பாலீர்ப்பு

எனது சொய்ஸ் என்ற முன் பதிவின் வழி ஒட்டி இரண்டு பதிவுகளைக் காண நேரிட்டது.

தோழியர் பக்கங்களில் உஷா ராமச்சந்திரன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ஹோமோசெக்சுவல், லெஸ்பியன் என்ற பதிவு.

அவரிடும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வண்ணம் வெங்கட் எழுதியுள்ள தற்பால் நாட்டம் எனும் பதிவு.

சேர்பு வாசிப்பாக நான் சமீபத்தில் சம்மச்சார்.வணி-இல் எழுதிய என் அன்னை பற்றிய எல்லாமும் என்ற தொடர் பத்தியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சில கேள்விகள் இப்போது.
1. திருமணம் என்பது புனிதமானதா? அதற்கும் சோரம் போதலுக்குமுள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன?
2. பிறப்புறுப்பு என்பதே பெண்களுக்கு கழிவிடமாக இருக்கும் போது உஷா எப்படி ஆணின் கழிவிடத்தை பாலியல் நுகர்விற்குப் பயன்படுத்தலாமென்று கேட்கலாம்?
3. வெங்கட் சொல்லுவது மாதிரி தமிழக சூழலில் ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுகின்றனர் (ஆண்/ஆண்; ஆண்/பெண், பெண்/பெண்). அது பற்றிய தெளிவான தரவு எடுக்கும் வண்ணம் நமது குமுகாயம் இன்னும் பதப்படவில்லை. எனவே மீடியாவின் மீதே முழுப்பழியையும் போடமுடியுமா?
4. உஷாவின் இன்றையப் புரிதல் அவர் வாழும் சூழலின் தாக்கத்தால் உருவாகியிருக்கச் சாத்தியமிருக்கிறதா? மத்திய கிழக்கில் சோடோமியின் தினவிற்கு ஈடு கொடுக்க இந்தியச் சிறுவர்கள் ஏற்றுமதியாவது காரணமாயிருக்கலாம். வெங்கட் போல் மேலை நாட்டில் வாழும் எங்கள் நோக்கு இதில் இவ்வளவு காரம் காட்டுவது கிடையாது. இதுவும் ஒரு சாய்ஸ் என்றே பார்க்கிறோம். உஷா அமெர்க்கா போய் வாழ்ந்தால் தனது கருத்தை பின்னால் மாற்றிக் கொள்வாரா?

உஷாவின் பதிவு மிகத்தைர்யமான பதிவு. பெரும்பாலும் பெண்கள் பேசக்கூச்சப்படும் விஷயத்தை பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறார். சுய இன்பம் என்பது பற்றியும் இந்தியர்களுக்கெ வித்தியாசமான எண்ணங்கள் உண்டு. இவர் அதை எப்படிக் காண்கிறார் என்று அறிய ஆவல்.

எனது முன்னாளைய பதிவில் மாற்றுப்பெண் எனும் தலைப்பில் எப்படிப் பால்மாறிய ஆண்கள் கௌரமாக வாழ்கின்றனர் என்று சொல்லியிருக்கிறேன். கொரியாவில் மிகப்பிரபலமான ஒரு டி.வி நடிகை ஒருகாலத்தில் 'ஆண்'.

நமது ஆன்மீகத்தில் எல்லாவற்றிற்கும் இடமிருக்கிறது. பிறப்பிலேயே இம்மாதிரி மனிதர்கள் (பொதுப்பாலில்) எப்படி பிறக்கிறார்கள் என்று திருமூலர் பேசுகிறார்.

3 பின்னூட்டங்கள்:

Thangamani 2/26/2005 03:58:00 PM

உங்கள் விமர்சனமும் படித்தேன். மிக நன்றாக எழுதியிருந்தீர்கள். வாழ்க்கையை மிக மிக ஒற்றைப்படையாக, ஒற்றையடிப்பாதையாக மாற்றி இருக்கிறோம் இங்கு. வாழ்க்கை என்பது வாழ்ந்து கழிக்கவேண்டிய சுமையாக, கடமையாக, கடந்து செல்லவேண்டிய கழிவாக கண்ணை மூடி அச்சத்தோடும், சந்தேகத்தோடும், பொய்மையோடும் கழிக்கையில் வாழ்க்கை இங்கு சகல திசைகளிலும், பரிமாணங்களில்லும்,கட்டுகளின்றி இந்தக்கணத்தில் என்றும் நிலைகொண்டுள்ளது. இதை ஒரு கணம், ஒருகணம் மட்டும் கண்கொண்டுபார்த்துவிட்டால் போதும். நானும் வாழ்க்கையும் வெவ்வேறு அல்ல. நான் அதைக்கடந்தும் செல்வதில்லை, அதற்கு புறம்பாக, அதற்கு வெளியில் எதுவும் இல்லை என்ற தரிசனம் போதும்.

வாழ்க்கையை எந்தக் கண்ணாடிகளும் இன்றி தரிசிக்கவிழைவதையே நான் ஆன்மீகமென்கிறேன்.

நன்றி!

Narain 2/26/2005 04:05:00 PM

//நானும் வாழ்க்கையும் வெவ்வேறு அல்ல. நான் அதைக்கடந்தும் செல்வதில்லை//

End of all comments for this post.

புரிதல் நன்றாக இருந்துவிட்டால், தெளிந்து விட்டால், வாழ்க்கையை 'வாழ'வேண்டிய கட்டாயங்களற்று போய்விடும். பாலீர்ப்பு என்கிற பிரச்சினையின் ஆழமே, நம் முன் கட்டமைக்கப்பட்ட சமுதாய சிறைக் கம்பிகளினூடே நான் வாழ்வினையும், அவ்வாறு வாழ்பவர்களையும் பார்ப்பது தான்.

விரிவாக பதிய நினைத்தேன், ஆனாலும் சிறப்பாக இந்த விவாதம் இணையமெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம்.

என் உள்ளாடைகளின் கறைகளைப் பற்றி மற்றவர்களோ, அரசாங்கமோ கவலைப்படுவதை நிறுத்துங்கள் என்பது தான் எல்லாரின் கேள்வியும், வேண்டுதலும்.

Moorthi 2/26/2005 08:43:00 PM

யாமெய்யாக் கண்டவற்றுள் நாமெலாம் மனிதர்கள். ஆறறிவு படைத்தவர்கள்! எப்போதாவது நாம் அந்த ஆறாவது அறிவை மறந்து வீட்டிற்குள் வைத்து விட்டு வெளிவரும் நேரத்தில் இம்மாதிரியான பாலுணர்வு சேரிடம் மறந்து வெளிப்படும். மிருகங்களிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டும் அந்த ஆறாவது அறிவை நாம் ஒருபோதும் மறக்க வேண்டாம்!!!