அரவான் பலியும் அலிகளின் வாழ்வும்!

தமிழ் இணையம் 2004 மாநாடு சிங்கைத் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில்தான்
நடந்தது. அது சமயம், அங்குள்ள ஆசியத்துறையைச் சார்ந்த எனது ஜெர்மன்
நண்பர் முனைவர் உல்ரிக நிக்கொலஸ் அவர்களைச் சந்தித்துப்பேசும்
வாய்ப்புக்கிடைத்தது. அவர் தமிழ் ஈர்ப்பால் ஜெர்மனியில் தமிழ் கற்று, ஒரு
தமிழனையும் கல்யாணம் செய்து கொண்டு தமிழாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள
பெண்மணி. எப்போது பார்க்கும் போது ஏதாவது சுவாரசியமாகச் சொல்வார்.
இம்முறை அவரது கணவருக்கு எங்களூர் (திருப்புவனம்) பழையூர் கண்மாய்கரை
ஐயனார் கோயில் பூசை உரிமை என்று சொன்னார். அப்படி இப்படின்னு அவங்க எங்க
ஊர் மாட்டுப்பெண்ணாகிட்டாங்க (மருமகள்)!

இது சமயம் அவரது சமீபத்திய ஆய்வான இந்திய அலிகள் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தோம். உலகின் பிற பாகங்களில் வாழ்வதை விட இந்தியாவில்
அலிகள் கவுரவமாக வாழ்வதாக அவர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அவரது
ஆவணப்படத்தைப் போட்டுக்காட்டினார். ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல்
இருப்பது பொதுவான சமூகக் கேலிக்கு தோதானாலும், அதுவே ஒரு மாந்திரீக
குணத்தை (magical quality) அவர்களுக்கு அளிப்பதாக அவர் காட்டிய
ஆவணப்பட்ம் சொன்னது. எவ்வளவுதான் பகுத்தறிவு நாம் பேசினாலும் நமது
புராணங்களும், இதிகாசங்களும்தான் இம்மாதிரி இரண்டும் கெட்டான்களுக்கு
உறுதுணையாக வருகின்றன. இந்திய அலிகள் தங்களை பல நேரம் அர்ச்சுனனாக
பாவித்துக் கொள்கிறார்கள். மோகினியாக வரும் திருமாலே இவர்களுக்கு
தெய்வமாகவும் ஆகிறார். வைணவத்தின் வீச்சு இந்தியாவில் எவ்வளவு
அடியாழத்தில் ஊன்றியிருக்கிறது என்பதை அந்த ஆவணம் காட்டியது. மேலும்
மகாபாரத யுத்தத்தில் 'அரவானை' பலி கொடுப்பதை இவர்கள் தங்களது சொந்த மரணம்
போல் கருதி ஒப்பாரி வைப்பது தொன்மம் என்பது வாழ்விற்கு எவ்வளவு
அத்தியாவசமாக உள்ளது என்பதை எனக்கு உணர்த்தியது! இந்த திருவிழாவில்
ஆண்களும் பெண்கள் போல் தங்களை பாவித்துக்கொண்டு சேலை அணிந்து கொண்டு
வளையல் அணிந்து வந்து வளையலை உடைத்துவிட்டு ஒப்பாரி வைப்பது உலகின்
அதிசியம் என்று தோன்றியது. இது அலிகளுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்குமென்று
எண்ணிப்பாருங்கள். அவர்கள் எதிர்கொள்வதெல்லாம் கேலியும், கீழமையும்தானே!
நமது சமயம் அவர்களை எவ்வளவு ஆறுதலாக உள் வாங்கிக்கொள்கிறது என்பதை
கவனிக்க வேண்டும். இது பிற புறச் சமயங்களில் இல்லை என்பதையும் கவனிக்க
வேண்டும்.

ஒரு மத்திமர் சமூகத்தில் பிறந்துவிட்ட எனக்கு, வெளிநாட்டினர் உதவியுடன்
ஒரு புதிய இந்திய தரிசனம் கிடைப்பது எப்போதும் புத்துணர்ச்சி தருவதாகவே
உள்ளது.

1 பின்னூட்டங்கள்:

நா.கண்ணன் 3/02/2005 09:37:00 AM

«Ä¢¸û, அதாவது அரவாணிகள் பற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்தேன். அந்த வெளிநாட்டு பெண்மணி சொன்னதில் உண்மை எவ்வளவு என்பது எனக்கு புரியவில்லை? அலிகள், அதாவது பார்க்க ஆண் போலவும் நடத்தை, பேச்சு, ஆடை அலங்காரங்களில்
பெண் போலவும் காட்டிக் கொண்டு வாழ்பவர்களுக்கு நம் சமூகத்தில் என்ன அங்கீகாரம் கிடைக்கிறது? அரசு, தனியார் நிறுவனங்களில் இவர்கள் வேலை செய்கிறார்களா? அவர்கள் கெளரவமாக வாழ படிப்பு, வேலை இந்தியாவில் கிடைக்கிறதா? அவர்களின் தொழில் ஒன்றே ஒன்றுதான்! இல்லை என்றால் கும்பலாய் மற்றவ்ரை அச்சுறுத்தி பிச்சை என்ற பெயரில் பணம் பறிப்பது. நேற்றைய தினமலரில் கூட இந்தகும்பலாய் பட்ட கஷ்டங்களைப் பற்றி ஒருவர் சொல்லியிருக்கிறார்.
இவர்களால் தங்கள் உணர்வுகளை மறைத்துக் கொண்டு சமூகத்தில் சாதாரணமாய் வாழ முடியாதா என்பது என் வெகு நாளைய சந்தேகம். அந்த காலத்தில் அரண்மனை, அந்தபுரத்தில் இவர்கள்தான் காவல் இருப்பார்களாம். இன்று?? பட்டின பாக்கம் , பஸ் ஸ்டாப்பில் அரவாணி ஒருவர் பூ கட்டி விற்பார். இவரை தவிர, ரயிலில் பிச்சை என்று ஆண்களை தொந்தரவு செய்யும் அரவாணிகளை மட்டுமே பார்த்திருக்கிறேன்.
From Usha Ramachandran