அபத்தங்கள் அவசியமானவை....சில நேரம் :-)

என்னால் முடியாத ஒன்று, 'கடி ஜோக்' சொல்வது, கீழே உள்ளது போல் 'தத்து-பித்து என்று தத்துவங்கள் சொல்வது. அபத்தங்கள் தரும் நகைச்சுவை சில சமயம் மருத்துவச் சிறப்புப் பெறுகிறது! முத்தமிழ் இணையக்குழுவில் தேவராஜ் பொழிந்த தத்துவ மழை இங்கே....:-))சோடாவ Fridgeல வச்சா Cooling சோடா ஆகும்,
அதுக்காக அத Washing Macineல வெச்சா washing சோடாவாகுமா?


Ghee roastல ghee இருக்கும்
Paper roastல Paper இருக்குமா?


தண்ணீரை "தண்ணீ" ன்னு சொல்லலாம்
ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்ல முடியாது


உலகம் தெரியாம வளர்ரவன் வெகுளி
Cricket தெரியாம வெளையாடுறவன் Ganguly


அரிசி கொட்டினால் வேற அரிசி வாங்கலாம்
பால் கொட்டினால் வேற பால் வாங்கலாம்
தேள் கொட்டினால் வேற தேள் வாங்க முடியாது


என்ன தான் Karateல Black Belt வாங்கினாலும்
சொறி நாய் தொறத்தினால் ஓடித்தான் ஆகனும்


என்ன தான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதால மீன் கொழம்புல நீந்த முடியாது

Quarter அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்
ஆனா குப்புற படுத்துட்டு Quarter அடிக்க முடியாது


நீ எவ்வளவு பெரிய Dancerஆ இருந்தாலும்
உன் சாவுக்கு உன்னால ஆட முடியுமா?


பணம் வரும் போகும்
பதவி வரும் போகும்
காதல் வரும் போகும்
கவலைவரும் போகும்
ஆனா AIDS வரும், போகாது!!


Poison பத்து நாளானாலும் பாயசம் ஆக முடியாது
ஆனா பாயசம் பத்து நாளானா Poison ஆகிடும்


வாயால "நாய்" ன்னு சொல்ல முடியும்
நாயால "வாய்"ன்னு சொல்ல முடியுமா?


Cycle Carrierல Tiffin வைக்க முடியும்
ஆனா Tiffin Carrierல Cycle வைக்க முடியுமா?


Bus போனாலும் Bus Stand அங்கேயே தான் இருக்கும்
ஆனா Cycle போனா Cycle Stand கூடவே போகும்

Train எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியா தான் வரும்

Ticket வாங்கிட்டு உள்ளே போகுறது Cinema Theatre,
உள்ளே போயிட்டு Ticket வாங்குறது Operation Theatre


Cream Biscuitல cream இருக்கும்
ஆனா நாய் Biscuitல நாய் இருக்காது

Busல நீ ஏறினாலும்
Bus உன் மேல ஏறினாலும்
Ticket வாங்க போறது நீதான்

Chair ஒடைஞ்சா உட்கார முடியாது
கட்டில் ஒடைஞ்சா படுக்க முடியாது
ஆனா முட்டை ஒடைஞ்சா தான் Omlet போட முடியும்


காக்கா என்ன தான் கறுப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை
முட்டை என்ன தான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்குற காக்கா கறுப்பு தான்

Tongyong International Music Festivalஇசைக்கு காது பழக வேண்டும். இது நம்ம இசைக்கே எனில், அடுத்தவர் இசைக்கு காதைத் திருகி ப்ழக்கப்படுத்த வேண்டும். இந்தியர்களுக்கு இசை ஞானம் உண்டு. இந்தியா பெரிய நாடு என்பதால் நமது பிராந்திய இசையை அறிவதே பலருக்கு பெரும்பாடாக இருப்பதுண்டு. ஆயினும் ஜீபின்மெஹ்தா போல மேற்கத்திய இசையை கற்றுத் தேர்ந்த மேதைகளுண்டு. உண்மையாக மேலை இசையை அறிந்த அளவு கூட நாம் கீழை இசையை அறிந்து வைத்தோமில்லை. சீன சம்பிரதாய இசை மேற்கத்திய இசையைவிட வயதால் மூத்தது. பல்வேறு நுணுக்கங்கள் கொண்டது. மதுரை ஜி.மணி ஐயர் சொல்வது போல் 'அவையெல்லாம் வெறும் மோகன ராகத்தின் சாயை' என்று ஒத்தை வரியில் ஒதுக்கிவிட முடியாது.படம் எடுக்கக்கூடாது என்ற சட்டத்தை மீறி எடுத்தால் இவ்வளவுதான் வரும்!


இன்று மாலை தொங்யோங் சர்வதேச இளவேனிற் கச்சேரியின் கடைசி நாள் நிகழ்விற்கு போகும் வாய்ப்புக் கிடைத்தது. புல்லரித்துப் போய் விடவில்லை. ஆனால் ஏதோ புதிய உலகைக் கண்ட அதிசயம் நிற்கிறது. புல்லாங்குழல் என்றால் அதில் இத்தனை வித்தியாசமான இசையை உருவாக்க முடியுமா? சும்மா, நம்ம ஊர் இலை சுருட்டி 'பீப்பி' போல ஒரு வாத்தியத்தைக் கூட சாஸ்தீரிய சங்கீத அளவிற்கு உயர்த்த முடியுமா? மனிதக் குரலை மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி, அப்புறம் காதில் விழாத ஸ்தாயி என்றெல்லாம் கூடக் கொண்டு போய் பாடமுடியுமா? வீணையின் மூத்த சகோதரிகள், சாரங்கின் சகோதரர்கள் கொரியாவில் இருப்பது நமக்குத் தெரியுமா? அதன் இசை இன்னது என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்ல முடியுமா? இசை என்பது எங்கிருக்கிறது? அதன் உண்மை சொரூபம் என்ன? அது ஏன் இந்தியாவில் ஒரு மாதிரி இருக்கிறது? கொரியாவில் ஒரு மாதிரி இருக்கிறது?

கேள்விகள்தாங்க மிஞ்சியிருக்கு. உங்களுக்காக கச்சேரியில் சுட்ட இசை. இதுவும் அனுமதிக்கப்படாததே! இருந்தாலும் இந்தப்பக்கம் வந்து போறவங்களை உத்தேசித்து அத்துமீறி பதிவு செய்தது. 5 நிமிடம் ஓடுகிறது.


படத்தைத் தட்டுங்கள்!

Laws Which Newton Forgot to StateLAW OF QUEUE: If you change queues, the one you have left will start to move faster than the one you are in now.

LAW OF TELEPHONE: When you dial a wrong number, you never get an engaged one.

LAW OF MECHANICAL REPAIR: After your hands become coated with grease, your nose will begin to itch.

LAW OF THE WORKSHOP: Any tool, when dropped, will roll to the leastaccessible corner.

LAW OF THE ALIBI: If you tell the boss you were late for work becauseyou had a flat tire, the next morning you will have a flat tire.

BATH THEOREM: When the body is immersed in water, the telephone rings.

LAW OF ENCOUNTERS: The probability of meeting someone you knowincreases when you are with someone you don't want to be seen with.

LAW OF THE RESULT: When you try to prove to someone that a machinewon't work, it will!

LAW OF BIOMECHANICS: The severity of the itch is inverselyproportional to the reach.

THEATRE RULE: People with the seats at the furthest from the aisle arrive last.

LAW OF COFFEE: As soon as you sit down for a cup of hot coffee, your boss will ask you to do something which will last until the coffee is cold.

ரெ.காவின் 'பினாங்'

தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த மலேசிய நாவலாசிரியர் தனது சுவாரசியமான நடையில் பினாங் கதையை ஒரு முதுசொம் தேடலாகச் சொல்லத்தொடங்கியுள்ளார்.

இத்தொடரை வாசிக்க!

மாகவிஞன் திருலோகம்

புதிய தலைப்பு: மாகவிஞன் திருலோகம்
கட்டுரை ஒலிப்பதிவு: ஸ்ரீரங்கம் வே.மோகனரங்கன்

இக்கட்டுரை 2001 கணையாழி ஆகஸ்டு இதழில் வந்திருக்கிறது. அதை எழுதிய திரு.மோகனரங்கனே அதை வாசிக்கும் போது கட்டுரை உயிர் பெறுகிறது. தன் தந்தை வேணுகோபாலன் வழியாக முறையாக நாடகவியல் பயின்ற மோகனரங்கனின் கட்டுரை வாசிப்பு என்பது ஒரு கேட்கும் அனுபவம். இவர் கட்டுரை கேட்ட பிறகு, பாரதி வாழ்ந்த காலத்திலேயே இப்படியொரு கவிஞன் வாழ்ந்திருந்தானா? அவனை நாம் ஏன் இவ்வளவு காலம் அறிந்து கொள்ளாமலிருந்தோம்? அவனது எழுத்துக்களை இனியாவது தேடிப்படிப்போமா? அவன் நடத்திய 'தேவ சபையின்' ஓரத்தில் ஒளிந்திருந்து கேட்கும் பாக்கியம் கூட நமக்கு கிடைக்கவில்லையே? என்பது போன்ற கேள்விகள் நம்மைச் சூழும்.


திரு.மோகனரங்கன் அவர்கள் தமிழ் மக்களிடையே ஒரு முதுசொம் வேட்டையை துவக்கியிருக்கிறார்கள். அது அலையாய் பாய்ந்து செல்லும் காலம் நெருங்கி விட்டது.


தமிழ் கேட்கும் ஆர்வமுள்ள எவரும் கவிஞர் திரு.மோகனரங்கனின் வாசிப்பில் சொக்கிப்போவர். இது மிகை அல்ல, உண்மை! என்பதை நீங்கள் கேட்டால்தான் புரியும்.


கட்டுரை வாசிப்பைக் கேட்க, சொடுக்குக!
இக்கட்டுரை முழுவதும் பல ஒலி அஞ்சல்களாக எனக்கு வந்தன. நீங்களும் ஒலி அஞ்சல்கள் அனுப்பலாம். செய்ய வேண்டியது VoiceSnap வலைத்தளம் சென்று, பதிவு செய்து, ஒலிஅஞ்சல் செயலியை இயக்க வேண்டியது!

இருள் முயக்கு

நண்பர்களே:


குரல் அஞ்சல் மூலம் கவிஞர் திருலோகு சீதாராம் அவர்களின் 'இருள் முயக்கு' எனும் கவிதையை ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் அவர்கள் முதுசொம் வலைப்பதிவில் வழங்கியிருக்கிறார்.


கவிதை கேட்க!


பாரதியின் கவிதைகள் அனைத்தையும் பட்டி தொட்டிகளிலெல்லாம் கீதமிசைத்தவர் கவிஞர் சீதாராம். அவருடன் பழகும் வாய்ப்புப் பெற்ற மோகனரங்கன் அவர் பாணியில் தன் வெங்கலக்குரலில் இக்கவிதையை வாசிக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

என்னுள் காலம் (ஒலிப்பதிவு)
this is an audio post - click to play


கவிதை வாசிக்க!

Signs of our time!

In a Bangkok temple:
"IT IS FORBIDDEN TO ENTER A WOMAN, EVEN A FOREIGNER, IF DRESSED AS A MAN."

Cocktail lounge, Norway:
"LADIES ARE REQUESTED NOT TO HAVE CHILDREN IN THE BAR."

Doctors office, Rome:
"SPECIALIST IN WOMEN AND OTHER DISEASES.

Dry cleaners, Bangkok:
"DROP YOUR TROUSERS HERE FOR THE BEST RESULTS.

In a Nairobi restaurant:
"CUSTOMERS WHO FIND OUR WAITRESSES RUDE OUGHT TO SEE THE MANAGER."

On an Athi River highway: this is the main road to Mombasa, leaving Nairobi.
"TAKE NOTICE: WHEN THIS SIGN IS UNDER WATER, THIS ROAD ISIMPASSABLE."

On a poster at Kencom:
"ARE YOU AN ADULT THAT CANNOT READ? IF SO, WE CAN HELP."

In a City restaurant:
"OPEN SEVEN DAYS A WEEK AND WEEKENDS."

A sign seen on an automatic restroom hand dryer:
"DO NOT ACTIVATE WITH WET HANDS."

In a cemetery:
"PERSONS ARE PROHIBITED FROM PICKING FLOWERS FROM ANY BUTTHEIR OWN GRAVES."

Tokyo hotel's rules and regulations:
"GUESTS ARE REQUESTED NOT TO SMOKE OR DO OTHER DISGUSTINGBEHAVIOURS IN BED."

On the menu of a Swiss restaurant:
"OUR WINES LEAVE YOU NOTHING TO HOPE FOR."

In a Tokyo bar:
"SPECIAL COCKTAILS FOR THE LADIES WITH NUTS."

Hotel, Yugoslavia:
"THE FLATTENING OF UNDERWEAR WITH PLEASURE IS THE JOB OFTHE CHAMBERMAID."

Hotel, Japan:
"YOU ARE INVITED TO TAKE ADVANTAGE OF THE CHAMBERMAID."

In the lobby of a Moscow hotel across from a Russian Orthodox monastery:
"YOU ARE WELCOME TO VISIT THE CEMETERY WHERE FAMOUS RUSSIANAND SOVIET COMPOSERS, ARTISTS, AND WRITERS ARE BURIED DAILYEXCEPT THURSDAY."

A sign posted in Germany's Black Forest:
"IT IS STRICTLY FORBIDDEN ON OUR BLACK FOREST CAMPING SITETHAT PEOPLE OF DIFFERENT SEX, FOR INSTANCE, MEN AND WOMEN,LIVE TOGETHER IN ONE TENT UNLESS THEY ARE MARRIED WITH EACHOTHER FOR THIS PURPOSE."

Hotel, Zurich:
"BECAUSE OF THE IMPROPRIETY OF ENTERTAINING GUESTS OF THEOPPOSITE SEX IN THE ROOM, IT IS SUGGESTED THAT THELOBBY BE USED FOR THIS PURPOSE."

Advertisement for donkey rides, Thailand:
"WOULD YOU LIKE TO RIDE ON YOUR OWN ASS?"

The box of a clockwork toy made in Hong Kong:
"GUARANTEED TO WORK THROUGHOUT ITS USEFUL LIFE."

In a Swiss mountain inn:
"SPECIAL TODAY - NO ICE-CREAM."

Airline ticket office, Copenhagen:
"WE TAKE YOUR BAGS AND SEND THEM IN ALL DIRECTIONS."

A laundry in Rome:
"LADIES, LEAVE YOUR CLOTHES HERE AND SPEND THE AFTERNOONHAVING A GOOD TIME."

ps: Indian English is hilarious as well. If you have some...please place them in the comment box :-)

சி.புஸ்பராஜா
இறப்பவர்க்கில்லை துக்கம்
அது இருப்பவர்க்கே!

இன்னொரு நண்பனை இழந்திருக்கிறேன் என்று இரண்டு நண்பர்கள் ஜெர்மனியிலிருந்து செய்தி அனுப்பியிருந்தனர். புஸ்பராஜா ஒரு போராளி. களத்தில் மட்டுமல்ல, தன் உடலுடனும் போராடியவர். இரண்டு இதய அறுவை சிகிச்சை, கடைசியாக கல்லீரல் சிகிச்சை. ஆனால் அதெற்கெல்லாம் பயப்படாதவர். அதையும் வாழ்வின் ஓட்டமாக எடுத்துக்கொண்டு செல்பவர். ஒரு இரவில் கவி ஜெயபாலன், இவர் வடக்கிருக்க இந்தியா சென்றுவிட்டார் என்றார். ஈழம் இல்லையென்றானவுடன் எத்தனையோ போராளிகளுக்கு தமிழகமே தாய் வீடானது. என்னைப் போன்ற ஊர் சுற்றிகளுக்கு, வெளிநாட்டில் வந்து வாழும் ஈழச் சமூகமே தமிழகமானது! முதன் முதலாக பெர்லின் இலக்கிய சந்திப்பில் பார்த்த தமிழ் முகங்கள் அப்படியே நெஞ்சில் பதிந்துள்ளன. கலைச்செல்வனும், புஸ்பராவும் என்னை முதன் முதலாக பாரிஸ் வட ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்தது நேற்று போலுள்ளது. இப்போது இருவரும் இல்லை. அவர்களின் நினைவுகளும், அன்பும் மட்டுமே நிற்கின்றன. புஸ்பராஜா பலா போன்றவர். வெளியே தோற்றத்தில் முரடணாக இருந்தாலும் உள்ளத்தில் மிகவும் கனிவானவர். அவர் தோழமையில் ஒரு சிறு மாசு கூட இருந்ததில்லை.

எங்கோ பிறக்கிறோம், எங்கோ இணைகிறோம். இந்த ஓட்டத்தின் பொருள் என்ன? எங்கோ பிறக்கிறோம் எங்கோ இறக்கிறோம். இத்தோற்றத்தின் பொருள்தான் என்ன?

நேற்று அதிசயமான ஒரு கனவு. அதில் இறப்பு என்பது ஒரு தோற்றப்பிழை என்று வந்தது. இறந்த பின்னும் நாம் வாழ்கிறோம். இதே உணர்வுகளுடன். இதே தோழமையுடன். ஆனால் அது இருப்பவர்க்குப் புரிவதில்லை.

சி.புஸ்பராஜா வாழ்கிறார்.

****************************

பெர்லின் நண்பர் நடராஜா சுசீந்திரன் திரு.புஸ்பராஜா பற்றிய பல அறிய தகவல்களை தனது சமீபத்திய வானொலி செவ்வியில் அளித்துள்ளார். அதைக் கேட்க இங்கே சொடுக்குக!

அமெரிக்காவில் முக்குரிணிப் பிள்ளையார்அமெரிக்கா செல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு அமெரிக்கன் கல்லூரியில் விதைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவொரு அமெரிக்கப் பாதிரிமார்கள் கல்லூரி. ஆங்கில வாத்தியார் அமெரிக்கர். அறிவியல்துறைத் தலைவர் அமெரிக்கர். ஆங்கிலத்துறையில் பாடம் போதித்த பலர் துரைத்தனமாக நடந்து கொண்டனர். கிறிஸ்தவர்களான அவர்களுக்கு அது இயல்பாகவும் இருந்தது. ஆனால் ஆசைப்பட்ட மாதிரி இந்தியாவிலிருந்து நேரடியாக அமெரிக்கா செல்ல முடியவில்லை என்னால். மூக்கைச் சுற்றி நாக்கைத் தொட்ட கதையாகி, ஜப்பான் முதலில் போய், அங்கிருந்து விட்டு ஜெர்மனி வந்து வேலை பார்த்த போதுதான் அமெரிக்கா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் அது எல்லோரும் ஆசைப்படும் சுற்றுலாப் பயணமாக அமையவில்லை. வேலை நிமித்தமாக சில கருத்தரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஜெர்மன் பல்கலைக் கழகங்கள் வேலைக்குப் போகுமிடத்தில் சில நாட்கள் கூடுதல் வேலை ஓய்வை அனுமதித்தன. எனவே சில நாட்களை சுற்றுப்புறம் பார்க்க செலவிட்டேன்.

எல்லா இந்தியர்கள் போல புதிதாக போகுமிடத்திற்கு அருகில் நம்ம ஊர் ஆட்கள் இருக்கிறார்களா எனப்பார்த்து அறிந்து கொண்டே சென்றேன். அந்தக் காலத்து இதயம் பேசுகிறது கட்டுரையில் அது பெரும்பாலும் இந்தியாவில் சுவைத்த புளியோதரை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அல்ப பயத்தின் காரணம் என்று காட்டப்படும். உண்மையாகச் சொல்லப் போனால் இந்தியர்களுக்கு சுற்றுலா என்றால் என்னவென்றே தெரியாது. எப்படிப் பயணப்படுவது, வரைபடத்தைப் பார்த்து எப்படி இடம் காண்பது, புதிய ஊர் பற்றிய செய்திகளை எப்படி சேகரிப்பது போன்ற ஆயத்த வேலைகள் நமக்குத் தெரியாத ஒன்று. எனவே அந்த கலாச்சாரத்தில் வளர்ந்திருந்த நான் எதற்க்கு வீண் சிரமமென்று எனக்கு அமெரிக்கன் கல்லூரியில் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரொருவர் டென்னிசி மாநிலத்தில் இருப்பதாகக் கண்டறிந்து அவர் வீட்டிற்குப் போய் விட்டேன். கல்லூரியில் மிகவும் பிரபலமான வாத்தியார். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். அவரும் சில நாட்கள் தங்க அனுமதித்து பல இடங்களைச் சுற்றிக் காண்பித்தார். அப்போதுதான் அமெரிக்க வாழ்வின் சுகம் தெரிந்தது. மஞ்சு (ஸ்மோக்கி) மலையை காரிலேயே வலம் வந்தோம். அங்கு வாக்கிங்கூட காரிலேயே போவதாக வாத்தியார் ஜோக் அடித்தார். பிரம்மாண்டமான ஒரு தோட்டத்தை, அதாவது பெங்களூர் லால்பாக், ஊட்டி தோட்டம் இவை போன்ற ஒரு உஷ்ணப்பிரதேசத்து தோட்டத்தை மாபெரும் கட்டிடத்தின் உள்ளே 'பச்சை வீட்டில்' வைத்திருந்தனர். அதிசயமாகத்தான் இருந்தது. இந்தியாவில் அறிவியல் பயணம் செய்து காண வேண்டிய தாவரங்களெல்லாம் ஒரே கூரையில்! இப்படிப் போய்க் கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் 'கண்ணா! இன்னிக்கு தீபாவளி தெரியுமா?' என்றார். அட! வெளி நாட்டில் வசிக்கும் போது பொங்கலாவது? தீபாவளியாவது? எனக்கு மறந்தே போயிருந்தது. காரிலிருந்து எட்ட பார்த்தபோது ஒரு கோபுரம் தெரிந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன். ஏனெனில் ஐரோப்பிய சூழலில் கோபுரம் கொண்ட இந்துக் கோயில்களெல்லாம் கிடையாது (இப்போது வந்திருக்கின்றன). 'சார்! இது நிஜமாவே கோயிலா? இல்லை, பாரதி சொல்லற 'தோற்றப்பிழையா?' என்று கேட்டேன். 'குற்றமும் இல்லை! பிழையுமில்லை!' இதோ பார் கோயில் என்று காரை ஒடித்து வளைத்து கோயில் வாசலில் இறக்கிவிட்டார். அது மறக்கமுடியாத தீபாவளி!

"உள்ளே வா! மதுரைவாசி! இன்னும் ஆச்சர்யமிருக்கு!" என்றார் அவர். கோயிலுக்குள் போன நான் அப்படியே ஸ்தம்பித்து விட்டேன். அத்தனை பெரிய பிள்ளையாரை மீனாட்சி கோயிலில்தான் பார்த்திருக்கிறேன். 'சார்! முக்குருணிப் பிள்ளையார் எப்போ அமெரிக்கா வந்தார்?' என்று கேட்டேன். அச்சாக அதே பிள்ளையார். உடம்பு வெல, வெலத்துப் போச்சு. எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் (அது தீபாவளியென்றே தெரியாத நேரத்தில்) பிள்ளைப்பிராயத்தில் பார்த்துப் பழகிய பிள்ளையார், கண் எதிரே! எங்கிருந்தோ ஒரு நேசம் வந்துவிட்டது. மட, மடவென்று சந்நிதிக்குள் போய் பிள்ளையாருக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அது அப்படியே தியானத்திற்கு இட்டு செல்லுமென்று தெரியாது. நான் கண் விழித்த போது ஆள் அரவமில்லை. எனக்கு முன் பிள்ளையார் பிரசாதம் இருந்தது. குருக்கள் என்னை எழுப்பாமல் வைத்துவிட்டுப் போயிருக்கும் அழகு தெரிந்தது. நடை சாத்தி விட்டார்களோ என்ற பயம் வந்துவிட்டது. ஈ, காக்காய் இல்லை (உண்மையாக இல்லை என்பதும் உண்மை!). வெளியே மெதுவாக வந்து பார்த்தேன், பேராசிரியர் ஓரமாக எனக்காகக் காத்திருந்து உறங்கிவிட்டார். இப்படிக்கூட நடக்குமா? என்ன என்று எனக்கே ஆச்சர்யம். கீழே விழுந்து வணங்காத குறையாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். "என்ன! உன்னை கீழே நடக்கும் தீபாவளி விருந்திற்கு அழைத்துச் செல்லலாமென நினைத்திருந்தேன், நீ என்னடாவென்றால் 'பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும்' பிள்ளையாரிடமே பெற்றுக் கொண்டாய் போல் தெரிகிறது" என்றார். என்னால் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய விருந்தும் போச்சு.

பின் நான் ஜெர்மன் மீண்டு சில வருடங்கள் ஆச்சு. நண்பர்களிடம் இதைச் சொன்னால், "ஆமா! உனக்கு ஊர் ஞாபகம் வந்திருக்கும். ஊருக்குப் போகாமல் வெளிநாட்டிலேயே இருப்பதால் அப்படியொரு மயக்கம். வேறொன்றுமில்லை" என்று சொல்லிவிட்டனர். அது அப்படித்தானா? என்று எனக்கு நிச்சயமில்லை. சரி, ஊருக்குப் போய் பார்த்துவிடுவது என்று இந்தியா கிளம்பினேன். மதுரை வெகுவாக மாறியிருந்தது. முன்பு வீதி போல் தெரிந்த தெருக்கள் எல்லாம், புதிய வீடுகளின் வருகையால் குறுகிச் சிறுத்திருந்தன. கோயிலே பெரிய கடை வீதி போல் இருந்தது. எங்கு பார்த்தாலும் ஜனங்கள். கோயிலுக்கு அப்படியே ஜாலியா 'ஷாப்பிங்' போய்ட்டு வரலாம் என்று வந்து போய்க் கொண்டிருந்தனர். முக்குருணிப் பிள்ளையார் இருந்தார் (நல்லவேளையாக!). ஒரு நிமிடம் கண்மூடி தியானிக்க முடியவில்லை. ஜன நெருசலில் ஒரே இடிசல். சரி, அம்பாளைப் போய் தரிசித்து வருவோமென்று உள்ளே போனால் (எப்படிப் போனேன் என்பது வேறு கதை), மீனாட்சி, திருப்பதி போல் ஆகியிருந்தாள். கிட்டயே போக முடியவில்லை. 500 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் கிட்ட இருந்தார்கள். உள்ளே போனாலும் எட்டவே இருந்தேன் நான். சரி, கூட்டம் விலகுமா என்ற நப்பாசையில் இருந்த என்னை 'கல்தா' பிடித்துத்தள்ளாத குறையாக சிப்பந்தி வெளியே தள்ளினான். எது சிறை? சிறைக்குள் நானா? இல்லை வெளியேவா? மீனாட்சி எங்கிருக்கிறாள்?

குழந்தைப் பிராயத்தில் இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தான அறக்கட்டளை கணக்கு வழக்குகளை என் தந்தை பார்த்து வந்தார். எனவே ஆடி வீதி என் 'ஆடல் வீதியானது'. மீனாட்சியின் கிளிப்பிள்ளை என் தோழிகள் ஆகின. நினைத்தால் தரிசனம், நினைத்தால் பொற்றாமரைக் குளம் என்று இருந்த காலங்கள் ஓடி மறைந்தன. இப்போது வெளிப்பிரகாரத்தில் கூட நிம்மதியாக உட்கார முடியாமல் கூட்டம் இல்லை பிச்சைக்காரர்கள். அப்போதுதான் புரிந்தது நண்பர்கள் சொன்னது பிழையென்று. ஆயிரம் வருடங்களுக்கு முன் கோயில் கட்டிய போது இருந்த செழுமை, மரபு இப்போது இல்லை. அப்போது கோயிலுள் வியாபாரம் இருந்திருக்காது. கோயில் வழிபடும் இடமாகவும், மண்டபங்கள் தியானம் செய்யும் இடமாகவும் இருந்திருக்கும். கோயிலுக்கு போனால் நிம்மதி வந்திருக்கும். ஆனால் இப்போது அது இல்லை. பக்கத்து ஈழ தேசத்தவர்கள் நாம் கோயில் வைத்திருக்கும் அழகை பரிகசிக்கின்றனர். மதுரையில் கோயில்கள் அதிகம். பல கோயில்களில் சுற்றுச் சுவரைச் சுற்றி சின்னச் சின்ன சந்நிதிகள். 'என்னங்கய்யா! இருக்கிற சின்ன வீதியையும் இப்படிக் குறைக்கிறீங்களே!' என்று கேட்டால், அவர்கள் சொன்ன பதில் என்னை கவலையுற வைத்தது. 'தம்பி! இப்படி சாமியைக் கொண்டு வந்து இங்கேயும் வைக்கலைன்னா! கோயில் சுவரிலே ஒண்ணுக்கு அடிச்சு வைச்சுறானுக! நாத்தம் தாங்கலே!' என்று பதில் சொன்னார்.

இந்தியாவிலிருந்து மீண்டு வந்த என்னை நண்பர்கள் அழைத்து விசாரித்தார்கள். 'என்ன மச்சி! இனிமே வருஷா, வருஷம் இந்தியான்னு சொல்லு!' என்றார்கள். 'இல்லை' என்று சொன்னதுகூட அவர்களுக்கு அதிர்ச்சியில்லை, 'இனிமேல் வருடா வருடம் நான் அமெரிக்கா போகப்போகிறேன். அங்கு போய் ஒவ்வொரு கோயிலாக இருந்து அனுபவிக்கப் போகிறேன். எனக்கு அமெரிக்கா போவதில் செலவும் மிச்சம், சிரமம் மிச்சம்' என்றேன். அவர்களுக்கு இது புரியவே இல்லை!போதி மரம் - திசைகள் மின்னிதழ் மார்ச்,2006