ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு

12 மார்ச் 2005 (சனி)

"ஊசி இலை மரம்" சிறுகதைத் தொகுப்பு;
"விமர்சன முகம்" கட்டுரைகள்

இடம்: பிரிக்ஃபீல்ட்ஸ் பார்வையற்றோர் சங்கக் கட்டிட அரங்கம்.

நிகழ்ச்சி நிரல்

3.00 - 3.30: தேநீர்

அங்கம் ஒன்று:

3..30: தமிழ்வாழ்த்து செவ்விசைச் சித்தர் ரெ. சண்முகம்

வரவேற்புரை : முனைவர் ரெ.கார்த்திகேசு.

3.40: வாழ்த்துரை : திரு. பெ.இராஜேந்திரன்:தலைவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

4.00: தலைமையுரை: திரு. இரா.பாலகிருஷ்ணன் (மலேசிய வானொலி இந்தியப்பகுதி முன்னாள் தலைவர், ஆசிய பசிபிக் ஒலிபரப்புக் கழக முன்னாள் இயக்குநர்)

நூல் அறிமுகம்:

4.20: "ஊசி இலை மரம்" : இணைப் பேராசிரியர் முனைவர் முல்லை இராமையா, மலாயாப்பல்கலைக் கழகம்

4..40 "ரெ.கார்த்திகேசு: விமர்சன முகம்" : டாக்டர் மா. சண்முக சிவா.

5.00: நூல் வெளியீடு : திரு ஆதி. குமணன், ஆசிரியர் குழு ஆலோசகர், மலேசிய நண்பன் நாளிதழ்.

5.20: முதல் நூல் பெறுநர் : திரு வைரன் ராஜ், வைரன் நிறுவனக் குழுத் தலைவர்.

வாசகர்கள் நூல் பெற்றுக் கொள்ளுதல்

அங்கம் இரண்டு:: கருத்தரங்கு:

5. 40 உரை: "மலேசியாவில் தமிழ் இலக்கிய விமர்சனம்: ரெ.கா.வின் நூலை முன்வைத்து": இணைப் பேராசிரியர் வெ. சபாபதி (தலைவர், இந்திய இயல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம்)

6.00 உரை: "ஊசி இலை மரத்தில் அறிவியல் புனைகதைகள்" :திரு. சத்தியசீலன்

6..20 கலந்துரையாடல்

6.40 நன்றியுரை: முனைவர் ரெ.கார்த்திகேசு.

4 பின்னூட்டங்கள்:

maalan 3/04/2005 09:41:00 PM

ரெ.காவின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும் கருத்தரங்கும் சிறப்பாக நடைபெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் கலந்து கொள்ளும் கைகள் எல்லாம் பெரிய கைகள். ஊசி இலை மரம் ஓர் அற்புதமான புத்தகம்.ரெ.காவின் மீது மொத்த மலேசிய எழுத்தாளர்களுக்கும் பெருமதிப்பு உண்டு. என் பிரியமான வாழ்த்துக்களும் அவருக்கு சேரட்டும்
மாலன்

பாலு மணிமாறன் 3/05/2005 05:45:00 PM

90களின் மத்தியில் நான் பரிட்சையப்பட்ட ரெ.கார்த்திகேசு, டாக்டர் சண்முகசிவா, ரெ.சண்முகம், ஆதிகுமணன் போன்றோரை ஞாபப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள்.... ரெ.கார்த்திகேசு ஒரு ஆளுமைமிக்க எழுத்தாளர். மலேசியாவின் ' மக்கள் ஓசை ' வார இதழின் முன்னாள் ஆசிரியர் குரு ஒருமுறை என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ரெ.கார்த்திகேசுவின் எழுத்துக்கள் தம்மை அழ வைத்திருப்பதாக கூறினார்.

சண்முக சிவாவின் படைப்புகள் - குறிப்பாக சிறுகதைகள், எந்த தமிழக எழுத்துக்கும் சமநிலையிலும் அல்லது அதற்கு மேலும் தன்னை நிறுத்திக் கொள்ளும் தன்மையுள்ளதென படிப்பவர்கள் உணர முடியும்.

ஆதிகுமணன் - ஆதிகால குமணன் மாதிரியே வாழ்ந்து வருவதை மலேசிய தமிழர் வரலாறு பதிவு செய்து வருகிறது. அவர் இன்னும் 100 வருடங்களுக்கு அப்புறமும் மலேசியத்தமிழர்களால் நேசமுடன் பேசப்படுபவராக இருப்பார்.

குடும்பஸ்தனாகி விட்டேன்.... இல்லாவிட்டால் நிச்சயம் இந்த நூல் வெளியீட்டில் கலந்து கொண்டிருப்பேன். அத்தனை பேருக்கும் சிங்கை இணைய நன்பர்கள் சார்பில் எங்கள் அன்பைச் சொல்லுங்கள். ( இதைச் சொல்லும்போது யார்யா இந்த பாலு மணிமாறன் என்று அவர்கள் கேட்க வாய்ப்புண்டு...ஆனால் ' அப்பாவிச் சோழன் ' என்ற பெயர் அதில் ஒருவருக்காவது ஞாபகம் இருக்கலாம்... ) விழா வெற்றியடைய வாழ்த்துக்கள் !

நா.கண்ணன் 3/05/2005 09:43:00 PM

ரே.காவை எப்படி வர்ணிப்பது? எப்போதும் எனக்கு புதுமையானவர். ஒரு நதி போல. எப்போதும் இனிமையானவர் தேன் போல.

அவர் அண்ணா! ரெ.ச! அவர் அப்படி ஒரு கமகம் கொடுத்துக்கொண்டு தெருவோரம் பேசியவண்ணம் நடந்துவருவது எத்தனை இனிமை!

சண்முகம் சிவா, அப்படி சுத்தி இப்படி சுத்தி எங்க பேட்டைக்காரராகிவிட்டார். மானாமதுரை! எவ்வளவு அருமையான மனிதர்.

ஆதிகுமணனை குறுக சந்தித்ததுதான். ஆனால் ஆச்சர்யம்! யாருக்கும் மசியாத அவரது அண்ணன் ராஜகுமரன் (நயனம் ஆசிரியர்) எனது நல்ல நண்பர். எத்தனை பேருக்குத்தெரியும் 'இணையம்' என்ற சொல்லாட்சியைத் தந்தவர் அவரென்று!

பாலு மணிமாறன் 3/07/2005 02:50:00 PM

இராஜகுமரன் மலேசிய இலக்கிய உலகின் இன்னொரு சகாப்தம். ஓடைகள் சலசலத்து ஓடலாம். இவரோ பெரிய நதி. ஆரவாரமின்றி ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த நதிக்கரை ஓரம் தானே விழுந்த விதைகள், முளைத்து, மரமாகி நிற்கின்றன. அதை ஓரக்கண்ணால் பார்த்தபடி இந்த நதி ஓடிக்கொண்டேதான் இருக்கிறது.... அவரிடன் பலமுறை ·போனில் பேசியிருக்கிறேன். அவரது பேச்சில் எப்போதுமே ஒரு கனிவும், கரிசனமும் இருக்கும்.

அய்யா ரெ.சா, டாக்டர் சண்முகசிவா - இருவரிடமும் இப்படியொரு அடக்கமா? இந்த நிமிடம்வரை அவர்களை வியந்தபடிதான் வாழ்கிறேன்.