கொரியாவில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு

சமீபத்திய தினமணியில் இதுபற்றிய எழுதிய என் கட்டுரை வந்துள்ளது. வாசித்துப் பயன்பெறுங்கள்.

கொசுறு: தமிழர்களின் பெரிய லொள்ளு இவர்கள் தங்களை ஆங்கிலேயர்கள் போல் பாவித்துக்கொண்டு ஆசிய மொழியின் மென்மையான உச்சரிப்புகளை தடா,புடாவென்று ஆங்கிலேயன் போல் உச்சரிப்பது. திருவனந்தபுரம் என்று நம்மவர் சொல்லமாட்டார் 'றிவாண்றம்' என்று சொல்லுவர். அதுதான் இந்த கட்டுரைக்கு நடந்துள்ளது. நான் சரியான உச்சரிப்பை தமிழில் எழுதினால் இவர்கள் ஆங்கில உச்சரிப்பில் திருத்தி எழுதியுள்ளார்கள் (என்னை மடையனாக்கி விட்டார்கள்!).

சரியான உச்சரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Hyundai = ஹேஉந்தே (ஹுண்டாய் அல்ல!!)
Toyota = தொயோத்தா (டொயோட்டா அல்ல)
Honda = ஹோந்தா (ஹோண்டா அல்ல)
Samsung = சாம்சொங் (சாம்சங் அல்ல)
Nazi = நாட்சி (நாஜி அல்ல) [இது கட்டுரைக்கு சம்மந்தமில்லாதது]

அதே போல் அதீத கற்பனையை தமிழனுக்குள் உருவாக்குவது. நான் கொடுத்த உண்மையான படங்களை விட்டு, விட்டு ஏதோ கற்பனைப் படங்களைப் போட்டுள்ளார்கள்! தமிழ் பதிப்புத்துறை என்று திருந்தும்?

3 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 4/13/2005 11:15:00 AM

அன்புள்ள கண்ணன்,

'லொள்ளூ' இல்லேன்னா தமிழனா இருக்க முடியாதுல்ல-)

என்றும் அன்புடன்,
துளசி.

பாலு மணிமாறன் 4/13/2005 11:58:00 AM

அவங்க தமிழர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டுவிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருக்காங்கன்னு நினைக்கிறேங்க கண்ணன். ஹோண்டா என்று பழக்கப்பட்டுவிட்ட வார்த்தையை "ஹோந்தா"ன்னு மாத்தினீங்கன்னா படிக்கிறவன் முழிக்கிறதை இப்படித்தான் சொல்வாங்க "பேந்த...பேந்த"!

அதுமட்டுமில்ல...திணமணியில இருக்கிறவங்களை கடிதம் எழுதி திட்டுவாங்க.உங்க ஆதங்கம் புரியுது. ஆனால் ... :)))

நா.கண்ணன் 4/13/2005 01:30:00 PM

துளசி! நீங்க ரொம்ப அன்பானவங்களா இருக்கீங்க. எப்பவுமே, எல்லாமே இதமாச் சொல்லறீங்க. உங்களப் பாத்து பொறாமைப் படத்தான் முடியும் :-)

மணிமாறன்! நீங்கள் சொல்வது புரிகிறது. மணிப்பிரவாளத்தையும், வடமொழியையும், கிரந்தத்தையும் சாடி விட்டு, ஆங்கிலமற்ற ஒரு தமிழ் சொல்லாடலோ! ஆங்கில உச்சரிப்பற்ற ஒரு வார்த்தையோ பேசும் திறனை முழுமையாய் இழந்துவிட்டு நிற்கிறது தமிழுலகம்! ஐந்தில் வளையாதது இனி ஐம்பதில் வளையாது :-(