ஒளி போன பின்பும் மின்னும் பிம்பங்கள்!

இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு ¸தை சொல்லுவார். பிரம்மம் ஒரு நாள் தானே எல்லாமாய் ஆகுமாறு சங்கல்பித்துக் கொண்டதாம். உடனே கருப்பன், சுப்பன், கண்ணகி, கோவலன், கண்ணன், தேவகி, தங்கணி, மணிமாறன் எல்லோரும் உருவாகிவிட்டனர். பாய்ஸ் கம்பெனி, ஸ்திரீ பார்ட்டு என்று எல்லாமும் போட்டுக்கொண்டு இறைவன் விளையாட ஆரம்பித்தார். அவர்தான் பெரிய நடிகராச்சே! எங்கே உருவாக்கிய பாத்திரத்திலேயே மூழ்கிவிடுவாரோ என்ற பயத்தில் »¡னம் எனும் தனது தன்மையைக் காவலாளியாக நிற்க வைத்து விட்டு போயிருக்கிறார். ஒளி வட்டம் விழுந்தவுடன் நடிக்க ஆரம்பித்தவர் அப்படியே காட்சியில் மூழ்கிவிட்டார். இன்பம், துன்பம், அவமானம், குதூகலம், புகழ்ச்சி, இகழ்ச்சி என்று மாறி, மாறி அனுபவித்து அசந்து போகும் வேளையில் 'ஞானம்' மெல்ல வந்து அவரிடம் சொன்னதாம், "அண்ணாச்சி! நாடகம் முடிஞ்சிருச்சு. லைட்டை ஆப் பண்ணப்போறாங்க. லைட் பாயெல்லாம் வந்தாச்சு. அடுத்தாளுக்கு அரிதாரம் கூட பூசியாச்சு. நீங்க மெல்ல உங்க யதாஸ்தானத்திற்கு திரும்பியருள வேண்டியது! என்று.

எனவே கண்ணன் தன் குடிலுக்கு மீண்டதாகக் கதை. பரமஹம்சர்தான் ஆரம்பித்தார் நான் முடிச்சுட்டேன். அதுதானே ஒரு கதாசாரிய லட்சணம்!

நண்பர்களே! it was a great week! மனிதன் வாழ stimulus வேண்டும். இந்த ஒளிப்பாய்ச்சல் ஒரு நல்ல டெக்னிக். நீங்களெல்லாம் என்னோட கூடவே பஜனையிலே சேர்ந்து பாடினது பரம சந்தோஷமா இருந்தது. மதுரையில் வசித்த காலத்தில் கோ.புதூரிலிருந்து அப்படியே மூணுமாவடி வரை நடப்பேன் நண்பர்களோட! அதுபோல ஞாபகம் வந்திருச்சு. என் நண்பர்கள் எப்போதும் என்னுடன் உடன் பட்டது இல்லை. உடன் படும் போது மகிழ்வாய் இÕக்கும். உடன் படாத போது கற்றல் நடக்கும். it was indeed quite educative! பெண்கள் வீனஸ் கிரஹத்து ஆசாமிகள் என்று சுத்தமாய் புரிந்து கொண்டேன். இனிமே அவங்க வம்புக்கே போகமாட்டேன் :-))

இந்த வாரத்தில் வந்த என் மடல்கள் அனைத்திற்கும் நல்ல மதிப்பெண் அளித்து என்னை ஊக்குவித்தீர்கள். எனது படங்களுக்குக் கூட நட்சத்திரம் கிடைத்தது! உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

வலைஞர்களின் வீச்சும், தளமும் விரிந்து கொண்டே போவது தெரிகிறது. நான் 'சொய்ஸ்' பதிவில் சொன்ன மாதிரி பதிவிலும் திகட்டும் வண்ணம் படிக்கக் கிடைக்கின்றன. பரிந்துரைக்கும் பதிவுகளையே படிப்பதற்குள் மூச்சு முட்டுகிறது. சிலரால் தும்பி போல் எங்கும் வட்டமடிக்கமுடிகிறது. நிறைய உள்குழுமங்கள் வந்துவிட்டது தெரிகிறது. பரிந்துரைகள் குழுமங்கள் சார்ந்து அமைவதும் தவிர்க்கவியலாது. தமிழக பத்திரிக்கை உலகம் தந்த 'கவன ஈர்ப்பு' சிலருக்கு உதவுகிறது. வலைப்பதிவு வந்து எழுத ஆரம்பித்து கலக்கல் செய்த வலைஞர்களும் கவனம் பெறுகின்றனர். ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. காத்திரமான படைப்புகளும் உள்ளன. news value மட்டும் உள்ள பதிவுகளும் உள்ளன. இது வளர்ந்து மிளிரும் என்பது திண்ணம். ஆயினும் சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன. இந்த சிண்டிகேஷன் என்ற பிணைப்பு வந்ததால், அது பெறும் கவனத்தால், தனி மனித உள்ளப்பதிவு எனும் நிலை போய் குட்டி, குட்டி பத்திரிக்கைகளாக வலைப்பதிவு மாறிப்போகுமோ என்று தோன்றுகிறது. ஏனெனில், மதிப்பெண், பரிந்துரை என்பதே majority சார்ந்த விஷயம். Majority என்பதை வணிக இதழ் என்று விகிதப்படுத்தினால், வலைப்பூ பல்வேறு வணிக இதழ்களாக மலர்ந்து சிரிக்குமோ? அதன் சிற்றிதழ் காரம் குறைந்து படுமோ? கவன ஈர்ப்பு என்பது எப்போதும் கிசு, கிசு, sensational விஷயங்களுக்கே கிடைக்கும் என்பது இங்கும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது! எனவே இந்த நட்சத்திர ஷொட்டு என்பது தனிமனிதப்பதிவின் தீர்க்கத்தை நீர்த்துப்போக வைக்குமோ? கவன ஈர்ப்பின் எழுதப்படும் பதிவுகளுக்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் அப்பதிவுகள் அழிந்துபடுமோ? இவையெல்லாம் கேள்விகள். Majority opinion-ஆல் நடத்தப்படும் எதுவுமே தனித்தன்மை கொண்டதாக இருக்கமுடியாது. எனவே இந்த சிண்டிகேஷன் என்பது வலைப்பதிவின் எதிர்காலத்தை நடத்தும் natural selection agent-ஆக இருக்குமோ? கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அவரவர் பதிவில் அவரவர் தெரிய வேண்டும். அது முக்கியம். தனித்தன்மை இருக்க வேண்டும். நாம் பத்திரிக்கை நடத்தவில்லை என்ற உணர்வு இருக்க வேண்டும். முடியுமா? காலம் பதில் சொல்லும் பார்ப்போம்.

வலைப்பூவிற்கும் மடலாடற்குழுவிற்கும் சில வித்தியாசங்கள் தெரிகின்றன. பின்னூட்டம் என்பது வலைப்பதிவின் ஓட்டத்தின் வேகத்தைப் பொறுத்திருக்கிறது. புதிய பதிவுகள் வரும் போது பழைய பதிவிற்கு யாரும் பின்னூட்டம் தருவதில்லை. அந்த நிலையில் அது உறைந்து விடுகிறது. ஆனால் மடலாடற்குழுவில் தொடர்ந்து ஊடாடமுடியும். ஆனால் அங்கு எல்லாக்கடிதத்தையும் எல்லோரும் படிக்க வேண்டும். இங்கு அது இல்லை. வலைப்பதிவின் பலமே அதன் privacy தான். அது பொதுமைப்படுத்தலால் நீர்த்துப்போகாமல் இருக்க வேண்டும்!

ஒளி வீசினாலும் வீசாவிட்டாலும் பயணம் நடக்க வேண்டும். கொஞ்சம் அதிக ஒளியால் கண்கள் கூசுகின்றன. இருட்டில் உட்கார்ந்து கொண்டு இரசிப்பதில்தான் ஆனந்தம். அவ்வப்போது தூங்கிக்கலாம். முழிச்சவுடன் பூவையோ, முட்டையையோ வீசிவிட்டு விசிலடிக்கலாம். இனிமே அ¨¾த்தான் செய்யப்போறேன். ஓரமா தூங்கிக்கிட்டு இருந்த ஆள அரிதாரம் போட்டு மேடைக்கு காசியும், மதியும் அனுப்பிச்சுட்டாங்க. மேடைக்கு வந்தபிறகு நடிச்சுத்தானே ஆகணும்! ஏதோ என்னால முடிஞ்சதைப் பண்ணினேன். தினம் கட்டாயம் ஒரு மடலாவது எழுத வேண்டும் என்பது கடமை. கொஞ்சம் மூச்சுமுட்டியது. இனிமே என் நேரத்திற்கு எழுந்து எழுதலாம். ஒளிப்பாய்ச்சல் வேறு எங்கோ இருக்கும்.

சரி அப்ப வரட்டா....

7 பின்னூட்டங்கள்:

காசி (Kasi) 3/07/2005 03:23:00 AM

நல்ல விரிவான வாரம். சுவாரசியமாக கொண்டு போனீங்க. இவ்வளவு நேரம் எடுத்து ஒளிவீசியதற்கு நன்றி நட்சத்திரமே:-)

துளசி கோபால் 3/07/2005 03:26:00 AM

அன்புள்ள கண்ணன்,

//பெண்கள் வீனஸ் கிரஹத்து ஆசாமிகள் என்று சுத்தமாய் புரிந்து கொண்டேன். இனிமே அவங்க
வம்புக்கே போகமாட்டேன் :-))//

ஆண்கள் எல்லாம் 'மார்ஸ்'லே இருந்து வந்ததாலே, இந்த 'வீனஸ்'காரங்க சொல்றது கொஞ்சம் இப்படித்தான்
இருக்கும்! நீங்க பாட்டுக்கு எல்லா வம்புக்கும் வாங்க. உங்க 'பெயருக்கே' அதானேங்க அர்த்தம்!

என்னே, உன் மாய விளையாட்டு கண்ணா என்று நாங்கள் எல்லாம் சொல்லிடறோம்! என்ன ஒண்ணு,
நாங்கெல்லாம் வளர்க்கப்பட்ட விதம் வேற! (இப்ப நாங்க எங்க பொண்களை வளர்க்கிற விதமும் வேற!)
அடுத்த தலைமுறை ஒருவேளை 'சுதந்திரமா' இருக்கலாம்!!!!!


உங்க வாரம் நல்லாவே இருந்தது!!! நல்லா இருங்க!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

meena 3/07/2005 04:38:00 AM

கண்ணன் உங்களின் எல்லாப்பதிவையும் படித்துக் கொண்டுதான் இருந்தேன்
என்ன..பின்னூட்டம் எழுதவில்லையே தவிர ஓட்டைத் தவறாமல் போட்டுவிட்டேன்.

துளசி சொல்லியது போல் சில வார்த்தை பிரயோகங்கள் அதான் சற்று நெருடியது மற்றபடி

வழக்கம் போல் கலக்கலாகவும் கலகலப்பாகவும் இருந்தது எல்லாப் பதிவும்.ரசித்தேன்.

அப்படியே எங்கோ ஓடிப் போய்விட்ட இந்த நந்துப் பையனையும் பிடித்துக் கொண்டு
வருவீர்களா? பார்த்து நாளாச்சு.

Thangamani 3/07/2005 04:48:00 AM

கண்ணன், நல்ல வாரம். உங்கள் எழுத்து மக்களிடம் உங்களைப்பற்றிய ஒரு நல்ல தோற்றத்தை உருவாக்குவதற்காக முனைந்து, பயந்து, அதே சமயத்தில் ரொம்ப நடுநிலையாக, அச்சமற்று இரூப்பதுபோல காட்டிக்கொள்ளும் சிலரது எழுத்து போலல்லாமல் இயல்பாக இருந்தது. பேசாப்பொருளை உண்மையாகப் பேசினீர்கள்! நன்றி.

ராஜா 3/07/2005 05:37:00 AM

நிறைவான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த வாரம் கண்ணன். நன்றி.

ஜெயந்தி சங்கர் 3/07/2005 08:57:00 AM

dear kannan,
this week was very interesting, thought provoking. thanks. rgds, J

நா.கண்ணன் 3/07/2005 11:08:00 AM

நண்பர்களே: உங்கள் அனைவருக்கும் நன்றி. Brain stroming, positive outlook of life, creative intelligence, flexibility, social concern போன்றவையே இந்த வாரத்தில் என் எழுத்தின் உந்துதல். கருத்துசேர் படிவது இதுவொன்றும் முதல்முறை அல்ல. கண்ணன் உடைகள் கறை பட்டே இருக்கும் என்பது பாகவத வியாக்கியானம் கூட :-) உழைப்பவன் உடையில்தான் சேர் படும். அதனால் அது மகிழ்வே. நான் ஜேகேயின் போதனைகளை கடைபிடிக்க முயல்பவன். எனவே எனக்கு என்னைப் பற்றிய அபிப்பிராயம் முக்கியமல்ல. பிம்பங்களில் நம்பிக்கையில்லாதவன். மானுடத்தில் நம்பிக்கையுள்ளவன். அன்பில் ஆழமான நம்பிக்கையுள்ளவன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. சிலர்த்துக் கொள்ளும் மரங்களே பின் துளிர்கின்றன. நமது ஆஷாடபூதியை சிலிர்த்துவிட்டு புதுக்கருத்துச் செறிவுடன் வளர வேண்டும் என்பது என் அவா. அதனால் கடுமையாய் இருப்பது போல் என் எழுத்து தோற்றம் தரும். மீனாவும், துளசியும் சில வார்த்தைகள் பற்றிச் சொல்லியிருந்தார்கள். அமங்கலமான வார்த்தைகள் அவை என்பது தெரிந்தே பயன்படுத்தினேன். மரபு தெரிந்தால்தான் மீறமுடியும். வார்த்தைகளின் இணைப்புகளை (association) அவ்வப்போது சிலிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். வார்த்தைகளுக்கு புனிதமும் கிடையாது, அழுக்கும் கிடையாது. அவை வெறும் வார்த்தைகள். வாங்கும் நாம்தான் உணர்வுள்ளவர்கள். எனது நீண்ட மேலை வாழ்வு என்னை உங்களிடமிருந்து விலக்கியிருக்கிறது. அதில் நன்மையுமுண்டு, அசௌகர்யங்களுமுண்டு. உரையாடல் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் அவை ஆழமாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன். அதை நேரடிப்பேச்சு ஒன்றினால்தான் செய்விக்கமுடியும். ஏனெனில் மனிதன் மொழிக்கும் அப்பாற்பட்டவன். வாழ்க!