ஒலிப்பத்தி - புதிய முயற்சி

தமிழில் புதிதாக ஆறாம்திணை உருவாகியபின் பத்திரிக்கை இலக்கணம் மாறிவிட்டது! பத்திரிக்கை என்பது எழுத்து அனுபவம் என்பதிலும் கூடுதலாக ஒலி, ஒளி அனுபவமாக மாறிவருகிறது. இதுபற்றி நான் சில காலமாகப் பேசி வந்தாலும் இப்போதுதான் தமிழ் இணைய இதழ்கள் ஆறாம்திணையின் புதிய இலக்கணத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளன. உண்மையில் வலைப்பதிவுகள் தமிழ் மின்னிதழ்களை விட வெகு முன்னேற்றமடைந்துவிட்டன. எனினும் பொதுஜன ஊடகம் மாறுவதும் நல்ல சேதியே!

விய ஆண்டு மலராக சிஃபி.வணி கொண்டுவந்துள்ள மலரில் என் இரு வாய்ப்பேச்சுகள் இடம் பெற்றுள்ளன. கேட்க:

http://tamil.sify.com/general/tny06/index.php

ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒலிப்பத்தி (Voice Column) ஒன்றும் அங்கு தொடங்கியுள்ளேன். கேட்க:

http://tamil.sify.com/fullstory.php?id=14186352

அங்கேவிட பின்னூட்டம் இங்கிடுவது எளிது :-) சிலருக்கு ஒலிப்பேழையைத் திறக்கமுடியவில்லை என்று தெரிகிறது. உங்கள் அனுபவத்தை இங்கிடுங்கள். ஆவண செய்வோம்.

2 பின்னூட்டங்கள்:

வசந்தன்(Vasanthan) 4/20/2006 07:34:00 PM

ஒலிப்பதிவு வேலைசெய்கிறது. (ஆனால் தொடங்குவதற்கு ஒரு நிமிடம் வரை பொறுத்திருக்க வேண்டியிருக்கிறது.;-))

நல்ல தெளிவாக இருக்கிறது.
நான் கொரியர்கள் இருவரிடம் அவர்கள் மொழி பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கதைத்திருக்கிறேன்.
அவர்கள் சொல்லத்தொடங்கிய போதே விளங்கிவிட்டது அது எங்கட கட்டமைப்புத்தானென்று.

ஆனால் 'உங்கள் மொழியில் எத்தனை எழுத்துக்கள்?' எண்டு கேட்டா, so many என்பதுதான் இருவரிடமும் பதிலாக வந்தது. அட சும்மா சொல்லுங்கப்பா எண்டு திருப்பிக்கேட்டாலும் அவர்கள் எண்ணிக்கை சொல்லவில்லை.

இது ஏன்? எண்ணிக்கை குறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடியா அவர்கள் மொழியின் எழுத்துக்கட்டமைப்பு உள்ளது? அல்லது சொல்ல விரும்புவதில்லையோ?

நா.கண்ணன் 4/21/2006 08:02:00 AM

நன்றி வசந்தன்:

கொரிய-தமிழ் மொழித்தொடர்பு பற்றி மே மாத திசைகள் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். வெளிவந்தவுடன் இங்கும் வெளியிடுகிறேன். கொரியர்கள்/தமிழர்கள் யாராக இருந்தாலும் ஆர்வமுள்ளவர்களால் மட்டுமே இது பற்றியெல்லாம் பேசமுடியும். எங்கள் ஆய்வகத்தில் இப்படியெல்லாம் நான் பேசுவது கண்டு ஆச்சர்யப்படுகிறார்கள். இதையெல்லாம் அவர்கள் கண்டுகொண்டதே இல்லை!