சில யோசனைகள்!

சில அசௌகர்யங்களுடன்தான் இந்த வலைப்பதிவை மேற்கொள்கிறேன். எங்கள் ஆய்வகம் போட்ட 'லட்சுமணன் கோட்டில்' (firewall) பதியமுடிகிறது, ஆனால் பார்க்கமுடியவில்லை. அதாவது Blogger-க்குப் போகமுடிகிறது. Blogspot போகமுடியவில்லை. ஜெயந்தி எனது வலைப்பதிவை பார்க்கமுடியவில்லை என்றார். இந்த blogspot-ல் ஏதாவது கோளாறா? தெரிந்தவர் சொல்லவும்! இதனால், ஒவ்வொருமுறையும் ஒரு proxy server போய்தான் எனது பதிவுகளை, ஏன், பிற எல்லார் பதிவுகளையும் காண வேண்டியுள்ளது. தேசிகன் எனக்கு இந்த யோசனை சொல்லவில்லையெனில் எனது அக்ஞானவாசம் இன்னும் நீடித்து இருக்கும். எங்க ஆய்வக நிறுவனத்துடன் பேச ஆரம்பித்திருக்கிறேன் (அண்ணே! இங்கெல்லாம் ஆங்கிலத்தை வச்சுக்கிட்டு ஒண்ணும் செய்யவியலாது :-)

இரண்டாவது, நாம இன்னும் யுனிகோடில் குவாண்டம் தாவல் செய்யலே! பாதிப்பக்கங்களைப் பாக்கவே முடியலே! இத பலமுறை சொல்லிட்டேன். இது மைக்ரோசாப்ட்டோட கோளாறா? இல்லை யுனிகோடு இன்னும் பிரப்ஞ்சத்தன்மையடையவில்லையா? பலர் இன்னும் 'வெட்டி, ஒட்டிதான் பல வலைப்பதிவுகளை வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்மணம் கொடுத்திருக்கும் யுனிகோடு குறியீட்டு நிரவலை எல்லோரும் ஒருமனதாக பயன்படுத்தவும். (ததாஸ்து!)

வலைப்பூ மலர்ந்த காலத்தில் நாங்கள் கையளவே இருந்தோம். ஒருவருக்கொருவர் தெரியும். இப்போது? 400வது வலைஞரை வரவேற்க என்ன செய்யலாமென 'ஜெ' காசியிடம் ஒரு பின்னூட்டத்தில் யோசனை கேட்டிருக்கிறார். காசியைப் பிடிப்பது அவ்வளவு கஷ்ட்டமாகிப்போச்சு போல :-) இந்தப் பெரிய மீனவர் சமூகத்தில் (அதாவது வலைஞன் எறால் மீனவன்தானே! 'படகோட்டிகள்' என்று கூடச் சொல்லலாம்!) இனிமேல் ஒவ்வொருவரை அறிவது கடினம். லேசு, வாசாக ஒருவர் எழுத்தை அறிந்து கொள்ளலாம். இப்போதே உள்வட்டங்கள் தோன்றிவிட்டன. இது தவிற்கவியலாதது. நமக்குப் பரிச்சியமான பதிவிற்கே நாம் போக ஆசைப்படுவோம். அந்தத் திண்ணையிலேயே உட்கார்ந்து இருப்போம். இது தப்பில்ல.

தமிழ்மணம் எனும் மையம் முடிந்த அளவு தொழில்நுட்பத்தை வைத்து நம்மையெல்லாம் syndicate செய்கிறது. ஆயினும், உண்மையான syndication மனத்தைப் பொறுத்தவிஷயம். நேத்து யாரோ 'lisa'-ங்கற பேரிலே வந்து மாத்திரை வித்திட்டுப்போனாங்க. ஆக, பின்னூட்டத்தில் இப்போது முகமூடிகள் (phantom) நுழைய ஆரம்பித்துவிட்டனர் :-)

ஏன் தமிழ்மணம் என்ற அமைப்பு blogger அமைப்பு போல் ஒரு குழுமம் என ஆகக்கூடாது? அதில் உருப்பினராகச் சேருபவர் மட்டும் பின்னூட்டம் தரலாம், வலைப்பதிவு நடவடிக்கையில் தரலாம் என வைக்கக்கூடாது? மனம் பிறழ்ந்தவர்கள் எல்லா நடவடிக்கையிலும் புகுந்து விடுகின்றனர். இப்படி only for registered members என்று வைத்துக்கொண்டால், at least, பின்னூட்டத்தில் திட்டுபவர் யாரெனத்தெரிந்து கொள்ளலாம்.

எதிர்வினை வளர்ச்சிக்கு உதவும். நாமெல்லாம் சிறுபிள்ளைகள் அல்ல. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பருவத்தினர்தானே! மேலும், எதிர்கட்சி என்ன சொல்கிறது என அறிந்து செயல்படுவதுதான் ஜனநாயகம். தெரியாம உள்ளே நுழைஞ்சு குண்டு வைக்கிறது terriorism! Anononimity என்பது பெரிய விஷயம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அதை Flight of the Eagle என்பார். அங்கு ஆணவம் கிடையாது. நம்ம ஆட்களுக்கு perverted ego இருப்பதால்தான் இது நடக்கிறது. அது கிடக்கட்டும்.

நம்ம எண்ணிக்கை கூடும் போது, வலைப்பதிவுகளை வாசிக்க முடியாமல் போய்விடும். இதுவே தெரிந்தவர் மத்தியில் இருப்பது நலமெனும் தீர்மானத்திற்கு இட்டுச்செல்கிறது. யாராவது ஒரு புண்ணியவன் "வார ஜீரணி" அதாவது weekly digest கொண்டுவரமுடியுமா? கொஞ்சம் அவ்வப்போது அக்ஞானவாசம் இருக்க விரும்புகிறவர்கள் திரும்பும் போது வசதியாக இந்த வாரசஞ்சிகை வாசித்தால் நாட்டு நடப்பு என்ன என்று தெரிந்து கொள்ளலாம். இது சிண்டிகேட்டுக்கு சிண்டிகேட் வேலை! திசைகள் இதை செய்யத்தொடங்கி விட்டது என அறிகிறேன். வாழ்க!

அப்புறம், வலைஞர்களை உற்சாகப்படுத்த விழா, பரிசு எல்லாம் ஏற்பாடாகிறது போல. இதில் எனக்கு மாற்றுக்கருத்துண்டு. தமிழ்மணம் எனும் மையம் ஒன்று போதும். செண்ரல் பஸ் ஸ்டாண்டு போல எந்த வழித்தடம் எங்கு போகுதுன்னு தெரிஞ்சிகிட்டா போதும். இப்போதுபோல் அவ்வப்போது யார் மீதாவது 'ஒளிப்பாய்ச்சல்' (focus light) செய்து கவனத்தைக் கொண்டுவரலாம். தமிழ் வலைப்பதிவில் சிறந்த பரிசு, ஆண்டின் சிறந்த பதிவிது என்றெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன? இதனால் யாருக்கு என்ன பிரயோசஜம்? ஏதோ திரும்பப் பள்ளிக்கூடத்திற்குப் போவது போலும், பரிட்சை எழுதுவது போலும் பயங்கரக்கனவுகள் (nightmare) வருகின்றன. திசைகள் என்ன செய்யப்போகிறது எனப்பார்ப்போம். ஆள் கூடும் போது 'கவன ஈர்ப்பு' முக்கியம். அதை தற்போதுள்ள செயற்பாடே இனிது செய்கிறது.

மடலாடற்குழுக்கள் இதற்கு கூடுதல் கவன ஈர்ப்பைத்தரலாம். மடலாடற்குழுவிற்கில்லாத ஒரு தனிதன்மை (privacy) வலைப்பதிவிற்குண்டு. இங்கு அனாமத்து ஆட்கள் அத்துமிறீ நுழைந்துவிட முடியாது. வாசக்கதவு நம்ம கையிலேங்கற ஒரே வசதி இங்குண்டு.

இந்தத்தேடுற விஷயத்திலே தமிழ்மணம் ஏதாவது செய்திருக்கா? நம்ம பதிவுகளைத்தேடுவது, அடுத்தவர் பதிவைத்தேடுவது? இதை சிண்டிகேஷன் வைத்துக்கொண்டு செய்யமுடியுமா? கூகுள் தந்திருக்கும் தேடுபொறி என் வலைப்பதிவில் வேலை செய்வதில்லை (search within this site). எழுதிக்குவித்துவிட்டால் இதுதான் பிரச்சனை (இது பற்றிய ஆ.முத்துலிங்கத்தின் வேடிக்கையான கதையொன்றுண்டு). யாராவது உதவ முடியுமா?

மற்றபடி என்ன சொல்றது? தமிழ்மணம் குழு ஒரு முன்னுதாரணம். ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டுமென்று நினைப்பவர்க்கு. இப்போதே ஏன் நன்றி சொல்ல வேண்டும்? அப்புறமா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கும் போது மைக்கைப்புடுங்கிட்டு போயிடுவாங்க! எனக்கும் மதி அவர்களுக்கும் பசிபிக் கடல் ஊடால இருந்தாலும் நான் அவங்க பேட்டையிலே விழறேன். அதுனாலதான் இந்த ஒளிப்பாய்ச்சல். என் இணைய வாழ்வில் நான் மதிக்கும் நல்ல மனிதர் அவர். மனுஷின்னு எதுக்கு இனம் பிரிக்கணும் (சில்மிஷம் ;-)? எப்போதும் தளராத ஆக்க சிந்தனை உள்ளவர். இந்தக் குறுகிய காலத்தில் நிறையத் தமிழுக்குச் செய்திருப்பவர். அவர் தொண்டு தொடரட்டும். பின்னூட்டம் வந்து எல்லோருக்கும் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது வந்து பதிவு செய்துவிட்டுப் போகிறேன். அது நல்ல பழக்கம்.

அருணா ஸ்ரீநிவாசன் வலைப்பதிவர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில precaution பற்றி திசைகளில் சொல்லியிருக்கிறார். வலைப்பதிவு உண்மையில் எவ்வளவு சுதந்திரமான ஊடகம் என்பது பற்றி நாம் மூளைப்பகிர்வு (brain stroming) செய்ய வேண்டும்.

சிங்கப்பூர் வலைப்பதிவர் ஒன்று கூடல் தொடர்ந்து நடக்கவேண்டும் (ததாஸ்து). அங்கு வானத்தை வளைக்கக்கூடியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நம்ம எல்லோருக்கும் பயனுள்ள காரியங்களைச் செய்யுங்கள்.

வலைஞர்களில் யாராவதொருவர், ஏன் ஒரு ஒலிக்குறி அகராதி தயார் பண்ணக்கூடாது? ஆங்கிலத்தைப் பாருங்க! அதுலே! எதை எப்படி பலுக்கனும்னு ஒலிக்குறிப்பு இருக்கு. நம்மட்ட அப்படியெல்லாம் அகராதி இல்லே! நான் ஒலிப்பதிவு செய்வது இது போன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கத்தான்.

இதேபோல், வெளிநாட்டில் வாழும் நம் குழந்தைகளுக்கான ஒரு வலைஞர் மையம் ஒன்று உருவாக்க வேண்டும். அதற்கும் நம் மையத்திற்கும் ஒரு கூட்டுறவு இருக்க வேண்டும். தமிழ் கூறும் நல்லுலகில் இருக்கும் அனைத்து தமிழ் வளங்களைச் சுட்டும் வலைப்பூவாக அது மலர வேண்டும். இது ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் இருக்கலாம். ஒரு முன்னுதாரணம் உள்ளது. வளர்த்தெடுங்கள். அது தமிழை மேம்படுத்தும்!

7 பின்னூட்டங்கள்:

Kangs(கங்கா) 3/03/2005 10:57:00 AM

//வலைஞர்களில் யாராவதொருவர், ஏன் ஒரு ஒலிக்குறி அகராதி தயார் பண்ணக்கூடாது? ஆங்கிலத்தைப் பாருங்க! அதுலே! எதை எப்படி பலுக்கனும்னு ஒலிக்குறிப்பு இருக்கு. நம்மட்ட அப்படியெல்லாம் அகராதி இல்லே! நான் ஒலிப்பதிவு செய்வது இது போன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கத்தான்//

கண்ணன் தமிழில் நல்ல அகராதி உள்ள ஒரு நிரலும் இல்லை. சில நிரல்கள் ஆங்கிலத்தில் பெற்று, ஆங்கிலத்திலேயே தமிழை சொல்லுகின்றன. முதலில் நல்ல அகராதி வேண்டும். அதன் பின் ஒலியுள்ள அகராதி மிக அவசியம்.
அது போன்ற ஒரு நிரலுக்கு மிகுந்த பொருள் தேவைப் படலாம். தமிழ்நாடு அரசு ஒரு ஊடகம் வெளியிடலாம். அரசுக்கு அது பெரிய சுமை இல்லை. ஆனால் தனிமனிதனுக்கு அது பெரும் சுமை. வியாபார நோக்கில் வெற்றி பெருவதும் இயலாது.

Thangamani 3/03/2005 11:13:00 AM

நல்ல பதிவு கண்ணன். இந்த பின்னூட்ட துஷ்பிரயோகிகளை ஒன்றும் செய்யமுடியாது. அதற்காக குழுமம் மாதிரி ஆவது வலைப்பதிவின் சுதந்திரத்தைப் பாதிக்குமோ எனத் தோன்றுகிறது. எனக்கு தமிழ்மணம் ஆரம்பித்தபோதே அது ஒரு குடையின் கீழ் வருவதுபோல தோன்றியது; பின்னால் அது எந்தவிதத்திலும் சுதந்திரத்தைப் பாதிக்கவில்லை. அதற்கு காசிதான் காரணம். ஆனால் வேறு மாதிரி ஆவதற்கும் வாய்ப்பு இருந்தது. அப்படியாகும் பட்சத்தில் இப்படி வளரவும் முடியாது என்பதும் உண்மை.

இப்போது திசைகள் வலைப்பதிவைப் பற்றி எழுதுவது தமிழ் வலைப்பதிவினை இன்னும் பரவலாக்கும். நானெல்லாம் திசைகளின் மூலமே வலைப்பதிவை அறிந்தவன். அப்புறம் பரிசு, பதக்கம் அதுஇதெல்ல்லம் இருக்கும், நமக்கு உடன்பாடில்லை என்றாலும்.

ambaran 3/03/2005 11:19:00 AM

என்ன கண்ண்ன் ஐயா
நீங்களே இப்படி கதைக்கலாமா
ஊடகத்தில் நாடகம் நடத்தும் வித்தகரே
உமது படைப்பு மட்டுமின்றி
உலகத்தோரின் படைப்புகலை மின் வலையில்
காண நீரல்லவோ ஓர் உபாயம் சொல்லவேண்டும்

Moorthi 3/03/2005 11:26:00 AM

தங்களின் முயற்சிகள் ஒவ்வொன்றும் தமிழரை, தமிழை வளர்க்கும் விதமாகவே அமைந்துள்ளன. உங்களின் ஆர்வத்தில் நானும் பங்கு கொள்கிறேன். பின்னூட்டம் பற்றி கருத்து சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது. ஏன் என்றால் பதிவாளர் பதில் சொல்ல மறுத்த காரணத்தால் நானே புனை பெயரில் கேள்வி எழுப்பி இருக்கிறேன். அப்படியும் பதில் சொல்லாதவர் உண்டு. கேட்பவன் கேனையனா இருந்தா... ன்னு ஒரு பழமொழி சொல்வார்கள். அந்த மாதிரி எழுத்தாளர் எழுதும் ஒவ்வொரு விசயத்தையும் ஆமாம் என்று நம்மால் ஒப்புக் கொள்ளமுடியாது. அதனை நாம் சுட்டிக் காட்டும்போது சரியாக இருந்தால் ஒப்புக் கொள்ள வேண்டியது பெருந்தன்மை. அதனை விடுத்து நீ என்ன சொல்வது என ஒன்றுமே சொல்லாமல் மௌனமாக இருந்த பல பதிவாளர்களை நான் பார்த்திருக்கிறேன். இன்னும் சிலர் இருக்கிறார்கள். தம் நண்பர்களின் பதிவில் மட்டும் சென்று பின்னூட்டுபவர்கள்! எனவே நாகரீகமான பின்னூட்டங்களை அனுமதிக்கும் விதமாக தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்டத் தகுந்தவை. உங்களின் தமிழார்வத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

மதி கந்தசாமி (Mathy) 3/03/2005 02:28:00 PM

two things kaNNan.

//நேத்து யாரோ 'lisa'-ங்கற பேரிலே வந்து மாத்திரை வித்திட்டுப்போனாங்க. ஆக, பின்னூட்டத்தில் இப்போது முகமூடிகள் (phantom) நுழைய ஆரம்பித்துவிட்டனர் :-)//

1. I read somewhere that google hasnt used the 'nofollow' in its comments. And since Google's comments are vulnerable to spams. Forgot where i read this. tried to google it. no luck. :(

From eweek:

//Spyware Snags Blogger Users

From eWeek:

Weblogs are spreading more than opinions and observations
across the Internet. Some are beginning to propagate malicious
software downloads that can alter browser settings, track
users and serve pop-up ads. Dozens of blogs hosted by Google
Inc.'s Blogger service can install programs that are widely
considered to be spyware and adware onto visitors' computers,
warn users and spyware researchers. In many cases, users are
discovering the offending sites as they browse among blogs
through Blogger's navigation bar. Find out more here:

http://ct.enews.pcmag.com/rd/cts?d=184-1536-3-58-231741-159503-0-0-0-1

//


2.

Chandravathanaa 3/03/2005 03:47:00 PM

கண்ணன்
உங்கள் பதிவுகளைத் தினமும் வாசிக்கிறேன்.
எல்லாவற்றையும் எந்தப் பிரச்சனையும் இன்றி வாசிக்க முடிகிறது.
ஜெயந்தி எனது வலைப்பதிவையும் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தா.
என்ன பிரச்சனையாக இருக்குமென யோசித்தேன்.
இப்போது பார்த்தால் பிரச்சனை ஜெயந்தியின் பக்கம் போலத் தெரிகிறது.

மதி கந்தசாமி (Mathy) 3/04/2005 12:11:00 AM

kaNNan,

you might want to install kasi's thamizmanam rating code.

http://www.thamizmanam.com/tmwiki/

this way, whenever somebody responds to your posts, we can see that in thamizmanam.