பிரித்தானியத் திருடர்களுக்கு அடித்த வாழ்வு!
ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணிகளுக்கு சொல்லப்படும் சுற்றுலாக் கதைகளிலொன்று எப்படி ஆஸ்திரேலியக் குடிகள் ஒரு காலக்கட்டத்தில் பிரித்தானியக் கைதிகளாக ஜெயிலில் இருக்க இடமில்லாமல் ஆஸ்திரேலியாவில் கொண்டு வந்து விடப்பட்டனர் என்பதும் (சில நேரங்களில் வெள்ளையர்களின் நேர்மை, அவர்களின் பாசாங்குத்தனம் போல் ஆச்சர்யப்பட வைக்கும்!!). இப்படத்தைப் பார்த்தால் ஏதோ இலண்டன் நலரில் எடுக்கப்பட்டது போல் தோன்றும். ஆனால், சிட்னியின் புறநகரான 'Leura' எனுமிடத்தில் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் பழங்குடிகள், கங்காரு, கோலா போன்றவை தவிர மற்றவை அப்படியே பிரித்தானியாதான்!!

17 பின்னூட்டங்கள்:

johan -paris 6/20/2006 07:34:00 PM

அண்ணா!
பிரித்தானியத் திருடர்கள்;மண்ணின் மைந்தர்களைத் திருடராக வைத்து விட்டார்களே!!! அதுதான் கவலை. பொன் விலையும் பூமிகளை; இழந்து; இனமே! வேரோடழிக்கப்படுகிறது.
யோகன் பாரிஸ்

வசந்தன்(Vasanthan) 6/20/2006 07:55:00 PM

இன்னும் இராணியின் பிறந்தநாளை அரசாங்க விடுமுறையாக்கிக் கொண்டாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?
நீங்கள் நின்றபோதுதான் இத்"திருநாளும்" வந்திருக்குமென்று நினைக்கிறேன்.

நா.கண்ணன் 6/20/2006 08:01:00 PM

அழகாகச் சொன்னீர்கள்! ஆங்கிலேயர்கள் வேற்றுப்புற்று. எங்கெ சென்றாலும் அந்த நாட்டின் வேரில்தான் முதலில் கைவைப்பார்கள். ஆஸ்திரேலியா தாமஸ் குக் கண்டுபிடித்தது என்று திரும்பத் திரும்ப சரித்திரப் புத்தகத்தில் எழுதும் போது அங்குள்ள பழங்குடிகள் ஏதோ கங்காரு போன்ற ஒரு விலங்கினம் என்ற நினைப்பு வந்துவிடும் பாருங்கள். இது அவர்கள் செய்யும் வேர்ச்சதி. இந்தியாவில் மெக்காலே வந்து இந்தியக் கல்வித்திட்டத்தை ஆங்கிலப்படுத்தியபின் விழுந்ததுதானே நமது தாய்மொழிகள் எல்லாம். பிறந்த மண்ணிலேயே அந்நியப்படுத்தும் யுத்தியெல்லாம் செய்தவர் அவர்கள்!

நல்ல வேளையாக இப்போது எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர். ஆஸ்திரேலியாவில் தமிழ் பள்ளிகள் நடப்பது அறிந்தும், எம் குழந்தைகள் தமிழில் கதைப்பு கண்டும் உள்ளம் மகிழ்ந்தோம்.

நா.கண்ணன் 6/20/2006 08:07:00 PM

வசந்தன்:

உண்மைதான். என்னடா திங்களன்று விடுமுறை என்றால் மகாராணி பிறந்த நாள் என்றனர். சிரிப்பாக வந்தது. பிஜித்தீவில் கூட விடுமுறை. நண்பர் நந்தன் சொன்னார், சில தசாம்சங்கள் முன் 'நாய்களுக்கும், சீனர்களுக்கும் அனுமதி இல்லை' என்று வாசலில் எழுதியிருக்குமாம். என்ன கொடுமை! என்ன கொடுமை! பாரதியின் வரிகள் ஏன் சுடுகின்றன என்பது அப்போது புரிந்தது. தமிழனை எவனும் அடிமைப்படுத்த முடியாது. வீரிட்டு எழுவோம்.

செந்தழல் ரவி 6/20/2006 08:49:00 PM

//தமிழனை எவனும் அடிமைப்படுத்த முடியாது. வீரிட்டு எழுவோம். //

எழுந்து ஒன்னும் ஆகப்போறதில்லீங்கன்னா...ஆங்கிலம் சரளமாக பேசுவதால் தான் நம்மால் பல நாடுகளுக்கும் போய் திரவியம் தேடமுடிகிறது...

சும்மா வெட்டிவாதத்துக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க...

"K' வேல்டுல எது வேண்டுமானாலும் எழுதிக்கலாம்..ஆனால் ஆங்கில பிலாக் இல்லை என்றால் என்னால் எப்படி படித்திருக்க முடியும் சொல்லுங்க..

யாரும் எந்த மொழியையும் அழிக்க முடியாது...

இன்று தகவல் தொழில்நுட்பத்தில் உலகையே விஞ்சும் விதத்தில் இருக்கிறோம்...அதில் பலர் தமிழர்...

தினம் ஒரு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் ஜப்பானியர், மேற்க்கு நாடுகளிடம் பேச இந்தியரை வேலைக்கு எடுக்கிறார்கள்..எதற்க்காக...நாம் செய்யும் ஸ்பைசி உணவுகள் மேற்க்கத்திய நாட்டவருக்கு பிடிக்கும் என்பதாலா ? இல்லை...நம்மிடம் இருக்கும் ஆங்கில அறிவால்..

புரிஞ்சுக்கோங்க...தெரிஞ்சுக்கோங்க....

///அண்ணா கொஞ்சம் வேர்டு வெரிபிகேசனை தூக்கிவிடுங்க...///

நா.கண்ணன் 6/20/2006 09:09:00 PM

ரவி:

அது ஆங்கிலத்திற்கு எதிராகச் சொன்ன வாதமல்ல. சங்க காலத்தில் இருந்தது போல் தமிழனது சிந்தனை ஒரே மொழியில் இருந்திருந்தால், இன்றும் தமிழனை மதிப்பார்கள், அவன் தமிழிலேயே தொழில்திறன் செய்வதால். இன்று ஜெர்மானியரையும், கொரியரையும், ஜப்பானியரையும் உலகம் மதிப்பது அவர்களுக்கு "ஆங்கிலம்" தெரியும் என்பதால் அல்ல.

உங்கள் வாதத்தில் ஒளிந்திருக்கும் 'அடிமைத்தனம்' புரிகிறதா? எனக்கு என் மொழி அல்லாத ஆங்கிலம் தெரியும் அதனால் உலகம் என்னை மதிக்கிறது என்று நம்புகிறீர்கள் பாருங்கள். இதுதான் மெக்காலே திட்டத்தின் வெற்றி :-)

இது உங்களுக்குப் புரிகிறதா என்று தெரியவில்லை. ஆங்கிலம் தெரியாமல் பாரதி தமிழில் கவிதை எழுதவில்லை!

தமிழனை அடிமை கொள்ள முடியாது என்று சொன்னது, என்றும் அடிமைப்பட்டு அல்லலுறக் கூடாது என்பதை உள் உறுதிப்படுத்திக் கொள்ளச் சொன்னது. மந்திரங்களின் பலனே நாம் சொல்வதை நம்புவதால்தான். இதன் உளவியலும் உங்களுக்குப் புரியுமா என்று தெரியவில்லை.

பின்னூட்டத்திற்கு நன்றி.

செந்தழல் ரவி 6/20/2006 09:28:00 PM

நேற்று ஒரு டெலகாம் சம்மந்தமான கான்சப்டை ஒரு கொரியா நன்பருக்கு விளக்க வேண்டி இருந்தது...

ஆனால் நான் கூறும் பல வார்த்தைகள் அவருக்கு புரியவில்லை...காரணம் அவர் ஆங்கிலத்தில் கொஞ்சம் வீக்...

அதற்க்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்..ஆங்கில டீயூஷன் எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறார்...

எப்படி தமிழ் மட்டுமே தெரிந்த நான் உலக நாடுகள் எல்லாம் சுற்றி வரமுடிகிறது ? (யாரிடமும் மன்னிப்பு கேட்கும் அவசியம் இல்லாமல்
இது கூட மெக்காலே கல்வியின் வெற்றிதானுங்க...

ஆமாம் - யாருங்க அந்த மெக்காலே...எங்க இங்கிலீஷ் வாத்தியாரு பேரு அருணாச்சலம்...

ஆங்கிலத்தை அடிமைப்படுத்திய மொழியாக மட்டும் பாராமல் - நம் தமிழ் உணர்வோடு சம்மந்தப்படுத்தாமல் - வெறும் - வெறும் - தொடர்பு மொழியாக -நாம் பொருள் ஈட்ட உதவும் மொழியாக மட்டும் பார்க்கலாமே...

அடிமைத்தனம் என்பது எல்லாம் மிக பெரிய வார்த்தை என்னை பொறுத்தவரை..

நா.கண்ணன் 6/20/2006 09:41:00 PM

நன்றி ரவி...

நீங்கள் என் பின்னூட்டத்தை மொழிப் புலமை வாதமாகவே இன்னும் காண்கிறீர்கள். தமிழன் பல மொழிகள் கற்று, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சொல்பவன் நான். மொழி என்பது வெற்றிப் படிக்கட்டு. உங்கள் ஆங்கிலப் புலமையால், ஒரு கொரியரை விட மேலாக இருப்பது அறிந்து மகிழ்கிறேன்.

ஆனால் நான் பேசுவது மொழி அரசியல். தாய் மொழிக் கல்வியே ஒரு மாணவனுக்கு நல்லது. ஒரு ஜெர்மானியர் போல், ஒரு டச்சுக்காரர் போல் நீங்களும் உங்கள் தாய் மொழியில் கற்று, மேலும் கூடுதலாக உங்கள் ஆங்கிலப் புலமையால் உலகில் சிறந்து விளங்கலாம். அது மகிழ்வான விஷயமே.

உங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தந்தவர் அருணாச்சலம் என அறிந்தது மகிழ்வு :-) ஆனால், திட்டமிட்டு ஆங்கில பாணியில் இந்திய பாரம்பரியப் பீடு, அவன் வேர்கள் அறுந்து விழுமாறு கல்வி அமைத்த ஆங்கிலேயன் பெயர் மெக்காலே. கொஞ்சம் இந்திய சரித்திரமும் படியுங்கள், தகவல் தொழில்நுட்பத்துடன் :-) நிறையப் பேச இருக்கு, நேரில் சந்திக்கும் போது...வேண்டுமெனில்!

பிகு: வாத்தியாரே! இந்த word verification-ஐ எப்படி எடுப்பது என்று சொல்லித்தாருங்கள். எனக்கே அது தண்ணி காட்டுகிறது :-))

Anonymous 6/20/2006 09:52:00 PM

நா. கண்ணன் அவர்களே,

வீரிட்டு எழ முடியாது.
வீரிட்டு அலறத்தான் முடியும்.

வீறிட்டுத்தான் எழ முடியும்.

:)

செந்தழல் ரவி 6/20/2006 10:06:00 PM

முதலில் வேர்டு வெரிபிகேஷன் நீக்கும் பாடம். டிபேட் பிறகு.ஏனெனில் அது பலருக்கும் எரிச்சலூட்டுவது..

உங்கள் ப்லாகர் டேஷ்போர்டுக்கு செல்லுங்கள்.

அங்கு செட்டிங்ஸ் டேபை கிளிக்குங்கள்

அதனுள் கமென்ட்ஸ் டேபை கிளிக்குங்கள்..

எட்டாவது ஆப்ஷன் என்ன என்று பாருங்கள்

Show word verification for comments?

என்று உள்ளதா ?

அங்கு நோ என்று கிளிக்கி, Save Settings என்பதை அழுத்தவும்...

இப்போது ஒரு சாம்பிள் பின்னூட்டமிடவும்...

பாருங்க...சொல்லுங்க...உங்களிடம் கருத்து மோதல் தயாரா இருக்கு

நா.கண்ணன் 6/20/2006 10:25:00 PM

அன்புள்ள அனாமதேயம்:

அச்சுப்பிழை! (typo)
திருத்தியதற்கு நன்றி.

நா.கண்ணன் 6/20/2006 10:29:00 PM

அன்பின் செந்தழல் ரவி:

அப்பாடா! ஒரு தொந்தரவு ஓய்ந்தது! நன்றி.

கருத்து மோதல் பிரச்சனை இல்லை. தடுமன், காய்ச்சல், கபம். இந்த இடுகை, இதன் பின்னூட்டங்கள், இவையே இன்று அதிகப்படி வேலை. பின்னால்தான் என் பதில் வரும். மன்னிக்க.

johan -paris 6/20/2006 10:54:00 PM

வீரிட்டலறல்- குமுறி அலறல் ,குழறி அலறல் எனக் கொண்டால்; வீரிட்டெழுதல் என்பது தவறா,,,???
யோகன் பாரிஸ்

Anonymous 6/21/2006 10:32:00 AM

வீரிட்டு அழல் என்பது குமுறி அழல் என்று வராது. குழறுதல் எண்டது பொருந்தும்.
ஆனால் கண்ணன் அவர்கள் சொல்ல வந்த இடத்தில் வீறுதான் பொருந்துகிறது. (வீறுகொண்டு எழுதல், வீறுநடை போடல்)
"வீரிட்டு" எங்கும் பொருந்துவதாகத் தெரியவில்லை.

துளசி கோபால் 6/21/2006 10:40:00 AM

அங்கே குடியேறியது குற்றவாளிகள் என்றால் இங்கே குடியேறியது விவசாயிகள்.

அதனால்தான் அவர்களைக் கண்டால் இவர்களுக்கு ( மனதில்) ஒரு இளக்காரம்.

அது இருக்கட்டும். அங்கே வந்த குற்றவாளிகளில் ஒரு சிலர் செய்த குற்றம் எவ்வளவு பெரியது தெரியுமா?
திருடியது. ஒரு துண்டு ரொட்டியைத் திருடிய மாபெரும் குற்றம்.

நா.கண்ணன் 6/21/2006 11:55:00 AM

அனாமதேயம் சொல்வதே சரி. அது 'வீறுகொண்டு எழுதல்தான்'. தமிழ் தட்டச்சில் விழுந்த பிழை. தமிழ் தெரியாமல் வந்த பிழையல்ல.

உதாரணமாக, "குழறுதல் எண்டது பொருந்தும்" என்று அனாமதேயம் எழுதுகிறது. ஒன்று இது அவர் (அது) ஈழத்துத் தமிழர் என்பதைக் காட்டுகிறது. அல்லது 'என்பது' எனும் தமிழ் சொல் 'எண்டது' என்று தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளது!

நா.கண்ணன் 6/21/2006 12:00:00 PM

துளசி:

நீங்கள் சொல்லும் அதே கதையை எங்கள் டூரிஸ்டு கைடும் சொன்னார். ஆனால் நான் நம்பவில்லை. சும்மா ரொட்டி திருடியதற்கு ஜெயில் தண்டனை என்றால் ஒன்று கொடுங்கோன்மை உச்சியில் இருக்க வேண்டும், இல்லை 'நேர்மை தவறாத' அரசாட்சி நடந்திருக்க வேண்டும். இந்திய சரித்திரத்தைப் பார்த்தால் இதற்கான எந்த சாட்சியமும் தெரியவில்லை.

வேலைக்கு ஆள் தேவைப்பட்டிருக்கிறது. இருக்கிறவனைப் பிடித்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியிருக்கின்றனர். இப்போது 'made in China' என்ற label-க்குப் பின் இந்த ஜெயில் சக்திதான் வேலை செய்கிறது. விலை கொள்ளை மலிவு!! :-(