பால் சமன்பாடு

மின்சாரம் கிராமங்களுக்கு வந்து கொண்டிருந்த காலம். சுவிட்சைப் போட்டா லைட்டு வருமா? லைட்டைத் தொட்டா சுவிட்சு ஆடுமாங்கற காலம் :-) எனவே, மக்களுக்கு மின்சாரத்தின் அவசியம் பற்றி, அதே நேரத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில ஒழுக்கங்கள் (never leave a 'live wire' uninsulated etc.,) பற்றி அறிந்து கொள்ள ஆவணப்படம் போடுவார்கள். நகைச்சுவை நிரம்பிய instructive films!
நேற்று அதுபோல் எங்கள் ஆய்வகத்தில் ஒரு படம் போட்டார்கள். அலுவலங்களில் ஆபீசர்கள் தங்கள் காரியதரிசினிகள் மற்றும் கீழ் நிலை அலுவலகர்களிடம் பால் நோக்கு கொண்டு நடந்து கொண்டால் என்ன செய்ய வேண்டுமென்று. 'அழகியும், திட சித்தமும்' என்பது படத்தின் தலைப்பு. வழக்கமான கதைதான். உயரதிகாரி பெண்களைத் தொட்டு, தொட்டுப் பேசுவார். இணங்காத பெண்களின் சம்பளத்தில் அல்லது புரோமோஷனில் கை வைப்பார் என்பது போன்று. இப்போது டெலிபோன் காமிரா இருப்பதால் இவள் தோழி அந்த ஆள் வழிந்து, வழிந்து தொடும் போது தெரியாமல் போட்டோ எடுத்துவிடுவாள். பெரிய அதிகாரியிடம் சொன்னால் அவரும் ஆண். எனவே அதிகமாக ஒன்றும் நடக்காது. எனவே அவள் "பால் சமன்பாடு ஒன்றியத்தில்" போய் மனுச்செய்வாள். அவர்கள் வந்து ஆபீசில் பேசியும், அவர்கள் அலுவலகத்திற்கு இவர்களை அழைத்துப் பேசியும் இந்த மனிதருக்கு புத்தி வராது. கடைசியில் அவள் இவனுக்கு வக்கீல் நோட்டீசு கொடுத்து விடுவாள். அது மானப் பிரச்சனை ஆகிவிடுவதால் அவன் தானே ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுவதாக கதை முடியும். இப்படியொரு ஒன்றியம் கொரியாவில் இருப்பது அப்போதுதான் எனக்குத் தெரியும்!

உலகம் முழுவதும், குறிப்பாக ஆசியா, மத்திய கிழக்கில் இது போன்ற படங்களை அடிக்கடி போட்டுக் காட்ட வேண்டும். 1. பெண்களுக்கு முதலில் உரிமை கேட்கும் தைர்யம் வரும், 2. ஆண்களுக்கு கொஞ்சம் பயம் வரும்.

எனது பல்கலைக் கழக அனுபவம் வேறு மாதிரி. ஆண்களுடன் போராடுவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்ட ஒரு பெண் பேராசிரியர் இயல்பாகவே மெல்லுணர்வு கொண்ட ஆண்களையும் அரட்டி மிரட்டி விடுவார். அந்த வடுக்கள் இன்னும் கூட நெஞ்சிலுண்டு. சமன்பாடு என்பது வன்முறையால்தான் வரவேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லாதவன் நான். பெண்களில் ஆயிரம் வகை இருப்பது போல் ஆண்களிலும் ஆயிரம் வகையுண்டு. அவரவர் வளர்ப்பைப் பொறுத்த விஷயம். பெரிய குடும்பங்களில், நிறைய பெண்கள் உள்ள குடும்பங்களில் வளர்ந்த ஆண்களின் 'பா'வமே வித்தியாசமா இருக்கும். திமிர் பிடித்த ஆண்கள் இருப்பது போல் திமிர் பிடித்த பெண்களும் நிறைய உண்டு. வளரும் காலங்களில் நமது பெற்றோர், உறவினர் நமக்குக் கொடுக்கும் அன்பு, தன்னம்பிக்கை போன்றவையே நாம் பின்னால் பொறுப்புள்ள பிரஜையாக (குடிமகன் என்பது 'ன்' விகுதியில் முடிகிறது!) வாழ்கிறமோ என்பதை நிர்ணயிக்கிறது. உலகின் காணும் ஆண்/பெண் வன்முறைகளுக்கு பாதிக்கு மேல் காரணம் அன்பற்ற இளமைப் பருவம்தான். அக்கா, தங்கைகளோட வளரும் சூழல் தன்னிச்சையாக குழந்தைகளிடம் ஒரு பால் சமன்பாட்டைக் கொண்டுவரும். அச்சமன்பாடு குலைந்து போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது சமூகத்தின் பொறுப்பு. இந்த peer group ஏத்தி விடுவதில்தான் பாதிக்கு மேல் கெட்டுப்போகிறார்கள்.

ஆனால் அடிப்படை உரிமை கூட இல்லாது, வாய் ஊமையாய், கொத்தடிமையாய் கிடக்கும் மூன்றாம் உலக நாட்டுப் பெண்கள் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருப்பதால் "பால் சமன்பாடு" பற்றி அழுத்திச் சொல்வதில் தவறில்லை. சில நேரங்களில் ஒரு பதட்டத்தில், exentric-ஆக நடந்து கொள்ளும் பெண் விடுதலைவாதிகளையும் அணுசரனையோடு காண்போம். ஏனெனில் நாம் வேண்டுவது பால் சமன்பாடு, அதன் உண்மையான அர்த்தத்தில்!

(வாரக் கடைசியில் எழுத வேண்டியதாய் போய்விட்டது. ஆபீசில் உட்கார்ந்து வலைப்பூ வாங்கும் வாடிக்கையாளர்கள் இதைப் பார்க்கமுடியாது :-( புதன் கிழமை எழுதினால் வலைப்பதிவு அதிகம் கவனம் பெறுகிறது!)

15 பின்னூட்டங்கள்:

icarus prakash 3/19/2005 09:57:00 AM

// சமன்பாடு என்பது வன்முறையால்தான் வரவேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லாதவன் நான். //

சில இடங்களில் வன்முறை தேவைப் படத்தான் செய்கிறது. வரதட்சணைக் கொடுமை என்று பொய்யாக புகார் செய்து, ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. அரசாங்க அலுவலகத்தில், பதவு உயர்வுக்காக, ஒரு பெண்மணி போராடுவார். மேலிடத்தில் எல்லாம் முறையிட்டதும், விசாரணை நடக்கும். அந்த மேலதிகாரிகள், சர்க்கரை மாதிரி பேசுவார்கள். இருக்கும் இரண்டு காலியிடத்தில் ஒன்று ஒரு ஆண்பிள்ளை ஆபீசருக்கும், இந்தப் பெண்மணிக்கும் கிடைக்கும். நியாயம் கிடைத்து விட்டதுதானே? அதான் இல்லை. ஆம்பிளை ஆபீசரை ஹெட்குவார்ட்டஸிலும், குடும்பம் சகிதம் நகரத்தில் இருக்கிற, தகறார் செய்த பெண்மணியை, திரிபுராவிலும் தூக்கி அடிப்பார்கள். நிஜத்திலும் இப்படித்தான் நடக்கிறது. இந்த மாதிரி நிலைமை இருக்கும் போது, வன்முறைதான் சரி செய்ய இயலும், அப்படித்தான் செய்ய வேண்டும்.


// சில நேரங்களில் ஒரு பதட்டத்தில், exentric-ஆக நடந்து கொள்ளும் பெண் விடுதலைவாதிகளையும் //

அப்பாவிக் கணவன் மார்களை, போலீசில் போட்டுக் கொடுத்த செய்திகளை தினத்தந்தியில் படித்தேன். ஆனால், இவர்களை விடவும், நிஜமாகவே வரதட்சிணைக் கொடுமையால் பாதிக்கப்படுகின்ற பெண்கள் அதிகம். gender discrimination உம் இதே கணக்குத்தான்.

icarus prakash 3/19/2005 09:59:00 AM
This comment has been removed by a blog administrator.
icarus prakash 3/19/2005 10:00:00 AM
This comment has been removed by a blog administrator.
Thangamani 3/19/2005 11:13:00 AM

:}

நா.கண்ணன் 3/19/2005 11:46:00 AM

நன்றி இகாருஸ், தங்கமணி: இந்தியா வன்முறை கொண்ட நாடு. பேச்சில் வன்முறை, செயலில் வன்முறை, சினிமாவில் வன்முறை, கோயிலில் வன்முறை என்று எங்கு நோக்கினும் வன்முறை. அதில் அடங்கி ஒடுங்கிதான் எல்லோர் வாழ்வும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பெண்கள் படும்பாடு ரொம்ப திண்டாட்டம். குடும்ப வன்முறைகளை நிறையப் பார்த்திருக்கிறேன். பாவம் அவர்கள். ஜெர்மனி போன்ற நாட்டில் காவல்துறை உதவும் (சந்திரவதனாவின் திசைகள் கதை வாசிக்கவும்). ஆனால் இந்தியாவில் காவல்துறையையும் நம்பமுடியாது :-(

ஆனால் அறிவுபூர்வமாக யோசித்தால் வன்முறைக்கு மாற்று வன்முறையாக இருக்க சாத்தியமில்லை. மாற்றும் வன்முறையையே வளர்க்கும்.

நா.கண்ணன் 3/19/2005 11:51:00 AM

இகாருஸ்: மூன்று முறை விழுந்துவிட்ட உங்கள் பதில்களைச் சேதாராம் செய்துள்ளேன். உங்கள் இரண்டாவது கருத்துடன் உடன்படுகிறேன்

Narain 3/19/2005 12:36:00 PM

மிக நல்ல பதிவு.

//புதன் கிழமை எழுதினால் வலைப்பதிவு அதிகம் கவனம் பெறுகிறது!)//

இந்த டிஸ்கிளைய்மர் எதற்கு என்றுதான் புரியவில்லை.

டிசே தமிழன் 3/19/2005 02:07:00 PM

கண்ணன்,
முக்கியமான சில குறிப்புக்களை இந்தப்பதிவு சொல்கின்றது. முக்கியமாய்
//அடிப்படை உரிமை கூட இல்லாது, வாய் ஊமையாய், கொத்தடிமையாய் கிடக்கும் மூன்றாம் உலக நாட்டுப் பெண்கள் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருப்பதால் "பால் சமன்பாடு" பற்றி அழுத்திச் சொல்வதில் தவறில்லை. சில நேரங்களில் ஒரு பதட்டத்தில், exentric-ஆக நடந்து கொள்ளும் பெண் விடுதலைவாதிகளையும் அணுசரனையோடு காண்போம். ஏனெனில் நாம் வேண்டுவது பால் சமன்பாடு, அதன் உண்மையான அர்த்தத்தில்! //
கிட்டத்தட்ட இதன் அர்த்தம் சரியாக விளங்காத ஒருபொழுதில், பதிவுகள் விவாதத்தளத்தில் ஒரு பெண்ணுடன் கடுமையாக வாதம் செய்திருக்கின்றேன். பிறகு ரோசாவசந்த் எனக்கு வைத்த குட்டில் இந்த உண்மை விளங்கியது. விளிம்புநிலை மனிதர்களாக இதுவரைகாலமும் (அல்லது இன்னமும்) ஒதுக்கப்பட்ட அவர்களது பதட்டம் நிச்சயம் புரிந்துகொள்ளப்படவேண்டும். இணையத்தில் பெண்களது வருகை நம்பிக்கை தருவதாயிருந்தாலும், இன்னும் பல்கிப்பெருகவேண்டும் என்பதே என் அவாவும். பெண்களுடான நேர்மையான உரையாடல்கள் மூலம் ஆகக்குறைந்து என்னில் (அல்லது எம்மில்) இருக்கும் ஆணாதிக்கக் கருத்துக்களை ஓரளவாவது களைய முடியும் என்று நம்புகின்றேன்.

maalan 3/19/2005 08:04:00 PM

தேசிய மகளிர் ஆணையம் என்று ஓர் அரசு அமைப்பு இருக்கிறது. அது அண்மையில் (ஜனவரி 2005) வெளியிட்டுள்ள அறிக்கை, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று சொல்கிறது. 40 சதவீதம் பெண்கள் வீட்டிற்குள் வன்முறையை சந்திக்கிறார்கள். (கணவனிடமிருந்து).
இன்னொரு கொடுமை என்னவென்றால் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் கர்பிணிகள்!

பெண்களை தெய்வமாக, தேவதையாக, தாயாக வழிபடும் தமிழ்க் கலாசாரத்தில் இது எப்படி என்கிற முரண்பாட்டை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

நான் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஏன் என்று ஒரு நிகழ்ச்சி நடத்துகிறேன். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு மனநலமருத்துவரை அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னது: 'இரட்டை மனம் என்பது தமிழர்களிடம் அதிகம்'. அவர் இதற்கு இன்னொரு சான்றாக தமிழர்கள் காதலை அணுகும் விதம் பற்றிக் குறிப்பிட்டார். நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால் நாட்டினர்தம் வியெப்பெய்தி நன்றாம் என்பார்; ஊடகத்தே, வீட்டினுள்ளே, கிணற்றோரத்தே, ஊரினிலே காதல் என்றார் உறுமுகிறார்' மனோபாவம்தான் என்றார்.

ஒரு பெண்ணியவாதியையும் அழைத்துக் கேட்டேன். அவர் வரதட்சிணைக் கொடுமை, மணவாழ்வில் ஏற்படும் சந்தேகம், பொருளாதார நிர்பந்தங்கள், ஆண்களின் குடிப்பழக்கம் எனப் பல சமூகக் காரணங்களைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் இப்போது பெண்கள் பயமில்லாமல் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. குற்றங்கள் கூடவில்லை, குற்றங்களைப் பற்றிய புகார் கூறுவதுதான் அதிகரித்திருக்கிறது என்கிறது.

தமிழ் கலாசாரத்தில் எங்கேயோ தவறு இருக்கிறது

மாலன்

நா.கண்ணன் 3/19/2005 09:31:00 PM

நன்றி தோழர்களே:

நானாவுக்கு: disclaimer இல்லை :-) அது உண்மை. கொஞ்சம் பின்னூட்டம் போட்டால் புதன்வரை ஓடும் :-))

டிசே தமிழன்: நான் பார்த்த தமிழ் பெண் விடுதலையாளர்களிடம் கொஞ்சம் தேவைக்கு அதிகமான போர்க்குணம் இருக்கிறது. எல்லாம் ஒரே கழுதைகள்தான் என்று ஆண்களைப் பார்க்கும் மனோபாவம். ஆனால் அவர்களுக்கு வீட்டுக்காரரோ அல்லது ஒரு ஆண் தோழரோ வீட்டில் தேவையாக இருக்கிறது. எனவே வீட்டு மனோநிலை, புற மனோநிலை என்று இரண்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். தன் அகவட்டம் தவிர்த்த அனைத்தும் கழுசடைகள் என்று பார்க்கும் மனோபாவம். ஒரு தேவையில்லாத போர்க்குணம். காலம் கனியும், அவர்களும் கனிவார்கள் என எதிர்பார்ப்போம்.

மாலனுக்கு: தமிழர்களின் மனோபாவம், கோளாறுகளை கடந்த சில வருடங்களாக இணையத்தடத்தில் பார்த்து வருகிறேன். வெளியே வந்த பிறகு 'ஒரு கழுகுப் பார்வை'யிலும் பார்க்க முடிகிறது. முதலில் படுவது மிகவும் பிறழ்வுற்ற ஈகோ, இது தாழ்வுணர்ச்சி அல்லது சுயாதீத மதிப்பீடு காரணமாக வருவது. இது அவர்கள் உறவு நிலையை வெகுவாக பாதிக்கிறது. இரண்டாவது, சுயப்புரிதல் இல்லாததால் வரும் ஒரு அதீத பாசாங்குத்தனம். இது மத்திமர்களிடம் அதிகம். அடுத்த திருமணம் என்பது கேள்வியற்ற இருக்கமான நிறுவனமாக்கப்பட்டது. அதில் ஆண் உசத்தி, பெண் தாழ்த்தி எனும் எழுதப்படாத கட்டுமானம். ஒரு இனம் தெரியாத வன்முறை உணர்வு வீரம், கற்பு அது, இதுவென்று சொல்லி வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சேர்ந்து நமது உறவு நிலையை வெகுவாகப் பாதித்து சம நிலையைப் போக்குகிறது. கடைசி, ஆனால் முக்கியமானது we are basically racists. தீண்டாமை, சாதீயம் அது, இதுவென்று குழந்தையிலிருந்தே our minds are corrupted. விமோசனம் சுய கல்வியில்தான் உள்ளது.

பத்மா அர்விந்த் 3/19/2005 09:36:00 PM

kannan
if we need sexual equality, I think it should start at home like charity. a girl who sees her mother being suppressed belives that is how men are and learn to admit abusive spouse and life style. If women need the liberty, and learn to ask, there should be healthy discussions at home. A child need to know it is Ok to say no and protst against any form of abuse.A mother who is tolerating anger, abuse in any form both physical and emotional is sending a wrong signal to her daughter.
sexual descrimination is not less in USA, infact women are more suppressed here as per statistics from WHO. No matter how many glass cealing effect law comes, women are expected to be only secretary here.Men have double standards in hirirng them, and expect them to wear mini skirts (business dress at Wall street), and they get paid low for the same job. How many women CEO are here?
If that women is Lesbian, her normal medical care is also denied here. It is just horrible and will take many Hillaries to come and fight.

Sri Rangan 3/20/2005 03:36:00 AM

கண்ணன் அவர்கட்கு வணக்கம்!
தாங்கள் உலகம் பூராகவும் வாழ்திருக்கிறீர்கள்,இங்கு ஜேர்மனியில் வாழும்போது கவனிக்கவில்லையா இந்தப் பிரச்சனையை?இங்கும்தாம் பாரய பிரச்சனையாகி சட்டம்போட்டள்ளார்கள்.ஒருபெண் பாலில் சேட்டைக்குட்பட்டால்-சேட்டை செய்தவரின் தiவிதியே மாற்றமுறும்.சில தொழிலகங்களில் பெண்ணினது பின்னுருவத்தைப்போட்டு இடைக்குக்கீழே பார்க்கின் தடைக் குறியீடும்,ஆணின் வலிய கரமும் குறியீடாகப் போட்டிருக்கிறார்கள்!அதாவது கைபோடாதே என்றபடி.இங்கு (ஜேர்மனியில்) நீங்கள் கவனிக்காமல் விட்டது இதுமட்டுமே என்றே நான் நினைக்கிறேன்.கவனித்திருந்தால் இன்னொரு 'வசந்த ருதுவும் வண்ணமலர்களும்' கிடைத்திருக்கும்.நல்ல சிறுகதை.இன்று நினைக்கும்போது கூட அதன் இலக்கித் தரம் என்னை வியக்க வைக்கும்.'என் அன்புக்குரிய அன்ன மரியா!நான் தமிழகம் சென்றவுடன் உனக்கொரு நீண்ட கடிதம் எழுதுவதாய்ச் சொல்லியிருந்தேன்,நீ வேடிக்கையாய்ச் சிரித்தாய்.எந்தமொழியில் எனக்கு எழுதுவாய்?உனக்கோ போலந்து மொழி தெரியாது,நீண்ட கடிதமெழுதுமளவுக்கு ஜேர்மன் மொழியில் பரிச்சியம் போதாது.பின் எந்த மொழியில் எழுதுவாய் என்றாய்? எனக்கு இதில் வேடிக்கையே இல்லை. என் தமிழில்தாம் எழுதுவேன்நீண்டதாகவொரு கடிதம்.மொழிகள் தாண்டிய நம் காதலை,எல்லைகள் தாவிய நம் அன்பை,...'இப்படி அசாத்திய கதைகளை எழுதுங்கள் சற்று ரசித்துப் படிப்போம்.இந்தமாதிரி விசயங்களை பெண்களே தீர்மானித்துக் கவனித்துக் கொள்வார்கள்.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

நா.கண்ணன் 3/21/2005 12:16:00 PM

ரங்கன்: மனதைத்தொடும் விதம் எழுதியிருந்தீர்கள். நன்றி. தூய காதல் உணர்வில் நிற்பது சில பொழுதுகளில்தான். அப்போது விழும் சொற்கள் மந்திரச் சொற்கள். அந்தக் கதையின் பாதிப்பு மிக அதிகமானது. பலர் என்னிடம் சொன்னதுண்டு. அது போல் இன்னொரு கதை? வர வேண்டுமென்று நானும் ஆசைப்படுகிறேன்.

நா.கண்ணன் 3/21/2005 01:11:00 PM

Padma: I agree with you. I was once discriminated in Tennesse. It was a big surprise for me as I never experienced such a thing in Europe. Gender eqality comes from self questioning and enquiry not by force. Education helps a lot. I started believing that we are fighting against millions year old biological condioning. Rationality is a product of cultural evolution. But biological evolution is far older. It may take a long, long time before we reach the desired goal. Neverthless we need to fight.

Ramachandranusha 3/21/2005 05:55:00 PM

பெண்ணுரிமை பேசும் பெண்களிடம் நான் பார்ப்பது ஆண்கள் மேல் உள்ள ஒவ்வாமையும், ஆண்களை வெற்றிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே! அவர்களை வெல்ல வேண்டும் என்பதே தவறு. ஆண் வெல்ல வேண்டியவனும் இல்லை பெண் வீழ்த்தப்பட வேண்டியவளும் இல்லை. அடுத்து பல பெண்களிடம் காணப்படுவது சுயபச்சாதாபம்.
ஆணுக்கும் சில பிரச்சனைகள் உண்டு. அதை ஒத்துக் கொண்டுத்தான் ஆக வேண்டும். பெண் தான் கணவனால் படும் கஷ்டங்களை, சோகங்களை தன் பக்கத்து வீட்டுக்காரி அல்லது அலுவலகத்தில் பக்கத்து இருக்கைக்காரி அல்லது பஸ்ஸில் பயணிக்கும் பொழுது பக்கத்தில் அமர்ந்திருக்கும் முன்பின் தெரியாதவள் அனைவரிடத்திலும் தன் கணவன் தனக்கு இழைக்கும் கொடுமைகளை சொல்லிக் கொண்டேயிருக்கலாம். ஆனால் இதையே ஒரு ஆண் தன் மனைவி தன்னை பாடாய் படுத்தும் கதையை யாரிடமாவது சொல்லி அழ முடியுமா? பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். எந்த உரிமையும் கேட்டுக் கொண்டேயிருந்தால் எதுவும் கிடைக்காது. எது தேவையோ அதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!
உஷா