ஃபிபா: ஐரோப்பிய ஓரவஞ்சனை

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 8)
நா.கண்ணன்

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒýப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

ஜூன் 9 அன்று தொடங்கிய ஃபிபா - உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடர், ஜூலை 9 அன்று வரை நடைபெறுகிறது. இதில் உலகெங்குமிருந்து 32 நாடுகளின் அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் சுற்றிலேயே 16 அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன. காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றில் மேலும் 8 அணிகள் வெளியேறிவிட்டன. காலிறுதியில் ஜெர்மனி, அர்ஜென்டைனா, பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், உக்ரைன், போர்ச்சுகல், இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் மட்டுமே தகுதி பெற்றன.

துரதிருஷ்டவசமாக கொரியா, ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய ஆசிய அணிகள் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்துவிட்டன. காலிறுதியில் ஆசிய நாடு ஒன்றுகூட இடம் பெறவில்லை. ஆப்பிரிக்க அணிகளும் இடம் பெறவில்லை. எனவே கால்பந்து, ஐரோப்பிய ஆட்டம் போலவே இப்போது நடைபெற்று வருகிறது. தென்அமெரிக்க அணிகள் மட்டுமே ஐரோப்பாவுக்கு ஈடான போட்டியை அளித்து வருகின்றன.

கொரியாவில் கால்பந்து ஒரு தேசிய விளையாட்டைப் போலவே ஆடப்படுகிறது. அந்த நிலையில் கொரியா, இரண்டாம் சுற்றுக்குக்கூட தகுதி பெறாதது அவர்களுக்குப் பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. அநேக கொரியர்கள், ஃபிபா, ஐரோப்பிய அமைப்பைப் போலவே செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

முதல் சுற்றில் கொரியாவுக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ஒரு பெனால்டி கிக் வரவேண்டியது. ஆனால், நடுவர், அந்த வாய்ப்பை சுவிட்சர்லாந்திற்கு அளித்துவிட்டார். ஏனெனில் ஃபிபா அமைப்பின் தலைமையகம், சுவிட்சர்லாந்தில் உள்ளது. எனவே, இப்படி ஓர் ஓரவஞ்சனை.

உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை கொண்ட ஆசியக் கண்டத்திலிருந்து 4 நாடுகள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்று ஃபிபா அளவுகோல் வைத்துள்ளது. ஆனால், இந்தியாவின் அளவே நிலப்பரப்புக் கொண்ட மேற்கு ஐரோப்பாவிலிருந்து எவ்வளவு நாடுகள் கலந்துகொள்கின்றன! இது, மீண்டும் வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவதாகவே உள்ளது.

இப்படியான ஒரு கண்ணோட்டத்தில் இந்த ஒலிப்பதிவு அமைந்துள்ளது. நா.கண்ணனின் மூலம் கொரியர்களின் உணர்வுகளை நாம் நேரடியாக அறிய முடிகிறது. ஃபிபா அமைப்பின் ஐரோப்பிய ஓரவஞ்சனையை அவர் சான்றுகளுடன் கூறியுள்ளார்.

வித்தியாசமான பின்னணி இசையுடன் அவருடைய உரையை இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 7. 16 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

கால்பந்துக் காய்ச்சல்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 7)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒýப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

ஜூன் 9 அன்று தொடங்கிய ஃபிபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடர், ஜூலை 9 அன்று வரை நடைபெறுகிறது. இதில் உலகெங்குமிருந்து 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 16 அணிகள் போட்டியிடுகின்றன. இன்னொரு விதத்தில் சொன்னால், போட்டியிலிருந்து 16 அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன. துரதிருஷ்டவசமாக கொரியா, ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய ஆசிய அணிகள் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்துவிட்டன.

தென்கொரியாவில் வசிக்கும் நா.கண்ணன், ஏற்கெனவே ஜப்பானிலும் வசித்தவர். மேலும் ஜெர்மனிலும் நீண்ட காலம் வசித்தவர்; அவருக்கு ஜெர்மானிய குடியுரிமை இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை மூன்றும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றுள்ள அணிகள். கால்பந்து ரசிகரான அவர், இந்த ஃபிபா உலக் கோப்பைக் கால்பந்து, உலகெங்கும் எத்தகைய காய்ச்சலை உண்டாக்கி இருக்கிறது என்பதை சுவாரசியமாக எடுத்துச் சொல்கிறார்.

கால்பந்து ஒரு விளையாட்டு என்ற எல்லையைக் கடந்து, அது ஒரு போர் என்ற நிலைக்குச் சென்றுவிட்டதை அவரது உரை வெளிப்படுத்துகிறது. அதில் தோல்வி அடையும் நாட்டுக்கு அவமானம் நேருவதாக அந்த நாட்டு மக்கள் எண்ணுகிறார்கள். இது, உலகெங்கும் பதற்றத்தையும் கவலையையும் தோற்றுவிக்கிறது. நா.கண்ணன், இந்த விளையாட்டுக்கு உள்ள முக்கியத்துவத்தைத் தன் உரையில் அழகாகக் காட்டியுள்ளார்.

வித்தியாசமான பின்னணி இசையுடன் அவருடைய உரையை இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 12. 30 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

நந்தா! (கொரிய நாடகம்)

வித்தியாசமான கொரிய நாடகங்கள்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 7)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி


தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

முந்தைய பதிவில் கொரிய திரைப்படங்களைப் பற்றிப் பேசிய நா.கண்ணன், இந்தப் பதிவில் கொரிய நாடகங்கள் பற்றி விவரிக்கிறார்.

சியோýல் நடைபெற்ற 'நன்தா' என்ற நாடகம் அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்த நாடகத்தில் யாரும் பேசவில்லை; செய்கைகள் மூலமே நாடகத்தை நடத்திச் சென்றனர். பார்வையாளர்களும் பங்கேற்கும் விதமாக அந்த நாடகம் அமைந்திருந்தது. நாடகத்தின் கதைக் களம், ஒரு சமையலறை. அங்கு சாதாரணமாகப் புழங்கக்கூடிய பாத்திரங்களையும் இயல்பாக எழும் ஓசைகளையும் வைத்து முழு நீள இசை நாடகத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். பிற நாடுகளிலும் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த நாடகத்தின் பின்னணியில் கொரியாவின் மரபார்ந்த செவ்வியல் இசை பயின்றுள்ளது. இந்த நாடகத்தின் சிறப்பம்சங்கள் குறித்துக் கண்ணன் அழகாகப் பேசுகிறார்.

இந்த நாடகத்தைப் பார்க்கும் நீங்கள் விசில் அடிக்கலாம்; சத்தம் போடலாம்; உரக்கச் சிரிக்கலாம் என்று அறிவித்துள்ளார்கள். இடையிடையே நகைச்சுவை ஊட்டவும் கலைஞர்கள் தவறவில்லை. கொரிய சாஸ்திரீய சங்கீதம், கொரிய பாப் மியூசிக், கொரிய வர்மக் கலைகள் ஆகியவை அந்த நாடகத்தில் இடம் பெறுகின்றன. அவற்றை நடிப்பவர்களே, நிகழ்த்துகிறார்கள். அந்தக் கலைஞர்கள் நடிப்போடு நிற்காமல் பன்முகத் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

நாடகத்தில் தொடங்கிய கண்ணன், கொரியர்களின் கலாச்சாரம், கல்வி, தத்துவம், சமூகம், வளர்ச்சிக்கான காரணம், கன்பூசியனிசம்... எனப் பலவற்றைப் பற்றியும் பேசுகிறார்.

வித்தியாசமான, இனிய பின்னணி இசையுடன் அவருடைய உரையை இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 12. 51 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

தேர்தலோ தேர்தல்!

3 நாடுகளில் தேர்தல்: ஓர் ஒப்பீடு

நா.கண்ணன்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 6)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

இந்தப் பதிவில் கொரியாவில் நடைபெறும் தேர்தலை நம் கண்முன் விரிக்கிறார். ஜெர்மானியக் குடிமகனான இவர், ஜெர்மானியத் தேர்தல் நிலவரங்களும் தெரிந்தவர். இவருக்கு ஜெர்மனியில் வாக்குரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மட்டில் இந்தியா, ஜெர்மனி, கொரியா ஆகிய மூன்று நாடுகளின் தேர்தல் நடைமுறைகள் குறித்து இந்தப் பதிவில் அழகாக விவரிக்கிறார்.

தெருவில் ஒலிபெருக்கிகள், சுவரொட்டிகள், வீதி முனைக் கூட்டங்கள்... போன்ற எதுவும் இல்லாமல் ஒரு தேர்தலை இந்தியாவில் கற்பனை செய்ய முடியாது. ஆனால், மேலை நாடுகளில் இவற்றுள் எதுவும் இல்லை; கட்சிகள், வேட்பாளர்கள் குறித்த அனைத்து விவரங்களும் தொலைக்காட்சிகள் மூலமாக மக்களைச் சென்றடைகின்றன. தேர்தல் நடப்பதற்கான ஒரே அறிகுறி, அது தொடர்பாக வரும் ஒரு கடிதம்தான் என நா.கண்ணன் குறிப்பிடுவது வியப்பளிக்கிறது. மேலை நாடுகளிடமிருந்து நாம் ஒத்தியெடுத்தவை அநேகம். இதைப் போன்ற நல்ல அம்சங்களையும் பின்பற்றலாமே.

கொரியாவிலும் இந்தியாவைப் போல தேர்தல் என்பது ஒரு திருவிழாவாகவே நடக்கிறது. அங்கு மக்களைக் கவர்வதற்காக வேட்பாளர்கள், பெண்களின் உடற்பயிற்சி போன்ற நடனத்தைத் தெருமுனையில் நிகழ்த்துகிறார்கள்; துணியில் தங்கள் விவரங்களை எழுதிக் கட்டடத்தின் மேýருந்து தொங்கவிடும் பிரச்சார முறை இருக்கிறது; ஆனால், சுவர்களில் எழுதும் வழக்கம் இல்லை; கட்சியினருக்குப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டி ஹøண்டாய் அதிபரைச் சிறையில் அடைத்தார்கள்; இது தொடர்பாக விவாதங்கள் நிகழ்ந்தன..... எனப் பலவற்றை நா.கண்ணன் தெளிவாக விளக்குகிறார்.

வழக்கம் போல் இனிய பின்னணி இசையுடன் அவருடைய உரையை இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 16. 10 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

புறக்கணிக்கப்பட்ட தென்னகம்

இப்பதிவை வாசிக்க உங்களுக்காகும் நேரம் 60 நிமிடங்கள். ஏனெனில் இப்பதிவு 52 நிமிடங்கள் ஓடும் ராஜராஜ சோழன் எனும் ஆவணப்படத்தைப்பற்றியது.

அப்படம் தேசிகனின் பக்கத்தில் உள்ளது!

சரி, முழுப்படத்தையும் பார்த்துவிட்டு வாருங்கள்!

1. தென்னகத்தை உலகம் மறந்ததற்கான காரணமாக இந்த ஆவணம் சொல்லும் காரணம், விக்டோரியன் கிறிஸ்தவர்களுக்கு காமசாஸ்திரம் முகப்பில் தென்படும் இந்துக் கோயில்கள் அருவருப்பைத் தந்தன. அவர்கள் வணங்கும் தெய்வம் எனவே உயர்வானதாக இருக்க முடியாது என்பது. அதே நேரத்தில் எந்த சிற்பங்களும் இல்லாத முஸ்லிம் சமாதிகளும் (தாஜ்மகால்), அல்லா என்ற ஒரே கடவுளும் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது என்பது.

இதில் முரண்நகை என்னவெனில் காம சாஸ்திரம் வாயிலில் இருந்தாலும் தமிழர்கள் எவ்வளவு பாஷாண்டிகள் என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் போனது! 20ம் நூற்றாண்டில் யு.ஆர்.அனந்தமூர்த்தி இந்த பாசாங்குத்தனத்தைக் கேலி செய்து 'சம்ஸ்காரா' எழுதி சாகித்ய அகாதெமி விருதும் வாங்கிவிட்டார். ஆங்கிலேயர்கள் பயப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆங்கிலேயரை விட நாம் puritanical :-)

2. இரண்டாவது, அசோக மன்னன் போல் போர்கள் செய்து உயிர்பலி வாங்கிய ராஜராஜன், அந்த பாவத்தைக் கழுவிக்கொள்ள கோயில் கட்டினான் என்பது. நம்மவர் என்ன சொல்கிறார்கள் என்றறிய அவா (அடுத்த பிறவியில் ஒரு புழுவாய் பிறக்காமல் தவிர்க்கவே கோயில் பூஜைகளை நிருமாணம் செய்தான் என்கிறது இப்படம்)

3. முஸ்லிம் படையெடுப்பிற்கும், அவர்களது சமயப் போர்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தென்னிந்தியக் கோயில்களில் இருந்த பல சிலைகள் ஏறக்குறைய 700 வருடங்கள் புதையுண்டும், ரகசிய அறைகளில் மூடிவைக்கப்பட்டும் இருந்து 1965-ல் பெரிய அகழ்வாராச்சிக் கண்டுபிடிப்பாக பல நூறு சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக ஆவணப்படம் சொல்கிறது. அப்படியெனில் இன்னும் கண்டுபிடிக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள் இருக்கின்றன எனத்தோன்றுகிறது. சரியான அரசு கவனிப்பிலும், ஆசார்ய/பக்தர்களின் கவனிப்பிலும் எல்லாக்கோயில்களின் எல்லா அறைகளும் திறந்து பார்க்கப்பட வேண்டும். என்ன கிடைக்குமோ? (இப்படி திருப்பதியில் செய்த போது அன்னமாச்சாரியரின் பல ஆயிரம் கீர்த்தனைகள் செப்பேடுகளில் கிடைத்தன).

4. ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய பிரம்மிப்பான சித்தரிப்பு. ஆனாலும், கோயிலைக் காட்டிவிட்டு சிவலிங்க வழிபாட்டைக் காட்டுவது குழப்பமாக உள்ளது. தேசிகன் போன்ற ஸ்ரீவைஷ்ணவர்களை ஆலோசித்திருந்தால், 'அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்று எம்பெருமானின் அழகை உலகு காணச் செய்திருக்கலாமே!

5. அன்று ஆங்கிலேயர் செய்த புறக்கணிப்பு காலம் காலமாக தென்னகத்தைப் புறம் தள்ளியே வைத்திருப்பது கண்கூடு. தமிழர்களின் புகழை தரணியெங்கும் பரப்ப வேண்டுகோள் விடுப்பது அவ்வளவு பொறம்போக்குத்தனமான செயல் அல்ல என்பதை இந்த ஆங்கிலப்படம் செப்புகிறது. நம்மைப் பற்றி நாம் அறிந்து கொள்ள, மற்றவர்க்கும் சொல்ல நல்ல தருணமிது.

அடுத்த மாத மண்டகப்படி அமெரிக்கா!

அன்பர்களே:

என் ஜாதகம் கணித்த என் சித்தப்பா இப்போது இருந்திருந்தால் கேட்டிருப்பேன், ஏனிப்படி உலகு காண அலைந்து கொண்டிருக்கிறேனென்று :-) அடுத்த மாதம் அமெரிக்கா பயணம். ஜூலை 09 முதல் ஆகஸ்ட்டு 04 வரை கீழைக்கரையில் இருப்பேன். நியூஜெர்சி, வாஷிங்டன் டி.சி, சிக்காக்கோ செல்ல முன் திட்டம். தேன்துளி பத்மா அரவிந்த் இணையத் தொடர்பாளர். இந்தப் பகுதியில் வாழும் வலைப்பூவர் சந்திக்க விரும்பினால் தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத்திட்டம் இவை பற்றிப் பேசலாம். பிட்ஸ்பெர்க் பெருமாள் கோயில் போக ஆசை. அந்த ஊரில் நம்ம ஜனம் உண்டா? நியூயார்க், நயக்கரா செல்வேன். முடிந்தால் ஒரு நடை வட கரோலினா Research Triangle Park போக ஆசையுண்டு (நண்பரைக் காண). நல்ல வேளை போகுமுன் சொல்ல முடிகிறது. யோசனை இருந்தால் வழங்குங்கள்.

சிட்டி சுந்தரராஜன் மறைவு

'மணிக்கொடி' எழுத்தாளர் மறைவுதமிழ் இலக்கிய ஜாம்பவான் 'சிட்டி' சுந்தரராஜன் இன்று தன் இலக்கியப் பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார். 96 அகவை நிறைவுற்ற சிட்டி, தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தனது இறுதி நாட்களிலும் நாட்குறிப்பு (வலைப்பூ) எழுதியது அவரது தமிழ்த் தொண்டு என்றும் இளமையானது என்பதைக் காட்டும்.

http://chitti.blogspot.com/

சமீபத்தில் தமிழக அரசு அவரை அவர் தமிழ்ப் பணிக்கு கௌரவித்தது!

சிட்னியும், தமிழர் வாழ்வும் (1)

இணையம் எல்லையில்லா உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மனிதர்களைக் கூட இணைக்கிறது. ஒரு அவசர கதியில் ஆஸ்திரேலியா செல்ல வேண்டுமென்ற வாய்ப்பு வந்தவுடன் நினைவில் வந்தவர் இருவர், சிட்னி பாலா, நியூசிலாந்து நந்தன். நந்தன் இ-சுவடியில் அவ்வப்போது எழுதுவதால் அவரைத் தொடர்பு கொண்டேன். பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி அவர் சிட்னியில் இருந்தார் (அவர் எப்படி நியூசிலாந்து விட்டு சிட்னி வந்தார் என்பது ஈழத்தமிழ்ர்களுக்கு மட்டுமே உள்ள சுவாரசியமான கதை :-) அவரைத் தொடர்பு கொண்டு, பாலா இன்னும் சிட்னியில் இருக்கிறாரா? என்று கேட்டேன். பாலா அது சமயம் மலேசியா போய் விட்டார். இல்லையெனில் யூகி சேதுவுடன் இருவரும் சென்னையில் கலக்கியவாறு சிட்னியிலிலும் கலக்கலாமென்றிருந்தேன்!

நந்தன் சிட்னி வங்கியில் வேலை செய்வதால் நான் போய் சேர்ந்த வெள்ளி மதியம் வர கொஞ்சம் தாமதப்பட்டது. எப்படியோ விடுமுறை வாங்கிவிட்டு விமானநிலையத்திற்கு வந்திருந்தார். அவரும் சாப்பிடவில்லை, எனக்கும் பசி. எனவே நேரே ஒரு இந்திய உணவகத்திற்கு சென்றோம் (இதயம் பேசுகிறது மணியன் ஸ்டைலில் இருக்கிறதோ!) இரண்டே தெரு அதில் நான்கு இந்திய உணவகங்கள். கொடுத்து வைத்தவர்கள். கிம்சி கண்டு 'வாடினேன், வாடி வதங்கினேன்' என்று இருக்கும் எனக்கு அது சொர்க்கமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கையில் உணவருந்தும் வாய்ப்பு கிடைத்தது (குச்சி வைத்து சாப்பிட்டு, சாப்பிட்டு கோழியுடன் உறவு போல் தோன்றுகிறது :-)) நல்ல பாசுமதி அரிசி. அப்பளம் வகையறா. கொஞ்சம் தயிர் வேண்டுமென்றேன் கொடுத்தார்கள். நந்தன் கூட இருந்ததால், உணவகப்பெண் தமிழென்று அவளிடம் தமிழில் கதைக்க அவள் முழித்தாள். நந்தன் அது வடநாட்டு உணவகம், ஆனால் தமிழர்கள் நடத்துவது என்றார். இப்போதெல்லாம் தமிழர்கள் முன்னேறிவிட்டார்கள். சோல் நகரிலும் (கொரியாவில்) இப்படித்தான் 'சக்கரா' எனும் உணவகம் சென்னையைச் சேர்ந்த தம்பதியர் நடத்துகின்றனர். எல்லாம் வட நாட்டு உணவுதான்! 'குக்' கெல்லாம் தமிழர்கள் :-)

அப்படியே காலறத் தெருவில் நடந்தால் ஒரே இந்தியர்கள். Ecological succession என்றொரு phenomenon உண்டு. அது போல், முதலில் வெள்ளையன் கண்டு பிடிக்க வேண்டியது. பின் உழைக்க கருப்பர்களும், பிறரும் போக வேண்டியது. அப்புறம் இந்தியர் வந்து சேர்வர். ஆக, உலகில் எங்கெல்லாம் வெள்ளையன் போனானோ அங்கெல்லாம் இந்தியர் இருப்பர். அதே புடவை, மூக்குத்தி, பொட்டு, தங்கநகை! இந்தியா போலவே குழந்தைகள் ஆங்கிலம், தமிழும்/குஜராத்தி/ஹிந்தியும்! ரொம்ப இயல்பாக இருந்தது. பள்ளியில் குழந்தைகள் ரகளை. இந்தியத் தாய்மார்கள் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, பேசிச்சிரித்துக் கொண்டு குழந்தைக்காகக் காத்திருத்தல், அப்படியே பல காலம் என்னைப் பின் தள்ளி திருப்புவனத்திற்கு இட்டுச் சென்றது. என்ன! புளி உருண்டை, கொடுக்காபுளி இவையெல்லாம் விற்கும் கூடைக்கார கிழவி அங்கே இல்லை அவ்வளவுதான் வித்தியாசம்!!

மாலையில் கோயில் போகலாமா? என்றார். போகுமிடமெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும் போது தல உலா செய்வது வழக்கமாகிவிட்டது. எனவே சரி என்றேன். கோயிலைப் பார்த்தவுடன் தூக்கி வாரிப்போட்டது, மாலிபு (கலிபோர்னியா-எல்லே) கோயில் போலவே அமைப்பு. மாலிபுவில் பெருமாள். இவரும் பெருமாள்தான், ஆனால் 'அருணகிரியின்' பெருமாள். ஈழத்தமிழர்களின் ஆர்வத்தில் கட்டிய கோயில். சைவ ஆகம முறைப்படி பூஜை நடந்தது. இரண்டு தமிழர்கள் தேவாரம் பாடினர் (இந்தப் பழக்கம் தமிழகத்தில் இல்லை. ஓதுவார் இல்லையென்றால் யாரும் பாடுவதில்லை. நான் பார்த்தவரை ஈழக்கோயில்களில் பக்தர்களே தேவாரம் ஓதுகின்றனர்). என் கண்கள் 'என் கண்ணனைத் தேடின'. சிவன், முருகன், பிள்ளையார், பார்வதி சந்நிதிகள். அவ்வளவுதான். தூரத்தே நந்தன், பிள்ளையார் சந்நிதியில், ஒரு குருக்களிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அங்கு சென்றேன். குருக்களிடம், 'ஸ்வாமியின் பூர்வீகம்?' என்றுதான் கேட்டேன்.

திருநாகை என்று சொல்லிவிட்டு, திருமங்கை ஆழ்வாராக மாறிவிட்டார்,

"செஞ்சுடராழியும், சங்குமேந்தி
பாகட மெல்லடி யார்வ ணங்கப்
பன்மணி முத்தொடி லங்குசோதி
ஆடகம் பூண்டொரு நாண்டு தோளும்
அச்சோ! ஒருவர் அழகியவா!"

என்று 'பொன்னிவர் மேனி' என்னும் நாகப்பட்டிணத்து சௌந்தர்ராஜப் பெருமாள் மீதுள்ள பத்துப் பாசுரமும் பாடிவிட்டார். நான் இருப்பது பெருமாள் சந்நிதியா? பிள்ளையார் சந்நிதியா என்ற சந்தேகம் வந்துவிட்டது! அது மட்டுமில்லாமல், பட்டர்பிரானை மேற்கோள் காட்டி நீராடல் சம்பிரதாயம் சொல்லி, சைவ வழிபாட்டு முறைகளுக்கும், வைணவ வழிபாட்டு முறைகளுக்குமுள்ள வித்தியாசங்களை விளக்கி. முற்றுப்புள்ளியாய் திருவாய்மொழி ஒன்று சொன்னார். அதில் என் தேடலுக்கான விடை இருந்தது!

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர்எனஅடி யடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்
அவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5

பெரிய திருமொழி வியாக்கியான உரை

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழிக்கு பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தின் தமிழாக்கத்தை முதல் இருநூறு பாடல்களுக்கு மட்டும் டாக்டர் தெ. ஞானசுந்தரம் செய்தார். பின் தொடரவில்லை. முழு பெரிய திருமொழிக்குமான வ்யாக்யானத் தமிழாக்கத்தை இப்பொழுது தமிழ்க்கடல் தி. வே. கோபாலய்யர் செய்திருக்கிறார். சேக்கிழார் அடிப்பொடி தி. ந. ராமச்சந்திரன் அவர்களால், அவருடைய தெய்வச் சேக்கிழார் சைவசித்தாந்தப் பாடசாலை என்பதின் பதிப்பாக இரண்டு தொகுதிகளாக, விலை ரூ.1000/- க்கு வெளியிடப்பட்டிருக்கிறது. முகவரி:- 5D, செல்வம் நகர், தஞ்சாவூர் -- 613007. தொலைபேசி எண்:- +91-4144-236842 .

இந்த நூலை கடந்த ஜூன் 9 ஆம் தேதி அண்ணா அறிவாலய வளாகத்தைச் சேர்ந்த மண்டபத்தில் வெளியிட்டார்கள், டாக்டர் டி. ஆர். சுரேஷ் (டிஎன். ஆர் இன் மகன்) அவர்களின் மகள் திருமணத்தையொட்டி. வெளியீட்டில் பேசியவர்கள் இரண்டு பேர். ஒன்று ஏ.ஏ. மணவாளன். மற்றொன்று ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன். சேக்கிழார் அடிப்பொடி வெளியிட, நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிவன் பாலும், ஸ்ரீதரன்பாலும் சிந்தை வைத்தவர்களை வரவேற்றார் டி.என்.ஆர்

மேலும்....

பிரித்தானியத் திருடர்களுக்கு அடித்த வாழ்வு!
ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணிகளுக்கு சொல்லப்படும் சுற்றுலாக் கதைகளிலொன்று எப்படி ஆஸ்திரேலியக் குடிகள் ஒரு காலக்கட்டத்தில் பிரித்தானியக் கைதிகளாக ஜெயிலில் இருக்க இடமில்லாமல் ஆஸ்திரேலியாவில் கொண்டு வந்து விடப்பட்டனர் என்பதும் (சில நேரங்களில் வெள்ளையர்களின் நேர்மை, அவர்களின் பாசாங்குத்தனம் போல் ஆச்சர்யப்பட வைக்கும்!!). இப்படத்தைப் பார்த்தால் ஏதோ இலண்டன் நலரில் எடுக்கப்பட்டது போல் தோன்றும். ஆனால், சிட்னியின் புறநகரான 'Leura' எனுமிடத்தில் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் பழங்குடிகள், கங்காரு, கோலா போன்றவை தவிர மற்றவை அப்படியே பிரித்தானியாதான்!!

கங்காரு நாட்டில் கண்ணனின் குரல்

தேமதுரத்தமிழ் ஓசை உலகெங்கும் கேட்பதற்கு இந்த நூற்றாண்டில் வழி வகுத்தவர்கள் ஈழத்தமிழர்கள். சிட்னியிலிருந்து வெளிவரும் வானொலி என்னைப் பேட்டி கண்டது. பேட்டி எடுத்தவர் கானா.பிரபா. பேட்டி ஏற்பாடு செய்தவர் திருநந்தகுமார். பேட்டி wma வடிவில் இருக்கிறது. 40 நிமிடங்கள் ஓட்டம்.

this is an audio post - click to play


இப்பேட்டி எடுக்கும் போது மிகவும் பாதிக்கப்பட்ட உடல்நிலை. தொண்டை, மூக்கு அடைப்பு, காய்ச்சல். ஆனால், அது பேட்டியில் தெரியாது. அது தமிழ் தரும் ஊக்கம். எப்போதெல்லாம் நான் காய்ச்சலில் பேசுகிறேனோ அப்போது அவை சிறப்பாக அமைந்துவிடுகின்றன :-) இதே காரணத்தினால் என் அனுபவங்களை உங்களுடன் அடுத்த சில நாட்களில் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல். (அதாவது இன்றே இடமுடியாதது!)


இடம் வலம்: திருநந்தகுமார், நா.கண்ணன், கானா.பிரபா


நன்றி: பேட்டியின் இலக்க வடிவு + படம் = கானா.பிரபா, சிட்னி

கங்காருநாட்டில் கண்ணன்

நமது அன்புக்குரிய நண்பர் கண்ணன் அவர்கள் இப்போது கங்காருநாட்டிற்கு வந்திருக்கிறார். நேற்று பகல் மெல்பேர்ன் நகருக்கு சென்றிருக்கிறார். வெள்ளிக்கிழமை சிட்னி நகருக்கு வருகிறார். நேற்றிரவு இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் மதுரைத் திட்டம் பற்றி பேசினோம். வெள்ளி மாலையும் சனி மாலையும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறேன்.
இங்குள்ள தமிழ் ஊக்குவிப்புப் பணிகளைப் பார்வையிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
நந்தன்
சிட்னி

+++++++++++++++++++++++++
அதிகச் செய்திகள் வேலை முடிந்த மாலை வேளை :-)

தமிழ் படிக்க ஆசை வந்துச்சே!

பல நாட்களாக எழுத வேண்டுமென்று தள்ளிப்போட்டு வந்த ஒரு விஷயம் சமீபத்திய தினமணியில் வந்த ஒரு சேதியால் இன்று எழுத வேண்டியதாயிற்று.
லீ ஹூ ஜின் எனும் கொரியப்பெண் சரளமாகத் தமிழ் பேசுவதாக ஒரு சேதி வந்துள்ளது. புடவை கட்டி குழந்தைகளுடன் அவர் எடுத்துக்கொண்டுள்ள போட்டோ பார்க்க சந்தோஷமாக இருந்தது. ஆனால் இந்தச் சிறப்புச் சேதியில் விட்டுப்போயுள்ள ஒரு முக்கிய விஷயம் கொரிய மொழிக்கும் (ஹன்குல்) தமிழுக்குமுள்ள தொடர்பு பற்றியது. கொரியாவில் வாழும் பல தமிழர்கள் சரளமாக ஹன்குல் பேசுகின்றனர். ஒரு தமிழ் மாணவர் எனக்கு ஒரு மணி நேரத்தில் கொரிய மொழியை எப்படி வாசிப்பது என்று சொல்லிக்கொடுத்தார்.

கொரியாவிற்கும் இந்தியாவிற்குமுள்ள தொடர்பு ரொம்ப ஆதியானது. புத்தம் தோன்றிய சில நூற்றாண்டுகளூக்குள் அது கொரியா வந்துவிட்டது. அப்படியெனில் சங்ககாலத்தில் எப்படி பௌத்தம் தமிழ் மண்ணில் கோலோட்சியதோ அதே போல் கொரியாவிலும் கோலோட்சியிருக்கிறது. பௌத்தப் பல்கலைக்கழகங்கள் இரண்டு நகரங்களில் பிரபலமாக இருந்திருக்கின்றன. வடக்கே நாளந்தா. தெற்கே காஞ்சிபுரம். தமிழ் அங்கு போனதற்கான முதல் ஆதி காரணமிது.

கொரிய மொழி ஆசிய மொழி. பெரும்பாலான ஆசிய மொழிகளில் சமிஸ்கிருத, தமிழ் ஆளுமை தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. பர்மா, தாய், கம்போடியா, இந்தோனிஷியா போன்ற நாடுகளில் பாமரனுக்குக் கூட புரியும் வகையில் அத்தொடர்பு வெளிப்படையாகவே உள்ளது. ஆனால், கொரிய, ஜப்பானிய மொழியில் அது பூடகமாக உள்ளது. காரணம் கொரியா ஒரு காலத்தில் சீனாவின் துறைமுக நாடாக இருந்திருக்கிறது. சேரநாடு தமிழ்நாட்டிற்கு இருந்தது போன்று. இவர்கள் அடிப்படையில் சீன, மங்கோலிய இனத்தவர். ஆனால், முன்பு சொன்ன அத்தனை நாட்டு மக்களும் இந்தியக் கலப்பு உள்ளவர்கள். கொரியாவிலும் இந்திய ஜீன் உள்ளது. ஆனால் குறைந்த சதவிகிதத்தில். [நம்ம ஊர் அய்யங்கார் அம்பிகள் கொரியர்கள் போல இருப்பது எதேச்சையானதல்ல]

எழுத்தச்சன் மலையாளத்திற்கு செய்தது போல இங்கு ஒரு அரசன் 15ம் நூற்றாண்டில் ஹன்குலுக்கு தனி வரிவடிவம் கொடுத்து அதைச் சீன ஆளுமையிலிருந்து பிரித்துவிடுகிறார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மாடல் மொழி தமிழ் என்று தோன்றுகிறது. ஹன்குலும் உயிரெழுத்து, மெய்யின்மீது மேவ பிறப்பதே. க்+அ=க என்று பலுப்புகிறோம். அங்கும் அதே! என்ன, அவர் புத்திசாலித்தனமாக ஒன்று செய்துவிட்டார். க்+அ என்று உள்ளுக்குள் அமைப்பு இருந்தாலும் தமிழில் இவ்வொலிக்கென 'க' என்ற வரிவடிவம் கொடுத்திருக்கிறோம். ஹங்குலில் அப்படியே எழுதிப் படித்து விடுகிறார்கள். இது பல சிக்கலைத் தவிர்கிறது. 12+18=30 எழுத்தோடு தமிழ் முடிந்திருக்க வேண்டியது. ஹங்குலில் இதைவிட எழுத்துக் குறைவு. சீன அடுக்கு முறையைக் கையாண்டு இவர்கள் இந்த விகிதங்கள (அதாவது, க் அ என்று எழுதிவிடுவர். க என்று உச்சரித்துப்பழக வேண்டும்).

அடுத்து தமிழுக்கு உள்ள 'க' (நான்கு வித பலுப்பல்), ச, ஸ, ஷ, ஜ வித்தியாசம் ஹன்குலில் கிடையாது. 'ச' என்று எழுதிவிட்டு 'ஜ' என்று உச்சரிப்பர். அது இடத்திற்கு ஏற்றவாறு மாறும். முருக, முருஹ என்று நாம் பலுப்பதுபோல்.

அடுத்தமுறை சென்னை வந்தால் லீ ஹூஜின்னைப் பார்த்துப் பேச வேண்டும். அதைவிடச் சரளமாகத் தமிழ் பேசும் அவர் பெண்களிடம் பேச வேண்டும்.

கொரியத்தமிழ் தொடர்புஉலகம் சுற்றச் சுற்ற, நிறையத் தெரிந்து கொள்ள, கொள்ள தமிழுக்கும் பிற கலாச்சாரங்களுக்கும், பிற மொழிகளுக்கும் தொடர்பு இருப்பது போலவே தோன்றுகிறது. இது எதேட்சையான ஒன்றோ இல்லை கட்டமைக்கப்பட்ட ஒன்றோ அல்ல. மனிதர்கள் பலவிதமாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லோரின் சாயல் உண்டு. இது பார்த்தவுடன் சட்டெனத்தெரியாவிட்டாலும் பழகினால் தெரியவரும். இந்தியாவிலிருந்து ஜப்பானியரை சப்பை மூக்கு, குள்ளம் என்று கேலி பண்ணினாலும் அங்கு சென்று வாழ்ந்தால் திடீரென நமது அத்தை போல் ஒருவர் இருப்பார், மாமா போ இன்னொருவர் இருப்பார். இது ஏக்கத்தினால் வரும் தோற்றப்பிழையன்று. மானுடம் ஒன்றுடன் ஒன்று கலந்தே தோன்றியிருக்கிறது. இந்தியாவிலிருந்து கிழக்கே போனால், பர்மியர் பெங்காலிகள் போலே, அருணாசலப்பிரதேச மக்கள் போலவே இருப்பர். இந்த முகச்சாயல் அப்படியே கொஞ்சம் கொஞ்சம் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், தென்சீனா என்று மாறி....சீனாவிற்குள் போகும் போது முற்றும் மாறிவிடுகிறது. சீன தேசம் இந்தியா போன்ற ஒரு பெரிய தேசம். அது பல்லினக்கூட்டு நாடு. அந்த நாட்டு காகிதப்பணத்தில் இருக்கும் சீனத்தம்பதியரைப் பார்த்தால் நம் கற்பனையிலிருக்கும் சீனர்கள் போல் இருக்கமாட்டார்கள். சமீபத்தில் சீன சென்ற போது என்னைச் சீனன் என்று ஒத்துக்கொண்டார்கள். சீன மொழி மட்டும் பேசினால் யாராலும் வேற்றுமைப்படுத்த முடியாது என்றனர். இது எனக்கு ஆச்சர்யமாக இல்லை. ஏனெனில், இந்திய முகம் என்பது எங்கும் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. ஜெர்மனியில் ஒரு கோடையில் நகர மையத்தில் உட்கார்ந்து ஐஸ்கீரீம் (பனிக்கூழ்) சாப்பிட்டுக்கொண்டு (குடித்துக்கொண்டு) இருக்கும் போது என்னை பெரு நாட்டுக்குடிமகனேன நினைத்து ஒருவர் ஸ்பானிஷ்ல் பேச ஆரம்பித்தார். சென்ற கோடையில் ஸ்விட்சர்லாந்து சென்ற போது ஜெனிவா விமானநிலையத்தில் ஒருவர் அரபு மொழியில் பேசி என்னை அரபுக்காரனா என்று கேட்டார். இப்போது இது பழகிவிட்டது. கொஞ்சம் சிவப்பாக இருந்தால் இந்தியர்களை எளிதாக ஈரான், ஈராக், துருக்கி, இத்தாலி, ஸ்பெயின் நாட்டுக்காரர்களுடன் ஒப்பிடலாம். கொஞ்சம் மாநிறமாக இருந்தால் எதியோபியா, துனிஷியா, மெக்சிகோ, பிரேசில் நாட்டு மக்களுடன் ஒப்பிடலாம். சுத்த கருப்பாக இருந்தால் ஆப்பிரிக்கர்களுடன், பப்புவா நியூகினி, ஆஸ்திரேலிய பழம்குடி மக்களுடன் ஒப்பிடலாம். கொஞ்சம் சப்பை மூக்குடன், மஞ்சள் நிறத்தில் இருந்தால் எளிதாக கீழத்திய மக்களுடன் ஒப்பிடலாம் (செட்டிநாட்டில் நிறைய சீனச்சாயலுண்டு. அது எங்கிருந்து வந்தது என்பது நாம் அறிந்ததே!

ஆக, மக்கள் எப்படி ஒருவருக்கொருவர் சாயலுடன் இருக்கிறார்களோ அது போலவே மொழியும்! சமிஸ்கிருதம் போலவே இருக்கும் ஜெர்மானியம், ஆங்கிலம். சமிஸ்கிருதத்தில் 'சதுர்தசி' என்றால் பதினாலு. அதாவது நாலும்-பத்தும்', கவனியுங்கள் பத்தும், நாலும் பதினாலு அல்ல. நாலும் பத்தும் - சதுர்தசி. இது சமிஸ்கிருதம். ஜெர்மனியில் எப்படி? இதேதான்! ஃபியர்ட்சேன் என்றால் நாலும்-பத்தும் என்று பொருள் ஜெர்மன் மொழியில். இப்படி மாற்றிப்போட்டு எண்ணுவது இம்மொழிகளுக்குள் உள்ள ஆழமான தொடர்பைக்காட்டுகிறது. இன்னும் ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் இத்தொடர்பு நன்கு நிறுவப்பட்ட ஒரு தொடர்பு, எனவே அந்த மொழி ஆய்வு இப்போது வேண்டாம். ஆனால், தமிழின் பிற மொழித்தொடர்புகள் இதுபோல் இன்னும் ஆராயப்படவில்லை. எல்லாம் 'குத்துமதிப்பாகவே' இருக்கின்றன. காரணம் திராவிட மொழி ஆய்வு என்பது பல்கலைக்கழக அளவிற்கு இன்னும் வரவில்லை. நம்மவரும் மொழி ஆய்வில் கவனம் செலுத்தாமல் சும்மா தமிழுக்கு விழா எடுப்பதும், கோயில் கட்டுவதுமாக இருக்கிறார்கள். தமிழுக்கு தீக்குளித்துள்ளார்கள். இன்னும் தீ மிதிக்கவில்லை, அவ்வளவுதான்! எதற்குச் சொல்கிறேன் என்றால், மொழியை வழிபடும் பொருளாக்கிவிட்டால் அது பற்றி மேலும் ஆராய முடியாது. வழிபடத்தான் முடியும்!

கிழக்காசியா முழுவதும் தமிழின் தொடர்பு தெரிகிறது. தமிழின் வட்ட எழுத்துமுறையின் தாக்கம் பர்மீஸ், தாய், கம்போடியா மொழிகளில் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. எனது முந்தைய திசைகள் கட்டுரை ஒன்றில் கம்போடியாவில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் 'பல்லவ' என்பதை நம்மால் எளிதாக வாசிக்கமுடிகிறது என்று காட்டியுள்ளேன். பல்லவர்களுக்கும், கம்போடிய/தாய் அரசர்களுக்குமுள்ள தொடர்பு என்பது இன்னும் நிரூபிக்கப்படாத, ஆனால் நிச்சியத் தொடர்பு (இது குறித்த நல்ல கட்டுரை ஒன்றை தாய்லாந்தில் வசிக்கும் ஆனந்த்ராகவ் 'சிஃபி.காம்' புத்தாண்டு இதழில் எழுதியுள்ளார் - http://tamil.sify.com/general/tny06/index.php). ஆயின் நாம் மிகக்கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று, தமிழ் கலாச்சாரம் கிழக்காசியாவில் பரவிய பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தில் சமிஸ்கிருதத்தின் மீது இப்போதுள்ள அளவு அரசியல் காழ்ப்போ, வெறுப்போ இருந்ததில்லை. அது மதிக்கத்தக்க ஒரு இந்தியப் பிரதான மொழியாகவே இருந்திருக்கிறது. எனவே, கிழக்காசியப் பெயர்களில், இறை வழிபாடுகளில், மொழியில் இவ்விரு மொழிகளும் இணைந்தே தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உண்மையைச் சொல்வேமெனில் பண்டையத் தமிழர்களே (திராவிடர்களே - இது சாளுக்்கிய, கலிங்க அரசுகளையும் சேர்த்துக்கொள்வது) சமிஸ்கிருதத்தை கிழக்கே எடுத்துச் சென்றுள்ளனர். அதன் உலகச் சிறப்பிற்கு அவர்களே காரணமாக இருந்திருக்கின்றனர். உதாரணமாக, சிங்கப்பூர், மலேசியா நாடுகள் அரபு வணிகர்கள் வந்து இஸ்லாம் மதத்தைப் பரப்பும் முன்னர்வரை (14ம் நூற்றாண்டு) இந்துக்களாகவே இருந்திருக்கின்றனர். இன்று அவர்களின் கோஷமான 'பூமிபுத்ரா' என்பது இந்தியச் சொல் என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தோனிஷியாவில் இந்துப்பெயர்கள் இன்றளவும் பிரபல்யம். சுகர்ணோ, சுகார்த்தோ, ரத்னோ, விபீஷ்ணன், ஹரி, தர்மபுத்ரா போன்ற பெயர்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. இந்துப்பெயரை வைத்துக்கொண்டு அவர் இஸ்லாமியராக இருப்பார்! கெமிர் மன்னர்கள் தாய், கம்போடியாவை ஆண்ட காலங்களில் சமிஸ்கிருதமும், தமிழும் இந்நாடுகளுக்கு வந்திருக்கின்றன. திருப்பாவை, திருவெம்பாவை இன்றளவும் தாய்லாந்தில் பாடப்படுவதாக ஆனந்தராகவ் தன் கட்டுரையில் சுட்டுகிறார். உலகின் மிகப்பெரிய விஷ்ணு ஆலயன் ஸ்ரீரங்கமல்ல. அது கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட். இதுபற்றி நான் முன்னமே திசைகளில் எழுதியுள்ளேன். வியட்நாமில் உள்ள புத்தர் ஆலயங்களுக்குப் போனால் ஏதோ நம் கோயில்களுக்குப் போவது போன்ற உணர்வுவரும். இந்திரனின் வாகனமான ஐராவதம் எனும் யானை இருக்கும். விஷ்ணு இருப்பார், பிரம்மன் இருப்பார். விஷ்ணு அனந்தசயனனாக நம்ம ஊரில் இருந்தால் அங்கு புத்தர் சயனத்தில் இருப்பார். அவ்வளவுதான் மாற்றம். அதே கோயில் குளம், அதே ஊதுவத்தி, அதே தாமரைப்பூ (நிஜமாகவும் குறியீடாகவும்).

முழுக்கட்டுரை வாசிக்க சுட்டுக திசைகள்!

என் திரைப்பட அனுபவங்கள்

நா.கண்ணன்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 5)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி


தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

இந்தப் பதிவில் தன் திரைப்பட அனுபவங்கள், எம்ஜிஆர், சிவாஜி படங்கள் பார்த்தது, மதுரையில் நடந்த திரைப்படப் பட்டறையில் கலைப் படங்கள், சத்யஜித்ரே படங்கள் ஆகியவற்றைப் பார்த்தது, புரியாமல் பார்த்த ஜேம்ஸ்பாண்டு படங்கள், பாலச்சந்தர், பாரதிராஜா படங்கள் பார்த்தது, எண்பதுகளில் திரைப்படங்களே பார்க்காதது, காமெடி படங்களை ஜப்பானியர்கள் சிரிக்காமலேயே பார்த்தது, அங்கு தான் மட்டுமே சிரித்தது, உட்கார்ந்த நாற்காலி உடைகிற அளவுக்குச் சிரித்த அனுபவம், கொரியத் திரைப்படங்கள் எவ்விதம் உள்ளன? அங்கு சிவாஜியை விடச் சிறந்த நடிகர்þநடிகைகள் இருப்பது? கொரியத் திரைப்படங்கள் உலகெங்கும் பார்க்கப்படுவது ஏன்?..... எனப் பலவற்றைப் பற்றியும் நம்முடன் உரையாடுகிறார்.

தான் அண்மையில் பார்த்த கொரியத் திரைப்படங்கள் இரண்டைப் பற்றியும் கண்ணன், விரிவாகப் பேசுகிறார். அந்தப் படங்களின் கதை, அதன் சிறப்பம்சங்கள், விறுவிறுப்பான தன்மை ஆகியவற்றை அலசுகிறார். ஒன்று, சரித்திரப் படம்; அடுத்தது, நகைச்சுவைப் படம். 'அற்புதம்' என்று கண்ணன் அவற்றுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். உலகளாவிய சந்தையைக் கொரியர்கள் விரைவில் பிடித்துவிடுவார்கள் என்று கண்ணன் நம்புகிறார். ரசிகத் தன்மையும் விமர்சனத் தன்மையும் மிகுந்த இந்த உரையைக் கேட்டு மகிழுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 12. 05 நிமிடங்கள்

நன்றி: சிஃபி.வணி

தொழில்நுட்பக் காரணங்களுக்காக சிஃபி.வணியில் கேட்க முடியாதவர்களுக்காக இங்கு மீள்பதிவாகிறது. ஆயின், ஒலிக்கோப்பு என் தளத்திலிருந்து கீழிறக்கமாகிறது. ஏதேனும் பிரச்சனையெனில் தெரிவியுங்கள்.