என் திரைப்பட அனுபவங்கள்

நா.கண்ணன்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 5)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி


தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

இந்தப் பதிவில் தன் திரைப்பட அனுபவங்கள், எம்ஜிஆர், சிவாஜி படங்கள் பார்த்தது, மதுரையில் நடந்த திரைப்படப் பட்டறையில் கலைப் படங்கள், சத்யஜித்ரே படங்கள் ஆகியவற்றைப் பார்த்தது, புரியாமல் பார்த்த ஜேம்ஸ்பாண்டு படங்கள், பாலச்சந்தர், பாரதிராஜா படங்கள் பார்த்தது, எண்பதுகளில் திரைப்படங்களே பார்க்காதது, காமெடி படங்களை ஜப்பானியர்கள் சிரிக்காமலேயே பார்த்தது, அங்கு தான் மட்டுமே சிரித்தது, உட்கார்ந்த நாற்காலி உடைகிற அளவுக்குச் சிரித்த அனுபவம், கொரியத் திரைப்படங்கள் எவ்விதம் உள்ளன? அங்கு சிவாஜியை விடச் சிறந்த நடிகர்þநடிகைகள் இருப்பது? கொரியத் திரைப்படங்கள் உலகெங்கும் பார்க்கப்படுவது ஏன்?..... எனப் பலவற்றைப் பற்றியும் நம்முடன் உரையாடுகிறார்.

தான் அண்மையில் பார்த்த கொரியத் திரைப்படங்கள் இரண்டைப் பற்றியும் கண்ணன், விரிவாகப் பேசுகிறார். அந்தப் படங்களின் கதை, அதன் சிறப்பம்சங்கள், விறுவிறுப்பான தன்மை ஆகியவற்றை அலசுகிறார். ஒன்று, சரித்திரப் படம்; அடுத்தது, நகைச்சுவைப் படம். 'அற்புதம்' என்று கண்ணன் அவற்றுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். உலகளாவிய சந்தையைக் கொரியர்கள் விரைவில் பிடித்துவிடுவார்கள் என்று கண்ணன் நம்புகிறார். ரசிகத் தன்மையும் விமர்சனத் தன்மையும் மிகுந்த இந்த உரையைக் கேட்டு மகிழுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 12. 05 நிமிடங்கள்

நன்றி: சிஃபி.வணி

தொழில்நுட்பக் காரணங்களுக்காக சிஃபி.வணியில் கேட்க முடியாதவர்களுக்காக இங்கு மீள்பதிவாகிறது. ஆயின், ஒலிக்கோப்பு என் தளத்திலிருந்து கீழிறக்கமாகிறது. ஏதேனும் பிரச்சனையெனில் தெரிவியுங்கள்.

2 பின்னூட்டங்கள்:

சிறில் அலெக்ஸ் 6/02/2006 09:43:00 AM

அருமையான பதிவு சார்.
நல்ல குரல்வளம்.. கோர்வையான பேச்சு. மிகவும் ரசித்தேன்

நா.கண்ணன் 6/02/2006 10:25:00 AM

நன்றி அலெக்ஸ்.
பேசுவதில் இரண்டு பிரச்சனைகள்.
செந்தமிழில் பேச வேண்டுமா? இல்லை ஆங்கிலம் கலந்த பேச்சுத்தமிழில் இருக்கலாமா (இதைக் கொடுந்தமிழ் எனலாமா? :-)
இன்னும் கூட சரளமாக, கலந்துரையாடலில் இருப்பது போல் பேச முயன்று வருகிறேன். வெறும் மைக், திரை இதற்கு முன் உங்களையெல்லாம் கற்பனை செய்து கொள்வது எளிதாக இல்லை :-)
இது ஒரு வித்தியாசமான முயற்சி (at least என்னைப் பொறுத்தவரை)