மதுமிதாவின் கேள்விகள்

வலைப்பதிவர் பெயர்: நா.கண்ணன்

வலைப்பூ பெயர் : 'க'வினுலகம் (ஒருங்குறி); என் மடல் (தஸ்கி); முதுசொம், மூன்றாம் கண், கவிநயம்

சுட்டி(url) :

'க'வினுலகம் = http://emadal.blogspot.com/
என் மடல் = http://nkannan.rediffblogs.com/
மூன்றாம் கண் = http://photo-view.blogspot.com/கவி நயம் (ஒருங்குறி) = http://kavinayam.blogspot.com/
Poems in focus (தஸ்கி) = http://kavithai.rediffblogs.com/
முதுசொம் = http://thf-central.e-mozi.com/blogcms/

ஊர்: கோஜே (தென் கொரியா); பூர்வீகம் = திருப்பூவணம் (பழைய இராமநாதபுர மாவட்டம், சிவகங்கை தாலுகா), தமிழ்நாடு

நாடு: தென் கொரியா; குடியுரிமை = ஜெர்மனி

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: திசைகள் மின்னிதழ்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : செப்டம்பர், 2003 (என்று நினைக்கிறேன்)

இது எத்தனையாவது பதிவு: 'க'வினுலகம் = 380; என் மடல் = மூன்று வருடப்பதிவுகள்..600 க்கு மேல் இருக்கும்; நா.கண்ணன் என்றொரு பதிவில் 100க்கு மேலிருக்கும். மொத்தம் 1000 பதிவுகளுக்கு மேலிருக்கும் (சரியான விவரம் எடுக்க முடியவில்லை)

இப்பதிவின் சுட்டி(url): http://emadal.blogspot.com/2006/05/blog-post_114890699274610952.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எண்ணங்களை எழுதுவதால் எண்ணம் சீர் அடைகிறது. நல்ல எண்ணங்கள் பிறரை மாற்றவல்லவை. நாம் தனித்தனி என்றாலும் எண்ணங்கள் நம்மை சங்கமித்து இயங்க வைக்கின்றன. நான் உன்னில் ஒருவன் என்பதற்காக எழுதுகிறேன்.

சந்தித்த அனுபவங்கள்: வலைப்பதிவு வருவதற்கு முன்னமே தமிழ் இணையம் மூலம் நல்ல பல சர்வதேச நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். இணையம் என் தமிழ் ஆர்வத்தை பன்மடங்கு வளர்த்தது. இணையம் மூலம் பல்வேறு நல்ல காரியங்கள் சமூகத்திற்கு செய்ய முடிகிறது. உம். முதுசொம் எனும் இலக்கப்பாதுகாப்பு இயக்கம் தொடங்கியது. பின்னூட்டங்கள் நம்மை பிறருடன் தொடர்பு படுத்துபவை. பின்னூட்டத்திற்காகவே எழுதிய காலங்களுண்டு. எனக்காக எழுத ஆரம்பித்து உனக்காக எழுத வேண்டியதாகிப் போனதுதான் வலைப்பூ அனுபவம்

பெற்ற நண்பர்கள்: நிறைய. இணையம் தொடங்கிய காலமட்டும் எண்ணில. வலைப்பூ கூட சில நண்பர்களைத் தந்தது.

கற்றவை: மின்வெளியில் சொர்க்கமுமுண்டு, நரகமுமுண்டு என்பதை. மின்வெளி அகப்பாட்டுடன் (ஈகோ) உரசும் ஊடகம். இதில் எதிர் நீச்சல் போடுவது சாமர்த்தியமான வேலை.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கமே விட்டுப்போச்சு! எண்ணம் எழுந்த சில நிமிடங்களில் அது மின் ஊடகத்தில் வெளிவரும் மகிழ்வை பத்திரிக்கைகள் தரமுடியாது. சுதந்திரம் என்பது ஒரு பொறுப்பு. என் எழுத்து என்னையறியாமல் ஆயிரக்கணக்கானோரால் வாசிக்கப்படுகிறது என்று எண்ணும் போது பொறுப்பு கூடுகிறது. வலைப்பதிவு 'ஏனோதானோ' ஊடகம் போல் வெளித்தோற்றம் தந்தாலும், பத்திரிக்கைக்குரிய தார்மீகம் இதற்கும் பொருந்தும்.

இனி செய்ய நினைப்பவை: மின்வெளி பல்லூடகத்தன்மை கொண்டது. இதுவரை ஒற்றைப் பரிமாணத்தில் இயங்கி வந்த தமிழ் இலக்கியத்தைப் பல் பரிமாணத்திற்கு மாற்றுவது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: 70களில் எழுத ஆரம்பித்தேன். சிறுவயது கிராமத்து வாழ்வு என் தமிழை என்னுடன் தக்க வைத்தது. 60 களில் எழுந்த மாணவர் போராட்டம், தமிழ் மொழி உணர்வு என்னைத் தமிழின் பால் ஈர்த்து நிறுத்தியது. அரவிந்தர் போல் முதலில் போராளியாக (குமுகாய எதிர் உணர்வு) ஆரம்பித்து பின் ஆன்மீகவாதியாக மாறியவன். இணையம் என் எழுத்தை மெருகேற்றியது. சமூகக் கூச்சமுள்ள என்னை ஐரோப்பிய ஈழ நண்பர்கள் மேடைக்கு இழுத்து ஒளிக்குவிப்பில் வைத்தனர். இணையத்துடனான என் வாழ்வு ஈழத்துடன் இணைந்து இன்றும் செயல்படுகிறது. ஈழக்கவிஞர் ஜெயபாலன் சொல்கிறார் என் சரிதத்தை எழுதினால் அது தமிழ் இணையத்தின் சரிதத்தைச் சொன்ன மாதிரியுமாகுமென்று. இப்படி நண்பர்கள் தரும் பொறுப்பு, இணையம் வழங்கும் பொறுப்பு இவை என் ஆய்வு, என் தொழில், என் குடும்பம் இவைகளுக்கான நேரத்துடன் உரசுகின்றன. இப்போராட்டம் வேலை ஓய்வு பெறும் வரை இருக்கும். அல்லது தமிழ்துறையில் இப்புதிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பான வேலை கிடைக்கப் பெற்றால் ஓயலாம்.

ஜி.டி.நாயுடு, டி.வி.எஸ் ஐய்யங்கார் இவர்கள் போல் உழைப்பால் முன்னுக்கு வந்தவன் நான். வளர்ச்சியடையாத இந்தியாவில் கனவுகளுடன் உலாவியவன். வெற்றிப் படிக்கட்டுகளை சீரமைப்பதில் வாழ்வின் பல சுகங்களை இழந்தவன். வைகை துயில் கொண்ட ஆற்றோரக் கிராமத்தில் பிறந்து இன்று கண்டம் விட்டு கண்டம் அறிவு ஒன்றின் பலம் கொண்டு போய் வருவதை நினைத்தால் எண்ணங்களின் பலம் புரிகிறது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்துப் பேசிய பொழுதெல்லாம் இதே எண்ணம்தான். பிறக்குமிடம் பெரிதல்ல, 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்'.

ஒரு ஆசையுண்டு. எல்லாக் கலைஞர்கள் சொல்வது போலும், என் எழுத்து அது பெற்றிருக்க வேண்டிய கவனத்தைப் பெறவில்லை என்ற வருத்தமுண்டு. ஆயிரமாயிரம் மின்பக்கங்கள் எழுதிக்குவிச்சாச்சு. அவையெல்லாம் என்றாவது ஒரு நாள் ஆய்விற்கு உட்படுதப்பட வேண்டும். அதன் பொருட் செறிவு புரிந்து கொள்ளப்பட வேண்டும். எடுத்த முயற்சிகளுக்கான பலன் தமிழ் சமூகத்திற்கு சென்றடைய வேண்டும். இணையம் வீறுகொண்டு எழும் ஒரு புதிய தமிழனை உருவாக்கித்தர வேண்டும். 'வல்லமை தாராயோ'!

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: சீரியசான பேச்சுக்கள் ஒருபுறம் இருக்க...இணையம் பல குஷியான பொழுதுகளைத் தந்திருக்கிறது. வலைப்பூ உணர்வுள்ள ஓரிடம். உணர்வு மரத்துப் போனவர்கள் இங்கு வந்து எழுதுங்கள். உணர்வு பெறுவீர். வேலை ஓய்வு பெற்றோர் இங்கு வந்து எழுதுவீர். உங்கள் அனுபவம் மற்றோருக்கு கல்வியாகட்டும். உங்களை வாழ்வு புறக்கணித்துவிட்டதான எண்ணம் ஓடிப்போகும். இளைஞர்களே இங்கு வந்து எழுதுங்கள். ஏனெனில் இதுவொரு தொட்டுணர் பட்டறை (interactive workshop).

நற்றிணை மீண்டும் ஒலிக்கிறதுஒரு சிறிய இடைவெளிக்குப் பின் லண்டன் வாழ் தமிழறிஞர் திரு.நடராஜன் அவர்கள் தனது சங்கம் தொடர் உரையை நிகழ்த்தத் தொடங்கியுள்ளார். அவரது நற்றிணை சொற்பொழிவு இப்போது முதுசொம் இலண்டன் தளத்தில் கேட்கக் கிடைக்கிறது!

நற்றிணை சொற்பொழிவுm4a வகை ஒலிக்கோப்பான இச்சொற்பொழிவை ரியல் வழி கேளுங்கள்

கொரியாவில்-ஜப்பானில் தமிழ்


தமிழ்சிஃபி தயாரித்துள்ள தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழின் முதன்மையான கருப்பொருள், நாடுகள்தோறும் தமிழ் என்பதே. இதன்படி ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் எவ்விதம் வாழ்கிறது? தமிழர் எவ்விதம் வாழுகிறார்கள் என அலச எண்ணியது.

இந்த வரிசையில் கொரியாவில் தமிழ் என்ற தலைப்பில் நா. கண்ணன் உரையாற்றியுள்ளார். கட்டுரையை எழுத்து வடிவில் அளிக்கலாம்; அல்லது உரையாகப் பதிவுசெய்து குரல் அஞ்சலிலும் அனுப்பலாம் எனத் தமிழ்சிஃபி அறிவித்தது. இணைய வெளியில் பல்லூடகத் தமிழ் உள்ளடக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நா. கண்ணன், கொரியா, ஜப்பான் பற்றிய தன் இரண்டு பதிவுகளையும் ஒலிக் கோப்பாகப் பேசியே அனுப்பியுள்ளார்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வாயிலாகவும் இன்னும் பல அமைப்புகளின் வழியாகவும் தமிழ்ப் பணி ஆற்றி வரும் நா. கண்ணன், கொரியாவில் வசித்து வருகிறார். பல நாடுகளுக்குப் பயணித்துள்ள இவர், கொரியாவில் தமிழும் தமிழரும் உள்ள விதம் பற்றி இங்கு அழகுறப் பேசியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

கொரியாவில் தமிழ்

this is an audio post - click to play


ஜப்பானில் தமிழ்

this is an audio post - click to play


நன்றி: சிஃபி.வணி

புதிய ஊடகம், புதிய வழிமுறைகள்!

தூரத்து மணியோசை 1 (ஒலிப்பத்தி)

நா.கண்ணன், தென்கொரியா

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் தமிழ் சிஃபியில் நா.கண்ணனின் ஒலிப்பத்தி தொடங்குகிறது. தமிழைத் தெளிவாக உச்சரிக்கக் கூடிய நா.கண்ணன், நேயர்களுடன் நேரடியாக உரையாடும் தன்மையில் பேசக் கூடியவர். தொழில்நுட்ப அறிவும் தமிழறிவும் இணைந்து பெற்றவர். அவருடைய பார்வையில் பல முக்கிய செய்திகளை அவரின் அனுபவத்துடன் இணைந்து இங்கே பெறலாம்.

இணைய உள்ளடக்கத்தைப் பல்லூடகத் தன்மையுடனும் மேலும் இனிமை நிரம்பியதாகவும் ஆக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர், இந்த முதல் பத்தியிலேயே பின்னணியில் மெல்லிய புல்லாங்குழல் இசையை இழைய விட்டுள்ளார்.

தொழில்முறை விஞ்ஞானியான இவர், உலகைச் சுற்றிய வண்ணம் இருப்பவர். ஜப்பான், ஜெர்மனியில் வாழ்ந்துவிட்டு தற்போது தென்கொரியாவில் வசிக்கிறார். அங்கு கடல்சூழல் விஞ்ஞான மையத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

2001இல் கோலாலம்பூரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் 'ஆண்டின் சிறந்த மனிதர்' என்ற விருதுடன் தமிழ் மரபு அறக்கட்டளை ஒன்றை அமைக்கும் பணிக்கான பரிசையும் பெற்றவர். அன்றிலிருந்து மின்வெளியில் 'முதுசொம் காப்பகம்' எனும் இணைய இலக்கச் சேமிப்புத் தளத்தை நடத்தி வருகிறார். தமிழ்மரபு அறக்கட்டளை, வரி விலக்குப் பெற்ற ஒரு கழகமாகச் சென்னையில் பதிவு செய்யப்பட்டு, செயலாற்றி வருகிறது.

இவர், ஒரு பன்முக படைப்பாளி. இவரது ஆக்கங்கள் கணையாழியில் கவிதைகளாக முதலில் தொடங்கிப் பின் சிறுகதைகள், குறுநாவல்கள் எனத் தமிழ்நாட்டு இலக்கிய இதழ்களிலும் புகலிட இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இதுவரை மூன்று தொகுப்புகள் கொண்டு வந்திருக்கிறார். அவை, உதிர் இலை காலம், நிழல் வெளி மாந்தர், விலை போகும் நினைவுகள் ஆயின.

நிறையக் கவிதைகள் இயற்றி, மின்னுலகில் வைத்திருக்கிறார். தொடர்ந்து மின்னிதழ்களிலும், வலைப்பதிவிலும் எழுதி வருகிறார். தமிழ் இணையம் தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு மடலாடற் குழுக்களில் எழுதி அறிமுகமானவர். ஆழ்வார்கள் பற்றிய இவரது தொடர், இவருக்கு "பாசுர மடல் கண்ணன்" என்ற பட்டப் பெயரை பெற்றுத் தந்துள்ளது. மின்வெளியில் மடலாடற்குழு மட்டுறுத்தல், வலைபதிதல், வலையகம் உருவாக்கல் போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

இவை தவிர இவர், புகைப்படக் கலைஞரும்கூட. ஓவியப் பரிச்சயமும் உண்டு. இவரது பல்வேறு தமிழ்ப் பணிகளையும் தொழில்முறை அனுபவங்களையும் அறிய, கீழ்க்காணும் தளத்திற்குச் சென்று பாருங்கள்:

சொடுக்கு!

இவருடைய குரல் பத்தியை இங்கு கேட்டு மகிழுங்கள்:

this is an audio post - click to play


இந்த ஒலிப்பத்தியில் குறிப்பிடப்படும் கட்டுரை: தமிழுக்குத் தகவல் புரட்சி தரும் புதிய திணை

நன்றி: சிஃபி.வணி

இந்தியா கொரியா பாய் பாய்!

நா. கண்ணன்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 2)


தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தமது ஒலிப்பத்தியின் இரண்டாம் பகுதியில் இந்திய கொரிய உறவுகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

'கொரியா "காலை அமைதியின் நாடு" என்று தாகூர் பாராட்டினார்...... கொரியர்களிடம் சொர்க்கம் எங்கிருக்கிறது என்று கேட்டால் அவர்கள் இந்தியாவை நோக்கிக் கை காட்டுவார்கள்....... கொரியர்கள் அரிசிச் சோறுதான் சாப்பிடுகிறார்கள்..... ஒவ்வொரு கொரியக் குழந்தையும் பிறக்கும் போதே ஒரு செல்பேசியுடன் பிறக்கிறது...... இப்படிப் பல சுவையான செய்திகளை இந்த உரையில் கேட்கலாம்.

இவை மட்டுமல்ல; உலக அரங்கில் சீனாவுக்கு உள்ள மரியாதை, இந்தியாவுக்கு ஏன் இல்லை? இந்தியா எவற்றைத் தவறவிட்டது? இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் உள்ள வரலாற்று ரீதியான தொடர்புகள், பவுத்த மத ரீதியிலான பிடிப்பு, தொழில் வணிக வளர்ச்சிக்கு வழிகள், இந்தியாவின் கடமைகள்..... எனப் பல பயனுள்ள செய்திகளைப் பற்றியும் பேசியிருக்கிறார்.

மெல்லிய இசையின் பின்னணியுடன் நா.கண்ணனின் ஒலிப்பத்தியை இங்கே கேளுங்கள்.

நேர அளவு: 13.55 நிமிடங்கள்

this is an audio post - click to play


நன்றி: சிஃபி.வணி

ஒலிப்பத்தியின் பதிவு - 03

ஷாங்காய் நகரக் காட்சிகள்

நா. கண்ணன்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 3)


தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், 2006 மே முதல் வாரத்தில் சீனாவின் புகழ்மிக்க நகரமான ஷாங்காய்க்கு மூன்றாவது முறையாகச் சென்று வந்தார். அங்கு அவர் பெற்ற அனுபவங்களைத் தன் ஒலிப்பத்தியின் இந்த வாரப் பகுதியில் ஷாங்காய் நகரக் காட்சிகளாக வழங்குகிறார்.

ஷாங்காய்: பிரமாண்டமான கட்டடங்களும் செல்வச் செழிப்பும் பளபளப்பும் ஜொலிஜொலிப்பும் மிக்க மாநகரம்; வளரும் நாடான இந்தச் சீன நகரம், வளர்ந்த நாட்டுக்கு இணையாகத் திகழ்கிறது. இந்த அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணங்கள் என்னென்ன?

இந்தியாவின் மும்பை மாநகரோடு ஷாங்காய் மாநகரை ஒப்பிடுவது ஏன்? இந்திய-சீன பண்பாட்டுக் கலவை எப்படி உள்ளது? சீனர்களின் உழைப்புக் கலாச்சாரம் எப்படி உள்ளது? இந்திய நகரங்கள், ஷாங்காய் தரத்திற்கு எப்போது உயரும்? மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் செல்லும் காந்த ரெயிýல் பயணித்த அனுபவம் எப்படி இருந்தது? ஷாங் காயில் ஜனநாயக உரிமைகள் எவ்விதம் உள்ளன?

இப்படிப் பலவற்றைப் பற்றியும் இந்த உரையில் நீங்கள் கேட்கலாம். வழக்கம்போல் பின்னணி இசையுடன் கணீரெனப் பேசுகிறார்; நா.கண்ணனின் ஒலிப்பத்தியை இங்கே கேளுங்கள்.

this is an audio post - click to play


நேர அளவு: 19.16 நிமிடங்கள்

சிஃபி நேயர்கள், ஷாங்காய் காட்சிகளை ஒலி வடிவில் மட்டுமல்லாமல் ஒளி வடிவிலும் பெறலாம். இரவு நேரத்தில் ஷாங்காய் எப்படி இருக்கும் என்பதைக் காண இங்கே சொடுக்குங்கள்:

புழக்கடை சினிமா - இரவில் ஷங்காய்

ஷாங்காயில் மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் செல்லும் காந்த ரெயிலில் பயணிக்க வேண்டுமா? இங்கே சொடுக்குங்கள்:


புழக்கடை சினிமா - காந்தப்புலத்தில் மிதக்கும் ரயில்

இந்த ஒளிப்படங்களை நா.கண்ணனே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு நம் பாராட்டுகள்.

நன்றி: சிஃபி.வணி

ஒலிப்பத்தியின் பதிவு - 04

சிஃபி.வணியில் சென்று என் ஒலிப்பத்தியைக் கேட்க முடியாமல் திரும்பும் நண்பர்களுக்காக இங்கே:
ஒலிப்பத்தி 04:

this is an audio post - click to play

வெகுளிகள்

நீண்ட வருடங்களுக்குப் பின் தூரக் கிழக்குத் தேசத்தில் வாழ்வது புத்துணர்ச்சி ஊட்டுவதாய் உள்ளது. இன்னும் இவர்களிடன் நிறைய வெகுளித்தனம் எஞ்சி நிற்கிறது. எப்படி இன்னும் இந்த உலகில் இது சாத்தியப்படுகிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சந்தைக்குப் போய் சாமான் வாங்குவதெல்லாம் மறந்து போன ஒன்று. திருப்பூவணம் சந்தை மிகச் சத்தமாக இருக்கும். ஆனால் இங்கு சந்தை என்பது அந்த வகையில் இல்லை. சென்னை காய்கறி மார்க்கெட் போல என்று சொல்லலாம். ஜெர்மனியில் வாழ்ந்தவரை இந்த வகையான Open market -ல் சென்று காய்கறி வாங்குவதில் காசு சேர்க்க முடியாது. பேசாமல் Super Market- போய் சாமான் வாங்குவதே மேல். மொத்தமாக வாங்கி-விற்பதால் அங்கு விலை குறைவாக இருக்கும். ஜெர்மன் விவசாயிகளெல்லாம் ரொம்ப sophisticated (பதிவுசு)! இவர்கள் விலையெல்லாம் யானை விலை, குதிரை விலையிருக்கும். எனவே கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் சூபர் மார்க்கெட்டில் காய்கறி வாங்கியே பழகி விட்டது. நான் இருப்பது ஒரு provincial area. கிராமம் இன்னும் இருக்கிறது. வயலையும், மலையையும், கடலையும் பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடி கோஷ்டி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் எங்கோ போய்விட்டது மனது. பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன். அப்போதும் உள்ளம் துள்ளி அந்த மரத்தடிக்கு ஓடியது. இந்த சூழலில் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்குவது சுகமாக இருக்கிறது. சும்மா சொல்லக் கூடாது தூரக்கிழக்கு மக்களுக்கு சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இந்தியாவைத் தாண்டி, மலேசியா, சிங்கப்பூர் என்று வரும் போதே மாகள் தங்களைச் சுற்றியிருக்கும் சூழலை சுத்தமாக வைத்திருப்பது புரியும். இந்திய மார்க்கெட்டுகளில் அழுகிய பழமும், புதிய காய்கறியும் ஒரே இடத்தில். கடைக்கு வெளியே என்பது கழிப்பிடம். வீட்டிற்கு வெளியே கழிப்பிடம். இந்த மனோநிலை என்று மாறும் என்று தெரியவில்லை. கொரியாவில் இந்த பாட்டிமார்கள் பாவமாக இருக்கிறார்கள். குட்டையாக, தடித்த முகத்துடன், கூன் விழுந்து. இவர்கள் காலை நீட்டிக் கொண்டு காய்கறிகளை விரித்து வைத்து விற்கும் போது வாங்கு, வாங்கு என்கிறது. விலை மார்க்கெட்டைவிட மலிவு. கீரை வகைகளை இவர்கள் கழுவி மிக அழகாக வைத்து விற்கிறார்கள். காய்கறிக்கடை முழுவதும் பெண்கள் சாம்ராஜ்ஜியமாக இருக்கிறது. ஒரு ஆண் கண்ணில் படவில்லை. வியாபார நுணுக்கமெல்லாம் பெண்களுக்குத்தான் தெரியும் போல!

நேற்று பஸ் நிற்பதற்கு முன் ஒரு டாக்சி வந்து மறித்தது. பஸ் ஓட்டுநர் ஒன்றும் சொல்லாமல் கதவைத் திறந்தார் - திறந்த கதவுடன் பயணிப்பதெல்லாம் இந்தியாவில்தான்! ஒரு கிழவன் என்னவோ பேசிக் கொண்டு வந்தான். இரண்டாவது சீட்டில் ஒரு பள்ளி மாணவன் உட்கார்ந்திருந்தான். கிழவன் வந்து அந்த சீட்டின் பக்கத்தில் கைவிட்டு எதையோ தேடினான். ஒரு பர்ஸ் கிடைத்தது. சிரித்துக் கொண்டே கீழே இறங்கி டாக்சி ஓட்டுநரிடம் காசு கொடுக்க திறந்த போது காசு இல்லை!! திரும்ப புலம்பிக் கொண்டே உள்ளே வந்து தேடினான். டிரைவர் ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமே? பொறுமையாக கதவைத் திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இதற்குள் டாக்சி டிரைவர் 'கைப்பேசியில்' யாருடனோ பேசிக்கொண்டு பந்தாவாக பஸ்ஸிற்குள் வந்து தேடினான். ஏதோ இவன் வந்தால் காசு கிடைத்துவிடும் போல. இப்போதாவது யாராவது ஒரு வார்த்தை பேச வேண்டுமே? இதுவே ஜெர்மனியாக இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். அவனுக்கு நேரம் தவறக்கூடாது. எனவே இதையெல்லாம் அனுமதிக்க மாட்டான். அவரவர் பொருளை பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு. கிடைத்தல் அதைக் கொண்டுபோய் ஒரு இடத்தில் கொடுத்துவிடுவர். அங்கு போய் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு! இந்தியாவாக இருந்தால் இதற்குள் ஒரு நாடகமே நடந்திருக்கும். பொது மக்கள் ஒரு பேச்சு, டிரைவர் ஒரு பேச்சு, தொலைத்தவன் ஒரு பேச்சு, டாக்சி டிரைவர் ஒரு பேச்சு என்று. கடைசியில் ஓட்டுநர் குரலே ஓங்கி நிற்கும். வண்டி எப்போதோ போயிருக்கும். ஆனால் வண்டி நின்று கொண்டே இருந்தது. ஒரு வார்த்தை. ஒரே ஒரு வார்த்தை. ஊகூம், இந்தப் பொறுமையை நான் உலகிலேயே பார்த்ததில்லை. முத்தாற்பாய், டாக்சி கிளம்பி பஸ்ஸை சுற்றிக் கொண்டு போகும்வரை பஸ் காத்திருந்தது. சத்தியமாய் இவர்கள் வேறு சாதி!! புத்தன் தவறிப் போய் இந்தியாவில் பிறந்து விட்டான். அவன் இவர்களுடன் பிறந்திருக்க வேண்டியவன்!

ஆய்வுப்பட்டறைக்கு வந்திருந்த ஒரு சீன விஞ்ஞானி காலை உணவின் போது என்னிடம் "தான் இதுதான் முதன் முறையாக மிகவும், அன்பாகவும், பண்பாகவும் பேசும் ஒரு இந்தியனைப் பார்க்கிறேன்" என்று என்னைப் பார்த்துச் சொன்னார். தூக்கிவாரிப் போட்டது. அவர் பார்த்தவரைக்கும் இந்தியர்கள் மூக்குத் தூக்கிகளாகவும், அராத்துகளாகவுமே இருந்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்து புதிதாக வரும் மாணவர்கள் கூட மிகவும் arrogant-ஆக இருப்பதாகச் சொன்னார். என்னால் முழுவதும் மறுப்பதிற்கில்லை. நாம் வேறு சாதி. கோபதாபங்கள், சந்தக்கடைச் சத்தம், அழுக்குப் பிடித்த தெருக்கள், கூவமென்று வாழ்வென்று வாழ்ந்து வரும் போது இந்தியர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அந்த இந்தியாவில் உலகு மெச்சும் தத்துவங்கள் வந்தது எப்படி என்பது பெரிய கேள்வி? அப்படியிருப்பதால்தானோ என்னவோ அத்தகைய தத்துவங்களும் தேவைப்படுகின்றன?

கருவறை வாசனை!
நாம் வளர்ந்த இடம் மாசுபட்டு வருகிறது, நாம் அருந்திய பால் அசுத்தமாகி வருகிறது. கடந்த 15 வருடங்களாக தொழிற்சாலை மாசு பற்றி ஆய்வு செய்து வருகிறேன். எங்கும் நீக்கமற நிறைந்துவரும் இச்சூழல் மாசு தாயின் கருவறைக்கும், தாய்ப்பாலுக்கும் குடி போய் விட்டது. சமீபத்தில் நான் ஆய்விற்கு எடுத்துக் கொண்டிருக்கும் வேதிமம் கடந்த 30 வருடங்களில் மட, மடவென தாய்ப்பாலில் கூடிவிட்டதை எதிர்த்து அமெரிக்காவில் புரட்சிகரமாகப் பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். வாழ்ந்த கருவறையான தாயின் உடலிலும், வாழும் கருவறையான பூமியிலும் மாசு புகுந்துவிட்டது! கருவறை வாசனையில் கலப்பு இருக்கிறது நண்பர்களே!

ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

முதலில் பிறந்தது வார்த்தை என்கிறது விவிலியம்! பிறக்கும் வார்த்தையெல்லாம் எங்கோ இருக்கின்றன, அவைகளைத் தேடுதல் நலமன்று. பல நேரங்களில் இனிய மொழி இருக்க, இன்னா வார்த்தைகள் பேசி விடுகின்றோம். அவைகளை மீண்டும் கேட்க யார் ஆசைபடுவர்? எனவே, எல்லாவற்றையும் சேர்க்க முடியாது. ஆனால் திருவாய்மொழிகளை, நல்ல இலக்கியச் சொல்லாடலை சேர்த்து வைத்தால், பின்வரும் சந்ததியினர் இரசிப்பர். அப்படிச் சேர்த்து வைத்ததுதானே அகநானூறு, புறநானூறு போன்றவை!

இலக்கியச் செல்வங்களைப் பாதுகாக்க பல வழிகள் உண்டு. அவைகளைப் பற்றி விரிவாக திசைகள் இதழில் எழுதிவருகிறேன். இதுவரை மேற்கொண்ட முயற்சிகளை முதுசொம் சாளரம் வழியாகக் காணலாம்.

ஆனால் மின்வெளியில் உருவாகும் தமிழ் இலக்கியம் ஒரு புது வகை. சமகால இலக்கியத்தில் ஒருவகை. மற்ற எழுத்துக்களைவிட இதைப் பாதுகாப்பது சுலபம். இது பாதுகாப்பான ஒரு ஊடகத்தில் இருக்கிறது. இலக்க எழுத்துக்களை இணையம் வழி பாதுகாப்பது எளிது. ஆனாலும், இதில் பல நடைமுறைச் சிக்கல் உள்ளன. உதாரணமாக,

1) உற்சாகமுள்ளவர்க்கு, இணையம் ஒரு Super High Way! முன்பு மாதத்திற்கு ஒரு மடல் எழுதியவர் இன்று நாளைக்கு நான்கு எழுதிகிறார். எனவே இங்கு இலக்கிய உற்பத்தி அதிகம். வேகம் கூட. எழுதுகிற எல்லாம் இலக்கியமென்று சொல்ல வரவில்லை. ஆனால் நடைமுறை உலகை விட மின்வெளியில் ஆக்கம் கூடுதல் என்பது நடமுறை! இதனால், எழுதும் எழுத்தைச் சீர் செய்து (edit) வெளியிடுவது பெரிய வேலை. தமிழ்.நெட்டில் மின்வெளியைத் தமிழன் முதல்முறையாகக் கண்டபோது ஒரு தங்கவேட்டையே நடந்தது - அதாவது Gold Rush! அது வண்டி, வண்டியாய் கிடக்கிறது. அதை யார், எப்போது சீர் செய்து வெளியிடுவது? ஆனால், அதிலிருந்து இலக்கியத்தை மீட்க ஒரு வழியுண்டு..

2) எழுதியவரே தொகுப்பதுதான் சிறந்த வழி. தமிழ் இணையத்தில் வெளிவந்த எனது பாசுர மடலே முதலாவதாக அப்படித் தொகுக்கப்பட்ட நூலாகும். அதை நான் முதலில் எனது வலைத்தளத்தில் சேர்த்தேன். HTML கற்றுக் கொண்ட புதிது. வலைவடிவமைப்பு அதிகம் தெரியாத காலம். பின்னால் இதையே கொஞ்சம் நல்ல படங்கள், இசை இவை சேர்த்து ஒரு குறுந்தகடாக தமிழ் இணைய 2001ம் மாநாட்டில் வெளியிட்டேன். எனவே இலக்கவடிவில் இணைய இலக்கியமாக வெளிவந்த முதல் படைப்பு இது என்று சொல்லலாம். அதே மாநாட்டில் டாக்டர் ஜெயபாரதி அவர்கள் தனது இணைய எழுத்துக்களை புத்தக வடிவில் கொண்டு வந்தார். அந்த மாநாட்டில்தான் எனக்கு 'பாசுரமடல்' கண்ணன் என்ற பட்டமும் கிடைத்தது! இரண்டு படைப்புக்களுக்குமே அமோக வரவேற்பு இருந்தது. நான் கோலாலம்பூர், பினாங் என்று இரண்டு இடத்திலும் வெளியிட்டேன். (மேடையேற்றமில்லாத வெளியீடு இது. மேடையில் அது அடுத்த வருடம் துபாய் அருகேயுள்ள சார்ஷா என்ற இடத்தில் வெளியிடப்பட்டது. இதனால் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் பதிப்பகத்தார் வெளியிடும்வரை காத்திருக்காமல் எழுத்தாளரே தனது எழுத்தைத் தொகுத்து வெளியிட முடியும். அதற்கு இணையம் எளிய வழிகளைத் தருகிறது. இம்முறையில் தொகுப்பில் அதிக கவனமும், அக்கறையும் எடுத்துச் செய்ய முடியும். எழுத்துப் பிழைகள் (printers devil!). பரிணாம விதிகளைப் பார்க்கும் போது இவ்வழியே சிறந்த வழி என்று தோன்றுகிறது. Selfish Genes கோட்பாட்டின்படி சுய அக்கறை கொண்ட எதுவும் காலத்தை வென்று நிலைத்து நிற்கும். ஒருவகையில் இதுவும் சுயத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியே! வாழ்வின் வெற்றிப் பின்னணியே இதை நம்பித்தான் உள்ளது. பாரதிக்கு இந்த மீடியா கிடைத்திருந்தால் எழுதித்தள்ளியிருப்பான். பல புதுமைகள் செய்திருப்பான். அது காலத்தை வென்றும் நின்று இருக்கும்.

3) படைப்பாளியே தனது படைப்புகளை இணையத்தளத்தில் சேர்த்து வைப்பது. நான் செய்திருக்கிறேன். டாக்டர் ஜெயபாரதி மற்றும் பலர் செய்துள்ளனர். இதுபற்றிய சேர்ப்பு வலைத்தளமிருந்தால் சொல்லுங்கள். இங்கு தொடர்பு கொடுக்கலாம். ஆனால் இதைச் செய்வதற்கு கொஞ்சம் தொழித்திறன் வேண்டும். இல்லையெனில் சிவசங்கரி செய்தது போல் காசு கொடுத்து வலையகம் உருவாக்கலாம். ஆனால், புத்தகம் வெளியிடுவதே பெரிய காரியமாக பல எழுத்தாளர்களுக்கு இருக்கும் போது காசு கொடுத்து எப்படி வலைத்தளம் அமைப்பது?

4) இதற்கிடையில், சுலபமான ஒரு வழியை இணையம் நமக்குத் தந்துள்ளது. அதுதான் பூவகம் அமைப்பது. இது வலையகம் கட்டுவதைவிட எளிது. ஆனால் அதிலே செய்யக் கூடிய அத்தனை நகாசு வேலையும் இதிலே செய்ய முடியும் - அதில் செலவிடக்கூடிய நேரத்தில் பாதியில்! ஒரு எழுத்தாளனுக்கு இது தரும் இதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்:

4.1. எழுத்தாளனுக்கு உந்துதல், உற்சாகப்படுத்துதல் அவசியம். அதற்கு ஏற்ற தளங்கள் தமிழ் மடலாடற்குழுக்கள். அவைகளில் பதிப்பிப்பது எளிது. அப்படிப்பதிப்பித்த எழுத்தை, உம்.கவிதை, கட்டுரை பூவகத்தில் எளிதாகக் கோர்க்கமுடியும். உண்மையில் இது மாலைக்கட்டுகிற வேலைதான்!

4.2. வலையகத்தில் ஒவ்வொரு கோப்பையும் வலையேற்றம் செய்தல் பெரிய வேலை. அதை இலகுவாக்கியதன் மூலம், காணும் எழுத்தை வெட்டி, ஒட்டினால் பூவக அமைப்பில் வேலை முடிந்தது.

4.3. மேலும் புதிய பக்கங்களை உருவாக்கல் இங்கு வெறும் சொடுக்கு வேலை!

4.4. ஒரே பக்கத்தில் கூட வெவ்வேறு தலைப்புகளில் நமது எழுத்தைப் பதிப்பிக்க முடியும்.

4.5. படங்கள் சேர்க்க முடியும். உதாரணமாக 'சம்ஸ்காரா' புகழ் யு.அனந்தமூர்த்தி அவர்களுடன் நான் அவர் லண்டன் வந்தபோது எடுத்த படம்.

4.6. வாசிப்பவர் தொடுக்கும் கேள்விகளை வாசிக்கமுடியும், சின்ன அரட்டை அரங்கங்களை நடத்தமுடியும், வேண்டுமெனில் நேரடியாக (real time chat) அரட்டையடிக்கமுடியும்.

5. எனவே இன்றே ஒரு பூவகம் தொடங்குக: எனக்குத்தெரிந்து நான்கு வள்ளல்கள் இலவசமாக பூவக அமைப்பைத் தருகின்றனர். அங்கு சென்று பூக்கூடை, நார் இவைகளை வாங்கிக் கொள்ளலாம். பூ சேகரிக்க வேண்டியது நமது பொறுப்பு!

5.1 Blogger
5.2 Rediff
5.3 Easy Journal
5.4 Intermutual

6. அடுத்து, பூவகம் அமைத்தபின் அது இருப்பதை அறிவிப்பவர்கள். எனக்குத் தெரிந்து இது பற்றி முதலில் தமிழில் வந்த கட்டுரை திரு.மாலனுடையது . பூக்களைக் கோர்த்து மாலையாக்கியபின் மாலைகளை அடுக்க வந்திருக்கிறார் ஹவாய் சந்திரமதி. இவரது Tamilblogs பூவகம் இதைச் செய்கிறது.

7. பூவகம் குறித்த செய்திகளைத் தாங்கும் ஒரு பூவிதழ் வர வேண்டிய காலக்கட்டம் வந்தாகிவிட்டது. அதில் பூவகம் அமைக்கும் முறைகள், எளிய கருவிகள், உத்திகள் பற்றிய விவரம், தமிழ்ப் பூவகங்களில் காணும் சிறப்பு என்று பலவாறு ஆராய இது உதவும். மேலும் பூவகம் பற்றி உலகு அறிய இது செய்யும். அதுதானே ஒரு எழுத்தாளனுக்குத் தேவை.

சரி, இவ்வளவு சொல்லியாகிவிட்டது. இன்னுமா சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்? எங்கே உங்கள் பூவகம்?

_________________________________________________________________________

2003 ம் ஆண்டு எழுதிய கட்டுரை. இப்போது எழுதியிருந்தால் வேறுமாதிரி இருந்திருக்கும் :-)

கொரியப் பணிவிடை
பேசாமல் இங்கேயே இருந்திடலாம் போலிருக்கு! இவர்கள் செய்யும் பணிவிடைகளைப் பார்த்தால்! 'அந்நியப்பதிவு' செய்துகொள்ள மொழிபெயர்ப்புத் துணையுடன் அன்று போனோம். அது சின்ன அலுவலகம். கொஞ்சம்தான் சிப்பந்திகள். என்னுடன் வந்தவர் மட, மடவென வந்த விவரத்தைச் சொன்னார். ஆண் அதிகாரி வாயைத் திறப்பதற்குள், அரை நிர்வாணமாயிருந்த குழந்தைக்கு ஏதோ செய்து கொண்டிருந்த பெண் பதில் சொன்னார். பெரும்பாலான கொரியப் பெண்கள் போல் இவரும் அழகாக இருந்தார். அது முக்கியமல்ல :-) ஆனால், அலுவலக நேரத்தில், ஒரு சிப்பந்தி குழந்தையை, அதுவும் அலுவலகத்தில் கவனிக்கலாமோ? No Problem! Koreans are cool about it! பாங்கிற்குப் போனால் வந்த காரியம் என்னவென்று சொல்வதற்குள் ஒரு பெண் காப்பி கொண்டு வந்து தருகிறாள். இந்த அலுவலகத்திலும் இலவசக் காப்பி இருந்தது. வந்தவர்கள் மேலும் பேசிக் கொண்டிருக்கும் போது பெண் சிப்பந்தி வெளியே வந்தார் குழந்தையுடன். நமக்குத்தான் குழந்தை என்றாலே ஒரு ஈர்ப்பு உண்டே. குழந்தையிடம் போனேன். தாய் வணக்கம் கூறச் சொன்னாள். அக்குழந்தை மழலையில் ஏதோ சொன்னது. இந்த இன்பமெல்லாம் எங்கே தொலைந்தது நாகரிகம் மிக அடைந்த வெள்ளையர் உலகில்? ஒரு காலத்தில் இந்தியாவும் இப்படி இருந்தது. இதுவே ஜப்பானாக இருந்தால் அவர்கள் பண்ணுகிற ஜபர்தார்! My God! ஜெர்மனைப் பார்த்து ஈயடிச்சான் காப்பி! கொரிய மக்கள் ரொம்ப வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். நேற்று தொங்யோங்க் போன போது ஒரு பேக்கரியில் சும்மா ஒரு டாலருக்கும் குறைவான சாமான்தான் வாங்கினேன். அந்தச் சின்ன வியாபாரத்தைக் கூட மிகப்பதிவுசாக, அன்புடன் செய்கின்றனர். அங்கும் ஒரு கைக்குழந்தை :-) இங்கு சம்பளம் அமெரிக்கா போல் இல்லாமல் இருக்கலாம். ஜெர்மனி போன்ற துப்புரவான நகரமைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களிடம் இன்னும் வெகுளித்தனம் இருக்கிறது. அன்பு இருக்கிறது. மனித வாழ்விற்கு அடிப்படையான இதைத் தொலைத்து விட்டு வாழ்கைத்தரம் உயர்ந்திருக்கிறது எங்கள் நாட்டில் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்!

கடைசியாக நேற்று காய்கறிக்காரக் கிழவியை போட்டோ எடுத்து விட்டேன். ரொம்பக் கூச்சப்பட்டு எழுந்தே விட்டார். ஆனாலும் கேமிரா விடவில்லை!

வாழ்க கொரியா!

புத்தனும், மன்மதக்குஞ்சுகளும்!
பௌத்தம் நமக்கு அந்நியமல்ல! நமது சங்ககால முன்னோர்களில் பலர் பௌத்தர்களே. ஆனாலும் நான் ஜப்பான் வரும்வரை ஒரு புத்தர் கோயிலுக்குப் போனதில்லை. அதே போல் வள்ளுவன் தொடக்கம் பல அறிவிஜீவிகள் சமணர்களே. ஆனாலும் உங்களி யாராவது ஒரு சமணக் கோயிலுக்குப் போனதுண்டா? மிகச் சமீபத்தில்தான் தஞ்சையில் ஒரு சமணக் கோயிலுக்குப் போனேன். நமக்கு அவையெல்லாம் அந்நியமாகிவிட்டன.


வித்தியாசமான துவார பாலகர்!

அந்த வகையில் யோசித்தால் ஒரு இந்தியருக்குக் கோயில் கட்டி பிற நாட்டவர் வழிபடுகின்றனர் என்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும் (ஆனால், புத்தர் ஒரு 'நேபாளி' என்று சண்டைக்கு வருவதாக கொரியன் டூர் கைட் என்னிடம் சொன்னார்!). சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் சுவர்க்கம் எங்கிருக்கிறது என்று கேட்டால் இந்தியா இருக்கும் தென் மேற்குத்திசையைக் காட்டுகின்றனர். இது மகிழ்ச்சியான விஷயமே. ஆனால் பாவம் அவர்களுக்கு சுவர்க்கவாசிகள் கோயில்களை எப்படி வைத்திருக்கின்றனர் என்று தெரியாது! பாதிக்கு மேற்பட்ட பிரம்மாண்டமான கோயில்களில் விளக்கேற்ற எண்ணெயில்லை. பல ஆயிரம் கோயில்கள் புணரமைப்பற்ற நிலையில் புல்லும், மரமும் வளர்ந்து இடிபடும் நிலையிலுள்ளன. வழிபாட்டிலுள்ள கோயில் சுற்று கழிப்பறை போல் இருக்கிறது. கோயிலுக்குள் போனால் எல்லா வியாபாரமும் செழித்து வளருகின்றன. சுவர்க்கம் என்றோ மாறிவிட்டது! சுவர்க்கம் அமைத்துத்தந்த புத்தனை இந்தியர்கள் என்றோ விரட்டிவிட்டனர் என்று பாவம்! அவர்களில் பலருக்குத் தெரியாது!


நுழை வாயில்

நேற்று புசான் என்னும் நகரிதிலிருக்கும் புத்தர் ஆலயத்திற்குச் சென்றேன். இது 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இராஜராஜ சோழன் இன்னும் பிறக்கவில்லை. பெரிய கோயில் பற்றிய பிரக்ஞை கூட இன்னும் எழவில்லை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் பௌத்தத்தை தமிழ் மண்ணிலிருந்து விரட்டுவதில் மும்முரமாக இருக்கின்றனர். திருமங்கையாழ்வார் வாழ்ந்த காலம்! புத்த சிலையை உருக்கி ரங்கனுக்கு பொன்வேய்ந்த சமயம்! இங்கு கொரியாவில் மிகப்பெரிய புத்தர் கோயில் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது! பெரும்பாலான கோயில்கள் மலை உச்சியிலேயே அமைந்துள்ளன. உண்மையின் மீது ஆர்வமும், சங்கத்தில் பிடிப்பும் உள்ளவர்கள் மட்டுமே வந்து காணக்கூடிய தூரத்தில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு போவது கடினம். போய்விட்டால் திரும்புவது கடினம். அவ்வளவு அழ்கான location! இயற்கை தன் அழகை, சௌந்தர்யத்தை தனிமையில் மனிதனுக்குக் காட்டும் இடங்கள். லயித்துப் போய் விடுவோம். அங்கு போய் சந்நியாசியாக இரு என்று சொல்வது கொடுமை. கூடி வாழ வேண்டிய இடத்தில் துறவறம்! ஐந்திணை வகுத்தவன் அங்கு முருகனை வைத்தான். அவளுக்கு தெய்வயானை மட்டும் போதாது என்று (சம்ஸ்காரா ஞாபகம்தான் வருகிறது :-) குரப்பெண் வள்ளியையும் சேர்த்து வைத்தான். வள்ளிக்குத்தான் தெரியும் மலையின் நெளிவு சுளிவுகள். தேய்வானை பாவம் urban girl.


அழகிய மலைக்காட்சியில் கோயில்

நிறைய டூரிஸ்ட் வந்திருந்தார்கள். இடையிடையே பௌத்த பிட்சுக்களைக் காணக்கூடியதாய் இருந்தது. கோயில் மிக சுத்தமாக இருந்தது. மலையேறிக் களைத்து வருபவருக்கு சுனைநீர் காத்துக் கிடந்தது. கொரியா, ஜப்பான் நாடுகளில் கோயிலுக்கு வருபவர் வாய் கழுவி கொஞ்சம் நீர் அருந்திவிட்டே உள்ளே போகின்றனர். உள்ளே பிரதான சந்நிதி. புத்தரும் அவரது இரு சகாக்களும். புத்த ஜாதகக்கதைகள் உள்ளும், தத்துவம் சொல்லும் நாட்டு வழக்கு கதைகள் வெளியிலும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. உள்ளே போனால் கோயில் ஒரு இந்தியனுக்கு மிக அருகில் வந்து விடுகிறது. தெரிந்த கதைகள். தெரிந்த புத்தர். வணங்கும் முறை கூட இந்தியத்தன்மை கொண்டுள்ளது. நாம் சாஷ்ட்டாங்கமாக விழுந்து எழுவோம், இவர்கள் சின்னத் தலையணை போன்ற ஒன்றில் அமர்ந்து, குனிந்து, எழுந்து, அமர்ந்து, குனிந்து என்று பலமுறை செய்து கொண்டே இருக்கின்றனர். கைகள் ஒவ்வொருமுறையும் கூப்புகிறது. கொஞ்சம் பழகிக் கொண்டால் செய்து விடலாம். ஏறக்குறைய 1500 வருடப்பழசு அந்தக் கோயில். பார்த்தால் தெரிகிறது. புரணமைப்பு நடந்து கொண்டிருக்கிறது.


நுணுக்கமான மர வேலைப்பாடு!

புசான் நகரிலும் ஒரு China Town உண்டு! வேடிக்கை என்னவெனில் இந்த சைனா டவுனில் எல்லாம் ஒரே ரஷ்யன் மயம்! ஒரே ரஷ்யர்கள். அமெரிக்கப் பயணிகள் தங்கள் திமிர்த்தனம் தெரியும் வண்ணம் இந்தத்தெருவில் மட்டும் உலவமுடிகிறது. நான் போனபோது நாலைந்து அமெரிக்க இளைஞர்கள் (இராணுவம்?) தாய், சகோதரி என்று வகை வகையாய் புணர் சொற்களை வீசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தனர். சாதாரண சம்பாஷணையில் இவ்வளவு கொச்சைத்தனம் அவசியமா என்றிருந்தது. ஆனால், தமிழ்க் கிராமங்களில் இப்படியான கொச்சைப் பேச்சு சகஜம். ஆக, the most sophisticated country-ன் சாதாரணக் குடிமகன் பேச்சும், the unsophisticated கிராமத்தான் பேச்சும் ஒன்றாக இருப்பது ஒரு முரண்நகை! தெருவெங்கும் மத்தியானப் பொழுது என்றும் பாராமல் பரத்தையர் நின்று கொண்டிருந்தனர் - மார்புகள் தெரியும் வண்ணம். வெள்ளையர் இன்னும் சங்ககாலத்தில் இருப்பது அவர்கள் ஆசியாவிற்குள் இருந்தாலும் தெரிகிறது. தினம் அவர்களுக்கு இந்திரவிழாதான்!!

கொரியாவில் இளவேனில் காட்சிகள்தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 4)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒýப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார். கொரியாவையும் இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்து, சிறந்த அனுபவங்களைப் பதிவு செய்து வருகிறார்.

இந்தப் பதிவில் கொரியாவில் பருவ காலங்கள் எப்படி உள்ளன? நில அமைப்பு எப்படி உள்ளது? அங்கு விவசாயம் எப்படி உள்ளது?, கொரிய இளைஞர்கள், விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்களா? கொரிய விவசாயிகளுக்குத் திருமணத்திற்குப் பெண்கள் கிடைக்காதது ஏன்? கீழை நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் கொரிய இளைஞருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிய சமூக மதிப்பு இல்லாதது ஏன்?... எனப் பலவற்றைப் பற்றியும் நம்முடன் உரையாடுகிறார். கொரியாவில் நா.கண்ணன், நிலத்தில் இறங்கி விவசாயம் புரிந்த கதை சுவாரசியமானது.

ஜப்பானியரைத் திருமணம் புரிந்துகொள்ளும் இலங்கைப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், ஜப்பானில் படும் பாடு பற்றியும் கண்ணன் விவரிக்கிறார். அவர் ஜப்பானில் சிறிது காலம் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான பின்னணி இசையுடன் கூடிய இந்த உரையைக் கேட்டு மகிழுங்கள்:

Sify.com

முந்நீர்

இன்று மெயின்லாண்டிலிருக்கும் பூசான் என்ற நகரத்திற்கு கடல் வழியாகப் போய் வந்தேன். கடல் மாலை வெய்யிலில் புனல் நீர் போல் கொஞ்சம் மஞ்சள் கலந்த பச்சையிலிருந்தது. கடல் எப்போதும் பிரம்மிக்க வைக்கும் விஷயம். கடலைத் தரையிலிருந்து பார்த்தாலும், கடலை கடலிலிருந்து பார்த்தாலும் பிரம்மிப்புதான். கடலை "முந்நீர்" என்றனர் நம் முன்னோர். எல்லா நீருக்கும் முந்திய நீர் என்று பொருள்! கொரியாவின் தென்முனை ஏகப்பட்ட தீவுகள் கொண்ட பகுதி. இந்தத்தீவுகளெல்லாம் ஒரு காலத்தில் பெரும் மலைகளாக இருந்திருக்க வேண்டும். கடல் நீர் கொட்டிக் கொட்டி இவைகளை அமுக்கி வைத்திருக்கிறது என்பது அறிவியல் தெரிந்தவருக்கு மட்டுமே புரியும். அதுவும் இந்த ஆச்சர்யத்திற்குக் காரணம். இந்தத் தீவுகளில் பல இன்னும் மக்கள் குடியேறாத தீவுகள்! கடற்பறவைகள் மட்டும் சுதந்திரமாக போய் வருவதைப் பார்த்தால் எனக்குள் ஆசை பெருகிறது. எனக்கும் பறக்கும் திறமையிருந்தால் இத்தீவுக்கூட்டங்களுக்கு மாலை வேளையில் போய் வருவேன். கனவுகளில் அடிக்கடி பறந்து இப்படி சஞ்சாரிப்பேன். ஒருமுறை பறந்து இலங்கையிலுள்ள அனுராதபுரத்திற்குப் போய் வந்தேன் (அது எப்படி கரெக்கெட்டா அனுராதபுரம்ன்னு கேட்கக்கூடாது. புத்த விகாரம் இருந்தது. அதனால்). எனக்கு ஏதோ சம்சயம் எனக்கும் பௌத்ததிற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது.

பூரான்!நானிருக்கும் கோஜேத் தீவு இயற்கையழகு மிகுந்தது (கேமிரா வாங்கியவுடன் போட்டோ !). சுற்றிலும் மலைகள். நடுவில் கடல். நேற்று காலை மழை, மதியம் கொஞ்சம் சூரியன், மாலையில் பஞ்சு போன்ற மேக மூட்டம். மலைக்களுக்கிடையில் மேகம் தவழ்ந்து, பரவுவது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேகத்தினூடே நடக்கின்றேன் என்பதை என் கண்ணாடி சொன்னது! அது ஈரமாகியிருந்தது.

இந்த மலைக்களுக்குள் நடக்கும் வண்ணம் ஏன் பாதைகள் அமைக்கவில்லை என்று கனடாவிலிருந்து வந்திருந்த விஞ்ஞானி கேட்டார். அவர்கள் சொன்ன பதில் ஆச்சர்யத்தைத் தந்தது. மலக்குள் போனால் பாம்பு இருக்கும் என்பதே அது. நான் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இருந்த போது எங்கள் குடிலுக்குப் பின் நாகமலை! வீட்டிற்கு அடிக்கடி சாரப்பாம்பு வரும். சும்மா செருப்பைக் கழட்டி அடித்த அனுபவமெல்லாம் உண்டு. ஒருமுறை ஆறடிப் பாம்பைக் கண்டு அரண்ட அநுபமும் உண்டு.

ஆனால் ஜெர்மனி போனபிறகு கொசுவைக் கூட கண்டதில்லை. ரொம்ப sterilized environment! னேர்த்தியான பூக்கள், மரங்கள், பூங்கா என்று. காடுகளில் நடப்போம். ஒரு வண்டு கூட கடிக்காது. ஒருமுறை ஸ்வேதாவை தேனி கடித்திருக்கிறது. அது கூட அவள் Sweet என்பதால்!! ஆனால் இன்று காலை நடந்த ஒரு நிகழ்வு இதை உங்களுக்கு எழுத வைத்தது! காலை உணவு எடுத்துக் கொண்டிருக்கும் போது படியில் யாரோ எதையோ தவறவிட்ட சத்தம். பொருட்கள் உருளும் சத்தம். கொஞ்ச நெரத்தில் ஆ! ஊ! ஹூ! என்ற சத்தம். என்ன அமர்க்களம் என்று பார்க்கப் போனால் ஒரு கொரிய விஞ்ஞானியை பூரான் கடித்து விட்டது. பாவம் துடித்துக் கொண்டிருந்தார். எனக்கு அவர் காட்டிய திசையிலிருந்த பூரான் மேல் கவனம். அது அழகாக ஊறிக் கொண்டிருந்தது வழுக்கும் தரையில்! அதைக் கொல்வதா? வேண்டாமா என்ற யோசனை! முன்பு போலிருந்தால் ஒரே அடி! இப்போது மனது இளகியிருக்கிறது! ஆனால் பூரான் மீண்டும் அவர் அறைக்குள் புகுந்த போது கொல்வதைத்தவிர வேறு வழியில்லை. பாவம் மனிதன் இன்னும் காலைப் பிடித்துக் கொண்டு அலறிக் கொண்டிருந்தார். சாக்ஸ்க்குள் போயிருக்கிறது. தெரியாமல் போட்டுக் கொண்டு நடந்து விட்டார். வெளியே வந்த பிறகு பாவம் பூரான் காற்று வாங்க அவரைக் கடித்திருக்கிறது. உள்ளே பூரான் இருப்பது தெரியாமல் மனிதன் எப்படி சாக்ஸ் போட்டு நடந்தார் என்பது இன்னும் ஆச்சர்யமாகவுள்ளது.

மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கொரியா வளர்ந்துவரும் நாடு. இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் ஜப்பான் மாதிரி, ஜெர்மனி மாதிரி சுத்தமாகிவிடும் (will be sterilized!).

தூர கிழக்கில் பௌத்தம்!


அப்போது நான் ஜப்பானில் வாழ்ந்து வந்த சமயம். என் குழந்தை பிரசவத்திற்கு என் மாமியார் வந்திருந்தார். அவர் "மறந்தும் புறம் தொழா" வைஷ்ணவர். பாவம் வயதான காலத்தில் பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கிறார், வந்தவருக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று, "பெருமாள் கோயிலொன்று இருக்கிறது, வருகிறீர்களா? என்று கேட்டேன். முகம் மலர்ந்து உடனே வந்து விட்டார். அருகிலிருக்கும் புத்தர் ஆலயத்திற்கு அழைத்துப் போனேன். "அண்டர்கோன் அணியரங்கன்! - என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!" என்று சொல்லுமாற்போல அவரது கண்கள் அணியரங்கனை அங்கு தேடிக்கொண்டிருந்தன. ஆனால் சாமவேதம் ஓதுவது போல் புத்த பிட்சுக்கள் பௌத்த மந்திரம் ஓதிக்கொண்டிருந்தனர். 10 அவதாரத்தில் இவரும் ஒருவர்தானே! என்று சமாதானம் செய்து பார்த்தேன். புத்தரை ஒரு அவதாரமாக ஆழ்வார்களும் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆச்சார்யர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. என் மாமியாரும் ஏற்றுக் கொள்ளவில்லை!!


கொரியக் கலைஞர்கள் ஜப்பான் நாரா-நகரில் அமைத்த மாபெரும் புத்தர் கோயில்


பௌத்தம் தழைத்திருந்த நாடுகளுக்கெல்லாம் 17ம் நூற்றாண்டு தொடக்கம் கிறிஸ்தவம் வர ஆரம்பித்தது. இன்று கொரியாவில் எங்கு திரும்பினாலும் கிறிஸ்தவ தேவாலயங்களே! அவை ஊருக்கு நடுவே இருக்கின்றன. புத்தர் கோயில்கள் ஊருக்கு புறத்தே மலையில் இருக்கின்றன. 21ம் நூற்றாண்டிலிலேயே அடர்ந்த காடுகளுக்கிடையில் இருக்கும் இக்கோயில்களுக்கு போவது கடினமாக இருக்கிறது...(சபரிமலை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்) 17ம் நூற்றாண்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். துறவு என்பதை முக்கியக் குறிக்கோளாக பௌத்தம் வலியுறுத்துவதை இன்று கூடக் காணமுடிகிறது. இல்லறம், துறவறம் என்பதைப் பற்றி நம்மவர் ஏன் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பேசத் தொடங்கிவிட்டனர் என்று இப்போது புரிகிறது! சமயங்கள் குடும்பஸ்தனுக்கு அருகாமையில் இருக்கவேண்டும். மனது கஷ்ட்டப்படும் போது கோயிலுக்கு போகக்கூடியதாய் இருக்க வேண்டும். சுவாமி, மலையில் போய் உட்கார்ந்து கொண்டால் பக்தன் என்ன செய்வான்? பௌத்த, சமண மதங்களுக்கு எதிரான போரில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் இதை முன்னிறுத்தி வென்றும் இருக்கின்றனர். வெங்கடேச சுப்ரபாதம் நாரணனை 'லோக பந்து' என்கிறது. இவன் உலகத்திற்கு நண்பன். அவர்களை விட்டு விலகிப் போவதில்லை. அவர்கள் அருகாமையில் இருப்பவன். திருநெல்வேலிச் சீமையிலிருக்கும் பெருமாள் கோயில்களெல்லாம் வயல்காட்டின் நடுவே அமைந்திருக்கின்றன. வயலில் உழைப்பவன் கோயிலுக்கென்று வேறெங்கும் போக வேண்டாம். குளித்து, அப்படியே ஒரு கும்பிடு போட்டால் போதும். (இந்தக் கும்பிடு போடுவது பற்றி அடுத்ததில்!)


நாரா புத்த பெருமான். இவரது மூக்கு ஓட்டைக்குள் ஒரு மனிதன் நுழைந்து வரும் அளவு மிகப்பெரிய சிலை


லௌகீக வாழ்விற்கு இந்த அருகாமை மிகவும் முக்கியம். ஆனால் தூர கிழக்குவரை தனது தத்துவ வலிமை ஒன்றை மட்டும் பலமாகக் கொண்டு பரவிய பௌத்தம் 'மெலிந்து' கிடக்கிறது. நட்பு, தோழமை, ஒரு கிளப் மனப்பான்மை இவைகளை நடைமுறையில் கொண்டுள்ள இஸ்லாம், கிறிஸ்தவம் - மலேசியா, இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பௌத்தத்தை வென்று விட்டது. அடுத்துக் கொரியா என்று தோன்றுகிறது!

அரசுகள் பௌத்தத்தை ஆதரித்தவரை பௌத்தம் வளர்ந்தது. இன்று அரசு ஆதரவு இல்லாத நிலையில் அது வழக்கொழிய ஆரம்பித்துள்ளது. இந்தியச் சமயங்கள் 'நிறுவனப்படுத்துதலை' (institutionalizing Truth) என்றும் ஏற்றுக் கொண்டதில்லை. எனவே அங்கு ஒரு 'போப்பாண்டவர்' 'இமாம்' இல்லை. அதனால் சமயங்கள் தழைக்க அரசு ஆதரவை அவை நம்பியிருந்தன. ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் என்பவை இறுக்கமான கட்டமைப்பு கொண்ட சமயங்கள். அரசு ஆதரவின்றியே அவை தன் காலில் நிற்கக்கூடியவை! அடுத்த நூற்றாண்டின் சமயமாக கிறிஸ்தவமே இருக்கும் என்று தோன்றுகிறது! அதனுடைய பிரச்சார வலிமை பௌத்தத்திற்கும், பிற இந்தியச் சமயங்களுக்கும் இல்லை. காலம் மாறி வருகிறது. இதைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

சுகப்பெண்!

சுகப்பெண்!

நான் காய்கறிக் கிழவிகளிடம் பேசுவதை நீங்கள் அறிவீர்கள். அவர்களுக்கு ஜப்பானீஸ் தெரியும். ஏனெனில் கொரியா ஜப்பானின் காலனியாக இருந்திருக்கிறது. நம்மாளுக பட்லர் இங்கிலீஸ் பேசுவது போல! நான் ஜப்பானிய மொழியில் பேசும் போது மிகச் சிலரே பதிலுரைத்தனர் அதே மொழியில். சில கிழவிகள் கஷ்டப்பட்டு ஆங்கிலத்திற்குத் தாவினர். ஜப்பானிஸ் தெரியாதாலோ, நம்மாளுக மாதிரி ஒரு ஆங்கில மோகத்தாலோ அல்ல அது. அவர்களுக்கு அம்மொழி அது தரும் நினைவுகள் பிடிக்கவில்லை! ஏன்?

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் நாட்சிகள் செய்த கொடுமை உலகமறியும். அதைத் தூக்கிச் சாப்பிடும் கொடுமைகளை ஜப்பான் கொரியர்களிடம், சீனர்களிடம், மலேசியரிடம் செய்திருக்கிறது. இதைப்பற்றி நம்மில் பலர் பேசுவதுமில்லை. பல காரணங்களுண்டு. நாம் ஆங்கிலேயன் என்ன சொல்கிறானோ (அதாவது பி.பி.சி) என்ன சொல்கிறதோ, சி.என்.என் என்ன சொல்கிறதோ! அதுதான் உண்மை, அதுதான் உல்கமென்று வாழ்பவர்கள்! ஆங்கிலேயருக்கு இன்றளவும் நாட்சிகளைப் பற்றிப் பேசுவது பிடிக்கும். இந்த ஆங்கிலேயர்கள் நமக்குச் செய்த கொடுமைகளைக் கூட மறந்து கிளிப்பிள்ளை போல் நம்மவர் ஆங்கிலேயன் போல் ஜெர்மானியரைக் குறை சொல்லிப் பேசுவது பல சமயம் எரிச்சலாக வரும். அடுத்து, நம்ம சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானியருடன் உறவு வைத்துக் கொண்டதால் நமக்கு ஒரு பாசம் ஜப்பானியரிடம் உண்டு. இதனால் ஜப்பானியர் செய்த கொடுமை உலகமறியாமலே போய்விட்டது.

ஜப்பானியப் பாடத்திட்டத்தில் இரண்டாம் உலக யுத்தம் பற்றிய குறிப்புக் கூடக் கிடையாது. ஆனால் ஜெர்மன் தொலைக்காட்சியில் வாரம் ஒரு படம் போகும் ஹிட்லர் பற்றி. அவர்கள் அடுத்த தலைமுறைக்குச் சொல்லிச் சொல்லித் திருத்துகிறார்கள். ஜப்பானியர் ஊமைக் கொட்டானாக ஒன்றுமே நடக்காதது போல குழந்தைகளை வளர்க்கிறார்கள்!!

கொரியா சீன தேசத்தின் மூக்கு என்று சொல்லலாம். பட்டுப்பாதை பிரபலமாக இருந்த போது, கொரியா ஒரு மிக முக்கியத் துறைமுக நாடு. ஜப்பானுக்கு பௌத்தம் போனது கொரியா வழியாகத்தான். அவர்கள் மொழி போனதும் இங்கிருந்துதான். இன்று கூட கொரிய வம்சத்தைச் சேர்ந்தவர்தான் ஜப்பானிய மன்னர். ஆனால் என்ன இருந்து என்ன பயன். வருபவன், போபவனெல்லாம் கொரியாவை ஆண்டிருக்கிறான். ஏறக்குறைய 900 முறை அது அடிமைப் பட்டிருப்பதாக ஒருவர் என்னிடம் கூறினார். அதிலொன்றுதான் ஜப்பானியரிடம் அடிமை வாழ்வு வாழ்ந்தது! கொரியப் பெண்கள் பார்க்க மிக அழகாக இருப்பார்கள். போதாதோ? ஜப்பானிய போர் வீரர்களுக்கு களிப்பூட்ட கொரிய மாந்தர் களிப்பெண்களாக ஆக்கப்பட்டனர். களித்தல், சுகித்தல், பின் புறக்கணித்தல் என்பவை போர்க்கால நியதி அல்லவோ? நான் பார்த்த கிழவிகள் ஒரு காலத்தில் அழகியாக இருந்திருப்பர். அவர்களில் சிலர் ஜப்பானியரிடம் களிப்பெண்களாக கொங்கையடி பட்டிருப்பர். அந்த சோகம் இப்போது தெரியவில்லையெனினும் அவர்கள் ஜப்பானிய மொழியை புறக்கணிப்பதன் அர்த்தம் புரிகிறது.

ஆகஸ்ட் 15 கொரியா ஜப்பானிடமிருந்து விடுதலை பெற்ற தினம். வாழ்க சுதந்திரம்.

ஷாங்காய் நினைவுகள்


நான் சிஃபி.வணி யில் புதிய முயற்சியாக ஒலிப்பத்தி தொடங்கியிருப்பது பற்றி இங்கு சொல்லியுள்ளேன் என்று நினைக்கிறேன். எனது சமீபத்திய ஒலிப்பத்தியில் ஷங்காய் நகர் பற்றிய என் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். கையோடு இருந்த கையடக்க கேமிராவில் (1 ல் 7) சின்ன வீடியோக்காட்சிகள் எடுத்து, ப்இன் தொகுத்து இரண்டு படங்கள் (புழக்கடை சினிமா) வழங்கியுள்ளேன்.

ஒரு நடை போய் வாருங்கள்!