இந்தியா கொரியா பாய் பாய்!

நா. கண்ணன்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 2)


தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தமது ஒலிப்பத்தியின் இரண்டாம் பகுதியில் இந்திய கொரிய உறவுகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

'கொரியா "காலை அமைதியின் நாடு" என்று தாகூர் பாராட்டினார்...... கொரியர்களிடம் சொர்க்கம் எங்கிருக்கிறது என்று கேட்டால் அவர்கள் இந்தியாவை நோக்கிக் கை காட்டுவார்கள்....... கொரியர்கள் அரிசிச் சோறுதான் சாப்பிடுகிறார்கள்..... ஒவ்வொரு கொரியக் குழந்தையும் பிறக்கும் போதே ஒரு செல்பேசியுடன் பிறக்கிறது...... இப்படிப் பல சுவையான செய்திகளை இந்த உரையில் கேட்கலாம்.

இவை மட்டுமல்ல; உலக அரங்கில் சீனாவுக்கு உள்ள மரியாதை, இந்தியாவுக்கு ஏன் இல்லை? இந்தியா எவற்றைத் தவறவிட்டது? இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் உள்ள வரலாற்று ரீதியான தொடர்புகள், பவுத்த மத ரீதியிலான பிடிப்பு, தொழில் வணிக வளர்ச்சிக்கு வழிகள், இந்தியாவின் கடமைகள்..... எனப் பல பயனுள்ள செய்திகளைப் பற்றியும் பேசியிருக்கிறார்.

மெல்லிய இசையின் பின்னணியுடன் நா.கண்ணனின் ஒலிப்பத்தியை இங்கே கேளுங்கள்.

நேர அளவு: 13.55 நிமிடங்கள்

this is an audio post - click to play


நன்றி: சிஃபி.வணி

2 பின்னூட்டங்கள்:

வெளிகண்ட நாதர் 5/28/2006 06:37:00 AM

உங்களுடய இந்த விவரம் சொறிந்த பேச்சு பதிப்பை கேட்கும் பொழுது மிக்க மகழ்ச்சியாக உள்ளது! வாழ்க உங்களது பணி! தொலை கிழக்காசிய நாடுகளில் நமது நட்புறவு நன்கு வளர வேண்டும், அவர்களும் நம்மை பெரிய அளவில் மதித்து போற்றுவதை பார்க்கும் பொழுது(மேற்கை விட), மிக மகிழ்ச்சியாக உள்ளது!

நா.கண்ணன் 5/28/2006 07:32:00 AM

இந்தியர்கள் தங்கள் நோக்கை வரும் நூற்றாண்டில் மாற்றிக் கொள்ள வேண்டும். சீன, கொரிய உறவு இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியம். மேலும் அனைத்து தென்னாசிய, கிழக்காசிய நாடுகள் இந்தியக் கலாச்சார எச்சம் கொண்டவை. எனவெ உறவை மீட்டெடுத்தல் எளிது. பொது மக்கள் மத்தியில் இக்கருத்துக்கள் பரவலாக்கப்பட வேண்டும். தொலைக்காட்சிகள் வெறும் அமெரிக்கக் கனவுகளை அள்ளி வீசாமல் கிழக்காசிய உண்மைகளைத் தர வேண்டும்.