முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே!திடீரென்று பழைய படங்களின் வீடியோ பார்க்க வேண்டும் போல் ஆசை வந்து விட்டது. "இனியவை நாற்பது, இன்னா நாற்பது" என்பது போல் இப்போதெல்லாம் பழயவை இனியவை என்று எத்தனையோ வீடியோக்கள் வந்துவிட்டன. எல்லாம் கருப்பு, வெளுப்புப் படங்கள். தியேட்டரில் பார்க்கும் போதே சரியாகத்தெரியாது, வீடியோவிற்கு வரும் போது உள்ளதும் மங்கிப்போய் விடுகிறது. ஆனாலும் தமிழ் சினிமாவின் வசீகரமே தெரிந்தும் தெரியாமலும் காட்டுவதுதானே! அதுவும் நமது அந்தக்காலத்து நடிகைகள் இக்கலையில் தேர்ந்தவர்கள். கண்ணால் கூப்பிடுவர், கை தொட்டால் விலகிடுவர். முகபாவத்தை வைத்துக்கொண்டு மட்டுமே தமிழ் சினிமா பல தசாம்சங்கள் ஓட்டியிருக்கிறது. இப்போது பார்க்கும் போதுதான் தெரிகிறது எல்லா நடிகர்களும், நடிகைகளும் உச்சத்தை எட்டும் போது பாதிக்கிழடு ஆகியிருக்கின்றனர். யௌவனம் என்பது மட்டுமில்லை, நடிகைகளெல்லாம் தளுக்கு மினுக்கு என்று தள, தள என்று இருக்கிறார்கள். பெரிய வயிறை வைத்துக் கொண்டு அரைப்பாவடையில் நடிகைகள் நடனம் ஆடுகின்றனர். ஏற்றிக்கட்டிய கச்சை, பள, பளவெனும் சாட்டின் ரவிக்கை....வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ் சினிமா இப்போது எவ்வளவு மாறிவிட்டது! உண்மையிலேயே இளைஞர்கள் நடிக்கிறார்கள் (ஆனால், சார்லி, விவேக் என்ற சகபாடிகள் மட்டும் 30-40 எட்டிவிட்டார்கள்!) சிலுக்கு, ஜோதி போன்ற போர்னோ நடிகளைகளை ஓரம் தள்ளிவிட்டு சிம்ரன், ரம்யா என்று செக்ஸைப் பிழிந்து காட்டும் கட்டழகுகள் வந்து விட்டன. ஐஸ்வர்யராய் நடிகைகளின் ஆதர்சமாக இருக்கிறார். சிவாஜி ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சைஸில் இருப்பார். அவர் குரல், முகம் இதை மட்டும் வைத்தே அவர் காலத்தின் பெரும்பகுதி ஓடிவிட்டது (எவ்வளவு சௌந்தர்யமான நடிகர் அவர். உடலைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அவர் காலத்தை ஓட்டிவிட்டார்). எம்ஜியார் மட்டும் எப்போதும் ஒரே மாதிரி பூசிய உடம்பை வைத்திருந்தார்.

இன்றையப் படங்களைக் காணும் போது இல்லாத ஒரு அன்னியோன்யம் பழைய படங்களில் வருகிறது. காரணம் சம வயது போன்ற ஒரு பாவனையால் கூட இருக்கலாம் :-) யார் கண்டது?

லலிதா, பத்மினி, ராகினி, சாவித்திரி, சரோஜாதேவி, கமலா லட்சுமணன்......ம்ம்ம்ம்ம்

குட்நைட்!

14 பின்னூட்டங்கள்:

வசந்தன்(Vasanthan) 4/23/2005 12:07:00 AM

எனக்கென்னவோ நீங்கள் அதிகம் விவரித்தது தற்காலத்தைப் பற்றித்தான் போலிருக்கிறது.

சொல்ல மறந்துவிட்டேன்.
முல்லை மலர் மேலே மொயக்கும் வண்டு போலே...
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் என் மகராணி உனைக்காண.....

இந்த ரெண்டு பாட்டும் நான் எட்டு வயதில என்ர மாமன் ஒருத்தரிண்ட கலியாண வீட்டில கேட்டனான். அதுவும் மாப்பிளை தனிய முதல் பாட்டயும் மாப்பிளையும் பொம்பிளையும் சேந்து ரெண்டாவது பாட்டையும் பாடினவை.
அண்டையில இருந்து இந்த ரெண்டு பாட்டும் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாத்தான் இருக்கு. இண்டைக்கும் இதில ஏதாவதொண்டைக் கேட்டாலும் அந்தக் கலியாண வீடும், இரவு கும்பலாயிருக்கேக்க அவயள் பாடின பாட்டுக் காட்சியும் தான் ஞாபகம் வரும்.

ஆர் கண்டது பாடின அவயளுக்கே இது மறந்துபோயிருக்குமோ என்னவோ?

icarus prakash 4/23/2005 01:07:00 AM

//லலிதா, பத்மினி, ராகினி, சாவித்திரி, சரோஜாதேவி, கமலா லட்சுமணன்......ம்ம்ம்ம்ம்//

kamala lakshman??????

இராதாகிருஷ்ணன் 4/23/2005 06:42:00 AM

// முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே!// தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற முகமென்று ஒன்று... :)

நா.கண்ணன் 4/23/2005 10:06:00 AM

இராதாகிருஷ்ணன்: பழைய படங்களில் உண்மையில் முக பாவம் ஆச்சர்யமான வகையில் அமைந்திருக்கிறது. அவர்களால் அப்போது கண்களால் பேசமுடிந்திருக்கிறது. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி, கண்டசாலா, ஏம்.ராஜா, டி.எம்.எஸ் என்று எவர் பாடினாலும் அக்குரலுக்கு ஏற்றவாறு சிவாஜி வாயசைப்பது உலக அதிசயம்!

நா.கண்ணன் 4/23/2005 10:10:00 AM

இகராகஸ்: கமலா லட்சுமணன் ஒரு தேர்ந்த நடிகை. பத்மினிக்கு சவால்விடும் னாட்டியம். பாவம்! நம்ம 'சச்சு' மாதிரி கொஞ்சம் பொக்கை வாய். அதனால் கடைசிவரை பரத நாட்டிய டான்ஸ்க்கு மட்டுமென்று ஆகிப்போனது. சில படங்களில் திடீரென்று சிவதாண்டத்திற்கு மட்டும் 'கோபி கிருஷ்ணா' தோன்றுவார். அதுவொரு வேடிக்கையான உலகம்!

நா.கண்ணன் 4/23/2005 10:15:00 AM

வசந்தன்:
உங்கள் யாழ் பேச்சு இனிக்கிறது :-) இப்படிப் பேசுவது மாதிரி எழுதுவது தமிழ் இலக்கியத்தில் பலகாலம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது.

உண்மையில் நான் தமிழ்நாட்டை இழந்திருந்த வேளையில் ஈழத்து சமூகம்தான் எனக்கு அதை மீட்டுத்தந்தது. 90களில் வரும் புதுத்தமிழ் பாடல்களையெல்லாம் நான் ஐரோப்பிய இலக்கிய சந்திப்புகளில் ஈழத்து நண்பர்கள் மூலமாகவே அறிந்து கொண்டேன். கிருஷ்ணராஜா நன்றாகப் பாடுவார் (ஓவியர், நடிகர், புகைப்படக்கலைஞர்!).

அந்தக்காலத்தை அறியாத ஒரு தலைமுறை தமிழ் மண்ணில் வந்து விட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை!

icarus prakash 4/23/2005 02:26:00 PM

//நம்ம 'சச்சு' மாதிரி கொஞ்சம் பொக்கை வாய். அதனால் கடைசிவரை பரத நாட்டிய டான்ஸ்க்கு மட்டுமென்று ஆகிப்போனது//

ஓ அவரா? 'ரசிக்கும் சீமானே வா...' வுக்கு ஆடிய குமாரி கமலா என்று இருந்திருந்தால் சட்டென்று கண்டுபிடித்திருந்திருப்பேன்.... நன்றி கண்ணன்.

ஜெயந்தி சங்கர் 4/23/2005 06:56:00 PM

//நம்ம 'சச்சு' மாதிரி கொஞ்சம் பொக்கை வாய்.//

கமலா லக்ஷ்மணனை என்ன வேணா சொல்லிக்கோங்க. சச்சுவ மாதிரி அழகு கிடையாது.
சரியா பயன் படுத்தப்படவில்லை சச்சு. ரொம்ப லக்ஷ்ணமான மொகம்.

மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும்

துள்ளித்துள்ளி விளையாடத் துடிக்குது மனடசு, தோழி,..

ரெண்டுலயுமே சூப்பர் டான்ஸ்
சச்சு ரசிகை,
ஜெயந்தி

நா.கண்ணன் 4/24/2005 12:10:00 AM

ஜெயந்தி:

கோபிச்சுக்காதீங்க :-)

என்னோட சித்தி பொண்ணு கூட சச்சு மாதிரி இருப்பா.

ஆனந்தனுடன் கதாநாயகியா சச்சு நடிச்சிருக்காங்க. "ரோஜா மலரே ராஜகுமாரி" ஞாபகம் இருக்கா?

பின்னால என்னமோ சின்னச் சின்ன ரோலை எடுத்துக்கிட்டு, காதலிக்க நேரமில்லைக்கு அப்புறம் நாகேஷ் ஜோடியாப் போயிட்டாங்க.

கிழவியானாலும் சில முகங்கள் கிழடு தட்டுவதில்லை. உதாரணம், லக்ஷ்மி, பண்டரிபாய். இந்த வகையில் சச்சுவும் சேருகிறார்கள். அவர்களது இன்றைய டிவி சீரியல் இதற்குச் சான்று.

எல்லோருக்கும் இது வாய்ப்பதில்லை. சிவாஜியோட சமீபத்திய படங்களைப் பார்த்தால் பயமா இருக்கும். எப்படியிருந்த முகம் எப்படியாகிடுச்சு?

ஆனாலும், நான் சச்சு ரசிகன் இல்லை ;-)

கண்ணன்

நா.கண்ணன் 4/24/2005 12:14:00 AM

இகாரஸ்:

ரசிக்கும் சீமானே! பாட்டுக்கு ஆடுவது குமாரி கமலா போல் தெரியலையே? யாரோ ஆனா நல்லா ஆடறாங்க. என்னோட வீடியோக் கோளாறாகவும் இருக்கலாம் (படத்தில் முகம் சீராகத் தெரியவில்லை). குமாரி கமலா பின்னால் கமலா லக்ஷ்மணன் ஆகிறார். கொஞ்சும் சலங்கையோ என்னவோ, ஒரு படத்தின் தலைப்புப் பாட்டிற்கு (டைட்டில் சாங்க்) கோயில், கோயிலாகக் காட்டி ஆடுவார். Superb. அதுலே திருப்பூவணம் பதிகத்திற்கும் அவர் ஆடியிருப்பார் (எங்க ஊர்).

நா.கண்ணன் 4/24/2005 12:16:00 AM

ஜெயந்தி:

கோபிச்சுக்காதீங்க :-)

என்னோட சித்தி பொண்ணு கூட சச்சு மாதிரி இருப்பா.

ஆனந்தனுடன் கதாநாயகியா சச்சு நடிச்சிருக்காங்க. "ரோஜா மலரே ராஜகுமாரி" ஞாபகம் இருக்கா?

பின்னால என்னமோ சின்னச் சின்ன ரோலை எடுத்துக்கிட்டு, காதலிக்க நேரமில்லைக்கு அப்புறம் நாகேஷ் ஜோடியாப் போயிட்டாங்க.

கிழவியானாலும் சில முகங்கள் கிழடு தட்டுவதில்லை. உதாரணம், லக்ஷ்மி, பண்டரிபாய். இந்த வகையில் சச்சுவும் சேருகிறார்கள். அவர்களது இன்றைய டிவி சீரியல் இதற்குச் சான்று.

எல்லோருக்கும் இது வாய்ப்பதில்லை. சிவாஜியோட சமீபத்திய படங்களைப் பார்த்தால் பயமா இருக்கும். எப்படியிருந்த முகம் எப்படியாகிடுச்சு?

ஆனாலும், நான் சச்சு ரசிகன் இல்லை ;-)

கண்ணன்

meena 4/25/2005 05:01:00 AM

முல்லைமலர் மேலே...அருமையான பாட்டு! அதேபோல் வஞ்சிக் கோட்டைவாலிபன்!
'வெண்ணிலவே தன்மதியே என்னுடனே வா..வா..' பத்மினி நிலவொளியில் படகில் அமர்ந்து பாடுவதுபோல்!இன்னொன்று மன்னாதிமன்னனில்' கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ...பத்மினி! அழகோ அழகு!!.

கமலாலக்ஷ்மன்! 'பாவைவிளக்கில்
'சிதறிய சலங்கைகள் போலே... சிதறியதே...என் எண்ணங்கள் மண் மேலே...!அருமையான நாட்டியத்துடன் கமலாலக்ஷ்மன் சோகத்தைப் பொழிவார்!.

ஜெயந்தி, 'ரோ..ஜா மலரே ரா..ஜகுமாரி... பாட்டுக்கான காட்சியில்! சச்சு குட்டிப்பொண்ணா சிட்டுப்போல் அழகு! இதுவரை அவருக்கு நான் மட்டும் தான் ரசிகை என நினைத் திருந்தேன்!

அன்பு
மீனா.

இந்தப் பதிவை இங்கிட்ட அன்றே இதற்கு பின்னூட்டம் வைக்க நினைத்து
ஏனோ பின்னூட்டப் பெட்டி திறக்கவே முடியலை ரொம்பவும் சண்டித்தனம்
செய்துவிட்டது!.

நா.கண்ணன் 4/25/2005 08:01:00 AM

அன்பு மீனா:

நீங்கள் பெரிய ரசிகைதான். பத்மினியோட அழகு சொக்க வைக்கும் அழகு இல்லையா? லலிதா, பத்மினி, ராகினி. சகோதரிகளுக்குள் எவ்வளவு ஒற்றுமை, வேற்றுமை! ராகினி இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு ஹாலிவுட் நடிகையை ஞாபகப்படுத்துகிறார். யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

வலைப்பெட்டி உங்களுக்கு மட்டும் பிரச்சனை என்றில்லை. இந்த blogspot-ஏ எனக்குப் பெரிய பிரச்சனை. ஒவ்வொருமுறையும் உங்கள் பின்னூட்டங்களுக்குப் பதில் அளிப்பதற்குள் பெரும் பாடாக உள்ளது.

நமது வலைஞர்களில் கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் ஒரு Proxy Server நடத்தினால் பலரது பிரச்சனை தீரும்! ம்ம்ம்ம்

விடியலின் கீதம். 8/20/2005 06:35:00 AM

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேற்க மாட்டாயா.....!!?