காசி கேட்கும் நன்கொடைகள்!

What's going on in thamizmaNam.com?

காசியோட கடிதத்தலைப்பைப் பாத்துட்டு நானும் எதாவது evangelism பண்ணலாம்ன்னு படிச்சேன். நீங்களும் படிங்க. அவர் இந்த மிகக்குறைந்த காலத்தில் நிறையக் கற்றுக்கொண்டு இன்னும் நிறுவனங்கள் கூடச் செய்யத சேவையை நமக்கு அளிச்சிக்கிட்டு இருக்காரு. நிறைய படிக்கிறார்ன்னு தெரியுதா. சும்மா ஒளிவீச்சு காட்டி எழுதற எங்களுக்கே இதுக்கு எடுத்துக்கற நேரத்தைக் கவனிச்சா மலைப்பா இருக்கு. அவர் இதற்காக எத்தனை இரவுகளைக் கரைத்திருப்பாரோ! எனவே முதல்லே இந்த 'நொள்ளு' சொல்லறதைக் குறைத்துக்கொள்வோம். 'நொள்ளு' எளிது. ஆனா செய்யும் திறன் எளிதல்ல. "இருப்பதை"க் கண்டு உடனே அபிப்பிராயம் சொல்லப்பழகிவிட்டோம். "இல்லை" எனில் எப்படி இருந்திருப்போம் என்று யாரும் யோசிக்கவில்லை போலும். தமிழ்மணம் இணைய உலகில் ஒரு புதிய பாட்டை போட்டுக் கொண்டு இருக்கிறது. புதிய வலைஞர் இலக்கியம் வளர வழிகோலிக்கொண்டிருக்கிறது. இந்தச் சேவை தொடர்ந்து நடக்க வேண்டுமெனில் நாம் அவருக்கு உதவவில்லையாயினும் உபத்திரவம் செய்யாமல் இருக்கக் கற்றுக்கொள்ளுதல் ஒரு தியாகம் என்று கூடச் சொல்லலாம். பாவம் மனிதர் நொந்து போயிருக்கிறார்.

சிங்கையில் கூட இது பற்றிப் பேசினோம். கள்ளவோட்டுப்போடுவதில் கைதேர்ந்த நமக்கு தமிழ் மணத்தில் தெரியும் விளம்பரங்களுகு ஒரு சொட்டுப் போடுவதுமொன்றும் பெரிய விஷயமில்லை. இப்போ பெரும்பாலும் சுப்ரபாதம் கூட கேட்காமல் காலை எழுந்ததும் தமிழ்மணத்திற்குத்தான் வருகிறார்கள். இதை ஒரு இலக்கியச்சோலையாக ஆக்கியிருக்கிறார். எனவே காலையிலே தினத்தந்தி படிப்பது போல் தமிழ்மணத்திற்கு வந்தவுடன் விளம்பரத்தில் ஒரு தட்டு தட்டும் பழக்கதை ஏற்படுத்திக்கொள்வோம். அதன் மூலம் சேகரிக்கப்படும் சல்லிக்காசு இந்த சேவை தொடர்ந்து நடைபெற வழிகோலும். அது மட்டுமல்ல ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு சின்ன நன்கொடை வழியைக் கண்டுபிடிக்கலாம். பெரும்பாலான அமெரிக்க தளங்களில் Paypal வழியாக எளிய முறையில் நன்கொடை வழங்க முடியும். காசி கூச்சப்படாமல் donation என்றொரு சுட்டி போட்டு Paypal account ஒன்றை உருவாக்கிவிடலாம்.

காசியின் சேவை கலைஞர்க்கும் சுவைஞர்க்கும் தேவை! ததாஸ்து! (இப்போ நிம்மதியா தூங்கப்போலாம்..குட் நைட்!)

2 பின்னூட்டங்கள்:

மதி கந்தசாமி (Mathy) 3/06/2005 01:49:00 AM

கண்ணன்,

காசி, ஜெயஸ்ர்க்கு சொல்லியிருப்பதைக் படிச்சீங்களான்னு தெரியலை. அவர் 'நன்கொடை'ன்னு பணம் கேட்கலை.

நமக்கு, அதாங்க தமிழர்களுக்கு செய்து பழக்கமில்லாத வேலைகளையல்லவா செய்யச் சொல்லிக் கேட்டிருக்கார். அந்த ஏழு பாயிண்டையும் உங்க பதிவில திருப்பிப் போட்டு, ஒவ்வொரு பாயிண்டையும் போடும்போது/படிக்கும்போது வலைப்பதிவர்கள் எல்லோரும் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கிட்டு அதற்கேற்றபடி நடந்தாப் போதும்.

காசி கேட்டுக்கொள்வதும் அதைத்தான்! பணத்தை விட மிக மிக அவசியமானது! நாம் செய்யச் சோம்பற்படுவது!

பணத்தைக் கொடுத்து அத்தோடு நம்ம வேலை முடிஞ்சது என்று எத்தனைநாள்தான் கையைத் தட்டித் துடைத்தபடி போய்க்கொண்டிருக்கப்போகிறோம்?

Kannan this response is for everybody(including me). Pls dont think that i am writing about you or any individual blogger/reader.

Disclaimers of this kind has become de facto. :(

//ஒரு கேள்வி கேட்கும் முன் கொஞ்சம் ஆழமாக படித்து, நாம் எதையாவது விட்டிருப்போமோ என்று ஒரு முறைக்கு இருமுறை சோதித்து, பின் கேட்கலாம்.
அப்படியே கேட்டாலும் பொதுவில் கேட்பதால் இதே கேள்வி மனதில் இருக்கும், அல்லது ஏற்கனவே கேட்டுவிட்ட, பலருக்கும் பதில் கிட்டுமே, என்று பொதுவில் கேட்கலாம்.

===

$50 000 0000 பெறுமதியுள்ள கூகிள் அளிக்கும் ப்ளாக்கர்.காம் சேவையின் ஓட்டைகள் எத்தனை? அந்த ஓட்டைகள் ஒவ்வொன்றுக்கும் கூகிளுக்கு எழுதிவிட்டு, கையோடு தமிழ்மணம் ஓட்டைகளை எனக்கு எழுதலாம்.

===

அதி உன்னதமான ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் தமிழ் ஒழுங்காகத் தெரிய வைக்கச் செய்ய மென்பொருள் வல்லமை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் வல்லமை உள்ளவர்களைக் கெஞ்சி வேலை வாங்க ஒரு பத்து ஓட்டு போட்டுவிட்டு, பிறகு வாசகர் பரிந்துரையில் 'கள்ள ஓட்டு நொள்ள ஓட்டு' கதை பேசலாம்.

===

மிகவும் அடிப்படையான, இங்கே 100 பேருக்காவது பதில் தெரிய வாய்ப்புள்ள கேள்விகளை 'மன்றம்' என்ற பெயரில் 'தண்ட'மாக நிற்கும் மேடையிலே கேட்கலாம்.

===

மன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நானே பதில் சொல்லணும் என்று எதிர்பார்க்காமல், பதில் சொல்வது என் ஒருவனின் பிறப்புரிமை என்றில்லாமல், தெரிந்தவர்கள் தங்கள் பொன்னான நேரத்தில் சிறு துளியை ஒதுக்கி, பதிலிறுக்கலாம்.

===

இன்னும் முதிர்ச்சியடையாத xml தொழில்நுட்பத்தில் இயங்கிவரும் வலைப்பதிவு/திரட்டு போன்றவற்றால் சில சமயம் பிழையான சேவை கிடைக்க வாய்ப்பிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். தமிழ்மணம் தளத்தின் முதல் வாடிக்கையாளர் நான். எனவே இந்தக் குறைகளைக் களைய இயன்ற விரைவில் முயன்றுகொண்டே இருக்கிறேன். எனவே ஓரிரு முறை அவதானித்த பின், குறை பெரியதாக இருந்தால் மட்டும், தொடர்ந்து நிகழ்வதாக இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டலாம். அதையும் பொதுவில் வைக்கலாம். தமிழ்மணம் நடவடிக்கையில் எதுவுமே திரை மறைவில் இல்லை.
//

நா.கண்ணன் 3/06/2005 10:43:00 AM

மதி:
நான் அவர் பணம் கேட்கிறார் என்ற தொணியில் எழுதவில்லையே! என் எழுத்தை இன்னும் எப்படிச் சீர் செய்வது என்று புரியவில்லை :-) பலருக்குப்புரிவதில்லை என்று தோன்றுகிறது :-(
இரண்டு விஷயங்கள் முக்கியமாகச் சொல்கிறார். ஒன்று தொழில்நுட்பம் சார்ந்தது. தொழில்முறை வல்லுநர்களுக்கு தங்கள் தொழில் நுணுக்கங்களைப் பொதுப்பாவனைக்குக் கொடுப்பது பணம் கொடுப்பது போல்தான். அவர்களுக்கு நேரம் என்பது பணம் எனும் விகிதத்தில் அமைகிறது. காசி, மதி போல் எல்லோராலும் தங்கள் தொழில் திறனை பொது நலனைப் பகிர்ந்து கொள்ளமுடியாது. அதற்கு தனி மனது வேண்டும்.
இரண்டாவது, இணையப்பண்பாடு குறித்தது. இது அவரவர் பின்புலம், அரசியல், தனிமனித விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது. உதாரணமாக, ராமச்சந்திரன் உஷா தளத்திலுள்ள பதிவிலுள்ள குறைகளை வேடிக்கையாகச் சுட்டிக் காட்டியிருந்தாலும் மிகவும் தொழில் ரீதியில் (highly professional) இயங்கும் இது போன்ற ஒரு தளத்தின் தரத்தை அது வெகுவாகவே பாதிக்கிறது. உஷா செய்வது கவன ஈர்ப்பு. ஆனால், அவர் காவு கொடுப்பது தமிழ்மணத்தை. இது உட்கார்ந்திருக்கும் மரத்தின் கிளையை வெட்டுவதற்கு ஒப்பானது. இணையத்தில் தொடர்ந்து trial and error என்ற முறையில் கற்றல் நடைபெறுகிறது. அவரும் மற்றவரும் கற்றுக்கொண்டிருப்பார்கள் என்றே நம்புவோம்.
கடைசியாக, there is no such thing as a free meal. பணம் முக்கியம். தொழில்முறையில் உதவமுடியாதவர்கள், அதற்கு நேரமில்லாதவர்கள் தங்கள் பங்களிப்பாக பணம் தர நினைப்பது தவறில்லை! இந்தப்பணம் சிலருக்கு பணம் கொடுத்து தேவையான சேவையைப் பெற்றுக்கொள்ள உதவலாம். தமிழ்மணம்.வணி என்று போட்டவுடனேயே இது வணிகத்தளம் என்றாகிவிடுகிறது. காசு கேட்பதில் தவறில்லை.