டொரியன்! - அங்கோர்வாட்-11


Durian fruit in the market

பழ வகைகளிலே அசைவம் இந்த டொரியன்! உரித்துப்பார்த்தால் உரித்த கோழி போல் இருக்கும். இது தோல் போன்ற ஒரு வழு, வழுப்பும், தசை போன்ற ஒரு தோற்றமும் தருவதால் சைவர்கள் இதனிடம் உடனே நெருங்க முடியாது. அது மட்டுமல்ல, அதன் நாற்றம் (வாசனை) கூட பழங்களுக்கே உரிய சுகந்தமான வாசனையல்ல. கொஞ்சம் மிரட்டும் நெடி. இவ்வளவியும் சகித்துக் கொண்டு சாப்பிட்டால் நிறைய சூடு வந்துவிடும் (காலொரியும்தான்). டொரியன் எப்படி வெஜிடேரியன் என்று சொல்லமுடியும்?
Photo by N.Kannan

10 பின்னூட்டங்கள்:

வசந்தன்(Vasanthan) 2/17/2005 07:40:00 PM

படத்திலிருக்கும பழம் எந்தளவு பெரியது என்று கணிப்பது கடினமாயுள்ளது. நடுத்தரப் பலாப்பழம் மாதிரியா அல்லது றம்புட்டான் அளவு சிறியதா? இப்படிப் படமெடுக்கும்போது அவற்றின் பருமனை அறியத்தக்கதாக பக்கத்திலே ஏதாவது பொருத்தி அல்லது வைத்து (தண்ணீர் பாட்டில் மாதிரி அல்லது மனிதர்கள் யாராவது கூட நிற்கலாம்) படமெடுத்தால் இலகுவாகப் பருமனை அறிய முடியும்.

அல்வாசிட்டி.விஜய் 2/17/2005 07:59:00 PM

இந்த டொரியன் பழத்தை ஒரு நாள் முயற்ச்சி பண்ண வாங்கி, குப்பையில தான் போனது. சரி கேக்காக விக்கிறாங்களேன்னு கேக் வாங்கி தின்ன, நல்ல இருந்திச்சி ஆன எப்பா.... வாய் வழிய வயிற்றிலுள்ள நீர் எல்லாம் ஆவியாக மாறி நீராவியாக வந்துக்கொண்டிருந்தது.... என்னா சூடு.....

நா.கண்ணன் 2/18/2005 02:24:00 PM

டொரியன் பழம் 'யாழ்ப்பாணம் தேங்காய்' (உரிக்காத தேங்காய்) அளவு பெரியது. பலா வகையைச் சேர்ந்தது. ஆனால் முட்கள் வலுவானவை. பழம் தலையில் விழுந்தால் ஆள் குளோஸ்! டொரியன் ரொம்ப அசைவம்! எல்லா வகையிலும்!

அன்பு 2/18/2005 03:48:00 PM
This comment has been removed by a blog administrator.
அன்பு 2/18/2005 03:49:00 PM

என்ன கண்ணன் சார்... டுரியன் அசைவம் அசைவம்னு அடிக்காத குறையா சொல்லிண்டே இருக்கிறீங்க:)

டுரியனுக்கு வயாக்ரா குணமும் உண்டாமே? சிங்கையில் அதனால் வெள்ளியிரவிலிருந்து வாரயிறுதியில் படுவிற்பனை இருக்குமாம்..:)

அப்புறம்... படம் அடிக்கடி மாறிட்டே வருது:) வட்டாரவழக்கு தொடர்பில் நேற்று நாகர்கோவில்காரர் ஒருத்தர் சன் செய்தியில் பயன்படுத்திய சொல்: ஏகதேசம். நாங்களும் இதைப் பயன்படுத்துவோம்.

நா.கண்ணன் 2/18/2005 05:26:00 PM

அன்பு! கண்டுக்காதீங்க :-) நான் அசைவம்ன்னு சொல்லிட்டா பழம் கோழியாயிடுமா:-)? அடடா! அதன் வயாக்ரா குணம் பற்றி யாரும் சொல்லலையே!

நாகர்கோயில் வழக்கு பதிவாகிவிட்டது. வேறு வழக்குகளைக் கேட்டால் பதிவு செய்யுங்கள்.

வசந்தன்(Vasanthan) 2/18/2005 09:20:00 PM

//'யாழ்ப்பாணம் தேங்காய்' (உரிக்காத தேங்காய்) அளவு பெரியது.//

இதன் அர்த்தம் புரியவில்லை. நான் யாழ்ப்பாணத்தான் தான். அப்பிடியொண்டும் அங்க பெரிய தேங்காய் இல்ல. இந்த யாழ்ப்பாணத் தேங்காய் பல இடங்களில் சொல்லப்படுவது (சுஜாதா கூட). ஆனால் வேறு அர்த்தத்தில் என்று நினைக்கிறேன். நீங்களும் பயன்படுத்தியிருக்கிறீர்கள். என்ன விசயமெண்டு விளங்கேல. எண்டாலும் தகவலுக்கு நன்றி.

நா.கண்ணன் 2/18/2005 09:55:00 PM

அப்படியா விஷயம்? மதுரைப்பக்கம் யாழ்ப்பாணம் தேங்காய் என்றால் இருப்பதற்குள் பெரிய தேங்காய் வகை என்று பொருள். நீங்கள் சொல்லும்வரை அது யாழ்ப்பணத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தது என்று எண்ணியிருந்தேன். தகவலுக்கு நன்றி.

Suba 2/19/2005 12:30:00 AM

டுரியானோடு சேர்ந்தே வளர்ந்த எனக்கு மனம் உடைந்து விட்டது, நண்பர்களின் விளக்கத்தைப் படித்து. டுரியானின் சுவையைப் பற்றி மலேசியர்களைக் கேட்க வேண்டும். டுரியானின் சுவைக்கு ஈடு இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை.. ஒரு மாசம் விடாமல் ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு பாருங்கள்.. அப்போது தெரியும் டுரியானின் சுவை..

நா.கண்ணன் 2/19/2005 11:24:00 AM

அப்பாடா! சுபா வந்தாச்சா? டுரியன் வாசனை அடித்தாலே சுபா வர வேண்டுமே! என்னடா இவ்வளவு நேரம் காணோமே என்று பார்த்தேன். மலேசியாவில் பழகியதால்தான் கம்போடியாவிலும் தேடி வாங்கிச் சாப்பிட்டேன். இருந்தாலும் புதுக்காதலிக்குப் பழகிக்கொள்வது போல் இந்த டுரியன் பழத்திற்கு பழகிக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அது அவ்வளவு எளிதல்ல என்று தோன்றுகிறது!