பேசாப்பொருள்

என்னடி வானத்தைப்பாத்துக்கிட்டு உக்காந்திருக்கே?
ஏனா? நீ ஏன் பாக்காம உதவாக்கரை வேலை செய்ஞ்சிக்கிட்டு இருக்கே?
டீ! நான் செய்யறதா உதாவாக்கரை வேலை? சொல்வேடி, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு எது சோறுபோடுது?
சோறு முக்கியம்தான். இந்த ஞாயிறு, இந்த நீலவானம், இந்த மரம், இந்தத் தென்றல், இந்தக்குயில்....
சரி..கிறுக்கு பிடிச்சிருச்சா? ஏண்டி புடவையைக் கழட்டற?
மாடிலே போய் மொண்டக்குண்டியா படுத்துக்கப்போறேன்!
அடப்பாவி! நாம இங்க உருப்படியா குடுத்தனம் பண்ணறது பிடிக்கலையா?
பின்ன எப்படி எந்த சூரியன் என் அங்கங்களைப் பார்ப்பான். நான் பொறந்ததிலேர்ந்து அவன் அதைப் பார்த்ததில்லையே!
எதை? கெட்டது குடி! மாடிவீட்டுப்பயல்களெல்லாம் பைனாகுலர் வச்சிகிட்டு பார்ப்பான், சூரியன் பாக்கறானோ இல்லையோ! உனக்கென்ன குந்தின்னு நினைப்பா? இல்லை கதிரவன் புணர்ந்து கர்ணன் பிறப்பான்னு கனவு காணரையா?
என்ன கிறுக்கச்சின்னு சொன்னாலும் பரவாயில்லை ஒரு நா கடற்கரையிலே போய் வெறுமனே படுத்துக்கிடக்கப்போறேன்!
நீ செஞ்சாலும் செய்வேடி! இப்ப ஒண்ணும் பண்ணாம வந்து கொட்டிக்க..வேலைக்குப்போணும்.
சரி..சரி..நீ பயப்படாம வேலைக்குப்போ! நான் போட்டு சாப்பிடறேன். நூலகத்திலே புஸ்தகத்தை திருப்பித்தரணும்.
அப்படின்னா, சரி, நானே உனக்குப் போடறேன். சாப்பிடு. சேந்து போலாம்.
நம்ம கதாநாயாகியின் விசித்திர ஆசைகளுக்கு தீனி போடற மாதிரி நூலகத்திலே ஒரு விஷயம் நடந்தது.
'மேடம்! வேலைக்கு இன்னக்கி போகலையா?' என்றான் ஒருவன்.
'உனக்கென்னாச்சு? அதப்பத்தி?'
இல்லை, சாவகாசமா லைப்ரரிக்கு வந்திருக்கீங்களேன்னு கேட்டேன். மேடம், இளநி சாப்பிடறீங்களா?'
'என்னப்பா ஆச்சு? உனக்கு? ஏகப்பட்ட மரியாதை?'
'இளநி சாப்பிட்டுக்கிட்டே பேசலாமே?'
கொஞ்ச நேரத்திலே அவனை எனக்குப் பிடிச்சுப்போச்சு. பேசாப்பொருளை பேச வேண்டுமென்ற என் உள்மன ஆசை. செய்யாச் செயலை செய்து பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையை இவன் எப்படியோ கண்டுபிடித்துவிட்டான். இவனொரு புரோக்கர். ஒரு சோதனை முயற்சியா இன்று ஒரு நாள் வர முடியுமா? என்று கேட்டான்.
நான் கட்டிப்பாகச் சொல்லிவிட்டேன். நான் கல்லூரி மாணவி. பாரதி கஞ்சா அடிச்சு பாத்த மாதிரி. கள்ளு குடிச்சுப் பாத்தமாதிரிதான் இது. இதைவச்சு என்ன திரும்பத்திரும்ப வந்து வம்பு பண்ணினால் போலிஸ் துறையில் இருக்கும் அண்ணனிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்லிவிட்டேன். அவனும் பயந்து போய்' 'சரி! மேடம் ஒரே ஒருமுறை வந்துட்டு போங்க! இனிமே உங்க பக்கமே வரமாட்டேன்னு' சத்தியம் பண்ணினான்.
சரி என்று கிளம்பினோம். 'மேடம், இந்த புத்தகத்தை இன்னும் திருப்பித்தரலையே? நான் கொடுத்துடறேன், எங்கிட்ட கொடுங்க என்றான்'
மரப்பசு கை மாறியது.
அந்த அறைக்குள் போகும் போது, 'இத தடவிக்கங்க மேடம். ஃபாரின் செண்ட்' என்றான்.
'யோவ்! இதெல்லாம் எனக்கு வேண்டாம். நான் மனுஷிதானே? அவன் மனுஷன்தானே! அந்த வாசனையே போதும்'
'சரி மேடம்! நீங்க ரொம்ப வித்தியாசமானவங்க மேடம்' என்று போய்விட்டான்.
வந்தவன், சாரி, வந்தவர் 50க் கடந்தவராக இருந்தார். இது ஒரு சூதாட்டம் போல. அடுத்த நொடியின் அதிர்ச்சி அல்லது அதிசயம் சுவாரசியமானது. அது எதுவாக இருந்தாலும்.
நான் (நம்ம கதாநாயகின் மனோ பாவத்தில் கதையைச் சொல்வோம், மேலே!) குளிக்கவில்லை. ஆனால் பாவம், அவர் கொஞ்சம் பொறுங்கள் குளித்துவிட்டு வருகிறேன் என்று பாத்ரூமிற்குள் போனார்!
போகுமுன், திரும்பிப்பார்த்து, 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! நீங்களும் கூட குளிக்க வரீங்களா?' என்றார்.
'ஏன் உங்களுக்கு மனுஷ வாடை பிடிக்காதா? சுத்தம் செய்துகிட்டுதான் சுகம் கூட காணுவீங்களோ?' என்றேன்.
'உங்க மனுஷ வாடையை தெரிஞ்சிக்க ஆசைதான். ஆனா, இன்னக்கிப்பூரா ஒரே சுத்தல். என் வாடை தாங்கக்கூடியதா எனக்கே இல்லை. நீங்க இருங்க! வந்தா சுவாரசியமா இருக்குமேன்னுதான்' என்று சிரித்தார்.
அவர் வரும்வரை எத்தனையோ எண்ணங்கள். இந்த இச்சைகள்தானே உலகம்? இச்சைகள் இல்லையெனில் வாழ்வை உந்தும் சக்தி எது? நல்லா ஞாபகம் இருக்கு. அஞ்சு வயசு கூட ஆயிருக்காது. அம்மா! 'டேய் குழந்தையப்பாத்துக்கோன்னு' வீட்டு டிரைவர்ட்டே விட்டுப்போனாள். நகரின் மத்தியில் வீடு. காருக்குள் உட்கார்த்தி வைத்துக்கொண்டான். வெளியே ஒரே ஜனநடமாட்டம். கூடைக்காரி, பிச்சைக்காரி, பூக்காரி, சட்டை அயர்ன் பண்ணுபவன் என்று. பஸ்ஸு கிட்டக்க வந்து போகும் போது பஸ்ஸிலே உக்காந்துட்டு கீழே பார்ப்பவர்களெல்லாம் தெரிந்தார்கள்.
இத்தனை பேர் இருந்தும் அந்த மலையாளி டிரைவர் என் கையை எடுத்து அவன் வேட்டிக்குள் விட்டான். கண்கள் வெளியே. கைகள், மற்றொரு கையின் பிடியில் ஏதோ ஒன்றைத் தடவிக்கொண்டு இருந்தது. அது வளர்ந்தது. வேர்த்தது. டிரைவர் மிட்டாய் கொடுத்தான். எனக்கு அது சுவைக்கவில்லை. என்ன இது? ஏன் அது இவனை அவ்வளவு அவஸ்தைப்படுத்துகிறது? இதுதான் இப்படி எல்லா ஜனங்களுமா சுத்தித் திரியுதா? அன்னக்கி விழுந்த கேள்வி இன்னும் பதில் தெரியாமல். பயம், பயம். அதுதான் பதிலே தெரிந்து கொள்ளமுடியாமல் செய்துவிட்டது. அப்பா, அம்மா, அண்ணா, அக்கா. எல்லோரும் எதையோ போத்தி. போத்திக் காத்துக்கிட்டு இருக்காங்க. பேசாப்பொருளை பேசாதே என்கிறார்கள்.
அட! நம்ம டிரைவருக்குக்கூட 50 வயது இருக்கும். இவரைப்போல. மீண்டும் பழைய பயம் வந்தது. சிலிர்த்துக் கொண்டாள். இனிமே பயமே கூடாது!
'உங்க பேரைச் சொல்லலையே!' என்று குளித்துவிட்டு வந்தபோது அவருக்கு 10 வயது குறைந்திருந்தது.
போகப்போகத்தான் தெரிந்தது இரண்டு பேருக்குமே கூச்சமிருப்பது.
'உங்களுகென்ன கூச்சம்? நான் நினைத்தேன், ஆண்களென்றால் அலையும் ஓநாய்களென்று' என்று சிரித்தேன்.
'அப்படியெல்லாம் இல்லைங்க. எனக்குக் கல்யாணமாகி குழந்தை இருக்கு. வீட்டைவிட்டு வெளியே அதிகம் சுத்தற உத்யோகம். நண்பன் கொஞ்சம் ஆதரவா போய்ட்டுவாடா, நல்லது என்றான்'
அவர் மூன்றாம்பிறை கமல் போல் பேசினார். பேசிக்கொண்டே நெருங்கினோம். அவருக்கு இது முதல் அநுபவம் என்றார். எனக்கும் என்றேன். வெவ்வேறு தளங்களில். என் தனங்கள் பட்டபோது பத்திக் கொண்டது.
'என்ன முடிஞ்சிருச்சா?' என்றேன்.
அவர் அசடு வழிந்தார். 'சாரி! ரொம்ப நாளாச்சா? கைபட்டவுடன் எல்லாம் சீக்கிரமா முடிஞ்சிருச்சு'
கொஞ்ச நேரம் இருவரும் பிறந்தமேனியாகப் படுத்திருந்தோம். கட்டிக்கொண்டு புரண்டோம். அவர் தூங்கிவிட்டார்.
அட! என்னடா! என்னவோ கனவிலே வந்தா! இந்த மனுஷன் இப்படித் தூங்கிட்டாறே! இப்ப என்ன செய்யலாம்? விடக்கூடாது. எழுப்புவோம்.
'என்னங்க? மோகமுள் பாபு எப்படி அத்தனை முறை செஞ்சான்னு கேக்கிறீங்களா? எனக்கும் அதுதான் கேள்வி. எனக்கும் இன்னக்கி சுத்தினதிலே ஒரே அலுப்பு. மன்னிசுக்கங்க'
இந்த மனுஷன் என்னை ஒரு விலைமகள் போலவே பார்க்கமாட்டேங்கறாரே! ஏதோ வீட்டுக்காரிபோல....
'என்ன அப்படிப் பாக்கறீங்க? எனக்கு யாரையும் கேவலமாப் பாக்கற பழக்கம் இல்லைங்க. இன்றைக்கு எனக்கு மனைவிபோல வந்திருக்கீங்க. அந்த மரியாதை நான் கொடுக்க வேண்டாமா? இப்படி கிட்ட வாங்க 'மசாஜ் செய்யறேன்'. உங்கள மசாஜ் சர்வீஸ் அப்படீன்னுதான் புக் பண்ணியிருந்தாங்க. யாரு கொடுத்தா என்ன? இது ஒரு யோக மசாஜ். பரியங்க யோகம்ன்னு திருமூலர் சொல்றாரு! அப்படியே கண்ணை மூடிக்கிட்டு சுகமா 'ரிலாக்ஸ்' பண்ணுங்க'
அவர் கைகள் எங்கு போயின எங்கு போகவில்லை? உடலின் ஒவ்வொரு செல்லும் உயிர் பெற்று உட்கார்ந்து கொண்டன. முதுகுத்தண்டுக்குள் இத்தனை ஓட்டமுண்டா? அது என்ன ஸ்பரிசம்? செக்ஸ் செய்யாமலே செக்ஸ் அநுபவம் பெற இயலுமா?
அப்படியே கட்டிக்கொண்டு கொங்கைக்குப் போர்வையாய் தூங்கிப் போய்விட்டார்.
அதிகாலையில் எழுந்துவிட்டார்.
'விமானத்தைப்பிடிக்க வேண்டும். குளித்துவிட்டு வருகிறேன். நீங்கள் தூங்குங்கள்' என்று இதமாக சின்ன விளக்கைப்போட்டுவிட்டுப் போனார். 'விளக்கு வெளிச்சம் கண்ணைக்குத்தும்' என்று விளக்கம் வேறு.
இதுதான் தாம்பத்யமா? இதை அறியத்தான் இத்தனை நாள் காத்திருந்தேனா? நல்லவேளை ஏதோ முரடனைக் கொண்டுவந்து என் தேடலை சிதைக்காமலிருந்த அதிர்ஷ்ட்டத்தைப் பாராட்டவேண்டும்.
மீண்டும் குளித்துவிட்டு வந்தபோது 10 வயது குறைந்திருந்தார். நான் குளிக்கவே இல்லை.
குளம் விட்டு அகலாத ஓடம் போல் அவர் மீண்டும், மீண்டும் போக மனமின்றி என்ன உடம்பையே சுற்றிச்சுற்றி வந்தார். இரவில் ஒட்டிக்கொண்டது போதாதோ? மஞ்சத்தில் திருப்தி கண்டவர் யார்?
'நான் இன்னும் குளிக்கலை. போய் குளிச்சுட்டு வரவா?'
'இல்லைம்மா. நேரமில்ல. உங்க மனுஷ வாசனை அப்படியே இருக்கட்டும்' என்று வாசனை பிடிக்கவந்தபோது மயிர்கால்கள் மீண்டும் எழும்பி நின்றன. மற்றவையும் கூடவே.
மீண்டும் அது நிகழ்ந்தது. இம்முறை நான் எதிர்பார்த்த அதே வெறியுடன், வேகத்துடன். இரவில் வேறு சுகமென்றால் இப்போது வேறு சுகம். உச்சங்கள் பல தொட்ட சுகம்.
நான் அப்படியே துவண்டு களைந்த ஆடையாக படுத்திருந்தேன்.
'போய் வருகிறேன்...வருகிறேன்' என்று ஆயிரம் முத்தம் கொடுத்துவிட்டார்.
பிரிய மனமில்லாமல் பிரிந்தார்.
சன்னல்வழியாக 'பார், பார்' என்று மனது சொன்னது. கீழே பார்த்தேன். மெர்சிடிஸ் கார் ரெடியாகக் கிளம்பத்தயாராக இருந்தது. கோட்டும், சூட்டுமாக அவர் அழகாக இருந்தார். சட்டென்று மேலே பார்த்தார். கை ஆட்டினார்!
சட்! காண்டோம் போட்டுக்கோ என்று சொல்லத் தோணவில்லையே! இப்போ ரொம்ப லேட்!
இந்த மனுஷரோட குழந்தை என் கலப்பில் எப்படி இருக்கும்?
நினைக்க சுகமாக இருந்தது.

16 பின்னூட்டங்கள்:

Kangs(கங்கா) 3/02/2005 10:48:00 AM

நல்ல சிறுகதை!! எதிர்பாராத முடிவு. ஆனால் நாயகி எதற்காக இந்த சுகம் தேடி போகிறாள் என்பதற்கு ஒரு வலுவான காரணமும் கூறவில்லை.

Thangamani 3/02/2005 12:02:00 PM

சாத்துக்குடி மணம் பரவிய காஞ்சிபுரம் சத்திரமும், மலர் மாலையாக யமுனாவும் வந்தார்கள் மனதில். ஜானகிராமன் தான் வெற்றி பெற்றார் கண்ணன்.
நன்றி!

நா.கண்ணன் 3/02/2005 12:16:00 PM

கங்கா! கதைத்தலைப்பு, முன் பத்தியில் வரும் கதாநாயகியின் குணாம்சம் இவைகளிலிருந்து அவர் ஒரு விடுதலை விரும்பி என அறியலாம். அதுதான் காரணம். மேலும், வளர்ந்து வரும் பின்-நவீனத்துவ கதை சொல்லலில் கட்டுக்கோப்பான logical story telling அவசியமில்லாமல் போகிறது. ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, அது நம்மில் ஏற்படுத்தும் பாதிப்பு இவை முக்கியம் என்று தோன்றுகிறது. இது வலைப்பதிவிற்காக எழுதிய குறுங்கதை. இடம் ஒதுக்கீடு ஒரு பிரச்சனை. நன்றி.

நா.கண்ணன் 3/02/2005 12:17:00 PM

தங்கமணி: தி.ஜாவின் பாதிப்பு என் எழுத்தில் அதிகமுண்டு என்று சிங்கை எழுத்தாளர் கமலாதேவி அடிக்கடி சொல்வார். இல்லை என்று எப்படி நான் சொல்வேன்? :-)

Moorthi 3/02/2005 02:39:00 PM

சிந்தனையைத் தூண்டிய அருமையான கதை. அரசனை நம்பி புருஷனை கைவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும். கருத்தொருமித்த மனமொத்த தம்பதிகளாக வாழமுடியாவிட்டாலும் விட்டுக் கொடுத்தலில்தான் தாம்பத்யத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது! நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது? பழி வாங்குகிறேன் பார் உன்னை என்ற நம் கதாநாயகியின் வெறி துன்பத்தில் கொண்டுபோய் விடும். சிற்றின்ப வகையல்ல இது.... உறையில்லா உறவு எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிடும் என்பது ஒன்றே போதுமே!

நா.கண்ணன் 3/03/2005 01:42:00 PM

கண்ணன் சார்,
உங்கள் கதையைப் பற்றி!
பாலசந்திர் படம் மாதிரியே இருக்கு. அவர்தான் இப்படி எல்லாம் புதுமை பெண் என்று பெண்களை
கன்னாபின்னான்னு கற்பனை செய்வார். பெண்ணின் மனநிலையை எழுதுகிறேன்ன்னு ஏன்
சார் இப்படி எல்லாம் அழும்பு பண்ணுறீங்க? மொட்டை மாடியில் அ....மா படுக்கிறதும்,
ஏதோ ஒரு பொறம் போக்கு கூப்பிடதும் போகிறாள்னா அந்த பொண்ணு மெண்டலாய்தான் இருக்கணும்.
பத்துநிமிஷம் அந்த ஆளு வேலை முடிஞ்சதும் போயிடரான், இவ காலம் முழுக்க அந்த குழந்தையை
காப்பாற்ற வேண்டாமா? சாமி, கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறந்ததுமே, அடுத்த குழந்தை வந்துடுமோன்னு
மாசமாசம் பயப்படுவதுதான் ஒரு பெண்ணின் மனநிலைமை. இதுல கல்யாணம் ஆகாம... கஷ்டம்!
ஆனா, இது " இலக்கிய இதழ்" களுக்கு ஏற்ற கதை, அனுப்பி பாருங்க, கட்டாயம் பிரசுரம் ஆகும் என்று வாழ்த்துகிறேன்.
உஷா

Chandravathanaa 3/03/2005 03:54:00 PM

பெண்கள் சட்டென்று வந்த ஒரு அதிர்வில் தடுமாறுவார்கள்.
அழகில் வசீகரத்தில் தம்மை மறந்து தடம் புரள்வார்கள்.
அன்பின் தொடுகையென நினைத்து ஏமாந்து போவார்கள்.
பலாத்காரத்துக்குப் பலியாவார்கள்.
ஆனால் இப்படி அலைய மாட்டார்கள்.
கதையில் ஆபாசமும் சற்றுக் கூடி விட்டது போலவே எனக்குப் படுகிறது.

மதி கந்தசாமி (Mathy) 3/03/2005 11:59:00 PM

முதலில் அதிர்ச்சிகரமாக இருக்கவேண்டும் என்று கதையின் முன்பாதியில் மினக்கெட்டிருப்பதுபோலத் தெரிகிறது. ஆனால், அதிர்ச்சிகரமாக இருக்கிறதோ இல்லையோ நம்பும்படி இல்லை. வார்த்தைகளைக் கொஞ்சம் செப்பனிட்டிருக்கலாம்.

ஆனால், நான் இங்கே சொல்ல வந்தது அதைப்பற்றியல்ல. உங்கள் கதையின் கடைசி இருவரிகள்.

//இந்த மனுஷரோட குழந்தை என் கலப்பில் எப்படி இருக்கும்? நினைக்க சுகமாக இருந்தது.//

Ridiculous!

அப்படியில்லை. எனக்குத் தோன்றியது. இன்பமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அப்படியே செய்யும் பெண், அதற்குப் பிறகு அவர் சாயலில்/இவர் சாயலில் குழந்தை என்று நினைத்ததுதான் அபத்தமாக இருந்தது. இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் நினைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. வேண்டுமென்றால் நம் தமிழ்ப்படக் கதாநாயகிகள்/தமிழ் இலக்கியத்தில் வரும் பெண்கள் நினைக்கலாம். நிஜவுலகம் அப்படியெல்லாம் இல்லை. வசதிவாய்ப்புகள் அதிகமாக இருக்கும் நாடுகளில் பிறப்புவிகிதம் குறைந்துகொண்டே வருவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? பெண்கள் தங்களுடைய சுகங்களை இழக்கத் தயாராக இல்லை. இதனால் பல நாடுகள் அவர்களுடைய சட்டதிட்டங்களை மாற்றி பல சலுகைகளை அறிவித்தபடி இருக்கிறார்கள். அப்படியாவது பிறப்புவிகிதம் அதிகரிக்காதா என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படியெல்லாம் இருக்கும்போது ஒரு முறை இப்படிப் போய்விட்டு அதனால் அவஸ்தைப்பட எந்தப் பெண்ணும் ஆசைப்படுவாள் என்று தோன்றவில்லை. பாலச்சந்தரின் படநாயகி செய்யலாம். அவர்தான் இந்தமாதிரி அபத்தமாக எதையாவது யோசித்து அதைப் பெண்விடுதலை என்று உளறுவார். ஆண்களின் பார்வையில் பெண்விடுதலை என்பது skewedஆகவே இருக்கிறது.

உங்கள் கதையைப்பற்றிக் கொஞ்சம் விரிவாக:

ஏதோ வித்தியாசமாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள். ஆனால், நடைமுறையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைக்கிறீர்களா? பெண்கள் ஜாக்கிரதையுணர்வு கொண்டவர்கள்(பெரும்பாலும்). அப்படியிருக்கையில், ஒரு புரோக்கர் வழியாகப் போவாளா? அதுவும் கடைசியில் யார் என்ற தேர்வு கூட அவளது கையில் இல்லை. உங்களுடைய கதையின் நாயகி அப்படிப்பட்டவளாக இல்லையே. நீங்க சமீபத்தில் சிங்கைக்குச் சென்றுவந்தது தெரிந்ததாலோ என்னமோ, இந்தக் கதையை ஆரம்பத்திலிருந்தே சிங்கைப்பின்னணியில் வைத்துத்தான் படித்தேன். அப்படி சிங்கையில் நடந்ததாகவே வைத்துக்கொண்டால், அந்தப் பெண்ணிற்கு இடமா இல்லை? அப்படி ஒரு புரோக்கரின் பின் போவதற்கு. அந்த புரோக்கர் அதற்குப்பின் தொந்தரவு செய்யக்கூடாது என்று போலிஸ் துறையில் இருக்கும் அண்ணனைச் சொல்லி மிரட்டுகிறாளாம். அபத்தம்! அதுவும் அதைக்கேட்டு பயந்துபோற புரோக்கர். :shaking head:

நான் மரப்பசு படிச்சதில்லை. நீங்களும் தங்கமணியும் மற்றவர்களும் பேசிக்கொள்வதைப் பார்க்கையில் அதில் வரும் நாயகி இதுபோன்றவள் என்று எண்ணவைக்கிறது. ஐம்பதுகள் அறுபதுகளில் வரும் கதை நாயகிகளை இருபத்தியோராம் நூற்றாண்டுக்குக் கொண்டுவந்து ரெண்டும் கெட்டானாக்கி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்போதை நவநாகரீக(???) சென்னையிலேயே பெண்கள் "முன்னேற்றமாக" நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை ஒரு சில இந்தியா டுடே இதழ்கள் சொல்கின்றன. "முன்னேற்றம்"- அப்படி நினைத்துக்கொண்டு பாழும் கிணற்றில் விழுவது. நான் Modernஆக்கும் என்று நினைத்து அதை ஆண்களின் பார்வையில் அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்றபடி நடந்து prove பண்ண நினைக்கும் பெண்களில் உங்கள் நாயகியும் ஒருத்தியாக இருக்கிறாள்.

//சட்! காண்டோம் போட்டுக்கோ என்று சொல்லத் தோணவில்லையே! இப்போ ரொம்ப லேட்!//

Hmm... dont tell me that your "modern" woman is unaware of the technical and medical growth in that dept.

One reason, I hesitate to write responses to such posts is because whatever said and done our society, Men in General dont have broad outlook. For them, when a woman talks these things, she is sure 'tainted'. She is not a "good" woman. I am not talking abt the woman poets and the troubles they face. And how some inteligent women use it to market their padaippuhaL. Even if women are able to talk about all these things with friends(males included), the internet community hasnt grown that much I think.

ஜெயந்தி சங்கர் 3/04/2005 09:04:00 AM

//பெண்கள் சட்டென்று வந்த ஒரு அதிர்வில் தடுமாறுவார்கள்.
அழகில் வசீகரத்தில் தம்மை மறந்து தடம் புரள்வார்கள்.
அன்பின் தொடுகையென நினைத்து ஏமாந்து போவார்கள்.
பலாத்காரத்துக்குப் பலியாவார்கள்.
ஆனால் இப்படி அலைய மாட்டார்கள்.
கதையில் ஆபாசமும் சற்றுக் கூடி விட்டது போலவே எனக்குப் படுகிறது.//

எனக்கு இதில் முற்றிலும் உடன்பாடு உண்டு.

எந்த ஒரு பெண்ணும் இவ்வளவு கீழ்த்தரமாகப் போகவே மாட்டாள். கதையில் ஓடைகள் இருக்கலாம், ஆனால், கதையே ஓட்டையாகிப்போனது தான் இங்கே நிகழ்ந்திருப்பது.

கத்திமேல் நடக்கக்கூடியது இவ்வகைக் கருக்கள். இதுபோன்றவற்றை எழுதும்போது மட்டுமில்லாமல் அதற்குமுன்பே பாத்திரங்கள், களம், அவைபேசும் வார்த்தைகள் ஆகியவற்றை சேர்த்தும் பிரித்தும்,.. மீண்டும் சேர்த்து பிரித்து என்று மற்ற கதைகளைக்காட்டிலும் மெனக்கெடுவேண்டும். மனதிற்குள்ளேயே எழுதிப்பார்க்கவேண்டும்.

அதிகமான கவனத்தை ஈர்க்கவென்றோ, இல்லை சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு அதற்காகக் கதை உருவாக்க நினைக்கும் போதோ ஏற்படும் பிரசனை தான் இந்தக்கதைக்கும் நேஎர்ந்திருக்கிறது.

'rain' என்ற சொல்லே இல்லாமல் மழையைப்பற்றிச் சொல்லும் படைப்பு உண்டென்று படித்ததுண்டு. அந்தப்படைப்பை இன்னமும் படிக்கவில்லை.

அதுபோல சொல்லும் விஷயத்தை இவ்வளவு அப்பட்டமாக வார்த்தைகள் கொண்டு சொல்லும் போது ஆபாசம் மிகுந்துவிடவே செய்யும்.

மதியின் வாதங்களிலும் மிகுந்த நியாயம் உண்டு. என்னுடைய கருத்தோடு ஏறத்தாழ ஒத்துப்போகிறது. நான் எழுத நினைத்ததில் முக்கால்வாசி அவரே எழுதிவிட்டதால்,.. எனக்கு வேலை குறைந்துவிட்டது,..


மிகவும் மன்னிக்கவேண்டும் கண்ணன்,.. இந்தக் கதையின் அஸ்திவாரம், கட்டுமானம், பூச்சு எதுவுமே சரியாக வரவில்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

anbudan, ஜெ

ஒரு பொடிச்சி 3/09/2005 12:50:00 PM

முதிய ஆண்களின் இளம் பெண்களைப் புணரும் fantasy ஐ சிறுகதை என எழுதியிருக்கிறீர்கள். அதற்குச் சான்றாய் ஒவ்வொருமுறையும் 50 வயது 'அவர்' 'குளித்துவிட்டு வந்தபோது அவருக்கு 10 வயது குறைந்திருந்தது" என இருமுறைக்கு repeat வேறு செய்துள்ளீர்கள். உந்த சாயல் பற்றினது 8 வருடம் முந்தியா? பாலசந்தரின் 'கல்கி' வந்தபோதே விவாதத்திற்கும் மறுப்பிற்கும் உள்ளானது. பாலசந்தர் சொல்கிற 'புரட்சி'கூட தேவலாம்போல இருக்கு. இதில், அந்தக் காலத்து கதையைச் சொல்லிக்கொண்டு 'பின்நவீனத்துவம்' பற்றி வேறா? நான் இன்னமும் 'செந்தட்டி'யை மறக்கவில்லை. அது ஒரு நல்ல படைப்பென்பதால் அல்ல.

அல்வாசிட்டி.விஜய் 3/09/2005 02:54:00 PM

அய்யகோ!!! தப்புத் தாளங்களாக தான் வந்திருக்கிறது அய்யா. கல்லூரி காலங்களில் படித்த மஞ்சள் புத்தகத்தின் தொனி தான் தொக்கி நிற்கிறது.

Ramachandranusha 3/09/2005 05:12:00 PM

இந்த கதையில் கண்ணன் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை, போலித்தனம் இல்லாத, வாழ்க்கை பெண்ணுக்கு வேண்டும் என்கிறாரா? நேற்றைய காதல்மன்னன் இன்றைய இளவரசன் போல பெண்களும் வாழ வேண்டுமா? அதன் பரிணாமவளர்ச்சியாய் அண்ணாச்சி வகையாறாக்களின் பிறன் மனை நோக்கலும் சரியா? ஆனால் இவர்களுக்கு கடைசிகாலத்தில், சிசுருஷை செய்ய, நவீன நளாயினிகள் கிடைப்பார்கள். தட்டு தடுமாறிய பெண்கள் கதி என்னவாகும் என்பது அனைவரும் அறிந்ததுதானே?
சரோஜா தேவி கதைகள் என்ற செய்தி காதில் விழுந்தவைத்தான், ஆனால் புஷ்பாதங்கதுரை தனமான இத்தகைய கதைகளும், அதற்கு சூப்பர் காம்பினேஷன் ஜெ..., யின் படங்களும்தான் நினைவிற்கு வருகின்றன. இலக்கிய இதழுக்கு அனுப்பலாம் என்பதை வாப்ஸ் வாங்கிக் கொள்ளவா அல்லது இத்தகைய அறிவிஜீவிதனமான, புதுமை நோக்கில் எழுதப்படும் கதைகள் இலக்கிய இதழ்களுக்கு பொருத்தமானவையா?
உஷா

நா.கண்ணன் 3/09/2005 05:51:00 PM

உஷா! விட மாட்டீங்க போல :-) சரி அலசுவோம் (வேலை நேரத்திருட்டு, ஆழமாகப் போகமுடியுமா என்று தெரியவில்லை).

எந்தக் கதையிலும் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று உள்மனம் சார்ந்தது. தனிமனிதத் தேடல் சார்ந்தது. மற்றது, சமூகம் சார்ந்த விழுமியங்கள். அது தனிமனிதன் மேல் விதிக்கும் கட்டுப்பாடுகள்.

பெரும்பாலோரின் கோபம் இக்கதையின் சமூக விளைவுகள் பற்றியே. அவள் சமூகம் தரும் norm-லிருந்து மிக விலகி இருப்பது. அதாவது அவள் எல்லோரும் போல் இல்லாமல் இருப்பது. சமூக ஒழுங்கை நான் குறைத்து மதிப்பிடவில்லை. உங்கள் கோபம் புரிகிறது.

இதில் இரண்டொருவர் மட்டுமே அப்பெண்ணின் அகமனது பற்றி அக்கரை கொண்டுள்ளனர். கதை என்பது ஏதாவது சொல்ல வேண்டுமென்ற நியதி கிடையாது. இங்கு ஒரு பெண்ணின் ஆசைகள் பேசப்படுகிறது. அவள் ஏன் இப்படித்தறி கெட்டுப்போய் ஆசைப்படுகிறாள் என்று கூக்கிரலிட்டு தனிமனித சுதந்திரத்தைப் பறிக்க நம் யாருக்கும் உரிமை இல்லை. இந்திராபார்த்தசாரதி சொல்லுவார் ராஜராஜ சோழன் அவனிடம் தினம் வரும் பரத்தையரிடம் ஒரு existencial விளையாட்டு ஆடுவானாம். அதாவது விஷமிட்ட தின்பண்டத்தை மற்றவைகளுடன் கலந்து அவள் எதை எடுக்கிறாள் என்று பார்ப்பானாம். அது போன்ற விளையாட்டை இவள் ஆடுகிறாள். அதில் ஒரு திரில் உண்டு. அதனாலேயே அவள் சோரம் போகத்துணிகிறாள். அதில் இந்தத் திரில் இருக்கு. வருபவன் யார் என்று தெரியாது, எப்படி நடந்து கொள்வான் என்று தெரியாது. அதை சுகித்துப் பார்ப்பதில் ஒரு அனுபவம். அவளுக்கு இந்த விபரீத ஆசை வரவில்லையெனில் அவள் ஒரு கிளாஸ்மெட்டுடன் படுத்திருப்பாள் (பையன் கூச்சப்படாமலிருந்தால் :-)

அவளுக்குக் கர்பமாக வேண்டுமென்ற ஆவல் இல்லை. ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டுமென்ற ஆசையில்லை. அவன் நல்லவனாக இருந்துவிட்டதால் விளையும் ஒரு மன நெகிழ்வை அது காட்டுகிறது. அவள் நிச்சயம் மாத்திரை போட்டுக்கொள்ளும் வகை என்பது சொல்லாமலே புரிபட்டிருக்க வேண்டும்.

இவளின் குணாதிசயம் ஒரு சாதாரண தமிழ் பெண்ணுடன் ஒத்துப்போகவில்லை என்பதை விமர்சனங்கள் காட்டுகின்றன. இதை ஒரு ஜெர்மன் பெண் செய்யமுடியும். அப்போது இது ஒரு பிரச்சனை இல்லையா? எது நம்மை இந்தப் பாடு படுத்துகிறது. Is it our social conditioning? Our own judgement of life and morals?

செக்ஸ் பற்றிப் பேசினாலே உடனே முத்திரை குத்த ரெடியாக இருந்தால் எழுதவே முடியாது. பேசவே முடியாது. நான் புஷ்பா தங்கதுரையும் படித்ததில்லை, சரோஜாதேவியோ? அவர்கள் கதையெல்லாம் படித்ததில்லை. இது வணிக எழுத்து அல்ல. இது விற்பனைக்காக அல்ல. இதை வெளியிடும் நோக்கமுமில்லை. வலைப்பூவில் வெங்கட் எழுதின சமாச்சாரத்தைப் பார்த்துவிட்டு வந்த தைர்யத்தில் எழுதினேன். இதுவும் நான் வழக்கமாய் சந்திக்கும் உலகம்தான் என்று புரிந்து கொண்டேன்.

செக்ஸ் பற்றி வரும் என் கதைகளை மட்டும் விமர்சிக்கிறார் பொடிச்சி. எத்தனையோ பல நல்ல கதைகளை நான் எழுதியதுண்டு. ஷொட்டுக் கொடுப்பதைவிட முட்டிப்பார்பதிலும் ஒரு திரில் இருக்கத்தானே செய்கிறது:-)

திரும்பத்திரும்பச் சொல்கிறேன். இதைக் கட்டுரையாகக்கூட எழுதியிருக்கலாம். இது பற்றிப் பேசினால் என்ன? நிகழ்வு எப்படியிருக்கும் என்பதே நோக்கம். அலை இன்னும் வீசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் நான் விட்டாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல. எனவே நீங்களே இதற்கொரு சமாதி கட்டி விடுங்கள். இனி என் பொறுப்பல்ல.

ஒரு பொடிச்சி 3/10/2005 02:37:00 AM

சாரே,
"செக்ஸ் பற்றி வரும் என் கதைகளை மட்டும் விமர்சிக்கிறார் பொடிச்சி." என்று ஒரு விமர்சனத்தை வைத்துக்கொண்டு (நான் ஒன்றும் personal ஆய் எடுக்கவில்லை) "...இதை ஜேர்மன் பெண் செய்யமுடியும்" "தமிழர்கள் உணர்ச்சிவசப்படுகிறோம" என்கிறீர்கள்! இந்த உங்கள் mentality இன் முரண் உங்களுக்குத் தெரியாட்டிலும் படிப்பவர்களாவது அறிந்துகொள்க!!

For your information, உங்களுடைய 'உதிர் இலை காலம்' தொகுப்பும் படித்திருக்கிறேன் (அதை 'இலை உதிர் காலம்' எனப்போட்டாலும் ஒன்றுதான் என்பது எனது 'கருத்து'). அந்த அனுபவதில் 'ஷோட்' கொடுக்கும் ஆவல் எல்லாம் இல்லை. 'முட்டிப்' பார்க்கும் 'த்றில்' உம் இல்லை. ஆனால் த்றில் பற்றிய உங்களது கருத்து 'ஊகிக்கக்' கூடியதுதான். ஆச்சரியம் தரவில்லை.
எனது பழைய பின்னூட்டம் கண்ணனென்பவருடைய தனிப்பட்ட கருத்து பற்றியதல்ல. ஒரு புனைவு மற்றும் அதைத் தொடர்ந்த கட்டுரை கொண்டுவருகிற கருத்தியல் பற்றியது. மிகப் பிற்போக்கான ஆணிலைப்பட்ட எழுத்தை தொடர்ந்து எழுதுகிறீர்கள் அதை "பேசாப்பொருள்" எனவும் எழுதுகிறீர்கள். அந்தப் பிரதி குறித்த எனது எதிர்வினை இது. ஆங்கில இலக்கியப் புத்தகங்கள், ஆங்கில seduction புத்தகங்கள் இரண்டும் படித்துள்ளேன். உங்களது எழுத்தில் அவ்வகை ஜுஜுபிகளில் இரண்டாம்வகை பாணிதான் தெரிகிறது. அதைத்தான் எழுதினேன். இதில 'உணர்ச்சிவசப்படவைக்கிற' விசயம் நீங்கள் எழுதுகிற பிரதிகளைப்பற்றி நீங்களே ஒரு (முற்போக்கு)முகம் (பேசாப்பொருள்) தருவதுதான். நீங்கள் எழுதுவதுபோல சொல்வதானால், வணிக எழுத்துக்கள் இல்லை என்று சொல்வதுதான் தவறே ஒழிய, வணிக எழுத்துக்கள் அல்ல! (அப்படி நிங்கள் சொன்னால் இதை நான் எழுதியிருக்கமாட்டேன்).

ஜானகிராமன் போன்றவர்களது போல் அல்லாமல் நிச்சயம் உங்களது வணிக எழுத்துத்தான் (வணிக நூலில் வராததால் அது இல்லை என்பதல்ல). ஜானகிராமனின் பெண்கள் விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்கள் எல்லாரும் 'விடுதலை விரும்பி' என்கிற ஒற்றைச் சொல்லுள் முத்திரை குத்தப்படவில்லை.
இன்னுமொரு தகவல் இன்றைய ஆங்கில வணிக நூல்களில் condom போடுவது சாதாரணமானது (பிற ஐரோப்பிய நூல்களிலும்) தமிழில்தான் இன்னமும் அது போடும் நேரத்தில் 'த்றில்' போய்விடும் என்பதால் the so called 'முற்போக்கான' எழுத்தாளர்களும் அதைத் தவிர்க்கிறார்கள். . இதனால் சென்ரிமென்ட்ஸ் + பெண்ணின் நெகிழ்ச்சி கெட்டுடும். அபஸ்வரம்! ஏன் சாரே, 'அவள் அவரைப்பற்றி எந்தவித உன்னத எண்ணங்களையும் அடையாமல் எழுந்துபோனாள்' என எழுதக்கூடாதா? 'நெகிழ்ச்சி' எண்ணம் பெண்ணுக்கு வரும்' என்கிற முடிவான உங்கள் 'மரபான எண்ணத்தோடு' இதை ஒரு முற்போக்கான, பேசாப்பொருளைப் பேசப்படுகிற கதையாய நீங்கள் முன்வைப்பதை நாங்கள் விமர்சிக்கக் கூடாதா? செக்ஸ் கதையென்றால் மட்டும்?அவளை ஒரு சாதாரண உங்கள் வீட்டுப் பெண்போல ('விடுதலை விரும்பி' என எழுதாமல்')எழுதியிருக்கக்கூடாதா? அவள் உறவுக்கு கொஞ்சநேரமுன் ஆணுறை போட்டால்/போடுவதைச் சொன்னால் உங்கள் பிரதியில் என்ன ஆகியிருக்ககும்? அதையும் பிரதியின் 'பேசாப்பொருள்' களில் ஒன்றாய் வாசகர்கள் 'ஊகித்து' "அவள் நிச்சயம் மாத்திரை போட்டுக்கொள்ளும் வகை என்பது சொல்லாமலே புரிபட்டிருக்க வேண்டும்" என்று எடுக்கவேண்டுமென்பது என்ன ஒரு எதிர்பார்ப்பு!

ஒரு முற்போக்கான/பேசாப்பொருளான கதைகளை/கட்டுரைகளை தொடர்ந்து எழுதப்போகிற நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்: அவள் ஏன் மாத்திரை போட்டுக்கொள்ளவேண்டும்? தலைவிதியா? அவளுக்கு உடலில் அதால் பக்கவிளைவுகள் உண்டென்பதோடு> எயிட்ஸ் போன்ற நோய்களிலிருந்து யாரு காப்பாத்துவது, அவளை, அந்த மனிதரின் மனைவியை? பார்த்தால் நாங்கள் 'இந்த 'றேஞ்சில' ஊகித்தால் ரெண்டு பெண்கள் பாதிக்கப்படபோகிறார்க்ள. ஒரு மத்திம ஆண் சுகமடைந்து 'டாட்டா' சொல்லிச் செல்கிறான்.

பிறகு இங்கு தொடர்ந்து நீங்கள் சொல்ல என்ன இருக்கு?
இதை விவாதிப்பதில்தான் என்ன 'த்றில்' இருக்கிறது? எனது கருத்தை சொன்னேன். அவ்வளவே.
ஒரு கும்பிடு.

கறுப்பி 3/10/2005 05:08:00 AM

ஒரு சிறுகதை இப்பிடித்தான் இருக்கவேண்டும் எதையாவது சொல்லி வைத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் இல்லை உண்மைதான். இருந்தும் //கதைத்தலைப்பு முன் பத்தியில் வரும் கதாநாயகியின் குணாம்சம் இவைகளிலிருந்து அவர் ஒரு விடுதலை விரும்பி என அறியலாம்\\ இது விடுதலை விரும்பும் ஒரு பெண்ணை தாங்கள் சித்தரித்த விதம் வெறும் அபத்தம். தான் விரும்பாத யாரென்ரே தெரியாத ஒரு ஆணுடன் சுகத்திற்காக மட்டும் ஒரு பெண் புணருவது என்பது உங்கள் கற்பனைக் கோளாறாகவே படுகின்றது. பணத்திற்காக என்று காட்டியிருந்தால் அது வேறு. அதையும் மீறி முடிவில் அவனது சாயலில் குழந்தையைக் கற்பனை பண்ணிச் சுகம் காண்பது. பரீட்சாத்தம் எனினும் அதற்கும் ஒரு லொஜிக் இருக்க வேண்டும்.

செந்தழல் ரவி 7/10/2007 04:03:00 PM
This comment has been removed by a blog administrator.