பழைய குருடி கதவைத் திறடி!

அங்கே இங்கே சுத்திட்டு மீண்டும் புளோகருக்கே வந்துட்டேங்க. காரணம் இதிலேதான் நம்ம தமிழ் மணம் பட்டை சரியா வேலை செய்யுதுங்கோ! பட்டையக் கிளப்ப இந்தப் பட்டையவிட்டா வேற வழி இல்லையே!

3 பின்னூட்டங்கள்:

Vasudevan Letchumanan 2/12/2006 11:08:00 PM

கனிந்த வணக்கம் ஐயா,

தங்களின் கருத்தாழமிக்க கட்டுரைக்காக
மீண்டும் காத்திருக்கிறேன், தமிழ் மணத்தில்.

முதுசொம் காப்பகம் பற்றி முன்பு எழுதிவந்தீர்கள்.அதன் வளர்ச்சி எப்படி உள்ளது?

எங்கள் அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ.எஸ்.சாமிவேலு முதுசொம் காப்பகத்திற்காக 'விதைப் பணத்தை'- தங்கள் உரையின் இடையே அறிவிக்கும் போதும் பின்பு முறையே வழங்கிய போது, அரங்கில் இருந்தேன்.


அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா

நா.கண்ணன் 2/13/2006 02:24:00 PM

அன்புள்ள வாசுதேவன்:

முதுசொம் காப்பகம் மள, மளவென்று வளர்ந்துவருகிறது. கொடுத்தவர் கைராசி போலும். நிறையப் புத்தகங்களும், ஏடுகளும் சென்னையில் தொடர்ந்து பதிவாகிவருகின்றன. முதுசொம் இப்போது சென்னையில் பதிவுபெற்ற நிறுவனம். நன்கொடைகளுக்கு வரி விதிவிலக்கு பெற்றிருக்கிறது. முதுசொம் வலைப்பதிவொன்று உருவாகியுள்ளது. அது தமிழ் மணத்தில் தோன்றுவதில் கருவிப்பட்டை பிரச்சனையுள்ளது! அதைத் தமிழ் மணம்தான் தீர்க்க வேண்டும். முதுசொம் வலைப்பதிவிற்கு அடிக்கடி வாருங்கள்!

Vasudevan Letchumanan 2/14/2006 01:28:00 AM

வணக்கம் ஐயா,

தங்களின் மறுமொழியைக் காண்பதற்கு முன்பே 'கூகில்' வழி தேடிப் பார்த்து
- புதிய தளத்தைக் கண்டு பெரும் மகிழ்வு
அடைந்தேன்.

வலைப்பதிவின் வடிவமைப்பாளர் / நிர்வாகி சுபா அவர்களுக்கும், ஏனைய பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்.