பூரான்!நானிருக்கும் கோஜேத் தீவு இயற்கையழகு மிகுந்தது (கேமிரா வாங்கியவுடன் போட்டோ !). சுற்றிலும் மலைகள். நடுவில் கடல். நேற்று காலை மழை, மதியம் கொஞ்சம் சூரியன், மாலையில் பஞ்சு போன்ற மேக மூட்டம். மலைக்களுக்கிடையில் மேகம் தவழ்ந்து, பரவுவது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேகத்தினூடே நடக்கின்றேன் என்பதை என் கண்ணாடி சொன்னது! அது ஈரமாகியிருந்தது.

இந்த மலைக்களுக்குள் நடக்கும் வண்ணம் ஏன் பாதைகள் அமைக்கவில்லை என்று கனடாவிலிருந்து வந்திருந்த விஞ்ஞானி கேட்டார். அவர்கள் சொன்ன பதில் ஆச்சர்யத்தைத் தந்தது. மலக்குள் போனால் பாம்பு இருக்கும் என்பதே அது. நான் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இருந்த போது எங்கள் குடிலுக்குப் பின் நாகமலை! வீட்டிற்கு அடிக்கடி சாரப்பாம்பு வரும். சும்மா செருப்பைக் கழட்டி அடித்த அனுபவமெல்லாம் உண்டு. ஒருமுறை ஆறடிப் பாம்பைக் கண்டு அரண்ட அநுபமும் உண்டு.

ஆனால் ஜெர்மனி போனபிறகு கொசுவைக் கூட கண்டதில்லை. ரொம்ப sterilized environment! னேர்த்தியான பூக்கள், மரங்கள், பூங்கா என்று. காடுகளில் நடப்போம். ஒரு வண்டு கூட கடிக்காது. ஒருமுறை ஸ்வேதாவை தேனி கடித்திருக்கிறது. அது கூட அவள் Sweet என்பதால்!! ஆனால் இன்று காலை நடந்த ஒரு நிகழ்வு இதை உங்களுக்கு எழுத வைத்தது! காலை உணவு எடுத்துக் கொண்டிருக்கும் போது படியில் யாரோ எதையோ தவறவிட்ட சத்தம். பொருட்கள் உருளும் சத்தம். கொஞ்ச நெரத்தில் ஆ! ஊ! ஹூ! என்ற சத்தம். என்ன அமர்க்களம் என்று பார்க்கப் போனால் ஒரு கொரிய விஞ்ஞானியை பூரான் கடித்து விட்டது. பாவம் துடித்துக் கொண்டிருந்தார். எனக்கு அவர் காட்டிய திசையிலிருந்த பூரான் மேல் கவனம். அது அழகாக ஊறிக் கொண்டிருந்தது வழுக்கும் தரையில்! அதைக் கொல்வதா? வேண்டாமா என்ற யோசனை! முன்பு போலிருந்தால் ஒரே அடி! இப்போது மனது இளகியிருக்கிறது! ஆனால் பூரான் மீண்டும் அவர் அறைக்குள் புகுந்த போது கொல்வதைத்தவிர வேறு வழியில்லை. பாவம் மனிதன் இன்னும் காலைப் பிடித்துக் கொண்டு அலறிக் கொண்டிருந்தார். சாக்ஸ்க்குள் போயிருக்கிறது. தெரியாமல் போட்டுக் கொண்டு நடந்து விட்டார். வெளியே வந்த பிறகு பாவம் பூரான் காற்று வாங்க அவரைக் கடித்திருக்கிறது. உள்ளே பூரான் இருப்பது தெரியாமல் மனிதன் எப்படி சாக்ஸ் போட்டு நடந்தார் என்பது இன்னும் ஆச்சர்யமாகவுள்ளது.

மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கொரியா வளர்ந்துவரும் நாடு. இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் ஜப்பான் மாதிரி, ஜெர்மனி மாதிரி சுத்தமாகிவிடும் (will be sterilized!).

6 பின்னூட்டங்கள்:

வாசன் 5/17/2006 09:51:00 AM

பூரான் கடிக்குமா அல்லது கொட்டுமா...? ஐயம்.

10 வயதில் என் வலது காதில் பூரான் கொட்டியதா - கடித்ததா என்பது ஞாபகமில்லை. இரவு முழுக்க வேப்பிலையால் காதில் ஒத்தடமடித்து என்னைத் தூங்க வைத்தார், ஊர் கோவில் பட்டாச்சாரியார் ( பகுதி நேர நாட்டு வைத்திய ஆராய்ச்சியாளரும்).

படாத பாடு பட்டது, சில பத்தாண்டுகள் ஓடிவிட்டாலும் இன்னும் மறக்கவில்லை. பூரான்களுக்கு கொஞ்சம் கூட இரக்கம் பார்க்கக்கூடாது.

இங்கே நியு மெக்சிக்கோவில் பூரான்கள் நெளியல் நிறைய. அல்பைனோ போன்ற வெளுப்புகளுமுண்டு.

மாநில பறவையான ரோட்ரன்னருக்கு பிடித்த பதார்த்தம் பூரான்கள் என்பதால் தொகை வெகுவாக அதிகரிக்க வாய்ப்புகளில்லை.சுவேதாவிற்கு ஞாபகம் இருக்குமா தெரியவில்லை. எங்களது அன்பைத் அவருக்குத் தெரிவியுங்கள்.

வடுவூர் குமார் 5/17/2006 02:58:00 PM

வடகொரியாவா? தென்கொரியாவா?
இங்கு ஒரு கொரிய companyயில் வேலை செய்யும்போது அவர்கள் சொன்னது--"எங்களூக்கு வெளியூர் ஆட்களை படிக்காது,அவர்கள் எங்கள் நாட்டுக்கு வருவதை நாங்கள் விரும்பவிலை" என்று.Bit conservative.

நா.கண்ணன் 5/17/2006 06:31:00 PM

பொதுமைப்படுத்த முடியாது. தென்கொரியா இந்தியர்கள் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறது. எனது ஊரில் மட்டும் 100 இந்திய என்ஜினியர்கள் சாம்சுங் கம்பெனியில் வேலை செய்கின்றனர்.

நா.கண்ணன் 5/17/2006 06:44:00 PM

வாசன் நலமா?

இந்த ஜந்துக்கள் கடித்தாலும், கொட்டினாலும் ஒரே effect-தான் :-) தேள் கடி, பூரான் கடிக்கு மருந்து என்று பார்த்திருக்கிறேன். ரோடுரன்னருக்கு பூரான் பிடிக்கும் என்பது சுவாரசியமான விஷயம்.

உங்களுடன் சேர்ந்து கிராண்ட்கென்யன் பார்த்தது வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம். ஸ்வேதாவும் நானும் நினைத்துக் கொள்வோம். இப்போது அவல் பெரிய பெண். முடிந்தால் இந்த ஜூலையில் அவளுக்கு அமெரிக்காவின் வடகிழக்கு காட்ட ஆவல்.

இராதாகிருஷ்ணன் 5/18/2006 06:20:00 AM

//உள்ளே பூரான் இருப்பது தெரியாமல் மனிதன் எப்படி சாக்ஸ் போட்டு நடந்தார் என்பது இன்னும் ஆச்சர்யமாகவுள்ளது.// இதுக்கே இப்படீங்கறீங்களே, பள்ளிக்கூடத்துல படிக்கறப்போ 'பேண்டு' ஜோப்புக்குள்ள சுண்டெலி இருக்கறதுகூடத் தெரியாம வகுப்புக்குள்ள அதெ எடுத்து விட்டாம் பாருங்க ஒருத்தன்... :-)

நா.கண்ணன் 5/18/2006 08:00:00 AM

++படிக்கறப்போ 'பேண்டு' ஜோப்புக்குள்ள சுண்டெலி இருக்கறதுகூடத் தெரியாம++++

ஹா, ஹா!!
பள்ளிப்பருவத்தில் வெல்லம் தின்ற வாயைக் கழுவாமல் படுத்துவிட்ட ஒரு மாணவனை, ஒரு எலி வெல்லத்தையும், கொஞ்சம் சதையையும் தின்று விட்டதைக் காலையில்தான் உணர்ந்தான்! எப்படி, அப்படித் தூங்கமுடிகிறதோ?