பேசாப்பொருள் பேசப்படுகிறது!

பேசாப்பொருள் பற்றிய கதைக்கு உதை கிடைக்கும் என்று எதிர்பார்த்துதான் எழுதினேன் :-)
யாரும் கவனீத்தீர்களாவென்று தெரியவில்லை, தலைப்பே ஒரு விவாதத்திற்கு இட்டுசெல்லும் உரலுக்கு இணைக்கப்பட்டிருந்தது! ஆம்! தீவிரமாக பெண்மொழி பற்றிய விவாதம் நடக்கும் போது என் கதை 'அபஸ்வரமாக' வந்திருக்கிறது :-)) நம்ம உஷா பிடிச்சுட்டாங்க. அவங்களுக்கு எப்போதுமே என்னோட சண்டை போடப்பிடிக்கும். நானும் 5 அக்காவுடன் பிறந்தவன். Sibling rivalry எனக்குப் புதிதல்ல :-)
நான் இந்த மாதிரி கதை எழுதினா அது எங்கேயுமே பிரசுரமாகாது, வலைஞர்கள் ரொம்ப matured-அப்படிங்கற தைர்யத்திலேதான் எழுதினேன். ஆனா, உஷா சொல்லறாங்க, நான் இலக்கிய பத்திரிக்கைக்கு அனுப்பிச்சா உடனே வெளியாகும்ன்னு. நான் நம்பலே :-)
ஆண் ருதுவாகும் கதையொன்றை முன்பு கணையாழிக்கு அனுப்பிச்சு திரும்ப வந்துடுச்சு. தமிழ்நாட்டில் நான் வாழ்ந்தவரை அச்சம், மடம், நாணம் என்பது இருபாலர்க்கும் பொதுவே. மத்திமர் ஆண்கள் பெண்களைவிடக் கூச்சமானவர்கள். இங்கு வந்து பார்த்தால் ஆசியா முழுவதும் ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். மத்திமர் உலகம் ஒரு பாசாங்குத்தனமான உலகம் என்று தெரிகிறது!
இரண்டாவது, என்னைய கே.பி யோட ஒப்பு நோக்கி என்னை ரொம்ப கேவலப்படுத்திட்டாங்க :-)) விபச்சாரம் பற்றி கே.பி படம் எடுத்திருக்கார்தான். ஆனா, அவரு ரொம்பக்கோழையான மத்திமர். பாரதிராஜாட்ட இருக்கிற தைர்யம்கூடக் கிடையாது. எல்லாத்திலேயும் கதாநாயகியைக் கொன்னுடுவாறு! சாவு ஒரு தீர்பு என்று சொல்லமுடியாது. ஒரு முடிவிற்கான சாக்கு. அவ்வளவுதான்.
நம்ம கதாநாயகி மெண்ட்டல்ன்னு சொல்லிட்டாங்க :-) நமக்கு எல்லாப் பெண்களையும் தெரியுதா என்ன? அவங்க மனசுலே என்ன ஓடறதுன்னு? பெண்களைப் பொதுமைப்படுத்தமுடியுமா? சமூக விழுமியங்கள் ஒரு பெண்ணை 'தற்காத்துக்கொள்ள' உதவுவது உண்மைதான். ஆனால், விழுமியங்களே பெண்ணல்ல. அவளுக்கு பல ஆசைகள் இருக்கலாம். அதை வெளிக்காட்டவும் முயலலாம். மத்திமர் போட்ட சட்ட திட்டங்களில் இவையெல்லாம் பேசக்கூடாத பொருள்கள். ஒரு சங்கப் பெண்ணிற்கு இருந்த சுதந்திரம் கூட செமத்திய விழுமியங்களைத் தாங்கி நிற்கும் தற்காலத்தமிழ் பெண்ணிற்கு இல்லை என்று சொல்வேன்.
கர்பமாகிவிடும் பயம் என்பது உண்மைதான். ஆனால் கர்ப்பம் இப்போது இன்பம் சுகிக்க ஒரு தடையே இல்லை. அதற்கு பயந்து கொண்டு ஒரு பெண் சுகிக்காமல் இருப்பாள் என்று நம்பமுடியவில்லை. உஷாவின் கடிதத்தில் தொக்கலாக ஆண்களே சுகிக்கிறார்கள் என்பது போன்ற ஒரு தொனி இருக்கிறது. இருவர் இயைந்ததுதானே சுகம்? அதுதானே தாம்பத்யம்.
கதாநாயகியை சுகித்துவிட்டு அவன் போய்விடுகிறான், அவள்தானே கர்பத்தை 10 மாதம் சுமக்க வேண்டும் என்பதுதான் பாலச்சந்தர் பாணி நோக்கு. கதாநாயகி அப்படி எண்ணுகிறாள். அவ்வளவுதான்! அப்படித்தான் நடக்க வேண்டுமென்றில்லை. தொட்டவுடன் கர்பமாதல் எல்லாம் சினிமாவிற்குத்தான் பொருந்தும். மழலைப் பேறு இல்லையென்று ஏங்கும் ஆயிரம் தம்பதியர் இன்றும் உள்ளனர்! மும்பாயில் ஒரு gynecology conference-ல் மாட்டிக்கொண்ட அனுபவம் உள்ளது. அதுதான் எவ்வளவு லாபகரமான தொழில். செயற்கைமுறை கருத்தரித்தல் பெரிய ஆய்வு.
நம்ம சந்திரவதனாவும் பின்னூட்டம் தந்துள்ளார்கள். மிக நாசுக்காகவே பேசவேண்டுமென்று நாமே ஒரு உரைநடை வரைமுறை வைத்துக் கொண்டுள்ளோம். அது இருபதாம் நூற்றாண்டு இலக்கணம் என்று தோன்றுகிறது. ஒரு ஆண்டாளுக்கு இருக்கும் தைர்யம் கூட ஒரு வளர்ந்த ஆணின் உரைநடையில் வரக்கூடாது என்று பார்த்துக்கொள்கிறோம். ஈடு வியாக்கியானம் திருவரங்கம் கோயிலில் நடக்கிறது. அவர்கள் பேசும் 'பெரியவர் பேச்சு' (adult talk) இன்று நோக்கும் போது ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. நம்மால் தமிழில் உண்மையிலேயே ஒரு adult literature எழுதவே முடியாது என்று தோன்றுகிறது. ஆங்கிலத்தில் இக்கதையை வாசித்தால் இப்படித் தோணுமா? தமிழ் விடலை மொழியா?
தமிழ்நாடு ஆபாசத்தில்தான் வாழ்கிறது. அந்த ஆபாசங்கள் குழந்தைகளை வெகுவாக பாதிக்கின்றன. இக்கதை நாயகியும் அதற்குப் பலியே. அறியாப்பருவத்தில் ஏற்படும் அனுபவங்களின் சுவடுகள் அழிந்திருக்கும், ஆனால் அதன் பாதிப்பு வாழ்நாள் பூரா இருந்து கொண்டிருக்கும். இக்கதை அது பற்றியும் பேசுகிறது!
மேலும் உடல் என்பதுதான் பெண்ணா? அவளுக்கு வேறு அடையாளங்கள் கிடையாதா? பெண் மொழியில் உடல் பற்றி வரக்கூடாதா? சுகிக்கப்படுபவள் பெண் என்று சொல்வதே அபத்தமாகப்படுகிறது. சுகித்தல் இருவருக்கும் பொது. அவள் என்றும் நுகர்பொருளாக முடியாது, அவள் விரும்பினால் ஒழிய!
இந்த உடல் பற்றிய எண்ணங்களை இன்னொருமுறை தரிசிக்க வருவேன். இப்போதைக்கு இது.

23 பின்னூட்டங்கள்:

பாலு மணிமாறன் 3/03/2005 05:23:00 PM

கற்பு மட்டுமல்ல ( கற்பு என்பது பெண்களை ஏமாற்ற ஆண்கள் செய்த கற்பனை என்று எப்போதோ கமல்ஹாசன் சொன்னது ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது ) - சுகித்தல் என்பதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சங்கதிதான். அதற்கான பொறுப்பை ஆண்கள் தலையிலோ, அல்லது பெண்கள் தலையிலோ மட்டும் கட்டி விட்டு தப்பிப்பவர்கள் - நீங்க சொன்ன மாதிரி கோழைகள்தான்!

பாலு மணிமாறன் 3/03/2005 05:23:00 PM

கற்பு மட்டுமல்ல ( கற்பு என்பது பெண்களை ஏமாற்ற ஆண்கள் செய்த கற்பனை என்று எப்போதோ கமல்ஹாசன் சொன்னது ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது ) - சுகித்தல் என்பதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சங்கதிதான். அதற்கான பொறுப்பை ஆண்கள் தலையிலோ, அல்லது பெண்கள் தலையிலோ மட்டும் கட்டி விட்டு தப்பிப்பவர்கள் - நீங்க சொன்ன மாதிரி கோழைகள்தான்!

Thangamani 3/03/2005 06:40:00 PM
This comment has been removed by a blog administrator.
Thangamani 3/03/2005 07:24:00 PM

என்னுடைய பதிவிலேயே இருக்கட்டுமென, அது இங்கு

http://ntmani.blogspot.com/2005/03/blog-post_03.html

மதி கந்தசாமி (Mathy) 3/04/2005 12:00:00 AM

முதலில் அதிர்ச்சிகரமாக இருக்கவேண்டும் என்று கதையின் முன்பாதியில் மினக்கெட்டிருப்பதுபோலத் தெரிகிறது. ஆனால், அதிர்ச்சிகரமாக இருக்கிறதோ இல்லையோ நம்பும்படி இல்லை. வார்த்தைகளைக் கொஞ்சம் செப்பனிட்டிருக்கலாம்.

ஆனால், நான் இங்கே சொல்ல வந்தது அதைப்பற்றியல்ல. உங்கள் கதையின் கடைசி இருவரிகள்.

//இந்த மனுஷரோட குழந்தை என் கலப்பில் எப்படி இருக்கும்? நினைக்க சுகமாக இருந்தது.//

Ridiculous!

அப்படியில்லை. எனக்குத் தோன்றியது. இன்பமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அப்படியே செய்யும் பெண், அதற்குப் பிறகு அவர் சாயலில்/இவர் சாயலில் குழந்தை என்று நினைத்ததுதான் அபத்தமாக இருந்தது. இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் நினைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. வேண்டுமென்றால் நம் தமிழ்ப்படக் கதாநாயகிகள்/தமிழ் இலக்கியத்தில் வரும் பெண்கள் நினைக்கலாம். நிஜவுலகம் அப்படியெல்லாம் இல்லை. வசதிவாய்ப்புகள் அதிகமாக இருக்கும் நாடுகளில் பிறப்புவிகிதம் குறைந்துகொண்டே வருவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? பெண்கள் தங்களுடைய சுகங்களை இழக்கத் தயாராக இல்லை. இதனால் பல நாடுகள் அவர்களுடைய சட்டதிட்டங்களை மாற்றி பல சலுகைகளை அறிவித்தபடி இருக்கிறார்கள். அப்படியாவது பிறப்புவிகிதம் அதிகரிக்காதா என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படியெல்லாம் இருக்கும்போது ஒரு முறை இப்படிப் போய்விட்டு அதனால் அவஸ்தைப்பட எந்தப் பெண்ணும் ஆசைப்படுவாள் என்று தோன்றவில்லை. பாலச்சந்தரின் படநாயகி செய்யலாம். அவர்தான் இந்தமாதிரி அபத்தமாக எதையாவது யோசித்து அதைப் பெண்விடுதலை என்று உளறுவார். ஆண்களின் பார்வையில் பெண்விடுதலை என்பது skewedஆகவே இருக்கிறது.

உங்கள் கதையைப்பற்றிக் கொஞ்சம் விரிவாக:

ஏதோ வித்தியாசமாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள். ஆனால், நடைமுறையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைக்கிறீர்களா? பெண்கள் ஜாக்கிரதையுணர்வு கொண்டவர்கள்(பெரும்பாலும்). அப்படியிருக்கையில், ஒரு புரோக்கர் வழியாகப் போவாளா? அதுவும் கடைசியில் யார் என்ற தேர்வு கூட அவளது கையில் இல்லை. உங்களுடைய கதையின் நாயகி அப்படிப்பட்டவளாக இல்லையே. நீங்க சமீபத்தில் சிங்கைக்குச் சென்றுவந்தது தெரிந்ததாலோ என்னமோ, இந்தக் கதையை ஆரம்பத்திலிருந்தே சிங்கைப்பின்னணியில் வைத்துத்தான் படித்தேன். அப்படி சிங்கையில் நடந்ததாகவே வைத்துக்கொண்டால், அந்தப் பெண்ணிற்கு இடமா இல்லை? அப்படி ஒரு புரோக்கரின் பின் போவதற்கு. அந்த புரோக்கர் அதற்குப்பின் தொந்தரவு செய்யக்கூடாது என்று போலிஸ் துறையில் இருக்கும் அண்ணனைச் சொல்லி மிரட்டுகிறாளாம். அபத்தம்! அதுவும் அதைக்கேட்டு பயந்துபோற புரோக்கர். :shaking head:

நான் மரப்பசு படிச்சதில்லை. நீங்களும் தங்கமணியும் மற்றவர்களும் பேசிக்கொள்வதைப் பார்க்கையில் அதில் வரும் நாயகி இதுபோன்றவள் என்று எண்ணவைக்கிறது. ஐம்பதுகள் அறுபதுகளில் வரும் கதை நாயகிகளை இருபத்தியோராம் நூற்றாண்டுக்குக் கொண்டுவந்து ரெண்டும் கெட்டானாக்கி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்போதை நவநாகரீக(???) சென்னையிலேயே பெண்கள் "முன்னேற்றமாக" நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை ஒரு சில இந்தியா டுடே இதழ்கள் சொல்கின்றன. "முன்னேற்றம்"- அப்படி நினைத்துக்கொண்டு பாழும் கிணற்றில் விழுவது. நான் Modernஆக்கும் என்று நினைத்து அதை ஆண்களின் பார்வையில் அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்றபடி நடந்து prove பண்ண நினைக்கும் பெண்களில் உங்கள் நாயகியும் ஒருத்தியாக இருக்கிறாள்.

//சட்! காண்டோம் போட்டுக்கோ என்று சொல்லத் தோணவில்லையே! இப்போ ரொம்ப லேட்!//

Hmm... dont tell me that your "modern" woman is unaware of the technical and medical growth in that dept.

One reason, I hesitate to write responses to such posts is because whatever said and done our society, Men in General dont have broad outlook. For them, when a woman talks these things, she is sure 'tainted'. She is not a "good" woman. I am not talking abt the woman poets and the troubles they face. And how some inteligent women use it to market their padaippuhaL. Even if women are able to talk about all these things with friends(males included), the internet community hasnt grown that much I think.

மதி கந்தசாமி (Mathy) 3/04/2005 12:06:00 AM

//கதாநாயகி அப்படி எண்ணுகிறாள்//

இதுதான் கதையின் இருக்கும் மிகப்பெரிய வீக் பாயிண்ட்.

//மேலும் உடல் என்பதுதான் பெண்ணா? அவளுக்கு வேறு அடையாளங்கள் கிடையாதா? பெண் மொழியில் உடல் பற்றி வரக்கூடாதா? சுகிக்கப்படுபவள் பெண் என்று சொல்வதே அபத்தமாகப்படுகிறது. சுகித்தல் இருவருக்கும் பொது. அவள் என்றும் நுகர்பொருளாக முடியாது, அவள் விரும்பினால் ஒழிய!
//

«ôÀʦÂýÈ¡ø ¸¨¾Â¢ø ¿£í¸û ±Ø¾¢Â¢ÕôÀÐ ¦¾Ç¢Å¡¸ þø¨Ä. ¿£í¸û ±Ø¾¢Â¢ÕôÀÐ ¾ð¨¼Â¡¸ ¦Àñ ´Õ §À¡¸ô¦À¡Õû ±ýÈ ÅÊÅ¢§Ä§Â þÕ츢ÈÐ. «ÅÃźÃÁ¡¸ ±Ø¾¢Â¢ÕôÀ£÷¸û §À¡Ä.

þó¾ì ¸¡Äò¾¢ø þôÀÊî Íò¾ò ¾Á¢Æ¢ø §ÀÍõ ¿¢¨ÉìÌõ ¦Àñ¨½Ôõ ¸¡ðÎí¸û. :)

Thangamani 3/04/2005 03:54:00 AM

கண்ணன் எழுதியது கொஞ்சம் செயற்கையாக இருந்தது என்பத்தைத்தான், நான் தி.ஜாதான் வெற்றி பெற்றார் என்று போன பதிவின் பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கிறேன். நான் கண்ணனை இதை எழுத முனைந்தற்காகவே பாராட்டுகிறேன். நான் எழுதியதும், தி.ஜாவினுடையதை முன் வைத்ததும் சுத்தமாக உடம்பு பற்றிய மனிதனின் கற்பிதங்களின் அடியில் எவ்வாறு அது நசுங்கிக் கிடக்கிறது என்பதைப் பற்றி; உடம்பை முற்றிலுமாக சுதந்திரமாக்குவது பற்றி. அது உடம்பை எப்படி smart -ஆக பயன்படுத்துவது என்பதைப்பற்றியல்ல. உடம்பை அப்படி smart- ஆக பயன் படுத்துவதற்கு சில வசதிகளும், சில சமூகச்சூழகளும் இப்போது ஏற்பட்டிருப்பது உண்மைதான், ஆனால் அவையும் உடம்பைப்பற்றி கண்டிப்பின் அடிப்படையிலேயே பிறந்தவை.

மதி, இதை இங்கு இப்படி விரித்து எழுதுவதற்கு ஒரே காரணம் என்னை நியாயப்படுத்திக்கொள்ள அல்ல; தி.ஜானக்கிராமனை என்னுடைய வார்த்தைகளில் இருந்து காப்பாற்ற. :) நீங்கள் அவரை நேரடியாகவே படியுங்கள். அவரின் எல்லா புத்தகங்களையும் படியுங்கள். மரப்பசு படிக்காவிட்டால் அதை அம்மா வந்தாளையும், மோகமுள்ளையும், அன்பே ஆரமுதேயையும் படித்துவிட்டு, ஏன் கடைசியாகப் படியுங்கள்.

பெண் விடுதலை என்பது ஆண் ஏற்படுத்திய கருத்தாக்கங்களில் இருந்து விடுபடுதல்; அது சில வேலைகளைச் செய்ய, சில வசதிகளைச் செய்வதோடு முடிவடைந்து விடாது. ஆண் உண்டாக்கிய உடம்பு பற்றிய கருத்தாக்கம் மிக நொய்மையானது, நோய்க்குறியீடு கொண்டது. அது அடிப்படையிலேயே குற்ற உணர்ச்சி கொண்டது. அம்மாவைப் போற்றுவதும், மனைவியை எரிப்பது அதனால் தான் முடியும்; கூட்டம் கூட்டமாக பாலியல் வன்முறை செய்வது இன்பத்துக்காக என்றா?

மனிதனின் வன்முறையெல்லாம் அவன் தலையில் இருந்தா வருகிறது?

சிலர் உடம்பைக்கொண்டாடுதலை திட்டமிட்டு செய்கிறார்கள்; அதுவும் மனதில் இருந்து வருவதுதான். உடம்பை விடுவித்தால் போதும்; அது மனதைவிட நுட்பமானது, தன்னைக் கொண்டாடிக்க்கொள்வது எப்படி என்பதை அது அறியும். மனதின் வழிகள் அதற்குத்தேவையில்லை.

நன்றி!

மதி கந்தசாமி (Mathy) 3/04/2005 04:09:00 AM

//சிலர் உடம்பைக்கொண்டாடுதலை திட்டமிட்டு செய்கிறார்கள்; அதுவும் மனதில் இருந்து வருவதுதான். உடம்பை விடுவித்தால் போதும்; அது மனதைவிட நுட்பமானது, தன்னைக் கொண்டாடிக்க்கொள்வது எப்படி என்பதை அது அறியும். மனதின் வழிகள் அதற்குத்தேவையில்லை.//

very true Thangamani

Mookku Sundar 3/04/2005 04:28:00 AM

தங்கமணி , உங்கள் விளக்கத்துக்கு நன்றி. "தி.ஜா தான் ஜெயித்தார் என்பதை கண்ணண் இப்படி தவறாய் புரிந்து கொண்டாரே என்று நான் கூட நினைத்தேன்.

பொதுவாக தி.ஜா/ பாலகுமாரன் கதைகளில் சொல்லப்படும் விஷயங்கள் கண்ணன் எழுதுவதை ஒட்டி இருந்தாலும், இவ்வளவு அப்பட்டமாக இருக்காது. அப்படியே இருந்தாலும் அதற்கான பின்புலங்கள் அந்தப் பாத்திரத்தின் குணநலத்தோடு சேர்ந்து ஒழுங்காக நிறுவப்பட்டிருக்கும். அதனால்தான் பாரில் தெருக்களில் நின்று அழைக்கும் அம்மிணியும், கோவிலிலி தஷ்ணாமூர்த்தியிடம் " இன்னைகாவது எவனையாவது அனுப்பிவிடு" என்று வேண்டிக்கொள்ளும் பெண்ணும் எந்த எதிர் உணர்வையும் எழ்ச்செய்யவில்லை.

இந்தக் கதையில் எந்தப் புரட்சியும், புடங்காயும் இல்லை. அப்பட்டமாக எழுதிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும், காரணமில்லாத ஒரு கிளர்ச்சிக்கு பாரதியை துணைக்கழைத்துக் கொண்டு, வந்தவரின் உடல் வாடையை அசை போட்டுக் கொண்டு படுத்திருக்கும் ஒரு நொய்மையான மனதுக்காரியும்தான் தெரிகிறாள்.

இதில் குறிப்பிடும் பெண் சித்திரம் இந்த காலகட்டத்துக்கானது அல்ல. அப்படியே இருந்தாலும் அந்தப் பெண் ஒரு மியூஸியம் வெரைட்டி தான்.

வீட்டை, குழந்தைகளை, கனவணை, பணியிடத்தை, உலகை பெண்கள் வழிநடத்தி ஆளும் பெண்கள் காலமிது. எதுவுமே அவர்களின் தெளிவான தெரிவுகளுக்குப் பின்னே நடக்கிறது.

பெண்ணை பலமில்லாதவளாக, நொய்மையானவளாக, கம்பீரபுருஷனின் இந்திரியத்துக்கு ஏங்குபவளாக காட்டுவது
1940-50 களின் வக்கிர மிச்சங்கள்.

Thangamani 3/04/2005 06:28:00 AM

மூக்கன், பாலகுமாரனை தி.ஜாவின் அருகில் வைப்பது எனக்கு உவப்பானதல்ல. பாலகுமாரன் நிச்சயமாக தி.ஜாவால் பாதிக்கப்பட்டவர். ஆனால் பாலகுமாரன் நான் குறிப்பிட முனைகிற உடலை வெறுக்கும் தத்துவத்திற்கு பலியானவர். அவர் அதை மறுக்கலாம், ஆனால் அவர் இருக்கும் இடம் (உங்களுடைய ஒரு பழைய கவிதையை நான் படித்த பொழுது, இதுபற்றி உங்களுக்கு எழுத நினைத்து ஆரம்பித்தேன். பின் நேரமின்மையால் செய்யவில்லை) அதை நிரூபிக்கும். அவரது உடலைக் கடப்பதாக பேர் பண்ணும் மனதின் தந்திரம். அது கிடக்கட்டும்.

//வீட்டை, குழந்தைகளை, கனவணை, பணியிடத்தை, உலகை பெண்கள் வழிநடத்தி ஆளும் பெண்கள் காலமிது. எதுவுமே அவர்களின் தெளிவான தெரிவுகளுக்குப் பின்னே நடக்கிறது.//

இதுவும் கூட எனக்கு ஆண் வழிச்சிந்தனையின் வழி, அவர்கள் சுட்டுவிரல் நீட்டிய சிகரங்களாகவே தெரிகிறது. இந்தத் தெரிவுகளுக்குப் பின்னும், இந்த வெற்றிகளுக்கு அடியிலும் ஆண்மனத்தின் அங்கீகாரமே இருக்கிறது; அதனாலேயே ஆதிக்க ஆண்மனம் பறித்த வெற்றிகளைப் பறிக்கவே விழையும் தன்மையினைப் பார்க்கிறேன். என்னால் இந்திரா காந்தியையோ, ஜெ வையோ, தாட்சரையோ உண்மையான பெண்களின் வெற்றிபெற்ற வடிவமாகப் பார்க்கமுடிவதில்லை. ஆணாதிக்க உலகில் அவர்கள் ஆண்களின் (மனப்பான்மை) வழிச்சுவடில் இன்னும் இறுகிய ஆண்தண்மையோடு இருந்ததனால் ஆண் மனம் கற்பித்த வெற்றிகளின் உச்சிகளை அடைந்தவர்களாகவே பார்க்கிறேன். அதனால் தான் இத்தனை எளிதாக அவர்கள் காலடியில் இந்த பெரிய மீசை வைத்த ஆண்கள் விழுகிறார்கள். அவர்கள் விழுந்து பணிவது அவர்களையும் விட பெரிய மீசை வைத்த ஆணிடமே.

இதுவும் மாறும். அப்போது இந்த வெற்றிகள் என்ற அருவருக்கத்தக்க பண்டம் இருக்காது. மண்டையோடுகளின் குவியல் மீது யாரும் அமர்ந்திருக்கமாட்டார்கள். பூக்கடைகள் இருக்காது. இருளோடிய கோயில் கர்ப்பகிரகங்களில் அம்மன்கள் இருக்கமாட்டார்கள். துறவிகளும், அனாதைக் குழந்தைகளும் இருக்கமாட்டார்கள். விளையாட்டுபோட்டிகள் என்ற irony இருக்காது; விளையாட்டு (playfulness) இருக்கும். மனிதர்கள் ஆயுதங்களையும், தோட்டாக்களையும் இன்னொரு மனித உடலில் சொருகவேண்டிய அவசியமின்றி இருப்பர். அன்பைப்பற்றி யாரும் பேசிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

இதுவும் ஒரு கனவுதான்..ஆனால் நடக்கும் என்று நான் நம்புகிற கனவு.

Mookku Sundar 3/04/2005 07:17:00 AM

//இதுவும் கூட எனக்கு ஆண் வழிச்சிந்தனையின் வழி, அவர்கள் சுட்டுவிரல் நீட்டிய சிகரங்களாகவே தெரிகிறது. இந்தத் தெரிவுகளுக்குப் பின்னும், இந்த வெற்றிகளுக்கு அடியிலும் ஆண்மனத்தின் அங்கீகாரமே இருக்கிறது;//

முதன்முதலில் Windows NT அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஏற்கனவே NOS மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருந்த Novell உடன் ஒத்திசைந்து செயல்படும் அளவிற்கு அதில் பல வசதிகளிருந்தன. காலப்போக்கில், windows NT யின் பங்கு பெருகி, Netweare servers கிட்டததட்ட அருகிப்போன பிறகு, விண்டோஸ் வழங்கிகளுடன் இணைந்து பணி புரியும் அளவுக்கு நொவெல் வழங்கிகளில் வசதிகள் வந்தன. அதிகாரப் பரவல் என்பது எனக்கு கவிழ்த்து கவிழ்த்து காட்டப்படும் roman clock ஐ நினைவுபடுத்துகிரது. எங்காவது அதிகாரம் காலப்போக்கில் அதிகமாவதும், அது மறுபக்கத்தை நோக்கி பாய்வதும் காலத்தின் சுழற்சி.
ஆணின் அங்கீகார மனம் ஆணாதிக்க மிச்சமே என்றுஇ நீங்கள் சொல்வதை இந்த Transition period ன் குறியீடாகவே பார்க்கிறேன்.

உங்கள் கனவுகள் அழகானவை. ஆனால் நிஜவாழ்க்கையிலிருந்து தற்போதைக்கு வெகு தொலைவில் உள்ளவை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

பாலகுமாரனை தி.ஜாவுக்கு அருகே வைக்கவில்லை. நான் படித்தவர்களில் இருவர் எடுத்துக் கொள்ளும் களமும் ஒற்றுமை உள்ளவை என்று சொல்ல வந்தேன். ( கல்யாண முருங்கை - படித்துருக்கிறீர்களா..?!! )

Mookku Sundar 3/04/2005 07:19:00 AM

தங்கமணி,

என் கவிதைக்கான எதிர்வினையையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.( நேரமிருக்கும்போது..)

நன்றி.

ஜெயந்தி சங்கர் 3/04/2005 09:07:00 AM

//பெண்கள் சட்டென்று வந்த ஒரு அதிர்வில் தடுமாறுவார்கள்.
அழகில் வசீகரத்தில் தம்மை மறந்து தடம் புரள்வார்கள்.
அன்பின் தொடுகையென நினைத்து ஏமாந்து போவார்கள்.
பலாத்காரத்துக்குப் பலியாவார்கள்.
ஆனால் இப்படி அலைய மாட்டார்கள்.
கதையில் ஆபாசமும் சற்றுக் கூடி விட்டது போலவே எனக்குப் படுகிறது.//

எனக்கு இதில் முற்றிலும் உடன்பாடு உண்டு.

எந்த ஒரு பெண்ணும் இவ்வளவு கீழ்த்தரமாகப் போகவே மாட்டாள். கதையில் ஓடைகள் இருக்கலாம், ஆனால், கதையே ஓட்டையாகிப்போனது தான் இங்கே நிகழ்ந்திருப்பது.

கத்திமேல் நடக்கக்கூடியது இவ்வகைக் கருக்கள். இதுபோன்றவற்றை எழுதும்போது மட்டுமில்லாமல் அதற்குமுன்பே பாத்திரங்கள், களம், அவைபேசும் வார்த்தைகள் ஆகியவற்றை சேர்த்தும் பிரித்தும்,.. மீண்டும் சேர்த்து பிரித்து என்று மற்ற கதைகளைக்காட்டிலும் மெனக்கெடுவேண்டும். மனதிற்குள்ளேயே எழுதிப்பார்க்கவேண்டும்.

அதிகமான கவனத்தை ஈர்க்கவென்றோ, இல்லை சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு அதற்காகக் கதை உருவாக்க நினைக்கும் போதோ ஏற்படும் பிரசனை தான் இந்தக்கதைக்கும் நேஎர்ந்திருக்கிறது.

'rain' என்ற சொல்லே இல்லாமல் மழையைப்பற்றிச் சொல்லும் படைப்பு உண்டென்று படித்ததுண்டு. அந்தப்படைப்பை இன்னமும் படிக்கவில்லை.

அதுபோல சொல்லும் விஷயத்தை இவ்வளவு அப்பட்டமாக வார்த்தைகள் கொண்டு சொல்லும் போது ஆபாசம் மிகுந்துவிடவே செய்யும்.

மதியின் வாதங்களிலும் மிகுந்த நியாயம் உண்டு. என்னுடைய கருத்தோடு ஏறத்தாழ ஒத்துப்போகிறது. நான் எழுத நினைத்ததில் முக்கால்வாசி அவரே எழுதிவிட்டதால்,.. எனக்கு வேலை குறைந்துவிட்டது,..


மிகவும் மன்னிக்கவேண்டும் கண்ணன்,.. இந்தக் கதையின் அஸ்திவாரம், கட்டுமானம், பூச்சு எதுவுமே சரியாக வரவில்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

anbudan, ஜெ

ooviyam 3/04/2005 09:35:00 AM

¡Ãí§¸!
þ§¾¡ Åó§¾ý ÁýÉ¡!
þýÚ ¿õ ¿¡ðÊø ±ýÉô ÒШÁ?
«Ð ÅóÐ ÁýÉ¡....
õõõ .. ±ýÉ þØ츢ȣ÷¸û?
´Õ º÷Ìâ ¸¨¾...
¡¨Ã ÀüÈ¢ ±ýÚ ±ÁìÌô ÒâóРŢð¼Ð.«¨¾ô ÀüÈ¢ Å¢Ç츦ÁøÄ¡õ §¾¨Å¢ø¨Ä «¾¢ø Ò¾¢¾¡¸ ±ýÉ À¢ÃÉ?
«¾¢ø ¾ýÉ¢¼õ ÅÕõ Å¡Ê쨸¡ÇÉ¢¼õ ÁÂí¸¢ «Åý À¢û¨ÇÂô ¦ÀÈÄ¡Á¡ ±ýÚ «ó¾ô ¦Àñ §Â¡º¢ôÀ¾¡¸
´Õ ¸¨¾.
«¾É¡ø ±ýÉ? ¾¡ý Å¢ÕõÒõ ¬ñ ãÄõ ´Õ ÌÆó¨¾ ¦ÀüÚì ¦¸¡ûÅÐ «ó¾ô ¦Àñ½¢ý Å¢ÕôÀõ¾¡§É!
ÁýÉ¡! ¿£í¸ þùÅÇ× ÒШÁ Å¢ÕõÀ¢ò ¦¾Ã¢Â¡Áø §À¡öÅ¢ð¼Ð. þÕó¾¡Öõ ¸¨¾ ±Ø¾ôÀð¼ Å¢¾õ...
±ø§Ä¡Õõ ¦ºöÔõ Å¢„Âí¸¨Çô ÀüÈ¢ô §Àº¢É¡§Ä¡ ±Ø¾¢É¡§Ä¡ ±ø§Ä¡ÕìÌõ ´Õ À¾ð¼õ ÅÕÅÐ ²ý ±ýÀо¡ý ÒâÂÅ¢ø¨Ä.
¡÷ §ÅñÎÁ¡É¡Öõ ±¨¾ô ÀüÈ¢ §ÅñÎÁ¡É¡Öõ ±Ø¾Ä¡õ ±ýÈ Í¾ó¾¢Ãò¨¾ ÓبÁ¡¸ô ÀÂýÀÎò¾¢¦¸¡ñÎ ±¨¾ §ÅñÎÁ¡É¡Öõ ±ôÀÊ §ÅñÎÁ¡É¡Öõ ±Ø¾Ä¡õ ±ýÈ §À¡ì¸¢É¡ø ¿Å£É þÄ츢Âí¸¨Çô ÀÊôÀ¾üÌ ÓýÉ¡ø «ì¸õ Àì¸õ À¡÷ì¸ §ÅñÊ¢Õ츢ÈÐ.
¦¾¡¨Ä¸¡ðº¢¨Â ÌÎõÀò§¾¡Î ¯ð¸¡÷óÐô À¡÷츢ȣ÷¸û! «ôÒÈõ ±ýÉ?
ºÃ¢ ÁýÉ¡! þô§À¡Ð þ¾üÌò ¾£÷×¾¡ý ±ýÉ?
ºÃ¢ ºÃ¢ «ó¾ ¿ðºò¾¢Ã ±Øò¾¡ÇÕìÌì Üξġ¸ þýÛõ ´Õ ¿ðºò¾¢Ãõ ¦¸¡ÎòÐ «Å÷ ¸½¢É¢Â¢ý Å¢¨ºô ÀĨ¸¨Â À¢öòÐì ¦¸¡ñÎ ÅóРŢÎí¸û. þýÛõ ¦¸¡ïº ¿¡ð¸û «Å÷ ±ØòÐì¸¨Ç À¡÷ì¸ ÁðΧÁ ÓÊÔõ. ¾ð¼îÍ ¦ºö ÓÊ¡Ð.
¦¸¡ïº ¿¡ð¸û ±ýÈ¡ø...
¿õ ¸½ì¸¢ø ¦¸¡ïº ¿¡ð¸û ±ýÈ¡ø ±ýÉ ±ýÀÐ ¯ÁìÌò ¦¾Ã¢Â¡¾¡?

(Áó¾¢Ã¢ «ÅºÃ «ÅºÃÁ¡¸ µÎ¸¢È¡÷.)

நா.கண்ணன் 3/04/2005 10:15:00 AM

எல்லோருக்கும் முதலில் நன்றி. இன்னும் சொல்ல வேண்டியவர் யாரேனும் உள்ளனரா?
எப்படியோ இந்த வாரம் கலக்கல் வாரமாகிவிட்டது! வழக்கம் போல் கலக்கலை ஆரம்பித்து வைத்த உஷாவிற்கு நன்றி. இதற்குப் பெயர் "தர்ம அடி" syndrome என்பது. எல்லோரும் பேசாமல் இருப்பார்கள். ஒருத்தர் அடித்தவுடன் அதுவரை இதுக்காகவே காத்திருந்தது போல எல்லோரும் அடிக்கத்தொடங்குவர். கடைசியில் ஒருவர் பாக்கியில்லை என்று தெரிகிறது :-))
இந்தக்கதை எங்கோ தமிழ் உள்ளத்தின் அடிநநரம்பைத்தொடுகிறது. அதுதான் இத்தனை வேகம். அது என்ன என்று கண்டு கொள்ள வேண்டும்.
இந்தக்கதையின் பின்புலம் தமிழ் கூறும் நல்லுலகமாகவும், இவள் தமிழ் பெண்ணாகவும் இல்லாத பட்சத்தில் இக்கதை எடுபட்டிருக்குமா?
ஒரு ஆண் விரும்பும் போது சுகப்பட முடிகிறது. ஒரு பெண் அப்படி எண்ணுவது கூடத் தவறு என்று நம் சமூகம் ஒரு பெண்ணின் மீது ஏற்றி வைத்துள்ள கட்டுப்பாடு குலையாமல் எல்லோரும் பதில் சொல்லியிருப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது. ஏன் அவள் இப்படி யோசிக்கக் கூடாது? இதில் என்ன தவறு? ஆண் செய்யும் பலவற்றை பெண் செய்யும் போது இது மட்டும் இன்னும் ஏன் உதைக்கிறது. பெண்ணின் உடல் மீது நாம் கொண்டுள்ள ஆழமான ideology காரணமா? இல்லை, பெண்ணிற்கு அவள் உடல் மேவிய விடுதலை என்பதே கிடையாதா?
செய் நேர்த்தி, கால ஒதுக்கீடு போன்ற செப்பிடு வித்தைகள் கதையை நாசூக்காக கொண்டு செல்ல, யார் மனதையும் புண்படுத்தாமல் கொண்டு செல்ல உதவலாம். ஆனால், brain stroming செய்ய அது உதவுமா என்று தெரியவில்லை.
இது ஒரு முடிவு பற்றிய கதை, ஒரு பெண்ணின் ஆசை பற்றிய கதை. ஒரு தமிழ் பெண்ணால் இப்படியெல்லாம் செய்யமுடியாது என்று நீங்கள் சொல்லிவிட்டால் நான் என்ன செய்யவியலும்?
கொஞ்ச காலத்திற்கு முன் ஆங்கிலப்படம் பார்த்தேன். அதில் மனைவியை இழந்த தலைவன் 6 வருடமாக வேரொரு பெண்ணைப் பார்க்காமல் இருக்கிறான். ஒரு நூலகத்தில் தன் பையனுடன் ஒரு "பெரியவர் வீடியோ" எடுக்கும் போது ஏற்படும் தவறில் அங்குள்ள பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது. அவள் இவன் கதை கேட்டபிறகு நட்பாகிறாள். இத்தனை நாள் பெண் சுகம் காணாமல் இருக்கிறானே என்று அவள் அதை அவனுக்குத்தர விழைகிறாள். இதை அவள், சட்டையே இல்லாத ஒருவனுக்கு சட்டை கொடுப்பது போல் கொடுக்கிறாள். இதை ஒரு இரக்கத்தின் சாயலாகக் காட்டுகிறாள். என்னைப் பொறுத்தவரை அதற்கு மதிப்பு அவ்வளவே. நான் கல்யாணமானவர்களைப் பற்றியோ, தாம்பத்தியம் பற்றியோ, திருமணம் என்ற நிறுவனம் பற்றியோ பேசவில்லை. யாருக்கும் இழப்பில்லாத ஒரு சூழலில், இரண்டு adult individuals தங்களுக்குள் எடுக்கும் முடிவு. இதில் பெரிய பிரச்சனை இருப்பதாக எனக்குப்படவில்லை.
நாம் பெண்ணின் உடல் என்றவுடன் எதை, எதையெல்லாம் பிணைக்கிறோம் என்று பட்டியிலிட்டுப்பார்க்க ஆசை.

Mahadevi 3/04/2005 12:40:00 PM

கண்ணன்,

உங்க கதை நல்லயிருக்குன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் என்னைப் பொருத்தவரை மனதில் நினத்ததை, ஆசைப்பட்டதை எந்தவித வேஷமும் போடாமல் செய்த ஒரே பெண் உங்கள் கதா நாயகிதான். இவள் யதார்த்தமான பெண். ஒரு பெண் இவ்வளவு கேவலமாக நடந்துகொள்ள மாட்டாள் என்று சொல்ல்வதெல்லாம் பொய். இப்படி நடந்துகொள்ள அவள் modern பெண்ணாக இருக்கனும் என்ற அவசியமும் இல்லை. அவள் ஆசைப்பட்டாள், நிறைவேற்றிக் கொண்டாள். அதன் விளைவுகளையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பாண்மை உள்ளப் பெண்ணாகவே அவள் தெரிகிறாள்.

- ஒரு பெண் வாசகி.

நா.கண்ணன் 3/04/2005 01:21:00 PM

நன்றி. இதில் கூட இந்தக் "கேவலம்" என்பதில் எனக்கு கருத்துவேறுபாடு உண்டு. பாலியல் அறிவு என்பது நம்முள் இன்னும் பூடகமாகவே உள்ளது என்று தோன்றுகிறது.

Alex Pandian 3/04/2005 05:40:00 PM

இந்த செயலட்சுமி செயலட்சுமின்னு சி.பி.ஐ லெவல்ல ஒரு விசயம் தூள் பறக்குதே. அந்தப் பெண்மணி ஒவ்வொரு தடவை டிவி செய்திகள்ள பார்க்கறப்பையும், ஒரு மிடுக்கா, கம்பீரத்துடனும், சிறந்த முறையில் நடைவலம் வர்ராங்களே, அவங்க வாழ்க்கை வரலாறு (?) நக்கீரன்ல தொடரா வருது. கிட்டத்தட்ட இந்தக் கதை நாயகிபோல வருகிறது. இதெல்லாம் தமிழ்நாட்டுலேயே நடக்குது. 'குற்றம் - நடந்தது என்ன' அப்படீன்னு விஜய் டிவில தெனமும் நைட்டு 10மணிக்கு ஒரு நிகழ்ச்சி வருது. அதுலயும் இது மாதிரி விஷயங்கள் பலான பலான சமாச்சரமெல்லாம் வருது. பாத்துட்டு அப்புறம், தமிழ் சமூகத்தில், மத்தியமர் சமூகத்தில் இதெல்லாம் நடக்குமா, அடுக்குமா அப்படீன்னு விவாதமெல்லாம் பண்ணலாம்.
- அலெக்ஸ்

இளவஞ்சி 3/04/2005 08:53:00 PM

"குற்றம் நடந்தது என்ன?" னு தானே காட்டறாங்க... "புரட்சிப்பெண்னின் படுக்கையறை அனுபவங்கள்" னா காட்டறாங்க? நீங்களும் அதை குற்றம்னுதானே பாக்கறீங்க? இல்லை உடல் விடுதலையின் இலக்கியதரமான நிகழ்வுகள்னு பாக்கறீங்களா?

பெரும்பாலான மத்திமவயதுகாரங்களுக்கு இப்படி கலவில சுதந்திரமா இருக்கற இளவயசு பொண்ணோட கூடிகுலாவற கனவு இருக்கும் போல.. எனக்கு என்னவோ அதோட வெளிப்பாடுதான் இதுனு தோனுது... ஊருல இருக்கற பொண்னுக்கெல்லாம் உடல் விடுதலை வேணும்னு பேசும்போது வசதியா நம்பவீட்டு பெண்களை மறந்துடறோம்..

1. ஒருதடவை படுப்பாங்களாம். மாமா அதுக்கப்பறம் தொல்லை பண்ணினா போலீசுக்கு போவங்களாம்.
2. ஒரு புரட்சிப்பொண்னு உடல்சுகம் அறிய வெறவழியே இல்லையா? மாமா தான் ஒரே வழியா?
3. கதாநாயகிக்கு கொழந்தை உண்டான எப்படி இருக்கும்னு தோணுதாம். எப்ப? அவரு பென்சு காருல ஏறி டாடா காட்டுன பொறகு! இதவிட அந்தபுள்ளய கேவலபடுத்தமுடியாது.


பெண்களை அறிந்த யாவருக்கும் இந்த உண்மை தெரியும். வெறும் உடல்சுகத்தை மட்டும் மையப்படுத்தி ஒரு பொண்ணை சுகப்படுத்தமுடியாது. வேனா நாம்ப படுத்து எழுந்திருக்கலாம். பெண்களின் உடலியல் உணர்வுகள்னா என்னனு நாமளா இப்படி நம்ப நிராசைகளையெல்லாம் கலந்துகட்டி அடிச்சு அரிப்பை தீர்த்துக்கறதை விட கைகட்டி வாய்பொத்தி அவங்ககிட்டயே கேக்கலாம். ஒன்னும் கொறஞ்சிறபோறது இல்லை.

ஆண்சுகம் தேடிய ஒரு பெண்ணின் கதை அப்படின்னு சொல்லியிருந்தா மறுபேச்சே வந்திருக்காதுன்னு நெனைக்கறேன்.


இந்த கதைமூலமாதான் பின்நவீனத்துவம்னா என்னனு தெரிஞ்சிக்கனும்னா எனக்கென்னவோ அது பின்துவாரம் வ்ழியா திங்கறமாதிரிதான் படுது...

ஒரு பொடிச்சி 3/09/2005 02:42:00 PM

"கர்பமாகிவிடும் பயம் என்பது உண்மைதான். ஆனால் கர்ப்பம் இப்போது இன்பம் சுகிக்க ஒரு தடையே இல்லை. அதற்கு பயந்து கொண்டு ஒரு பெண் சுகிக்காமல் இருப்பாள் என்று நம்பமுடியவில்லை. உஷாவின் கடிதத்தில் தொக்கலாக ஆண்களே சுகிக்கிறார்கள் என்பது போன்ற ஒரு தொனி இருக்கிறது. இருவர் இயைந்ததுதானே சுகம்? அதுதானே தாம்பத்யம்."
-நா.கண்ணன்

இந்தக் கதை(?)யின் மிகப் பெரிய பிரச்சினையே கடைசி இரு வரிகள்தான். அதற்கு பதிலளிப்பதை விடுத்து மேலிருக்கிற 'விளக்கம்' தரப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து மேலும் 'அப்படி நினைத்தால் அது நடக்குமா, அது சினிமாவில்தான்' (அப்படி வேறு ஆசையா?) என்று வேறு. இப்படி 'ஒரு மத்திம ஆணுடைய விருப்பமாய் அவளுடைய சிந்தனையாய் (கடைசி இறுதி வரிகளிரும் கதை முழுதும்' எழுதிவிட்டு மற்றவர்களுக்கு
"...மேலும் உடல் என்பதுதான் பெண்ணா? அவளுக்கு வேறு அடையாளங்கள் கிடையாதா? பெண் மொழியில் உடல் பற்றி வரக்கூடாதா? சுகிக்கப்படுபவள் பெண் என்று சொல்வதே அபத்தமாகப்படுகிறது. சுகித்தல் இருவருக்கும் பொது. அவள் என்றும் நுகர்பொருளாக முடியாது, அவள் விரும்பினால் ஒழிய!" என்றெல்லாம்
'எதையோ' சொல்ல முயலுகிறீர்கள்.
என்னத்தை சொல்வது,
முக்கியமாய்,
"இந்த உடல் பற்றிய எண்ணங்களை இன்னொருமுறை தரிசிக்க வருவேன்." என்கிறபோது 'தயவுசெய்து வராதீர்கள்' எனத்தான் எழுதத் தோன்றுகிறது. ஆனால் உங்களது இந்தக் கதைகள் ஒரு நீண்ட பாரம்பரியம்'நெஞ்சு நிறைய' அப்புறம் ஓ யெஸ்! ருது வாகிறது பற்றிய கதை. etc etc. இப்படித் தொடர்ந்து எழுதத்தான் போகிறீர்கள்.
தயவுசெய்து 'விடுதலை விரும்பிற' பெண்கள் பற்றி எழுதிறன் பேர்வழி என அறிக்கை விடாதீர்கள். பாவம்! 2000 மாம் ஆண்டு சுமை அவர்களது தலையில். இதில் ஆண்டாளின் தைர்யம் ரொம்ப முக்கியம்.

அப்புறம் 'பேசாப்பொருள்' என்கிற சாமான் குறித்த எனது கருத்து:
முதிய ஆண்களின் இளம் பெண்களைப் புணரும் fantasy ஐ சிறுகதை என எழுதியிருக்கிறீர்கள். அதற்குச் சான்றாய் ஒவ்வொருமுறையும் 50 வயது 'அவர்' 'குளித்துவிட்டு வந்தபோது அவருக்கு 10 வயது குறைந்திருந்தது" என இருமுறைக்கு repeat வேறு செய்துள்ளீர்கள். உந்த சாயல் பற்றினது 8 வருடம் முந்தியா? பாலசந்தரின் 'கல்கி' வந்தபோதே விவாதத்திற்கும் மறுப்பிற்கும் உள்ளானது. பாலசந்தர் சொல்கிற 'புரட்சி'கூட தேவலாம்போல இருக்கு. இதில், அந்தக் காலத்து கதையைச் சொல்லிக்கொண்டு 'பின்நவீனத்துவம்' பற்றி வேறா? நான் இன்னமும் நீங்கள் எழுதிய'செந்தட்டி'யை மறக்கவில்லை. அது ஒரு நல்ல படைப்பென்பதால் அல்ல.

நா.கண்ணன் 3/09/2005 03:12:00 PM

அன்புள்ள பொடிச்சி: இத்தனை நாட்களுக்குப் பின் இங்கு பின்னூட்டம் தந்ததற்கு நன்றி. நீங்கள் ஈழத்தவராய் இருப்பதால் என் கதைகளை படித்து அதன் பின்புலம் அறிந்திருக்கிறீர்கள். பாலியல் குறித்த கருத்து நாட்டுக்கு நாடு, ஆண்களுக்குள்ளும் பெண்களுக்கும் வேறுபடுகிறது. இந்தக் கதையை சீர் செய்திருக்கலாமென்று இப்போது தோன்றுகிறது. ஒரு brain stroming அப்போது தேவையாய் இருந்தது. இக்கருத்தை கட்டுரையாகக் கூட செய்திருக்கலாம். கதை எனும் போது அதன் தாக்கம் அதிகமாக இருப்பதை இந்தப் பின்னூட்டங்களே சொல்கின்றன. நெஞ்சு நிறைய, செந்தட்டி இவைகளில் ஒரு subtle comody உண்டு. அதை பலர் காண்பதில்லை. ருது எழுதக்கூடாத பொருளல்ல. என் எழுத்து வணிக எழுத்தல்ல. எனவே இதை ஒரு point of view என்று பாருங்கள். நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தில் சுதந்திரமுண்டு. நீங்கள் ஆங்கில இலக்கியம் படித்திருந்தால் நான் பேசுவதெல்லாம் வெறும் ஜுஜூப் என்று புரியும். தமிழர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறோம். யாரையும் புண் படுத்துவது நோக்கமல்ல. அதனால் இந்தப் பதிலும். வாசித்து பின்னூட்டங்கள் தந்த அனைவருக்கும் இன்னொருமுறை நன்றி. இந்த அலைகள் இன்னும் வீசிக்கொண்டு இருக்கின்றன பிற வலைப்பூக்களில். என் கருத்து இதில் முக்கியமே அல்ல.

ஒரு பொடிச்சி 3/10/2005 03:37:00 AM

நான் ஈழத்தவராய் இருப்பதால் உங்களின் கதையின் பின்புலம் தெரிந்திருக்கிறது என நீங்கள் எழுதுவது புரியவில்லை. ஈழம் தமிழ் இந்த அடையாளங்கள் இல்லாமலேயே இதையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ருது, உடலுறவு இவை எழுதக்கூடாதென்பது அல்ல; எழுதுவது முன்னோக்கான தளத்தல் இருந்தா என்பதுதான். எனக்கு உங்களது புனைவுகளில் (அது தொடர்பான கட்டுரையில்) அது புலப்படவில்லை.

Muse (# 5279076) 3/17/2005 08:55:00 PM

Dear Kannan,

I too want to have my own share of "tharma adi syndrome" !!!

About the theme:
----------------

I dont wonder seeing the shoutings against your write-up. It is expected, as women protest such things because their protest is marked as confirmation of their purity.

In our society I observe that the neighbourhood women feel a kind of joy in talking bad about other women. For an understanding mind it would be clear that they are not actually against it, but they have no other way of talking about it; they enjoy the same thing by talking negatively about it. They talk negatively to show that they are pure, but still they talk about it.

You might have observed the same behaviour in the "nayanmar" stories, in which one of the nayanmar (he was a jain monk) threw stones on the Shiva linga. People thought that he is actually too angry on Shiva, but the real story is different, he was actually loving and worshipping Shiva. He has no other way of relating to his beloved subject.

Women "have to" register their protest lest men should consider them degraded (in the current social setup).

And men have to protest so that their women don't even hear them as something related to joy or freedom. Those who want to inject morality have their own reasons to do it whether they are men or women or the third sex.

There is no such thing as a standard morality. Even in these modern days we hear about tribals who are far away from the modern monkeys, do lead a promiscuous life. What takes is only the consent of the consorts indulging in the act.

All these morality talks come from the base of protecting the power structure.

I am not a women and so I cannot be wise enough to say that women like or dont like the physical enjoyment. But, I am street wise to know that it takes two to do that "particular" performance.

My intution says women also want to have just physical relish, with or without mental affiliation.

About the story:
----------------

Though theme is really a nice one, the story has its own flips. First of all it is written with the mind set of a man. One can read the same story substituting the women with any other man. It would not have changed the alphabets in the story.

Women don't talk dirty (at least in the background of our heroine), they just do it. If you have avoided the dirty words, it might have looked a bit more feminine.

Neither they do such things through a third party. They are the most secretive and protective in the nature.

Contrary to other commentators I do agree with your last sentences. Women are also mothers by nature. They cannot remain without thinking about their womb when they indulge in the activity.

I am also against those commentaries as they project themselves as the authority of the feelings and fancies of women. There is no authorities in this matter. It is just their wishful thinking.

No men or women think alike. Your heroine could think the way she thought those ideas.

I am also confident that there were women in the past and in the present who do practice the same activities of the heroine in the story.

What people can do about them, but to say that these are dirty stories, bad, bad, very bad... and

read it once again when nobody is around!!