கால்பந்துக் காய்ச்சல்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 7)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒýப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

ஜூன் 9 அன்று தொடங்கிய ஃபிபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடர், ஜூலை 9 அன்று வரை நடைபெறுகிறது. இதில் உலகெங்குமிருந்து 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 16 அணிகள் போட்டியிடுகின்றன. இன்னொரு விதத்தில் சொன்னால், போட்டியிலிருந்து 16 அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன. துரதிருஷ்டவசமாக கொரியா, ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய ஆசிய அணிகள் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்துவிட்டன.

தென்கொரியாவில் வசிக்கும் நா.கண்ணன், ஏற்கெனவே ஜப்பானிலும் வசித்தவர். மேலும் ஜெர்மனிலும் நீண்ட காலம் வசித்தவர்; அவருக்கு ஜெர்மானிய குடியுரிமை இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை மூன்றும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றுள்ள அணிகள். கால்பந்து ரசிகரான அவர், இந்த ஃபிபா உலக் கோப்பைக் கால்பந்து, உலகெங்கும் எத்தகைய காய்ச்சலை உண்டாக்கி இருக்கிறது என்பதை சுவாரசியமாக எடுத்துச் சொல்கிறார்.

கால்பந்து ஒரு விளையாட்டு என்ற எல்லையைக் கடந்து, அது ஒரு போர் என்ற நிலைக்குச் சென்றுவிட்டதை அவரது உரை வெளிப்படுத்துகிறது. அதில் தோல்வி அடையும் நாட்டுக்கு அவமானம் நேருவதாக அந்த நாட்டு மக்கள் எண்ணுகிறார்கள். இது, உலகெங்கும் பதற்றத்தையும் கவலையையும் தோற்றுவிக்கிறது. நா.கண்ணன், இந்த விளையாட்டுக்கு உள்ள முக்கியத்துவத்தைத் தன் உரையில் அழகாகக் காட்டியுள்ளார்.

வித்தியாசமான பின்னணி இசையுடன் அவருடைய உரையை இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 12. 30 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

0 பின்னூட்டங்கள்: