தேர்தலோ தேர்தல்!

3 நாடுகளில் தேர்தல்: ஓர் ஒப்பீடு

நா.கண்ணன்

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 6)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை நமக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

இந்தப் பதிவில் கொரியாவில் நடைபெறும் தேர்தலை நம் கண்முன் விரிக்கிறார். ஜெர்மானியக் குடிமகனான இவர், ஜெர்மானியத் தேர்தல் நிலவரங்களும் தெரிந்தவர். இவருக்கு ஜெர்மனியில் வாக்குரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மட்டில் இந்தியா, ஜெர்மனி, கொரியா ஆகிய மூன்று நாடுகளின் தேர்தல் நடைமுறைகள் குறித்து இந்தப் பதிவில் அழகாக விவரிக்கிறார்.

தெருவில் ஒலிபெருக்கிகள், சுவரொட்டிகள், வீதி முனைக் கூட்டங்கள்... போன்ற எதுவும் இல்லாமல் ஒரு தேர்தலை இந்தியாவில் கற்பனை செய்ய முடியாது. ஆனால், மேலை நாடுகளில் இவற்றுள் எதுவும் இல்லை; கட்சிகள், வேட்பாளர்கள் குறித்த அனைத்து விவரங்களும் தொலைக்காட்சிகள் மூலமாக மக்களைச் சென்றடைகின்றன. தேர்தல் நடப்பதற்கான ஒரே அறிகுறி, அது தொடர்பாக வரும் ஒரு கடிதம்தான் என நா.கண்ணன் குறிப்பிடுவது வியப்பளிக்கிறது. மேலை நாடுகளிடமிருந்து நாம் ஒத்தியெடுத்தவை அநேகம். இதைப் போன்ற நல்ல அம்சங்களையும் பின்பற்றலாமே.

கொரியாவிலும் இந்தியாவைப் போல தேர்தல் என்பது ஒரு திருவிழாவாகவே நடக்கிறது. அங்கு மக்களைக் கவர்வதற்காக வேட்பாளர்கள், பெண்களின் உடற்பயிற்சி போன்ற நடனத்தைத் தெருமுனையில் நிகழ்த்துகிறார்கள்; துணியில் தங்கள் விவரங்களை எழுதிக் கட்டடத்தின் மேýருந்து தொங்கவிடும் பிரச்சார முறை இருக்கிறது; ஆனால், சுவர்களில் எழுதும் வழக்கம் இல்லை; கட்சியினருக்குப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டி ஹøண்டாய் அதிபரைச் சிறையில் அடைத்தார்கள்; இது தொடர்பாக விவாதங்கள் நிகழ்ந்தன..... எனப் பலவற்றை நா.கண்ணன் தெளிவாக விளக்குகிறார்.

வழக்கம் போல் இனிய பின்னணி இசையுடன் அவருடைய உரையை இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 16. 10 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

2 பின்னூட்டங்கள்:

Badri 6/28/2006 12:57:00 PM

கண்ணன்: ஒலிப்பத்தி கேட்டேன். நல்ல முயற்சி. பேசும் வேகத்தை சற்றே அதிகரிக்கலாமோ என்று தோன்றுகிறது. மிகவும் மெதுவாகச் செல்வதுபோன்று எனக்குப் பட்டது. wav வடிவில் இருப்பதற்கு பதிலாக mp3 ஆக்கினால் நலம் என்று நினைக்கிறேன். இதனால் கோப்பின் அளவு குறையும்.

நா.கண்ணன் 6/28/2006 01:20:00 PM

நன்றி பத்ரி:

எழுதி வைத்து வாசித்தால் நேரத்தைக் குறைக்கலாம். ஆனால் அது என் நேரத்தைக் கூட்டும். இது இயல்பாக வரும் சிந்தனை ஓட்டம். mp3 மாற்றுவதில் சிரமமில்லை. ஆனால், சிஃபி.வணிக்கு wav அனுப்பினால் நல்லது என்று படுகிறது.