நைனா!

இப்படியொரு படம். சென்னை போகும் போதெல்லாம் அப்படத்திலிருந்து காமெடி காட்சி காட்டுவார்கள். இப்போதுதான் படத்தைத் தேடிப்பிடித்து வாங்கினேன். எனக்கு பிடித்துப் போய்விட்டது. வைகைப்புயல் வடிவேலு நம்மாளு! ஜெயராம் ரொம்ப டீசெண்ட் நடிகர்! தெனாலியிலிருந்து அவரை ரொம்பப்பிடித்துவிட்டது. கதாநாயகன், நாயகிகள் மலையாளம்! மலையாளச் சூழல் கதையில். சின்னக் கதாநாயகிக்கு ரொம்பச் சாதாரண அழகு (கவர்ச்சியான அழகில்லை என்று சொல்கிறேன்). கிராபிக்ஸ் நன்றாகச் செய்திருக்கிறார்கள். குழப்பமோ, எதிர்பார்ப்புகளோ இல்லாத கதை. ஒரு காமெடி பாக்டரியே படத்திற்குத் துணை போகிறது. பிராமணீயம் தமிழகத்தில் காலாவதியாகிவிட்டது என்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கிறது! கோவை சரளா பேசுவது பிராமணத் தமிழென்றால் பிராமணீயம் நிச்சயம் காலாவதியாகிவிட்டது. வீட்டில் யாராவது, அதுவும் பிராமண வீட்டில் பிணத்தின் படத்தை மாட்டுவார்களோ? ரொம்ப suggestive-போலருக்கு. இனிமேல் கலந்து அழிந்து பிராமணியம் இப்படித்தான் தமிழகத்தில் இருக்கும் என்று சொல்லாமல் சொல்கின்றனர்!

ஜெயராம்தான் கதாநாயகன் என்றாலும் வடிவேலுதான் படத்தின் வலு!

1 பின்னூட்டங்கள்:

dondu(#4800161) 2/26/2005 09:23:00 PM

படத்தின் பெயர் நைனா? கதை அவுட்லைன்? Never heard of the film.
அன்புடன்,
டோண்டு ராகவன்