மாகவிஞன் திருலோகம்

புதிய தலைப்பு: மாகவிஞன் திருலோகம்
கட்டுரை ஒலிப்பதிவு: ஸ்ரீரங்கம் வே.மோகனரங்கன்

இக்கட்டுரை 2001 கணையாழி ஆகஸ்டு இதழில் வந்திருக்கிறது. அதை எழுதிய திரு.மோகனரங்கனே அதை வாசிக்கும் போது கட்டுரை உயிர் பெறுகிறது. தன் தந்தை வேணுகோபாலன் வழியாக முறையாக நாடகவியல் பயின்ற மோகனரங்கனின் கட்டுரை வாசிப்பு என்பது ஒரு கேட்கும் அனுபவம். இவர் கட்டுரை கேட்ட பிறகு, பாரதி வாழ்ந்த காலத்திலேயே இப்படியொரு கவிஞன் வாழ்ந்திருந்தானா? அவனை நாம் ஏன் இவ்வளவு காலம் அறிந்து கொள்ளாமலிருந்தோம்? அவனது எழுத்துக்களை இனியாவது தேடிப்படிப்போமா? அவன் நடத்திய 'தேவ சபையின்' ஓரத்தில் ஒளிந்திருந்து கேட்கும் பாக்கியம் கூட நமக்கு கிடைக்கவில்லையே? என்பது போன்ற கேள்விகள் நம்மைச் சூழும்.


திரு.மோகனரங்கன் அவர்கள் தமிழ் மக்களிடையே ஒரு முதுசொம் வேட்டையை துவக்கியிருக்கிறார்கள். அது அலையாய் பாய்ந்து செல்லும் காலம் நெருங்கி விட்டது.


தமிழ் கேட்கும் ஆர்வமுள்ள எவரும் கவிஞர் திரு.மோகனரங்கனின் வாசிப்பில் சொக்கிப்போவர். இது மிகை அல்ல, உண்மை! என்பதை நீங்கள் கேட்டால்தான் புரியும்.


கட்டுரை வாசிப்பைக் கேட்க, சொடுக்குக!
இக்கட்டுரை முழுவதும் பல ஒலி அஞ்சல்களாக எனக்கு வந்தன. நீங்களும் ஒலி அஞ்சல்கள் அனுப்பலாம். செய்ய வேண்டியது VoiceSnap வலைத்தளம் சென்று, பதிவு செய்து, ஒலிஅஞ்சல் செயலியை இயக்க வேண்டியது!

1 பின்னூட்டங்கள்:

Thangamani 3/22/2006 03:08:00 PM

கண்ணன், இந்தப்பதிவுக்கு மிக்க நன்றி. திரிலோக சீத்தாராம் பற்றிய அரிய தகவல்கள் மட்டுமல்லாமல், என்னுடைய சில முறைகளைப்பற்றிய புரிதல்களுக்கும் இது தொடர்புடையதாய் இருந்தது. குறிப்பாக, சொற்களோடு நேரடியாக தொடர்புகொள்ளுதலைச் சொல்லலாம். தி.சீயின் மொழிபெயர்ப்பாகிய சித்தார்த்தனை தமிழினி வெளியிட்டபோது (மறுபிரசுரம்) அதை பதிப்பகத்துக்கே போய் வாங்கி, அச்சத்தோடு வாசித்துப்பார்த்தேன். சீத்தாராம் அதை மிக அருமையாகவும், குறைவறச் செய்திருப்பதாக உணர்ந்தேன். அப்போது அவரைப்பற்றி அறிய ஆவல் கொண்டேன். (அதற்கு முன்னேயே மனுஸ்மிருதியின் மொழிபெயர்ப்பில் அவரது எழுத்தைப் படித்திருந்தாலும்). இப்போது இந்தப்பதிவு அவரைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டிய ஆவலையும் தேவையையும் தூண்டுகிறது. நன்றி. உங்கள் ஒலிப்பதிவை இறக்கிக்கொள்ளமுடியுமாவெனப்பார்க்கிறேன்.