மகளிர்தின நினைவுகள்


Photo by N.Kannan

பிறந்தபோது வித்தியாசம் தெரியவில்லை. நீ பொண்ணாய் பிறந்தாயென்று உன் தந்தை மூக்கைத்தூக்கி வைத்துக்கொண்டு போனாராம். அம்மா சொல்லியிருக்கிறாள். அது அவர் பிழை என்ற அறிவியல் சொல்லும் திறம் அக்குக்கிராமத்தில் யாருக்குண்டு? நீ சிற்றாடை உடுத்தி மூக்கு வழிய இரண்டைச்சடையுடன் உலா வந்த காலத்தில் கூட நமக்குள் பேதமில்லை. பள்ளிமுடியும்வரை கூட இல்லைதான். ஆனாலும் என்றோ நீ பெண்ணாக்கப்பட்டாய். இத்தனை வருடங்களுக்குப்பின் உன்னை நான் கண்டபோது மகளிர்தினம். உன் பேத்தியுடன் வந்திருந்தாய். நான் வாழ்த்துச் சொன்னேன். உன் வெட்கம் இன்னும் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிரித்துக்கொண்டே பின் நீ சொன்னதுதான் இந்த நேரத்தில் நினைவில் கொள்ளவேண்டியது. அது இனி நமக்குள் தேவையில்லை, நீயும் நானும் ஒன்று என்றாய். அன்றுதான் மதுரைக்கு கூடல் நகர் என்ற பெயர் பொருத்தமாக இருந்தது.

4 பின்னூட்டங்கள்:

Thangamani 3/09/2005 12:23:00 PM

:)

Mookku Sundar 3/09/2005 01:12:00 PM

திரு.கண்ணன்,

குழந்தை பெண்ணாகப் பிறத்தல் அப்பாவின் குறையா..?? நானும் இதை பலை சொல்லக் கேட்டிருக்கிறேன். அறிவியல் பூர்வமாக விளக்கப்பட்டதா இது..??
கொஞ்சம் சொல்லமுடியுமா

நா.கண்ணன் 3/09/2005 02:50:00 PM

கருச்சேர்க்கையில் ஆனின் விந்துவே குழந்தையின் பால் நிர்ணயம் செய்கிறது. ஆண் விந்துவில் இருவகை மரபுத்திரிகளுண்டு. அதை எக்ஸ் (X)-குரோமோசோம்; ஒய் (Y)-குரோமோசோம் என்று சொல்லுவார்கள். பெண்ணின் கருவில் எக்ஸ் (X) மட்டுமே உண்டு. ஆனின் எக்ஸ்ஸும், பெண்ணின் எக்ஸும் சேரும் போது பெண் குழந்தை பிறக்கிறது. ஆனின் ஒய்யும் பெண்ணின் எக்ஸும் சேரும் போது ஆண் மகவு பிறக்கிறது. எனவே வீட்டில் பெண் பிறந்தால் உதைபடவேண்டியர் ஆண் மக்களே :-)

இளவஞ்சி 3/09/2005 04:17:00 PM

//அன்றுதான் மதுரைக்கு கூடல் நகர் என்ற பெயர் பொருத்தமாக இருந்தது//

ரொம்ப நல்லா இருக்கு.. :) கூடவே அந்த போட்டோவும்... இந்த வார சிரிப்புகள்...!