பின்னணியிலேயே எடுக்கப்பட்டுள்ளன. மேறிக்ஸ் படம், டெர்மினேட்டர் சீரீஸ், ஜுராசிக்பார்க் சீரீஸ் இவையெல்லாம் பிரமிக்க வைத்த அறிவியல் புனைவுகள். மேலை உலக ரசிகர்களுக்கு அறிவியல் பின்புலம் இருப்பதைக் காட்டுகிறது. இது.

கிராபிக்ஸ் கூட இப்படி சொதப்பலா? பெண்டாபோர், மீடியா டிரீம்ஸ் தொழிலகத்திற்குப் போயிருக்கிறேன். ஹாலிவிட்டிற்கு கிராபிக்ஸ் செய்து கொடுத்த தமிழக கிராபிக்ஸ் எங்கே போச்சு?

நியூ என்றுதான் பேரு. அறுபதுகளில் வந்த மாயாஜாலப்படங்களே எவ்வளவோ ஜோர்!

சிற்றம் சிறுகாலை - அங்கோர்வாட் -14


Dawn in Angkorwat
Photo by N.Kannan

this is an audio post - click to play

அந்திப்பொழுது - அங்கோர்வாட்-13


Sun set in Siem Reap
சிறு குன்றில் ஏறி சூரியாஸ்தமனத்தைப் பார்த்தோம். ஏகப்பட்ட கூட்டம்! வழியோ நெட்டுக்குத்தாக கரடு முரடாக இருந்தது. ஆயினும் சிறுவர் முதல் பெரியவர்வரை எல்லோரும் வந்தனர்.Photo by N.Kannan

All about my mother

நீண்ட இடைவெளிக்குப்பிறகு சமாச்சார் தமிழ் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. எனது "தூரத்து மணியோசை" மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளது. எனது புதிய கட்டுரை என் அன்னை பற்றிய எல்லாமும் வெளியாகியிருக்கிறது. படித்துக்கருத்துச் சொல்லுங்கள்!

அகழிகள் கொண்ட அங்கோர்வாட்-12


lovely water ways all around Angkorwat
Photo by N.Kannan

this is an audio post - click to play

டொரியன்! - அங்கோர்வாட்-11


Durian fruit in the market

பழ வகைகளிலே அசைவம் இந்த டொரியன்! உரித்துப்பார்த்தால் உரித்த கோழி போல் இருக்கும். இது தோல் போன்ற ஒரு வழு, வழுப்பும், தசை போன்ற ஒரு தோற்றமும் தருவதால் சைவர்கள் இதனிடம் உடனே நெருங்க முடியாது. அது மட்டுமல்ல, அதன் நாற்றம் (வாசனை) கூட பழங்களுக்கே உரிய சுகந்தமான வாசனையல்ல. கொஞ்சம் மிரட்டும் நெடி. இவ்வளவியும் சகித்துக் கொண்டு சாப்பிட்டால் நிறைய சூடு வந்துவிடும் (காலொரியும்தான்). டொரியன் எப்படி வெஜிடேரியன் என்று சொல்லமுடியும்?
Photo by N.Kannan

பலா! - அங்கோர்வாட்-10


Jack fruit in Siem Reap, Cambodia (background a buddha Pakoda)

மா, பலா, வாழை என்பது இந்தியாவிற்கு மட்டும் சொந்தமன்று!
Photo by N.Kannan

தஞ்சைக்கு சவால் விடும் கோயில் - அங்கோர்வாட்-09


Suppose to be the biggest Hindu temple in the world. A portion from the west side complex.
Photo by N.Kannan

this is an audio post - click to play

மொட்டைக்கோபுரம் - அங்கோர்வாட்-08


The main and west side entrance seen from inside the temple
Photo by N.Kannan

மயக்கும் மாலைப் பொழுது - அங்கோர்வாட்-07


Sunset in Angkorwat
Photo by N.Kannan

அங்கோர்வாட் பயணக்குறிப்பு 06 (பாயும் நதியில் பதிவு)


Almost all the houses on the river side is at least a meter above the groud. River Tonle bulges during the wet season.

தோன்லே நதி நிரம்பி வழியும் போது கரை கரை(ட)ந்து விடுமாம். அதனால் வீடுகள் உசரமாக நிற்கின்றன. பதிவில் படகின் இரைச்சல் உண்டு. காது பத்திரம்!
Photo by N.Kannan

this is an audio post - click to play

அங்கோர்வாட் பயணக்குறிப்பு 05


Inspite of a beautiful country side people prefer to float! May be recollecting old memories of the womb!

கர்பவாசத்தின் நினைவுகள் அழிவதில்லை போலும். கரை இருந்தும் நதியில் மிதக்கும் மக்கள்!
Photo by N.Kannan

அங்கோர்வாட் பயணக்குறிப்பு 04 (பாயும் படகில் பதிவு)


The Tonle (River) Sap lake is the largest lake in Southeast Asia providing irrigation waters and food for half the population of Cambodia. Almost a whole village floats on the Lake (yes! shops, schools, municipal office etc.)


கம்போடியாவின் தலைநகரான பினாம்பெங்கிலிருந்து தோன்லே நதிவழியாக அங்கோர்வாட் உள்ள சீம்ரீப் நகருக்குச் செல்லலாம். இந்த நதி இந்தியாவின் மகா நதி போல் பிரம்மாண்டமாகவுள்ளது. இந்த நதியில் பயணப்படுவது ஒரு அனுபவம். இந்த ஒலிக்குறிப்பு பயணத்தில் எடுத்தது, எனவே இரைச்சல் நிறைய இருக்கும். காது பத்திரம் :-)
Photo by N.Kannan

this is an audio post - click to play

அங்கோர்வாட் பயணக்குறிப்பு 03


Adiseshan or vasuki the deva sarpam is seen every where in Cambodia. The Hindu mythology is an integral part of Cambodian life.கம்போடியாவும் ஒருவகையில் 'திரு அனந்த புரமே' அனந்தன் என்பது ஆதிசேஷனுக்குப் பெயர். அந்த நாடு முழுவதும் ஆதிசேஷனும், கருடாழ்வாரும் பிரசித்தம்.
Photo by N.Kannan

அங்கோர்வாட் பயணக் குறிப்புகள்...02


Cambodia is a land of Vishnu. Vishnu as the name means 'all pervasive' in Cambodia from a street junction to Angkorwat temple!திருவுடை மன்னரைக்காணில் திருமாலைக் கண்டேனே! என்பது திருவாய்மொழி. கம்போடிய அரசர்களில் பலர் வைணவர்கள். எனவே அந்த நாட்டில் எங்கு நோக்கினும் திருமாலே! நடுத்தெரு நாராயணன் என்று நாற்சந்தியிலிருந்து கோவில்வரை அவர் எங்கும் வியாபித்து இருக்கிறார்!
Photo by N.Kannan

அங்கோர்வாட் பயண நினைவுகள் 01

சந்திர வருடப்பிறப்பு விடுமுறையில் சிங்கை வழியாக கம்போடியா சென்று வந்தேன். அது சமயம் உங்களுக்காக நேரம் கிடைக்கும் போது பயணக்குறிப்பபை பதிவு செய்து வைத்தேன். அவைகளை ஒவ்வொன்றாய் இங்கு இடுகிறேன். பயணம் பிப்.5 மாலை கொரியாவில் தொடங்கி, பிப்.12 அங்கே முடிந்தது. இது ஒலிக்குறிப்பாக இருப்பதால் சிங்கப்பூரில் கூட பலரால் கேட்க முடியவில்லை என்று சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. ஒரு காலக்கட்டத்தில் தமிழில் எழுதும் போது பலரால் வாசிக்கமுடியாமல் இருந்தது. ஏன் இன்று கூட பலரது வலைப்பதிவு வாசிக்கமுடியாமலே உள்ளது. எனவே என்னை மன்னியுங்கள்.

கம்போடியா எங்குள்ளது என அறிய விரும்புவோர் இங்கு சுட்டவும்.

இ-சுவடியில் கோலாகலமாக ஆரம்பித்திருக்கும்மாறன் விழவு எனும் வாலண்டைன்-காதலர்தின விழாவில் கலந்து கொள்ளுங்கள்!


this is an audio post - click to play

உயிர் மெய்யில் ஏறும் பொட்டு!


Tamil in 'in-flight' magazine. Great! but..what an awful font? Hello Muthu! do you hear me?


என்ன சார் இது? முத்து நெடுமாறன் உள்ள ஊரில் இப்படியொரு தமிழ் வார்ப்பா?


Photo by N.Kannan

பிழையுடன் 'தமிழ் மணம்'


Tamil in Singapore Airport. That's fine, problem with grammer?


அது சரி! சிங்கையில் grammer weak கோ?Photo by N.Kannan

வருக சேவல், வந்து வளம் தருக!சீனப் புது வருட ராசி பலன்

Predicting the future with the Chinese ZodiacThe Story of Tti

In the same way that many people in the west start the new year off with a resolution, it is also tradition in the east to predict one's new year's fortune according to the twelve animal signs of the Chinese Zodiac, also known as tti in Korean. The twelve astrological animal signs are divided over a twelve year period; one animal, in other words, representing a different year in twelve year cycles. The animal signs are associated with unique characteristics and traits that set guidelines for proper living. The animal sign for 2005 is the rooster. Take a look at your own tti, and the characteristics associated with your sign.

People born in the Year of the Pig are patient.

The last of the twelve animals, the pig, is referred to as "hae". The pig signifies the ability to conserve its energy until just the right moment for it to flower. For that reason people born in the Year of the Pig are patient and are able to pursue a goal until it is achieved. They are sincere, warm, and sympathetic. It is said that these people have the capacity to be politicians. (Years of the Pig are:1923, 1935, 1947, 1959, 1971, 1983, 1995- - -)

People born in the Year of the Dog are reliable.

The dog is the eleventh animal and is referred to as "soot". The dog is associated with the ninth lunar month when the fauna and flora are preparing for harsh winter. People born under this sign have the capacity to weather out any difficulties for a better day. Of the twelve animals, the dog is the most honest and diligent and so the most coveted. Just as the dog is loyal to its owner, those born in the Year of the Dog are loyal to their friends. (Years of the Dog are:1922, 1934, 1946, 1958, 1970, 1982, 1994----)

People born in the Year of the Rooster are confident

The tenth animal, the rooster, is called "yoo". People born in this year are confident and aggressive, but they are also conservative and stubborn. Since the rooster alerts the world of a new day by crowing aloud with the sunrise, people born in the Year of the Rooster are believed to have the capacity to look ahead in time. (Years of the Rooster are:1933, 1945, 1957, 1969, 1981, 1993, 2005-)

People born in the Year of the Monkey are clever

The monkey, the ninth animal, is called "shin". He has the wisdom to wait until all is ready before making a decision. People born in the Year of the Monkey also tend to be tenacious. Like the monkey, those born under this sign are also clever, friendly and talented in many ways. (Years of the Monkey are:1932, 1944, 1956, 1968, 1980, 1992.2004---)

People born in the Year of the Sheep are gentle

The eighth animal, the sheep, is called "mi" and corresponds to the sixth month of the lunar calendar when life is coming to fruition. People born in this year are thus thought to respect nature's ways, and are sympathetic and compassionate. Of the twelve animals, the sheep is the gentlest and the most sincere. (Years of the Sheep are: 1931, 1943, 1955, 1967, 1979, 1991, 2003---)

People born in the Year of the Horse have great initiative

Seventh of the twelve animals is the horse, pronounced "oh" in Korean. Like the sizzling rays of thev sun, people born in the Year of the Horse are passionate. They are sure in what they like or don't like, and they tend to be aggressive. With a strong driving force, they never waiver from their goal; but like a sprinting horse, they are easily excitable and strong willed. (Years of the Horse are:1930, 1 94-2, 1954, 1966, 1978, 1990, 2002---)

People born in the Year of the Snake are strong willed

The sixth of the twelve animals, the snake, is pronounced "sa" in Chinese character encompasses the meaning that "all things are predeterrr and represents the lunar month of April when life begins to flourish. The pror characteristic of people born in the Year of the Snake is that they are thou prodigious, and they have the will to meet and conquer challenges. It is sa many of them become scholars, musicians or artists. (Years of the Snake: 1929, 1941, 1953, 1965, 1977, 1989, 2001---)

People born in the year of the Dragon are confident

The dragon is the fifth animal and is referred to as "jin" the mover of the world. People endowed with She traits of the dragon are confident, vigorous and wise. They are highly adventurousdand are always moving ahead. Dragwis leap high into the sky and look down on the^/orld below. It is said that people endowecNaath^such traits become leaders. (Year of the Dragon are: 1928, 1940, 1952, 1964, 1976, 1988, 2090....)

People born in the Year of the Rabbit are energetic.

The fourth animal is the rabbit. Called "myo", the rabbit is the most animated and energetic of animal signs. He is wise and witty. He is an expert at crisis management so he never suffers from irresolvable dilemma. Just as he is sweet and intellectual, he is respected and trusted. It is said that many of those born in the Year of the Rabbit are artists as they are highly emotional and perceptive (Years of the Rabbit are: 1927, 1939, 1951, 1963, 1975, 1987, 1999....)

People born in the Year of the Tiger are courageous

The third animal is the tiger, and is called "in" tiger is the most courageous. It is said that people born in this year are also courageous, just, steadfast, and unwavering. Dreams of tigers are considered the most worthy of all dreams during a woman's gestation period, and it is said that such dreams bring a child endowed with superior traits. [Years of the Tiger are: 1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998---]

People born in the Year of the Cow are persistent

The second animal of the zodiac is the cow, called "chook" in Korean. The cow signifies a slow reawakening of life from a deep freeze. As such, the cow is unhurried and heavy in movement. People born in the Year of the Cow are also slow to trot but their strength is in persistence to finish what they've started. (Years of the Cow are:1925, 1937, 1949, 1961, 1973, 1985, 1997....)

People born in the Year of the Rat are diligent

The first of the twelve animals signs, the rat, is called "ja" in Korean. It is represented by the Chinese character and signifies nobility. Those born in the Year of the Rat are thus said to be blessed with noble characteristics and fortune. A rat is naturally diligent, and the Korean saying "a rat keeps watch on hidden wealth," originated from the rat's diligent habit of gathering and storing its food. Consequently, Korean ancestors believed that those born in the Year of the Rat are destined to be wealthy. Indeed, most people fortunate enough to be born under this sign often turn out to live quite comfortably. (Years of the Rat are the following:1924, 1936, 1948, 1960, 1972, 1984, 1996--- )

கோவிந்தா நின்ன நாமவே சந்தா


this is an audio post - click to playஉன்னிகிருஷ்ணனின் குரலில் புரந்தரதாசர் - "கோவிந்தா நின்ன நாமவே சந்தா"