அவத்தை

இடைவெளிகளை இல்லை எனச்
சொல்லவில்லை!

வாழ்விற்கும் சாவிற்கும்
பல நேரம் இடைவெளியே
இருப்பதில்லை.
இரைதேடும் புலியும்
இரையாடும் மானும்
ஒன்றாகவே வாழ்கின்றன
ஆப்பிரிக்க வெளிகளில்.

இக்கடிதம் தோன்றும்
பொழுதும் மின்வெளியில்
பரக்கும் போதும் இடைவெளி
இருப்பதும் தெரிவதில்லை.

சித்தமும் பித்தமும்
கலந்தே இருக்கின்றன
பித்தத்தைப் பிரதாபித்து
சித்தம் பேசும்
தருணமுமுண்டு.

அட! நீ கனவில் வருவதும்
கலந்து பின் போவதும்
நனவில் வேருரு கொண்டு
சிரித்து மகிழ்வதும்
கனவா நனவா என்று
கேள்விகள் எழுவதுண்டு

இடைவெளியை இல்லையென்று
சொல்லவில்லை நான்
இரண்டையும் காண்பது
நான் என்கிறேன்
பொருள் என் கைவசம்
இருக்கும் வரை
அர்த்தமே ஓர்
அவஸ்தைதான் போ!

1 பின்னூட்டங்கள்:

J.S.ஞானசேகர் 2/24/2006 04:00:00 PM

இயற்கை அன்னை ஒரு மார்பிலிருந்து, மறு மார்புக்கு மாற்றும்போது இருக்கும் இடைவெளிதான், மனித வாழ்க்கை.

-இரவிந்திரநாத் தாகூர்