அடுத்த மாத மண்டகப்படி அமெரிக்கா!

அன்பர்களே:

என் ஜாதகம் கணித்த என் சித்தப்பா இப்போது இருந்திருந்தால் கேட்டிருப்பேன், ஏனிப்படி உலகு காண அலைந்து கொண்டிருக்கிறேனென்று :-) அடுத்த மாதம் அமெரிக்கா பயணம். ஜூலை 09 முதல் ஆகஸ்ட்டு 04 வரை கீழைக்கரையில் இருப்பேன். நியூஜெர்சி, வாஷிங்டன் டி.சி, சிக்காக்கோ செல்ல முன் திட்டம். தேன்துளி பத்மா அரவிந்த் இணையத் தொடர்பாளர். இந்தப் பகுதியில் வாழும் வலைப்பூவர் சந்திக்க விரும்பினால் தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத்திட்டம் இவை பற்றிப் பேசலாம். பிட்ஸ்பெர்க் பெருமாள் கோயில் போக ஆசை. அந்த ஊரில் நம்ம ஜனம் உண்டா? நியூயார்க், நயக்கரா செல்வேன். முடிந்தால் ஒரு நடை வட கரோலினா Research Triangle Park போக ஆசையுண்டு (நண்பரைக் காண). நல்ல வேளை போகுமுன் சொல்ல முடிகிறது. யோசனை இருந்தால் வழங்குங்கள்.

8 பின்னூட்டங்கள்:

ramachandranusha 6/25/2006 12:58:00 AM

"சகட யோகம்" :-)
ஆனா எங்களுக்கு இன்னும் அலுக்க ஆரம்பிக்கவில்லை. இந்த பக்கம் வருகிற எண்ணம் உண்டா?

ENNAR 6/25/2006 01:24:00 AM

கொடுத்து வைத்தவர் தாங்கள் அலைந்து கொண்டிருப்பது நல்லதுதானே காணாதவற்றை கண்டு காணாதவர்களுக்கு கதைவிட சென்ற இடங்கள் எல்லாவற்றையும் பயணக்கட்டுரையாக பதிவிடுங்கள். நான் படிக்கிறேன்

Boston Bala 6/25/2006 01:45:00 AM

வாங்க... பாஸ்டன் பக்கமும் எட்டிப் பார்க்கலாமே :-)

நா.கண்ணன் 6/25/2006 07:30:00 AM

உஷா: இதற்குப் பெயர் 'சகட யோகமா'? இவ்வளவு நாள் தெரியாது. நான் துபாய் வந்த காலங்களில் வலைப்பதிவு தோன்றவில்லை. சரி, பாலைவனப் பயணம் ஒன்று மேற்கொள்ள வேண்டியதுதான் :-)

நா.கண்ணன் 6/25/2006 07:33:00 AM

என்னார்:
இந்தியாவில் வாழும் காலங்களிலேயே எங்காவது பயணப்பட்டுக் கொண்டே இருப்பேன். எனக்கு மக்களைப் பார்ப்பதும், புதிய இடங்களைப் பார்ப்பதும் மிகவும் பிடிக்கும். இந்திய ரயில் பயணங்கள் எப்போதும் சுவையானவை. இந்த வருடம் பிலிப்பைன்ஸ், சைனா, சிங்கப்பூர் பயணங்கள் வருகின்ற மாதங்களில் இருக்கின்றன. எழுதுகிறேன். நன்றி.

நா.கண்ணன் 6/25/2006 07:35:00 AM

பாஸ்டன் பாலா:
உங்களைக் காணும் வாய்ப்புள்ளது. அன்று பத்மாவுடன் கூகுள் செய்தபோது இது பற்றிப் பேசினோம். தனிமடல் ஒன்று தட்டுங்களேன், மேல் விவரங்கள் தருகிறேன். என்கண்ணன் அட் ஜிமெயில் டாட் காம்.

சேதுக்கரசி 6/26/2006 01:53:00 AM

அமெரிக்காவுக்கு வருக! பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள்.

Om Santhosh 2/10/2010 09:07:00 PM

இனி வரும் காலங்கள் மிகவும் நன்றாக இருக்கம். வாழ்த்துக்கள்