கொரியத்தமிழ் தொடர்புஉலகம் சுற்றச் சுற்ற, நிறையத் தெரிந்து கொள்ள, கொள்ள தமிழுக்கும் பிற கலாச்சாரங்களுக்கும், பிற மொழிகளுக்கும் தொடர்பு இருப்பது போலவே தோன்றுகிறது. இது எதேட்சையான ஒன்றோ இல்லை கட்டமைக்கப்பட்ட ஒன்றோ அல்ல. மனிதர்கள் பலவிதமாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லோரின் சாயல் உண்டு. இது பார்த்தவுடன் சட்டெனத்தெரியாவிட்டாலும் பழகினால் தெரியவரும். இந்தியாவிலிருந்து ஜப்பானியரை சப்பை மூக்கு, குள்ளம் என்று கேலி பண்ணினாலும் அங்கு சென்று வாழ்ந்தால் திடீரென நமது அத்தை போல் ஒருவர் இருப்பார், மாமா போ இன்னொருவர் இருப்பார். இது ஏக்கத்தினால் வரும் தோற்றப்பிழையன்று. மானுடம் ஒன்றுடன் ஒன்று கலந்தே தோன்றியிருக்கிறது. இந்தியாவிலிருந்து கிழக்கே போனால், பர்மியர் பெங்காலிகள் போலே, அருணாசலப்பிரதேச மக்கள் போலவே இருப்பர். இந்த முகச்சாயல் அப்படியே கொஞ்சம் கொஞ்சம் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், தென்சீனா என்று மாறி....சீனாவிற்குள் போகும் போது முற்றும் மாறிவிடுகிறது. சீன தேசம் இந்தியா போன்ற ஒரு பெரிய தேசம். அது பல்லினக்கூட்டு நாடு. அந்த நாட்டு காகிதப்பணத்தில் இருக்கும் சீனத்தம்பதியரைப் பார்த்தால் நம் கற்பனையிலிருக்கும் சீனர்கள் போல் இருக்கமாட்டார்கள். சமீபத்தில் சீன சென்ற போது என்னைச் சீனன் என்று ஒத்துக்கொண்டார்கள். சீன மொழி மட்டும் பேசினால் யாராலும் வேற்றுமைப்படுத்த முடியாது என்றனர். இது எனக்கு ஆச்சர்யமாக இல்லை. ஏனெனில், இந்திய முகம் என்பது எங்கும் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. ஜெர்மனியில் ஒரு கோடையில் நகர மையத்தில் உட்கார்ந்து ஐஸ்கீரீம் (பனிக்கூழ்) சாப்பிட்டுக்கொண்டு (குடித்துக்கொண்டு) இருக்கும் போது என்னை பெரு நாட்டுக்குடிமகனேன நினைத்து ஒருவர் ஸ்பானிஷ்ல் பேச ஆரம்பித்தார். சென்ற கோடையில் ஸ்விட்சர்லாந்து சென்ற போது ஜெனிவா விமானநிலையத்தில் ஒருவர் அரபு மொழியில் பேசி என்னை அரபுக்காரனா என்று கேட்டார். இப்போது இது பழகிவிட்டது. கொஞ்சம் சிவப்பாக இருந்தால் இந்தியர்களை எளிதாக ஈரான், ஈராக், துருக்கி, இத்தாலி, ஸ்பெயின் நாட்டுக்காரர்களுடன் ஒப்பிடலாம். கொஞ்சம் மாநிறமாக இருந்தால் எதியோபியா, துனிஷியா, மெக்சிகோ, பிரேசில் நாட்டு மக்களுடன் ஒப்பிடலாம். சுத்த கருப்பாக இருந்தால் ஆப்பிரிக்கர்களுடன், பப்புவா நியூகினி, ஆஸ்திரேலிய பழம்குடி மக்களுடன் ஒப்பிடலாம். கொஞ்சம் சப்பை மூக்குடன், மஞ்சள் நிறத்தில் இருந்தால் எளிதாக கீழத்திய மக்களுடன் ஒப்பிடலாம் (செட்டிநாட்டில் நிறைய சீனச்சாயலுண்டு. அது எங்கிருந்து வந்தது என்பது நாம் அறிந்ததே!

ஆக, மக்கள் எப்படி ஒருவருக்கொருவர் சாயலுடன் இருக்கிறார்களோ அது போலவே மொழியும்! சமிஸ்கிருதம் போலவே இருக்கும் ஜெர்மானியம், ஆங்கிலம். சமிஸ்கிருதத்தில் 'சதுர்தசி' என்றால் பதினாலு. அதாவது நாலும்-பத்தும்', கவனியுங்கள் பத்தும், நாலும் பதினாலு அல்ல. நாலும் பத்தும் - சதுர்தசி. இது சமிஸ்கிருதம். ஜெர்மனியில் எப்படி? இதேதான்! ஃபியர்ட்சேன் என்றால் நாலும்-பத்தும் என்று பொருள் ஜெர்மன் மொழியில். இப்படி மாற்றிப்போட்டு எண்ணுவது இம்மொழிகளுக்குள் உள்ள ஆழமான தொடர்பைக்காட்டுகிறது. இன்னும் ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் இத்தொடர்பு நன்கு நிறுவப்பட்ட ஒரு தொடர்பு, எனவே அந்த மொழி ஆய்வு இப்போது வேண்டாம். ஆனால், தமிழின் பிற மொழித்தொடர்புகள் இதுபோல் இன்னும் ஆராயப்படவில்லை. எல்லாம் 'குத்துமதிப்பாகவே' இருக்கின்றன. காரணம் திராவிட மொழி ஆய்வு என்பது பல்கலைக்கழக அளவிற்கு இன்னும் வரவில்லை. நம்மவரும் மொழி ஆய்வில் கவனம் செலுத்தாமல் சும்மா தமிழுக்கு விழா எடுப்பதும், கோயில் கட்டுவதுமாக இருக்கிறார்கள். தமிழுக்கு தீக்குளித்துள்ளார்கள். இன்னும் தீ மிதிக்கவில்லை, அவ்வளவுதான்! எதற்குச் சொல்கிறேன் என்றால், மொழியை வழிபடும் பொருளாக்கிவிட்டால் அது பற்றி மேலும் ஆராய முடியாது. வழிபடத்தான் முடியும்!

கிழக்காசியா முழுவதும் தமிழின் தொடர்பு தெரிகிறது. தமிழின் வட்ட எழுத்துமுறையின் தாக்கம் பர்மீஸ், தாய், கம்போடியா மொழிகளில் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. எனது முந்தைய திசைகள் கட்டுரை ஒன்றில் கம்போடியாவில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் 'பல்லவ' என்பதை நம்மால் எளிதாக வாசிக்கமுடிகிறது என்று காட்டியுள்ளேன். பல்லவர்களுக்கும், கம்போடிய/தாய் அரசர்களுக்குமுள்ள தொடர்பு என்பது இன்னும் நிரூபிக்கப்படாத, ஆனால் நிச்சியத் தொடர்பு (இது குறித்த நல்ல கட்டுரை ஒன்றை தாய்லாந்தில் வசிக்கும் ஆனந்த்ராகவ் 'சிஃபி.காம்' புத்தாண்டு இதழில் எழுதியுள்ளார் - http://tamil.sify.com/general/tny06/index.php). ஆயின் நாம் மிகக்கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று, தமிழ் கலாச்சாரம் கிழக்காசியாவில் பரவிய பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தில் சமிஸ்கிருதத்தின் மீது இப்போதுள்ள அளவு அரசியல் காழ்ப்போ, வெறுப்போ இருந்ததில்லை. அது மதிக்கத்தக்க ஒரு இந்தியப் பிரதான மொழியாகவே இருந்திருக்கிறது. எனவே, கிழக்காசியப் பெயர்களில், இறை வழிபாடுகளில், மொழியில் இவ்விரு மொழிகளும் இணைந்தே தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உண்மையைச் சொல்வேமெனில் பண்டையத் தமிழர்களே (திராவிடர்களே - இது சாளுக்்கிய, கலிங்க அரசுகளையும் சேர்த்துக்கொள்வது) சமிஸ்கிருதத்தை கிழக்கே எடுத்துச் சென்றுள்ளனர். அதன் உலகச் சிறப்பிற்கு அவர்களே காரணமாக இருந்திருக்கின்றனர். உதாரணமாக, சிங்கப்பூர், மலேசியா நாடுகள் அரபு வணிகர்கள் வந்து இஸ்லாம் மதத்தைப் பரப்பும் முன்னர்வரை (14ம் நூற்றாண்டு) இந்துக்களாகவே இருந்திருக்கின்றனர். இன்று அவர்களின் கோஷமான 'பூமிபுத்ரா' என்பது இந்தியச் சொல் என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தோனிஷியாவில் இந்துப்பெயர்கள் இன்றளவும் பிரபல்யம். சுகர்ணோ, சுகார்த்தோ, ரத்னோ, விபீஷ்ணன், ஹரி, தர்மபுத்ரா போன்ற பெயர்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. இந்துப்பெயரை வைத்துக்கொண்டு அவர் இஸ்லாமியராக இருப்பார்! கெமிர் மன்னர்கள் தாய், கம்போடியாவை ஆண்ட காலங்களில் சமிஸ்கிருதமும், தமிழும் இந்நாடுகளுக்கு வந்திருக்கின்றன. திருப்பாவை, திருவெம்பாவை இன்றளவும் தாய்லாந்தில் பாடப்படுவதாக ஆனந்தராகவ் தன் கட்டுரையில் சுட்டுகிறார். உலகின் மிகப்பெரிய விஷ்ணு ஆலயன் ஸ்ரீரங்கமல்ல. அது கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட். இதுபற்றி நான் முன்னமே திசைகளில் எழுதியுள்ளேன். வியட்நாமில் உள்ள புத்தர் ஆலயங்களுக்குப் போனால் ஏதோ நம் கோயில்களுக்குப் போவது போன்ற உணர்வுவரும். இந்திரனின் வாகனமான ஐராவதம் எனும் யானை இருக்கும். விஷ்ணு இருப்பார், பிரம்மன் இருப்பார். விஷ்ணு அனந்தசயனனாக நம்ம ஊரில் இருந்தால் அங்கு புத்தர் சயனத்தில் இருப்பார். அவ்வளவுதான் மாற்றம். அதே கோயில் குளம், அதே ஊதுவத்தி, அதே தாமரைப்பூ (நிஜமாகவும் குறியீடாகவும்).

முழுக்கட்டுரை வாசிக்க சுட்டுக திசைகள்!

4 பின்னூட்டங்கள்:

Aruna Srinivasan 6/02/2006 09:16:00 AM

// முழுக்கட்டுரை வாசிக்க சுட்டுக திசைகள்!
அங்குள்ள எழுத்துப் பிழைகளுக்கு நான் பொறுப்பல்ல!! //

Dear Kannan,

I read your blog just now. I am sorry, I don't think Thisaigal is responsible for the errors either. Your article was in notepad and I had to convert it to Tscii to make any editing. In the process of convertion invariably many texts have problem with letters like " ha" and " AA". They appear as just inverted commas. So all I did was to change the inverted commas into proper "ha".

otherwise, I have not disturbed your piece in anyway - let alone be responsible for any spelling mistakes. if there are any spelling errors they were in the original and my mistake perhaps was not takng note of them.

So I would really appreciate if you could remove the above disclaimer from your blog.

Thanks and cheers

aruna.

நா.கண்ணன் 6/02/2006 09:29:00 AM

Dear Aruna:

That is precisely the point. I mentioned it not out of ungratefulness but out of technical frustration. Tamil rendering in the web is still annoying. By the way, why should you convert a Unicode text to TSCII while Thisaigal is a Unicode e-zine? I would certainly, as an author, appreciate any editorial correction.

Kannan

Aruna Srinivasan 6/02/2006 09:58:00 AM

// By the way, why should you convert a Unicode text to TSCII while Thisaigal is a Unicode e-zine? I would certainly, as an author, appreciate any editorial correction.//

Let me place the disclaimer first: " I am not a techy person; am still learning my skills..." :-)

I did try in the earlier issues of the magazine to directly upload the unicode versions sent by authors. But after uploading many texts had fonts problem. Many readers with various browsers and older versions of computers had difficulties. I have no clue why that happens.

so I decided to maintain the uniformity by converting into Tscii first and then again to unicode. Plus. editing is easy for me only in Murasu Editor. Perhaps a matter of habit.

aruna

நா.கண்ணன் 6/02/2006 10:30:00 AM

Aruna:

I really appreciate your time and effort.

At times, it is easy to bring the effects in a blog - as the author wants it - than in an e-zine. I face the same problem with Sify.com. Many people could not hear my Voice Column there. So I have decided to publish them in an easier way here in my blog.

I know that Thisaigal has a wider reach and different audience. I would certainly like to reach them as well.

All the best.