நந்தா! (கொரிய நாடகம்)

வித்தியாசமான கொரிய நாடகங்கள்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 7)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி


தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

முந்தைய பதிவில் கொரிய திரைப்படங்களைப் பற்றிப் பேசிய நா.கண்ணன், இந்தப் பதிவில் கொரிய நாடகங்கள் பற்றி விவரிக்கிறார்.

சியோýல் நடைபெற்ற 'நன்தா' என்ற நாடகம் அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்த நாடகத்தில் யாரும் பேசவில்லை; செய்கைகள் மூலமே நாடகத்தை நடத்திச் சென்றனர். பார்வையாளர்களும் பங்கேற்கும் விதமாக அந்த நாடகம் அமைந்திருந்தது. நாடகத்தின் கதைக் களம், ஒரு சமையலறை. அங்கு சாதாரணமாகப் புழங்கக்கூடிய பாத்திரங்களையும் இயல்பாக எழும் ஓசைகளையும் வைத்து முழு நீள இசை நாடகத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். பிற நாடுகளிலும் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த நாடகத்தின் பின்னணியில் கொரியாவின் மரபார்ந்த செவ்வியல் இசை பயின்றுள்ளது. இந்த நாடகத்தின் சிறப்பம்சங்கள் குறித்துக் கண்ணன் அழகாகப் பேசுகிறார்.

இந்த நாடகத்தைப் பார்க்கும் நீங்கள் விசில் அடிக்கலாம்; சத்தம் போடலாம்; உரக்கச் சிரிக்கலாம் என்று அறிவித்துள்ளார்கள். இடையிடையே நகைச்சுவை ஊட்டவும் கலைஞர்கள் தவறவில்லை. கொரிய சாஸ்திரீய சங்கீதம், கொரிய பாப் மியூசிக், கொரிய வர்மக் கலைகள் ஆகியவை அந்த நாடகத்தில் இடம் பெறுகின்றன. அவற்றை நடிப்பவர்களே, நிகழ்த்துகிறார்கள். அந்தக் கலைஞர்கள் நடிப்போடு நிற்காமல் பன்முகத் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

நாடகத்தில் தொடங்கிய கண்ணன், கொரியர்களின் கலாச்சாரம், கல்வி, தத்துவம், சமூகம், வளர்ச்சிக்கான காரணம், கன்பூசியனிசம்... எனப் பலவற்றைப் பற்றியும் பேசுகிறார்.

வித்தியாசமான, இனிய பின்னணி இசையுடன் அவருடைய உரையை இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 12. 51 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

0 பின்னூட்டங்கள்: