கங்காருநாட்டில் கண்ணன்

நமது அன்புக்குரிய நண்பர் கண்ணன் அவர்கள் இப்போது கங்காருநாட்டிற்கு வந்திருக்கிறார். நேற்று பகல் மெல்பேர்ன் நகருக்கு சென்றிருக்கிறார். வெள்ளிக்கிழமை சிட்னி நகருக்கு வருகிறார். நேற்றிரவு இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் மதுரைத் திட்டம் பற்றி பேசினோம். வெள்ளி மாலையும் சனி மாலையும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறேன்.
இங்குள்ள தமிழ் ஊக்குவிப்புப் பணிகளைப் பார்வையிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
நந்தன்
சிட்னி

+++++++++++++++++++++++++
அதிகச் செய்திகள் வேலை முடிந்த மாலை வேளை :-)

3 பின்னூட்டங்கள்:

கானா பிரபா 6/19/2006 09:52:00 AM

வணக்கம் கண்ணன்

தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின் சுவையான, ஆழமான நேர்காணலில் பல விடையங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கும் என் நன்றிகள்.

அன்புடன்
கானா.பிரபா

துளசி கோபால் 6/19/2006 10:04:00 AM

அப்படியே அந்த கங்காருமேல் ஏறி இங்கே ஒரு தாவு தாவக்கூடாதா?

Kanags 6/19/2006 06:20:00 PM

வணக்கம் கண்ணன், தங்களுடனான சந்திப்பு ஓரிரு மணித்துளிகளானாலும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் ஒலிக்காக கானா பிரபாவுடனான நேர்காணலில் தங்களின் பல பணிகளைப்பற்றியும் அறிந்து கொள்ளமுடிந்தது. கானா பிரபாவுக்கும் நன்றி. உங்கள் பயண அநுபவங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன். எனக்கு kstharan@gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் இடுங்கள். படங்கள் அனுப்பி வைக்கிறேன்.